Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள ஐஞ்சு வருஷத்திற்கு பின்னர்தான் விடுவங்களாம் உண்மையோ?

Featured Replies

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா?

வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா? கிளி நொச்சியில் இருந்து ஒரு போராளியின் துணைவியார் இவ்வாறு கேட்டார். வெள்ளி கிழமை இந்த பெண் தனது துணைவரை பார்ப்பதற்காக வவுனியாவிற்கு சென்றார்.

அங்கு தனது துணைவனான ......... என்ற போராளி மேற்கண்டவாறு தனது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அவர் மேலும் விவரித்தார்.. நான் முகாமிற்கு இவர பார்க்க போனனான் இங்க கிளிநொச்சியிலதான் இருக்கிறம். தகரம் தந்தவங்கள் நிவாரண காசிற்கு கடிதம் தந்திருகின்றாங்கள் ஆனால் காசு இப்போதைக்கு இல்லையாம் என்று சொல்றாங்கள் நிறைய தடவை கச்சேரிக்கு போனம் ஆனால் காசு இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்லுகினம்.

தொழில் ஒன்றும் செய்யேலாதுதானே நிவாரணத்தோட இருக்கிறம். எனக்கு சைக்கிளும் இல்லை. பக்கத்து வீட்டு காரரிட்ட சைக்கிள் வாங்கிதான் வவுனியாவிற்கு இவரை பார்க்க நானும் தம்பியும் போறனாங்கள். இவர் உங்களிட்ட சொல்ல சொன்னார்... தங்களை 5 வருஷத்திற்கு வைச்சிருக்க போறாங்களாம் ஆனால் அது உண்மையோ பொய்யோ தெரியாது. கலியாணம் முடிச்ச போராளிகள் 1682 பேர் இருக்கினம் இவர்களை முன்னமே விடப்போறம் என்றும் சொல்றாங்களாம்.

அதோட புதிதாக ஒரு முகாம் அமைத்து கலியாணம் முடிச்ச ஆட்களை அங்க கொண்டுபோக போறாங்களாம் என்றும் சொன்னவங்களாம். எது உண்மை எது பொய் என்று தெரியாது அடிக்கடி மாத்தி மாத்தி கதைபாங்களாம்.போன வெள்ளி, சனி கிழமை காயப்பட்ட ஆட்களை விடுறது என்று அதற்கான கடிதங்களும் எல்லாருக்கும் கொடுத்தாங்கள் கூட்டிக்கொண்டுபோக பெற்றோர்கள் வந்திருந்தார்கள்.

ஆனால் கொஞ்சப்பேரைதான் விட்டவங்கள். என்று கூறியுள்ளார் அந்த போராளி. மேலும் தமக்கு அரச தொலைகாட்சி, வானொலி , பத்திரிகை செய்திகளை படிக்க கொடுப்பதாகவும் கூறியுள்ள போராளி தம்மை பார்க்க வரும் பெற்றோர்கள், உறவினர்கள் இணைய செய்திகள் சிலவற்றை அச்சிட்டு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா? அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ. எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம்.

போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ. சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல்.

போராளிகள் எல்லோரும் காட்டி கொடுப்பதாக சிலர் ஏசுகின்றார்களாம். சிறைக்குள் இருந்து கொண்டு வெளியில் நடப்பதனை பற்றி என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் நடக்குறது நடக்கட்டும் என்று சிறையிலேயே வாழ்க்கையினை கழிக்க தயாராகிவிட்டோம். விடுவாங்கள் என்ற நம்பிக்கை துளி கூட எமக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட வீத போராளிகள் வெளியில் நடமாடி திரிகின்றார்கள் சிலர் வெளியே சென்றுள்ளார்கள். ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது.

ஆனால் பெரும்தொகையான போராளிகள் சிறையில்தான் உள்ளோம். ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக எங்களை கைவிட்டுவிட வேண்டாம். ஒன்றவிட்ட கிழமைதான் என்னை பார்க்க வருவினம் ஏதும் இருந்தால் சொல்லி விடுங்கோ. இவ்வளவும் அந்த போராளியினால் எமக்கு கூறும்படி தனது துணைவியாரிடம் சொல்லப்பட்டவை.

கிளிநொச்சியில் இருந்து வெள்ளிகிழமை காலை இரவல் சைக்கிளில் புறப்பட்ட அந்த போராளியின் துணைவியார் சனி மாலை வவுனியாவில் இருந்து வளர்ப்பதற்காக கோழி குஞ்சுகள் வாங்கி கொண்டு வந்துள்ளார். கிளியில் கைவிடப்பட்ட சைக்கிளை இராணுவத்தினர் சனங்களுக்கு கொடுக்க போகின்றார்களாம் அதற்காக தான் பதிந்து இருப்பதாகவும் சொன்னார்.

- நன்றி: ஈழநாதம்

ஐந்து வருடத்தின் பின்னர்தான் எங்களை விடுவாங்களாம் என்று இஞ்ச முகாமில கதைக்கிறாங்கள். உங்க என்னெண்டு கதைக்கிறாங்கள்? ஏதாவது தகவல் எங்களைப்பற்றி சொல்லுறாங்களா?

சும்மா கம்முனுகெடக்காமா உங்களோட பெரிய ரோதனையாபோச்சு... எங்களுக்கு நாடு விட்டு நாடு பாயவும் வட்டுகோட்டை ஸ்டைலில் கோவணம் கட்டவுமே நேரம் காணாமாஇருக்கு.. இதுக்குல எங்கட சரத் வேற உள்ளுக்குல இருக்கிறாரு எண்டு கவலையா இருக்கு.... நீங்க வெளியில வந்தாலும் ஒண்டுதான் உள்ள இருந்தாலும் எண்களுக்கு ஒண்டுதான்...

உங்க உங்கட கூத்தமைப்பு அடிக்கிற கூத்த பாத்துகொண்டிருங்கோ.. நேரம் போகும்..

ஏன்? எப்படி? இதெல்லாம் நடக்கின்றது என என்னால் சொல்ல முடியாது.

நன்றி: ஈழநாதம்

ஏன்.. சுத்த பனங்கொட்டை ஸ்டைலில்.. பச்சை சட்டை போட்டவர், கண்ணாடி போட்டவர், மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர் எண்டு பச்சை பச்சையா பொய் சொல்லலாமே.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள ஐஞ்சு வருஷத்திற்கு பின்னர்தான் விடுவங்களாம் உண்மையோ?

புலம்பெயர் தமிழர் அனுமதி குடுத்தாத்தான் ......உதுகூட நடக்கும். :lol::D

தங்களுக்கு ஆதாயம் வருமெண்டா அஞ்சென்ன ஆயுளுக்கும் இருக்க விட்டிடுவினம். :lol:

மே 18 வரை கொடி பிடித்து மக்காள்.. மக்காள் என்று வெளிநாட்டு தெருக்களில் கோசம் போட்டவர்கள் இன்று அடங்கிபோனது ஏனோ? மாவீரர், போராளி, தியாகங்கள் என்று பேசியோர்கள் இன்று எங்கே? இன்று அந்த போராளிகள் புனர்வாழ்வு என்ற போர்வையில் சிறைவைக்கபட்டிருக்கும் போது நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? இவர்களுக்காகவா நாம் என் உயிர்களை கொடுக்க வந்தோம் என்று அவர்களே வியப்பார்கள்!

உங்களை போன்ற மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மாணிக்க கற்களுக்கு ஆசை பட்டு சிங்கள இனவாதிகளுடனும் இந்திய இனப்படு கொலை நாயகர்களினதும் எலும்ம்புகளை கவ்வி கொண்டு திரிவதால்

புலம்பெயர் தமிழர் அனுமதி குடுத்தாத்தான் ......உதுகூட நடக்கும். :lol::D

தங்களுக்கு ஆதாயம் வருமெண்டா அஞ்சென்ன ஆயுளுக்கும் இருக்க விட்டிடுவினம். :lol:

ஓம் ஓம் உமக்கு அதுதானே வேண்டும் சாகும் வரை எலும்போட திரிய

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா?

எங்கள எவ்வளவு காலத்திற்கு வைச்சிருக்க போறாங்கள் என்று தெரியாது ஆனால் ஆக குறைந்தது 5 வருஷம் என்று இங்க உள்ள ஆமி சொல்லுறாங்கள். வெளி நாட்டில இருக்கிற அமைப்புக்கள், மக்கள் ஏதாவது எங்கள எடுக்கிறதுக்கு அலுவல் பார்க்கிறாங்களா? அங்க என்ன நடக்குது? முடிந்தால் அறிய தாருங்கோ. எங்களை போன்ற சிறையில் உள்ள போராளிகளை பார்க்க வாறதுக்கு சில பெற்றோர், துணைவிமார் சரியான கஸ்டப்படுகினம்.

போக்குவரத்துக்கு காசு இல்லை, சிலபேருக்கு சைக்கிளும் இல்லை. இவர்களுக்கு முடிஞ்சால் இதுக்கு மட்டுமாவது கொஞ்சம் உதவி செய்யுங்கோ. சிலபேருக்கு உதவி கிடைச்சதாக கேள்விபட்டோம் நன்றி ஆனால் எம்மை போன்ற இயக்க கொடுப்பனவை நம்பி வாழ்ந்த போராளி குடும்பங்களுக்கு சரியான கஸ்டம். தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள். எங்கள் வாழ்க்கை சிறையோடு முடிந்துவிடும் . எங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடாதீர்கள் ஏனென்றால் அதுதான் எங்கள் ஆறுதல்.

tamilsvoice,

இந்த இணைப்பிலும் ஒரு போராளி உதவி கோருகிறான். கண்ணுமில்லை கையுமில்லை. இவனதும் இவன் போன்ற வெளியில் விடப்பட்ட அங்கவீனமடைந்த முன்னாள் போராளிகளினதும் படங்களை படம் போட்டுக்காட்டி முன்னாள் புலிகள் பலர் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் இந்த பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன கிடைத்தது என்பதை அந்தப் போராளியின் குரலிலேயே சொல்கிறான் கேளுங்கள்.

கண்ணிரண்டையும் இழந்து கையையும் இழந்த போராளியின் குரல்

audio.gifதமிழின விடுதலைக்காகப் போராடப்போன ஒரு போராளியின் குரல். கண்ணிரண்டையும் இழந்து கையையும் இழந்து இன்று ஆதரவற்றுத் தனித்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் வெற்றிகள் குவித்த போது பெருமைப்பட்டவர்கள் இன்று வேதனையில் இருக்கும் இவர்களுக்கு ஆதரவை வழங்காமல் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர் அனுமதி குடுத்தாத்தான் ......உதுகூட நடக்கும். :lol::D

தங்களுக்கு ஆதாயம் வருமெண்டா அஞ்சென்ன ஆயுளுக்கும் இருக்க விட்டிடுவினம். :lol:

ஏன் மகிந்தாவின் அரசியல் ஆலோசகர்மார் புலம்பெயர் தமிழர்களோ??? ஏன் புலம் பெயர் தமிழர்கள் தான் 5 வருசம் அடைச்சு வைச்சிருக்கச்சொன்னவையோ?

மே 18 வரை கொடி பிடித்து மக்காள்.. மக்காள் என்று வெளிநாட்டு தெருக்களில் கோசம் போட்டவர்கள் இன்று அடங்கிபோனது ஏனோ? மாவீரர், போராளி, தியாகங்கள் என்று பேசியோர்கள் இன்று எங்கே? இன்று அந்த போராளிகள் புனர்வாழ்வு என்ற போர்வையில் சிறைவைக்கபட்டிருக்கும் போது நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? இவர்களுக்காகவா நாம் என் உயிர்களை கொடுக்க வந்தோம் என்று அவர்களே வியப்பார்கள்!

சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறமுன்னம் புலிகளிடம் இருந்து தமிழ்மக்களுக்கு விடுதலை வேணும் எண்டு முழங்கின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாரும் ஒண்டா சேர்ந்து ஒரு ஊர்வலத்தை வைக்கலாமே !!!!! யார் இப்ப உங்களுக்கு தடை???

சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறமுன்னம் புலிகளிடம் இருந்து தமிழ்மக்களுக்கு விடுதலை வேணும் எண்டு முழங்கின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாரும் ஒண்டா சேர்ந்து ஒரு ஊர்வலத்தை வைக்கலாமே !!!!! யார் இப்ப உங்களுக்கு தடை???

tamilsvoice,

இந்த இணைப்பிலும் ஒரு போராளி உதவி கோருகிறான். கண்ணுமில்லை கையுமில்லை. இவனதும் இவன் போன்ற வெளியில் விடப்பட்ட அங்கவீனமடைந்த முன்னாள் போராளிகளினதும் படங்களை படம் போட்டுக்காட்டி முன்னாள் புலிகள் பலர் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் இந்த பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன கிடைத்தது என்பதை அந்தப் போராளியின் குரலிலேயே சொல்கிறான் கேளுங்கள்.

:lol:அப்புறம் சாந்தி சொல்லுகின்ற பிழைப்பு நடத்த முடியுமா??? :lol::D

ஏன் மகிந்தாவின் அரசியல் ஆலோசகர்மார் புலம்பெயர் தமிழர்களோ??? ஏன் புலம் பெயர் தமிழர்கள் தான் 5 வருசம் அடைச்சு வைச்சிருக்கச்சொன்னவையோ?

சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறமுன்னம் புலிகளிடம் இருந்து தமிழ்மக்களுக்கு விடுதலை வேணும் எண்டு முழங்கின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாரும் ஒண்டா சேர்ந்து ஒரு ஊர்வலத்தை வைக்கலாமே !!!!! யார் இப்ப உங்களுக்கு தடை???

அது தான் மக்களை விடுவித்தாச்சே இனி எதுக்கு ஊர்வலம்?

நீங்கள் எல்லோரும் மே 18 கு முன் மக்களை காப்பாற்றவா கோசம் போட்டு கொடியும் பிடித்தீர்கள் ? அன்று கத்தியது போல் இன்றும் தொடர்ந்து கத்தி, கோசம் போட்டு பிடிபட்ட போராளிகளையும் காப்பாற்றலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 வரை கொடி பிடித்து மக்காள்.. மக்காள் என்று வெளிநாட்டு தெருக்களில் கோசம் போட்டவர்கள் இன்று அடங்கிபோனது ஏனோ? மாவீரர், போராளி, தியாகங்கள் என்று பேசியோர்கள் இன்று எங்கே? இன்று அந்த போராளிகள் புனர்வாழ்வு என்ற போர்வையில் சிறைவைக்கபட்டிருக்கும் போது நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? இவர்களுக்காகவா நாம் என் உயிர்களை கொடுக்க வந்தோம் என்று அவர்களே வியப்பார்கள்!

ம்ம்.............. அவர்கள் வியப்பார்கள்தான் பின்பு உடனேயே மக்களையும் வெறுப்பார்கள்.

அப்பிடியே அந்தபக்கம் போனால் இப்பிடியே ஏதாவது கதை பேசி கூலிபடைக்கு ஆள்சேர்க்கலாம் என்றால்.

ஒரறிவு புளுமாதிரியான எந்த தடயமும் இங்கு இல்லை. எல்லாம் தமிழராக இருக்கிறார்கள்.

:lol:அப்புறம் சாந்தி சொல்லுகின்ற பிழைப்பு நடத்த முடியுமா??? :lol::D

அந்தபிழைப்பு நடத்தலாமோ இல்லையோ தெரியவில்லை

ஆனால் சிங்களவன சொறிஞ்சு நடத்துற நாயிலும் கீழான பிழைப்பிற்கு புலி கட்டாயம் தேவை.

வெளி நாட்டில இருக்கிற எங்கட அமைப்புக்கள், சனங்கள் எங்களைப்பற்றி ஏதாவது கதைக்கிறார்களா?

வெளிநாட்டில நாடுகடந்த அரசை அமைச்சு ஜெனிவாவில் பாராளுமன்றத்தை கூட்டி உங்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு என்னும் சில மாதங்களே உள்ளது அதன்பிறகு உங்களை தடுத்துவைக்க இலங்கை அரசுக்கு அதிகாரம் இருக்காது.

சைக்கிள் கட்சி வெண்டால் உங்களை வெளியே எடுப்பார்.....

போராளிகளோ, அடைக்கப்பட்டிருக்கும் மக்களினதோ எவர் குரலாயினும் அவை கேலிக்கும், விளையாட்டிற்கும் உரியதல்ல. அதைவிடவும் இது அரசியலுமில்லை. விடுவித்தலுக்கும் உதவுவதற்கும் எவர் முயன்றாலும் தமிழர் ஆதரவளிக்க வேண்டும்.

அவர்களின் உண்மை நிலையில் யாருக்கும் அந்தளவில் அக்கறையில்லை என்பதே உண்மை.

அவரவர் கருத்துகளில் அவர்களின் நிலையை வைத்து ஏதாவது தமது பொறுக்கிதனமான ஒரு எண்ணத்தை விதை;துவிடுவது என்பதே பலருடைய நோக்கமும். நீலிகண்ணீர் என்பார்களே அதுதான்.

இப்போதைய நிலையில் யாரும் அவர்களை எடுத்துவிட முயன்றாலும அதுவும் சுயவிளம்பரத்திற்காகவே தவிர அவர்களுடைய நிலமைகாரணமாக அல்ல என்பது செய்திகளின் தலைப்பிலேயே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து எழுதியவர்களையே பாருங்கோ பனங்காய் உட்பட...

எமக்காக எல்லாவற்றையும் தந்த தர தயாராக இருந்தவர் பற்றி எழுதுவது போன்றா எழுதுகிறோம்

Edited by விசுகு

மிக விரைவில் மீட்டெடுப்போம்!

மிக விரைவில் மீட்டெடுப்போம்!

மிக விரைவில் மீட்டெடுப்போம்!

புலம்பெயர் தமிழர் அனுமதி குடுத்தாத்தான் ......உதுகூட நடக்கும். :huh::(

தங்களுக்கு ஆதாயம் வருமெண்டா அஞ்சென்ன ஆயுளுக்கும் இருக்க விட்டிடுவினம். ^_^

இக்கருத்தில் 100% உண்மை உண்டு... யாழ் களத்தில் சிவப்பு குத்தபட்டால் அது உண்மை உள்ளதென்பதே பொருள்..

மே 18 வரை கொடி பிடித்து மக்காள்.. மக்காள் என்று வெளிநாட்டு தெருக்களில் கோசம் போட்டவர்கள் இன்று அடங்கிபோனது ஏனோ? மாவீரர், போராளி, தியாகங்கள் என்று பேசியோர்கள் இன்று எங்கே? இன்று அந்த போராளிகள் புனர்வாழ்வு என்ற போர்வையில் சிறைவைக்கபட்டிருக்கும் போது நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? இவர்களுக்காகவா நாம் என் உயிர்களை கொடுக்க வந்தோம் என்று அவர்களே வியப்பார்கள்!

உண்மை...

சைக்கிள் கட்சி வெண்டால் உங்களை வெளியே எடுப்பார்.....

^_^:):D

  • கருத்துக்கள உறவுகள்

இக்கருத்தில் 100% உண்மை உண்டு... யாழ் களத்தில் சிவப்பு குத்தபட்டால் அது உண்மை உள்ளதென்பதே பொருள்..

உண்மை...

:huh::(^_^

நண்பர்களுடைய கருத்துகளுக்க நீங்களாவது பச்சை குத்தவிட்டால் எப்படி?

எல்லாரும் ஒரே அறையிலேயே இருந்து வேற வேற சிப்போ............ அல்லது ஒன்றாகவே எழுந்து ஒரே அடியாதான் தொடங்கிறதோ?

இன்னமும் பெருந்தண்மையாய் நாய்குட்டி என்று சொல்கின்றீர்கள். ஒரு பிராணிக்கு அடக்கம் கொஞசம் வேண்டும்தான் அதற்காக இவ்வளவு கொஞ்சம் ஓவர். நீங்கள் நாய்களுக்கே தாய் குட்டி இந்தளவிற்கு குலைக்காது................. தத்துவங்களை சும்மா சூப்பஸ்டார் லெவலில துப்புறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த சிட்னிவாழ் ஈழ நாட்டு இளைஞர்கள் , போரினால் காயப்பட்டு அங்கவீனமானவர்களுக்கு உதவுவதற்காக என்ற "Patchwork - Assiting person with disabilities affected by war" அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உதவி செய்து வருகிறார்கள். சிட்னியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதில் கிடைக்கும் பணம் அங்கவீனமானவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும்.

32346518.png

Edited by கந்தப்பு

கருத்து எதுவுமே எழுதமுடியாமல் தவிக்கிறேன்

உறவுகளின் கருத்துக்களைப்பார்த்து அழுவதா சிரிப்பதா?

அந்தபிழைப்பு நடத்தலாமோ இல்லையோ தெரியவில்லை

ஆனால் சிங்களவன சொறிஞ்சு நடத்துற நாயிலும் கீழான பிழைப்பிற்கு புலி கட்டாயம் தேவை.

அகதி முகாம் மக்களின் படங்களைக் காட்டி சுரண்டிற கூட்டத்திற்கு, அந்த மக்கள் தொடர்ந்தும் முகாமிலிருக்க வேண்டுமென்ற நினைப்புத் தானே வரும். சிங்களவனைச் சாட்டிச் சாட்டியே சுரண்டலை நியாயப்படுத்த வேண்டிய நிலை. :):mellow:

புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த சிட்னிவாழ் ஈழ நாட்டு இளைஞர்கள் , போரினால் காயப்பட்டு அங்கவீனமானவர்களுக்கு உதவுவதற்காக என்ற "Patchwork - Assiting person with disabilities affected by war" அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உதவி செய்து வருகிறார்கள். சிட்னியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதில் கிடைக்கும் பணம் அங்கவீனமானவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும்.

அப்படியே 18 மே 2009 இற்கு பிறகு இந்த அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தன என்ற விபரங்களையும் இங்கு தெரியப்படுத்துங்களேன். பார்க்க ஆவலாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதி முகாம் மக்களின் படங்களைக் காட்டி சுரண்டிற கூட்டத்திற்கு, அந்த மக்கள் தொடர்ந்தும் முகாமிலிருக்க வேண்டுமென்ற நினைப்புத் தானே வரும். சிங்களவனைச் சாட்டிச் சாட்டியே சுரண்டலை நியாயப்படுத்த வேண்டிய நிலை. :lol::lol:

அப்ப உங்களின்ர பவரை பாவிச்சு அவயளை வெளியில விட சொல்லுங்கோவன் பாப்பம். :):D:D

அப்ப உங்களின்ர பவரை பாவிச்சு அவயளை வெளியில விட சொல்லுங்கோவன் பாப்பம். :):D:D

இதுக்கு பவர் எல்லாம் தேவையில்லை. மனிதாபிமானம் இருந்தாலே போதும். முன்பு அந்த மக்களை வெளியில் விட்டாலே போதும், அவர்கள் தங்கள் பிழைப்பைப் பார்த்துக் கொள்வார்கள் என வரிந்து கட்டிக் கொண்டு இங்கு சிலர் எழுதினார்கள். ஆனால் வெளியில் போனவர்கள் அடிப்படை ஆதார வசதிகளின்றி துடித்த போது, முன்பு கருத்து எழுதியவர்களே அரசு அவர்களுக்கு உதவி செய்யவில்லையென்று மீண்டும் வரிந்து கட்டி எழுதியதோடு, அந்த மக்களுகு்கு உதவவென்று ஒவ்வொரு பெயரில் அமைப்புகள் ஆரம்பித்து சுருட்டியவர்கள் தான் அதிகம். அகதி முகாமிலிருந்து வெளியேறிய மக்கள் வவுணியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்குச் சென்ற போது, சக தமிழர்களே இவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை. இவர்களின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக படிக்கக் கூடாதாதென்பதில் பலர் உறுதியாகக நின்றதையும், அந்த மக்கள் ஏன் வெளியில் வந்தோம் அகதிமுகாமிலேயே இருந்திருக்கலாமே என அலறியதையும் கேட்க முடிந்தது. இந்த இலட்சணத்தில் தான் இன்றும் அந்த மக்களுக்காக நிகழ்ச்சி நடாத்துகின்றார்களாம், உதவுகின்றார்களாமென்று இன்னும் சுருட்டி வாழ்பபவர்களுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா?? :lol::lol:

கருத்து எதுவுமே எழுதமுடியாமல் தவிக்கிறேன்

உறவுகளின் கருத்துக்களைப்பார்த்து அழுவதா சிரிப்பதா?

இல்லை நமக்காக சிலுவை சுமந்த அந்த உறவுகளை விடுவிக்க நாம் அரசியல் வேறுபாடுகளை களைந்து , மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்...அதற்கு வெளிநாட்டிலுள்ள அமைப்புகள் உதவிசெய்ய வேண்டும்....சும்மா சைக்கிளுக்கு ஓட்டு போடுங்கோ என்றவர்களும், வீட்டிற்கு ஓட்டு போடு என அறிக்கை விட்டவர்களெல்லாம் ஒன்று சேருவோம் நம் மக்களை விடுவிப்பதற்காக...நம் சகோதர, சகோதரிகள் அவர்கள் அவர்களை விடச்சொல்லி நாம் இப்போதுலிருந்து புதிய உத்வேகத்துடன் களமிறங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.