Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னாசிப்பழம்

Featured Replies

எனக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி. அன்னாசி என்றவுடன் என் ஞாபகத்திற்கு முதலில் வருவது சிறுவயதில் கோல்வேஸ் ( Galle Face ) கடற்கரையில் வாங்கி உண்ட அந்த மிளாகாய்தூள் உப்பு போட்ட அன்னாசித்துண்டுகள் தான். இங்கு என்னதான் சுவையான அன்னாசி கிடைத்தாலும் அந்த ருசிக்கு கிட்ட வராது :lol::lol: அன்னாசி சுவையாக உள்ளதென்றுதான் சாப்பிட்டேன் ஆனால் இன்று தான் அன்னாசி சாப்பிடுவதால் நாம் அடையும் நன்மைகளை வாசித்தேன். நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள் அன்னாசியின் அருமை பெருமைகளை :lol:

அன்னாசி

pineapple.jpg

நாம் அனைவரும் ருசித்து உண்ணும், இந்நாட்டில் எப்போதும் கிடைக்கும் அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம்.

மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றம், தொழில் நுட்பத் திறன் மற்றும் மருந்து வகைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை பல நோய்களை அறவே ஒழித்திடும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை நினைத்து பெருமைப்பட்டாலும் இயற்கையிலேயே, உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ‘உணவே மருந்து’ என்ற கருத்தில் பழ வகைகளும் முக்கியம் என்பதால் அவற்றை என்றுமே ஒதுக்கக்கூடாது.

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் அனைத்து மூலப் பொருட்களும் அமைந்திருப்பதோடு, நறுமணமும் இனிய சுவையும் கொண்ட அன்னாசிப்பழத்தின் சிறப்பு சற்று வித்தியாசமானதாகவும் பல வித நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. அன்னாசியின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான பிரேஸில் ஆகும். 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பழம் முதலில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், செல்வந்தர்களின் பழமாக இருந்தது. இப்போது அனைத்து நாட்டிலும் அனைவரும் பெறுமளவில் தாராளமாகக் கிடைக்கின்றது.

100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் வைட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு. எனவே உணவில் சத்துப் பொருட்களை உடனடி ஜீரணமாகச் செய்வதில் அன்னாசிக்கு நிகர் வேறு பழம் கிடையாது. இதன் காரணமாகவே மேல்நாடுகளில் இறைச்சி உணவு சாப்பிடும் அனைவரும், தாங்கள் சாப்பிடும்போது அன்னாசிப் பழத்துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவது பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கோழிக்கறியுடன் சேர்த்து சமைப்பதும் உண்டு.

அன்னாசிப் பழச்சாறும் ஜீரணச்சக்தியை விரைவுபடுத்தும் என்பதுடன் சத்துணவு ஆகும். இச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோயால் அவதிப்பட்டு உடல் பலவீனமானவர்கள் நன்கு உடல் தேற விரைவில் ஆரோக்கியமடைவார்கள். மேலும் இப்பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும். குடல் புண்களை அழிக்கும் சக்தியும், நீண்ட நாள் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணி ஆகியவற்றுக்கும் அன்னாசிப் பழம் அருமருந்தாகும்.

பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது. நாம் கூட அன்னாசிப்பழ ரசம், பாயசம், ஜாம் வைத்து விருந்துகளில் பரிமாறுவது என்பது வழக்கம் தானே. முக்கியமாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களது உணவாக இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு அளிப்பதோடு பசியையும் தூண்டும். இவ்வாறாக அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி...எனக்கும் எனது அப்பாவுக்கும் மிகவும் பிடித்த பழம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா

நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள் :lol: . இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழச்சாறு - 1 கப்

கடலைமாவு - 1/2 கப்

அஸ்கா சர்க்கரை - 1/2 கப்

உருக்கிய நெய் - 1/2 கப்

முந்திரி - 7 பருப்புகள்,

திராட்சை - 6

ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

செய்முறை:

* அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

* அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

* இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

--------------------------------------------------

அன்னாசிப் பழ பாயாசம்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த அன்னாசிப் பழம் 1

சக்கரை 200 கிராம்

பாதாம் பருப்பு 50 கிராம்

பால் 250 கிராம்

பேரிச்சம் பழம் 100 கிராம்

முந்திரிப் பருப்பு 25 கிராம்

கிஸ்மிஸ் பழம் 25 கிராம்

குங்குமப் பூ சிறிதளவு

செய்முறை:

அன்னாசிப் பழத்தை, தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கவும்

பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.

அன்னாசிப் பழத்தை மிக்ஸியில் போட்டு, சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சக்கரையை, சாற்றில் கலந்து, அடுப்பில் வைத்து அடியில் பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.

பழச்சாறு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

பாதாம் பருப்பை, தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பாலை நன்கு காய்ச்சியபின், அரைத்த பாதாம் பருப்பை அதில் சேர்க்கவும்.

கொதித்த பழச்சாற்றையும், பாதாம் பருப்பு கலந்த பாலையும் ஒன்றாக கலக்கவும்

வறுத்த முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் பழங்கள் அனைத்தையும் சேர்த்து பரிமாறவும்

Edited by ஈழமகள்

இணைப்புக்கு நன்றி... ஈழமகள் சொல்வது போல Galle face இல் வாங்கிச் சுவைக்கும் அன்னாசியின் ருசியே தனிச்சுவை தான். தலையில் கூடையில் அன்னாசித் துண்டங்கள் சுமந்து வருபவன் போடும் 'அன்னாசி' என்ற குரலே பாதிச்சுவையைத் தந்துவிடும் (இதனை எழுதும் போது ஞாபக அடுக்குளில் இருந்து அந்த அன்னாசி வாசனை மேலே எழும்புகின்றது)

அன்னாசியை வெட்டித் துண்டாக்கி, சிறிதளவு உப்புடன் சீனியையும் தடவினால் இன்னும் ருசியாக இருக்கும். எல்லாத் துண்டும் முடிந்தபின் பின் பாத்திரத்தில் மிஞ்சுகின்ற சிறிதளவு பழச்சாறை குடித்த ஞாபகமும் வந்து போகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும்,

இப்ப தான் தெரியுது எங்கே பிழை நடந்திருக்குது என்று ...:lol:

நன்றி ஈழமகள்...எனக்கு ஒருவித அலேர்கி இருக்குது, 4 / 5 துண்டுக்கு பிறகு நாக்கு கடிக்கும்/ சுணைக்கும் ...அது எனது மகளுக்கும் (3 வயது) போட்டுது போல ...கிட்டடியில் வாங்கி கொடுத்தபோது விரும்பி விரும்பி சாப்பிட்டா ...பிறகு கொஞ்ச நேரத்தால் ..நாக்கு "சுணைக்க" வெளிக்கிட்டு என்ர சேட்டில நாக்கை தேய்த்ததை பார்க்கேக்க சிரிப்பு ஒரு பக்கம் கவலை ஒருபக்கம்..அப்பா உறைக்கு உறைக்குது என்றபடி..:lol:

  • தொடங்கியவர்

நன்றி ஈழமகள்...எனக்கு ஒருவித அலேர்கி இருக்குது, 4 / 5 துண்டுக்கு பிறகு நாக்கு கடிக்கும்/ சுணைக்கும் ...அது எனது மகளுக்கும் (3 வயது) போட்டுது போல ...கிட்டடியில் வாங்கி கொடுத்தபோது விரும்பி விரும்பி சாப்பிட்டா ...பிறகு கொஞ்ச நேரத்தால் ..நாக்கு "சுணைக்க" வெளிக்கிட்டு என்ர சேட்டில நாக்கை தேய்த்ததை பார்க்கேக்க சிரிப்பு ஒரு பக்கம் கவலை ஒருபக்கம்..அப்பா உறைக்கு உறைக்குது என்றபடி..:lol:

அன்னாசியை உப்புத்தண்ணியில் ஊறவைத்து அல்லது கழுவி எடுத்து சாப்பிட்டால் நாக்கு சுனைக்காமல் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.அப்படி செய்து மகளுக்கு கொடுத்து பாருங்கள். சிலருக்கு அன்னாசிபழம் தான் அலர்ஜி...எனக்கு, சமீப காலமாக அப்பிள்-பிளம்ஸ்பழம்-பலாப்பழம் எல்லாம் அலர்ஜி. அவற்றை சாப்பிட்டால் நாக்கு கடிக்கின்றது :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அன்னசி பழம் உடம்புக்கு சூடா குளிர்ச்சியா?

  • கருத்துக்கள உறவுகள்

அன்னசி பழம் உடம்புக்கு சூடா குளிர்ச்சியா?

அன்னாசிப்பழம் சூடு.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ஈழமகள் அக்கா..

நான் அன்னாசி பழம் அதிகம் சாப்பிடுவன்..எனக்கு அன்னாசி பழம் என்ரா ரொம்ம பிடிக்கும். இண்டைக்கு தான் தெரியும் அன்னாசி பழம் சாப்பிட்டா இப்படி உடம்புக்கு நல்லம் என்று :lol::lol:

அன்னாசிப்பழம் சூடு.

ஆங்கில மருத்துவத்தின் படி, சூடு குளிர்ச்சி என்றெல்லாம் ஒன்றுமில்லை :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ஈழமகள் அக்கா..

நான் அன்னாசி பழம் அதிகம் சாப்பிடுவன்..எனக்கு அன்னாசி பழம் என்ரா ரொம்ம பிடிக்கும். இண்டைக்கு தான் தெரியும் அன்னாசி பழம் சாப்பிட்டா இப்படி உடம்புக்கு நல்லம் என்று :lol::lol:

அதுக்காகக கொஞ்சமாடுகம்பிலை விழுந்தமாதிரி ஒரேயடியாய் அன்னாசிப்பழத்தோடை மினைக்கடவும் கூடாது. :D

நன்றி ஈழமகள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

வயிற்றில் கரு உற்ரிருக்குக்கும் பெண்கள் அன்னாசிப்பழம், பப்பாப்பழம் போன்றவற்றை உண்ணக்கூடாது.

.

.

வயிற்றில் கரு உற்ரிருக்குக்கும் பெண்கள் அன்னாசிப்பழம், பப்பாப்பழம் போன்றவற்றை உண்ணக்கூடாது.

.

பொய்... அதற்கானா எந்த விஞ்ஞான பூர்வ விளக்கமும் அறவே கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

பொய்... அதற்கானா எந்த விஞ்ஞான பூர்வ விளக்கமும் அறவே கிடையாது

உண்மை..... அனுபவபூர்வமாக அவதானித்தது, எனக்குத் தெரிந்த பல பெண்கள் அன்னாசிப்பழமும், பப்பாப்பழமும் தொடந்து சாப்பிடும் போது அவர்கள் கருத்தரிக்கவில்லை.

அவற்றை சாப்பிடுவதை நிறுத்தியவுடன், உடனே கருத்தரித்து விட்டார்கள்.

விஞ்ஞானத்தை விட அனுபவம் தான் எமக்கு ஆசானும், வழிகாட்டியும்.

உண்மை..... அனுபவபூர்வமாக அவதானித்தது, எனக்குத் தெரிந்த பல பெண்கள் அன்னாசிப்பழமும், பப்பாப்பழமும் தொடந்து சாப்பிடும் போது அவர்கள் கருத்தரிக்கவில்லை.

அவற்றை சாப்பிடுவதை நிறுத்தியவுடன், உடனே கருத்தரித்து விட்டார்கள்.

விஞ்ஞானத்தை விட அனுபவம் தான் எமக்கு ஆசானும், வழிகாட்டியும்.

என் இரு பிள்ளைகளையும் மனிசி பெறும் போது, சாப்பிடாமல் விட்ட விடயங்கள் என்று எதுவுமிருக்கவில்லை.... அன்னாசியில் இருந்து கணவாய் வரை

தமிழ் மருத்துவத்தில் 3 விடயங்களை முன்னிறுத்தி வைத்தியம் செய்வர். வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே அடிப்படை. இவையே ஆயுர்வேதத்திற்கும் சரி, சித்த மருத்துவத்திற்கும் சரி, சித்த மருத்துவத்தை தழுவிய தமிழ் மருத்துவத்திற்கும் சரி அடிப்படை. அஜீவம் (பிற உயிர்களிலில் இருந்து பெறப்படாத மூலிகையை அடிப்படையாகக் கொண்ட), ஜீவம் (மிருகங்களில் இருந்து பெறப்படும்) என்ற இரண்டு சாறுகளில் இருந்தே வைத்தியத்திற்கான மருந்து பெறப்படும். இந்த மருத்துவத்தின் அடிப்படை நோயிற்கான காரணியை எமக்குள்ளேயே (உடலுக்குள்) தேடுவது. அதனால் தான் எந்த வருத்தத்திற்கும் சூடு, குளிர், வாதம் என்று சொல்லி வைத்தியம் செய்வர் ஆனால் ஆங்கில மருத்துவம் அப்படி அல்ல. 90% ஆன வருத்தங்களுக்கு உடலுக்கு வெளியே காரணத்தைத் தேடுவர். வைரஸ், பக்றீரியா போன்ற நுண்ணுயிர்களே காரணம் என்பர். மேலத்தேய வைத்தியம் ஆராச்சிகளையும் சான்றுகளையும் பெறுபேறுகளையும் அடிப்படையாகக் கொண்டவை. (research, results & proves) எனவே அது இன்று முன்னிலைப்படுத்தப்படும் அதி வேகமாக வளர்கின்றது. அதில் அன்னாசியையும் சரி, பப்பாளியையும் சரி கருவுக்கு தீங்கான உணவு என்று சொல்லப்படவில்லை

மேற்கு நாடுகளில் சிசு மரண வீதம் என்பது எம் நாடுகளில் இருப்பதை விட மிக மிக குறைவு என்பதையும் நினைவில் கொள்ள

நான் கருவுற்றிருந்த காலத்தில் அன்னாசி சாப்பிட்டிருக்கிருக்கிறன் எதுவும் செய்யல ஆனா 3 மாதம் முடிந்த பின் தான் சாப்பிட்டிருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

என் இரு பிள்ளைகளையும் மனிசி பெறும் போது, சாப்பிடாமல் விட்ட விடயங்கள் என்று எதுவுமிருக்கவில்லை.... அன்னாசியில் இருந்து கணவாய் வரை

------

நான் கருவுற்றிருந்த காலத்தில் அன்னாசி சாப்பிட்டிருக்கிருக்கிறன் எதுவும் செய்யல ஆனா 3 மாதம் முடிந்த பின் தான் சாப்பிட்டிருக்கிறன்

சிலரின் உடம்பு வாசியாகவும் இருக்கலாம்,அத்துடன் கனடா குளிருக்கு அன்னாசிப்பழத்தின் தன்மைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளதை ஒதுக்கி விடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாசிப்பழத்தையோ அல்லசி பப்பாசிப்பழத்தையோ கருவுற்ற மூன்று மாதத்திற்கு பிறகு சாப்பிடலாம் என நினைக்கிறேன் ஆனால் இது எல்லோருக்கும் ஒத்து வராது.

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட, முதல்ல வடிவா சாபிடுவம் மிச்சத்த பிறகு பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஈழமகள் ! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.