Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்!

Featured Replies

நான் லண்ணனில சுரண்டி பிழைக்க தானே வந்தோம்...

உழைத்து வாழ பழகுங்கள்.. நல்ல புத்தி வரும்.... :rolleyes:

பஞ்சியால் வாக்களிக்கவில்லை. இதுதான் வேறுபாடே அன்றி.. இதில் நகைக்க.. நளினம் செய்ய எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.

பஞ்சி எனப்படுகின்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு கனடாவில் ஏறக்குறைய 48,000 ஆதரவு வாக்குகள் இடப்பட்டதாக அறியமுடிகின்றது. கனடாவாரியாக வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களை விட குறைவான இடங்களிலேயே நாடு கடந்த அரசுக்கு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன என்று ஓர் கதையுக்கு எடுத்தால்கூட கூற 48,000 - 31,000 = 17,000 என்பது மிகப்பெரிய தொகை.

வட்டுக்கோட்டை தீர்மானம் வாக்கெடுப்பில் நான் கலந்துகொண்டேன். ஆனால் நாடு கடந்த அரசு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இல்லை. இதற்கு பஞ்சி காரணம் என்று கூறுவதைவிட வாக்களிப்பு செய்யவேண்டும் என்கின்ற உந்துதல் எனக்குள் ஏற்படவில்லை என்பதே உண்மையானது. வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பின்போது காணப்பட்ட பரபரப்பை - அதாவது வாக்களிக்க செல்லவேண்டும் என்கின்ற உந்துதலை நாடு கடந்த அரசு வாக்கெடுப்பில் காணவில்லை என்பதே எனது தனிப்பட்ட பார்வை.

இரண்டு வாக்கெடுப்பிலும் எனது பெற்றோர் கலந்துகொண்டார்கள். ஆனால், நாடு கடந்த அரசு வாக்கெடுப்பில் என்ன செய்வது யாருக்கு வாக்களிப்பு செய்வது என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை. கடைசிநேரத்தில் எமது பகுதிக்குரிய வாக்களிப்பு நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அது பெற்றோருக்கு தெரிந்து இருக்கவில்லை. அங்கு அவர்கள் சென்றபோது குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்த ஓர் வேட்பாளரின் ஆதரவாளர் (உறவினர்) குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றுகூறி அவர்களை இடமாற்றம் செய்யப்பட்ட புதிய வாக்களிப்பு நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்து சென்று பின்னர் வீட்டில் இறக்கிவிட்டதாக கூறினார்கள்.

உண்மையை சொன்னால் யாழில் சிவப்பு புள்ளியாம்.நான் உண்மையில் கொஸ்கோவிற்கு சொப்பிங் செய்ய போகும் வழியில் வாக்கு நிலைய அம்புக்குறியை கண்டேன் உடனே அதற்குள் காரை திருப்பி எட்டிப்பார்த்தேன் புதுக்க கட்டிய ஒரு கட்டிடத் தொகுதி வெளியில் ஒரு 10,12 பெயர்கள் மாத்திரம் நின்றார்கள்.எலக்சன் கேட்ட சிலரும் நின்றார்கள்.

மாலை வூட்சைட் மோலுக்கு போனேன்.அங்கு கார் பார்க் பண்ண இடம் இல்லை.அதுவும் ஞாயிற்றுக்கிழமை. என்னடா என்று பார்த்தால் "சுறா" ஓடுதாம்.

(கொசுறு செய்தி. $120,000 கொப்பி வாங்கினதாம் வீக்கென்ட் மாத்திரம் $90.000 சேர்ந்து விட்டதாம்)

இதை நான் யாழில் எழுத ஒரே சிவப்பு புள்ளி.

மற்றவர்கள் போல் நானும் இனி எலக்சன் நடந்த இடத்தில் கார் பார்க் பண்ணவே இடமில்லை. சுறா ஓடும் தியேட்டரில் இலையான் அடிக்கின்றார்கள் என்று எழுதி தேசியதிற்கு பெருமை சேர்கப் போகின்றேன்.

எனக்கு உங்கட ஒப்பீட்டையும் சிரிப்பையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிறீலங்கா சிங்கள அரசாங்கம் தேர்தல் நடத்துவது இதன் முதன்முறையல்ல. அதற்கு என்று நீண்ட அனுபவம் உண்டு.

2004 இல் வாக்களித்த மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது தமிழர் தாயகத்தில் இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் வாக்களித்த அளவு வெகு குறைவாகும். இது அந்த மக்கள் தேர்தலில் அக்கறை செய்யாமையையே காட்டுகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமக்கான தேர்தல் என்று வட்டுக்கோட்டை தீர்மானம்.. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களிலேயே வாக்களித்துள்ளனர். அந்த வாக்குளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு கனடாவில் 48,000 வாக்களார்கள் வாக்களித்திருந்தனர். அவர்களையே பதிவு செய்த வாக்காளர்களாகக் கொள்ள முடியும். ஏனையோர் ஏனோ தானோ பேர்வழிகள். இந்தத் தேர்தலில் 31,000 மக்கள் வாக்களித்துள்ளனர்.

31,000 vote in Canadian TGTE elections

[TamilNet, Monday, 03 May 2010, 21:48 GMT]

25 representatives have been elected from Canada in the elections where 31,072 voters took part. Tharani Prapaharan topped Toronto GTA and Vicinities list with 4,967, Vanitha Rajendram topped Eastern Ontario with 8,451, Iyampillai (Shan) Shanmuganathan received 5,049 votes in Western Ontario and Maharajah (Nanthan) Nanthakumar in Quebec & Eastern Canada. Five candidates have been elected without contest in Western Canada.

In December 2009, 48,583 voters took part in Tamil referendum on independent and sovereign Tamil Eelam.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31671

கனடாவில் நிகழும் அரசுத் தேர்தல்களில் போட்டியிட்டு தமிழர்கள் எத்தனை பேரை கனடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள்...??! 200,000 வாக்கு வங்கியை வைத்திருக்கும் தமிழர்களால் ஏன் கனடா நாட்டு அரசுத் தேர்தலில் போட்டியிட்டு தமக்கான பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவதில் சிரமம் நிலவுகிறது..???!

எத்தனையோ இடர்கள் மத்தியிலும் இந்தத் தேர்தலை ஒரு ஆரம்ப அத்தியாயமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அதில் குறைகள் இருக்கலாம். அதை அனுபவத்தின் அடிப்படையில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பங்களிப்பு வீதங்கள் குறைவாக இருப்பது மக்களின் அக்கறையின்மையே அன்றி தாயகத்தில் உள்ள மக்களின் மனநிலையில் அல்ல கனடாவில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். தாயக மக்கள் தெரிவுக்கு தகுந்த ஆளின்றி வாக்களிக்க உரிமையின்றி.. நிம்மதியாக வாக்களிக்க வழியின்றி.. இருக்க இடமின்றி.. பஞ்சம் பட்டினி என்று வாடுவதால் வாக்களிக்கவில்லை. கனடாவில் எல்லாம் இருந்தும்.. எல்லாம் அளவுக்கு மிஞ்சிப் போனதால்.. பஞ்சியால் வாக்களிக்கவில்லை. இதுதான் வேறுபாடே அன்றி.. இதில் நகைக்க.. நளினம் செய்ய எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.

உதாரணத்திற்கு 2004 தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்ற ஜெயானந்த மூர்த்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் லண்டனின் ஒரு பகுதியில் மட்டும் போட்டியிட்டு 8,357 வாக்குகள் பெற்றுள்ளார். இதை எந்த அடிப்படையில் ஒப்பிடுவது...??! அதேவேளை கடந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் லண்டன் முழுவதும் போட்டியிட்டு ஜனனி ஜனநாயகம் 50,000 வாக்குளையே பெற்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பிரித்தானிய வாக்காளர்கள் வெறும் 35% வீதம் ஆகும். இதனடிப்படையில் 65% வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர் என்று பிரதிநிதிகளை தேர்வு செய்வதை எவராவது கைவிட்டா இருக்கின்றனர் இல்லையே.

UK turnout 2009 (tbc) 34.70% - - UK turnout 2004

38.83

http://www.europarl.org.uk/section/european-elections/results-2009-european-elections-uk

சிறீலங்கா முழுமைக்குமான நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை வாக்களித்த மக்கள் 50% இலும் குறைவு. அதற்காக எவர் வருத்தப்பட்டார்..???!

யாழ்ப்பாணத்தில் வன்னியில் வெறும் 20% மக்களே வாக்களித்திருந்தனர். அதற்காக யாரும் பாராளுமன்றத்துக்குப் போகாமலா இருக்கிறார்கள்..???!

அதேன் தமிழர்கள் தங்களுக்கு என்றான ஒரு கன்னி முயற்சியின் கீழ் நடத்திய இந்தத் தேர்தலை தமிழர்களே நக்கல் நளினம் செய்வது வேடிக்கையாகவும் அதேவேளை வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமா..???! :wub::rolleyes:

எனது இரண்டாவது கருத்தை வாசித்திருந்தா நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு உந்த கருத்தை எழுத வேண்டி வந்திருக்காது, உங்களுக்கு தெரிந்து வாசிக்கும் பழக்கம் இருக்கும் (Selective amnesia மாதிரி) இருக்கும் எண்டு தெரியாம போச்சு. திரும்பி மேல் போய் வாசிக்க கஸ்டமெண்டா திருப்பி பிரதியெடுத்து போட்டிருக்கிறன் வாசிச்சு பாருங்கோ. நீங்கள் மேலே சொல்லமலே எனக்கு உந்த கணக்கு வழக்கெல்லாம் தெரியும். சொல்ல போனா கனடவில் ஆளும் பழமைவாத கட்சி மொத்த மக்கள் தொகையில் 20% க்கும் குறைவானவர்களின் வாக்கை மாட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால் அந்த கட்சி தான் ஆழும் கட்சி. அந்த தற்பரியம் எனக்கு நல்லாய் புரிந்து தான் இருக்கிறது. ஆனால் கடந்த மாதம் சிறிலங்கா தேர்தலின் முடிவின் பின் குத்தி முறிந்து ஆய்வெழுதின சிலருக்கும், இங்க கருத்தெழுதின சிலருக்கும் தான் புரிந்திருக்கவில்லை. இந்த தேர்தலின் வாக்களிப்பு வீதத்தின் பின்னாவது விளங்கும் சக்தியை பெறுகிறனரோ பார்ப்பம் எண்டு தான் எழுதின்னான்.

எனது தனிப்பட்ட கருத்து உங்களை போன்றது தான். வட்டுகோட்டை தீர்மானமோ, நாடுகடந்த அரசோ எமது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பது என்று நினைக்கிறேன். ஆனால் மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சி என்ற அளவில் இரண்டுக்கும் எனது எதிர்ப்பு இல்லை.

ஆனால் ஆய்வு என்ற பெயரிலும், பிதற்றல்களை எழுதி தள்ளுவோர் மீதும், தங்களுக்கு பிடிக்காத விடயம்/ நபர் என்பதற்காக சேறடிப்பதும், சிறிலங்கா தெர்தல் முடிவுகள் ஏதோ கூட்டமைப்பை தூக்கி எறிந்தது போலவும் விழுந்தாலும் மீசையில் மண்படாத தனமா/ யதார்த்ததை ஏற்க மறுத்து சுய இன்பம் காணும் வகை கருத்துகளையும் எழுதிய சிலர், இந்த நாடுகடந்த அரசு தேர்தலில் அனைத்து சுதந்திரங்களும் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் எவ்வளவு வீததினர் வாக்களித்துள்ளனர்? என்பதையும், போர் வடு, இரணுவ கெடு பிடிகள் என்பவற்றுக்குள் உள்ள மக்களும் கிட்ட தட்ட அதே விகிதத்தினர் வாக்களித்திருந்தனர் என்பதையும் ஒப்பிட்டு நோக்கி, எமக்கு முடிவுகள் பிடிக்க வில்லை என்பதற்காக கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியாது. யதார்த்ததை சீர்தூக்கி பார்க்க தெரிய வேண்டும் என்பதாலேயுமே மேலே உள்ள கருத்தை எழுதினேன்.

மற்றும்படி பச்சைப்புள்ளி, சிவப்பு புள்ளி பற்றி எழுதியது, யாழில் கருத்தின் யதார்த்தை/ அல்லது அதன் உள்ளடக்கத்தை பார்க்காது, சகட்டுமேனிக்கு பாசை சிவப்பு புள்ளி குத்துவோரை சுட்டியே அந்த குறிப்பை இறுதியில் சேர்த்துக்கொண்டேன்.

சங்கதி உட்பட எந்த குடிசைக்கைத்தொழில் தமிழ் செய்தி இணையங்களையும் வாசிப்பதில்லை என்பதால் அந்த தளங்களில் என்ன வருகிறது என்று எனக்கு தெரியாது.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் சில கருத்துக்கள் மேலே வைக்கப்பட்டிருந்தது, அது என்னேவேன்றே விளங்க மாட்டோம் என்பது போல சிலர் வழமைபோல தங்களுக்கு தெரிந்த பிழையான புள்ளிவிபர ஒப்பீடுகளுடன் கதை அளக்க தொடங்கி விட்டார்கள். ஏனோ முன்னமே குறித்திருந்தேன், இப்படி ஒரு பிரச்சனை இருக்கென்று விளங்கினால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும், அதற்குரிய பதிலை தேட முடியும் என்று. எனக்கு தெரிந்த வகையில் சொல்லுகிறேன், இப்ப தமிழனுக்கு எதிரி சிங்களவன் அல்ல தங்களது வயிறு வளர்க்க பாடுபடும் வரதேசி ........ளே. இங்கே கதையளப்பதர்கேன்றே வரும் ஒரு கூட்டம், 10 , 100 இடத்திலும் பிழை என்று காட்டினாலும், சுத்திக்கொண்டு "குடிகாரன் எடுத்த சத்தி மாதிரி," கதை அளக்கிறதுதான் தொழில். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்லுகிறவை, தானே கதை எழுதுகிரவைக்கு எத்தனை சூடு வைத்தாலும் எதோ வராதாம்.

மற்றவர்கள் போல் நானும் இனி எலக்சன் நடந்த இடத்தில் கார் பார்க் பண்ணவே இடமில்லை. சுறா ஓடும் தியேட்டரில் இலையான் அடிக்கின்றார்கள் என்று எழுதி தேசியதிற்கு பெருமை சேர்கப் போகின்றேன்.

மற்றது, அர்ஜூன் ,

இது ஓகே , ரசிக்ககூடியதாக இருக்குது, ஆனால் மற்றது அப்படியல்ல.

உதாரணத்துக்கு என்னை பாருங்கள், sunday விரதம், ஒருமாதிரி சமைச்சு கிமைச்சு, சாப்பிட்டு இருக்கு, 2 .30 ,300 ஆகிவிட்டது, பிறகு வோட் பண்ண வெளிக்கிட ..ஒரு கோஷ்டி தங்களுக்கு வோட் பண்ண வேணுமெண்டு வீட்டை வருகிறது, பிறகு அவைக்கு தேத்தண்ணி எல்லாம் போட்டுகொடுதிட்டு ஓம் ஓம் சொல்லிபோட்டு, வாசலுக்கு போக, திரும்ப கன்வசிங், ஓம் ஓம் ... உள்ளுக்க இருக்கிற ஆக்கள், 2 பேர்ல ஒருத்தன் என்னோட உரில படித்தவன் , மற்றவர் மனிசியோட படித்தவர் இங்கே. ஒரு சந்தோசம். வீட்டை வந்தால், தேர்தல் முடிவுகள் இல்லை எங்கட பகுதிக்கு வரவில்லை.(நான் டொரோண்டோ அல்ல ). பிணக்குபாடு, இப்ப வந்திருக்கு. சரியோ பிழையோ, விழுந்ததை எண்ணி சொல்லுறதில என்ன பிரச்சனை ஐயா ...ஆனால் ஒரு கட்டத்தில, ஒதுங்கி இருக்க வெளிக்கிட்ட நானே சிலதுகளை செய்துபோட்டு, என்ன நடக்குது என்று பார்த்தல் ...என்கேயன் சுறா பார்த்திருந்தால் நல்லம் போல என்று வந்திட்டு. அதே இங்கே எழுத வெளிக்கிட்டால், அண்ணமாரிண்ட குசும்பு தாங்கேலாம இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனது இரண்டாவது கருத்தை வாசித்திருந்தா நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு உந்த கருத்தை எழுத வேண்டி வந்திருக்காது, உங்களுக்கு தெரிந்து வாசிக்கும் பழக்கம் இருக்கும் (Selective amnesia மாதிரி) இருக்கும் எண்டு தெரியாம போச்சு. திரும்பி மேல் போய் வாசிக்க கஸ்டமெண்டா திருப்பி பிரதியெடுத்து போட்டிருக்கிறன் வாசிச்சு பாருங்கோ. நீங்கள் மேலே சொல்லமலே எனக்கு உந்த கணக்கு வழக்கெல்லாம் தெரியும். சொல்ல போனா கனடவில் ஆளும் பழமைவாத கட்சி மொத்த மக்கள் தொகையில் 20% க்கும் குறைவானவர்களின் வாக்கை மாட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால் அந்த கட்சி தான் ஆழும் கட்சி. அந்த தற்பரியம் எனக்கு நல்லாய் புரிந்து தான் இருக்கிறது. ஆனால் கடந்த மாதம் சிறிலங்கா தேர்தலின் முடிவின் பின் குத்தி முறிந்து ஆய்வெழுதின சிலருக்கும், இங்க கருத்தெழுதின சிலருக்கும் தான் புரிந்திருக்கவில்லை. இந்த தேர்தலின் வாக்களிப்பு வீதத்தின் பின்னாவது விளங்கும் சக்தியை பெறுகிறனரோ பார்ப்பம் எண்டு தான் எழுதின்னான்.

நான் தங்களின் இரண்டு கருத்துக்களையும் படித்தேன். தங்களின் முதல் கருத்தும் ஒப்பீடுகளும் தவறான ஒரு பார்வையை நடந்து முடிந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் காட்ட விளைபவர்களை அதிகம் கவரத்தக்கதாக தவறான அர்த்தம் வழங்கக் கூடிய ஒப்பீடுகளோடு இருப்பதாக நான் உணரத்தலைப்பட்டதால் அதற்கு எனது கருத்தை பதிவு செய்தேன்.

நல்லது. Selective amnesia மாதிரி என்று சொல்லி இருக்கிறீர்கள். ஊடகங்களில் தவறுகள் நிகழ்வதும் திருத்தப்படுவதும் வழமை. சங்கதி போன்ற ஊடகங்களில் வரும் பிழைகளை முன்னர் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள் (உங்களின் அண்மைய கருத்துக்கள் பல பிழைகளை திருத்துவதாகவே அமைந்துள்ளன. அது வரவேற்க வேண்டிய விடயம். ஆனால் பிழைகளை விடுவதால்.. அதிகம் இணைய ஊடகங்கள் வெளிவருவதால்.. மட்டும் இணைய ஊடகங்கள் குடிசைக் கைத்தொழில் நிலைக்கு போய்விடுகிறது என்ற ஒப்பீடும் அங்கு குடிசைக் கைத்தொழில் என்ற ஒப்பீடு அவசியமா..??! குடிசைக் கைத்தொழில் என்றால் ஏன் ஒரு மட்டம் தட்டிய பார்வை. அது தவறில்லையா..??!) இப்போ சங்கதியை தெரிவு செய்து அதையே குடிசைக் கைத்தொழில் இணையங்கள் என்றும் கூறித் திரிகிறீர்கள். இதுவும் தெரிவு அடிப்படையிலானது தானே.

இல்லை.. ஒரு கருத்தாளர் மீது கருத்துக்கு வெளியில் அநாவசிய தற்துணிவான மேதாவித்தனமான குற்றம் சுமத்த முன் எனக்கு அப்படியான தேவையற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அவசியம் இருக்கா என்றும் சிந்திக்க வேண்டும். இன்றேல் நீங்கள் சுமத்தும் அநாவசிய குற்றச்சாட்டு உங்களையும் திரும்பி வந்து தாக்கும்.

கருத்துக்கு கருத்தெழுதுங்கள். அமினிசியா பற்றி பேசும் இடத்தில் அதைப் பற்றிப் பேசுவோம். தாராளமாக அதைப் பற்றிக் கருத்தாடலாம். ஆனால் இத்தலைப்புக்குள் குறிப்பிட்டு நான் மேற்கோள் காட்டி எழுதிய கருத்திற்கு மாற்றுக் கருத்திருந்தால் வையுங்கள். அதைத்தான் நான் செய்தேன். அதைவிடுத்து உங்களின் இரண்டாம் மூன்றால் கருத்துக்களில் நீங்கள் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள்.. என்றெல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதற்கு நீங்கள் முதல் குறிப்பிட்ட கருத்தில் சொன்ன விடயங்களை அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். அப்படி அமையாத போது..???! எனது கருத்தை அதற்கு வைத்தேன். இப்போ விளங்கும் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்காகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள்?

பாராளுமன்றம் என்பது சட்டவாக்க சபையாகவுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவையான சட்டங்களை அதன் சரத்துக்களை விவாதித்து சட்டங்களை உருவாக்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். எனினும் இலங்கையிலும், தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலும் தேர்தலில் நின்றவர்கள் கொள்கைகள், கோட்பாடுகளை மக்களுக்கு விளக்கி தங்களைத் தெரிவுசெய்யுமாறு கேட்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு அரசியல் அறிவு போதாது என்று அவர்கள் நினைத்ததுதான் (தேர்தலில் நின்றவர்களுக்கு அரசியல் அறிவு இருக்கின்றதா என்பது வேறுவிடயம்). கொள்கை வித்தியாசங்களைப் பிரித்தறிய முடியாத மக்கள் "பஞ்சி" என்று வீட்டில் இருந்திருக்கலாம்.

பி.கு. நாளை பிரித்தானியா பாராளுமன்றத் தேர்தலிலும் தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்களுக்குத்தான் நம்மவர் வாக்களிப்பர். கட்சிகளின் கொள்கைகளைப் பற்றி யாருக்கு அக்கறை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்து முடியேல்ல போல, கெதியா முடியுங்கோ மாகாணசபை தேர்தலோட கிலாசாக போகிது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்து முடியேல்ல போல, கெதியா முடியுங்கோ மாகாணசபை தேர்தலோட கிலாசாக போகிது. :lol:

என்னது இப்பவே போக தொடங்கி விட்டதா? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட வாதங்கள் .....இன்னும் தெளிவு இல்லை என்றால் ..பாருங்கள் இணைப்பை ....

http://tamilnet.com/art.html?catid=99&artid=31696

இது புகையா, கொழுந்து விட்டெரியும் சுவாலையா , அல்லது இங்கே சிலர் கூறுவது போல் வதந்தியா?

நாங்கள் ஏமாறப் பிறந்தவர்கள் என்று எப்பவோ எழுதியாயிற்று, யாரால் எம்மாற்றப்படப்போகிறோம் என்கிறதே இன்றுள்ள பிரச்சனை...

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இப்பவே போக தொடங்கி விட்டதா? :D:lol:

போற இடத்தில நின்று எழுதுவதால் எல்லாம் அதைபற்றிதான எழுத்து..........

என்ன செய்வது பாவம் பழக்க தோசம்போல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.