Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை

தானா விஷ்ணு

vishnucopy.jpg

மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று.

யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னியையே பேணிவந்தனர். ஏறத்தாழ பதின்மூன்று வருடங்கள் தமிழீழப் போராட்ட வரலாற்றில் வன்னியே விடுதலைப்புலிகளின் தனி நாடாகியிருந்தது. வன்னியில் மிக முக்கியமான இராணுவ முகாம்கள் மாங்குளம், ஆனையிறவு, முல்லைத்தீவு, ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை விடுதலைப்புலிகள் முற்றாகத் தகர்த்ததானது விடுதலைப்புலிகளின் வீரதீரங்களை உலக நாடுகள் பிரமிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. இந்நகரங்களின் வெற்றியின் பின்னர்தான் வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் முற்றாக வந்திருந்ததாகக் கொள்ளப்பட்டது.

வன்னியிலிருந்துதான் அரசுக்குரிய மிகமுக்கியமான கட்டமைப்புக்களையெல்லாம் உருவாக்கி ஒரு குட்டியரசாங்கத்தை நடத்தினார்கள், அங்கிருந்துதான் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள்.அங்கிருந்துதான் ஏனைய மாவட்டங்களுக்கான நிழல் நிர்வாகங்களை நடத்தினார்கள். அங்கிருந்துதான் யுத்தங்களுக்குத் தயாராகினார்கள். அங்கிருந்துதான் யுத்த உபகரணங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டார்கள். இது அவர்களின் தனி முயற்சியால் மட்டும் உருவானதல்ல. இறுதிவரை யுத்தங்களுடன் வாழ்ந்து வந்த வன்னிமக்களின் உயர்பங்களிப்புக்கள் எப்போதுமே இருந்து வந்திருந்தது..

மிக இறுக்கமான போர்நடந்த காலங்களில் விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அதன் தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றி வைத்திருந்தது வன்னிக்காடும் வன்னி மக்களும்தான். இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் உக்கிரமான போர் நடத்திக் கொண்டிருந்தபோது மணலாற்றுக்காட்டில் பிரபாகரனுக்கு சைக்கிள் ரியூப்பிற்குள் உணவு கொண்டு சென்று கொடுத்த நபர் ஒருவருடன் நான் உரையாடியிருக்கின்றேன். அவர் அப்போதிருந்த இறுக்கமான சூழலையும் உயிராபத்துக்களையும் எனக்கு வர்ணித்தபோது. நான் அதிர்ந்து போய்விட்டேன். நிச்சயமாக அது இலகுவான காரியம் எனப்படவில்லை. இதுவொரு உதாரணம். அங்கு வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனும் ஏதோவொரு வகையான பங்களிப்புகளைச் செய்து வந்திருக்கின்றார்கள். பலர் அப்படி யொரு காரணத்திற்காக இராணுவத்தாலும், ஏனைய ஆயுதக்குழுக்களாலும் கொல்லப்பட்டுமிருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் தாண்டி அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து, அவர்களுக்குப் பல வழிகளிலும் உதவி வந்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் விடுதலைப்புலிகள் மீதும், தமிழீழத்தின் மீதும் மிக விருப்புக்கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றர்கள் என்பது புலனாகும்.

இப்படியிருந்த மக்கள் திட்டித் தீர்க்கும் காலம் பின்னாட்களில் வருமென்று விடுதலைப்புலிகளோ அல்லது வேறுயாருமோ நினைத்தேயிருந்திருக்கமாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தது.

விடுதலைப் புலிகளின் உச்சமான எழுச்சியால் அவர்களுக்கு யுத்த நிறுத்தமென்ற நல்வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதனைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறியதால் அதுவே அவர்கள் பலவீனமடையவும், வீழ்ச்சியடையவும் காரணமாகியிருந்தது. வன்னி இறுதியுத்த நிலவரப்படி யுத்த நிறுத்தக் காலத்தில் அரசப் படைத்தரப்பு போர் உத்திமுறைகளையும்,ஆயுதத் தளவாடங்களையும் வளர்த்துக்கொண்டதாகவும், விடுதலைப்புலிகள் தம்மைத் தயார்ப்படுத்தத் தவறியிருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிந்திருக்கின்றது. அப்படியென்றால் அவர்கள், ஏறத்தாழ நான்கு வருடங்கள் என்ன செய்தார்கள் என்பது விடை காண முடியாத புதிர்தான். ஆனாலும் சில விடயங்கள் வெளிப்படையானவையாகவும் இருந்தன இந்தக் காலத்தில்தான் வன்னிக்குள்ளும், வெளியிலும் பணம் உழைக்கும் முதலீடுகள் இடப்பட்டன, வரிகள் வசூலிக்கப்பட்டன, பொறுப்பாளர்கள் பலர் ஆடம்பரமான வீடுகள் கட்டினார்கள், அதிகமான போராளிகளுக்குத் திருமணங்கள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் படை திரட்டுவதற்கான முயற்சிகளோ, பிரச்சாரங்களோ, மக்களுடனான கலந்துரையாடல்களோ அங்கு நடைபெறவில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியதாகக் கருதமுடிகின்றது.

வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளால் யுத்தநிறுத்தமானது உடைக்கப்பட்டதனைத்2 தொடர்ந்து வந்த காலங்களும், தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் இன்னுமின்னும் அவர்களைப் படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தது. இதனை மக்கள் முன்கூட்டியே உணர்ந்து கொண்டளவிற்கு விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் உணர்ந்திருந்தால் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை அவர்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் இறுதிவரை அவர்கள் எந்தப் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இத்தனை பாரிய அழிவுகளையும், தோல்விகளையும் மக்களும், அவர்களும் சந்தித்திருக்க வேண்டிவந்திருக்காது.

விடுதலைப்புலிகளின் மிக முக்கியமான தோல்வி. செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல். இதுவே முதலாவது தோல்வியெனவும் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அதனைத்தமக்கான அரசியல் வெற்றியாக மாற்றியிருந்தார்கள். அதன் எதிரொலியே புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களுமாகும். பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து அவர்களை இளைஞர் சேனையாக மாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்புவது அவர்களின் திட்டம். இது மாணவர்களின் விருப்பத்தோடு நிகழ்ந்ததல்ல. கட்டாயத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு இரகசிய நடவடிக்கை. இந்தப் பயிற்சிக்குச் செல்லாத மாணவர்கள் பாடசாலை சென்று கல்வி கற்கமுடியாது என்ற கண்டிப்பான உத்தரவு போடப்பட்து. துரதிஷ்டம் என்னவென்றால் படிப்பில் ஆர்வம்மிக்க மாணவர்களே அங்கு சென்றிருந்தார்கள். மறுநாள் முகமாலையில் போர் தொடங்கப்பட்டிருந்தது. நான்காவது நாள் வன்னியின் ஒட்டு மொத்த மக்களையே துயருள் ஆழ்த்திச் சென்ற செஞ்சோலை வளாகத்தின் மீதான விமானத்தாக்குதல் நிகழ்ந்தது. ஐம்பத்திரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்நிகழ்வானது மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே சிறு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. போர் தொடங்கப்பட்டாயிற்று, படைபலமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை “வீட்டுக்கொருவர் கட்டாயமாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும்” என்பதாக இருந்தது. சந்திகளிலும் தெருக்களிலும் இளைஞர்கள், யுவதிகள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். இது வன்னிமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆயுதத்தின் முன் அவர்கள் ஏதும் செய்ய முடியாதவர்களாகவே இருந்தார்கள்.

srilankavanni.jpg

கட்டாய ஆட்சேர்ப்பானது வன்னியெங்கும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. தெரு ஒவ்வொன்றும் இளம்பிராயத்தினரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. எஞ்சிய பலர் பெரும் காடுகளுக்குள் ஒளித்திருக்கப் பழகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளால் அவர்களைப் பிடிக்கமுடியாது போக, பிணைக்கைதிகளாகத் தந்தையோ அல்லது தாயோ கொண்டுசெல்லப்பட்டு கடினமான வேலைகள் வாங்கப்பட்டதோடு களமுனைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். இதனால் காடுகளுக்குள் ஒளித்திருந்தவர்கள் தமது பெற்றோரைப்பிணையெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்கள். இப்படி விருப்பற்றவர்களை யுத்தத்தில் பயன்படுத்தத் துணிந்தது விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இரண்டாவது காரணமாகியது. அனுபவமற்றவர்கள், இயல்பிலேயே பயம்மிக்கவர்கள் எவ்வாறு களத்தில் நின்று போராடுவார்கள்? அவர்கள் களத்தினை விட்டு ஓடி வருவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதுமாக கயிறிழுப்பது போன்ற விளையாட்டே அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது அரச படைத்தரப்பு வன்னிக்குள் நுழைவதற்கு சாத்தியமானதாகிப் போனது. இங்கு வேடிக்கையென்னவென்றால் களத்தில் நின்று போராடியவர்களைவிட கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதற்கு விடப்பட்ட போராளிகள் அதிகம்.

கட்டாய ஆட்சேர்ப்பில் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் வரிசை, வரிசையாக உயிரற்ற பிணமாகக் கொண்டுவரப்பட்டார்கள். இது வன்னி மக்களின் மனதில் பெரும் துயராகக் கவிந்ததோடு விடுதலைப்புலிகளை வெளிப்படையாகத் திட்டவும் தூற்றவும் செய்திருந்தது. அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது ஒரு திறந்த சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.3

வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கொருவரைப் போராட்டத்தில் இணைத்திருந்தார்கள். இந்நிலையிலும் சிலர் தமது பிள்ளைகளைக் கடல் வழியாகப் படகின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்திருந்தார்கள். இது உண்மையில் துணிகரச் செயல்தான். கடற்பிராந்தியமெங்கும் கடற்புலிகளின் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டிருக்கும், கடலில் அவர்களின் படகுகள் றோந்து வந்துகொண்டிருக்கும், இதனையெல்லாம் தாண்டி அவர்களை ஏமாற்றிச் செல்வதென்பது கடினமானதுதான் பலர் பிடிபட சிலர் தப்பிச் சென்றிருக்கின்றார்கள். வன்னியை விட்டுத் தப்பிச்செல்ல நினைப்பவர்கள் புலிகளின் பார்வையில் தேசத்துரோகிகள். அகப்பட்டுக் கொண்டால் தண்டனை கடுமையாக இருக்கும். மொட்டையடித்து தெருத்தெருவாகப் பார்வைக்கு விடப்பட்டவர்களும் உண்டு.

மக்களின் வயிறு பற்றியெரியத் தொடங்கியது. சபிக்கத் தொடங்கினார்கள். நாசமாகிப் போகப்போகிறீர்கள் என்று திட்டினார்கள். அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை அடுத்தடுத்து தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். முக்கியமான போராளிகள் இருந்த இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல முக்கியஸ்தர்கள் உயிரிழந்தார்கள். வன்னியின் பகுதிகள் அடுத்தடுத்து வீழத்தொடங்கியது. பின்வாங்கத் தொடங்கினார்கள், எதிர்த்தும், சில இடங்களில் எதிர்க்காமலும் பின்வாங்கினார்கள். அதனையும் எப்போதும் சொல்வது போலவே தற்காலிகப் பின்னடைவென்றே சொன்னார்கள். அதனை அவர்கள் “கிட்டவரட்டும், திட்டமிருக்கு” என்ற ரிதம் கலந்த வார்த்தைகளால் சொல்லத்தொடங்கியிருந்தார்கள். இந்த வார்த்தையானது பின்னாளில் மக்களிடம் ஒரு நையாண்டி வார்த்தையாக மாறியிருந்தது.

கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு இராணுவமும், தடுப்பதற்கு விடுதலைப்புலிகளும் கடுமையான யுத்தம் செய்திருந்தார்கள். விடு தலைப்புலிகள் தமது உச்சக்கட்ட சண்டையை அப்போதுதான் செய்தது. அது மீண்டும் வன்னிமக்கள் சிலருக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தது. “சிலர் எங்கடை பொடியல் விடமாட்டார்கள், இனித்தான் பொடியல் சண்டை செய்யப்போறாங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் கிளிநொச்சியும் இறுதியில் வீழ்ச்சியுற்றது. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் ஏறத்தாழ பத்தாவது தடவையாகவேணும் இடம் பெயர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இடமாகத் தமது உடமைகளையும் பிள்ளைகளையும் காவிக்கொண்டு செல்லும் பரிதாபம் மிகக் கொடுமையானது. ஒவ்வொரு தடவையும் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வாகனச் செலவு கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி மன்னாரிலிருந்து பதினைந்தாவது தடவையாக இடம்பெயர்ந்து வலைஞர்மடத்துக்கு வந்திருந்த ஒருவர் ‘தான் மன்னாரிலிருந்து வலைஞர் மடத்திற்கு வரும்வரைக்கும் கொடுத்த வாகன ஏற்றுக்கூலி இரண்டு பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கக் காணும்’ எனச் சொன்னார். இப்படி எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் செலவழித்து விட்டு இறுதிக்காலங்களில் சாப்பிடுவதற்கு வழியில்லாமல் பட்டினி கிடந்திருக்கின்றார்கள்.

இப்படி இப்படியே எல்லா நகரங்களும் வீழ்ச்சியுற, அரசப் படைகள் உடையார்கட்டு, தேவிபுரப் பகுதிகளைப் பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் பல இடங்களிலுமிருந்து அப்பகுதிகளுக்குச் செல்லத்தொடங்கினார்கள். சனம் நிறைந்த சனக் காடாகியிருந்தது அப்பகுதி. ஆனால் அங்குதான் வன்னி யுத்தத்தில் முதல்முதல் அதிகூடிய மக்கள் அரச படைகளின் ஏவுகணைத் தாக்குதல்களில் பலியாகியிருந்தார்கள். அந்த ஏவுகணைகள் அப்பகுதியில் விழுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. விடுதலைப் புலிகள் தமது ஆட்லறி ஏவுகணைகளை அப்பகுதியிலிந்தே ஏவிக் கொண்டிருந்தார்கள். எது எப்படியோ, மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். இருந்தும் மக்கள் முடிந்தளவுக்கு பதுங்குக் குழிக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும்? பிள்ளைகளுக்குப் பசிக்குமே,

பொருட்கள் தட்டு பாடாகியிருந்தது. எப்போதாவது நிவாரணக் கடைகளில் சாமான்கள் கொடுப்பார்கள் அதற்கு வரிசையில் சென்று நிற்கவேண்டும். இல்லையென்றால் குடும்பமே பட்டினிகிடக்க வேண்டி வரும். பிள்ளைகளுக்கு பால் மாவு கொடுக்கப்படும் போது நீண்ட வரிசையில் நிற்கவேண்டிவரும். இப்படியான நேரங்களில் மக்கள் சாவதனை எப்படி யாரால் தடுக்கமுடியும். தெருக்களே ஓலங்களாலும், ஒப்பாரிகளாலும் நிறைந்திருந்தது. யார் விழுந்தாலும், யார் காயப்பட்டாலும் யாரும் யாரையும் பார்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்வதற்காக முண்டியடித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். தெருக்களில் பிணங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன. சில உடல்கள் அந்த இடத்திலேயே கிடங்கு கிண்டித் புதைக்கப்பட்டுமிருந்தது.

இதனைவிட மோசமாகவே அடுத்துவந்த யுத்தமுமிமியிருந்தது. மக்கள் ஏவுகணைகள் ஏவப்படாத நேரங்களாகப் பார்த்து உடையார் கட்டு, தேவிபுரப் பகுதிகளிலிருந்து இரணப்பாளை, பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார்கள். பின் தேவிபுரப் பகுதியையும் அரசப்படைகள் கைப்பற்றிக்கொண்டன.

மணலாற்றுக் காட்டுப்பகுதியிலிருந்து யுத்தம் செய்த படைகள் முல்லைத்தீவு வரையான பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள மக்கள் பொக்கனை தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரையான பகுதிக்குள் வந்து அடைபட்டுப் போனார்கள். ஏறத்தாழ ஏழு சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மக்களும், விடு தலைப்புலிகளும் அடைபட்டுக் கிடந்தனர். அப்போது இரணைப்பாளையும் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போர் தொடங்கும் போது ஏறத்தாழ ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவினைத் தம்வசம் வைத்திருந்தார்கள்.

மிகமுக்கியமான உயிரிழப்புக்களும், புலிகளின் கொள்கை மாற்றங்களும் இங்குதான் நிகழ்ந்தன. விடு தலைப்பபுலிகள் இறுதியாக இந்தப் பிரதேசத்தையேனும் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு போர்செய்தார்கள். ஆனாலும் உக்கிரமான போரல்ல. அப்போதும் அவர்களுக்குப் படைபலம் போதுமானதாக இல்லை. அதனால் ‘வீட்டுக்கொருவர், நாட்டுக்காக மற்றவர்கள்’ என்று சொல்லியபடி. எஞ்சியவர்களையும் வீடுவீடாகச் சென்று பிடிக்கத் தொடங்கினார்கள். இப்போது பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்களும், பதின்மூன்றுவயதாகினும் தோற்றமுள்ளவர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்போது எனக்கொரு நண்பர் சொன்னார் “இப்போது அவர்களுக்குத் தேவை நிறைகூடிய சதைக்கட்டிகள்தான்.”

மக்கள் பேதலித்துப் போனார்கள், நிம்மதியில்லாதவர்களானார்கள், பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள். பல இடங்களில் எதிர்ப்புகள் எழத்தொடங்கின. பல போராளிகளை மக்கள் செமையாக அடித்துமிருந்தார்கள். ஆனால் அந்த எழுச்சியை விடுதலைப்புலிகள் மிக இலகுவாக அடக்கினார்கள். இரண்டு இடங்களில் எதிர்த்துக் கதைத்தவர்கள் சிலரை ஈவுஇரக்க மற்றுச் சுட்டார்கள் ஆயுதத்தின் மீதான அச்சம் மக்களை மண்டியிடச்செய்தது. பிள்ளைகளை இழுத்துச்செல்லப் பார்த்துக் கொண்டே இருந்தவர்கள் பிணமாக வரவும் பார்த்துக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இருந்தாலும் சில இடங்களில் சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.

இப்படியொரு இறுக்கமான சூழ்நிலையில் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்வது என்ற முடிவோடு இருந்தார்கள். ஆனால் போவதற்கு மிக அசாத்தியமான துணிச்சல் தேவைப்பட்டது. மிகவும் துணிந்தவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.4 அப்போது விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தை தடுத்து நிறுத்துவதோடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லவிருக்கும் மக்களையும் தடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்கள் இராணுவத்தைத் தடுப்பதற்கு எப்படித் தாக்குதல் நடத்தினார்களோ அதுபோலவே மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். ஆயுதங்கள் மக்களை நோக்கியும் திருப்பப்பட்டிருந்தன. மக்கள் உள்நுழையக்கூடிய பாதைகளில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. அதில் நிறையப்பேர் காலற்றும், இறந்தும் போயிருக்கின்றார்கள்.

போர் முனை மக்களுக்கு மிக அண்மையிலேயே இருந்தது. நான் நினைக்கிறேன், உலக வரலாற்றிலேயே போர் முனைக்கு மிக அண்மையாக வாழ்ந்த மக்கள் வன்னியில் வாழ்ந்த மக்களாகத்தான் இருக்குமென்று. துப்பாக்கிச் சன்னங்கள் மிகச் சாதாரணமாக வரும். அதற்கு விலக்குவதற்கு பழகிக்கொண்டார்கள். இருந்தும் பலர் எதிர்பாராத விதமாக காயப்பட்டோ, இறந்தோவிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பதுங்குக்குழிகளே வீடாகிப்போயிருந்தது. சமையலைக் கூட சிலர் பதுங்குக்குழிக்குள் அல்லது பதுங்குக் குழிவாசலில் செய்து வந்திருந்தார்கள். சிலர் எப்போதாவது சமைப்பவர்களாக இருந்தார்கள்.

வைத்தியசாலை காயக்காரர்களால் நிறைந்து வழிந்தது. மருத்துவ வசதியற்ற நிலையிலும் விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவும் அரச மருத்துவர்களும் தம்மால் முடிந்தளவு சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் பாரிய காயக்காரர்களைத் தப்பவைக்க முடியவில்லை. திருகோணமலையிலிருந்து கப்பல் வரும்போது பாரிய காயக்காரர்கள் கப்பல் மூலமாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அதுவும் நிரந்தரமாக நடைபெற்றது என்று சொல்லமுடியாது. இறப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன. போரும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழலில் அவர்கள் இரண்டு மிக முக்கியமான தாக்குதல்களைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒன்று, புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்துக்குள் மிக முக்கியமான தளபதிகள், முக்கியமான ஆயுதத்தளவாடங்களுடன் சென்று மேற்கொள்ளவிருந்த தாக்குதல். இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது மட்டுமல்ல. நான்கு பக்கங்களாலும் சூழ்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் விடு தலைப்புலிகளின் மிகமுக்கியமான போர் உபாயங்களை நன்கறிந்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இது விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இழப்பாகும். இதுபற்றி அப்போது நண்பர் ஒருவர் ‘விடுதலைப்புலிகளின் சக்திவாய்ந்த இராணுவ இயந்திரங்கள் அழிக்கப்பட்டு விட்டÕதென குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கடல்வழியாக தேவிபுரப் பகுதிக்குள் நுழைந்தார்கள். அதுவும் பாரிய தோல்வியுடனும், பாரிய இழப்புக்களுடனும் முடிவுற்றது.

இனி வெறும் தக்கவைக்கும் முயற்சிகளே செய்யமுடியுமென்ற சூழலிலும் இந்தியா அல்லது வேறு நாடுகளின் மூலம் ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தார்கள். அதுவரையில் தக்க வைக்க வேண்டுமென்ற நிலை, இறுதியாக ஒரு துண்டுப்பிரசுரம் விடுதலைப்புலிகளால் விடப்பட்டிருந்தது. அதில் நாற்பத்தைந்து வயதிற்குட்பட்ட அனைவரும் போராடுவதற்கு வரவேண்டும் என்றும் அழைத்துச் செல்வதற்கு போராளிகள் வருவார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், எதிர்ப்பவர்கள் ஆண்,பெண் பேதமின்றி அந்த இடத்திலேயே தண்டிக்கப்படுவார்கள் என்றுமிருந்தது. இது மக்களுக்குப் பெரும் இடியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அது அவ்வளவு சாத்தியப்படவில்லையென்றாலும், பலர் களமுனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். தேசியப் பணியென்று காவலரண்கள் அமைப்பதற்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்றவர்களில் பலர் வீடு திரும்பவில்லை.

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலிருந்து இராணுவத்தினர் மாத்தளனை ஊடருத்து தாக்குதல் மேற் கொண்டு மாத்தளனைக் கைப்பற்றினார்கள். அன்று மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்தார்கள். இது இராணுவமே எதிர்பார்த்திருக்காத தொகை. மாத்தளனும் வீழ்ச்சியுற்றது

இறுதியாக வலைஞர்மடமும் முள்ளிவாய்க்கால் பகுதியுமே எஞ்சியிருந்தது. மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடு தலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.

இறுதியாக வலைஞர்மடமும் இழக்கப்படப்போகும் நிலையில் விடுதலைப்புலிகள் மக்களை முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். போக மறுத்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். சிலர் இரகசியமாக எங்கேனும் இருந்து விட்டு இராணுவத்தினர் வந்ததும் சரணடைந்து விடுவார்கள். அதுவும் முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்கள். இறுதிவரை விடுதலைப்புலிகள் மக்களை இராணுவப்பகுதிக்குசெல்வதனை தடுத்துக்கொண்டேயிருந்தார்கள். அதற்கென விசேடமான படையணியும் செயல்பட்டுவந்திருந்தது. வலைஞர்மடமும் வீழ்ச்சியுற்றது.

முள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது.

இறுதியாக முள்ளிவாய்க்காலும் வீழ்ச்சியுற்றது. விசுவாசமான போராளிகள் நேர் எதிரே நின்று போரிட்டு மாண்டுபோனார்கள். மற்றவர்கள் துப்பாக்கிகளையும், சயனற் குப்பிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, எவரிடம் மக்களை மண்டியிடக் கூடாது என்று சொன்னார்களோ தடுத்தார்களோ, அவர்களிடமே மண்டியிட்டார்கள்.

மக்கள் சொத்துடமைகளையெல்லாம் விட்டுவிட்டு, இழப்புக்களின் வேதனைச்சுமையையும், போர் தந்த தழும்புகளையும் சுமந்துகொண்டு எப்போதுமே எதிரியாகக் கற்பனை செய்திருந்த அரசப் படைகளைச் சரணடைந்திருந்தார்கள்.

1. யாழ்ப்பாண வீழ்ச்சியினை விடு தலைப்புலிகள் தற்காலிகப் பின்னடைவென்றே இறுதிவரை சொல்லிவந்திருக்கின்றார்கள். ஆனால் மிகமுக்கியமான குறிப்பு என்னவென்றால் மீண்டும் யாழ்ப்பாணத்தினை இறுதிவரை அவர்கள் கைப்பற்ற முடியாதவர்களாகவே இருந்தார்கள்)

2. யுத்தநிறுத்தமானது அரசப் படைத்தரப்பால் உடைக்கப்பட்டதென விடுதலைப்புலிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இரண்டு தரப்புக்குமே சமாதானத்திலும், யுத்தநிறுத்தத்திலும் நம்பிக்கையோ, விருப்போ இல்லை. அவர்களின் பல நடவடிக்கைகள் இதை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

3. செல்வந்தர்கள் தமது முழுச் சொத்துக்களையும் விடுதலைப் புலிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன நிகழ்வுகளும் நடைபெற்றிருக் கின்றன.

4. சில அரசியல்வாதிகளும், புலம் பெயர் நாட்டிலிருந்த சிலரும் மக்கள் புலிகளை விட்டுவர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தது.

ஓவியங்கள் : புகழேந்தி

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=2916

இந்த கட்டுரையின் உண்மைத்தன்மை என்ன...???

யாரால் புலிகளை பற்றி வாக்குமூலம் கொடுக்க பட்டது...?? இராணுவத்தின் வெறியாட்டங்கள் எவையும் குறிப்பிடப்படாது ஒரு நடுநிலையாளரால் எழுதப்பட்டு இருக்கிறது எண்று எவ்வகையிலும் சொல்ல முடியாத கட்டுரை...

அப்பட்டமான பக்கசார்பு கொண்டது...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலு வேகமாகப் படித்து விட்டீர்கள்! பொய்யான தகவல்களை வைத்தா கட்டுரை வரையப்பட்டிருக்கின்றது?

வலு வேகமாகப் படித்து விட்டீர்கள்! பொய்யான தகவல்களை வைத்தா கட்டுரை வரையப்பட்டிருக்கின்றது?

சின்னதில் இருந்து வாசிப்பு எனக்கு சின்னதில் இருந்து ஒரு பிரச்சினையாக இல்லை... இவைகள் எல்லாமே உண்மை என்பதுக்கும் இந்த கட்டுரையாளரின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது... ( நீங்கள் இணைத்து ஆறு நிமிடங்களுக்கு பிறகு அந்த பதிலை எழுதி இருக்கிறேன்)

யாழ் விடுப்பட்டது, ஆள் பிடிப்பு ,புலிகள் கடைசியில் சுட்டது, மக்களின் இடம் பெயர்வுகள் மன்னாரில் இருந்து வலைஞர் மடம் வரை , பொறுப்பாளர்களின் அனுசரனையோடு வெளியேறியவர்கள் ( அவர்களை இராணுவம் எப்பவும் சுடவில்லை போல) பட்ட துன்பங்கள் எல்லாம் இருந்தாலும் அதில் சில ஜதார்த்தங்களை தூவி ஒரு பதார்த்தம் கிண்டப்பட்டு இருக்கிறது... அதில் புலிகள் ஏதோ குற்றம் செய்த சக்திகள் என்பது போல... நடந்தவைகளுக்கு எல்லாம் முழுமையான காரணங்கள் போலவும் கிண்டப்பட்டு இருக்கிறது...

இதில் இராணுவம் பற்றி தவறாக எதுவும் இல்லை.. செய்தவைகள் மறைக்க பட்டு இருக்கிறதா எண்று எண்று கேட்பதில் பிழை இல்லைதானே...??

நடு நிலையை தான் தேடிப்பாக்கிறன் இப்பவும் காணவில்லை... புலிகளை குறை கூறும் ஒரு வழமையான கட்டுரை...

Edited by தயா

குப்பை கொட்டுறதற்கு ஒரு இடம் யாழ் -என்ற நிலையாப்போட்டுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏன் தோல்வி கண்டார்கள் என்பதுதான் முக்கியமாகப் பேசப்பட்டிருக்கின்றது. இதற்காக இலங்கை அரசும் இராணுவமும் செய்ததை நியாயப்படுத்தவில்லை. வன்னி யுத்தத்தில் நடந்தவற்றை இலங்கை அரசு மட்டும் மூடி மறைக்கமுனையவில்லை. தேசியம் என்று தற்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்தான் மூடி மறைக்க விரும்புகின்றார்கள். அதனால்தான் சில மனிதயுரிமைவாதிகளைத் தவிரப் பிறர் மனிதயுரிமை மீறல்களைப் பெரிதாக வெளிக்கொணர முனையவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலிருந்து இராணுவத்தினர் மாத்தளனை ஊடருத்து தாக்குதல் மேற் கொண்டு மாத்தளனைக் கைப்பற்றினார்கள். அன்று மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்தார்கள். இது இராணுவமே எதிர்பார்த்திருக்காத தொகை. மாத்தளனும் வீழ்ச்சியுற்றது

இறுதியாக வலைஞர்மடமும் முள்ளிவாய்க்கால் பகுதியுமே எஞ்சியிருந்தது. மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடு தலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.

இறுதியாக வலைஞர்மடமும் இழக்கப்படப்போகும் நிலையில் விடுதலைப்புலிகள் மக்களை முள்ளி வாய்க்கால் பகுதிக்குப் போகச் சொன்னார்கள். போக மறுத்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், துரத்தப்பட்டார்கள். சிலர் இரகசியமாக எங்கேனும் இருந்து விட்டு இராணுவத்தினர் வந்ததும் சரணடைந்து விடுவார்கள். அதுவும் முடியாதவர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார்கள். இறுதிவரை விடுதலைப்புலிகள் மக்களை இராணுவப்பகுதிக்குசெல்வதனை தடுத்துக்கொண்டேயிருந்தார்கள். அதற்கென விசேடமான படையணியும் செயல்பட்டுவந்திருந்தது. வலைஞர்மடமும் வீழ்ச்சியுற்றது.

முள்ளிவாய்க்கால் வரலாற்றின் மிகமுக்கியமான பகுதி. இறுதி யுத்தம் நடந்த பகுதி மட்டுமல்ல, இரண்டரை சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்திருந்த பகுதி. உலக வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய மக்கள் வாழ்ந்த பகுதியும் இதுவாகத்தானிருக்கும். மிகநெருக்கமாக இருந்ததால் மக்கள் சொல்லமுடியாத பல துயர்களுக்குள்ளாகினார்கள். மலம் கழிப்பதற்கு இடமற்றிருந்தது. தண்ணீர் தட்டுப்பாடாகியிருந்தது. வறண்ட பூமியாக இருந்ததனால் பதுங்குக் குழிகள் அமைக்கமுடியாத நிலை எந்த நேரமும் எறிகணை விழலாம். யாரேனும் சாகக்கூடும். பக்கத்தில் அழுகுரல் கேட்டால் கூட யாரும் சென்று பார்க்கமுடியாத நிலை. பிணங்கள் தெருக்களில் அடக்கம் செய்வதற்கு யாருமற்றுக் கிடந்தன. அடக்கம் செய்வதற்குரிய அவகாசமும் அற்றிருந்தது. பிணங்களிலிருந்து புழுக்கள் வெளிவரத் தொடங்கியும் மக்கள் அருகிலேயே இருந்தார்கள், அதிலிருந்தே சாப்பிட்டார்கள். அப்படியான சூழ்நிலையிலும் கூட மக்களை அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இறுதிவரை தடுத்துக் கொண்டேயிருந்தார்கள், இறுதிவரை சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். இதில் வேடிக்கையென்னவென்றால் தடுத்தவர்களும், சுட்டவர்களும் இறுதியில் இராணுவப் பகுதிக்குள் தமது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள்தான் மக்களின் முன் வீராவேசமாகக் கதைத்தவர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியைப் போட்டுடைத்த கதையாக இராணுவத்திடம் செல்கிறீர்கள் என கேட்டவர்கள். நாட்டுக்காகத் தமது உயிரை எந்த நேரத்திலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக சண்டைக்களத்துக்குக் கொண்டு சென்றவர்கள். பிள்ளையைவிடாத பெற்றோரைத் தமது சப்பாத்துக் கால்களால் உதைத்தவர்கள். இறுதி வரை தமது சயனற் குப்பியாலோ அல்லது தாம் வைத்திருந்த ஆயுதங்களாலோ தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளாமல் குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டார்கள். இப்போதுதான் பிரபாகரன் முதலாவதாகவும், இறுதியான தோல்வியைச் சந்தித்துக்கொண்டார். இதில் இன்னொரு வேடிக்கையுமிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களில் சிலரை அரசத் தரப்பே தடை முகாமிலிருந்து விடுதலை செய்திருக்கின்றது.

இறுதியாக முள்ளிவாய்க்காலும் வீழ்ச்சியுற்றது. விசுவாசமான போராளிகள் நேர் எதிரே நின்று போரிட்டு மாண்டுபோனார்கள். மற்றவர்கள் துப்பாக்கிகளையும், சயனற் குப்பிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, எவரிடம் மக்களை மண்டியிடக் கூடாது என்று சொன்னார்களோ தடுத்தார்களோ, அவர்களிடமே மண்டியிட்டார்கள்.

மக்கள் சொத்துடமைகளையெல்லாம் விட்டுவிட்டு, இழப்புக்களின் வேதனைச்சுமையையும், போர் தந்த தழும்புகளையும் சுமந்துகொண்டு எப்போதுமே எதிரியாகக் கற்பனை செய்திருந்த அரசப் படைகளைச் சரணடைந்திருந்தார்கள்.

சில அரசியல்வாதிகளும், புலம் பெயர் நாட்டிலிருந்த சிலரும் மக்கள் புலிகளை விட்டுவர விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள் என்று அப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ம்...ஐநா தொடக்கம் உலக நாடுகள் எல்லாமே மக்களை வெளியே விடச்சொல்லித்தான் சொல்லிக்கொண்டிருந்தன! ஐநாவில் பான் கி மூன் துடக்கம் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான், அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா வரை எல்லாரும் உதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். செய்தியறிந்து வீதிக்கு வந்த மக்கள் வன்னி மக்களை காப்பாற்றுவதற்காகவே வந்தார்கள். புலம்பெயர் ஊடக வியாபாரிகள் தாங்கள் அதுவரை சொன்ன உள்ளுக்கு விட்டடிப்போம் உருண்டடிப்போம் கதைகளுக்கு ...வன்னி மக்களின் ரத்தத்தால் முலாம் பூசிக்கொண்டிருந்தார்கள். உலக அனுதாப அலையை முறியடித்து இறுதிவரை எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்து முடித்து வைத்த பெருமை யாரைச்சேரும் என்பதை போடப்பட்ட வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்கள் ஏன் தோல்வி கண்டார்கள் என்பதுதான் முக்கியமாகப் பேசப்பட்டிருக்கின்றது. இதற்காக இலங்கை அரசும் இராணுவமும் செய்ததை நியாயப்படுத்தவில்லை. வன்னி யுத்தத்தில் நடந்தவற்றை இலங்கை அரசு மட்டும் மூடி மறைக்கமுனையவில்லை. தேசியம் என்று தற்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்தான் மூடி மறைக்க விரும்புகின்றார்கள். அதனால்தான் சில மனிதயுரிமைவாதிகளைத் தவிரப் பிறர் மனிதயுரிமை மீறல்களைப் பெரிதாக வெளிக்கொணர முனையவில்லை.

:lol::lol:

தமிழர்கள் ஏன் தோல்வி கண்டார்கள் என்பதுதான் முக்கியமாகப் பேசப்பட்டிருக்கின்றது. இதற்காக இலங்கை அரசும் இராணுவமும் செய்ததை நியாயப்படுத்தவில்லை. வன்னி யுத்தத்தில் நடந்தவற்றை இலங்கை அரசு மட்டும் மூடி மறைக்கமுனையவில்லை. தேசியம் என்று தற்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்தான் மூடி மறைக்க விரும்புகின்றார்கள். அதனால்தான் சில மனிதயுரிமைவாதிகளைத் தவிரப் பிறர் மனிதயுரிமை மீறல்களைப் பெரிதாக வெளிக்கொணர முனையவில்லை.

சரி நீங்கள் சொல்லுகிற மாதிரி எடுத்து பாப்பம்... புலிகள் ஆயுதங்கள் வாங்க இல்லை எண்டு சொல்கிறார்கள்.... புலிகளிடம் பணம் போதுமானதாக இருந்ததா...?? அப்படியும் சேர்த்த பணம் குறித்தவர்களிடம் போய் சேர்ந்து யானை விலை குடுத்து சாமானை வாங்கி அனுப்பி வைக்க ஏற்படும் செலவுகளை யாராவது கண்டு கொண்டார்கள்...??

புலிகள் ஒரு டோறா படகை தாக்கி அழித்தால் இலங்கை அரசுக்கு 20 கோடி ரூப்பாக்கள் செலவாகலாம் ஆனால் புலிகளுக்கு 50 லட்ச்சம் ரூபா செலவாகும்... படகு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பொறியமைப்புக்கள், காட்டிகள் எண்று எல்லாமே பணம்...

இலங்கை அரசாங்கம் புலிகளை விட வெறும் 40 மடங்குதானா பலமான பொருளாதாரத்தை கொண்டு இருந்தது...? புலிகள் வரி அறவிட்டதை குறிப்பிட்டு இருக்கிறார் கட்டுரையாளர்... வரி அறவிடாது புலிகளின் உணவுக்கு என்ன செய்வது...?? உடைகள் மற்றய நிர்வாகங்களை...??

இலங்கை அரச படையினன் ஒருவன் வீதிச்சோதனையின் போது பணப்பையை எடுத்து பார்த்து அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து தன் பையில் வைத்தால் சரி எண்டு விட்டுவிடுவீர்கள்... ஆனால் புலி வரி அறவிடுவது தவறா...??

புலிகள் மக்களை போராளிகள் ஆக்கவில்லை பிரச்சாரம் செய்ய இல்லை எண்றதாலா மக்கள் ஆயுதப்பயிற்ச்சிக்கு அழைக்கப்பட்டனர்...

இப்படி பல குழறுபடிகள்..

Edited by தயா

ம்...ஐநா தொடக்கம் உலக நாடுகள் எல்லாமே மக்களை வெளியே விடச்சொல்லித்தான் சொல்லிக்கொண்டிருந்தன! ஐநாவில் பான் கி மூன் துடக்கம் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான், அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா வரை எல்லாரும் உதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். செய்தியறிந்து வீதிக்கு வந்த மக்கள் வன்னி மக்களை காப்பாற்றுவதற்காகவே வந்தார்கள். புலம்பெயர் ஊடக வியாபாரிகள் தாங்கள் அதுவரை சொன்ன உள்ளுக்கு விட்டடிப்போம் உருண்டடிப்போம் கதைகளுக்கு ...வன்னி மக்களின் ரத்தத்தால் முலாம் பூசிக்கொண்டிருந்தார்கள். உலக அனுதாப அலையை முறியடித்து இறுதிவரை எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்து முடித்து வைத்த பெருமை யாரைச்சேரும் என்பதை போடப்பட்ட வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கழுதையிலை போன தகப்பனும் மகனும் ஊரின் பொல்லாப்பை கேட்டு கழுதையை துக்கி கொண்டு போன கதைதான் ஞாபகத்துக்கு வருகுது...

உயிர்மையின் அரசியலையும் அதன் பின் புலத்தையும் அறியாதவரா நீங்கள்?

இதேவாறான கட்டுரை முன்னரும் பலதடவைகள் வந்திருக்கிறது.தமிழர்களின் போராட்டத்தை மிக நசூக்காக அடக்கிய இந்திய வல்லாதிக்க நாய்களின் ஒரு ஏவல் நாய் தான் உயிர்மை.புலிகளால் தவறுகள் இழைக்கப்படவில்லை என்று நான் சொல்ல வரவில்லை.ஆனால் உலகமே திரண்டு ஒரு இனத்தின் நியாயமான போராட்டத்தை இவ்வாறு அடக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை.இந்தியா என்னும் வஞ்சக நரிக் கூட்டத்தின் இயல்புகளையும் அதன் நோக்கங்களையும் நாங்கள் சொன்னோம். நாம் இந்தியாவிற்க்கு எதிரிகள் அல்ல அல்ல என்று அவர்கள் திரும்ப்பத் திரும்பச் சொன்னார்கள். நீங்கள் சொல்வதால் மட்டுமே ஒரு ஏகாதிபதியம் அதன் நலன்களை விடாது என்று சொன்னோம்.புலிகளுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டே அவர்களை உள் நுழைந்து கருவறுத்தது இந்திய வல்லாதிக்கம்.இன்று தனது நயவன்சகத்தை மறைக்க இவ்வாறு கட்டுரைகளை வரைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

83 இல் பத்தாயிரம் சிங்களப் படைகள் இருக்கும்போது புலிகளிடம் சில நூறு பேரே (அதற்கும் குறைவோ தெரியவில்லை) இருந்தனர். இதுபோல எப்போதுமே சிங்களப் படைகளோடு ஒப்பிடும்போது புலிகளின் ஆளணிகள் மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் சாதனைகள் பல படைத்து தனிநாட்டுக் கட்டமைப்புக்களை நிறுவினர் என்பதை வரலாறுகள் சொல்லும். இப்படியான நிலையில் இருந்து தமிழரின் போராட்டம் முழுமையாக எப்படி நசுக்கி அழிக்கப்பட்டது என்பதையும் வரலாறு எழுதி வைத்துத்தான் போகும். வன்முறைப் போராட்டத்தின் முடிவுக்கு சர்வதேச, இந்திய உதவிகளோடு இலங்கை ஆயுத ஆளணிப் பலத்தை பெருமடங்காக்கியது புலிகளுக்குத் தெரியாமல் இருக்கவில்லை. தனியே தமிழ் மக்களின் உதவியுடன் இலங்கை அரசையும், அதன் பின்னால் நின்ற சக்திகளையும் வெல்லமுடியும் என நினைத்தது மிகவும் பாதகமாகத்தான் போய் முடிந்தது. பாராளுமன்ற முன்றலில் 3 மாதமாய் கூச்சலிட்டது கூடப் பலன் அளிக்காமல் போனது கூட புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலவீனத்தை அப்பட்டமாய் வெளிச்சப்படுத்தியது. இதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்காமல் தேசிய அரசியல் நடாத்தினால் அது வெறும் வியாபாரமாகவே இருக்கும்..

உயிர்மையின் அரசியலையும் அதன் பின் புலத்தையும் அறியாதவரா நீங்கள்?

நன்றாகவே தெரியும். எனினும் முக்கியமான கருத்தாடலுக்கு இப்படியான கட்டுரைகள் உதவும் என்று நினைக்கிறேன்.

வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை

மக்கள் எப்படியாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுவதென்ற குறிக்கோளோடு இருந்தார்கள். விடு தலைப்புலிகள் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு இருந்தார்கள். மக்கள் இரவுகளில் இரகசியமாகப் போவதும் பின் சூடுவாங்கித் திரும்புவதுமாக இருந்தார்கள். சிலர் அப்படியிருந்தும் உள் நுழைந்தும் விடுவார்கள், இன்னும் சிலர் சில பொறுப்பாளர்களின் துணையுடன் சென்று விடுவார்கள். ஒன்றுமியலாத மக்கள் மட்டும் ஏதும் செய்வதறியாது யுத்தத்தின் வலியையும், இழப்புக்களையும் சுமந்துகொண்டு வாழ்ந்தார்கள், புலிகள் போகச்சொன்ன இடத்திற்கெல்லாம் போனார்கள்.

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=2916

இது அப்பட்டமான பொய். பலர் விரும்பியே இயக்கத்துடன் முள்ளிவாய்க்கால் வரை சென்றார்கள். எனது நண்பனின் பெற்றோர் உறவினர் உட்பட. அவர்களது ஒரே நம்பிக்கை ஏதாவது அதிசயம் நடக்கும். புலிகள் ஏதாவது செய்து தம்மை காப்பார்கள் என்றே அவர்களுடன் சென்றார்கள். அந்த நம்பிக்கையை புலிகள் வழங்கினார்கள். எதனை நம்பி புலிகள் மக்களை தம்முடன் அழைத்துச்சென்றார்கள் ஏன் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதுதான் புலிகளுடன் கடைசிவரை இருந்த மக்களின் ஆதங்கம்.

உலகம் முழுக்க தெரிந்த உண்மையைத்தான் இந்த கட்டுரையும் சற்று விபரமாக சொல்லியிருக்கு.இதில் பெரிய மனவருத்தம் என்ன வென்றால் இபடி நடக்கப் போகின்றது எனத் தெரிந்தும் புலம் பெயர்புலிகள் கடைசிவரை தங்கள் பிடிவாதத்தை கை விடவில்லை.புலிகள் இருந்தாலும் ஆயிரம் பவுண் இறந்தாலும் ஆயிரம் பவுண் இதுதான் அவர்கள் நிலைப்பாடு.இவர்களெல்லாம் புலிகளி ஆதரித்ததே அதற்காகத்தான்.இன்றும் அதையே தொடர்கின்றார்கள்.அப்பாவி பொது மக்களும் ஒன்றுமறியா போராளிகளும் அநியாயமாக அழிந்து போனார்கள்.இவர்கள் இன்றும் அதே பிழைப்பை தொடர்கின்றார்கள்.இவர்கள் எக்காலமும் மக்களை பற்றி அக்கறைப் பட்டவர்களல்ல.

இன்னமும் ஆயுதங்களை மவுனித்தார்கள்,உலகமே திரண்டு அடித்தது அடித்தது என ஒப்புக்கு சப்பை கட்டுகின்றார்கள்.சில சம்பவங்களை மனம் ஏற்க மறுக்கும் அதற்காக அந்த சம்பவம் நடைபெறவில்லை என்றாகிவிடாது.அது போல் தான் விடுதலை புலிகளின் தோல்வியும், தாங்கள் தோற்றது மாத்திரமல்லாமல் முழுத் தமிழர்களியும் நடுத் தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கின்றார்கள்.

எனக்கு இந்நிகழ்வு பெரிய அதிர்சியை தரவில்லை ஏனெனில் என்றோ ஒரு நாள் இது நடக்கும் என தெரிந்த பலரில் நானும் ஒருவன்.

கிருபன் போஸ்ட் பண்ணும்போதே நினைத்தேன்..

இது வைக்கோல் பட்டறை நாய் கதைதானென்டு...

சரியாத்தான் இருக்கு...

புலிதான் போய்ட்டெ.... இனி என்ன புலி எதிர்ப்பு?

அங்கதான் இருக்கான் சந்திரன்.. உங்களுக்கு தெரியும் இந்திய/இலன்கை தடை செய்யப்பட்ட/ சர்ச்சைக்குரிய போர்முறைகளை பாவிக்கமுதல் குறிப்பிட்ட முறையை புலிகள் பாவிப்பதாக பிரச்சாரம் செய்வார்கள்.. நாமும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ட கண்ட நாட்டு கொடியொட ஊர்வலம் போவொம். அப்படி ஒரு கூத்துதான் மூளை சலவை கதை.. ஞாபகம் இருக்கோ..? பல தமிழ் சனத்தை பல முறைகளில் மூளைசலவை செய்யப்பட்டார்கள்.. டீட்டைலுக்குபோனா பக்கம் பக்கமா எழுதோனும்...

எங்க்ட சனியங்கள் இன்னும் புலியெதிர்ப்பு புராணம் பாடிகொண்டு திரிவடுக்கு இதுதான் காரணம்... இது, இந்த பேதைகள் சாகும் வரை தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்.

எது உங்களுக்குச் சரியாகப் படுகின்றதோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேவையில்லாத விடயங்களைத் தவிர்த்து விடுங்கள்.

"சொல்லுறவன் சொன்னாலும் கேட்கின்றவன் கேணைப் பயலாக்கும்."

வாத்தியார்

.................

புலிகள் மவுனித்து ஓராண்டுகள் ஆன பின்னரும் களத்தில்வேறு எந்த மாற்று அரசியலும் ஏற்படாமையில் இருந்து தெரிவது அவர்களின் முக்கியத்துவம்.எதுவுமே செயாது எந்த மாற்றும் அற்ற புலி எதிர்ப்பு அரசியல் இன்றும் புலிப் புராணம் பாடிக் கொண்டு இருக்கிறது.பவுத்த பேரினவாத்தின் எதிர்வினை தான் தமிழத் தேசிய அரசியல்.பவுத்த பேரினவாதாம் இருக்கும் வரை தமிழத் தேசிய அரசியல் இருக்கும்.கள நிலமைவகளுக்கு அமைவாக அதன் வடிவம் மாறும்.ஆனால் தமது வஞ்சக்மான துரோகவரலாற்றை மறைக்க இந்திய ஏவல் நாய்களால் எழுதப்படும் புரட்டுக்களை நாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.புலிகளையும் மக்களையும் தனிமைப் படுத்தி இந்த உலகம் உதவுவதைத் தடுத்தது இந்தியா என்னும் ஈவு இரக்கமற்ற மிருகம்.போலி நாடகங்களை நாடாத்தி மக்களைக் கொன்றதை மறைக்க முயல்வதும் அதே நரித்தனமான மிருகம்.மக்களும் புலிகளும் முரண்படுவதற்கான சூழலை உருவாக்கியது இந்திய நரித்தனம்.இறுதிக் காலகட்டத்தில் தோல்விகள் மேல் தோல்விகள் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு நம்பிக்கைகள் கொடுத்து முல்லிவாய்க்கலில் கதையை முடித்தது ரோ.உண்மைகள் என்றோ ஒரு நாள் வெளிவரத் தான் செய்யும்.புலிகள் நாம் இந்தியாவின் எதிரிகள் அல்ல என்று சொல்லியதை அவர்களே நம்பியது தான் அவர்கள் விட்ட தவறு.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது உபகண்ட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான ஒரு போரின் பகுதி என்பதைப் புலிகளும் தமிழ மக்களும் உணர வேண்டும்.அபோது தான் பொது எதிரி யார் என்பது தெளிவாகாத் தெரியும்.

மிகவும் ஒரு பக்கச்சார்பான, அனைத்து பழிகளையும் புலிகள் மீதும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் தேசிய அவாவின் மீதும் போடப்படுவதற்காக வலிந்து எழுதப்பட்டுள்ளது. புலிகளின் அனைத்து செயற்பாடுகளும் சிங்கள கொடூர அரசின் நடவடிக்கைகளுக்கான எதிர்வினையாகவே இருந்தன. எந்த இனமும் இத்தகைய கொடூர, மிகப் பயங்கரமான வன்முறையை எதிர்கொள்ளும் போது அந்த இனம் அதற்கான எதிர்வினையாக ஆற்றக்கூடியவற்றின் குறைந்த பட்ச செயலையே தமிழ் மக்களும் அவர்களின் தேசிய இயக்கமான புலிகளும் செய்தனர். அது தவறா இல்லையா என ஆராய முற்படுபவர்கள், எதிரியின் கொடூரமான செயல்களையும் குறுக்கு வெட்டாக ஆராய்ந்து பார்த்தால்தான் அதற்கான தீவிரமான காரணங்கள் புரியும். கட்டாய ஆட்சேர்ப்பு என்பது மானுட விழுமியம் சார்ந்த பொது விதிகளின் படி தவறு என்றால் அந்த தவறை ஆற்றக்கூடிய காரணிகள் அந்த தவறை விட ஆயிரம் மடங்கு பயங்கரமானவையாகவே இருந்தன.

எம் போராட்டத்தின் இன்றைய தோல்வியை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தோல்வியாக எடுத்துக் கொண்டு அதற்கான காரண காரியங்களை நடு நிலையில் நின்று குறுக்கு வெட்டாக நாமே ஆராய்வதில்தான் எம் அடுத்த வெற்றி இருக்கின்றது. நாம் நேர்மையாக இதனை செய்யாது (ஈழத் தமிழர்கள்) தவறுகின்ற ஒவ்வொரு நாளினையும் தமக்கு சாதகமாக்கி கொள்ளும் உயிர்மை போன்ற (இந்திய தேசியத்தை விமர்சிக்கின்றோம் என்ற ரீதியில், அந்த போலித் தேசியத்தை கட்டிக் காக்க போராடும்) போலி நடுநிலை கோசம் போடும் இதழ்கள் தம் சுயநலமிக்க, இந்திய அடக்கு முறை அரசின் இருப்பிற்கு வலுசேர்க்கும் இப்படியான கட்டுரைகளை வெளிவிட்டுக் கொண்டே இருந்து ஈற்றில் அவை சொல்பவை தான் உண்மை என்று மக்களை நம்ப வைக்கும்.

...புலிகள் நாம் இந்தியாவின் எதிரிகள் அல்ல என்று சொல்லியதை அவர்களே நம்பியது தான் அவர்கள் விட்ட தவறு.தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது உபகண்ட்டத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான ஒரு போரின் பகுதி என்பதைப் புலிகளும் தமிழ மக்களும் உணர வேண்டும்.அபோது தான் பொது எதிரி யார் என்பது தெளிவாகாத் தெரியும்.

மிகவும் சரியான கூற்று. எம் போராட்டம் என்பது மட்டுமல்ல எம் இருப்புக் கூட இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான ஒன்றாகவே இந்திய போலி தேசியம் நம்புகின்றது. இந்தியாவின் அழிவு இல்லாம் தென்னாசியாவில் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற மாட்டாது என்பதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கட்டுரைகள் எம்மை எங்கும் நகர்த்தாது. இவரின் குப்பைகளை இணைக்காமல் கிருபனே ஒரு தலைப்பை தொடங்கி இருக்கலாமே ???ஏனெனில் இக்கட்டுரையாளர் ஒரு பக்கத்தை நக்கல் மூலம் சொல்ல நினைக்கிறார் என்பது தான் உண்மை.எப்படி ஒரு கட்டுரையாளர் மறுபக்கத்தை விவாதிக்க முடியவில்லையோ அன்றே அவர் ஒரு பக்க சார்பானவர் என எடுத்து கொள்ளலாம்.

வரலாற்றின் நாயகன் பால்ராஜ் ஒரு காலோடு நொண்டி நொண்டி தாக்குதல் நடாத்தி ஆனையிறவு சமரை வென்றதோடு மட்டுமில்லாமால் போராளிகளின் போதாமையை அவர் பேச்சிலும் சொல்லி உள்ளார். ஏன் பால் ராJ தான் போராட வேண்டும்? வன்னியில் உள்ளவர்கள் தமிழர்கள் அல்லவா? எங்கோ இருந்த சிங்களவர்கள் எம்மை சுற்றி ஆயுதத்துடன் நிற்கும் போது.30 வருடங்களாக இப்படி இன்னல்களை அனுபவிப்பவர்களுக்கு மாக்சிச அல்லது லெனினிச புத்தகங்களோ அல்லது சேகுவாரவோ பயன்படுமாமா?

இந்த உலகம் எல்லாம் சேர்ந்து எம்மக்களை கொன்றதுக்கு என்ன முடிவு ? ஐ.நா எல்லாம் என்னப்பா?

தொடரும்......

இப்படியான கட்டுரைகள் எம்மை எங்கும் நகர்த்தாது. இவரின் குப்பைகளை இணைக்காமல் கிருபனே ஒரு தலைப்பை தொடங்கி இருக்கலாமே ???ஏனெனில் இக்கட்டுரையாளர் ஒரு பக்கத்தை நக்கல் மூலம் சொல்ல நினைக்கிறார் என்பது தான் உண்மை.எப்படி ஒரு கட்டுரையாளர் மறுபக்கத்தை விவாதிக்க முடியவில்லையோ அன்றே அவர் ஒரு பக்க சார்பானவர் என எடுத்து கொள்ளலாம்.

இல்லை நுணா, இவை மிகக் கண்டிப்பாக இங்கு இணைக்கப் பட வேண்டும். நாம் இணைக்காமல் விடுவதால், வாசிக்காமல் விடுதால் மட்டும் அவை மற்றவரின் பார்வையில் இருந்து அகற்றப்படுகின்றதா? உயிர்மை போன்ற இதழுக்கு இருக்கும் கனதி ஆனந்த விகடன் போன்ற வியாபார சஞ்சிகைகளை விட மேலானது. அதில் வரும் கட்டுரை ஒன்றிற்கான எதிர்வினை மிக முக்கியம். இப்படி ஒன்றை கிருபன் இணைத்தமையால் தான் அதற்கான எம் எதிர்வினைகளை, கருத்துகளை ஆற்றகூடியதாக இருக்கின்றது. மாதம் தவறாமல் உயிர்மை இதழ் வாங்கி படிப்பவன் என்ற ரீதியில் இந்த போலி இந்திய ஏவல் பேர்வழிகளிற்கான எதிர்வினையை ஒவ்வொரு ஈழத்தவனும் ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்

இப்படி புலிகளை முற்றாகக் குற்றம் சொல்லும் ஒரு கட்டுரை மூலம் நாம் மனமாற்றத்திற்குள்ளாகி விடும் அளவுக்கு எம் தேசிய இயக்கத்தை, புலிகளை புரியாதவர்கள் இல்லைதானே...

இப்படியான கட்டுரைகளே மீண்டும் மீண்டும் புலிகளினதும் எமது போராட்டத்தின் நியாயம் பற்றியும் கதைக்க, எழுத தூண்டுகின்றது

இந்த கட்டுரையை பற்றி விமர்சனம் செய்யவோ அல்லது உண்மை தன்மை பற்றி பேசவோ நான் இந்த கருத்தை எழுதவில்லை. ஆனால் இந்த கட்டுரை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நினைவு கூற இருக்கும் எங்கள் துயரங்களை திசை திருப்பும் நோக்கில் எழுதபட்டுள்ளது என்று நான் நினைக்கிறன். இவற்றில் சில உண்மைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை பற்றி இப்போ விவாதிக்க வேண்டிய தருணம் இல்லை. இன்று நாங்கள் எங்கள் பொது எதிரியை, அல்லது அவலத்தை உருவாகியவனுக்கு எதிராக தான் அணி திரளவேண்டும்.நடுநிலைமை என்பது ஒருபக்க குற்ற சாட்டுகளை மட்டும் கொண்டது இல்லை.

இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களை பற்றியோ கொத்து குண்டுகளை பற்றியோ..அல்லது மக்களிடையே ஊடுருவி போராளிகளை மக்கள் என்ற போர்வையில் அடித்தும் வெட்டியும் கொன்றதை பற்றியோ கட்டுரையாளர் குறிபிடாததில் இருந்து அவரது நடுநிலைமை பறிபோகிறது. காலப்போக்கில் வேறு விதமான மாற்று கருத்துகள் நடுநிலைமை என்ற போர்வையில் வரும் புலி எதிர்ப்பு வாதங்கள் ஒரு போதும் எங்களுக்கு விடிவை தேடி தரப்போவதில்லை என்பது தான் நிஜம்.

மக்கள் இராணுவத்திடம் ஓடும்போது, ஒரு பெண் போராளியை கதற கதற தூக்கி சென்று இராணுவத்திடம் கொடுத்து, அம்மக்கள் கண் முன்னாலையே சுடபட்டத்தை இந்த கட்டுரையாளர் அறிவாரா..?? இதை செய்த காடையர் கூட்டம் எப்படி மக்களுக்கிடையே உருவானது. இராணுவ உளவாளிகள் மக்களை விலைக்கு வாங்கினதும் ஊடுருவியதும், விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை மக்கள் எதிர்ப்பு என்ற பெயரில் கொல்லவும் தீட்டபட்ட சதி திட்டத்தை பற்றி கட்டுரையாளர் மூடி மறைத்தது ஏன்.?? நடுநிலமை என்ற பெயரில் பொதுமக்களின் கருத்து என்ற பெயரில் உண்மையை சொல்ல வேண்டுமாயின் எல்லாவற்றையும் சொல்லுங்கள். இல்லை எதையுமே சொல்லாது விடுங்கள் ..

மூன்று லட்சத்துக்கு மேலே அங்கெ மக்கள் இருக்க, வெறும் பதினையாயிரம் என்று உலகத்துக்கு கதை விட்டு ஐந்து தொன் உணவு பொருட்களை மட்டும் அனுப்பி கடைசியில் அதுவும் இல்லாமல் பண்ணியது யார் ..?? அங்கிருந்து இராணுவத்திடம் ஆரம்பத்தில் சரணடைந்த ஒருவனை கேட்டாலே சொல்ல கூடிய கணக்கை உலகத்திடம் மூடி மறைச்சது யார் ..?? ஒரு பாதி உருளை கிழங்கிற்காகவும், மூன்று வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான பால்மாவிற்காகவும் வரசையில் நின்றவர்களையும், காலைக்கடனை கழிக்க கடற்கரையில் ஒதுங்கிய பெண்கள் குழந்தைகளை ஈவிரக்கம் இல்லாமல் புலிகள் என்ற போர்வையில் கொன்று ஒழித்தது யார்..??இந்த படுகொலைகள் உலகத்துக்கு தெரிய கூடாது என்று அங்கிருந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியது யார்..??? இவர் சொல்லுவதை போலவே ராணுவத்திடம் விரும்பி வந்த மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருந்தது யார் ..?? கடைசி வரை புலிகளுடன் இருந்த மக்கள் என்று தனி முகாம் அமைச்சது யார் ..?? தங்களிடம் குழு குழுவாக வந்த மக்களில் எத்தனை பேருக்கு கணக்கு காட்டினார்கள் இராணுவம் ..?? பதிவு செய்த மக்களை வெளியிடாமல் வைத்தது யார் ..?? பலவந்தமாக பிடித்து செல்லபட்டார்கள் என்று தெரிந்தும் இன்னும் புனர்வாழ்வு என்ற பெயரில் அப் போராளிகளை கொடுமை படுத்துவது யார் ..??

பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துவிட்டு மக்களை உள்ளே வரப்பண்ணி கொலைத்தாண்டவம் ஆடியது யார்...?? வன்னியில் இருந்த சின்ன குழந்தையை கேட்டாலே சொல்லும்..ஆண்டாண்டு காலமாக புலிகள் தங்களது ஆயுத தளபாட உற்பத்திமையங்களாக இருந்தவை தான் தேவிபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகள். அவற்றை தன்னிச்சையாக பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து விட்டு புலிகளை அங்கிருந்து நகர வேண்டும் என்று கூறுவது போன்ற ராணுவ கோழைதனகளை செய்தது யார் ..?? இராணுவ எல்லையில் இருந்து ஆயிரம் மீற்றர்களுக்குள் இருந்த மக்கள் செறிந்து வாழ்ந்த புதுக்குடியிருப்பை விடுத்து, சுதந்திரபுரத்தை பாதுகாப்பு வலயமாக்கிய தந்திரத்தை கூட புரியாமல் தான் எங்கள் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைகிறாரா இந்த கட்டுரையாளர்..??

கட்டுரையாளனிடம் ஒரு கேள்வி.. இருட்டுமடுவரைக்கும் இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் எண்ணிக்கை எவளவு..?? கிளிநொச்சி, மன்னார் பகுதிகளில் இலகுவாக இராணுவத்திடம் சரணைடைய கூடியதாக இருந்தும்..வீடுக்கொரு பிள்ளையை நாட்டுக்காக கொடுத்திருந்தும்,புலிகளுடன் புதுமாதளன் வரை மக்களை பயணிக்க வைத்தது, புலிகளின் ஆயுதம் மட்டும் தான் என்றால்..அதை யாரவது பாலகர்களுக்கு சொல்லுங்கள்.

மக்களை பட்டினி போடுவதன் மூலமும், ஈவிரக்கம் இல்லாமல் கொல்லுவதன் மூலமும், மருந்து பொருட்களை அனுப்பாது விடுவதன் மூலமும் புலிகளிடம் இருந்து அவர்களை பிரிக்கலாம் என்று ஆலோசனை வழங்கிய குழுவில் இந்த கட்டுரையாளனும் இருந்திருக்கலாம்...அதைவிட கேவலமானது இந்த கட்டுரையை இன்றும் நியாயபடுத்தும் எங்களில் சில பேர்.

அன்பான உறவுகளே, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால் தயவு செய்து அங்கெ என்ன நடந்தது என்பதை முழுமையாக அறியாமல் இவ்வாறன கட்டுரைகளை நம்பி ஏமாறாதீர்கள். இந்த கட்டுரையில் சொல்லபட்டது அனைத்தும் பொய் என்று சொல்லவரவில்லை ..ஆனால் சில உண்மைகளுக்குள் பல பொய்களை மூடி மறைக்க முடியும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்.

பொய் என்பது உண்மையை திரித்து சொல்லுவது மட்டும் அல்ல. உண்மையை சொல்லாமல் விடுவதும் தான் ...

Edited by அன்புச்செல்வன்

இந்த கட்டுரையை பற்றி விமர்சனம் செய்யவோ அல்லது உண்மை தன்மை பற்றி பேசவோ நான் இந்த அறிக்கையை எழுதவில்லை. ஆனால் இந்த கட்டுரை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நினைவு கூற இருக்கும் எண்கள் துயரங்களை திசை திருப்பலாம் என்று நான் நினைக்கிறன். இவற்றில் சில உண்மைகள் இருக்கலாம், ஆனால் அவற்றை பற்றி இப்போ விவாதிக்க வேண்டிய தருணம் இல்லை. இன்று நாங்கள் எங்கள் பொது எதிரியை, அல்லது அவலத்தை உருவாகியவனுக்கு எதிராக தான் அணி திரளவேண்டும்.நடுநிலைமை என்பது ஒருபக்க குற்ற சாட்டுகளை மட்டும் கொண்டது இல்லை.

இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களை பற்றியோ கொத்து குண்டுகளை பற்றியோ..அல்லது மக்களிடையே ஊடுருவி போராளிகளை மக்கள் என்ற போர்வையில் அடித்தும் வெட்டியும் கொன்றதை பற்றியோ கட்டுரையாளர் குறிபிடாததில் இருந்து அவரது நடுநிலைமை பறிபோகிறது .. காலப்போக்கில் வேறு விதமான மாற்று கருத்துகள் நடுநிலைமை என்ற போர்வையில் புலி எதிர்ப்பு வாதங்கள் ஒரு போதும் எங்களுக்கு விடிவை தேடி தரப்போவதில்லை என்பது தான் நிஜம்.

உங்களை போண்ற இன்னும் ஒருவருடன், இன்னும் ஒரு பகுதியில் இருந்தவருடன் நான் பேசிய போது அவர் சொன்னது ..

ஆனந்தபுரம் சண்டைக்கு பிறகு எங்களிடம் தொலைத்தொடர்புகள் இல்லை, தொலைத்தொடர்புக்கான கருவிகளுக்கு கலங்களும் இல்லை.. யாராவது தளபதி சொன்னவைகளை ஓடி வந்துதான் போராளிகளிடம் சொல்ல வேண்டி இருந்தது... இப்படிப்பட்ட நிலையில் பல குழறு படியான கட்டளைகள் தங்களால் நம்பமுடியாதவைகள் எல்லாம் வந்து சேர்ந்து கொண்டு இருந்தன... உண்மையில் மற்றப்பகுதியில் என்ன நடக்கிறது எண்று எங்களுக்கு புரியவில்லை... மேமாதத்தின் ஆரம்பத்திலேயே எங்களை இராணுவத்திடம் சரண் அடைய சொல்லி சொல்லிப்போட்டார்கள்... எங்கை இருந்து இந்த கட்டளை வந்தது எண்று எமக்கு பொறுப்பாக இருந்த தளபதிக்கே தெரியவில்லை... தலைமை சொன்னதாக சொன்னார்கள் என்கிறார்...

சில போராளிகள் அதை கேட்டு அழுதார்கள் எண்றும் சொல்கிறார்... கேட்க்க கொடூரமான பல விடயங்கள் எல்லாம் கட்டளை இடப்பட்டு இருக்கின்றன... அதை விரும்பாமல் எல்லா போராளிகளும் தனித்து முடிவெடுக்கும் நிலையில் இருந்தார்கள்... தலைமை சொன்னதாக நிறைய விடயங்கள் நடந்தேறின எண்று விடயங்களையும் சொல்கிறார்...

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பலர் இடையில் புகுந்து விளையாடியதுதான் உண்மை என்கிறார்... அவர்கள் நீங்கள் சொல்வது போல உளவாளிகளாக கூட இருக்கலாம்...

புலிகள் அமைப்பு நீண்டு நிலைத்து நிற்க்க எப்போதும் காரணமாக இருந்தது கட்டுக்கோப்பை கொடுத்தது அந்த தொலைத்தொடர்பு அது அற்று போனது எல்லாம் திக்கற்று போய் இருக்கிறது...

Edited by தயா

எதை எப்போது செய்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை எடை போடலாம்.

இணைக்கப்பட்ட கட்டுரையில் உண்மைகள் இல்லையென்று சொல்லமுடியாது. அன்புச்செல்வன் எழுதிய கருத்துக்கள் சிந்திக்க வேண்டியது. ஒருபக்க சார்பாக, சிங்கள இந்திய பிணம் தின்னி ஓநாய்களின் கைக்கூலிகளால் எழுதப்பட்டவை போல உள்ளது.

இத் தருணத்தில் இதை வெளியிட்ட இணையத்தளம் அதன் பின்னணி, அல்லது தேடி எடுத்து பதித்தவர்கள், கட்டுரையை எழுதியவர் போன்றவர்களில் மறைந்திருக்கும் குரூரம் வெளிப்பட்டுள்ளது. அவர்களை மிகச் சரியாக இனம் கண்டு வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விடுவோம். எமக்குத் தமிழீழம் தான் இல்லை. ஆனால் இத்தனை அழிவுகளையும், இடர்பாடுகளையும் எம் மக்களுக்கு கொடுத்தவர்களை மன்னித்து விடுவதா??காலம் காலமாக தமிழீழம் என்ற ஒரு தாரக மந்திரத்துக்காகத் தான், என் அடித்தாலும் பல் புடுங்கிய பாம்பு போன்று அமைதி காத்தோம். வலிகளையும் தாங்கிக் கொண்டோம்.

என்றோ ஒரு நாள் உலகம் எம்மை அங்கிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், சாவிலும் வாழப் பழகிக் கொண்டோம். ஆனால் எமக்குத் தமிழீழம் பெறுவது கடினமாகும்போது ஏன் எம் எதிரிகளை மன்னித்து விட வேண்டும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.