Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார்.

toture4.jpg

torture2.jpg

இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்வாறு இராணுவத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இறுதிக்கட்ட போரின் பின் விருந்தன் என்னானார் என்ற தகவல் தெரியாது தேடிக்கொண்டிருந்த வேளையில் ஓராண்டு கழித்து இத்தகவல் கிடைத்திருப்பதும், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமையை இணையத்தளங்களினூடும், தொலைக்காட்சிவளியாகவும் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக விருந்தனின் மாமியார் கூறியுள்ளார்.

இவரின் தந்தை கூட விருந்தனை காணாத நாள் முதல் யோசித்து யோசித்துக்கொண்டிருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரும் இறந்துவிட்டதாகவும் கூறினார்.

சுவிஸில் வசிக்கும் விருந்தனின் தந்தையின் இளைய சகோதரி இந்தக் கோரக்காட்சியை பார்க்கவா உயிரோடு இருந்தேன் என்று வேதனையோடு இத்தகவலை தெரிவித்தார்.

- சங்கதி -

.

Edited by தமிழ் சிறி

வீர வணக்கங்கள்!!!

விருந்தன் அவர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யம் உண்மையான வீர வணக்கமாகும்.

தமிழீழம் நோக்கிய பயணம் உலகத்தமிழரிடம் இப்போது தரப்பட்டிருக்கிறது. இப்பயணத்தின் குறை, நிறை எல்லாவற்றுக்கும் இனி நாங்களே பொறுப்பு.

எமக்குள் பிரிவினைகளை விடுத்து எல்லோரும் ஒற்றுமையாக ஓர் அணியில் நின்று இலட்சியத்தை அடையும் வரை உழைக்க வேண்டும் என்று மாவீர்களின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு சகோதரனுக்கு வீரவணக்கங்கள்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோளைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சகோதரர் விருந்தனுக்குச் சிரம்தாழ்த்திய வீரவணக்கங்கள்.

வீர வணக்கங்கள் தோழனே.. குடும்ப அங்கத்தவர்கள் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. தமிழ் மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.. ஒற்றுமயுடன் நம் பயணத்தை இறுதி இலக்கு வரை நகர்த்த வேண்டும்..

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..

உறவினர்கள் சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டவனே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளையவனுக்கும் அவரது உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோத்தபாய கூண்டேறும் காலம் வெகு விரைவில் அரங்கேறும்.

வாத்தியார்

.................

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் சகோதரா.உங்களை போல் பலரின் கொலை படங்கள் , கையடக்க தொலைபேசியில் சிறிய காணொளி தொகுப்பு என்பன சிங்கள பல்கலைகளகங்களில் மாணவர்களால் இன்புறப்படுகிறதாம்."உப்பில்லா விட்டால் தான் தெரிகிறது உப்பின் அருமை".

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தமிழர்களின் அசம்பந்தத் தனமான சுயநலம் மிக்க வாழ்வால் வந்த பரிசுகள்.

1983 இல் வெலிகடைச் சிறையில் குட்டிமணி தங்கத்துரையை உள்ளிட்டோரை சித்திரவதை செய்து கொன்றதற்கு எந்த மனித உரிமை அமைப்பிடம் போய் முறையிட்டு எந்த சர்வதேச நீதிமன்றில் போய் சிங்கள அரக்கர்களுக்கு எதிராக தமிழர்கள் நீதி கேட்டார்கள்..??! மாறாக சிங்களத்துடன் இந்தியத்துடன் இணக்க அரசியல் எல்லோ செய்தார்கள்.

இப்போ கூட தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் சம்பந்தன்.. போர் முடிந்ததை இட்டு மகிழ்வுறுவதாக சிங்கள நாடாளுமன்றில் பேசுகிறார். பிரபாகரன் வீழ்ந்தது நாட்டுக்கு சுபீட்சம் என்கிறார்.. இப்படிப்பட்ட தமிழ் தலைமைகளை வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் சுயநலத்தையும் வைத்துக் கொண்டு... இந்த அப்பாவி இளைஞர்களுக்கு எப்படி பாதுகாப்புப் பெற முடியும்..?????!

ஒருவர்க்கு உணவின்றேல் ஜெகத்தினை அழிப்போம் என்று முழங்கிய தமிழன் எங்கே குட்டிமணியின் கண்ணை நோண்டி சிங்களவன் பந்தாடிய போதும் வாழாது கிடந்த தமிழனின் நிலை எங்கே. இந்த சோம்பேறி சுயநலமே எமது இனத்தின் இந்த துர்ப்பாக்கியங்களுக்கு மூல காரணம்..! தமிழனை அடிமைத் தனத்தில் சுயநல புத்தியில் இருந்து மீட்பது கடினம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை.இதற்கெல்லாம் இந்தியாவும் உடந்தை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினமே எண்ணிப்பார் நீ

தூங்கினால் வரலாற்றில் யாருன்னை மன்னிப்பார்.....

வீரவேங்கைக்கு....எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

இந்திய பயங்கரவாதிகள் ஆதரவுடன் சிங்கள பயங்கரவாதிகளால் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சகோதரா - உனக்கு வீர வணக்கங்கள்!!!

இவற்றுக்கு எமது இனம் நிச்சயம் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.