Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக்குற்றம்! புனர்வாழ்வு!! ... பணம் எங்கே?

Featured Replies

அண்மையில் அமெரிக்காவில் இருந்து செயற்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சந்தித்து கதைக்கும் போது ... இப்போது என்ன நடைபெறுகிறது என்றதற்கு ... காசுப்பிரட்சனைதான். சில வலுமிக்க சட்டத்தரணிகளை வைத்திருந்து செயற்பட மாதா மாதம் ஏராளமான பணம் தேவை!! முன்பு செய்தவருக்கு கொடுத்ததே மாதம் $25000, அதையும் தொடர முடியாத அளவிற்கு பணப்பிரட்சனை. பல செனட்டர்கள் உட்பட பலருடன் அணுக வேண்டுமாயினும் தேவை பணம்! சமாளிக்க இயலாமல் உள்ளதாக கூறினார். ..

இங்கு யாழிலோ சாந்தியும்/சாத்திரியும் ... அங்கு அவலப்படுபவர்களுக்காக நேசக்கரமாக கல்லில் நாருரிக்கும் வேலையில். செய்ய ஆயிரம் இருந்தும் பணம்! ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்கிறார்கள்...

இன்று எம்முன் உள்ள இரு பாரிய பொறுப்புகள் ..

1) அங்குள்ள எம் மக்களின் புனர்வாழ்வு

2) எமக்கெதிராக சிங்களத்தினால் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேசத்திடம் நீதி கேட்டல்.

... இவை இரண்டையும் புறந்தள்ளி விட்டு நாம் வெட்டுவோம்/கொத்துவோம்/எழுவோம்/புரளுவோம் என செயற்படும் எந்த அமைப்புன் இனி எமக்கு வேண்டாம்.

காலா காலமாக புலத்தில் தேவையான அரசியல் நடவடிக்கைகளை செய்யாது, இறுதி நேரத்தில் வீதிகளில் இறங்கி மேற்கத்தேய அரசுகளுக்கு எதிராக மிரட்டல் அரசியல் நடத்திய செயற்பாடுகள் இனியும் நடத்த முடியாது. அதில் பிரயோசம் இல்லை என்பதும் தெரிந்த விடயம்.

சிறிலங்கா அரசு எமக்கெதிராக புரிந்து விட்ட கொடூரங்கள், யுத்தக்குற்றங்கள் ஆதாரங்களுடன், இன்று நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளே, சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செய்து விட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும், யுத்தக்குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நாளுக்கு நாள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் நாமோ?????? இன்று என்ன செய்கிறோம்?, என்ன செய்ய வேண்டும்? என்பதே தெரியாத நிலையில் குழப்பி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எமக்கு இருக்கும் இந்த முக்கிய செயற்பாடுகளை செய்வதற்கு எம்மத்தியில் பணம் இல்லையா?? எம்மவர்கள் கடந்த காலங்களில் இறுதி யுத்தம் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட பெருந்தொகை பணம் எங்கே போனது? அவைகள் எமது இச்செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாதா?

எங்கே எம்மக்களின் பாதுகாப்புக்கு சேகரித்த பணம்? என்று வந்து வாங்கியவர்களிடம் கேட்டால் ... தங்களுக்கும் பணத்தை கையாள்வோருக்கும் சம்பந்தம் இல்லை என்கிரார்கள். மேலும் இங்கு விடுதலைப் புலிகளின் ஏனைய அமைப்புகளும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தன. இன்று அந்த சேகரிக்கப்பட்டவைகள் எங்கே சென்று விட்டது?

சிலர் கூறுகிறார்கள் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என முதலிடப்பட்டிருப்பதாக, ஆனால் இம்முதலீடுகள் எல்லாம் தனித்தனி நபர்களின் பெயர்களிலேயே முதலிடப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இவைகள் மீண்டும் எம்மக்களுக்காக பயன்படுமா? இல்லை அந்ததந்த தனி நபர்கள் அவைகளை சுருட்டுவதற்கு இடம் அழிக்கப் போகிறோமா?????

இப்பணங்கள் தாயக்த்தில் உள்ள மக்களுக்கு பயன்பட வேண்டும்..பெருச்சாளிகளுக்கு அல்ல...

இப்பணங்கள் தாயக்த்தில் உள்ள மக்களுக்கு பயன்பட வேண்டும்..பெருச்சாளிகளுக்கு அல்ல...

என்னுடைய கருத்தும் அது தான்.

  • தொடங்கியவர்

ஏன் இங்கு எழுதினேன்?? ... தற்போது ஒரு தமிழ் பாடசாலைக்கு சென்று வந்தேன். அங்கு சிலர் கதைப்பதை கேட்கும் போது வேதனையாக இருந்தது! ... எவ்வாறு சிலரிடம் அகப்பட்டதை சுருட்டுகிறார்கள் என்பதை கூறிக்கொண்டிருந்தார்கள்! கொடுத்ததை கேட்க .. தலைவர் வரட்டும் தருகிறேன் என்றார்களாம்!!!

இன்னொருவர் இங்கு அங்கிருந்து அனுப்பப்பட்டவர், வானொலி ஒன்றிலும் பொறுப்பாக இருந்து, பெண் பிரட்சனை காரணமாக வெளியேற்றப்பட்டவர் ... இன்று அவர் கையில் சில மில்லியன்களாம்! ஆதாரம் உள்ளதாக அவருடன் பணிபுரிந்த சிலர் கூறுகிறார்கள்!!

இப்படி பல பல!!!

இதைதானே திரும்ப திரும்ப சொல்லுகின்றோம்.வட்டுக்கோட்டை தீர்மானம்,நாடு கடந்த அரசு எல்லாம் சேர்த்த பணம் எங்கே என கேட்காமல் இருக்க மக்களை திசை திருப்பபோடப் படும் நாடகங்கள்.இது கூட விளங்காமல் சிலர் ஏதோ அவர்கள் உண்மையில் வெட்டி கிழிக்கப் போகின்றார்கள் என எழுதுவதைப் பார்க்க பாவமாக இருக்கின்றது.

ஆக்கபூர்வமாக மக்களுக்கு ஏதும் செய்ய எண்ணுபவர்கள் ஒன்றுசேர வேண்டிய நேரமிது.

புலம்பெயர் மக்கள் அந்த குளிருக்குள்ள கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை...தாயகத்திற்கே போய் சேரவேண்டும்...நம்பி செயல் பட கூடிய அமைப்புகள்

1.நேசக்கரம்

2. சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு--ITSO (எந்த அரசியலும் சாரா தூய்மையான அமைப்பு)

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான தேச உணர்வு உள்ளவர்கள் எனில் வடக்கு கிழக்கில் அல்லறும் மக்களுக்கு பண உதவி செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாம்.

காசுகளை தமதாக்குபவர்களை ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால் இக்குள்ள மக்களாவது அவர்களை கேட்கலாம்.சட்ட ரீதியாகவாவது ஏதாவது செய்யலாம்.

நாங்கள் லோன் எடுத்து கொடுத்த பணத்தில் அவுடி கார் ஓடுபவர்கள், கிரீஸ் நாட்டுக்கு இரகசியமாக கப்பல் வித்தவர்கள்...இப்பையும் புலி பாயுது , பறக்குது எண்டு கதைவிடாம தாயக்த்தில் உருப்படியான வேலை செய்யும் அமைப்புகளுக்கு பணத்தை ரான்ஸ்பர் செய்து விடவும்....

இல்ல எல்லார் பெயர் லிஸ்டை கொடுக்க வேண்டிய இடத்தில் மக்கள் கொடுப்பார்கள்......

இது எச்சரிக்கை இல்லை கட்டளை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அமைப்புக்காக வேலை செய்யும் சிலரிடம் இதே கேள்வியை நான் கேட்டபோது முதலீடுகளும் சேர்த்த பணங்களும் அப்படியப்படியே இருக்கின்றது ஆனால் இப்போதைக்கு அதைப் பயன்படுத்துவதாக உததேசமில்லை என்று கூறினார்கள்.

துன்பப்படும் உமது உறவுகளுக்கு இப்போது தானே நிதியுதவி அதிகம் தேவை எனவே சேமிப்பிலிருக்கும் நிதி உடனே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் முன்வைத்தபோது அவர்கள் கூறியது: இறுதிப் போரின் பின்னர் வெளிநாடுகளில் பிடிபட்ட மூலதனங்களும் சொத்துகளும் போக மீதியிள்ள இயக்கத்தின் பணமும் சொத்துகளும் கைமாறுவதை பல நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நாங்கள் அவசரப்பட்டால் பெருந்தொகை நிதி பறிமுதல் செய்யப்படுவதற்கும் பலர் கைது செய்யப்படுவதற்கும் வழி வகுத்துவிடும் என்றும் அதனால் இயக்கத்தின் முதலீடுகளும் வைப்புகளும் விலாசம் மாற்றப்பட்டு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதே வேளை முன்பு போலவே இனிமேலும் நிதிவிடயங்கள் சம்பந்தமாக சேகரிப்பு பயன்பாடு என்பவற்றில் இரகசியம் பேணப்படும் என்றும் வலியுறுத்தினார்கள். இயக்க செயற்பாட்டாளர்களின் இந்த அணுகுமுறை சரியோ பிழையோ தெரியாது.

இங்கு அமைப்புக்காக வேலை செய்யும் சிலரிடம் இதே கேள்வியை நான் கேட்டபோது முதலீடுகளும் சேர்த்த பணங்களும் அப்படியப்படியே இருக்கின்றது ஆனால் இப்போதைக்கு அதைப் பயன்படுத்துவதாக உததேசமில்லை என்று கூறினார்கள்.

துன்பப்படும் உமது உறவுகளுக்கு இப்போது தானே நிதியுதவி அதிகம் தேவை எனவே சேமிப்பிலிருக்கும் நிதி உடனே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் முன்வைத்தபோது அவர்கள் கூறியது: இறுதிப் போரின் பின்னர் வெளிநாடுகளில் பிடிபட்ட மூலதனங்களும் சொத்துகளும் போக மீதியிள்ள இயக்கத்தின் பணமும் சொத்துகளும் கைமாறுவதை பல நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நாங்கள் அவசரப்பட்டால் பெருந்தொகை நிதி பறிமுதல் செய்யப்படுவதற்கும் பலர் கைது செய்யப்படுவதற்கும் வழி வகுத்துவிடும் என்றும் அதனால் இயக்கத்தின் முதலீடுகளும் வைப்புகளும் விலாசம் மாற்றப்பட்டு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதே வேளை முன்பு போலவே இனிமேலும் நிதிவிடயங்கள் சம்பந்தமாக சேகரிப்பு பயன்பாடு என்பவற்றில் இரகசியம் பேணப்படும் என்றும் வலியுறுத்தினார்கள். இயக்க செயற்பாட்டாளர்களின் இந்த அணுகுமுறை சரியோ பிழையோ தெரியாது.

வணங்கமுடி என்னை பொறுத்தவரையில் இனி ஆயுதப்போராட்டம் சாத்தியமே இல்லை ,இனி இராஜதந்திரமும் ,மூளையும் தான் நமது ஆயுதம்.

இந்த நிதி சரியாக வழியில் இரகசியமாகவாவது தாயகத்தில் உள்ளவர்களுக்கு பயன்பட வேண்டும்..எத்தின மாவீரர் குடும்பம் சோத்துக்கு வழியில்லாம திரியுதுகள்..சொல்லவே வாய் கூசுகின்றது வெட்கப்படுகின்றது எத்தினை பேர் விபச்சாரம் செய்கின்றனர். ஆனா சிலர் இங்கே தமிழீழத்தை நெருங்குவதாகவும் , புலிக்கொடி பற்றிய விமர்சனம் செய்தும் எம்மை சிந்திக்க விடாது இருக்கிறார்கள்....

இங்கு அமைப்புக்காக வேலை செய்யும் சிலரிடம் இதே கேள்வியை நான் கேட்டபோது முதலீடுகளும் சேர்த்த பணங்களும் அப்படியப்படியே இருக்கின்றது ஆனால் இப்போதைக்கு அதைப் பயன்படுத்துவதாக உததேசமில்லை என்று கூறினார்கள்.

துன்பப்படும் உமது உறவுகளுக்கு இப்போது தானே நிதியுதவி அதிகம் தேவை எனவே சேமிப்பிலிருக்கும் நிதி உடனே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்தை நான் முன்வைத்தபோது அவர்கள் கூறியது: இறுதிப் போரின் பின்னர் வெளிநாடுகளில் பிடிபட்ட மூலதனங்களும் சொத்துகளும் போக மீதியிள்ள இயக்கத்தின் பணமும் சொத்துகளும் கைமாறுவதை பல நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நாங்கள் அவசரப்பட்டால் பெருந்தொகை நிதி பறிமுதல் செய்யப்படுவதற்கும் பலர் கைது செய்யப்படுவதற்கும் வழி வகுத்துவிடும் என்றும் அதனால் இயக்கத்தின் முதலீடுகளும் வைப்புகளும் விலாசம் மாற்றப்பட்டு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். அதே வேளை முன்பு போலவே இனிமேலும் நிதிவிடயங்கள் சம்பந்தமாக சேகரிப்பு பயன்பாடு என்பவற்றில் இரகசியம் பேணப்படும் என்றும் வலியுறுத்தினார்கள். இயக்க செயற்பாட்டாளர்களின் இந்த அணுகுமுறை சரியோ பிழையோ தெரியாது.

இரகசியமாக சேகரிக்க வேண்டிய தேவை இப்போதைக்கில்லை. தமிழ் மக்கள் கொடுத்து ஏமாறாமல் இருந்தால் சரி.

நாடு கடந்த அரசு பணவிடயங்களில் வெளிப்படையாக இயங்கும் எனத் தெரிகிறது.

இரகசியமாக சேகரிக்க வேண்டிய தேவை இப்போதைக்கில்லை. தமிழ் மக்கள் கொடுத்து ஏமாறாமல் இருந்தால் சரி.

நாடு கடந்த அரசு பணவிடயங்களில் வெளிப்படையாக இயங்கும் எனத் தெரிகிறது.

உண்மையே.. முன்பு நாம் இலட்சக்கணக்கில் திரண்டு எடுத்துக்கூறியும் சாலை மறியல் செய்தும் அது செய்தியாகவில்லை. ஆனால் நாடு கடந்த அரசு குறைந்தளவு வாக்குகளையே பெற்றுக்கொண்டாலும் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் இராஜதந்திரத் திறன் காரணமாக பல ஆங்கில ஊடகங்களில் இடம் பிடித்தது. தமிழ் மக்களுக்காக ஜனநாயக ரீதியாக செயற்படும் யாரும் எதுக்கும் பயப்படவோ அல்லது ஒளிவு மறைவாக வேலை செய்யவோ தேவை இல்லை. வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக பண்பு மற்றும் எதிர்க்கருத்தை சகிக்கும் தன்மை என்பவை மிக முக்கியம்.

மற்றைய அமைப்புக்களிலும் பார்க்க நாடு கடந்த தமிழீழ அரசு முன்னோக்கி செல்கின்றது.. நமக்கு வேண்டியது தமிழீழம் ஒன்றே. அதுவே நாம் நிம்மதியாக வாழக்கூடிய வாழ்வைத்தரும்.வியாபார நோக்கம் கொண்டவர்களுக்கு பல தெரிவுகள் உண்டு.

நமது மாவீரச்செல்வங்களது கனவினை நனவாக்க அனைவரும் பாடுபடுவோம்.

கருத்து 1.

உண்மையில் பல்வேறு அமைப்புக்கள் பல திட்டங்களை வைத்திருந்தும் நிதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். அமெரிக்காவில் TAG மற்றும் இலண்டனில் TLAP போன்ற அமைப்புக்கள் சட்ட ரீதியாக மனித உரிமை மீறல் மற்றும் பல்வேறு தமிழர் நலன் சார் விடயங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் பல தமிழரல்லாத புலமையாளர்கள் சேவை செய்கின்ரனர் எனினும் அவர்களை குறைந்த செலவிலாவது அணுகுவதற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளனர்.

கருத்து 2.

தவிர தாயகத்தில் தற்போது பணிபுரிகின்ற அமைப்புக்களும் தாயகத்திற்காக அண்மையில் வேலை செய்ய தொடங்கிய அமைப்புக்களும் பல உள்ளன இவர்கள் பல வேலைகளை செய்கின்றனர். ஆனால் சிலவே விளம்பரங்களை மேற்கொள்கின்றனர். ஆகையால் விளம்பரம் செய்கின்ற அமைப்புக்களை மட்டும் முன்மொழிதல் சரியல்ல. பலரை இனங்கண்டு வேலை செய்கின்ர அனைவரையும் மக்களுக்கு இனங்காட்ட வேண்டிய பொறுப்பும் எல்லோருக்கும் உண்டு.

கருத்து 3.

யாழில் எழுதும் இந்த கருத்துக்கள் நாளையுடன் முன்பக்கத்தில் இருந்து போய்விடும் ஏனெனில் நாளை புதிய செய்திகள் பதியப்படும்போது இந்த கருத்துக்கள் பின் தள்ளப்படும். பின்னர் தானாக மறைந்து போகும். இப்படியான கருத்துக்கள் யாழில் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் சில தடவை வந்துள்ளன. காரசாரமான விவாதங்களாக நடந்துள்ளன. எச்சரிக்கை, கட்டளை என முழங்கின ஆனால் பின்னர் அப்படியே போய்விட்டன. ஆகவே இப்போதும் அவ்வாறுதான் போய்விடுமா?

கருத்து 4.

நான் ஒரு விடயத்தினை இங்கு முன் வைக்கின்றேன். அதாவது நான் இலண்டனில் இருக்கின்றேன். இங்கு பதில் சொல்லகூடிய ஒரு சிலரை குறித்த திகதி நேரத்திற்கு சந்திப்பிற்கு கேட்போம். அவர்களை நிச்சயமாக கொண்டுவரமுடியும் என நம்புகின்றேன். இலண்டனில் இருக்கும் யாழ் நண்பர்கள், கருத்து பதிவாளர்கள் அனைவரும் சந்தித்து எங்கள் நியாய பூர்வமான கேள்விகளை கேட்போம்.ஆதாரம் இருந்தால் அதனையும் கொடுத்து கேட்போம். அவர்களிடம் உருப்படியான பதில்களை பெறுவோம். இழுத்தடித்தால் அவர்களுக்கு நேரடியாகவே எச்சரித்து கட்டளைகளை பிறப்பிப்போம்.

கருத்து 5.

ஆக்க பூர்வமான சந்திப்புக்களை மேற்கொண்டு தொடர்ச்சியான ஓர் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பின் நானும்யாழ் நண்பர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியினை மேற்கொள்கின்றேன். அல்லது அப்பப்போ யாழில் பதிவினை மேற்கொள்வது மட்டும்தான் வேலை என்றால் எனது கருத்தும் ஓர் பதிவாக போகட்டும்.

நான் இலண்டனில் இருப்பதால் முதல் முயற்சியாக இலண்டனில் மேற்கொள்வோம். முடிந்தவர்கள் சமூகம் கொடுப்போம். ஏனையவர்கள் வருபவர்களிடம் கருத்துக்களை கூறி அனுப்பி விடலாம். நான் நினைக்கின்றேன் இந்த முயற்சியானது உண்மையாக மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓர் சுமையாக இருக்க மாட்டாது என்று.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரை..

இங்கு சேர்க்கப்படும் பணம் பகுதி பகுதியாக தவணை முறையில் சென்றவண்ணமே இருக்கும்

இங்கிருந்து கேட்கப்படும் தொகை எந்த வகைப்பட்டும் முதலில் கடன் பட்டோ வட்டிக்கெடுத்தோ அனுப்பப்படும் அதன் பின்பே மக்களிடம் சிறிது சிறிதாக சேர்க்கப்பட்டு கடன் அடைக்கப்படும்

இங்கு கடன்கள் இருக்குமே தவிர பணம் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்

வெளியில் இருந்து பார்த்தால் இயக்கம் பெரிய தொகைக்கு அதிபதிபோல் தெரியும்

ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அவர்கள் 5 க்கும் 10 க்கும் ஓடித்திரிவது தெரியும்

ஆனால் சொத்துக்கள் இருக்கலாம்

எனவே தேவையற்று எமக்குள் குத்துப்படாமல் இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக பேசுவதே சிறந்தது.....

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உமை,

கருத்து 1: உண்மையில் TAGஇல் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே சேவை செய்கின்றனர். அது நிதி இல்லாமல் திண்டாடுகிறது. இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும், சில காலங்களுக்கு முன் TAGஇற்கு நிதி சேகரிக்க புறுஸ் வெயினுடன் சிலர் பிரித்தானியாவிற்கு வந்தார்கள், சில கூட்டங்களும் நடைபெற்றன. அவை முடிய இங்குள்ள காஸ்ரோக்கள் TAGஇன் உறுப்பினர் ஒருவரை கதைக்க வரச் சொல்லி இருக்கிறார்கள். அங்கு போனால் நாலு காஸ்ரோக்கள் இருந்தார்களாம். முதல் கேள்வி யாரை கேட்டு TAGஐ உருவாக்கினீர்கள்? .. அவர் உடன் பதில் கொடுக்கப்பட்டதாம் எமது மக்களுக்கு சிங்களவன் செய்யும் அநியாயங்களுக்கு நீதி கேட்க நாம் யாரிடமும் அனுமதி கேட்கத்தேவையில்லை என்று கூறி விட்டு அங்கு அமெரிக்காவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்தாலேயே உள்ளுக்குள் போக வேண்டிய நிலை!! இவ்வமைப்பை தொடங்கியபின் நாட்டிலிருந்து வெளிவரும் நிதர்சனம் இது சம்பந்தமாக ஒத்த கருத்துக்களை வெளியிட்டது, எமக்கு அதே ஒரு அங்கிருந்து வந்த ஒப்புதலாக தெரிந்தது. என்றாராம். ... அதனை விட நிதி சேகரிப்புக்கும் பல தடைகள் போட்டார்களாம்! ஏன்????????

கருத்து 2: இங்கு ஒரு கதைக்குத்தான் TAGஐயும், நேசக்கரத்தையும் எடுத்தேன். வேறு சிலவும் வேலை செய்கின்றனதான். இன்னும் சில சிங்கள இராணுவத்துக்கும் நிதி சேகரிக்கின்றது. லிட்டிலெய்ட்டாக சிங்களவனின் மனதை வெல்ல வேண்டுமாம்!!!!!!! மேலும் மே18இற்குப்பின்னம் வெள்ளவத்தை இராமகிருஸ்ணமிஷனும் உடுபுடவைகள், பொருட்கள், பாத்திரங்கள் என எல்லாம் சேர்த்து அனுப்பினார்களாம். அவை மதவாச்சியில் திருப்பப்பட்டு காயமடைந்த/இறந்த சிங்கள இராணுவ அமைப்பிற்கு போய் விட்டதாம். அத்துடன் இராமகிருஸ்ணமிஷனும் சேர்த்தும் பலனில்லை என்று நிறுத்தி விட்டார்களாம்.

கருத்து 3: இதுவும் அப்படியே! பொறுங்கள் இதை எழுதியதற்கு இன்றோ, நாளையோ புலத்தில் இலவசமாக எம்மத்தியில் கொடுக்கப்பட்டும் பட்டம் அழித்து எனக்கு கவுரவிப்பார்கள் பலர். கூலிக்கு எழுதியுள்ளான் என்று பல கூக்குரல்கள் வெளிவரப்போகிறது.

கருத்து 4: ம்ம்ம்ம்...... அவர்கள் கட்டாயம் வருவார்கள்? கட்டாயம் பதிலளிப்பார்கள்?? ... வேண்டாம் கனவு! நீங்கள்யார் எங்களை கேட்க என்பார்கள். உங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்போம் என்பார்கள். பதிவு, சங்கதி, ஈழமுரசு, ஈழநாடுகளில் அதியமானுகளும், அகத்தியர்களும் எழுந்து நின்று புலத்தில் சிறிலங்கா/இந்திய அரசின் புதுக்கூலிகள் என முழங்கவும் தொடங்கி விடுவார்கள் தேவையா??????

கருத்து 5: அவர்களின் உண்மை முகங்களை கிளித்தாலொளிய வேறு செயற்பாடுகளும் பயனளிக்காது. எம் சந்திப்பும் ஏதும் நல்லதுகள் நடக்க வழி சமைக்குமா??? சந்தேகமே!

Edited by Nellaiyan

புலிகளின் ஒரு கப்பல் அடிப்பட்டு போனால் எங்களை பொறுத்தவரைக்கும் ஒரு சிறு செய்தி... சிங்களம் பொய்யாக சோடிக்கப்பட்ட செய்தி... இரண்டு நாள் பேசிவிட்டு மறந்து போகும் செய்தி...

ஆனால் இந்திய கடற்படையால் அடிப்பட்டு தாண்ட எங்களின் ஒரு பெரிய கப்பலின் விலை 1400 கோடி இலங்கை ரூபாக்கள் எண்டது எத்தினை பேருக்கு தெரியும்...?? அதில வந்திருக்க கூடிய ஆயுதங்கள் எத்தினை கோடி என்பது சம்பந்த பட்டவர்களோடை போய் விடுகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் மக்கள் அந்த குளிருக்குள்ள கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை...தாயகத்திற்கே போய் சேரவேண்டும்...நம்பி செயல் பட கூடிய அமைப்புகள்

1.நேசக்கரம்

2. சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு--ITSO (எந்த அரசியலும் சாரா தூய்மையான அமைப்பு) ?????????

இந்த அமைப்பை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு--ITSO (எந்த அரசியலும் சாரா தூய்மையான அமைப்பு) ?????????

இந்த அமைப்பை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்

வணக்கம் ஆண்டவன் அவர்களே

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு எந்த விதமான அரசியல் நோக்கங்களுமற்ற நாட்டிலுள்ள மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இயங்கி வரும் அமைப்பு. அதனை கடந்த காலங்களில் எம்மால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளின் ஊடாக தாங்கள் அறிந்து கொள்ளலாம். மணிவண்ணன் எனும் பெயருடைய நபர் எவரும் எமது அமைப்பில் இல்லை.

மணிவண்ணன் என்பவர் எந்த பல்கலைக்கழக மாணவர் ? எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் நிர்வாகிக்கப்படுவதும் கொண்டு நடாத்துவதும் முற்று முழுதாக பல்கலைக்கழக மாணவர்களே. எம்மைப்பற்றிய கருத்துகளையும் விமர்சனங்களையும் முன் வைக்கும் முன்பு தீர விசாரித்து உண்மையினை அறிந்து கொள்ளவும். தவறான தகவல்களினால் பாதிக்கப்படுவது மாணவர்களே . எமது கருத்தினை உள்வாங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலதிக தகவல்களுக்காக எமது தளங்களின் இணைப்புக்களை இணைத்துள்ளோம்.

http://blog.itsogroup.org

http://www.facebook.com/itsogroup

http://itso4students.com

http://www.tamilarkal.com

நன்றி

Edited by சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு

நானும் உங்களைப்போல் ஒருவன் தான். கடைசி சில மாதங்களில் கூட சேகரிப்பில் சேகரிப்பில் ஈடுபட்ட சிலரிடம் கொடுத்துவிட்டு யாரை நோவது என தெரியாது இருந்தேன்.ஆனால் கொடுத்தை எல்லாம் சந்தோசமாகதான் பார்க்க தோண்றுகிண்றது இன்று. ஏன் எனில் ஜக்கியராட்ட்சியத்தில் சேர்த்த பலரிருக்கலாம் ஒர் குழு மிகப்பெரியதொரு தொகையை *முன்னால் போராளிகளின் நலனிற்காக எண்றுமே எம் மக்களால் வேறுக்கப்படும் ஓர் குழுவிடம் கைமாற்றி இருந்தது. அந்த சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் எண்றைக்குமே அதற்கு கணக்கு காட்ட முடியாது என்று நினைக்கிண்றேன்.ஆனால் எழுந்தமானமாகவும் , ஓர்குறித்த துறையிலும் இருந்தம் தெரிவுசெய்யப்பட்ட முன்நாள் போராளிகள் சிலர் நண்மைகளை அடைந்து உள்ளனர். எனவே தற்காலிக தடைகளை தாண்டி இலக்கு நோக்கிய எம் பயணத்தை தோடர்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு எந்த விதமான அரசியல் நோக்கங்களுமற்ற நாட்டிலுள்ள மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இயங்கி வரும் அமைப்பு. அதனை கடந்த காலங்களில் எம்மால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளின் ஊடாக தாங்கள் அறிந்து கொள்ளலாம். மணிவண்ணன் எனும் பெயருடைய நபர் எவரும் எமது அமைப்பில் இல்லை.

மணிவண்ணன் என்பவர் எந்த பல்கலைக்கழக மாணவர் ? எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் நிர்வாகிக்கப்படுவதும் கொண்டு நடாத்துவதும் முற்று முழுதாக பல்கலைக்கழக மாணவர்களே. எம்மைப்பற்றிய கருத்துகளையும் விமர்சனங்களையும் முன் வைக்கும் முன்பு தீர விசாரித்து உண்மையினை அறிந்து கொள்ளவும். தவறான தகவல்களினால் பாதிக்கப்படுவது மாணவர்களே . எமது கருத்தினை உள்வாங்கிக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலதிக தகவல்களுக்காக எமது தளங்களின் இணைப்புக்களை இணைத்துள்ளோம்.

விரைவில் ஆதாரங்களை அனுப்பி வைக்கின்றேன்.

உமையின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்.லண்டனில் இருக்கும் உறவுகள் தயவு செய்து இதற்க்கு ஆதரவு கொடுங்கள்.கடன் பட்டு காசு கொடுத்த பல குடும்ப்பங்கள் இன்று மிகவும் கஸ்ட்டப் பட்ட நிலையில் புலத்தில் இருக்கின்றன.இந்தக் குடும்ப்பங்களை ஒருங்கிணைத்து அவர்கள் கஸ்ட்டங்களைத் தீர்க்க ஆவது இந்த முயற்ச்சி உதவும்.காசை வைதிருப்பவர்கள் தமது சொந்த நலங்களுக்காக அதனைப் பாவியாது, இந்தக் குடும்பங்களின் துயரைத் துடைக்க மனிதாபிமான ரீதியில் முன் வர வேண்டும்.

நெல்லையன் தயவு செய்து இதனைக் குழப்பாமல் உமையின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவும். நன்றி.

என்னைப்பொறுத்தவரையில் எதையுமே நெகரிவ் ஆக பார்த்தால் சரிவராது. ஒவ்வொருவரது பக்கத்திலும் சரி, தவறு இருக்கும் நாமும் அதற்கு விதி விலக்கு அல்ல.வெளி நாடுகளில் இயக்கத்திற்காக செயற்பட்டவர்கள் ஏறத்தாள 42 பேர் ஆக குறைந்தது 5- 20 வருடங்கள் வரை சிறையில் உள்ளனர். இலண்டனில் ஒருவரது குடும்ப வாழ்க்கை அப்படியே அமிழ்ந்துவிட்டது. அவருக்கு மட்டும் அல்ல அவரது பிள்ளைகளுக்கும் பாடசாலையில் அவமானம், அவரது கார் , வீடு, எல்லாம் வங்கி எடுத்து விட்டது. இன்னொருவர் குடும்பமும் சரி அவ்வளவுதான் 25 வருடம் அமெரிக்காவில் கம்பி எண்ணுகின்றார். இவர்களெல்லாம் நன்கு படித்த வைத்திய, பொறியல் தொழில் பார்த்தவர்கள் இயக்கத்திற்காக வேலை செய்ய முன்னரே வசதியாக வாழ்ந்தவர்கள். இவ்வாறு நாட்டிற்காக வேலை செய்ய வந்து தங்களையும் தங்கள் சொத்துக்களையும் ஏன் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தொலைத்து விட்டு வாழ்கின்றார்கள்.இது நியாயப்படுத்துவதற்கான கருத்து அல்ல.

மறுவளமாக சில நெகரிவ் ஆன பக்கங்களும் இருக்கின்றன.அதில் உண்மைகளும் இருக்கலாம் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கலாம். தயா அவர்கள் சொன்னது போன்று ஒரு கப்பல் அல்ல இயக்கத்தின் 09 இற்கு மேற்பட்ட கப்பல்கள் 2002-2009 வரை அடிபட்டுள்ளது. அதே நேரம் இன்னமும் 4 கப்பல் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றதாம். ஆனால் இந்த கப்பல் தனியார் சிலரினால் நிர்வகிக்கப்படுவதனால் அவர்கள் தற்போது தலைவர் வந்தால் தான் நாங்கள் கொடுப்போம் என்று கணக்கு விடுகின்றார்களாம். கப்பல் எங்கு ஓடுகின்றது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியுமாம். அதனால் இனி எல்லாம் உங்கலோட தொடர்பே இருக்க கூடாது என்று ஒரு கூட்டம் தென் ஆசியாவில் ஒழிந்துவிட்டது.இன்னும் சிலர் தென் ஆசியாவில் ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபடுகின்ரனர். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் வேலைத்திட்டத்திற்காக தென் ஆசியாவிற்கு அனுப்பபட்டவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாட்டில் செயற்படுகின்ரனர் என தகவல். ஆனால் இவற்றையெல்லாம் ஆத்திரத்தில் யாழில் கொட்டுவதனாலோ அல்லது எசs்சரிக்கை விடுவதனாலோ தீரப்போவதில்லை. ஆக்க பூர்வமான சந்திப்புக்களே சில நல்ல விளைவுகளை கொண்டுவரலாம்.

அதனால் இனி எல்லாம் உங்கலோட தொடர்பே இருக்க கூடாது என்று ஒரு கூட்டம் தென் ஆசியாவில் ஒழிந்துவிட்டது.இன்னும் சிலர் தென் ஆசியாவில் ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபடுகின்ரனர். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் வேலைத்திட்டத்திற்காக தென் ஆசியாவிற்கு அனுப்பபட்டவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாட்டில் செயற்படுகின்ரனர் என தகவல். ஆனால் இவற்றையெல்லாம் ஆத்திரத்தில் யாழில் கொட்டுவதனாலோ அல்லது எசs்சரிக்கை விடுவதனாலோ தீரப்போவதில்லை. ஆக்க பூர்வமான சந்திப்புக்களே சில நல்ல விளைவுகளை கொண்டுவரலாம்.

அப்படிச் சொல்லப்படுவது மிகப்பெரிய பொய்... இதை வேண்டும் எண்றே பரப்புகிறார்கள்.. நடந்து முடிந்த சில அனர்த்தங்களுக்கு உதவியை அவர்கள் தென்னாசியாவில் இருந்து வேண்டினர்... ஆனால் இவர்களில் சிலர் (KP யின் ஆதரவாளர்கள் எண்று நினைக்கிறேன்) நேரடியாகவே உங்களை எல்லாம் நம்பமுடியாது எண்று உரைத்தனர்... http://viduthalaipulikal.info வில் உங்களுடன் தொடர்பை வைக்க கூடாது எண்று சொல்லப்பட்டு இருப்பதை சொல்லி சுட்டி காட்டினர்... அப்படி சொன்னவர்கள் KP யின் ஆதரவாளர்கள் என்பது தெளிவு...

அவர்களில் சிலர் தான் உள்ளை இருந்து எல்லாவற்றையும் வேண்டும் எண்றே குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்...

Edited by தயா

தமிழீழ விடுதலைக்கு என நிதி திரட்டியவர்களில் 70% மேலானவர்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள். சம்பந்தப்படாதவர்கள்.

தடைக்கு பிறகு ஒண்டும் செய்யேலாது.... அப்படி இப்படி எண்டுதான் காசுசேக்கோனும்.

ஆனால் தடைசெய்யப்படமுதலும் இதேதான்.

ஒண்டு செய்திருக்கலாம்.. வீடுகளில் காசு வாங்காமல்.. 'ஈழம் வீடு' போண்ற இடங்களில் கொண்டு வந்து தரும் படி வீடுகளுக்கு போய் கேட்டிருக்கலாம்.

அதை எல்லோருக்கும் பகிரங்கமாக சொல்லி அறிக்கை ஒண்டு விட்டிருக்கலாம்..

போலிகளை அவதானித்து பகீரங்கப்படுத்தியிருக்கலாம் மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம்.

எனது ஆண்டி வீட்டுக்கு வந்த ஒருவர்.. ஒளிவீச்சை லப்டொபில போட்டுக்காட்டி விட்டு £100 பவுன் கேட்டவராம்.. சொல்லி சிரித்தார்கள்.. இத்தோடு இந்திய/இலங்கை உளவுத்துறைகளும் இதில் மும்முரமாக ஈடுபட்டிருந்திருந்தன. அவரவர் செலவுபோக மிச்சம்.வழக்கம்போல எங்கடகாசில எங்களுக்கே அடி போட உபயோகிக்கப்பட்டது.

நான் இது விடயமாக பல முறை எச்சரித்தும் பதில் வரவில்லை.

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைக்கு என நிதி திரட்டியவர்களில் 70% மேலானவர்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள். சம்பந்தப்படாதவர்கள்.

முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்து. 80% க்கும் மேற்பட்டோர் உணர்வுடனே பணியாற்றினார்கள்.

சும்மாயிருந்தவாறு அடுத்தவன் மேல் சேறிறைப்பதைப் போல் சுலபமான வேலி உலகில் வேறெதுவும் இல்லை.

நிதி சேகரித்தவர்கள் எதிர் நோக்கியது எத்தனை... வாங்கிய திட்டுக்கள் எத்தனை ... முகத்திற்கெதிரே ஓங்கி அடித்து சாத்தப்பட்ட வாசல் கதவுகள் எத்தனை ..., துண்டிக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் எத்தனை ...., மூஞ்சையில் எச்சில் துப்பா குறையாக வெளியில் போ என்று உறுமிய முகங்கள் எத்தனை..., இந்தா தருகிறோம் அந்தா தருகிறோம் என்று கேட்ட இழுத்தடிப்புக்கள் எத்தனை..., போரை தொடங்குங்கள் தருகிறோம் யாழ்பாணத்தைப் பிடித்தால் தருகிறோம் என்று எகத்தாளம் பேசிய வாய்கள் எத்த்னை .... இப்படி எத்தனையோ அவமானங்களைச் சந்தித்தது மட்டுமல்ல எத்தனையோ சட்ட கெடுபிடிகளுக்க்கும் மத்தியில் தான் பணியாற்றினார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படி வீடு வீடாக நிதி சேகரித்த நண்பன் ஒருவன் தனது சொந்தப் பணத்தை மட்டுமல்ல தன்னால் எவ்வளவு வங்கிகளில் கடன் பெறமுடியுமோ அவ்வளவை கடனாகப் பெற்று கொடுத்தவன். அவன் படித்த படிப்புக்கும் கணனித் துறையில் அவனுக்கிருந்த திறமைக்கும் அவன் நல்லதொரு வேலையில் குடும்பம் குட்டி என வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் முழு நேரம் இதில் ஈடுபடுவதற்காகவே இதில் பலவற்றை துறந்து நின்றவன். இப்படி ஒருவர் மட்டுமல்ல பலர் இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

மேல் மட்டத்தில் நிதியை கையாண்டவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த அடிமட்ட தொண்டர்களில் பலர் விடுதலை உணர்வுக்காக மட்டுமே செயற்பட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.