Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சண்டித்தனம்

Featured Replies

என்னைப்போன்ற சில யாழ் நேயர்களின் கருத்துக்களால் யாழ் இணையத்திற்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு உண்மையிலேயே மனம் வருந்திறன்.

இந்த யாழ் இணையம் என்பது ஒரு தேசத்தின் விடிவை நேசித்து அந்த விடிவினை நோக்கிப் பயணித்த ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உணர்சிகளையும் ஆதங்ககங்களையும் கொண்டித்தீர்கின்ற ஒரு ஆரோக்கியமான களம். புலத்து தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களுடைய கருத்துக்ளுக்கு சுதந்திரம் கொடுக்கின்ற ஒரே களம் இந்த யாழ் தளம் மாத்திரம்தான். எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை சரியான பாதையில் கொண்டுநடாத்தும் நோக்கோடு அந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் நோக்கோடு இங்கு பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற சுய விமர்சனங்கள் ்பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அவை ஆரோக்கியமானவை. சுயவிமர்சனத்திற்காக களம் திறந்து தந்துள்ள ஒரே ஊடகம் இது மாத்திரம்தான். தங்கட வளமையான பாணியில மிரட்டி இதை மூடிவிட்டு மறுபடியும் காட்டுத்தர்பார் நடாத்தி தங்கட இருப்பைத் தக்கவைக்க ஈழம் நியுஸ் கார் முயலுறது விளங்கிது. இதில எழுதிவாற எங்களை முகமூடிகள் எண்டு சொல்லுறாங்கள். இந்த முகமூடிகள் விலகினால் அது உங்களுக்குத்தான் வெட்கக்கேடு. நாங்களும் உங்களிள ஒருத்தர்தான். உங்களோட நீண்டகாலமாக நின்டு உங்கட இருப்புகளுக்காக செருப்பாய் தேய்ந்து எங்களை நாங்களே அழித்துக்கொண்டவர்கள்தான் நாங்கள். உங்கட அத்தனை அராஜகங்களையும் நீங்கள் எங்களுக்கு கட்டளையிட்டபடியே அரங்கேறியவர்கள்தான் நாங்கள். மக்களைப்பற்றி கொஞ்சமம் யோசிகஈகாமல் ஓடரை மாத்திரம் யோசத்து மக்களையும் எங்களையும் அழித்தவர்கள்தாம் நாங்கள். வெட்கம் காரணமாக நாங்கள் போட்டிருக்கும் முகமூடியை நாங்கள் கழட்டினால் நீங்கள்தான் வெட்கப்படவேண்டி இருக்கும். எங்கள் மக்களின்ட எதிர்காலம் அவர்கள் செல்லுகின்ற பாதைகள் அவர்களது பயணங்கள் அவர்களைத் தலைமைதாங்கி நடத்திச் செல்பவர்களின் நெறிமுறைகள சரியாக இருக்கவேண்டும் எப்பதற்காகத்தான் ஒருவகை சுயவிமர்சனமாக சில விடயங்களை பகிரங்கப்படுத்துகின்றேம். அது சரி இந்தக் களத்தில் எத்தனையோ விடயங்கள் வெளிவரும்போது மௌனமாக இருந்த சிலதுகள் பண விபரங்கள் பற்ற்ிப பேச ஆரம்பிததும் மாத்திரம் ஏன் இந்த தளத்தை மூடத் துடிக்கிறார்கள். அடுத்தது உந்த ஈழம் நியுசின்ட ஆசிரியர் குழுவில யார் யார் இருக்கினம் என்டாவது சொல்லி உண்கட ஊடக தர்மத்தை நிலைநாடஇடியிருக்கலாம் இல்லையா. ஈழம் நியுஸ் இல எழுதுபவ்ரகள்’ அதன் ஆசிரியர் நிர்வாகிகள் ஏன் முகமூடி போட்டுக்கொண்டு எழுதுகினம்

Edited by DAM

  • Replies 110
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடஅடஅடடடா ஒரு கருத்துக்களத்திற்கும் செய்தி ஊடகத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு செய்தி தனம் நடத்துகிறார்களாம். அதுக்கை வழக்கு கோட்டு என்று வெருட்டல்வேறை.ஜயா ஆய்வாள கனவான்களே இது கருத்துக் களம் இங்கு யாரும் எது வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு கருத்துக்கள நிருவாகம் பொறுப்பாகாதய்யா அவர்கள் அதனை கண்காணிக்கலாம் அவ்வளவுதான். இதுகூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு பத்திரிகையாளர்கள். அதனை ஒரு செய்தியென்று ஆளவந்தான் இங்கு கொண்டு வந்து ஒட்டுகிறார்கள். ஆளவந்தானிற்கு சுமங்களா என்றாலே ஒரு நடுக்கமாக இருக்கிறதாக்கும். :D

நீங்கள் இணைத்த செய்தியின் உன்மைதனைமையை நிரூபித்து யாழ்களத்தை காப்பாற்ற் வேண்டும், சும்மா வசை பாட இது குப்பை மேடு இல்லை. மோகன் அண்ணாவுக்கு ஏற்கனவே ஆயிரம் பிரச்சினை அதில இது வேற.

பரவாயில்லை. கொடுத்து வைத்த ஆக்கள். எந்த நேரமும் கணினிக்கு முன்னாலை குந்தியிருப்பாங்கள் போல. கடிதம் கடிதமாக எழுதித் தள்ளுறாங்கள்.

இவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து யாழ். இணையம் தனது கள உறுப்பினர் ஒருவருடைய தனிப்பட்ட விடயம் எதனையும் மற்றவர்களிற்கு வழங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

கண்ட கண்ட வதந்திகளுக்கு களம் பொறுப்பேற்க முடியாது, சட்டத்தின் முன் அனைவரும் சமன்.

வதந்திகள் பரப்புவோர் தண்டிக்க பட வேண்டும் அதற்கு யாழ்களம் ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்.

Edited by சித்தன்

முதலில் புதினம் தமிழ் நாதம் தமிழ்நேசன் ஆகிய இணைங்களை அச்சுறுத்தி நிறுத்திய ஊடக இல்லத்தினதும் அதனால் வெளியடப்படும் ஈழமுரசு சங்கதி பதிவு ஆகிய இணையங்களின் அடாவடித் தனங்களை நிறுத்துங்கள்.

அட போங்கப்பா ஈ ஒட்டிக்கொண்டிருக்கும் ஈழம் ஈ நியூஸ் யாழோடை மோதி இலவச விழம்பரம் தேடுகிறது அடிக்கடி யாராவது ஈ நீயூஸ் பக்கமும் போய் பார்த்து எதையாவது எழுங்கப்பா அப்ப அவங்கள் பேசாமல் இருப்பாங்கள்..முன்னர் தேள்வடிவத்தாக்குதல் சிலந்தி தாக்குதல் உள்ளைவிட்டு அடிக்கிறது என்று பரபரப்பா எழுதின கைகள் சும்மாயிருக்காது தானே அதுதான் யாழ்களம் மீதான தாங்குதல் தொடங்கிட்டினம். :றரடி:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம்ஈநியூஸ் நடத்துகின்ற அருஸ், பரணி கிருஸ்ணரஜனி உங்களுக்கே இது சின்னப்புள்ளைத்தனமாக தெரியவில்லையா?

உங்களின் ஆக்கங்களுக்கும் புலம்பல்களுக்கும் வடிகாலாகத்தான் ஈழம்ஈநியூஸ் இருக்கின்றதே தவிர ஆக்கபூர்வமாக உங்கள் தளத்தில் எதுவுமில்லையே.

அதென்னங்க தமிழ்த் தேசியம்? நீங்கள் மட்டும்தான் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் அல்லவா முழத்துக்கு முழம் தமிழ்த் தேசியம் என்று முழங்குகின்றீர்கள்.

வடிவேல் பாணியில் கூறுவதென்றால், றூம் போட்டு யோசிச்சீங்களோ இப்படி கடிதங்களும் கட்டுரைகளும் எழுதுவதற்கு???

முதலில் கருத்துக்களத்தின் வரையறைகள் என்ன என்பதனை படியுங்கள். அதன்பிறகு இவ்வாறான கடிதங்களையும் கட்டுரைகளையும் எழுத முயற்சியுங்கள்.

யாரும் எதனையும் எழுதிப்போடலாம் என்பதற்குத்தான் கருத்துக்களம் இருக்கின்றது. அதனை நீக்குவதற்கு அந்த அந்த கருத்துக்களத்தினை நடத்துபவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்கின்றதே தவிர. உங்களைப் போன்ற சில்லிடுப்புக்கள் எல்லாம் கேட்டதற்காக நீக்கவேண்டும் என்றில்லை.

***

யாரும் எதையும் எழுத முடியாது எழுதியவற்றுக்கு எழுதியவர்தான் பொறுப்பு, களம் ஒரு போதும் பொறுப்பேற்க முடியாது.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்நியூஸ் இணையத்தளத்திடம் நான் ஒரு விடையம் கேடகிறேன் உங்களால் உண்மை சொல்லமுடியுமா பரபரப்பாக எழுதி புலம்பெயர் தமிழர்களை உறைநிலையில் வைத்திருந்தீர்களே அதுவும்தான் எமது விடுதலைப்போராட்டம் அழிவுநோக்கிப் போகக் காரணமாகவிருந்தது அதற்க்கப் பொறுப்பேற்க உங்களால் முடியுமா அப்படிப்பொறுப்பேற்றாலும் இழந்த எமது போராளிகளையும் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிரையும் எமது தலைவனையும் உங்களால் திரும்பப்பொற்றத்தரமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்போன்ற சில யாழ் நேயர்களின் கருத்துக்களால் யாழ் இணையத்திற்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு உண்மையிலேயே மனம் வருந்திறன்.

இந்த யாழ் இணையம் என்பது ஒரு தேசத்தின் விடிவை நேசித்து அந்த விடிவினை நோக்கிப் பயணித்த ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உணர்சிகளையும் ஆதங்ககங்களையும் கொண்டித்தீர்கின்ற ஒரு ஆரோக்கியமான களம். புலத்து தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களுடைய கருத்துக்ளுக்கு சுதந்திரம் கொடுக்கின்ற ஒரே களம் இந்த யாழ் தளம் மாத்திரம்தான். எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை சரியான பாதையில் கொண்டுநடாத்தும் நோக்கோடு அந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் நோக்கோடு இங்கு பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற சுய விமர்சனங்கள் ்பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அவை ஆரோக்கியமானவை. சுயவிமர்சனத்திற்காக களம் திறந்து தந்துள்ள ஒரே ஊடகம் இது மாத்திரம்தான். தங்கட வளமையான பாணியில மிரட்டி இதை மூடிவிட்டு மறுபடியும் காட்டுத்தர்பார் நடாத்தி தங்கட இருப்பைத் தக்கவைக்க ஈழம் நியுஸ் கார் முயலுறது விளங்கிது. இதில எழுதிவாற எங்களை முகமூடிகள் எண்டு சொல்லுறாங்கள். இந்த முகமூடிகள் விலகினால் அது உங்களுக்குத்தான் வெட்கக்கேடு. நாங்களும் உங்களிள ஒருத்தர்தான். உங்களோட நீண்டகாலமாக நின்டு உங்கட இருப்புகளுக்காக செருப்பாய் தேய்ந்து எங்களை நாங்களே அழித்துக்கொண்டவர்கள்தான் நாங்கள். உங்கட அத்தனை அராஜகங்களையும் நீங்கள் எங்களுக்கு கட்டளையிட்டபடியே அரங்கேறியவர்கள்தான் நாங்கள். மக்களைப்பற்றி கொஞ்சமம் யோசிகஈகாமல் ஓடரை மாத்திரம் யோசத்து மக்களையும் எங்களையும் அழித்தவர்கள்தாம் நாங்கள். வெட்கம் காரணமாக நாங்கள் போட்டிருக்கும் முகமூடியை நாங்கள் கழட்டினால் நீங்கள்தான் வெட்கப்படவேண்டி இருக்கும். எங்கள் மக்களின்ட எதிர்காலம் அவர்கள் செல்லுகின்ற பாதைகள் அவர்களது பயணங்கள் அவர்களைத் தலைமைதாங்கி நடத்திச் செல்பவர்களின் நெறிமுறைகள சரியாக இருக்கவேண்டும் எப்பதற்காகத்தான் ஒருவகை சுயவிமர்சனமாக சில விடயங்களை பகிரங்கப்படுத்துகின்றேம். அது சரி இந்தக் களத்தில் எத்தனையோ விடயங்கள் வெளிவரும்போது மௌனமாக இருந்த சிலதுகள் பண விபரங்கள் பற்ற்ிப பேச ஆரம்பிததும் மாத்திரம் ஏன் இந்த தளத்தை மூடத் துடிக்கிறார்கள். அடுத்தது உந்த ஈழம் நியுசின்ட ஆசிரியர் குழுவில யார் யார் இருக்கினம் என்டாவது சொல்லி உண்கட ஊடக தர்மத்தை நிலைநாடஇடியிருக்கலாம் இல்லையா. ஈழம் நியு!ஸ இல எழுதுபவ்கள்’ அதன் ஆசிரிய் நிர்வாகிகள் ஏன் முகமூடி ஆபாட்டுக்கொண்டு எழுதுகினம்

யாழ்களத்தை யாரும் மூட முடியாது ஏன் எனில் கருத்து எழுதியவர்தான் கருத்துக்கு பொறுபேற்க வேண்டும், சைபர்கிரைம் குற்றவியல்படி பொலிஸ் கேட்டால் உறுப்பினர் பற்றிய தகவல் கொடுக்கபடவேண்டிய ஒன்றுதான். இந்த விஞ்ஞான உலகில் அந்த உறுப்பினர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த இணைப்பில் இருந்து கருத்து எழுதுகிறார், என்ன வகையாண இனையத்தில் இருக்கிரார் என்று கண்டு பிடிப்பது ஒன்றும் கஸ்ரமான காரியம் இல்லை.

Edited by சித்தன்

"கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் யாழ் களத்தில் இருப்பவர்கள் நாங்களும் நம்மவர்களுமே"....

தவறான கருத்து பரப்பப் படுவதாக உணர்வீர்களேயானால் அதற்கு ஒரு மறுப்பறிக்கை வெளியிடுங்கள்......

அதை விட்டு யாழ் களத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டாதீர்கள்......

வதந்திகள் பரப்புவோர் தண்டிக்க பட வேண்டும் அதற்கு யாழ்களம் ஒரு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்..... :D

Edited by Netfriend

சுமங்களாவினதும், DAM இனதும் மிரட்டல்களுக்கு ஈழம் ஈ நியூஸ் என்ன பயந்துபோய்விட்டதா? அப்படி என்னதான் மிரட்டல் விட்டார்கள். கருத்துக்களைக் கண்டு மிரள்வதும், விமர்சனங்களைக் கண்டு துள்ளிக் குதிப்பதும் ஊடகமாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரி இங்கு தொடங்கப்பட்டபோது....

இங்கும் பலமான கருத்துக்கள் வைக்கப்பட்டன.

எனவே யாழ் களத்தின் நன்மை கருதி....

இது போன்ற தனிப்பட்ட செய்திகளையும் தாக்குதல்களையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரி இங்கு தொடங்கப்பட்டபோது....

இங்கும் பலமான கருத்துக்கள் வைக்கப்பட்டன.

எனவே யாழ் களத்தின் நன்மை கருதி....

இது போன்ற தனிப்பட்ட செய்திகளையும் தாக்குதல்களையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன்.

VAZI MOZIKIREN

முதலில் புதினம் தமிழ் நாதம் தமிழ்நேசன் ஆகிய இணைங்களை அச்சுறுத்தி நிறுத்திய ஊடக இல்லத்தினதும் அதனால் வெளியடப்படும் ஈழமுரசு சங்கதி பதிவு ஆகிய இணையங்களின் அடாவடித் தனங்களை நிறுத்துங்கள்.

இதற்கு காரணமானவர்களின் பதில்கள், ... காத்தோடு ...! புதினம், தமிழ்நாதத்தை முடக்கியது போல்தான் யாழ்களத்தையும் ......???? ...... துணிந்து எழுதுங்கள்! ... உண்மையாக எழுதுங்கள்!! ... யாருக்கும் பயப்படத்தேவையில்லை!!!!

.... "நெற்றிக்கண்ணை திறப்பினும் ......." ..... அஞ்ச வேண்டாம்! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகம்,தேசியம் எல்லாம் கிலோ என்ன விலை சரவணா? இல்லை இதெல்லாம் குறித்த சில ஊடகங்களுக்கு மட்டும் குத்தகைக்கு குடுத்தாச்சோ????? மச்சான் சொன்னது போல எல்லாரும் குற்றம் சொல்ல முதல் அவரவர் முகத்தை கண்ணாடியில் பாருங்கோ (சத்தியமா நான் பார்த்திட்டு தான் எழுதிறேன்.. இதுக்காக கொஞ்சம் மேக்கப் வேறை போட்டிருக்கேன்)

யாழ்கருத்துக்களத்தின் விதிமுறைகளைப் படித்திருந்தால் இப்படி யாழ் இணையம் மீது சேறு பூச வேண்டிய எந்த தேவையும் இருக்காது.. யாழில் எழுதும் கருத்துக்களுக்கு கருத்து எழுதும் நபர்களே பொறுப்பாளிகளே தவிர யாழ்நிர்வாகமோ,யாழ் இணையமோ அல்ல.. அப்படியிருக்க இது குறித்த சம்பந்தப்பட்ட நபர்கள் தான் பதிலளிக்க வேண்டுமே தவிர யாழ் நிர்வாகிகள் அல்ல.

ஏற்கனவே ஆதாரமில்லாத இணைப்பு என்பதனால் இந்த திரி நீக்கப்பட்டுள்ளதையும் சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்தல் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இயங்கு சக்திகளுக்கு கொள்ளி வைத்தபடி இலக்குப்பற்றிக் கதைக்கும் கோமாளித்தனங்களை இப்போது நாளாந்த வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிற அவலம் மிகுந்த காலப்பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிற சாபம் நமக்கு இப்போது. வழி காட்டும் சக்திகளே வலி கூட்டும் பாரிய இயங்கு நிலைக்கு உட்பட்டுப் போனது....???

யாழ்க்கருத்துக்களம் பலரை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வழிவகுக்கிறது ஏதேச்சையாக ஒருவருடன் ஏற்படும் வாதவிவாதங்கள் மறுக்கப்படும் அல்லது மறைக்கப்படும் உண்மைகளை உணர வைக்கிறது. நன்றோ, தீதோ இங்கு கருத்தெழுதும் நண்பர்கள், தண்ணீரில் கலந்த பாலை அன்னப்பறவை எப்படி பிரித்துணர்ந்து பருகுகிறதோ அவ்வண்ணம் தத்தம் எண்ணங்களின் சரி பிழைகளை, நியாய, அநியாயங்களை பகுத்தாய்ந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்துக்களமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்து, நம்மவர்கள் சிங்களத்திற்கும், உலகத்திற்கும் காட்ட வேண்டிய ராஜ தந்திர நகர்வுகளை நம்மில் காட்டுவதில் கில்லாடிகள். இந்த வரிகளை ஏன் இங்கு பயன் படுத்துகிறேன் என்று பலருக்கு புரியாது ஆனால் புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி

Edited by valvaizagara

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், யாழ் களம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்க, நீதியான கருத்துக்களை நிலைநாட்ட, இனப்படுகொலையாளர்களை - போர்க்குற்றவாளிகளை வெளிக்கொணர உதவும் ஒரு களமாகவும் இருக்கிறது. இனப்படுகொலையாளர்களுக்கும் - போர்க்குற்றவாளிகளுக்கும், அவர்களது காவடிகளுக்கும் வேண்டுமானால் யாழ் களம் அச்சத்தைக் கொடுக்கலாம்.

அங்கு இங்கு செய்திகளை திருடி வெளியிட்டு, இடையிடையே போலிச் செய்திகளையும் வெளியிட்டு தமிழரை குழப்பி இழி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் யாழ் களம், அதில் எழுதப்படும் karuththukkal அச்சத்தைக் கொடுக்கலாம்.

யாழ் களத்தில் உறவுகளுடன் நாம் கருத்து ரீதியாக மோதிக்கொண்டாலும், நாம் ஒரு குடும்பத்தினர். எம்மவர் எவரையும் (அது DAM ஆக இருந்தாலும், சுமங்கலாவாக இருந்தாலும் சரி) மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மேலும் யாழ்களம் போல் கருத்துக்களை சுதந்திரமாக (சில வெட்டுதல் கொத்துதல் எமக்கு பிட்டிக்கவில்லை எனினும்) எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட தமிழ் களங்கள் வேறில்லை எனலாம். யாழ் களத்தை நடத்தும் அனைவரையும் (தொடங்கியவர்கள், பொறுப்பாளர்கள்) எவரையும் மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தேவைப்பட்டால், சர்வதேச மன்றில் போலிகளின் முகத்திரைகளை கிழிக்க, அவர்களின் பயங்காரவாத பின்னணிகளை வெளிப்படுத்த என சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்னிக்க மாட்டோம்.

யாழ் கள உறவுகளை மிரட்டினால்... நடக்கிறது வேற......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், யாழ் களம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்க, நீதியான கருத்துக்களை நிலைநாட்ட, இனப்படுகொலையாளர்களை - போர்க்குற்றவாளிகளை வெளிக்கொணர உதவும் ஒரு களமாகவும் இருக்கிறது. இனப்படுகொலையாளர்களுக்கும் - போர்க்குற்றவாளிகளுக்கும், அவர்களது காவடிகளுக்கும் வேண்டுமானால் யாழ் களம் அச்சத்தைக் கொடுக்கலாம்.

அங்கு இங்கு செய்திகளை திருடி வெளியிட்டு, இடையிடையே போலிச் செய்திகளையும் வெளியிட்டு தமிழரை குழப்பி இழி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் யாழ் களம், அதில் எழுதப்படும் karuththukkal அச்சத்தைக் கொடுக்கலாம்.

யாழ் களத்தில் உறவுகளுடன் நாம் கருத்து ரீதியாக மோதிக்கொண்டாலும், நாம் ஒரு குடும்பத்தினர். எம்மவர் எவரையும் (அது DAM ஆக இருந்தாலும், சுமங்கலாவாக இருந்தாலும் சரி) மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

மேலும் யாழ்களம் போல் கருத்துக்களை சுதந்திரமாக (சில வெட்டுதல் கொத்துதல் எமக்கு பிட்டிக்கவில்லை எனினும்) எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கும், நன்கு வடிவமைக்கப்பட்ட தமிழ் களங்கள் வேறில்லை எனலாம். யாழ் களத்தை நடத்தும் அனைவரையும் (தொடங்கியவர்கள், பொறுப்பாளர்கள்) எவரையும் மிரட்டுவதையோ, எச்சரிப்பதையோ, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைப்பதையோ எம்மால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தேவைப்பட்டால், சர்வதேச மன்றில் போலிகளின் முகத்திரைகளை கிழிக்க, அவர்களின் பயங்காரவாத பின்னணிகளை வெளிப்படுத்த என சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் பின்னிக்க மாட்டோம்.

யாழ் களத்தை யாராலும் முடக்க முடியாது, அதற்காக வதந்திகளை பரப்பு வோருக்கு ஆதர தரலாமா????

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஈழம்நியூஸோ? ஆக்களப் பாரன் வந்திட்டினம், அவையின்ட மண்டையும் ஆக்களும்!

முந்தநாள் பெஞ்ச மழையில நேற்று முளைச்ச காளான்கள், நாய் கலைச்சா ஒழுங்க ஓடித்தப்பத் தெரியாமலுக்கு கடிவாங்கிக்கொண்டு "அய்யோ! அம்மா!" எண்டு கத்திக் குழறிக்கொண்டு ஓடினதுகள் எல்லாம் இப்ப இங்கவந்து நிண்டு வெருட்டுதுகள்.

உந்தப் பாச்சா எல்லாம் இங்க பலிக்காது சரியோ!

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ் இணையம் சுமங்களாவை சாட்டு வைத்து புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே இதை நோக்க வேண்டி இருக்கிறது.

சிறீலங்கா அரசும் இந்திய அரசும் தமக்கு எதிராக இணையத்தளங்களில் பெரும் பிரச்சாரத்தை புலிகளின் பினாமிகள் நடத்தி வருவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில்.. கோத்தபாய வெளிநாட்டுப் புலிகளை கட்டுப்படுத்தப் போவதாக புலம்பெயர் தமிழ் மக்களின் குரலை ஒடுக்க முனைந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான எச்சரிக்கைகள் விடப்படுவது பலமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இணையத்தள சட்டவிதிகளுக்கமைய யாழ் இணையம் செயற்படும் போது அதன் மீது வெறுப்பை.. எச்சரிக்கையை உமிழ்வது என்பது கருத்தாளர்களை அச்சுறுத்தி கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகவே கருத வேண்டி இருக்கிறது.

சுமங்களா தனிநபர் ஒருவரின் உரிமையை பறிக்கும் வகையில் இங்கு கருத்து வெளியிட்டிருப்பின்.. முதலில் அக்கருத்தை நீக்கச் சொல்லி யாழிடம் முறைப்பாடு செய்யப்பட வேண்டுமே தவிர எவன் எவள் எங்கிருந்து கருத்தெழுதுகிறார் என்ற புலனாய்வு வேலை அவசியமில்லை. யாழ் களம் கருத்தாளர்களுக்கு இணையத்தள விதிக்கமைய உறுதி அளித்துள்ளபடி அவர்களின் தனிப்பட்ட விபரங்களை அவர்களின் விருப்புக்குமாறாக வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அநாவசியமான அச்சுறுத்தல்.. எச்சரிக்கைகளை விடுப்பதை நிறுத்தி.. சம்பந்தப்பட்டவர்கள் உண்மையில் ஊடகவியலாளர்களாக இருந்தால் அதற்குரிய முறையில் நடந்து கொள்ளும் பட்சத்தில் சுமங்களா போன்றவர்கள் தப்புச் செய்திருப்பின் அந்தத் தவறுகள் திருத்தப்படும். மற்றும்படி பொலிஸு.. கிளிஸ் என்று பயங்காட்டும் வேலைகளை கைவிடுவது நன்று.

பேஸ் புக் போன்ற சமூகத்தளங்களில் கூட சுமங்களா தான் இட்ட செய்தியை இடலாம். இவர்கள் என்ன வெட்டியா புடுங்குவார்கள்..???! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய ஊடகங்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் - எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பில் முறைப்பாடு

தமிழ் தேசிய ஊடகங்கள் மற்றும் அதன் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள்இ கொலை மிரட்டல்கள்இ படுகொலையை தூண்டுதல்இ பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ போன்ற தளங்கள் இறங்கியுள்ளமை தொடர்பில் பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பில் முறைப்பாடு ஒன்று கடந்த 3ம் திகதி வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ் இணையம் மற்றும் மறுஆய்வு இணைய வலைப்பூ தளங்கள் அண்மைக்காலமாக தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருவது தொடர்பில் தேசிய ஊடகங்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் குற்றவியல் பிரிவில் ஊடக இல்ல நிர்வாகத்தினர் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன்இ பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பிலும் இதுதொடர்பான முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தமைஇ அவதூறு பரப்பியமைஇ பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் இந்த இணையங்களின் நிர்வாகம் மீது முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று பிரான்ஸ் இல் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசிய ஊடகவியலாளர்கள் அங்கு தமது முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன்இ பிரான்ஸ் நாட்டு காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரதி ஒன்றினையும் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ள இந்த பேரவலம் குறித்த தகவல்களை விபரமாக கேட்டறிந்த எல்லைகள் அற்ற ஊடகவிலாளர்கள் அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் திரு வின்சன் புரொசெல் (ஆச. ஏinஉநவெ டீசழளளநட) இது குறித்து தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்இ ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்புக்களுக்கும் இது குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு தற்போது ஈ மெயிலில் வந்த தகவல் ஒன்று:-

post-2820-12755968012175_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருஷ் , இதயச்சந்திரன் போன்றவர்களுக்கு ஏனிந்த வேலை ? அவர்களும் உயரமானவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனரா ?

என்ன விலை கொடுத்தாலும் யாழ் இணையதளத்தினை மூடி விடாதீங்கோ !!! புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்க்கும் இடம் இதுதான். இதையும் மூடி விட்டால் தமிழ் கதிர், பதிவு, சங்கதி போன்ற இணையதளங்களையே மக்கள் பார்ப்பார்கள் அவர்கள் சொல்லுவதையே நம்புவார்கள் எண்டு அண்ணார்ந்து பார்க்கவேண்டிய நபர்கள் நினைக்கிறார்கள் போலும் ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

எத்தனையோ ஊடகவியலாளர்களை கொன்று புதைத்த போது கூட முறைப்பாடுகளை செய்யாதவர்கள்.. யாழின் மீது கொலை குற்ற முறைபாடு போட்டிட்டாங்கடோ..??! எனி யாழில் கருத்து எழுதுவது பயங்கரவாதத்திற்கு உதவும் செயலாக நோக்கப்பட்டு கோத்தபாயவின் கொலைக்கரத்தில் சிக்க வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கிறாங்களோய்..! :wub: :wub:

ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

எத்தனையோ ஊடகவியலாளர்களை கொன்று புதைத்த போது கூட முறைப்பாடுகளை செய்யாதவர்கள்.. யாழின் மீது கொலை குற்ற முறைபாடு போட்டிட்டாங்கடோ..??! எனி யாழில் கருத்து எழுதுவது பயங்கரவாதத்திற்கு உதவும் செயலாக நோக்கப்பட்டு கோத்தபாயவின் கொலைக்கரத்தில் சிக்க வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கிறாங்களோய்..! :wub: :wub:

:lol::D :D :D :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணன்.. இணைய தளவிதி முறைகளுக்கு உட்பட்டு முதலில் அந்தத்த இணையத்தளங்களுக்கு அறிவித்த பின்னர் அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தான் முறைப்பாடுகளை செய்ய முடியும்.

இப்படியான பல அச்சுறுத்தல்களை கூகிள்.. பேஸ் புக்.. யு ரியுப்..போன்ற பிரபலிய தளங்களே சந்தித்துள்ள நிலையில்.. யாழ் களம்..????!

பாவம் அப்பாவி தமிழ் சனம். இதைக் கண்டிட்டு.. யாழை விட்டு ஓடினாலும் ஓடிடுங்கள். பயங்கரவாத தடை சட்டம் யாழில் உள்ளவங்க மீதும் பாய்ச்சிடப் போகுதென்று..! :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரியாது நெடுக்ஸ்

எனக்கு வந்த ஈ மெயிலை இங்கு இணைத்தேன்

ஆனால் ஆகா.. எங்கையோ யாரோ ஒருவர் எழுதிய கருத்திற்கு பிரான்ஸ் பொலிஸ் மற்றும் எல்லைகளற்ற ஊடக அமைப்பில் முறைபாடா.??! இப்ப இப்படியான முறைபாடுகளையும் எடுக்கிறாய்ங்களா.

தங்களது இந்த கேள்விக்கு எனது பதில்

ஏதோ ஒரு காரணத்துக்காக யாழுக்கு இவர்கள் பயப்படுகிறார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.