Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிய வாழ்க்கை -மனம் திறந்து பேசிய பிரபாகரன்!

வேலுப்பிள்ளை பிரபாகரன். பூமியின் பரப்பிலெல்லாம் தமிழின விதை விழக் காரணமானவர். இணைய வயல்களில் தமிழும் கதிர் விட்டு உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாய் ஒளி வீச மூல விசையாயிருந்தவர். வள்ளுவப் பெருமானார் சொன்ன வீரம், மானம், நடத்தை, தெளிவு நான்கிற்கும் முதல் எடுத்துக்காட்டாய் நின்றவர். "கூலிகள்' என்று உலகால் அறியப்பட்ட தமிழ் இனத்திற்கு வீரம் மிக்கவர்கள் என்ற வீரியப் பார்வை தந்தவர்.

காலம் செய்த சதியால் மகத்தான ஈழ விடுதலைப் போராட்டம் மீது ""பயங்கரவாதம்'' என்ற சாம்பற் கரித்துகள் படிந்து விட்டது. ஆனால் சிங்களப் பேரினவாதம் இதுவரை காலம் நயவஞ்சகமாய் மறைத்து நின்ற இனவெறிப் பயங்கரவாதத்தின் கோரப்பற்களை உலகத்தமிழர்கள் வெற்றிகரமாய் வெளிப்படுத்தும் நாள் வரும். அந்நாளில் நாம் நினைத்துப் பார்க்காத உயரங்களுக்கு தமிழினத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு மனிதன் கொண்டு சென்று நிறுத்தியிருப்பதை தமிழினம் உணரும். அந்த மாமனிதருடனான நேர்காணலின் நிறைவுத் துளிகள் இவ்விதழில் பதிவாகிறது.

இயல்பான மனிதராய், எளிமையின் தரிசனமாய், வேடங்கள் ஏதுமின்றி தன்னை, தன் நம்பிக்கைகளை, தன் சின்னச் சின்ன ரசனைகளை அவர் வெளிப்படுத்திய நேர்காணலின் அந்நிறைவுக் கணங்களை என்னால் மறக்கவே முடியாது.

ஜெகத்: பல்வேறு தருணங்களில் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியிருக்கிறீர்கள். இறை யருள் உங்களை தமிழ் இனத்திற்காய் பாதுகாத்து வருகிறதெனச் சொல்ல லாமா?

பிரபாகரன்: (குறும்புப் பார்வையொன்று தருகிறார்) "இயற்கை' என்னைக் காத்ததென்று வைத்துக் கொள்ளலாம்.

ஜெகத்: கலப்புத் திருமணத்தை இயக்கத்திற்குள் ஊக்குவிக்கிறீர்களா?

பிரபாகரன்: இயக்கத்திற்குள் யார் என்ன சாதியென்று பொதுவாக ஒருவருக்கும் தெரியாது. அதைப்பற்றி நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. திருமணத்தையே ஒரு பெரிய விஷயமாக நாங்கள் பேசுவ தில்லை. எங்களைப் பொறுத்தவரை ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ முடி வெடுக்கிற சாதாரணமான விஷயம்தான் திருமணம்.

ஜெகத்: இயக்கத்திற்குள் காதல் திருமணங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரபாகரன்: ஓம். கூடா ஒழுக்கம் கூடாது. ஆனா மனசுக்கு ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிச் சிருந்து சேர்த்து வச் சிடுவோம். இஞ்செ முக்கால்வாசி கலியாணங்கள் அப்படியும் இப்படியும்தான்.

ஜெகத்: உங்களின் பொன்மொழிகளாக இன்று நூற்றுக்கணக்கில் பதிவாகியுள்ளன. அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

பிரபாகரன்: பொன்மொழிகளெல்லாம் சொல்ல நானொன்றும் பெரிய மேதையல்ல. போராட்ட இயக்கத்தின் தலைவரென்ற வகையில் நான் சொல்பவை பெரிதாக கவனம் பெற்றுவிடுகிறது. பின்னெ நீங்க கேட்டதனாலெ எனக்கு உடனே ஞாபகம் வர்ற ஒன்றை சொல்லுறென்: ""இயற்கை எனது ஆசிரியன்-வரலாறு எனது வழிகாட்டி''.

ஜெகத்: பொதுவாக யாரும் பொய் சொல்வது உங்களுக்கு துப்புரவாய் பிடிக் காது எனச் சொல்கிறார்கள். எனவே மழுப்பாமல் உண் மையை சொல்லுங்கள்... விடுதலைப்புலிகள் இயக்கத் தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்ன?

பிரபாகரன்: (குறும்பாகச் சிரிக் கிறார்) சுயநலத்திற்காக பொய் பேசக்கூடாது. தேசத்தின், இனத்தின் நலன் கருதி சில பொய்களை சொல்வதில் தப்பில்லை.

ஜெகத்: உங்களுக்கு கடுமையான கோபம் வருவிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

பிரபாகரன்: என்ட இனத்தின்ட எதிரியா இருந்து பாருங்கோ... அப்ப தெரியும் பிரபாகரன் யாரென்டு...

ஜெகத்: உங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகள்...

பிரபாகரன்: புத்தகங்கள் வாசிப்பது, நல்ல திரைப்படங்கள் பார்ப்பது... மற்றபடி இசை, நாட்டியத்திலும் எனக்கு நல்ல ஈடுபாடு உண்டு.

ஜெகத்: பார்த்த திரைப்படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

பிரபாகரன்: இதஆயஊ ஐஊஆதப என்ற ஆங்கிலத் திரைப்படம்.

ஜெகத்: போராளிகள் திரைப்படம் பார்க்க அனுமதி உண்டா?

பிரபாகரன்: வரலாறு, வீரம், அறிவியல் சார்ந்த ஆங்கிலத் திரைப்படங்களை தமிழ்ப்படுத்தி போராளிகளுக்கு நாங்கள் காண்பிக்கிறோம். (சிரித்துக் கொண்டே) படத்திலெ "ஒரு மாதிரியா' வரக்கூடிய பெட்டையளுக்கு எங்கட ஊடகத் தொழில் நுட்பப் பிரிவினர் ""கிராபிக்ஸ்'' கொஞ்சம் உடுப்பு (உதஊநந) போட்டு விடுவினும்!

ஜெகத்: தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதில்லையா...?

பிரபாகரன்: முன்பு நிறைய பார்ப்பேன். எம்.ஜி.ஆர். படங்கள் விரும்பி பார்ப்பேன். பராசக்தி பலமுறை பார்த்திருக்கிறேன். இப்ப வர்ற தமிழ்ப்படங்கள் எனக்கு சரிப்பட்டு வரெயிலெ. போராளியளுக்கும் தமிழ்ப்படங் கள் அதிகமா காட்டுறதில்லெ. இன்றைக்கு வரும் தமிழ்ப்படங்கள் பார்த்தினுமென்டா அவையள் குழம்பிப் போவினும்!

ஜெகத்: எத்தகைய புத்தகங்கள் விரும்பி படிக்கிறீர்கள்?

பிரபாகரன்: சுதந்திரப் போராட்ட வரலாறுகளை, போராட்ட வீரர்களின் வரலாறுகளை நான் மிகவும் விரும்பிப் படிப்பதுண்டு. மற்றபடி பொதுவாக எந்த புத்தகமென்றாலும், கையில் கிடைத்தால் நேரமிருந்தால் ஆசையோடு படிப்பேன்.

ஜெகத்: அப்படி பிடித்த சில புத்தகங்கள்...?

பிரபாகரன்: சுதந்திரப் போராட்ட வரலாற்றை பின்னணியாகக் கொண்டு ரா.சு.நல்லபெருமாள் எழுதிய "கல்லுக்குள் ஈரம்' நான் மிகவும் விரும்பிப் படித்த புத்தகங்களுள் ஒன்று. இப்போது கூட செசினீய மக்களின் வரலாற்றைப் படித்தேன். பிடித்திருந்தது. அந்தக் காலத்தில் ஃபிடெல் காஸ்ட்ரோ, செகுவேரா வரலாறுகள் என்னை ஈர்த்தவை.

ஜெகத்: பிடித்த விளையாட்டுகள்..

பிரபாகரன்: கால்பந்து மிகவும் பிடிக்கும். இப்ப ஷட்டில் காக். இப்பவும் தளபதிமாரோட விளையாடறதுண்டு. சில நேரங்களில் போர்க்களம் மாதிரித்தான் இருக்கும் (சிரிக்கிறார்).

ஜெகத்: மூத்த தளபதிமாரோடு ஏதேனும் கோபமென்றால் எப்படி வெளிப்படுத்துவீர்கள்? சத்தம் போட்டு திட்டுவீர்களா...?

பிரபாகரன்: எனக்கு ஒருவரோடு கோபமென்றால் அவரோடு கொஞ்ச நாள் பேசாமல் இருப்பேன். ஆனால் யாரோடும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் என்னால் பேசாமல் இருக்க முடியாது.

ஜெகத்: மனதிற்கு சஞ்சலமாயும், கவலையாகவும் இருக்கும்போது நீங்கள் நாடிச் செல்வது யாரை?

பிரபாகரன்: செஞ்சோலைப் பிள்ளை களை. அந்தக் குழந்தைகளோடு இருக்கும் போது மனம் அமைதியாகும். கடுமையான காலங்களில் அங்கு போய் வந்தால் எனக்கு மன அமைதி கிடைக்கும்.

ஜெகத்: சிகரெட், மது போன்றவை மாணவ வயதில் எப்படியிருக்கிறதென்று பார்ப்போமென்றாவது பரிசோதித்துப் பார்த்ததுண்டா...?

பிரபாகரன்: இல்லெ.

ஜெகத்: மாணவப் பருவத்துக்கே இயல்பான காதல் ஈர்ப்பு ஏதேனும் உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா...?

பிரபாகரன்: (குறும்பாகச் சிரிக் கிறார்) ஃபாதருக்கு ஏன் இந்த அலுவல்...? நல்லா இருக்கிற குடும்பத்திலெ குழப்பம் வருவிக்கலாமென்டு யோசனையோ? (சிரிக்கிறார்)

ஜெகத்: ஒருநாள் எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள்?

பிரபாகரன்: இவ்வளவு நேரம் என்றெல் லாம் இல்லை. எங்கள் வாழ்க்கையே உழைப்புதான்.

ஜெகத்: நீங்கள் அருமையான சமையற்காரர் என்று சொல்கிறார்களே... இப்போதும் சமைப்ப துண்டா...

பிரபாகரன்: ஒரு காலத்தில் நண்பர்கள் ஒன்றாக சந்தோஷமாய் இருக்கும்போது நான் சமைப்பேன். இப்போதும் அவசியம் ஏற்பட்டால் சமைப்பேன்.

ஜெகத்: அதுபோல நீங்கள் ஒரு சாப்பாட்டுப் பிரியராமே...?

பிரபாகரன்: அதுவும் சொல்லிட்டினுமா...? என்ட வண்டிய (கொஞ்சம் தொப்பை விழுந்த வயிறைக் காட்டி) பார்த்தா தெரியுதுதானே. ஓம், நல்ல விஷயங்களை விரும்பிச் சாப்பிடற பழக்கம் உண்டுதான். காட்டுப் பன்றி யென்டா இனியில்லையென்ட விருப்பம். ஆனால் இப்ப டாக்டர் கட்டுப்பாடுகள் விதிச்சிருக்கார்.

ஜெகத்: ஏன்தான் இந்தப் போராட்டத்திற்கு வந்தோ மென்ற மனம் சலித்ததுண்டா. இதற்கெல்லாம் வராமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கு மேயென எண்ணியதுண்டா?

பிரபாகரன்: இந்தப் போராட்ட வாழ்க்கை நான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்று. என் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங் களைப் பார்த்து அதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று தான் நான் புறப்பட்டேன். இதில் எனக்கு எவ்விதமான குழப்பமு மில்லை. ஐயமோ, விரக்தியோ, சஞ்சலமோ ஒருபோதும் எனக்குள் எழுந்த தில்லை.

ஜெகத்: அதிகம் மனவேதனை தருவது?

பிரபாகரன்: துரோகங்கள். எனினும் கடினமானதொரு வாழ்க்கைக்கு எங்களையே பழக்கிக் கொண்டுவிட்டதால், துரோகங்களோடும் வாழப் பழகிவிட்டோம்.

ஜெகத்: பொதுவாக யாரோடு அதிகம் பழகுவது உங்களுக்குப் பிடிக்காது...?

பிரபாகரன்: பிறருடைய மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் பொறுக்க முடியாமல் எப்போதும் பொருமி விஷமித்துக் கொண்டிருக்கிற குறும்பு குணம் கொண்டவர்களை எனக்குப் பிடிக்காது.

ஜெகத்: முதுமைக் காலத்தை எவ்வாறு செலவிட எண்ணியுள்ளீர்கள்?

பிரபாகரன்: இளமைக் காலத்து இனிய நினைவு களோடு என் முதுமையை வாழ விரும்புகிறேன். முது மையிலும் இளமைத் துடிப்போடு இருக்க வேண்டு மென்பதுதான் என் ஆசை.

ஜெகத்: உங்கள் காலத்தி லேயே ஈழம் மலருமென்ற நம் பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பிரபாகரன்: உங்களது கேள்வியின் கோணத்தில் நான் இயங்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்டமென்பது நீண்ட பயனையும், அதன் இறுதி வெற்றி எங்களது ஆற்றல்களை மட்டுமே சார்ந்ததல்ல, பல்வேறு புறச் சூழல்களையும் சார்ந்தது. என் னைப் பொறுத்தவரை எனக்குப் பின்னரும் ஐம்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒழுங்குகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

ஜெகத்: ஈழம் நிச்சயம் மலருமா?

பிரபாகரன்: நிச்சயம் மலரும். சிங்கள-பௌத்த பேரின வாதம் எக்காலத்திலும் தமிழர்களை நிம்மதியாக வாழ விடப் போவதில்லை. ஈழத்திற் கான தேவை காலத்தின் கட்டா யம் ஆவதை ஒருநாள் சர்வதேச சமுதாயம் ஏற்றுக் கொள்ளும்.

ஜெகத்: ஈழம் மலர்ந்தால் அதன் நிரந்தர தலைவராய் நீங்கள் இருப்பீர்களா? இல்லை...

பிரபாகரன்: இளைய தலைமுறையினரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இப்போராட்டத்தில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த போ ராளிகள் மற்றும் பொது மக்களின் மேம்பாட்டிற்காக என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்பது தான் எனது விருப்பம், ஆசை.

நன்றி மனிதன் இணையம்

பிரபாகரன்: இதஆயஊ ஐஊஆதப என்ற ஆங்கிலத் திரைப்படம்.

வெட்டி ஒட்டும்போது இவற்றை கவனிப்பதில்லையா? :wub::lol::lol:

கஷ்டமாக இருக்கிறது.. ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது..? எங்களது தவறுகள் தான் காரணமா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத்: உங்கள் காலத்தி லேயே ஈழம் மலருமென்ற நம் பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பிரபாகரன்: உங்களது கேள்வியின் கோணத்தில் நான் இயங்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்டமென்பது நீண்ட பயனையும், அதன் இறுதி வெற்றி எங்களது ஆற்றல்களை மட்டுமே சார்ந்ததல்ல, பல்வேறு புறச் சூழல்களையும் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை எனக்குப் பின்னரும் ஐம்பது ஆண்டு களுக்கு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒழுங்குகளை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

ஜெகத்: ஈழம் மலர்ந்தால் அதன் நிரந்தர தலைவராய் நீங்கள் இருப்பீர்களா? இல்லை...

பிரபாகரன்: இளைய தலைமுறையினரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இப்போராட்டத்தில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த போ ராளிகள் மற்றும் பொது மக்களின் மேம்பாட்டிற்காக என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்பது தான் எனது விருப்பம், ஆசை.

தலைவர் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார். மக்கள் தான் பூரணத்துவம் இன்றி இருக்கின்றனர். தலைவர் எதிர்பார்த்த வகைக்கு மக்கள் அவரது கொள்கையோடு இருப்பின் நிச்சயம் தமிழீழம் மலரும் என்பதைச் சொல்லலாம். ஆனால் மக்களோ...??! :lol: :lol: :wub:

தலைவன் சரியாகத்தான் இருந்திருக்கின்றார். ஆனால் மக்களோ?

மக்களை புரிந்து கொள்ளாதவன் தலைவன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை புரிந்து கொள்ளாதவன் தலைவன் இல்லை என்றால் மக்கள் ஒவ்வொருவரும் தலைவராக இருந்தால் தான் நீங்கள் நினைப்பது போல மக்கள் தலைவரை உருவாக்கலாம்.

ஜனநாயகத்தின் படி கூட 50% வாக்குகள் பெற்றவன் அல்லது அதைவிட குறைவாக ஆனால் பெரும்பான்மை பெற்றவன் தலைவன் ஆகிறான்.

உங்களைப் போல பேடிகள் மக்களாக உள்ள போது தலைவனை எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் வரை காத்திருக்க முடியாது. காலமும் வரலாறும் அதற்கு இடமளிக்காது. பெரும்பான்மையான மக்களின் மனவோட்டம் அறிந்திருந்தால் போதும். அதை தேசிய தலைவர் கடைப்பிடித்தே உள்ளார். துரோகிகளை அவர் மக்கள் கூட்டமாகக் கருதவில்லை..! எவரும் கருத மாட்டார்கள்..! :wub:

Edited by nedukkalapoovan

உண்மையை சொல்பவன் துரோகியென்றால் அந்தப் பட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயார்.

ஜனநாயகம்? இந்த சொல்லை பாவிக்ககூட நீங்கள் அருகதையற்றவர்கள்.

உண்மையை சொல்பவன் துரோகியென்றால் அந்தப் பட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயார்.

ஜனநாயகம்? இந்த சொல்லை பாவிக்ககூட நீங்கள் அருகதையற்றவர்கள்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி யாரையும் திட்டலாம்... ஆனால் உங்களை பாத்து யாரும் கேள்வி கேட்டு போட கூடாது... கேட்டால் துரோகி என்கிறான் எனும் ஒப்பாரி...

ஜனநாயகம் எண்டால் உங்களை பார்த்து நானும் கேள்வியும் கருத்தும் சொல்ல தகுதி இருக்கு என்பது தெரியுமா...??

மற்றது உங்களின் கேடு கெட்ட ஜனநாயகம் யாருக்கு வேண்டும்...?? 20% மக்கள் வாக்கு போட்டு தெரிவு செய்தாலும் மிகுதி இருக்கும் 80 மக்களும் நீங்கள் சொல்வதை தான் கேட்க்க வேண்டும் எனும் போது...??

உண்மையை சொல்பவன் துரோகியென்றால் அந்தப் பட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயார்.

ஜனநாயகம்? இந்த சொல்லை பாவிக்ககூட நீங்கள் அருகதையற்றவர்கள்.

நாய் நடுக் கடலிலிம் நக்கி தான் குடிக்கும்.

நாய் எல்லை கல்லை கண்டாலும் பின்னங் கால் தான் தூக்கும் சிவலிங்கத்தை கண்டாலும் காலத்தான் தூக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்பவன் துரோகியென்றால் அந்தப் பட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயார்.

ஜனநாயகம்? இந்த சொல்லை பாவிக்ககூட நீங்கள் அருகதையற்றவர்கள்.

உங்கட ஜனநாயகம் பற்றியும் தெரியுமுங்கோ. ஒவ்வொருக்கா இந்தியன் ஆமியோட வருவியள்.. இல்ல சிறீலங்கன் ஆமியோட வருவியள்.. துவக்கக் காட்டுவியள்.. அடையாள அட்டையைப் பறிப்பியள்.. பிள்ளைகளைக் கடத்துவியள்.. வாக்குப் போடு என்று மிரட்டுவியள். வீடு வீடா கொள்ளை அடிப்பியள்.. போற இடத்தில வடிவான பெட்டையள் இருந்திட்டா.. கையப்பிடிச்சு இழுப்பியள்.. அப்புறம்.. உள்ள கொலை கொள்ளை எல்லாம் செய்து கொண்டு வெள்ளை வேட்டியோட பஜிரோவில பார்ளிமெண்டுக்கும் போவியள். கொடுக்கிற காசை அமுக்கி கனடாவில.. லண்டனில பிசா கடையும் போடுவியள்... புலித்துவேசம் எமது கொள்கை.. அதுவே எங்கள் இலட்சியம் ஜனநாயகம் மாற்றுக்கருத்து என்று கூலிகளோடு சேர்ந்து காட்டிக்கொடுப்பு ஆயுத அரசியல் செய்வியள்.. அதுக்கு ஜனநாயகம் என்று பெயர் சூட்டிக் கூவுவியள்..!

உங்களாலேயே ஜனநாயகத்தை உச்சரிக்க முடிகின்ற போது.. ஏன் மற்றவர்களால் முடியாது.

அடுத்தவர்.. அமிர்தலிங்கம் எண்டவர். அவர் தான் கொழும்பு சென்னை என்று உல்லாசமா வாழ்ந்து போட்டு.. சுருட்ட வேண்டியதை சுருட்டி தன்ர குடும்பத்தை வாழ வைச்சிட்டு.. செளகரியமா இருந்ததால கெதியா போய் சேர்ந்திட்டார். அவரை தலைவன் என்றவையும் இப்பவும் இருக்கினம். மங்கையர்கரசியார் மண்வாரிப் போட்டதால் தான் பேரழிவு என்று கதையளந்து அவரை கண்ணகிக்கு பக்கத்தில நிறுத்திறது தான் உங்களுக்கு ஜனநாயகம் பாருங்கோ. வந்திட்டாங்கையா.. எலும்பு பொறிக்கிக் கூட்டமெல்லாம்.. ஜனநாயகப் பாடம் எடுக்க எங்களுக்கு..! :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளை கூர்ந்து கவனித்துவிட்டு வேண்டுமானால் எனது கருத்துக்களை விமர்சியுங்கள்

வரலாறுகளை கூர்ந்து கவனித்துவிட்டு வேண்டுமானால் விமர்சியுங்கள்.

வாத்தியார்

.............................

ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்புகள் இதில் பேட்டியக எடுக்கப்பட்டுள்ளதைத்தான் நான் காண்கிர்றேன். உண்வுப் பழக்கம் எப்பொழுதும் தலைமைத்துவத்திற்குத் தடையக இருப்பதில்லை.

எதைச் சப்பிட்டாலும் தலைவரில் கொள்கை மாற்றம் ஏற்பட்டதில்லை. அதுதான் தலைமைப் பண்பு. அந்தப் பண்பில் காணப்பட்ட குறைகளை யராலும் விமர்சிக்க முடியாது. ஏனென்றால் இதற்கு முன்னோ, பின்னோ நாம் அறிந்திருக்கமாட்டோம். நம் வாழ்க்கைக் கல்த்தில் அப்படிப்பட்ட தலைமை தமிழருக்குக் கிடைக்க முடியாது என்றே எணுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய குப்பைகளை கிளருவதையும் ஆளை ஆள் குற்றம் சாட்டுவதையும் காட்டி கொடுபதையும் விட்டு விட்டு தினம் தினம் சிங்கள மிருகங்களால் வேட்டையாட பட்டுவரும் என் மக்களை காப்பாற்ற உருப்படியான நடவடிக்கைகள் ஏதாவது எடுக்க மாட்டீர்களா?

உங்களுக்குள் உள்ள பகைகளை மறந்து அல்லது ஒரு பக்கம் வைத்து விட்டு தமிழர் என்ற ஒரு நினைவை மனதில் வைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைள் எடுப்பவர்களுக்கு கை கொடுங்கள் அல்லது சேர்ந்து உருப்படியான வேலைகளை செய்யுங்கள். மேல் நாட்டவர்களை பார்த்து மனம் மாறி வன்மங்களை வைக்காமல் சுயநலத்தை விட்டு கொஞ்சமாவது எம் மக்களுக்காக அனுதாப படுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

SLA men are extorting money from resettled Tamils

Payments to the bank accounts of the resettled people have to go through SLA authorities in Vanni and the money extorted from people whose properties had been reserved for SLA passes easily into the hands of SLA men and it is said that millions of rupees had been paid in this manner in the last two weeks alone.

Meanwhile, within a week Tamil teenagers in Vanni have disappeared without trace.

An 18-year-old girl released through UNICCEF and living with her family in Vaddakkachchi in Ki’linochchi district has disappeared.

A 15-year-old student in Paranthan who had gone to the town to have his mobile phone charged too has disappeared.

Two more unconfirmed cases of disappearance are reported.

----------------------------------------------------------------------------------------------------------

SLA soldiers are raping Tamil women

SLA soldiers in the sentry posts at junctions collect particulars of the residences of women passing by and then in the nights go to their houses and sexually abuse them at gun point as their helpless husbands suffer the ordeal, the NGO worker said.

In some instances people in the area have got to together to chase the soldiers away and in one incident a soldier who had fallen into a well had been thoroughly beaten.

As the culture of Tamils binds them to keep this type of incidents to themselves only some cases leak out and according to them there have been many women sexually abused by SLA soldiers particularly in Ki’linochchi, Poonakari and Mallaavi areas in Vanni, the government officer said.

He expressed concern that he is helpless and frustrated as there are no authorities in Vanni to whom the victims can complain to about the harassment by SLA soldiers.

The absence of threatening enemy or war influences the idling soldiers to commit sexual abuses, a religious priest in Vanni said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31950

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாமனிதருடனான நேர்காணலின் நிறைவுத் துளிகள் இவ்விதழில் பதிவாகிறது.

இந்த நேர்காணல் எப்போது எடுக்கப்பட்டது? நேர்காணல் செய்தவர் தற்போது மகிந்தவுடன் கூட்டு என்று செய்தி வேறு வருகின்றது..

உண்மையை சொல்பவன் துரோகியென்றால் அந்தப் பட்டத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயார்.

ஜனநாயகம்? இந்த சொல்லை பாவிக்ககூட நீங்கள் அருகதையற்றவர்கள்.

இந்திய பிணம் தின்னி நாய்களின் ஜனநாயகம் நாம் நன்கு அறிந்தது தான். விரைவில் உலகமும் உணர்ந்துகொள்ளும்.

நீங்கள் கதைக்கும் ஜனநாயகம் மேலுள்ள ஜனநாயகம் போல இருக்காது தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.