Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளவையார் தமிழ் பாட்டியா.. பெளத்த கிழவியா ஆராயுறாங்களோய்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மூன்றாம் நாளான நேற்று ஐராவதம் மகாதேவன் பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது. இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது.

*இன்று பரணர் அரங்கில் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "சட்ட அமலாக்கத்தில் தமிழ் இலக்கியங்களின் பங்கு' எனும் தலைப்பில் பி.மோகன்தாஸ் உரையாற்றுகிறார் .

* இன்று சாத்தனார் அரங்கில் பாகீரதி தலைமையில் நடைபெறும் தமிழிசை அமர்வரங்கில், "நாடகம் வளர்த்த தமிழிசை' எனும் தலைப்பில் டி.கே.எஸ்.கலைவாணன் சொற்பொழிவாற்றுகிறார்.

* இன்று காக்கைபாடினியார் அரங்கில் பொன்னீலன் தலைமையில் நடைபெறும் படைப்பிலக்கியம் அமர்வரங்கில், "இரண்டாயிரங்களில் சிறுகதை உலகு அச்சமூட்டும் ஓர் ஆய்வுப் பார்வை' எனும் தலைப்பில் ஐஷ்வர்யன் உரையாற்றுகிறார்.

* இன்று அம்மூவனார் அரங்கில் நடராசன் தலைமையில் நடைபெறும் ஊடகத்தமிழ் அமர்வரங்கில், "தமிழக இதழ்களின் வரலாறு' எனும் தலைப்பில் என்.முத்துவிஜயன் கட்டுரை வாசிக்கிறார்.

* இன்று மாங்குடி மருதனார் அரங்கில் சி.சாமிநாதன் தலைமையில் நடைபெறும் சமூக அறிவியல் அமர்வரங்கில், "சுனாமியின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சினைகள்' எனும் தலைப்பில் க.கணேசராசா சொற்பொழிவாற்றுகிறார்.

* இன்று உருத்திரங்கண்ணனார் அரங்கில் மனோஜ் அண்ணாதுரை தலைமையில் நடைபெறும் ஆவணத் தமிழ் அமர்வரங்கில், "வரலாற்று ஆவணங்களின் பாதுகாப்பு' எனும் தலைப்பில் சுபாஷினி டிரிமெல் பேசுகிறார்.

* இன்று பிசிராந்தையார் அரங்கில் ஆளுடையபிள்ளை தலைமையில் நடைபெறும் தமிழும் உலகச் செம்மொழிகளும் அமர்வரங்கில், "செம்மொழியிலிருந்து இக்காலத் தமிழ் மொழி வளர்ந்த விதம்' எனும் தலைப்பில் வாசு ரெங்கநாதனும், "பரிதிமாற் கலைஞரின் செம்மொழித்துறை' எனும் தலைப்பில் வி.சு.கோவிந்தனும் கட்டுரை வாசிக்கின்றனர்.

* இன்று கம்பர் அரங்கில் ச.மோகன் தலைமையில் நடக்கும் அறிவியல் தமிழ் அமர்வரங்கில் ஜே.ஆர்.வி.எட்வர்ட் "கணிதமும் தமிழும்' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.

* இன்று பரணர் அரங்கில் ஊரன் அடிகள் தலைமையில் நடைபெறும் சமயமும் தமிழும் அமர்வரங்கில் "தமிழ்ச்செம்மொழிக்கு வள்ளலாரின் பங்களிப்பு' எனும் தலைப்பில் 'ஊரன் அடிகள் உரையாற்றுகிறார்.

* இன்று ஒளவை அரங்கில் செல்வரஞ்சிதம் சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெறும் திறனாய்வு அமர்வரங்கில், "ஒளவையார் - பௌத்தத் துறவியா?' எனும் தலைப்பில் ரெ.அரங்க மல்லிகா சொற்பொழிவாற்றுகிறார்.

* இன்று பூங்குன்றனார் அரங்கில் ச.செந்தில்நாதன் தலைமையில் நடைபெறும் படைப்பிலக்கியம் அமர்வரங்கில், "பிரதாப முதலியார் சரித்திரம் காவியத்திலிருந்து நாவலுக்கான பரிணாமத்தின் தொடக்கப்பள்ளி' எனும் தலைப்பில் பொன்னீலன் பேசுகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=34718

-----------------------

இப்படியே ஒளவையையும் பெளத்த கிழவி என்று நிறுவீட்டிங்கண்ணா.. அங்கால ராஜபக்ச கூட்டத்திற்கு.. பெளத்தத்தை தமிழருக்குள் விரிவு படுத்த வசதி செய்து கொடுத்ததாகவும் இருக்கும்... இந்திய இறையாண்மையை பலப்படுத்தியதாகவும் இருக்கும்.

பெளத்தமும் தமிழும் ஒன்றுக்குள்ள ஒன்று என்று காட்டினாத்தானே சிறீலங்கா இறையாண்மை இந்திய இறையாண்மைகள் பாதுகாக்கப்பட முடியும்.

உங்கட ஆய்வுக்கு என்ன ஆதாரங்களை கொட்டப் போறீங்கள்.. திருவிளையாடல் படத்தில் வரும் ஒளவைக்கிழவிக்கு உடுத்திய காவி உடை சிறீலங்காவில் புத்த பிக்குனிகள் உடுப்பதைப் போன்றிருக்கிறது என்பதையா..??! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆராயுற ஆக்களுக்கு பீய் .......

தோச்ச செருப்பாலை அடிக்க வேணும்.

-கறுப்பு கண்ணாடி-

ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம்

...

...

உங்கட ஆய்வுக்கு என்ன ஆதாரங்களை கொட்டப் போறீங்கள்.. திருவிளையாடல் படத்தில் வரும் ஒளவைக்கிழவிக்கு உடுத்திய காவி உடை சிறீலங்காவில் புத்த பிக்குனிகள் உடுப்பதைப் போன்றிருக்கிறது என்பதையா..??! :lol::D

:D :D :D

சொன்னாலும் ஆச்சரியப் பட இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

சொன்னாலும் ஆச்சரியப் பட இல்லை...

வீடியோ ஆதாரமும் வெளியிடப் போறாங்கள்.இதுதான் அந்த வீடியோ..! :D

Edited by nedukkalapoovan

வீடியோ ஆதாரமும் வெளியிடப் போறாங்கள்.இதுதான் அந்த வீடியோ..! :D

அவையாருக்குத் தான் இதில தலை முடி இருக்கே... :D

காவியுடையணிந்த நித்தியானந்தாவும், மொட்டையைத்து ஆமதுருக்களோட சேர்ந்ததாக ஒரு வதந்தி... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைகளில் ஏற்கனவே விநாயகரும், வடிவேலனும் உப தெய்வங்களாக வீற்ரிருக்கினம்!

இனி அவையைப் பாடிய அவ்வையார், அருணகிரி நாதர் என்று இழுக்க வேண்டியதுதான்! :lol:

தமிழினத்தைச் சீரழிக்கும் போலித் திராவிடர்களின் இன்னொரு முயற்சி இது.

ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம்

-------------------

இப்படியே ஒளவையையும் பெளத்த கிழவி என்று நிறுவீட்டிங்கண்ணா.. அங்கால ராஜபக்ச கூட்டத்திற்கு.. பெளத்தத்தை தமிழருக்குள் விரிவு படுத்த வசதி செய்து கொடுத்ததாகவும் இருக்கும்... இந்திய இறையாண்மையை பலப்படுத்தியதாகவும் இருக்கும்.

பெளத்தமும் தமிழும் ஒன்றுக்குள்ள ஒன்று என்று காட்டினாத்தானே சிறீலங்கா இறையாண்மை இந்திய இறையாண்மைகள் பாதுகாக்கப்பட முடியும்.

உங்கட ஆய்வுக்கு என்ன ஆதாரங்களை கொட்டப் போறீங்கள்.. திருவிளையாடல் படத்தில் வரும் ஒளவைக்கிழவிக்கு உடுத்திய காவி உடை சிறீலங்காவில் புத்த பிக்குனிகள் உடுப்பதைப் போன்றிருக்கிறது என்பதையா..??! :rolleyes::o

கஷ்டம்டா கடவுளே , இந்த கருமாந்திரம் புடிச்ச கரு நாய் மட்டும் சாகமடேங்குதே

காசுக்காக கக்குச கூட சாப்பிட்டு மத்தவங்களையும் சாப்பிட வைப்பன் , மாநாட்டுல முக்கிய நிகழ்ச்சி என்னன்னா தமிழா வளர்க்குறது சினிமாவா இல்ல டிவியா இவனுக குடும்பமே உக்காந்து கொண்டடாடுருதுக்கு ஒரு மாநாடு

தண்ட கருமாந்திரம் புடிச்ச பீடைக்ங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவைக்கே ஆப்பா?

காடு வா வா எண்டுது

நாடு போ பொ எண்டுது

இந்த நேரத்திலை ஔவையாருக்கு ஆப்பு வைச்சென்ன வைக்காட்டாத்தான் என்ன

கெதியாப் போய்ச் சேரட்டும்

வாத்தியார்

**********

"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏற்றி ஏற்றி தொழுவோம் யாமே"... எண்று ஒளவை படியது எப்படி...??? தொழுவது யாரையாவது பௌத்த தர்மம் எண்று நிறுவுவார்களோ...?? :):D

Edited by தயா

"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏற்றி ஏற்றி தொழுவோம் யாமே"... எண்று ஒளவை படியது எப்படி...??? தொழுவது யாரையாவது பௌத்த தர்மம் எண்று நிறுவுவார்களோ...?? :):D

தொழுவது இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் அல்லவா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வையார் பாழும் தெளிதேனும் பருப்பும் என்று வேற எழுதி இருக்கிறார், இது கொஞ்சம் யோசிக்க வேண்டியவிடயம். சிங்களவர்களின் கிரிபத் என்று சொல்லபடும் பாற்சோறு செய்ய தேவையான பொருட்களை அவ்வையார் சிலேடையாக கூறினாரா என்று ஆராய்ந்தால், அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று கண்டு பிடித்திடலாம், :):D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளவையார் தமிழ் பாட்டியா.. பெளத்த கிழவியா ஆராயுறாங்களோய்.

பன்னாடையளுக்கு அலசி ஆராய வேறையொண்டும் கிடைகேல்லையே? :)

இப்ப உதாரணத்துக்கு....

கலைஞர் கட்டியிருக்கும் கோமணம் கனிமொழியின் தாய் கொடுத்ததா?

அல்லது

பிட்சா புகழ் சோனியா கொடுத்ததா?

எண்டு ஆராஞ்சிருக்கலாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிட ஆதிக்கம் தமிழின் பெருமைகளை சிறுகச் சிறுக அழித்து தனது ஆரிய விசுவாசத்தை வெளிப்படுத்த சாதிக்க வேண்டியவற்றை சாதிக்கவே இந்தச் செம்மொழி மாநாட்டை தனது கட்சி குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.. முத்துவேல் கருணாநிதி.

அவருக்கு வால் பிடிக்கப் போன.. சிவத்தும்பி.. சொல்லுறார்.. தான் இலங்கையராம்.. ஈழம் என்பது சிங்களமாம். ஆனால் இலங்கை என்பது தூய தமிழாம். இலங்கைத் தமிழர் என்றட்டுமாம்.. அப்பதான் அப்பே லங்காவ என்று.. சொல்ல பிற்காலத்தில் அழகா இருக்குமாம்.

சிவத்தும்பி... தமிழ் மாநாட்டுக்குப் போனவராம்.. ஆனால் முள்வேலிக்குள் தமிழர்கள் எழுதும் துயரம் பேச தனக்கு விருப்பமில்லையாம். ஆனால் கூடிக்களித்து புராதண இதிகாச போர்க்குணம்.. தமிழரின் வீரம்.. அரசியல் பற்றி பேசிச்சினமாம்..!

வாலி செம்மொழி மாநாட்டு மேடையில் தமிழாஞ்சலி செய்தாரோ தெரியா.. குஸ்பாஞ்சலி செய்தார். இப்படிப்பட்ட வீனர்களின் மேடையானது.. திராவிட ஆதிக்கத்துள் செம்மொழிக்கு கூடிய உலக மாநாடு.

அங்கு ஒளவைக்கு வந்த சோதனை அதியமான் நெல்லிக்கனியால் கூட தீர்க்க முடியாத சோதனை..! ராஜபக்சவின் பண வண்டிக்கு காத்திருக்கும் திராவிடப் போலிகளும் ஆரியப் போலிகளும்.. செய்யும் வியாபார சரக்கானது செம்மொழியாம் தமிழ்...!

தொழுவது இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் அல்லவா? :)

அல்லா எண்டு சொல்லுற அரபிக் மொழிக்கு தொழுகை எண்டு தமிழ் சொல்லால் தொழுவது பிழை இல்லை தானே... ??

"ஆலையம் தொழுவது சாலவும் நண்று "... உதுவும் ஒளவை கிழவி சொன்னது தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7839_1.jpg

செம்மொழி மாநாட்டு மேடையை அழங்கரிப்பவர்களைப் பாருங்கள்.. இதே கைகளே.. முள்ளிவாய்க்கால் இரத்தம் தோய காரணமாக இருந்தன. இவனே ராஜபக்சவிடம் ஓடுவதும் வருவதுமாக இருந்தான். இவனே போர் நிறுத்தம் வந்திவிட்டதாக அறிவிக்கச் செய்து அதே காலத்தில் 40,000 மக்களை கொன்று குவிக்க உதவியவன். இன்று அவனுக்கு திராவிடன் கைகொடுத்து தமிழனை அழித்ததற்காக.. தமிழன் மண்ணில் வைத்தே வாழ்த்துகிறான்..!

நன்றி படம் நக்கீரன்.

அல்லா எண்டு சொல்லுற அரபிக் மொழிக்கு தொழுகை எண்டு தமிழ் சொல்லால் தொழுவது பிழை இல்லை தானே... ??

"ஆலையம் தொழுவது சாலவும் நண்று "... உதுவும் ஒளவை கிழவி சொன்னது தான்...

பிழை இல்லை தான் தயா!

பெளத்தமதத்தை சிங்களவர்பின்பற்ற முதல் சிங்களவர்கள் சைவ மதத்தை தழுவியிருந்தனர்.தேவநம்பியதீசனின் தந்தை பெயர் மூத்தசிவன்.

பெளத்தம் சிங்களவனுக்குமட்டும் சொந்தமல்ல என்பதை நாம் முதல் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மணிமேகலை ஜம்பெரும்காப்பியங்களில் ஒன்றெனில் ..பெளத்தம் தமிழர்களாலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மத்தியகிழக்கிலிர்ந்து வந்த இஸ்லாம்,கிறிஸ்தவம் எல்லாம் தமிழில் தற்பொழுது ஆட்சி செய்யும் பொழுது இந்தியாவிலிருந்து வந்த பெளத்தம் நிச்சம் தமிழர்களை ஆட்கொண்டிருக்கும்.

ஒளவையார் தமிழ்நாட்டில் வாழ்ந்த பெளத்ததுறவி என்றுதான் ஆராச்சி முடிவுகள் அமையும், நாங்கள் ஏன் துள்ளுவான்?நாங்கள் ஈழத்தவர்கள் எங்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்....என்னதான் இருந்தாலும் இந்தியாவுக்கும் எங்களுக்கும் ஒரு பிணைப்பு வந்திடு என்களைஅறியாமலேயே? :):D:lol::lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தமதத்தை சிங்களவர்பின்பற்ற முதல் சிங்களவர்கள் சைவ மதத்தை தழுவியிருந்தனர்.தேவநம்பியதீசனின் தந்தை பெயர் மூத்தசிவன்.

பெளத்தம் சிங்களவனுக்குமட்டும் சொந்தமல்ல என்பதை நாம் முதல் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மணிமேகலை ஜம்பெரும்காப்பியங்களில் ஒன்றெனில் ..பெளத்தம் தமிழர்களாலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மத்தியகிழக்கிலிர்ந்து வந்த இஸ்லாம்,கிறிஸ்தவம் எல்லாம் தமிழில் தற்பொழுது ஆட்சி செய்யும் பொழுது இந்தியாவிலிருந்து வந்த பெளத்தம் நிச்சம் தமிழர்களை ஆட்கொண்டிருக்கும்.

ஒளவையார் தமிழ்நாட்டில் வாழ்ந்த பெளத்ததுறவி என்றுதான் ஆராச்சி முடிவுகள் அமையும், நாங்கள் ஏன் துள்ளுவான்?நாங்கள் ஈழத்தவர்கள் எங்களுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்....என்னதான் இருந்தாலும் இந்தியாவுக்கும் எங்களுக்கும் ஒரு பிணைப்பு வந்திடு என்களைஅறியாமலேயே? :lol::lol::D:D:(:(

தமிழர்கள் பெளத்தத்தை தழுவினார்கள் என்றால் அதெப்படி என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஏனெனில் புத்தர் வட இந்தியாவில் வாழ்ந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும் சிங்கள இனம் என்ற ஒரு இனம் இருக்கவில்லை. அது சிங்கள மொழி அமைவின் பின்னர் உருவாகிய ஒரு குழுமம்.

அண்மையில் யூத இனம் பற்றி பரம்பரை அலகு சார்ந்த ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு யூதர்களின் உலகப் பரம்பல் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்களும் சிங்களவர்களும் பரம்பரை அலகு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன்படி உண்மையில் சிங்கள இனம் என்ற ஒன்று இருந்ததா என்பதை கண்டறிய வேண்டும். சிங்களவர்கள் என்பவர்கள் சிங்கத்தின் பரம்பரை வழி வந்தவர்கள் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்க இது ஒன்றும் இதிகாசகாலமல்ல.

கோத்தபாயவில இருந்து ஆமத்துறு வரை மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டால்.. அவை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் மற்றும் இந்திய உபகண்ட பிற இனங்களின் மரபணுக்களோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டால்.. இலங்கை யாருக்குச் சொந்தம் என்பதற்கு அறிவியல் ரீதியாக விடை தேடலாம்.

இதற்கு ஒளவை.. மணிமேகலை.. பெளத்தத்தை ஆராய்ஞ்சு கொண்டிருக்கத் தேவையில்லையே..???! :D:):D

Edited by nedukkalapoovan

தமிழர்கள் பெளத்தத்தை தழுவினார்கள் என்றால் அதெப்படி என்ற ஒரு கேள்வி இருக்கிறது. ஏனெனில் புத்தர் வட இந்தியாவில் வாழ்ந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும்

மத்தியகிழக்கில் வாழ்ந்த ஜேசு,நபிகளின் கருத்துக்கள் தென்னிந்தியா,இலங்கை போன்றநாடுகளுக்கு பரவலாம் என்றால் ,

ஏன் வட இந்தியா புத்தரின் கருத்துக்கள் பரவமுடியாது.இராமர் கிருஷ்னர் போன்ற கருத்துருவாக்க மையங்களின் கருத்துக்கள் தென்னிந்தியாவரை வரலாம் என்றால் இதுவும் சாத்தியம்

சிங்களவன் தென்னிந்திய இனத்துடன் தொடர்புடையவன்,மலையாளி,தெலுன்கன்,கன்னடன் ,தமிழன் இவன்கள்போல் அவனும் ஒரு இனமாகத்தான் இருந்திருப்பான்.

அவனின் நல்லகாலம் அவன் ஒரு தீவில் வாழசந்தர்ப்பம்கிடைத்துவிட்டது,இதனால் படையெடுப்புகளில் இருந்து இலகுவாக தப்பக்கூடியதாக இருந்திருக்குது.அதன் விளைவு இந்து மதம் அவனுக்கு புகுத்தப்பட சந்தர்ப்பம்கிடைக்கவில்லை.எனைய தென்னிந்திய மொழிக்குடும்பங்களில் இலகுவாக இந்துமதம் புகுத்தப்பட்டது,பின்பு இஸ்லாம் ,கிறிஸ்தவம் என்பன புகுத்தப்பட்டன..

சிங்களவருக்கு பெளத்தமும்,கிறிஸ்தவமும் புகுத்தப்பட்டன .இஸ்லாம் இப்பொழுதுதான் புகுத்தப்படுகிறது

மேலும் ஒளவையார் பெளத்தர் என்பதால் சிங்களவனுக்கு என்ன நன்மை? தமிழனும் பெளத்தனாக் இருந்தவன் என்று சிங்களவனுக்கு சொல்லசந்தர்ப்பமுண்டு.பெளத்த சின்னங்களை வைத்து வடபகுதிக்கு சிங்களவன் உரிமை கோரமுடியாத நிலமையை ஏற்படுத்தம் சந்தர்ப்பம் எமக்கு கிTஐக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஔவையாரின் வரலாற்றைப் பார்த்தல் மூன்று ஔவைகள் தமிழகத்தில் வேவ்வேறு காலத்தில் 12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தனர் என்பது புலப்படும். இவர்களில் முதலானவர் வள்ளுவர், நக்கீரர் போன்ற புலவர்கள் வாழ்ந்த கடைச்சங்க காலத்திலும், இடையானவர் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பக்தி இலக்கியப் புலவர்கள் காலத்திலும், கடையானவர் கம்பர்,செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர்,சேக்கிழார் போன்ற புலவர்கள் காலத்திலும் வாழ்ந்தனர் என்பர். இம்மூவரும் ஒத்த பெயர் மற்றும் இயல்புகளை உடையவர்களாதலால் பிற்கால மக்களால் ஒருவராக கருதப்பட்டனர் போலும். மேலும் அதியமான் நெடுமான் அஞ்சி கொடுத்த, நீண்டகாலம் வாழ வைக்கும் சிறப்புப்பொருந்திய நெல்லிக்கனியை இவர் உண்டமை, இக்கருத்துக்கு வலுச் சேர்த்திற்று என்பர்.

இம்மூவரில் ஒருவர் பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் எழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையை பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். அவ்வெண்பாவை கிழே காட்டுதும்:-

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றேழுதி

விட்டசிவ நும்செத்து விட்டனோ-முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரம் அவ னுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ.

------------------------------------------------------------------------------------------------------------------------

முதலாம் ஔவையார்

சேரசோழபாண்டியர், மழவர் கோமான் அதியமான் நெடுமான் அஞ்சி, முல்லைக்கு தேரீந்த பாரி வள்ளல், காஞ்சித் தொண்டைமான். மலையமான் திருமுடிக்காரி, நாஞ்சில் கோமான் வள்ளுவன் போன்ற தமிழகத்தை ஆண்ட கடைச் சங்க கால மன்னர்களை ஔவையார் தமிழால் ஆண்டார் என்றால் மிகையாகாது. இவரின் நண்பனும் பெரும் வீரனுமாகிய தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி மீது படையெடுக்கும் பொருட்டு,சேரசோழபாண்டியரும் பிற குறுநில மன்னரும் மாநாடு கூட்டித் திட்டங்கள் வகுத்த போது, அங்கு வந்த ஔவையார் கூடியிருந்த மன்னர்களுக்கு பின்வரும் பாடல் மூலமாக, அறமற்ற இப்படையெடுப்பால் அழிவு அதியமானுக்கு அல்ல, கூடியிருக்கும் மன்னர்களுக்குத்தான் என்பதை கூறி இப்படையெடுப்பை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள, கூடியிருந்த மன்னர்களும் இவரின் சொல்லுக்கு மதிப்பளித்து இதற்கு இசைந்தனர். அப்பாடலைக் கீழே காட்டுதும்:-[2]

திணை:- தும்பை துறை:- தானைமறம்

களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து

எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால்அன் னோனே. (புறநானூறு 87)

இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் ஔவையார்

இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றை பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம் பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண் எனக் கூறி நகைத்தான். குறும்பு தனமான மதி நுட்பத்தை கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திப் பின்வரும் செய்யுளை பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி

இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்

ஈரிரவும் துஞ்சாதென் கண்

இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர். சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமெறி கயிலைக்கு செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாக செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னை கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கி கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை

முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி

அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்

குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

இவர், சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் வாழ்ந்ததாகக் கருதப்படும் 8ஆம் மற்றும் 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறுவர்.

-----------------------------------------------------------------------------------------------------

[தொகு] மூன்றாம் ஔவையார்

இவ் ஔவையார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில் புலவமணிகளாக திகழ்ந்த கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இவர் வாழ்நாளில் சுவையான நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன, அவற்றுள் இரண்டை கீழே கூறுதும். மேல் கூறிய புலவர்கள் கூடியிருந்த சோழனின் அவைக்கு எளிமையை விரும்பும் இவர் வந்தபோது, அங்கு மிகுந்த அடம்பரத்தோடும், அளவற்ற செருக்குடனும் கம்பர் இருப்பதைக் கண்டு சினம் கொண்டு, ஆடம்பரமும் தற்பெருமையும் இகழ்ச்சிக்குரியன என்று முறையே கூறும் இரு பின்வரும் அரிய செய்யுள்களை பாடி, அவையோருடன் வாதம் செய்தார் என்பர்.

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்

விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்- அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

நீண்ட தூரம் நடந்த களைப்பால்,ஒரு தாசி வீட்டுத்திண்ணையில் இளைப்பாறும் பொருட்டு இருந்த இவருக்கு அத்தாசியும் கூழ் கொடுத்து உபசரித்தாள். பின்னர் அவ்வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்க கண்டு, அத்தாசியிடம் அதுபற்றி வினாவ, கம்பர் 500 பொனுக்கு அரை வெண்பா தான் படுவராம், மேலும் 500 பொன் வேண்டுமாம் மிகுதியை பாட எனக் கூறி அழுதாள் சிலம்பி என்னும் அத்தாசி. ஔவையாரும் உள்ளம் இரங்கி மிகுதியை தான் பாடிச் சென்றார் என்பர். அவ்வெண்பாவைக் கீழே காட்டுதும்:-

தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே

மண்ணாவதுங் சோழ மண்டலமே- பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு.

இதையறிந்த கம்பர் பின்வருமாறு ஔவையை இகழ்ந்தார் என்பர்.

கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி

இவ் ஔவையும் பல தனி நிலைச் செய்யுள்களையும் பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூலைகளையும் பாடியுள்ளார். பந்தன் அந்தாதி மற்றும் அசதிக்கோவை என்னும் நூல்களில் பெரும்பாகம் காலத்தால் அழிந்துவிட்டது. மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.

---------------------------------------------------------------------------------------------------------------

பிற்கால ஔவையார்கள்

பிற்காலத்தில் குறிப்பாக 14ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் இரு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது அறிஞ்ர்களின் கருத்தாகும். இதில் ஒருவர் 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் மற்றையவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகக் கூறுவர். இவர்கள் வாழ்க்கை பற்றிய தகவல்கள் ஒன்றும் தற்காலத்தில் கிடைக்கப்பெறவில்லை.

முந்தியவர்

இவர்களில் முந்தியவர் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது போன்ற நூல்களை சிறுவர்களுக்கு இயற்றி, தமிழ்ச் சிறுவர்கள் நெஞ்சில் ஔவைப் பாட்டியாக நிலைத்து இருப்பவர். முற்கால ஔவைகள் வாழ்க்கையில் கடைப் பிடித்த எளிமையை, இவர் தமிழ் உரைநடையில் கடைப் பிடித்து, சிறுவர்களின் நினைவில் இலகுவில் பதியும் வண்ணம், தமிழ் அறத்தை வலியுறுத்தும் செய்யுள்களை வடித்தவராவார்.அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களை இயற்றியவரும் இவரே என்றும் சிலர் கூறுவர்

பிந்தியவர்

இவ் ஔவை ஔவைக் குறள் என்ற வேதாந்தக் கருத்தை உள்ளடக்கிய நூலை இயற்றினார். மேலும் விநாயகர் அகவலை பாடியவரும் இவர் என்று கூறுவோரும் உள்ளனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

இதில் எந்த ஒளவையாரைப் பற்றி ஆராயுரார்கள்?

இதில் எந்த ஒளவையாரைப் பற்றி ஆராயுரார்கள்?

கருனாநிதியின் பக்கத்துவீட்டு ஒளவையாரப்பற்றி

கருனாநிதியின் பக்கத்துவீட்டு ஒளவையாரப்பற்றி

அவரைத் தான் கொலைஞர் கொன்று போட்டாராமே!!!!!!!!

:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.