Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்ற்போலினால் தேடப்படும் நபரை அண்மையில் சந்தித்த மருத்துவட் அருண்குமாரின் பேட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போனது எல்லாம் டாக்டரை போல உண்மை பேசுவினம் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள், போனதில ஒண்டுதான் பிபிசிக்கு சொல்லி இருக்கு

டாக்டர் ஒன்றை தெளிவாய் சொல்லி இருக்கிறார் அங்கு போவபவர்கள் அவர்களின் வலைக்குள் விழுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கு என்று, போனது ஒன்பது உண்மையை உலகுக்கு சொன்னவர் ஒருவர்தானே.

எமக்கு ஏதாவது நல்லது செய்ய உண்மையிலேயே நினைப்பவர்கள் விழமாட்டார்கள்

விழாதவர்களை இனம் காணவும்

இன்னும் விழத்தயாராக உள்ளவர்களை அடையாளம் காணவும்

அவர்கள் போய்வரட்டும்

என்ற எனது முடிவில் மாற்றமில்லை

Edited by விசுகு

  • Replies 78
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேபி நல்லவரா கெட்டவரா என்பது சரிவரத் தெரியாத விடயம்..! ஆனால் சிங்கள அரசின் கைகளில் அவர் தற்போது இருப்பவராதலால் தமிழர் விடயங்களில் தலையிட்டு செயற்படும் தகுதியை இழந்திருக்கிறார். :lol:

கே.பி, ஒரு கருவியே

கே.பி யை முன் நிறுத்தி காய் நகர்த்திய அன்னிய சக்திகளும் உண்டு.

கே.பி யை முன் நிறுத்தி காய் நகர்த்திய மாற்றுத்தலைமை விரும்பிய புலம் பெயர் தமிழர்களும் உண்டு.

இவர்கள் எல்லோருக்கும் ஆப்பு இறுக்கிவிட்டு

கே.பி யை சிங்களம் தனதாக்கிக்கொண்டது.

கே.பி யை முன்நிறுத்தி மாற்றுத்தலைமையை உருவாக்க முயற்சித்த, புலம் பெயர் தமிழருள் கலந்திருக்கும், சிறு கூட்டடம். கே.பியின் தோளில் தொடர்ந்தும் சவாரி செய்து தமிழரிடையே அரசியல் செய்வதை நிறுத்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

2006 ஆம் ஆண்டில் இருந்து கேபிக்கு இலங்கை அரசுடம் தொடர்பு, இது ஒரு சாதாரண வாக்கியம் இது எத்தனை உயிர்களை பலிகொண்டது எத்தனை பேரின் நம்பிக்கைகளை நாசம் செய்தது. முன்பு ஒரு கதை உலாவி வந்தது முன்பு ஒரு முறை மலேசியாவில், கேபி கைதான போது பிரனவ்முகர்ஜி சென்று வெளியில் எடுத்து விட்டு வந்தது என்று அன்றில் இருந்து கேபி றோவின் கைகளில் என்று, 2006இல் இருந்து இலங்கை அரசுடன் தொடர்பு என்றால் கப்பல் கப்பலாக சனத்திடம் வாங்கிய காசில் ஆயுத்தை வாங்கி அனுப்பி விட்டு அது செல்லும் பாதையையும் இலங்கை அரசுக்கு காட்டி கொடுத்தது இந்த துரோகியா? அடுத்து அடுத்து கப்பல்கள் அடிபட்டதன் பின்னனியில் இருந்தது இந்த துரோகியா? தலைவரும், போராளிகளும் எவ்வளவு நம்பிக்கையில் கடைசிவரை இருந்திருப்பார்கள் கப்பல் வரும் அடிபட்டு மக்களையும் தம்மையும் காப்போம் என்று, :lol::lol: தலைவர் கடைசி வரை எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்திருப்பார் ஆயுதம் வரும் வரும் என. :lol::lol::lol: களைகள் இனம்காட்டப்பட வேண்டியவர்கள் அல்ல வேருடன் அழிக்கபட வேண்டியவர்கள்.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட முட்டாள் பசங்களா. கப்பல்கள் அடிபட்டதுக்கு இன்னும் கே பி தான் காரணம் என்று நம்பிட்டு இருகிறீங்களா.

வீட்டு காவலில் இருந்த கே பி, தான் வளர்த்த கப்பல் புலிகளை தானே காட்டி கொடுத்தாராம்.

நாங்கள் பண்ணுறம் புடுங்கிறம் எல்லா கப்பலையும் எங்களிட்டை தாங்கோ என்று, மூன்று மூன்று கப்பலாக அனுப்பினது மட்டும் இல்லாமல் ஒழிக்க தெரியாமல், உடையார் வீடுக்க ஒளிச்ச மாதிரி எல்லா கப்பல்களையும் ஒன்றாக அணி வகுத்தது எல்லாம், இப்போ தான் தாங்கள் தான் புலிகளாம். :lol:

இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் ஏமாத்துறீங்க எண்டு தான் பாப்பம்.

ஏமாற்றுபவன் முட்டாள் என்றால் ஏமாறுபவன் அதை விட முட்டாள் :lol::):D

நீங்கள் எல்லாம் எந்த முட்டாள் தமிழர்களே. :D

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

சனங்கள் அழிந்து கொண்டு இருக்கும் போதும்,தற்போதும் அரசோடு சேர்ந்து கும்மாளம் போட்டுக் கொண்டு இருந்தது உங்கள மாதிரி ஆட்களாய் தான் இருக்கும்...கேட்ட‌ கேள்விக்கு பதில் இல்லை...உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் மட்டும் தமிழருக்கு அழிவு தான் :D:D:lol:

சரி நீங்க என்ன செய்கிறீங்கள்.?

வன்னி மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறீங்களா.?

கணவன்மாரை இழந்த இளம் விதைவைகளுக்கு மறுவாழ்வு தேடி கொடுகிறீங்களா.?

உங்களுக்காக போராடின புலிகளை சிறையில் இருந்து விட வேணும் என்று தேம்ஸ் நதிக்கு பக்கத்திலே உண்ணாவிரதம் இருகிறீங்களா.?

சிறிலங்கா பொருட்களை இனி தொட மாட்டோம் என்று தொடாமல் இருகிறீங்களா.?

கல்வியை இழந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுகிறீங்களா.?

போரினாலே உள வளம் குறைந்தவர்களை பராமரிக்கிறீங்களா.?

திண்டு போட்டு கொழுபெடுத்து வெட்டியா ராவணன் பார்த்திட்டு வந்து முப்பது வருஷ போராட்டத்தையும், அதற்கு வலுச்சேர்த்தவர்களையும் விமர்சனம் செய்வது. :)

a

We want Tamileelam என்று கூட்டமா வந்து கத்தினதோட உங்கட போராட்டம் எல்லாம் முடிஞ்சு போச்சா.? :lol:

அதுக்கு பிறகு எங்கே நீங்கள் எல்லாம்.? :lol: இப்ப வந்து தானும் படுக்காமல் ......................................................

கொஞ்ச நாளைக்கு என்ன தான் நடக்குது என்று பாருங்கவன். சிங்களவனுக்கு நூறு ரூபாய் போனாலும் பரவாயில்லை. எங்கட மக்களுக்கு பத்து ரூபாய் என்றாலும் போகட்டுமே. :lol:

அப்படி போகலை என்றால் வாங்கவன் எல்லாருமா சேர்ந்து போராடுவம். :lol:

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு நூறு ரூபாய் போனாலும் பரவாயில்லை. எங்கட மக்களுக்கு பத்து ரூபாய் என்றாலும் போகட்டுமே. :lol:

உந்தப் பருப்பு வேகாது மகனே..! சிங்களவனுக்கு ஒரு சதமும் போகாமல் எங்கட மக்களுக்கு நூறு ரூபா போற வழி இருந்தால் சொல்லுங்கோ..! வேறை சுத்திவளைப்பு ஒண்டும் வேண்டாம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பருப்பு வேகாது மகனே..! சிங்களவனுக்கு ஒரு சதமும் போகாமல் எங்கட மக்களுக்கு நூறு ரூபா போற வழி இருந்தால் சொல்லுங்கோ..! வேறை சுத்திவளைப்பு ஒண்டும் வேண்டாம்..! :lol:

மக்கள் அநாதைகளாகி பதினாலு மாசம். இதுவரைக்கும் ஒண்டும் புடுங்காத நீங்கள் இனி தான் புடுங்க போறீங்களோ. நல்ல பகிடி தான் போங்கோ. :)

அரசியல் கட்டுரை எழுதிற உங்களுக்கு கூட திட்டம் தெரியலையோ. :lol:

இல்லாட்டி கடைசியிலை மக்களை ஏமாத்தின மாதிரி திட்டம் இருக்கு மாற்றம் வருமோ :D :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன், உங்கள் கருத்துக்களுக்கு எனது ஆதரவுகள் நிச்சயம் உண்டு.

எப்போது பார்த்தாலும் கே.பி.யை தூற்றிக்கொண்டிருப்பவர்கள், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது செய்ய நினைப்பவர்களை செய்யத் தூண்டுகின்றார்களா என்றால் அதுதான் இல்லை.

தமிழீழக் கனவு இனி ஆயுதம் ஏந்திப் போராடி கிடைக்கவே கிடையாது. தற்போது எம் முன்பாக உள்ள ஒரே வழி இடம்பெயர்ந்த மக்களை அவரவர் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்ய அழுத்தங்களை பிரயோகிப்பதோடு அந்த மக்களுக்கான நிவாரண உதவிகளுக்கான நிதிகளை நாம் வழங்க முன்வர வேண்டும்.

மக்கள் இயல்பு வாழ்வுக்கு வந்தபின்னர் அரசியல் ரீதியாகப் போராடி எமது கனவான தமிழீழ இலட்சியத்தை அடைய முற்பட வேண்டும். அதனை விடுத்து விட்டு வெற்று வார்த்தைகளை விட்டு அறிவுசார் தளத்திலிருந்து சிந்திக்காத வரைக்கும் புலத்தில் இருப்பவர்களே நீங்கள் புலம்பிக் கொண்டுதான் இருப்பீர்களோ?

சரி நீங்க என்ன செய்கிறீங்கள்.?

வன்னி மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறீங்களா.?

கணவன்மாரை இழந்த இளம் விதைவைகளுக்கு மறுவாழ்வு தேடி கொடுகிறீங்களா.?

கல்வியை இழந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுகிறீங்களா.?

போரினாலே உள வளம் குறைந்தவர்களை பராமரிக்கிறீங்களா.?

அண்ணோய், உதை திரும்ப உங்களைப் பார்த்துக் கேளுங்கள்!!!

... இங்கிருந்து ஒன்றும் செய்ய முடியாது, அனுப்புவதுகளையும் சிங்களவன் கூடுதலாக அபேஸ் பண்ணுகிறான்!!

ஆனால் ... நீங்கள் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக ... இணக்க அரசியலோ ... இல்லை வேறு பாஷையில் ஒட்டு அரசியலோ ... நடத்துகிறீர்கள்!! உதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை???

.... புலி அழிந்தும் புலி இல்லாத அரசியல் உங்களுக்கு இயலாது!!!! இதுவரை ... கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஒட்டி இருக்கிறீர்கள், அதை கணக்கிலெடுக்காது ... மே18இற்குப் பின்னம் என்னத்தை செய்தனீங்கள்???? ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்!!!

... சில நேரம் சொல்லுவீங்கள் மே 18இற்குப் பின்னம் 35ஆயிரத்திலிருந்து 35இலட்சம் வரை பேசி சில போராளிகளையும், சனங்களையும் எடுத்து விட்டனீங்கள்!! இதையா சொல்லப் போகிறீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்கட்கிழமை ஆசிய செய்தி என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்தில் விதவைகளின் வாழ்வில் இன்னமும் விளக்கேறவேயில்லை. அவர்களின் வாழ்வு கண்ணீரின் மத்தியிலேயே கரைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது. பட்டதாரிகள் கூட தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையைக் கூட விபரித்திருந்தது.

இதேபோல மூன்று வாரங்களிற்கு இன்னொரு சர்வதேசப் பத்திரிகை நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் போரினால் 42,000 விதவைகள் எனச் செய்தி வெளியிட்டதோடு இவர்களில் 14,000 பேருக்கு மூன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பதாகவும், மற்றையவர்கள் கூட ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை உடையவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தது.

வன்னியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆகக் குறைந்தது 60,000 விதவைகள் பொதுமக்கள் மற்றும் வீரச்சாவடைந்த போராளிகளின் மனைவிமார் என உள்ளார்கள்.

இவையெல்லாவற்றையும் விட ஏறத்தாழ 20,000 பதின்ம வயதினர் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் தனித்து இயங்க முடியாதவர்களாகி இருக்கிறார்கள் என்றும் ஏப்ரல் மாதமளவில் ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இரண்டு கால்களையும் இழந்த பதின்ம வயது யுவதி, இரண்டு கைகளையும் இழந்த இன்னொரு யுவதி, அதனால் புத்திசுவாதீனமான அவரது தாய், இந்த அதிர்ச்சியிலே மரணமான அவரது தந்தை என ஒரு விவரணச் செவ்வியை அமெரிக்க ஊடகம் வழங்கியிருந்தது.

இது இலங்கையின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட விவரணச் செவ்வி என்று கூறப்பட்டாலும் அந்த இரு யுவதிகளும். அந்தப் புத்திசுவாதீனமான தந்தையும் வன்னியில் வதியும் போரின் பாதிப்புக்கள் என்பதில் எவருக்குமே சந்தேகமில்லை.

இவ்வாறாக சிதைவுற்று சில்லருற்றிக்கும் இவர்களின் வாழ்வின் இன்றைய தேவை எதுவென்றால் ஆகக்குறைந்த ஒரு சாதாரண வாழ்வு. சமபல நிலையில் இன்று தமிழர் தரப்பு அங்கேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட பேச்சுக்குரிய பலம் பெறாத எதற்கும் அரசின் அனுமதியைப் பெற வேண்டிய கட்சியாகவே இருக்கிறது.

ஆனால் இந்த மக்களிற்காக முரண்டு பிடிக்கிற நிலையில் புலம்பெயர்ந்த மக்களின் ஒரு சில ஊடகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அதாவது அரசியலும் புனர்வாழ்வும் ஒருமித்தே செய்யப்பட வேண்டும். புனர்வாழ்வு தனித்து செய்யப்படக்கூடாது என்பதே அவற்றின் வேண்டுகோள். நமது விருப்பும் அதே.

இலங்கை அரசு யுத்தக்குற்றவாளியாக்கப்பட வேண்டும். அதற்கான தண்டனையை அது பெறவேண்டும். நாம் இழந்த இழப்புக்களிற்கான பெறுமதியை அது உணர வேண்டும் என்பதில் யாருக்குமே இரண்டாம் கருத்து இருக்க முடியாது. அதை நாங்கள் நிறைவேற்றியாக வேண்டும். அது அங்குள்ளவர்களால் முடியாத ஒரு விடயம்.

ஆனால் அதேவேளை அங்கே வாழுபவர்கள் எங்களின் விருப்புக்கு உடன்பட்டு துண்பத்தையே தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென நாங்கள் நினைத்தால் அதனைவிட மடமையானதொரு விடயம் உலகில் இருக்க முடியாது. ஒரு புலிக்கொடியையல்ல, ஒரு புலிப்பாட்டையல்ல, தனிநாடு என்ற சொல்லைக்கூட உச்சரிக்க முடியாத ஒரு நிலைக்கு அங்குள்ள மக்களோ அவர்களை வழிநடத்தும் கட்சிகளோ சென்றுள்ளன என்ற உண்மையை நாங்கள் ஏற்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைய களச்சூழல் மாறுபட்டது. இரண்டு லட்சம் இராணுவத்தில் பெரும்பான்மை வடகிழக்கிலே நிலைகொண்டுள்ளன. போரின் முடிந்த காரணத்தால் அவர்களது குடும்பங்களும் அங்கே சென்று குடியேறத் தொடங்கிவிட்டன. இராணுவத்தின் உணவுக்கடை, இராணுவத்தின் முடி திருத்தும் கடை என அனைத்து இராணுவக் கடைகளிலும் தமிழர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதை வேண்டுமென்றால் நாங்கள் எழுதாமல் மறைக்கலாம் ஆனால் உண்மையில் இதுதான் நிலை என்பதை மறுக்க முடியாது.

சிங்களவர்கள் வடக்குக் கிழக்கை சுற்றுலாத் தளமாக அல்லாது தாங்கள் வாழும் தளமாகவே மாற்றி கண்ட இடமெங்கும் வாடகைக்கு வீடுகளை அமர்த்தி வாழ்வதுடன், அரசமரமிருக்கும் இடமெல்லாம் புத்தவிகாரை அமைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழரின் இதயப் பகுதியான அம்பாறையில் பெரிய புத்த ஆலயம் அமைக்கப்படுகிறது.

முல்லைத்தீவு உல்லாச புரியாகி முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் உல்லாசப் படகுகள் தரிக்கும் கரையாகிறது. ஏல்லாமே தலைகீழாக மாறினாலும் இன்னமும் தடுப்பு முகாம்களிற்குள் உள்ள 100,000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் அவர் சார்ந்த மக்களின் வாழ்வைப் பற்றிக் கதைப்பதற்கான நிலையில் எந்தவொரு அமைப்பும் இல்லை. ஏன் எந்தவொரு நாடுகளும் கூட இல்லை.

போராளிகள் புனர்வாழ்வு பெறுகிறார்கள். கற்கைநெறிப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள், மணமுடிக்கிறார்கள், சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கிறாhர்கள் என பல சோடனைகள் காட்டப்பட்டாலும் அவர்கள் புனர்வாழ்வு பெறுவது என்பது இலங்கை அரசின் கைகளிலே தங்கியுள்ளது என்பதே முடிந்த முடிவு.

எந்தவொரு அமைப்பை நாங்கள் ஏற்படுத்தி, எந்தவொரு இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுத்தாலும் இலங்கை அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு இருக்க வேண்டும் என்ற இரண்டு விடயங்களையும் விட்டு ஒருபடி கூட யாருமே நகரப்போவதில்லை.

அதைவிட இந்தியாவிற்கு டக்ளசும், பிள்ளையானும் செல்லப்பிள்ளைகளாகவும், தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றான் தாய் பிள்ளையாகவும் இருக்கின்ற நிலையில் மேலுள்ள இரண்டு நிலையை இப்போது அடைவது கூட மேற்குநாடுகளால் முடியாத ஒரு விடயம்.

இந்த நிலையில் இந்த மக்களின் அரசியல் பற்றிக் கதைக்காமல் எமது மக்களின், போராளிகளின் புனர்வாழ்வு பற்றி யாராவது ஏதும் செய்தால் அதையும் நாங்கள் பல சாக்குப் போக்குக் கூறி தடைகளை ஏற்படுத்துவது உண்மையிலேயே மனச்சங்கடத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால் எங்களால் இயலாததை இன்னொருவர் செய்வதை நாங்கள் ஏன் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த 13 மாதங்களாக முட்கம்பி வேலிகளிற்குப் பின்னாலிருக்கும் முன்னைநாள் போராளிகளை இனி இலங்கை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்கள் “சுதந்திரமாக செயற்படுவதற்கு” ஆகக் குறைந்தது பத்து ஆண்டுகளாவது எடுக்கும். அதுவரை அவர்களை கண்காணிப்பதையே இப்போது வடகிழக்கில் இருக்கும் இராணுவம் செய்து வரும்.

ஒன்றை நாங்கள் தெளிவாகக் கவணிக்க வேண்டும். மே 2009ற்கு பிறகு வட கிழக்கில் இராணுவத்திற்கெதிரான தாக்குதல் எங்குமே நடந்ததில்லை. இது எங்களிற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. இதனால் தான் இராணுவமும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதோடு தங்கள் குடும்பங்களையும் தாங்கள் பணியாற்றும் பகுதிகளிற்கு அழைத்து சென்று குடும்பவாழ்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே அரசியல் பேசுவோர் அரசியல் பேசட்டும். அதிகாரம் பற்றிப் பேசுவோர் அதிகாரம் பேசட்டும். தனிநாடு காண்போம் என்போர் தனிநாடு காணட்டும் (அவர்கள் கூட அதற்கான சாத்தியக்கூறு இப்போது இல்லை என்பதை ஏற்கிறார்கள்). புதிதாகத் தொடக்கப்பட்ட அமைப்புக்கள் கூட தாங்கள் போகும் பாதையை இனித் தான் தீர்மானிக்கப் போவதாக வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன. எனவே இனி ஒரு மூன்று நான்கு ஆண்டுகளிற்கு எந்த வித்தையும் எங்குமே நடக்கப் போவதில்லை.

ஆனால் இந்த விதவைகள், அநாதைகள், அங்கவீனமானவர்கள், முன்னiநாள் போராளிகள் அவ்வளவு காலமும் வதையை, வன்முறையை அனுபவித்து பசி, பட்டிணியுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் நினைப்போமாக இருந்தால் எங்களில் ஏதோ தவறு இருக்கிறது. அவர்கள் அடிநிலைச் சாதாரண மனிதர்களாக வாழத் தானும் வழி செய்ய வேண்டுமென்பதில் எந்த தவறுமேயில்லை.

புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள ஒரு புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் அங்கே யாராவது புனரமைப்பு அமைப்புத் தொடங்கினால் தங்களிடமுள்ள பணத்தை கொடுக்கத் தாங்கள் தயார் என்ற செய்தியை பார்த்த போது அவரது தயாளமனம் எப்படியாவது மக்கள் நன்மை பெறட்டும் என்பதைச் சிந்திப்பதை எடுத்துக் காட்டியது. அதாவது அடிநிலை வாழ்வை அவர்களிற்கு கொடுப்பதே அவர்களிற்கு இன்றுள்ள தேவை.

யாரும் பணம் சேர்க்கலாம். யாரும் பொருள் சேர்க்கலாம். ஆனால் அது பாதிக்கப்பட்ட மக்களையோ, முட்கம்பி வேலிகளின் பின்னாலுள்ளவர்களையோ போய்ச் சேர்வதிற்கு சிறீலங்காவின் அனுசரணைப் பெறமால் போவதென்பது கடிணத்திலும் கடிணம் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். எனவே பாதிப்பின் உச்சத்தில் இருப்பவர்களின் வாழ்வை தேவையற்ற விதத்தில் புன்படுத்தாமல் அவர்களின் வாழ்வு “அடிநிலைச்” வாழ்வாகத் தானும் திரும்புவதை தடுப்பதை புலம்பெயர்ந்த நாங்கள் இப்போதைக்குத் தவிர்ப்போம்.

இல்லையேல் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும், மன்னாரிலும், திருமலையிலும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக சிங்களவர்களின் ஆதிக்கத்தின், அதிகாரத்தின் கீழ் வாழும் நிலையை ஏற்படுத்திய பழியையும் புலம்பெயர்ந்த நாங்களே ஏற்க வேண்டி வரும்.

Edited by முதல்வன்

கொஞ்ச நாளைக்கு என்ன தான் நடக்குது என்று பாருங்கவன். சிங்களவனுக்கு நூறு ரூபாய் போனாலும் பரவாயில்லை. எங்கட மக்களுக்கு பத்து ரூபாய் என்றாலும் போகட்டுமே. :lol:

அப்படி போகலை என்றால் வாங்கவன் எல்லாருமா சேர்ந்து போராடுவம். :lol:

சும்மா சவுண்டை விடாதையும்!!! ... ... அங்கு வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷன், வன்னி மக்களுக்காக உடுபுடவை, ... சேர்த்து அனுப்பினார்களாம் ... ஒருகட்டம், இரண்டு கட்டம் ... போய் மதவாச்சியுடன் டைவேஷன் நடந்திட்டுதாம் .. அத்தோடு இதுகளை சேர்த்து அனுப்பியும் போகப்போவதில்லை என்று உந்த தொழிலே வேண்டாம் என்று நிறுத்தி விட்டார்களாம்!!!

... எங்கை உதுக்கு போராடும் பார்ப்பம்!!!

... எமது பணம், எமது மக்களுக்கே!!! .. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும், அவர்கள் வாழ் வேண்டும், ... எல்லாம் உண்மை!! ஆனால் அது எம் மக்களுக்கு போய்ச்சேர வேண்டும்!! அது நடைபெறுமா???? சிலவேளை இங்கிருந்து சிறியாளவில் செய்வதுகள் போய்ச்சேரும்தான், பெரிய அளவில் எம் பணம் போனால் .... என்ன நடக்கும்???

எனது நண்பரின் வீடு பரந்தனில் ... முதலில் வவுனியா முகாமில் இருந்து கூட்டிச் சென்று வீட்டை காட்டியபோதாம், சிறிய சேதங்களுடன்(ஓடுகள் உடைந்திருந்தனவாம்) வீடு இருந்ததாம், பின் குடியேற்ற என்று வேறொரு நாள் பரந்தன் சந்தியில் கொண்டு சென்று இறக்குய பின் வீடு சென்று பார்த்தால் ஒன்றும் இல்லையாம்!!!! ... இதுதான் அங்குள்ள மீள்குடியேற்றம்??

அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை யாராவது ஒரு அமைப்பை கண்காணிக்க விடுகிறார்களா, சிங்களம்???? ... ஒருவரும் கிட்ட நெருங்க முடியாது!! .... இல்லை அங்கு குடியேற்றப்பட்ட மக்களின் விபரங்களையாவது வெளியிடுகிறார்களா??? இல்லை!!! ஏன்??? நாளை போட்டாலும் கணக்கு இல்லை!!!

இல்லை, சிங்களத்துடன் இணக்க அரசியல் நடாத்தும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களாவது அங்கு தங்கி நிற்க முடிகிறதா?????

வன்னியில் கால் வைத்த இடம் எல்லாம் புத்த கோயில்களாம்!! ... எங்கே உங்கள் இணக்க அரசியலில் இடிந்த சைவ ஆலயங்களை, சேர்ச்சுகளை திருத்துங்கோ பாப்பம்??????

சொந்த வீடுகளில் இருந்ததுகளை உடைத்து/கொன்று/துரத்தி ... மீண்டும் மீள்குடியேற்ற சிங்களவனுக்கு காசில்லையாம்!! உங்களைத் தரட்டாம்!!! ஆனால் அங்கு மன்னார் தொடக்கம் மடு ஈறாக கொக்கிளாய் நாயாறு போய் தொப்பிக்கலை வரை சிங்களக்குடியேற்றங்களுக்கு அவனுக்கு காசிருக்குது????

... ஆமா நாம் கொடுத்து கட்டுவது மீண்டும் அழிக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது??? ... உங்களுக்கு எழுத்து மூலமாக உறுதிமொழியோ அல்லது தீர்வையா தந்து விட்டான்!!! ... இதற்கு முன் 48 தொடக்கம் இன்று வரை தந்துவிட்ட உறுதி மொழிகளுக்கு என்னாயிற்று????

என்ன ... போராடப் போகிறீர்களோ???? அண்ணை அங்கு உங்களால் மூச்சுக்கூட விட முடியாதாம், ... இரு/எழும்பு/நில்/நடப்பதானாலும் ரிமோட்தானாம் இயக்குதாம்!!! அடிக்கடி பற்றியையும் பிடுங்கி விடுவார்களாம்!!!!!!!....!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

.

2006 ல் இருந்து கேபிக்கு, சிங்களத்துடன் தொடர்பு.....

கோத்தபாயாவை கட்டி அரவணைத்து வாழ்த்துச் சொல்ல கேபி முயன்றார்.

இதுகளை கேள்விப்பட..... கேபி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்த போது.........

நாம் துடித்தோமே..... எங்களுக்கு செருப்பாலை அடிக்க வேணும்.

நல்ல தலைவன் கிடைத்தும், விலை போனவர்களால் அழிந்து போன,

எனது தமிழ் இனமே நீ என்ன பாவம் செய்தாய்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபி நல்லவரா கெட்டவரா என்பது சரிவரத் தெரியாத விடயம்..! ஆனால் சிங்கள அரசின் கைகளில் அவர் தற்போது இருப்பவராதலால் தமிழர் விடயங்களில் தலையிட்டு செயற்படும் தகுதியை இழந்திருக்கிறார். :lol:

கைதாகி இருந்தால் அடிபோட்ட பயத்தில், சித்திரவதை தாங்க முடியாது, உண்மைகளை சொல்லி இருப்பார், சொத்துக்களை காட்டி கொடுத்து இருப்பார், தனக்கு தொடர்புடையவர்களை காட்டி கொடுத்து கைது செய்ய துணைபோய் இருப்பார், அரசுடன் சேர்ந்து நடக்க இணங்கி இருப்பார், 50000 மக்களை கொலை செயத கோட்டபாயராஜபக்சாவை கட்டிப்பிடிச்சு கொஞ்ச ஏன் நினைத்தார், அடிபோடும் போது கட்டி பிடிச்சு கொஞ்ச வேண்டும் என்று நிபந்தனையும் போட்டு இருபார்களோ??

:lol::):D

  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்க என்ன செய்கிறீங்கள்.?

வன்னி மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கிறீங்களா.?

கணவன்மாரை இழந்த இளம் விதைவைகளுக்கு மறுவாழ்வு தேடி கொடுகிறீங்களா.?

உங்களுக்காக போராடின புலிகளை சிறையில் இருந்து விட வேணும் என்று தேம்ஸ் நதிக்கு பக்கத்திலே உண்ணாவிரதம் இருகிறீங்களா.?

சிறிலங்கா பொருட்களை இனி தொட மாட்டோம் என்று தொடாமல் இருகிறீங்களா.?

கல்வியை இழந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுகிறீங்களா.?

போரினாலே உள வளம் குறைந்தவர்களை பராமரிக்கிறீங்களா.?

திண்டு போட்டு கொழுபெடுத்து வெட்டியா ராவணன் பார்த்திட்டு வந்து முப்பது வருஷ போராட்டத்தையும், அதற்கு வலுச்சேர்த்தவர்களையும் விமர்சனம் செய்வது. :)

a

We want Tamileelam என்று கூட்டமா வந்து கத்தினதோட உங்கட போராட்டம் எல்லாம் முடிஞ்சு போச்சா.? :D

அதுக்கு பிறகு எங்கே நீங்கள் எல்லாம்.? :lol: இப்ப வந்து தானும் படுக்காமல் ......................................................

கொஞ்ச நாளைக்கு என்ன தான் நடக்குது என்று பாருங்கவன். சிங்களவனுக்கு நூறு ரூபாய் போனாலும் பரவாயில்லை. எங்கட மக்களுக்கு பத்து ரூபாய் என்றாலும் போகட்டுமே. :lol:

அப்படி போகலை என்றால் வாங்கவன் எல்லாருமா சேர்ந்து போராடுவம். :lol:

நான் என்னால் ஆனதை செய்து கொண்டு தான் இருக்கிறேன்...அதை உங்களுக்கு சொல்லிப் போட்டு தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை...என்னை கேள்வி கேட்க முதல் நீங்கள் அவர்களுக்காக என்ன செய்தனீங்கள்...பொறுத்திருந்திருந்து தான் பார்ப்பமே உங்கட கேபி என்ன நன்மை செய்வார் அந்த மக்களுக்கும்,போராளிகளுக்கும் என...கருணாவிலும் பார்க்க பயங்கரமான குற்றவாளி கேபி...கருணாவின் பிரிவினால் பாதிக்கப்பட்டது புலிகள் மட்டும் தான் ஆனால் கேபி செய்த துரோகத்தால் பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள் தான்...அடுத்த தடவை படம் பார்க்கும் போது சொல்லி அனுப்பிறன் வேண்டும் என்றால் வரவும் :lol::D:lol: ...வன்னியில் சனம் செத்திட்டு என தின்னாமல்.குடிக்காமல் வாழ்க்கையே அனுபவிக்காமல் யாழில் ஒருத்தர் இருப்பதையிட்டு சந்தோசம் :lol: ...என்னும் நான் முதல் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அநாதைகளாகி பதினாலு மாசம். இதுவரைக்கும் ஒண்டும் புடுங்காத நீங்கள் இனி தான் புடுங்க போறீங்களோ. நல்ல பகிடி தான் போங்கோ. :)

அரசியல் கட்டுரை எழுதிற உங்களுக்கு கூட திட்டம் தெரியலையோ. :lol:

இல்லாட்டி கடைசியிலை மக்களை ஏமாத்தின மாதிரி திட்டம் இருக்கு மாற்றம் வருமோ :D :D

இதுவரை நாங்கள் ஒண்டும் செய்யவில்லை எண்டு வீட்டுக்கு வந்து பார்த்தனீரோ? :lol: சவுண்டு மட்டும் பலமாக் கேட்குது. எழுத்தில சாராம்சம் இல்லை..! எல்லாம் கற்பனைதான் போல..! :lol: :lol:

அரசியல் கட்டுரை நாங்கள் எழுதினமா? நாங்கள் செஞ்சது யாரோ எழுதினதுக்கு பொழிபெயர்ப்பு அப்பு..! கட்டுரையை வாசிச்சனீங்களோ? தமிழ் படிக்கத் தெரியுமோ? :lol::lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கைதாகி இருந்தால் அடிபோட்ட பயத்தில், சித்திரவதை தாங்க முடியாது, உண்மைகளை சொல்லி இருப்பார், சொத்துக்களை காட்டி கொடுத்து இருப்பார், தனக்கு தொடர்புடையவர்களை காட்டி கொடுத்து கைது செய்ய துணைபோய் இருப்பார், அரசுடன் சேர்ந்து நடக்க இணங்கி இருப்பார், 50000 மக்களை கொலை செயத கோட்டபாயராஜபக்சாவை கட்டிப்பிடிச்சு கொஞ்ச ஏன் நினைத்தார், அடிபோடும் போது கட்டி பிடிச்சு கொஞ்ச வேண்டும் என்று நிபந்தனையும் போட்டு இருபார்களோ??

:lol::lol::)

சித்தன்.. கே.பி. தானாப் போய்ச் சரணடைந்தார் என்றுதான் நானும் நினைக்கிறன்..! ஆனால் உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அவரைப்பற்றி அப்படி எழுத விரும்பவில்லை..! :D:D

  • தொடங்கியவர்

சிங்களத்தின் உடனடி தேவை

-- அதிகரித்து வரும் போர் குற்றச்சாட்டுக்களை முறியடித்தல்

-- புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை ஒழித்தல்

-- நாடு கடந்த தமிழீழ அரசை சிதைத்தல்

-- தமிழரின் அரசியல் அபிலாசைகளை இல்லாமல் செய்தல்

சினாவின் தேவை

-- மனித உரிமைகளில் அக்கறை எள்ளவும் கிடையாது

-- அரசியலி்ல் ஓரளவு அக்கறை இந்தியாவுடனாாது

-- பொருளாதார நலனே ஒரே குறிக்கோள்

இந்தியாவின் தேவை

-- மனித உரிமைகளில் ஓரளவு அக்கறை

-- தமிழரின் அரசியல் அபிலாசைகளை ஓரளவு அக்கறை

-- சிங்களத்தை சீனாவை கட்டுப்பாட்டில் வைத்திருபபது

மேற்கத்திய நாடுகளின் தேவை

-- இந்தியா ஊடாக சிங்களத்தை சீனாவை கட்டுப்பாட்டில் வைத்திருபபது

-- புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை பொருளாதார அரசியல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருபபது

-- மனித உரிமைகளில் ஓரளவு அக்கறை

தமிழரின் தேவை

-- ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை!

-- தமிழரின் அரசியல் அபிலாசைகளை தக்க வைத்தல்

-- நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பலமான அமைப்பாக பேணல்

-- போர் குற்றச்சாட்டுக்களை முனைப்புடன் முன்னெடுத்தல்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வன், உங்கள் கருத்துக்களுக்கு எனது ஆதரவுகள் நிச்சயம் உண்டு.

எப்போது பார்த்தாலும் கே.பி.யை தூற்றிக்கொண்டிருப்பவர்கள், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது செய்ய நினைப்பவர்களை செய்யத் தூண்டுகின்றார்களா என்றால் அதுதான் இல்லை.

தமிழீழக் கனவு இனி ஆயுதம் ஏந்திப் போராடி கிடைக்கவே கிடையாது. தற்போது எம் முன்பாக உள்ள ஒரே வழி இடம்பெயர்ந்த மக்களை அவரவர் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்ய அழுத்தங்களை பிரயோகிப்பதோடு அந்த மக்களுக்கான நிவாரண உதவிகளுக்கான நிதிகளை நாம் வழங்க முன்வர வேண்டும்.

மக்கள் இயல்பு வாழ்வுக்கு வந்தபின்னர் அரசியல் ரீதியாகப் போராடி எமது கனவான தமிழீழ இலட்சியத்தை அடைய முற்பட வேண்டும். அதனை விடுத்து விட்டு வெற்று வார்த்தைகளை விட்டு அறிவுசார் தளத்திலிருந்து சிந்திக்காத வரைக்கும் புலத்தில் இருப்பவர்களே நீங்கள் புலம்பிக் கொண்டுதான் இருப்பீர்களோ?

இதில் எழுத மறந்தது...........

கோத்தபாயாவின் தலமையின் கீழ் ஒரு குழு அமைத்து அதன் ஊடாக காசு அனுப்பி தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்பதே.

  • தொடங்கியவர்

தாயகம், தமிழ் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது

ஒன்பது பதினொன்று (9/11) - இதில் கிட்டத்தட்ட 3000 பொதுமக்கள் கொல்லப்ப்ட்டனர். இதன் விளைவுகளும் எமது ஆயுதப்போராட்டத்துக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்தது.

பின்னர் இரு பெரும் யுத்தங்களை அமெரிக்காவுடன் சேர்த்து பல அரசுகள் முன்னெடுத்தன.

ஈராக்கில் அந்த அரசுக்கான யுத்தத்தை வெற்றி கொண்ட நேச நாடுகள் அப்கானிஸ்தானில் உள்ள தலிபானையும் அல் கேடாவையும் அழிக்கமுடியாமல் உள்ளனர். பல நாடுகள் தமது அதிகரித்து வரும் படையினர் இழப்பு மற்றும் பணச்செலவுகள் மத்தியில் நாட்டு மக்கள் எதிர்ப்புக்களுக்கு இணங்க படையினரை வாபஸ் பெற உள்ளனர்.

மீண்டும் தலிபான் ஆட்சியை அமைத்தால் அந்த மக்களுக்கு உதவ அபிவிரித்திக்கு பணம் கேட்டால் மேற்கைத்திய அரசுகள் கொடுக்குமா?

இலங்கையில் இரு தேசியங்கள் இருதாயகங்கள்.

இரண்டு இலட்சத்துக்கும் மேலான மக்களை கொன்றொழித்து அவர்க்ளை காலாகாலமும் அடிமையாக வைத்திருக்க எண்ணும் ஒரு பயங்கரவாத அரசுக்கு ஊடாக அவர்களின் புனர்வாழ்வு அல்லது அபிவிரித்தி என்ற கவர்ச்சிகரமான பெயர்களில் உதவி கேட்பது புலம் பெயர்ந்த மக்களை குழப்பும் ஒரு நரித்திட்டம்.

முள்ளிவாய்க்கால் வரையும் தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டுமே எதிரியாகக் கொண்டிருந்த சிங்களம் இன்று ஒரு பெரிய பட்டியல் ஒன்றை உருவாக்கி வருகின்றது:

-- புலம் பெயர் தமிழ் மக்கள்

-- போர்க்குற்றங்கள் பற்றி ஆலோசனை செய்யும் குழு

-- ஐரோப்பிய ஒன்றியம் - பொருளாதார அரசியல் கோட்பாடுகள் ( http://topics.europeanvoice.com/topic/country/Sri+Lanka )

-- அதிகரித்து வரும் சீனாவின் உறவுகள்

சிங்களம் ஒன்றில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்து அதன் மூலம் புலம் பெயர் மக்களின் உதவியை நாடவேண்டும் இல்லை சர்வதேச அமைப்புக்களை கண்காணிக்க விட்டு அதன் மூலம் உதவி கேட்கவேண்டும்.

தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது. அபிவிருத்தி என்பது எக்காலத்திலும் மேற்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அனுபவித்து வந்த தமிழர் தாயகம்,தமிழ்த் தேசியத்தை இழந்தால் அப்பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொண்டாலும் கூட உரிமைப் பாதிப்பால் அங்கு அபிவிருத்தியை அனுபவிக்க முடியாமல் வேதனை நிறைந்த வாழ்க்கையாகத்தான் தமிழர்களுடைய வாழ்க்கை அமையலாம்.

"மீண்டும் மீண்டும் ஏமாற்ற நினைப்பவனும் மடையன் மீண்டும் மீண்டும் ஏமாறுபவனும் மடையன்" - பழமொழி

Edited by akootha

இரண்டு இலட்சத்துக்கும் மேலான மக்களை கொன்றொழித்து அவர்க்ளை காலாகாலமும் அடிமையாக வைத்திருக்க எண்ணும் ஒரு பயங்கரவாத அரசுக்கு ஊடாக அவர்களின் புனர்வாழ்வு அல்லது அபிவிரித்தி என்ற கவர்ச்சிகரமான பெயர்களில் உதவி கேட்பது புலம் பெயர்ந்த மக்களை குழப்பும் ஒரு நரித்திட்டம்.

"மீண்டும் மீண்டும் ஏமாற்ற நினைப்பவனும் மடையன் மீண்டும் மீண்டும் ஏமாறுபவனும் மடையன்" - பழமொழி

பௌத்த சிங்கள, 'மதச் சார்பற்ற' இந்திய பயங்கரவாதிகளின் கூடுச்சதி.

அரசின் திட்டத்தை அம்பலப் படுத்திய அருண்குமார் பாராட்டப் படவேண்டியவராய் இருக்கலாம். ஆனால் ஒரு அரச கைதி மூலமாக ஏதாவது சாதிக்க முடியுமென்று நம்பிச் சென்றதாகவும் பின்னர் அந்தக் கைதி அரச நிகழ்ச்சி நிரலில் வேலை செய்கிறார் எனபதைக் கண்டு பிடித்தும் வெளியிட்டிருக்கிறார். இதனை ஒரு குழந்தை கூட இங்கேயிருந்தே சொல்லி விடும்.

அரசின் திட்டத்தை அம்பலப் படுத்திய அருண்குமார் பாராட்டப் படவேண்டியவராய் இருக்கலாம். ஆனால் ஒரு அரச கைதி மூலமாக ஏதாவது சாதிக்க முடியுமென்று நம்பிச் சென்றதாகவும் பின்னர் அந்தக் கைதி அரச நிகழ்ச்சி நிரலில் வேலை செய்கிறார் எனபதைக் கண்டு பிடித்தும் வெளியிட்டிருக்கிறார். இதனை ஒரு குழந்தை கூட இங்கேயிருந்தே சொல்லி விடும்.

உதை கூட பல குழந்தைகள் இன்னும் நம்ப தயாராக இல்லை எண்டதுதான் உண்மை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசின் திட்டத்தை அம்பலப் படுத்திய அருண்குமார் பாராட்டப் படவேண்டியவராய் இருக்கலாம். ஆனால் ஒரு அரச கைதி மூலமாக ஏதாவது சாதிக்க முடியுமென்று நம்பிச் சென்றதாகவும் பின்னர் அந்தக் கைதி அரச நிகழ்ச்சி நிரலில் வேலை செய்கிறார் எனபதைக் கண்டு பிடித்தும் வெளியிட்டிருக்கிறார். இதனை ஒரு குழந்தை கூட இங்கேயிருந்தே சொல்லி விடும்.

இங்கு பலர் அரசுடன் சேர்ந்து வேலை செய்யவும், அரசு ஏதாவது தரும், அரச கைதிமூலம் ஏதாவது சாதிக்க முடியும் என நம்பிக்கையுடன் இருக்கினம், போட்டு வந்த வரில் ஒருவர் பிபிசி க்கு சொல்லுறார் கேபி அரசின் கட்டுபாட்டில் இருந்தாலும் அரச நிகழ்ச்சி நிரலில் வேலை செகய்ய வில்லை என்று சொல்லுறார், ஒரு குழந்தப்பிள்ளைக்கு தெரிந்தது அவருக்கு தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.