Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு?

திகதி: 06.07.2010 // தமிழீழம்

சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும், கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்கா பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்பொழுது சிங்களப் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்கி வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஈ.பி.டி.பி, புளொட், கருணா, பிள்ளையான் குழுக்களுக்கு மேலதிகமாக தமிழீழ தாயகப் பகுதிகளில் ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி போன்ற ஆயுதக் குழுக்களையும், கே.பி தலைமையில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையும் இயங்க விடுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு டக்ளஸ் தேவானந்தா இணக்கம் தெரிவித்திருந்த பொழுதும், இதனால் வவுனியாவில் தமது உறுப்பினர்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறி தனது தயக்கத்தை சித்தார்த்தன் வெளிப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

இதன்பொழுது கருத்துக்கூறிய பசில் ராஜபக்ச: ‘‘எல்லோரும் தங்களை இலங்கையர்கள் என்று சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. இந்த நாடு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற எந்தவொரு தனியினத்திற்கும் சொந்தமானது அல்ல.

இது சகல இலங்கையர்களுக்கும் சொந்தமானது. இந்த நாட்டின் எந்தப் பாகத்திலும் எவரும் வசிக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வசிப்பது போன்று யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வசிக்கலாம். இதனை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பிரபாகரன் செய்த தவறை இனியாவது நீங்கள் செய்யக்கூடாது. மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றார்கள். இதற்கு புலிகளோடு இருந்து இயங்கி இப்பொழுது எங்களோடு இணைந்திருக்கும் நீங்கள் இடம்கொடுக்கக்கூடாது.'' என்று கூறியதாக, கே.பியுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து நம்பகமாக தெரிய வந்துள்ளது.

இதேயிடத்தில் கருத்துக்கூறிய கோத்தபாய ராஜபக்ச: உங்களுக்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு நீங்கள் செய்யும் உதவி அளப்பரியது. புலிப் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமது படையினர் மட்டும் தியாகங்களை செய்யவில்லை.

ஈ.பி.டி.பி, புளொட், ரி.எம்.வி.பி உட்பட பல தமிழ்க் கட்சிகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை நாம் அழித்தோம். அதற்காக உங்களின் உறுப்பினர்கள் பலரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தார்கள். உங்களின் தியாகத்தை நாம் மறக்கவில்லை. மீண்டும் நாட்டில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் கே.பி உறுதியாக இருக்கின்றார்.

கடந்த கால நிகழ்வுகளை நாங்கள் மறந்துவிட்டோம். இப்பொழுது எங்களுடன் ஒத்துழைக்கும் கே.பியிற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.'' என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது யாழ் தீவகம் நயினாதீவுப் பகுதியில் உள்ள சிறீலங்கா கடற்படைத் தளத்தில் ஈ.பி.டி.பியினரால் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, வன்னியில் சனசஞ்சாரம் குறைவாகக் காணப்படும் வனப்பகுதிகளை அண்டிய கிராமங்களில் புளொட் குழுவினரால் காவலரண்களும், முகாம்களும் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தனது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக கே.பி குழுவை வடதமிழீழப் பகுதிகளில் களமிறக்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளின் சிறீலங்கா அரசு ஈடுபடுவதையே இது உணர்த்துவதாக, தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ் பல்லைக் கழக பேராசிரியர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

- அதியமான்

எனக்கு வந்த ஊடக நண்பரின் மின்னஞ்சலிலிருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்

சேரமான்களின் பார்வை இன்னும் அப்படியேதான் இருக்கின்றது என்பது மேற்குறிப்பிட்ட செய்தியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

2009 மே 18 க்குப்பின்னரும் கனவுலகிலேயே தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் துயில் எழுப்ப ஒரு மீட்பர் வரவேண்டும் போலிருக்கின்றது.

2009 மே 18 க்குப்பின்னரும் கனவுலகிலேயே தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் துயில் எழுப்ப ஒரு மீட்பர் வரவேண்டும் போலிருக்கின்றது.

கே.பி தான் மீட்பர் [

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது சுயநலத்தை முன்னிலைப்படுத்தும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தர என்று தலைவரை நம்பி தங்கள் சொந்த வாழ்க்கையை கூட தியாகம் செய்து போராடப் போய் இன்று புதைகுழிகளில் வாழும் போராளிகளாகாமல்.. எதிரியின் சிறைகளில் இருக்கும் போராளிகளை மீட்க கே.பி ஒரு வழி செய்வாராக இருந்தால் அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றாலும் செய்யட்டும். அந்தப் போராளிகளை மீட்பது தாயகத்துக்கு செய்யும் பணிகளில் ஒன்றாகவே நோக்க வேண்டும்..!

சேரமான்களும் அதியமான்களும் 15,000 போராளிகளுக்கும் 80,000 மக்களுக்கும் விடுதலைக்கு ஒரு வழி சொல்லிப்போட்டு.. கே பியை என்ன எவரையாவது திட்டட்டும் தீர்க்கட்டும்.. அதை ஏற்றுக் கொள்ளலாம். சும்மா வெறுவாய் மெல்லுவதால் எதுவும் ஆகப்போவதில்லை..! :D:lol:

Edited by nedukkalapoovan

எப்படியாவது சுயநலத்தை முன்னிலைப்படுத்தும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தர என்று தலைவரை நம்பி தங்கள் சொந்த வாழ்க்கையை கூட தியாகம் செய்து போராடப் போய் இன்று புதைகுழிகளில் வாழும் போராளிகளாகாமல்.. எதிரியின் சிறைகளில் இருக்கும் போராளிகளை மீட்க கே.பி ஒரு வழி செய்வாராக இருந்தால் அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றாலும் செய்யட்டும். அந்தப் போராளிகளை மீட்பது தாயகத்துக்கு செய்யும் பணிகளில் ஒன்றாகவே நோக்க வேண்டும்..!

சிறையில் வாடும் போராளிகளை மீட்க்க KP ஏதும் செய்தால் நல்லாத்தான் இருக்கும்...

ஆனால் நடப்பதும் நடந்ததும் இவ்வளவுகாலமும் வெளி நாடுகளில் இருந்து ஆயுதங்கள் தாயகத்துக்கு கடத்தியது முதல் வியாபாரங்கள், இன்னும் வேறுவகையான வேலைகள் எண்று செயற்பட்ட தலைமறைவு போராளிகள் கடத்தப்பட்டும் , கைது செய்யப்பட்டும் கொண்டு இருக்கிறார்களே... ? அனேகமாக விமான நிலையங்களிலும் நாடுகளின் எல்லைகளில் நடக்கும் இந்த கைதுகள் காப்பாத்துறது மாதிரி தெரிய இல்லையே...?? இல்லை வெளிநாட்டிலை இருந்து இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு போனார்கள் இலங்கைக்கு வந்து சொகுசா வாழவேண்டி செய்கிறார்களோ...??

Edited by தயா

இலங்கைக்கு ஏன் போகினம். நிலைமை தெரியும் தானே. பிறகெதற்கு.. அவையா போய் வலையில சிக்கிறதிற்கு என்ன செய்வது..??! :D:lol:

இலங்கைக்கு ஏன் போகினம். நிலைமை தெரியும் தானே. பிறகெதற்கு.. அவையா போய் வலையில சிக்கிறதிற்கு என்ன செய்வது..??! :D:lol:

நான் சொல்வது இலங்கையில் அல்ல... அனேகமான தூரகிழக்கு நாடுகளில்... இலங்கை அரசாங்கம் அவர்களை இலங்கையில் வைத்து கைது செய்ததாக சொல்லிக்கொள்கிறது... ! இந்த கைதுகளின் பின்னணியில் KP இருக்கிறார் எண்டது மட்டும் உண்மை... அவர்களின் கடவுச்சீட்டு இலக்கங்கள் , எந்த நாட்டின் குடியுரிமை கொண்டவர் என்பது முதல் அவ்ர்களை பிரத்தியோகமாக தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் வரை KP எழுதி எடுத்துக்கொண்டு போய் கொடுத்து இருக்கிறார்...

அப்போ கே பி யை தாய்லாந்தில் வைத்து கைது செய்துவிட்டு பின்னர் அவரை விடுவது போல் விட்டு புலிகள் பற்றிய தொடர்புகளை கண்காணித்து இறுதியில் அவரை வைத்தே தலைவரையும் மடக்கியுள்ளதா சர்வதேசம். ஏனெனில் முன்னர் கே பி கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியை தாய்லாந்து மறுத்திருந்தது. பின்னர் கே பி யை சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக அறிவித்தனர் புலிகள். அதற்கிடையில் புலிகளின் பல கப்பல்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு சர்வதேச கடலிலேயே மூழ்கின. அப்போ இவற்றிற்கு கேபிக்கும் தொடர்பிருக்கா...??!

கேபி தான் தப்புவதற்காக பல ஆண்டுகளாகவே வேறு உளவு அமைப்புக்களுடன் இணைந்து புலிகளை உளவு பார்த்துள்ளாரா..??!

அல்லது கேபி சந்தர்ப்ப சூழ்நிலையால் மாறிவிட்டாரா..??!

எதுஎப்படியோ.. கேபியால் அப்பாவி போராளிகள் பாதிக்கப்படாது விடுவிக்கப்பட முடியும் என்றால் அதையாவது செய்யட்டும்.. என்ற நப்பாசை எனக்கு..! :D:lol:

Edited by nedukkalapoovan

அப்போ கே பி யை தாய்லாந்தில் வைத்து கைது செய்துவிட்டு பின்னர் அவரை விடுவது போல் விட்டு புலிகள் பற்றிய தொடர்புகளை கண்காணித்து இறுதியில் அவரை வைத்தே தலைவரையும் மடக்கியுள்ளதா சர்வதேசம். ஏனெனில் முன்னர் கே பி கைது செய்யப்பட்டதாக வந்த செய்தியை தாய்லாந்து மறுத்திருந்தது. பின்னர் கே பி யை சர்வதேச விவகாரங்களுக்காக பொறுப்பாளராக அறிவித்தார் தலைவர். அதற்கிடையில் புலிகளின் பல கப்பல்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு சர்வதேச கடலிலேயே மூழ்கின. அப்போ இவற்றிற்கு கேபிக்கும் தொடர்பிருக்கா...??!

கேபி தான் தப்புவதற்காக பல ஆண்டுகளாகவே வேறு உளவு அமைப்புக்களுடன் இணைந்து புலிகளை உளவு பார்த்துள்ளாரா..??!

அல்லது கேபி சந்தர்ப்ப சூழ்நிலையால் மாறிவிட்டாரா..??!

எதுஎப்படியோ.. கேபியால் அப்பாவி போராளிகள் பாதிக்கப்படாது விடுவிக்க முடியும் என்றால் அதையாவது செய்யட்டும்.. என்ற நப்பாசை எனக்கு..! :D:lol:

அது பெரிய கதை... ஆனால் KP நீண்ட காலமாக இலங்கை உளவுப்பிரிவோடு இயங்கி இருக்கிறார்...! கருணா பிரிந்து போன அதே காலங்களில் பொறுப்புக்களில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு இருந்த KP யுடன் நெருக்கமாக தொடர்புகளை நீண்டகாலமாக வைத்து இருந்தான் என்பது மட்டும் உண்மை... அதை கருணாவே சொல்லி இருக்கிறான்...

இப்போ KP வெளிப்படையாக எதிராக செயற்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரியும்...

K.P விலக்கப்பட்டு இருந்தால், நிச்சயமாக புலிகள் அவருக்குத் தெரியாமல் தமது கட்டமைப்புக்களை எல்லாம் மாற்றி இருப்பார்கள் தானே, எனது சந்தேகம் என்னவென்றால் இவர் உண்மையிலேயே தலைவரால் இறுதிக்கட்டதில் நியமிக்கப்பட்டாரா அல்லது ஏற்பட்ட இடை வெளியைப் பாவித்து தனைத் தானே அறிவித்தாரா, முக்கியமானது என்ன்வென்றால் சர்வதேச ரீதியாக தேடப்பட்ட ஒருவரை நம்பி தலைவர் பொறுப்பை ஒப்படைத்து இருப்பாரா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு கேபி கைது செய்யபடபோது பிராவ்முகர்ஜிதான் போய் வெளியில் எடுத்து விட்டு வந்ததாகவும், அதன் பின் றேவின் கைகளில் என்றும் சொல்லபட்டது, டொக்டர் வெளியில் வந்து உண்மைகளை புட்டு வைத்ததில் குட்டு வெளிபட்டு விட்டது, எந்த புலம்பெயர் தமிழனும் கேபியை நம்பதயார் இல்லை, என புரிந்து, கருனா, டக்கிளஸ்போல செயற்பட தொடங்கி விட்டார் என்பதைதான் இந்த செய்தி சொல்லுகிறது.

Edited by சித்தன்

K.P விலக்கப்பட்டு இருந்தால், நிச்சயமாக புலிகள் அவருக்குத் தெரியாமல் தமது கட்டமைப்புக்களை எல்லாம் மாற்றி இருப்பார்கள் தானே, எனது சந்தேகம் என்னவென்றால் இவர் உண்மையிலேயே தலைவரால் இறுதிக்கட்டதில் நியமிக்கப்பட்டாரா அல்லது ஏற்பட்ட இடை வெளியைப் பாவித்து தனைத் தானே அறிவித்தாரா, முக்கியமானது என்ன்வென்றால் சர்வதேச ரீதியாக தேடப்பட்ட ஒருவரை நம்பி தலைவர் பொறுப்பை ஒப்படைத்து இருப்பாரா???

சொல்வது இலகு ஆனால் எல்லாரையும் அடியோடு மாற்றுவதுக்கு ஆள் பலம் புலிகளிடம் இருந்து இருக்கும் எண்டு நம்புகிறீர்களா...?? மாறி வருபவர்களில் நம்பிக்கையானவர்களாக எல்லாரும் இல்லாவிட்டால்( ஊடுருவலாளர்கள் உட்புகுந்தால்) இரண்டும் ஒண்டுதானே....??

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர் அழைத்தார் போனோம் என்று சொல்வதற்கு வெட்மாயில்லையா?எந்த நம்பிக்கையில் அங்க போனார்கள்?முகாம்களில் உள்ளவர்களின் நலன்கள் குறித்துப் பேசப்போவதாகச் சொல்வது ஒரு கண் துடைப்பு.இனி முகாம்களில் உள்ளவர்களுக்கு சிறிலங்கா அரசும் அதற்கு உதவி செய்த நாடுகளுமே பொறுப்பேற்க வேண்டும்.தமிழ் மக்கள் யாரும் உதவிசெய்ய விரும்பினால் உங்கள் உங்கள் சொந்தங்களுக்கு நேரடியாக உதவி செய்தால் போதும்.இன்றைய சூழ்நிலையில் எந்த அமைப்பையும் நம்பி காசு கொடுப்பது முட்டாள்த்தனம். சிறிலங்கா அரசை மீறி எந்த அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேபி நல்லவரா கெட்டவரா என்ற பட்டி மன்ற விவாதம் தேவையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ் தேவானந்தாவும் ஏதோ தன்னாலான உதவியை தனது மக்களுக்கு செய்து கொண்டு தானே இருக்கிறார் அவரது உதவியை தமிழ் மக்கள் ஏற்கக் கூடாது என எழுதிய சிலர் கேபியிடம் உதவியை எதிர்பார்த்து எழுதுவது வேடிக்கையாய் உள்ளது...டக்லசினால் இவ்வளவு மக்கள் கொல்லப்படவில்லை...இவ்வளவு போராளிகள் உள்ளுக்குள் மாட்டுப்படவில்லை.

டக்கிளஸை கே பி யோட ஒப்பிட முடியாது. டக்கிளஸ் பெரும் படுகொலைகளுக்கு எல்லாம் பின்னால் இருந்தவர். செம்மணி ஆகட்டும்.. முள்ளிவாய்க்கால் ஆகட்டும் இவர்கள் முன்னிலையில் தான் நிகழ்ந்தது. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்தும்.. அவர்களை புலிகள் என்று சித்தரித்து வாழாதிருந்தவர் இந்த டக்கிளஸ். அவர் மக்களுக்காக எதனையும் பெரிதாக செய்யவில்லை. இப்போது கூட மக்களை வைத்து தன் வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார்.

கே பி ஆரம்பத்திலாவது மக்களுக்காக தேசிய தலைவரின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டிருக்கிறார். டக்கிளஸ் என்றுமே மக்கள் விரோதியாகவே நின்றிருக்கிறார். அவர் இந்தியப் படைகள் காலத்திலும் மக்களை கொன்றுதான் போட்டார். இப்பவும் அதையே செய்து பிழைக்கிறார்.

ஒய் நெடுக்கர், என்னத்தை சொல்ல வாறீர்??? ... தலைவரின் பாசறையில் கேபி வளர்ந்தவர்... ஆகையால் இன்றைய கூத்தை மன்னிக்கலாம் என்றா??? இல்லை ????

தலைவரின் பாசறையில்தான் ... மாத்தயா, கருணா, இன்று கேபி, பாப்பா உட்பட்ட தமிழ்ச்செல்வன்கள் வாழ்ந்தார்களோ/வளந்தார்கள்!!! ... அவையளையும் மன்னிப்போம் அப்ப?????

குத்தி மிஞ்சினால் ஒரு நாளாயிரம் சனங்களைத்தான் போட்டிருப்பான் ... ஆனால் கேயண்ணா பீயாண்ணாவோ நாற்பதுனாயிரத்தை திண்டவராம் ... என்கிறாங்களடாப்பா, ஆனால் அவரை மன்னிப்போம் ... தலைவரின் பாசறையில் வளர்ந்தபடியால்??????

கொள்கையில் சிங்கமடாப்பா நீ!

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்து செய்திருந்தால்..

எவனாக இருந்தாலும் ஒன்றுதான்...

இன்னமும் ஒலி வடிவிலான பேட்டிகளெதுவும் கே பி யிடமிருந்து வரவில்லையே. அதுதான் கொஞ்சம் கஸ்ரமாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: தலைவரின்ர பாசறையில வளர்ந்ததால கே.பீ என்ன செய்தாலும் மன்னிக்கலாமா?? அப்ப கருணாக்கள், மாத்தையாக்கள், பிள்ளையான்கள் எல்லாரும் செய்ததை மன்னித்துவிடலாமே?? ஏன் அதை இன்னும் செய்யாமலிருக்கிறோம்??

முள்ளிவாய்க்காளில் கொல்லப்பட்ட 40,000, அதற்குமுதல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கு, கொல்லப்பட்ட போராளிகள், அழிக்கப்பட்ட போராட்டம் இவையெல்லாவற்றிற்கும் யார் பொறுப்பு?? கே.பீ இல்லையா??ஒரு இனத்தின் இருப்பையே இல்லமல் அழித்த, அழிக்கத் துணைபோன ஒருவரை போராளிகளை விடுவிப்பார் என்று எப்படி நம்புவது??

ஒருமுறையாவது அவர் போராளிகளை விடுவிக்கப்போகிறேன் என்று சொன்னாரா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Devananda, Perumal join hands in new forum

[TamilNet, Wednesday, 07 July 2010, 08:45 GMT]

A group named 'Tamil Political Parties Forum' (TPPF) of nine Tamil Political parties, paramilitary cum political parties and activists allegedly backed by New Delhi and Colombo, has been formed with the aim to explore ways of finding solution for the problems of the Tamil people in the North and East, political sources in Colombo said. Varatharaja Perumal, Chandrahasan and PLOTE Siddharthan, already known to have close links with New Delhi, have joined hands with M.K. Sivajilingam, a former TNA MP, Anandasangaree of TULF, Pillayan from TMVP and Kumarakuruparan of Democratic People Front in creating the forum. The move has been initiated by Shereen Xavier of Home for Human Rights and Douglas Devananda, the leader of EPDP, who is aligned with Mahinda Rajapaksa government.

The Tamil National Alliance (TNA) 'carefully' avoided to take part in the meetings. TNA parliamentarian Mavai Senathirajah publicly stated that the TNA feared 'hidden motives' behind the move mooted by Devananda.

The Tamil National Peoples Front (TNPF) also avoided taking part in the inauguration of the forum. Informed sources said that the TNPF's position was that it would consider participation when all parties, including the TNA, were willing to agree upon a minimum programme for the humanitarian needs of the Tamil people in the North and East.

Shereen Xavier, the executive director of the ‘Home for Human Rights’ organization, has been working with the move for some time. She had also attended the meeting held in Zurich last year.

Sri Lanka government, through its minister Douglas Devananda, was very much interested in wedging in KP and Karuna into TPPF, political observers in Colombo said.

The inauguration meeting took place 24 June and its second meeting 2 July in Colombo with the participation of nine Tamil organizations including the Tamil United Liberation Front (TULF) led by Anandasangari, the Eelam People’s Democratic Party (EPDP) led by Douglas Devananda, the Eelam People’s Revolutionary Front (EPRLF) Pathmanaba faction led by Varatharaja Perumal, T. Sidhdharthan of People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) and C. Chandrahasan.

Some members of TPPF did not entertain Douglas Devananda’s proposal to bring in Selvarasa Pathmanathan. They said that Mr. Pathmanathan was already functioning as an unofficial limb of Sri Lanka government carrying out its scheme.

Devananda's efforts to make Vinayagamoorthy Muralitharan alias Karuna a member of TPPF was also rejected as it was pointed out that Karuna being a prominent person of Sri Lanka Freedom Party (SLFP) is not entitled to join TPPF.

இதன்பொழுது கருத்துக்கூறிய பசில் ராஜபக்ச: ‘‘எல்லோரும் தங்களை இலங்கையர்கள் என்று சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. இந்த நாடு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற எந்தவொரு தனியினத்திற்கும் சொந்தமானது அல்ல.

இது சகல இலங்கையர்களுக்கும் சொந்தமானது. இந்த நாட்டின் எந்தப் பாகத்திலும் எவரும் வசிக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வசிப்பது போன்று யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வசிக்கலாம். இதனை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

கண்டியிலும், அனுராதபுரத்திலும் சந்திகள் எங்கும் பிள்ளையார் சிலைகளை வைக்கலாமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.