Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

சங்காராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ போய்ட்டார் 4 வது அவுட் :D :D

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply

44 ரன் 60

:D :D :D

41 Fரொம் 50

பையன் நிக்கிறீங்களோ?

2 த்ரம் 4

33 ப்றம் 48

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விக்கட்டும் போய் விட்டது. :D

நாய்க்கு ஒரு ஓவரா கொடுத்து மீண்டும் கஷ்டமாக்கி விட்டார்கள் இருந்தாலும் 5வது விக்கெட் போட்டுது.

அடுத 4 ஏன் இவருக்கு ஓவர் கொடுத்தார்கள்? முதல் ஓவருக்கும் 2 தரம் 4 கொடுத்தவர்.

இலங்கை வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணிக்கு எனது வாழ்த்துகள்.அதே நேரத்தில் நியூசிலாந்தையும் பாராட்ட வேண்டும்...அதே மாதிரி நாளை இந்தியா வெல்ல வேண்டும்[எனக்கு இந்தியா பிடிக்காது]...கடைசியில் இலங்கை கப் தூக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

44 ரன் 60

:D :D :D

41 Fரொம் 50

பையன் நிக்கிறீங்களோ?

2 த்ரம் 4

33 ப்றம் 48

வந்திட்டன்,,,

படுத்து நித்திரையாய் போயிட்டன்.. 2விக்கேட்டுக்கு 161 ஒட்டமாய் இருக்கேக்க.

இப்ப பார்க்க அவங்கள் கூட விக்கேட் எடுத்துட்டாங்கள்..

நியுசிலாந் 25 ஒட்டம் கூட எடுத்து இருக்கனும் , சிறிலங்கனை மடக்கி இருப்பினம் என்று நினைக்கிறன் :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை விளையாடப் போக்கும் வீரர்கள் விபரம்

India 1 Virender Sehwag, 2 Sachin Tendulkar, 3 Gautam Gambhir, 4 Virat Kohli, 5 Yuvraj Singh, 6 MS Dhoni (capt & wk), 7 Suresh Raina, 8 Yusuf Pathan / R Ashwin, 9 Harbhajan Singh, 10 Zaheer Khan, 11 Ashish Nehra

Pakistan 1 Kamran Akmal (wk), 2 Mohammad Hafeez, 3 Asad Shafiq, 4 Younis Khan, 5 Misbah-ul-Haq, 6 Umar Akmal, 7 Shahid Afridi (capt), 8 Abdul Razzaq, 9 Saeed Ajmal / Abdur Rehman, 10 Umar Gul, 11 Wahab Riaz / Shoaib Akhtar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் உலக கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதியில் "பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற இந்திய வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மொகாலியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் (பகலிரவு), இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

பலமான பேட்டிங்:

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக காட்சி அளிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக் (342 ரன்கள்), அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இவர், இன்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழியலாம். "சூப்பர் பார்மில் உள்ள "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (379 ரன்கள்), சதத்தில் சதம் கடந்து சாதிக்கலாம். மூன்றாவது வீரராக களமிறங்கும் காம்பிர் (269 ரன்கள்), தனது பொறுப்பான ஆட்டத்தை தொடரலாம்.

யுவராஜ் நம்பிக்கை:

"மிடில்-ஆர்டரில் யுவராஜ் சிங் (341 ரன்கள்) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நான்கு முறை "ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள இவர், இன்று சொந்த ஊரில் முழுதிறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திடலாம். கிடைத்த வாய்ப்பை சுரேஷ் ரெய்னா சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இன்று யூசுப் பதான் களமிறங்குவது சந்தேகம். விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

ஜாகிர் மிரட்டல்:

பவுலிங்கை பொறுத்தவரை வேகத்தில் ஜாகிர் கான் மிரட்டி வருகிறார். இதுவரை 17 விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்துக்கு கைகொடுக்கும் மொகாலி மைதானத்தில் முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹ்ரா உள்ளிட்டோரும் சாதிக்கலாம்.

அஷ்வின் எதிர்பார்ப்பு:

சுழலில் அனுபவ ஹர்பஜன் சிங் (6 விக்கெட்) இருப்பது பலம். இவருடன் இளம் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (4 விக்கெட்), துல்லியமாக பந்துவீசி எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கிறார். ஆனால் மொகாலி மைதானத்தில் சுழல் எடுபடாது என்பதால், ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்கலாம். பகுதிநேர சுழலில் "ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் (11 விக்கெட்) விக்கெட் வேட்டை நடத்தி வருவது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

"மிடில்-ஆர்டர் பலம்:

லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான காலிறுதியில், கம்ரான் அக்மல், முகமது ஹபீஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தது. எனவே இன்றும் இவர்கள் அசத்தலாம். "மிடில்-ஆர்டரில் அனுபவ மிஸ்பா (192 ரன்கள்), யூனிஸ் கான் (172 ரன்கள்) இருப்பது பலம். இதுவரை 211 ரன்கள் எடுத்துள்ள உமர் அக்மல், தனது ரன் வேட்டையை தொடரலாம். அப்ரிதி (65 ரன்கள்), அப்துல் ரசாக் (101 ரன்கள்) உள்ளிட்ட "ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் அசத்தல் வெற்றி பெறலாம்.

பலமான பந்துவீச்சு:

இம்முறை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு. சுழலில் கேப்டன் அப்ரிதி (21 விக்கெட்), விக்கெட் மழை பொழிகிறார். நான்கு முறை, நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி உள்ள இவர், இந்தியாவுக்கு எதிராக இன்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு முகமது ஹபீஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல் உள்ளிட்ட இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் உமர் குல் (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். மொகாலி மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், சோயப் அக்தருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். வாகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்.

பலமான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி, வலுவான பவுலிங் பலத்துடன் உள்ள பாகிஸ்தானுடன் மோத இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

ஐந்தாவது முறை

உலக கோப்பை அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய நான்கு (1992, 96, 99, 2003) போட்டிகளில், இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

* கடந்த 1996ல், 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 7 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 1999ல், 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது. கடந்த 1992ல், 173 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

* உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (4 போட்டி, 228 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சயீத் அன்வர் (3 போட்டி, 185 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

* இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் (2 போட்டி, 8 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முஸ்தாக் அகமது (2 போட்டி, 5 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.

---

பாக்., ஆதிக்கம்

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 119 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 69, இந்தியா 46 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

---

இம்மைதானத்தில் இதுவரை...

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் அரையிறுதி போட்டி, மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இங்கு, இவ்விரு அணிகள் இரண்டு (1999, 2007) போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

* கடந்த 1999ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 196 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

* கடந்த 2007ல், இங்கு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. இதனை 49.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி "சேஸ் செய்தது.

* இந்திய அணி, இங்கு விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, நான்கு தோல்வியை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.

* இங்கு, அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆறு போட்டிகளில் பங்கேற்று 281 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சார்பில் இசாஜ் அகமது, 3 போட்டியில் பங்கேற்று 162 ரன்கள் எடுத்துள்ளார்.

* இங்கு, அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள இந்திய பவுலர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங் (5 போட்டி, 9 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். பாகிஸ்தான் சார்பில் சக்லைன் முஷ்டாக் (3 போட்டி, 8 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.

* இங்கு அதிக ரன்கள் எடுத்துள்ள அணிகள் வரிசையில் தென் ஆப்ரிக்கா முன்னிலை வகிக்கிறது. இம்முறை நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா.

---

எட்டு ஆண்டுகளுக்கு பின்...

உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. முன்னதாக கடந்த 2003ல் செஞ்சுரியனில் நடந்த லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

---

நான்கு ஆண்டுகளுக்கு பின்...

இன்றைய அரையிறுதிப் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. கடைசியாக, கடந்த 2007ல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க சோயப் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

* கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். பின், அதே ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்திய மண்ணில் போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

---

அரையிறுதிக்கு வந்த பாதை

இந்தியா

லீக் சுற்று:

1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.

2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை ஆனது.

3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.

5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி:

7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பாகிஸ்தான்

லீக் சுற்று:

1. கென்யாவுக்கு எதிராக 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

2. 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி.

3. கனடாவை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

4. நியூசிலாந்திடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.

5. 7 விக்கெட் வித்தியாத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.

6. ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி:

7. வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

---

சச்சின் "99

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 99 சதம் அடித்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கடந்து புதிய உலக சாதனை படைக்கலாம்.

* கடந்த 2007ல், பாகிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சச்சின், 91 பந்தில் 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது "சூப்பர் பார்மில் உள்ள இவர், அன்று நழுவவிட்ட சதத்தை, இன்று பதிவு செய்யலாம். இதன்மூலம் சதத்தில் சதம் கடந்து புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

---

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயார் நிலையில் விமான எதிர்ப்பு பீரங்கிகள்! * உச்சபட்ச பாதுகாப்பில் திணறும் மொகாலி

:o

மொகாலி: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் பிரதமர்கள் வருகையால், மொகாலியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் அனுமதியில்லாமல் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்த, தயார் நிலையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும், உலக கோப்பை அரையிறுதி போட்டியைக் காண, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி வருகின்றனர். இதனால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2,200 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தவிர, சிறப்பு ஆயுதங்களை கையாள, இஸ்ரேலில் பயிற்சிபெற்ற அணி, கடந்த 2008ல் மும்பை தாக்குதலில் மீட்புப்பணியில் ஈடுபட்ட கமாண்டோ படையினர், தேசிய பாதுகாப்பு படை என பல்வேறு தரப்பினரும் பாதுகாப்பில் பங்கேற்றுள்ளனர்.

ஏ.கே-47, எம்.பி-9 மெசின் கன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல்கள் மற்றும் நவீன ஆயுதங்களை கையாளும் பிரிவினரும் மைதானத்திலும், அதைச்சுற்றிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மைதானத்தின் மீது எவ்வித விமானங்களும் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் விமானங்களை சுட்டு வீழ்த்த, விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

---

காலை 6 மணிக்கு வரவேண்டும்

இன்றைய போட்டி மதியம் 2.30 மணிக்குத் தான் துவங்குகிறது. இதனால் 3 மணி நேரத்துக்கு முன்பாகவே, ரசிகர்கள் மைதானத்துக்கு வரவேண்டும் என, பஞ்சாப் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடிகளை தாண்டி, இவர்கள் மைதானத்துக்குள் செல்ல பல மணி நேரம் ஆகும் என்பதால், ரசிகர்கள் காலை 6 மணி முதல் வருவார்கள் என, கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

--

100சதத்துக்கு ரூ. 100 கோடி

சர்வதேச கிரிக்கெட்டில், 99 சதம் அடித்துள்ள இந்தியாவின் சச்சின், இன்று 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சதம் அடித்தால் சூதாட்ட புக்கிகளுக்கு ரூ. 100 கோடி வரை பணம் கிடைக்கும். தவிர, கடந்த சில நாட்களுக்கு முன், 5000 கோடி ரூபாய் வரை இருந்த "பெட்டிங்' இப்போது 10,000 கோடியாக உயர்ந்துள்ளது.

தவிர, இந்தியா முதலில் பேட்டிங் செய்தால், 265 முதல் 275 ரன்கள் வரை எடுக்குமாம். பாகிஸ்தான் முதலில் விளையாடினால், பலவீனமான இந்திய பவுலிங்கிற்கு எதிராக 310 முதல் 320 ரன்கள் வரை குவிக்கும் என, புக்கிகள் நிர்ணயித்துள்ளனர்.

----

முடிவான "முடிவு'

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில், இந்தியா வெற்றி பெறும் என, அதிகம் பேர் பணம் கட்டியுள்ளனர். இதனால் இந்தியாவை தோல்வியடையச் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. ஏனெனில், இந்தியா தோற்கும் பட்சத்தில் சூதாட்டக்காரர்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை வருமான வரித்துறை அதிகாரி குப்தா, என்பவர் உறுதி செய்துள்ளார்.

----------

  • கருத்துக்கள உறவுகள்

109 / 3 __ 27 .

இவங்களுக்கு என்ன அவசரம், ஒரு கறி வச்சுட்டு வாறதுக்கிடையில இரண்டுபேர் பவிலியனுக்கு போட்டங்கள்! :)

வீட்டில மனிசி உங்களைச் சமைக்கச் சொல்லிவிட்டு துடுப்பாட்டம் பார்க்கிறவா?

  • கருத்துக்கள உறவுகள்

...ஆனால் ஒன்று, இறுதிப் போட்டி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என்று வந்தால் என் ஆதரவு நிச்சயம் இலங்கைக்கே...

எதிரிக்கு ஆதரவு கொடுத்தாலும் ஒரு போதும் துரோகிக்கு கொடுக்க கூடாது !!

நானும் தான்

எனது விருப்பம்

1) அவுஸ்திரெலியா (எனக்கு சுதந்திரம், நிம்மதியான வாழ்க்கையைத் தந்த நாடு)

2) அயர்லாந்து/ நெதர்லாந்து/கனடா/கென்யா/சிம்பாவே (பாவம் துடுப்ப்பாட்டத்தில் சின்ன நாடுகள்)

3)தென்னாபிரிக்கா/ நியூசிலாந்து/ மேற்கிந்தியா தீவுகள்

4)இங்கிலாந்து

5)வங்காளதேசம்

6)பாகிஸ்தான்

7)சிறிலங்கா

8)இந்தியா

நிழலி அரசியல் பேசாத சிங்களவனோடு நன்பனாக இருக்கலாம் ஆனால் ஒரு இந்தியனோடு 5 நிமிசம் சும்மா இருக்க முடியாது .

பெரும் கதை எரிச்சலாக வரும்.

உண்மைதான். அதுவும் வட இந்தியர்கள், மலையாளிகள் கூட என்றால்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் சிந்தாபாத்.. வேறை வழியில்லை..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தான்

எனது விருப்பம்

1) அவுஸ்திரெலியா (எனக்கு சுதந்திரம், நிம்மதியான வாழ்க்கையைத் தந்த நாடு)

2) அயர்லாந்து/ நெதர்லாந்து/கனடா/கென்யா/சிம்பாவே (பாவம் துடுப்ப்பாட்டத்தில் சின்ன நாடுகள்)

3)தென்னாபிரிக்கா/ நியூசிலாந்து/ மேற்கிந்தியா தீவுகள்

4)இங்கிலாந்து

5)வங்காளதேசம்

6)பாகிஸ்தான்

7)சிறிலங்கா

8)இந்தியா

உங்கள் ஆதரவுகளால் வரப்போவது என்ன?

நிச்சயம் ஒரு அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மீட்புப்பணியில் ஈடுபட்ட கமாண்டோ படையினர்

மீட்பு பணியை பற்றி ஏன் பேசுவான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவுகளால் வரப்போவது என்ன?

நிச்சயம் ஒரு அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன?

நீங்கள் சொல்லுவது சரிதான் . பாகிஸ்தான் , இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் தோற்கப்பட வேண்டும். ஆனால் இவற்றில் 2 நாடுகளில் எந்த நாடுகள் தோற்கப்பட வேண்டும் என விரும்பினால் இந்தியாவும் இலங்கையும் தான்.

தமிழின எதிரிகள் ஜெயலலிதாவும், கருணாநிதியும், சோனியாவும் தோற்கவேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள நிலையில் ஜெயலலிதா அணி வெல்ல வேணும் என்பதைப் போல.

யாழ்களப் போட்டியில் தற்பொழுது யாழ்கவி 2ம் இடத்தைப் பிடித்துள்ளார். 3ம் 4ம் 5ம் இடத்தை தமிழினி, பையன்26, காரணிகன் ஆகியோர் கைப்பற்றியுள்ளார்கள். முதல் இடத்தில் தொடர்ந்து வாத்தியார் இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=649463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாட்டு :mellow:

நல்ல பாடல் இணைப்புக்கு நன்றி குழப்படிப்பையா

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஜிந்தாபாத்!!!!!!!!!இந்தியா முர்தாபாத்.பாகிஸ்தான் முகத்துக்கு நேரான எதிரி!இந்தியா முதுகில் குத்தின துரோகி!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் முதலில் மட்டையடியைத் தெரிவு செய்திருக்கிறான். இந்தியனுக்கு அதிஸ்டம் வேலை செய்யது. இருந்தாலும் இந்தியனை விழுத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஜிந்தாபாத்!!!!!!!!!இந்தியா முர்தாபாத்.பாகிஸ்தான் முகத்துக்கு நேரான எதிரி!இந்தியா முதுகில் குத்தின துரோகி!

pakistan-flag-waving-emoticon-animated.gifpakistan-flag-waving-smile-animated.gifpakistan-flag-waving-buddy-icon-animated.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.