Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 4

அசலாமு அலைக்கும்.. மச்சா.. நான் ஜவாகிர் பேசுறன்.

அலைக்கு சலாம்.. எங்க இருந்தடா பேசுறே..

Malaysia%20fishing%20boat.jpg

நாங்க.. கற்பிட்டி பக்கம் இருக்கல்ல.. அங்கிட்டு.. கடலில இருந்து பேசுறேன்....

செல்லு மச்சா.. என்ன விசயம்..

நாங்க இந்த வாட்டி.. தொழிலுக்கு கடலுக்குப் போனப்போ.. ஒரு எல் ரி ரி ஈ போட்டைப் பாத்தம் மச்சா.

655e86b1ae09e95f5844c84b0ff65244.jpg

அப்படியா.. நேவிக்காரங்களுக்கு சென்னியா..

இன்னும் செல்லல்ல...

ஏண்டா நாயு செல்லல்ல...

பாவமா இருந்திச்சடா...

ஏய்.. அவங்களுக்கு பாவமா பார்க்கிறே.. காத்தான்குடியில என்ன செய்தாங்கன்னு தெரியுமில்ல.

ஏய் ஏய்.. அதையே செல்லிக்கிட்டு இருங்கடா. நம்ம ஆக்க மட்டும் என்ன சுத்தமா..!

என்னடா செல்லுறா.. கடலில உனக்கு அல்லா வகுப்பெடுத்தாராடா...??!

இல்ல மச்சா.. அவங்களு நம்ம மாதிரி தமிழ் பேசுற பசங்க தானேடா...

சரிடா அத வுட்டுத் தொல... இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணினே...

நாங்க.. புத்தளத்தல.. இருந்து மீன்பிடிக்க றோலரில போய் கிட்டு இருந்தமா... இந்தியன் போடரையும் தாண்டி போயிட்டம்...

ம்ம்.. அப்புறம்..

நாங்க நல்ல ஆழத்துக்கு போயிட்டு வலை போட்டிட்டிருந்தப் போ.. ஒரு ஸ்பீட் போட் வந்திச்சு. அது எல் ரி ரி ஈ போட் மச்சா. ஒருத்தன் தா வந்திருந்தா... அவ வந்து போட்டை எங்க போட்டோட அணைச்சிட்டு.. டீசல் கேட்டா.. நாங்க முதலில இல்லைன்னு தா சென்னம்.. ஆனா அப்புறமா.. ரெம்ப பிரண்ட்லியா பேசுனாண்டா.. வன்னி இருக்கல்ல வன்னி அங்க.. இவங்க பட்ட கஸ்டத்தை எல்லாம் சொன்னாண்டா.. இந்த சிங்கள ரத்வத்த நாய்ங்க நம்மள மாவனல்லைல்ல வைச்சு அடிச்சாங்களில்ல.. அது மாதிரி அடிக்கிறாங்கடா. அது தான்.. தாபுத் சென்னா.. குடுத்திடடா.. பாவம்டா.. அல்லா நம்மளுக்கு உதவுவாருன்னு..!

நீங்க என்ன செஞ்சீங்க....

நாம நம்கிட்ட இருந்த 50 லீட்டரை தூக்கிக் கொடுத்திட்டம்டா.

சரிடா அதை வுடு.. நீங்க எப்ப கரைக்கு வருவீங்க..

நாங்க இப்ப வந்துகிட்டு இருக்கம்.. இன்னும் கொஞ்சத் தூரம் தா இருக்கு...

அப்ப பொலிசில செல்லையா போறீங்க..

இல்ல மச்சா.. அத அப்படியே.. வுட்டுடுவமே.. அது தா உனக்கு போன் பண்ணினம். பொஸ் கேட்டாக்கா.. எங்கடா 50 லீட்டர் எக்ஸ்ரா டீசலுன்னு.. செல்லிடுவம்.. வழி தவறிப் போயிட்டம்... திரும்பி வரக்க முடிஞ்சுதுன்னு.. நீயும் செல்லடா.. ஜவாகிர் வெள்ளனவாவே.. போன் பண்ணிச் சென்னான் என்னு.. ஓகேயா.

சரி மச்சா.. பத்திரமா வந்து சேருங்கடா..!

பாய் டா. இன்ஸா அல்லா.

boat-in-beach-arugam-bay-sri-lanka-883.jpg

அமெரிக்கா.. இந்தியா என்று உலகமே கண்ணில விளக்கெண்ணை விட்டிட்டு தேடிக் கொண்டிருக்கும்.. Z ன் படகா.. அந்தப் ஸ்பீட் போட்.. அதுவா டீசல் வாங்கினது.. அல்லது வேறு யாருமா..??! அப்ப Z க்கு என்ன தான் ஆச்சு. தெரிஞ்சு கொள்ள ஆசையா.. அடுத்தடுத்த வாரங்களுக்கும் காத்திருங்க.. நான் தான் என்ன செய்ய முடியும்.. Z பற்றிய தகவல் எனக்கும் கிடைச்சாகனுமே உங்களுக்கு சொல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 71
  • Views 14.3k
  • Created
  • Last Reply

பாகம் - 4

...

என்னடா செல்லுறா.. கடலில உனக்கு அல்லா வகுப்பெடுத்தாராடா...??!

:lol::lol:

சீரியசா இந்தனை வாரங்களும் தொடர்ந்த ஒரு கதைக்கு, சிட்டுவேசனுக்குத் தகுந்தது மாதிரி ஒரு வரியேனும் நகைச் சுவையாகவும் இம்முறை எழுதி இருந்தது நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :lol: எனது சார்பாக plus.gif

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒன்டு குத்தலாம் என்டால் முடிஞ்சு போச்சாம். :unsure: நல்லாய் இருக்குது தொடருங்கள். :rolleyes:

நெடுக்ஸ் அவர்களே!

வாழ்த்துசொல்கிறேன்,தொடரசொல்கிறேன்

உங்க கற்பனைக் கதை நன்றாகப் போகிறது

கதை நன்றாக இருக்கிறது. ஏற்கனவே கதையை தீர்மானித்து விட்டீர்களா? அல்லது ஒவ்வொரு வாரமும் யோசித்து எழுதிகிறீர்களா? ஏன் கேட்கிரனேன்றால் கற்பிட்டி எபிசோட் காத்தான்குடியையும் தொட்டுச் செல்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது. ஏற்கனவே கதையை தீர்மானித்து விட்டீர்களா? அல்லது ஒவ்வொரு வாரமும் யோசித்து எழுதிகிறீர்களா? ஏன் கேட்கிரனேன்றால் கற்பிட்டி எபிசோட் காத்தான்குடியையும் தொட்டுச் செல்கிறது.

வாரா வாரம் நினைப்பதை எழுதுவேன். கதை எல்லாம் தீர்மானிக்கப்படல்ல..! அதை காலமே தீர்மானிக்கும்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நானா கதா செல்லி வேல இல்லாவா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தொடர் ஏன் அந்தரத்தில் நிற்கிறது :D ...எழுதாமல் விட்டு விட்டீர்களா?...வார வாரம் வரும் என எழுதி இருந்தீர்கள்.

  • 4 weeks later...

படிக்கும் நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்கள் இருப்பின் தயவு செய்து Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.) தொடரைத் தொரடரவும் நெடுக்ஸ்- நன்றி :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும் நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்கள் இருப்பின் தயவு செய்து Z - War. ( தமிழீழத்தின் உலகைப் பழிவாங்கும் போர்.) தொடரைத் தொரடரவும் நெடுக்ஸ்- நன்றி :D

நான் இப்போ எனது முன்னைய துறைகளுக்கு அதிகம் சம்பந்தம் இல்லாத ஆனால் அவற்றை நிர்வகிக்க அவசியமான துறையில் படிக்க வேண்டி இருப்பதால் படிப்பு கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. எனது MBA க்காக strategic organisational and administrative IT சார்ந்து படிக்கிறேன். அதன் கீழ்... யாழில் எனது நிலையை Risk assessment செய்து பார்த்தால் அதில் high risk என்று வருகுது. அதுதான் இப்போ இதுகளில் இருந்து சற்று விலகி இருக்கிறேன். :D :D (இதுதான் இப்போதைய உண்மை. கதை நிச்சயம் தொடரும்..!)

ஆனால் படிக்கும் போது.. ஒரு பெரிய ஆச்சரியத்தை கண்டேன். எமது தேசிய தலைவர் திறமையான ஒரு தலைமைத்துவத்துக்கான பண்புகளை வெளிப்படுத்தி செயற்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியப்பட்டது.. என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. அவரிடம் போரியல் ரீதியில் மட்டுமல்ல.. தலைமைத்துவம் (Leadership) மற்றும் operational management என்று கிட்டத்தட்ட ஒரு முகாமைத்துவ கல்விக்குரிய அத்தனை அம்சங்களையும் தலைவர் வெகு இலாவகமாக புகுத்தி செயற்பட்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு மிகத் திறமை வாய்ந்த தலைவர்களில் தேசிய தலைவரை போரியலுக்கு அப்பால் இனங்காண முடிகிறது. என்னுடைய பல்கலை சந்தர்ப்பம் அளிக்குமானால் அவரின் தலைமைத்துவம் பற்றிய ஒரு project செய்ய முயற்சிக்கப் போகிறேன். :lol:

உண்மை தான், யாழில் இருக்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை. அதிலும் விளக்கமாக பந்தி, பந்தியாக எழுதும் உங்களுக்கு நிச்சயம் high risk ஆக இருப்பது சந்தேகமே இல்லை... :D:D உங்கள் படிப்பு வெற்றிகரமாக அமையவும், உங்கள் முயற்சி திருவினையாக்கவும் வாழ்த்துக்கள் நெடுக்ஸ். (எமது தேசிய தலைவர் பற்றி கூறியது முற்றிலும் உண்மைதான்) கதை நிச்சயம் தொடரும் என்று குறிப்பிட்டது சந்தோசம். :D

நான் இப்போ எனது முன்னைய துறைகளுக்கு அதிகம் சம்பந்தம் இல்லாத ஆனால் அவற்றை நிர்வகிக்க அவசியமான துறையில் படிக்க வேண்டி இருப்பதால் படிப்பு கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. எனது MBA க்காக strategic organisational and administrative IT சார்ந்து படிக்கிறேன். அதன் கீழ்... யாழில் எனது நிலையை Risk assessment செய்து பார்த்தால் அதில் high risk என்று வருகுது.

உங்கள் பட்டமேற்படிப்பினை நல்லபடியாக செய்துமுடிக்க வாழ்த்துகள் நெடுக்ஸ். குறிப்பிட்ட துறையில் உள்ள பாடநெறிகள் நமக்கும் பரீட்சயமாக காணப்படக்கூடும். எனவே அவைபற்றியும் கருத்தாடல் செய்யுங்கள்; நமக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கின்றோம், தெரியாதவற்றை அறிந்துகொள்கின்றோம். நான் ஏற்கனவே Risk assessment செய்து பார்த்தமையால்தான் இதுவரை மேலுள்ள கதைபற்றி பின்னூட்டல் ஒன்றும் தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

[quote

ஆனால் படிக்கும் போது.. ஒரு பெரிய ஆச்சரியத்தை கண்டேன். எமது தேசிய தலைவர் திறமையான ஒரு தலைமைத்துவத்துக்கான பண்புகளை வெளிப்படுத்தி செயற்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியப்பட்டது.. என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. அவரிடம் போரியல் ரீதியில் மட்டுமல்ல.. தலைமைத்துவம் (Leadership) மற்றும் operational management என்று கிட்டத்தட்ட ஒரு முகாமைத்துவ கல்விக்குரிய அத்தனை அம்சங்களையும் தலைவர் வெகு இலாவகமாக புகுத்தி செயற்பட்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

ஒரு மிகத் திறமை வாய்ந்த தலைவர்களில் தேசிய தலைவரை போரியலுக்கு அப்பால் இனங்காண முடிகிறது. என்னுடைய பல்கலை சந்தர்ப்பம் அளிக்குமானால் அவரின் தலைமைத்துவம் பற்றிய ஒரு project செய்ய முயற்சிக்கப் போகிறேன். :lol:

ஒரு மிகத் திறமை வாய்ந்த தலைவர்களில் தேசிய தலைவரை போரியலுக்கு அப்பால் இனங்காண முடிகிறது

நெடுக்ஸ் அண்ணா! அது முற்றிலும் உண்மை. அவ்வாறு ஒரு தலைவனை நாம் பெற்றிருக்கிறோம்.

அவருடைய காலத்தில் நாம் அடையவேண்டிய இலட்சியங்களை அடைந்தாக வேண்டும்.

அவருடைய பெயரை உச்சரித்தாலே போதும்.... அந்த சக்தி தானாய்க் கிடைப்பதுபோல ஒரு உணர்வு! :lol:

அண்ணா... உங்களுடைய இந்த ஆக்கத்தினை, உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது தொடருங்கள்.

ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்! :lol:

உங்களுடைய துறையில் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ! நீங்கள் நல்லவற்றை நினைக்கிறீங்கள், நினைப்பவை ஈடேற எல்லாம் வல்ல இறையருள் துணைவரும்! வாழ்த்துக்கள்!! :lol:

நான் இப்போ எனது முன்னைய துறைகளுக்கு அதிகம் சம்பந்தம் இல்லாத ஆனால் அவற்றை நிர்வகிக்க அவசியமான துறையில் படிக்க வேண்டி இருப்பதால் படிப்பு கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. எனது MBA க்காக strategic organisational and administrative IT சார்ந்து படிக்கிறேன். அதன் கீழ்... யாழில் எனது நிலையை Risk assessment செய்து பார்த்தால் அதில் high risk என்று வருகுது. அதுதான் இப்போ இதுகளில் இருந்து சற்று விலகி இருக்கிறேன். :lol: :lol: (இதுதான் இப்போதைய உண்மை. கதை நிச்சயம் தொடரும்..!)

எதிர்காலத்தில் நீங்கள் விரும்பும் துறையில் சிறப்புடன் செயலாற்ற வாழ்த்துக்கள் நண்பனே.

  • 4 weeks later...

ஒரு மிகத் திறமை வாய்ந்த தலைவர்களில் தேசிய தலைவரை போரியலுக்கு அப்பால் இனங்காண முடிகிறது. என்னுடைய பல்கலை சந்தர்ப்பம் அளிக்குமானால் அவரின் தலைமைத்துவம் பற்றிய ஒரு project செய்ய முயற்சிக்கப் போகிறேன்.

இவ்வாறன ஆய்வுகளுக்கு எந்த பல்கலைக்கழகமும் தடை விதிக்காது. விரைந்து செய்வது நல்லது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா மிச்சம் எப்ப?

காண நாள் ஆச்சு .. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா மிச்சம் எப்ப?

காண நாள் ஆச்சு .. :rolleyes:

படிப்பு peak இல உள்ள நிலைல.. இதை தொடரவா முடியும். மூளைக்கும் ஓய்விருந்தா தான் அது நல்லா யோசிக்கும். இப்ப அதைப் பார்த்தாவே பாவமா இருக்கு. அது தன்னைப் பற்றி தனிக் கதை எழுதப் போகுது..! :):D

இருந்தாலும் உங்கள் அனைவரும் ஊக்கமும் இதை எழுதனும் தொடரனும் என்றதை நிலை நிறுத்துது. ஓய்வு வரும் போது நிச்சயம் எழுதுவேன். அதற்காக பல ஆண்டுகள் எடுக்க மாட்டேன். விரைவில் எழுதத் தொடங்குவன். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் படிக்கும் போது.. ஒரு பெரிய ஆச்சரியத்தை கண்டேன். எமது தேசிய தலைவர் திறமையான ஒரு தலைமைத்துவத்துக்கான பண்புகளை வெளிப்படுத்தி செயற்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியப்பட்டது.. என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. அவரிடம் போரியல் ரீதியில் மட்டுமல்ல.. தலைமைத்துவம் (Leadership) மற்றும் operational management என்று கிட்டத்தட்ட ஒரு முகாமைத்துவ கல்விக்குரிய அத்தனை அம்சங்களையும் தலைவர் வெகு இலாவகமாக புகுத்தி செயற்பட்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது

____________

நெடுக்ஸ்! இதுவொரு தீர்க்கதரிசனமான உண்மையான வார்த்தைகள் அல்லது வரிகள், இந்த உண்மையின் வெளிப்பாடுகளையும், மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் இந்தவருட மாவீரர் நாளின்போது என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

அதாவது பெரும்பான்மையான மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள் என்பதை புலப்படுத்தியுள்ளது, இனிவரும் காலங்கள் தமிழ் எதிர்ப்பாளர்களிற்கு பெரிய சவாலாகவே இருக்கப்போகிறது என்பது உண்மை..

உங்களது முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்!!!

Edited by வல்வை லிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.