Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் நடக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாடு - சூத்திரதாரிகள் யார்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Australian ‘Sri Lankans’ test conscience of international Tamil writers

[TamilNet, Sunday, 22 August 2010, 02:06 GMT]

Creative writers are conscience keepers of humanity. They are neither bound by nor are contributors to authoritarian forces. They don’t need ‘sponsors’ whose ‘sponsors’ have bloodstained hands. In the name of ‘International Tamil Writers Forum’, some Australian Tamil individuals donning ‘Sri Lankan’ identity want international Tamil writers to meet in Colombo, January next year. They promise passage, boarding, lodging and even a tour around ‘Sri Lanka’ for those who come forward. The sponsors say they have been organizing the international meet hitherto in Australia for the last ten years, but this time they want to have it in Colombo. What is the message these conscience keepers want to give to international Tamils and to the world of creative writers, asks a writer in Colombo who has no freedom to reveal name.

Edited version of the comments received from the Tamil writer in Colombo:

“Do the organisers want to say that they have found new freedom in Colombo to hold the meet, which they couldn’t find in the last ten years?

“How many Eezham Tamil writers and for that matter even Sinhala writers have the freedom in Colombo to say what they want to say? How many exiled writers holding Sri Lankan passport could go to Colombo, speak freely and come out again? How many Tamil writers of foreign nationality could speak freely in Colombo and escape expulsion?

“The proposed writers meet at this juncture in Colombo is nothing but an exercise to prop the image of Rajapaksa government and even a Sinhala writer with self-respect will not have any regards for it.

“Immediately after the genocidal war, Sri Lankan government that has sinister plans for the Buddhicisation of the Tamil land convened a ‘World Hindu Conference’ in Colombo and there were some senseless people in Tamil Nadu who were prepared to come. The Australian ‘Sri Lankans’ are targeting a similar group.

“From cricket matches for ‘Sri Lankans’ in the diaspora to International Tamil Writers Meet in Colombo are organised by the same few elements orchestrated by the same force behind them.

“Those who could not find space in their own society earlier now flaunting with vengeance their newly found space in the company of devil dancers is not the healthy way to serve a war-torn society. It will only justify the earlier ostracism of them in the society.

“In 1974 when Tamils wanted to have the Fourth International Tamil Research Conference in the Tamil land, Jaffna, the then government of Srimao Bandaranayake and some ‘Tamil Sri Lankans’ opposed it and wanted to have it in Colombo with ‘State’ assistance. Their aim was to hoodwink the world of what they had done to Eezham Tamils under the 1972 constitution, declaring the Sinhala Buddhist republic of Sri Lanka.

“Do we see the same ‘State’ of affairs and ‘Tamil Sri Lankans’ back again?

“Organisers behind the proposed international meet in Colombo started with the publicity of providing tutorials for the imprisoned youth to write public exams. It was indeed a good job even though no one thought of doing such charity in the past in the case of the thousands of youth who were made to abandon various other militant groups.

“Now if they have money let them spend it quietly on the education of the war-affected children. There are many ways to promote literary activities quietly. Their efforts of meeting and promoting writers’ forums at the grass root level are appreciable. But, flaunting money in Colombo is politics of the subordinates for the benefit of their masters.

“The organisers may be aware how government men threaten Tamil literary circles in Colombo to leave the island, saying it doesn’t belong to them. Those who worry diaspora polity harming Tamils at home should not expose the Tamil writers remaining in the island by holding a meet in Colombo.

“Besides, The Australian ‘Sri Lankans’ writing in Tamil have much better job to do at home as many of their children don’t speak Tamil with them and don’t read what they write in Tamil.”

  • Replies 55
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு, நீங்கள் கனடாவில் இருப்பதினால் அவுஸ்திரெலியாவில் நடைபெறுவது உங்களுக்குத் தெரியவில்லை என நினைக்கிறேன். இந்த மகாநாடு நடாத்துபவர்களின் பத்திரிகைக்கு சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக நிதி உதவி செய்து கிடைத்து வருகிறது. இவர்களின் பத்திரிகைகளில் முன்பு ஈழப்போர் நடந்தபோது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் செய்திகள் வருவதில்லை. இராணுவத்தினரால், ஒட்டுக்குழுக்களினால் கொல்லப்பட்டவர்களையும் புலிகள்தான் கொன்றதாக சிறிலங்கா அரசு வழங்கும் நிதிக்காக பொய்யான செய்திகளை வெளியிட்டு வருபவர்கள். வன்னிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாசில் இராசபக்சாவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா சென்று சிறிலங்கா செய்வது சரி என்று அவுஸ்திரெலியா அரசுக்கு பொய்யுரைத்தவர்கள் இவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D அண்மையில் இங்கு நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைப்பற்றியும் இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

சிட்னியில் ஈழத்தைச் சேர்ந்த பெருமளவு கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தமக்கென்று சிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம் எனும் அமைப்பையும் உருவாக்கி தமது வழிபாடுகள், சமய நிகழ்வுகளை தவறாமல் நடாத்தி வருகிறார்கள். சிட்னியில் இயங்கிவரும் பல முக்கியமான ஈழத்துத் தமிழர் அமைப்புகளில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியமும் ஒன்றாகும்.

மன்னார் மடுமாதா உற்சவத்தை முனவைத்தும் இன்னும் சில விசேட சமய நிகழ்வுகளுக்காகவும் அவ்வப்போது மல்கோவா என்றழைக்கப்படும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற வழிபாட்டுத் தலம் ஒன்றில் இவ்வாறான முக்கிய வழிபாடுகள் நடைபெறுவது வழமை. அவ்வாறான ஒரு முக்கிய வழிபாடு ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அது என்னவென்றால் சிறிலங்கன்ஸ் எல்லோரும் சேர்ந்து ஒரு திருப்பலியை இங்கு ஒப்புக்கொடுத்தது. அதாவது சிங்களவர்களும் தமிழர்களும் இந்தச் சடங்கில் வந்து ஒன்றாக இரு மொழிகளிலும் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்களாம்.

நல்ல விடயம் தான், கடவுளின் முன் சண்டை பிடிக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கட்டு" என்று யேசுக் கிறீஸ்த்துவே சொல்லியிருக்கிறார். எல்லாம் சரி, எனது கேள்வியென்னவென்றால், யேசுக் கிறீஸ்த்து தமிழரிடம் மட்டும்தாம் இதைச் சொல்லியிருக்கிறாரா?? ஏனென்றால் அடி வாங்கி வாங்கி மறுகன்னத்தை நீட்டியபடியே இருக்கிறோம், அவனும் அடித்துக்கொண்டுதானிருக்கிறான்.

இப்போது அவர்களுடன் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டிய தேவை என்ன??

பலருக்கு இவ்வாறான செயற்பாடுகளின் விளைவுகள் புரிவதில்லை. நாங்கள் எமது நாட்டில் இருக்க முடியாமல் தினம்தோறும் கப்பல்களில் இந்த உலகமெங்கும் அடைக்கலம் நாடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அங்கே எமைக் கொல்கிறான் என்று சொல்லி இந்த நாடுகளில் நீதி கேட்கிறோம். ஆனால் இங்கு வந்து சிங்களவர்களுடன் கூடிக் குலாவினால் நாம் முன்னர் சொன்னதற்கு எதிராக நாமே செயற்படுவதைக் கவனிக்க மறுக்கிறோம்.

அவ்வாறானதொரு செயற்பாடகத்தான் நான் இந்த எழுத்தாளர் மாநாட்டையும் பார்க்கிறேன். எவர் தமிழுக்குத் தொண்டு செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எங்கே செய்கிறார்கள், யார் தூண்டுதலில் செய்கிறார்கள், தமிழுக்குச் சேவை என்கிற போர்வையில் என்ன நடக்கப்போகிறதென்பதை மாப்பிள்ளையோ, மச்சானோ அல்லது கரும்போ விளங்க விரும்பவில்லை என்பதுதான் வருத்தம், நான் அர்ஜுன் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் காந்தியுடன் தேநீர் குடித்தவர், கருநானிதியுடன் 1980 களில் அரசியல் விவாதம் நடத்தியவர். கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவருக்கு குறைந்தது 90 வயதாவது இருக்கும், வயசு போன காலத்தில் உளறுவதை நாம் கணக்கெடுக்கத் தேவையில்லை. ஏதோ, சொல்ல விரும்புகிறார், சொல்லிவிட்டுப் போகட்டும், கடைசி ஆசையைக் கூட செய்ய விடமாட்டங்கள் என்கிற பழி எமக்கு வேண்டாம்.

இவ்வளவு காலமும் அவுஸ்த்திரேலியாவில் நடந்த இந்த மாநாடு இப்போது திடீரென்று கொழும்பில் நடப்பது ஏன்?? அப்படியானால் கொழும்பு இன்று தமிழரின் கலைக் கலாச்சார மைய்யமாக மாறிவிட்டதா?? மாப்பிள்ளை, வடக்குக் கிழக்கில் இன்று நடைபெறுவதை நீங்கள் அறியவில்லையா?? எத்தினை தமிழ்க் கோயில்களும், கலைப் பொருட்களும் அழிந்து போய்விட்டன? எத்தினை பவுத்த கலைக் கூடங்களும், மடாலயங்களும் எழும்பியிருக்கின்றன? எத்தினை தமிழ் எழுத்தாளர்கள் அங்கே ஒன்றில் காணாமல் போகடிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஒளிந்து கொண்டு வாழ்கிறார்கள்?? இதெல்லாம் பேசமுடியுமா இவர்களால் இந்தக் கொழும்பு மாநாட்டில்?? பேச விடுவார்களா??

இவைபற்றிப் பேசப்படப்போவதில்லை என்றால் நிச்சயம் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெளிவாகிறது. தமிழரின் துயர்பற்றி இவர்கள் வாய்திறக்கப்போவதில்லை. முடிந்தால் மகிந்தவின் அரசாங்கத்தைப் புகழ்வார்கள். பரிசோடு வருவார்காள்.

செம்மொழி மாநாட்டை எதிர்த்தோம், என்னத்தைக் கண்டோம் என்று மப்பிள்ளை கேட்கிறார். நல்லது, ஆதரித்தால் மட்டும் எமக்கு எல்லாம் கிடைத்து விடுமா??ஈழத்தமிழர் பற்றியும் அவர்களது அவல வாழ்வும் பற்றி எழுப்பப்பட்ட ஒரு தீர்மானம் இருந்தால் கூறுங்கள் மாப்பிள்ளை? ஒருலட்சம் தமிழுயிர்கள் கொல்லப்பட்டு ஒருவருட காலத்தில் நடந்த 70 கோடி ரூபா ஆடம்பர களியாட்டம் அது. என்ன தேவை அதுக்கு இப்போது?? சொல்லுங்கள்?? இதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்??

மாப்பிள்ளை நீங்கள் எல்லாவற்றையும் புலிகளோடு சேர்த்துக் குளப்புகிறீர்கள். ஒரு கணம் அவர்களை அகற்றிவிட்டு திறந்த மனதுடன் பிரச்சனையை அணுகுங்கள். அப்போது உண்மை புரியும். புலிகளுக்கு முன்னரும், பின்னரும் தமிழர்க்கென்று பிரச்சினை இருக்கிறது, இன்னும் இருந்துகொண்டிருக்கும். நாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் தான். எம்மை வசை பாடுங்கள் பரவாயில்லை, ஆனால் அதற்காகப் பிரச்சனையை, எமது அவலத்தை இல்லை என்று வாதிட வேண்டாம். தமிழின சேவை என்கிற பெயரில் நடக்கும் சிங்களத்தின் கூத்துக்களை அறிந்துகொள்ளுங்கள். வெறுமனே தமிழுக்கு யார் சேவை செய்தாலும் நாம் ஆதரிப்பேன், நீங்கள் குசுவை மணக்கிறீர்கள் என்கிற வார்த்தையேல்லாம் தேவையில்லை நண்பரே.

புரிந்தால்ச் சரி !

அன்புடன்

ரகுனாதனம்மான்.

கலைக்களஞ்சியத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

லெ. முருகபூபதி (நீர்கொழும்பு, இலங்கை) 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார்.

வெளியான நூல்கள்

* சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975)

* சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986)

* சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம், 1990)

* நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (நினைவுகள், 1995)

* வெளிச்சம் (சிறுகதைகள்)

* எங்கள் தேசம் (சிறுகதைகள்)

* பறவைகள் (நாவல்)

* பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்)

* இலக்கிய மடல் (கட்டுரைகள்)

* சந்திப்பு (நேர்காணல்)

* இலங்கையில் பாரதி (ஆய்வு)

* கடிதங்கள் (கடிதங்கள்)

* மல்லிகை ஜீவா நினைவுகள் (நினைவுகள், 2001)

* ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் (நினைவுகள்)

+++

மேலே தெளிவாக தனது கருத்துக்களை தமிழ்முரசு ஊடகத்தில் தெரிவித்து உள்ளார். இவர் நீர்கொழும்பை சேர்ந்தவர் என்பதனாலேயே இப்படி சிரமம் கொடுக்கின்றார்களோ என்றும் சந்தேகம் வருகின்றது. அல்லது அவுஸ்திரேலியாவில் இல்லாமல் ஐரோப்பாவில் அல்லது கனடாவில் இவர் குடியிருந்தால் இப்படியான நிலமை வந்திருக்க மாட்டாதோ என்றும் எண்ணவேண்டியுள்ளது. ஏனெனில், நமது எழுத்தாளர்கள், எழுத்தாளர் வட்டம் பற்றி... அவர்களிடையே உள்ள போட்டிகள், பொறாமைகள், பிரதேச வாதங்கள் பற்றி பல்வேறு கதைகளை காலம் காலமாக கேட்டு, பார்த்து வந்துள்ளோம். இதன் பின்னால் உள்ள எழுத்துலக வட்டத்தின் உண்மையான அரசியல் யாது என்பது பகுத்தறிவதற்கு கடினமான விடயம்.

கந்தப்ஸ், நான் குறிப்பிட்ட இந்த அமைப்பிற்கு இன்று தமிழ்நெட் வலைத்தளத்தின் குற்றச்சாட்டு சம்மந்தமாகவும், மற்றும் யாழில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் இணைத்து அவர்களின் கருத்தை கேட்டு ஓர் மின்னஞ்சல் அனுப்புகின்றேன். அவர்களின் கருத்தை கேளாமல் ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டமுடியாது. நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை,

அவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவரென்று நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும், அதுமட்டுமல்லாமல் இந்த மாநாட்டை நடத்தும் ஒருங்கிணைப்பாளர் மிருக வைத்தியர் நடேசன் யாழ்ப்பாணம் , தீவகத்தைச் சேர்ந்தவர். ஆகவே இங்கே அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்கிற பிரதேசவாதம் எடுபடாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்.

மேலும் இங்கு சிட்னியில் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளித்தமிழ் கவிஙர் ஒருவர் இருக்கிறார். தமிழ்த்தேசியத்தில் மிகுந்த பற்றும், எமக்கு விடுதலி வேன்டும் என்கீர வாவும் கொண்டு எழுதியும் பாடியும் வரும் ஒரு உணர்ச்சிக் கவிஞர் அவர். அவர் பெயர் மாத்தளை சோமு. ஆகவே தயவுசெய்து பிரதேசவாதம் பேச வேண்டாம்.

மிருக வைத்தியர் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவர் நடாத்தும் உதயம் பத்திரிக்கை சுதந்திரக் கட்சியினால் நிதியளிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வரும் ஒரு பத்திரிக்கை. பெரும்பாலும் ஆங்கிலத்திலும், தமிழில் சிறியளவிலும் வரும் இதன் செய்திகள் எப்போதும் புலியெதிர்ப்புப் பற்றியும் அரசாங்கம் தமிழர்க்காகச் செய்துவரும் அர்ப்பணிப்புகள் என்கிற போலிகள் பற்றியுமே பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடைகளின் வாசல்களில் தேடுவாரற்றுக் கிடக்கும் இந்தப் பத்திரிகைக் கட்டுக்கள் ஒரு மாத காலத்தின்பின்னர் குப்பைத்தொட்டியில் கடைக்காரரால் கொட்டப்படும்வரை அங்கேயே இருக்கும். பல கடை உரிமையாளர்களினால் தயவுசெய்து இனிக் கொண்டுவரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பின்னரும் இரவோடு இரவாக இந்தப் பத்திரிகைக் கட்டுக்கள் வாசல்களில் காலைகளில் தோன்றுகின்றன.

இந்த நடேசன் சுமார் 16 - 17 மாதங்களுக்கு முன்னர் இன்னும் சில மாற்றுக்கருத்தாளர்களையும் கூட்டிக்கொண்டு இலங்கை அதிகாரிகளை சந்திக்கவென சிங்கப்பூருக்குச் செல்வதாக இருந்தார். எதோ காரனங்களுக்காக சிங்கப்பூர் மாநாடு குலைக்கப்பட்டு கொழும்பில் நடக்கத் திட்டமிடப்பட்டது. அங்கு சென்ற இவர் தலமையிலான குழுவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மகிந்தவும், அவரது தம்பிகளும் இவர்களை வரவேற்றதோடு இவர்கள் வாய்மூலமாகவே "இப்போது நடக்கும் போர் தமிழர்க்கெதிரானதல்ல, அவர்களைப் புலிகளிடமிருந்து மீட்கும் மனிதநேய நடவடிக்கையே" என்று சொல்ல வைத்தார்கள். மேலும் வடக்குக் கிழக்கில் நடக்கும் அபிவிருத்திப்பணிகள் என்று சிலவற்றைப் பார்த்து உள்ளம் பூரித்துப்போய், " மிகவும் திறமையாகவும், அர்ப்பணிப்புடனும் அரசு தமிழரைக் காக்கிறது" என்று நற்சான்றிதழும் கொடுத்து விட்டு வந்தவர்கள்.

ஆகவே இவர் ஒருங்கிணைக்கும் இந்த எழுத்தாளர் மாநாடு பற்றி நாம் எந்த வகையில் சிந்திக்க முடியும்?? இதுவும் முன்னர் போன்ற மகிந்தவினைப் புகழ் பாட நடத்தப்படும் ஒரு களியாட்டம் இல்லையென்று எப்படிக் கூற முடியும்?

அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த இந்தியத் திரைப்பட விருது வழங்கு விழாவும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்திய இலங்கை பொருளாதாரக் கூட்டமைப்பின் களியாட்ட நிகழ்வு பற்றியும் எல்லோரும் நன்கு அறிந்திருப்போம். அவை எதற்காக அங்கே நடத்தப்பட்டன?? இந்தியாவில் சகலவிதமான களியாட்ட வசதிகளிருந்தும் அது சின்னத் தலைநகரான கொழும்பில் அதற்காக நடத்தப்பட வேண்டும்?? அந்தக் கால கட்டத்தில் வேறு என்ன செயற்பாடுகள் இலங்கை தொடர்பாக உலக அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தன??

விடை பலருக்குத் தெரிந்திருக்கும். முதலாவது போர்க்குற்ற விசாரணைகளுக்கான அறைகூவல்கள் எழுந்துவந்துகொண்டிருந்த நேரம், இலங்கை பக்கம் நாமிருக்கிறோம், நீங்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்கிற இந்திய வெருட்டல். ரெண்டாவது, இலங்கையில் முதலீடு செய்யுமளவிற்கு அங்கு அமைதி நிலவுகிறது, ஆகவே இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏனைய நாட்டு முதலாளிகளும் இங்கே வரமுடியும் என்கிற செய்தி. இதன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் இங்கிலாந்து அரசானது கடந்த 30 வருட காலம் இலங்கைக்கு தனது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்ய விதித்திருந்த தடையை நீக்கி, இலங்கையின் எப்பகுதிக்கும் இனிமேல் தம் பிரஜைகள் தங்கு தடையின்றிப் போய்வர முடியும் என்கிற அறிவிப்பு. இனி, இவர்களைப் பின்பற்றி மற்றைய நாடுகளும் தொடரும்.

இது எமக்கு நண்மையானதா தீமையானதா?? இலங்கையைப் பொருளாதார ரீதியில் முடக்க வேன்டும், இலங்கையில் நடந்த மிக மோசமான போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி, நீதி கேட்க வேண்டும் போன்ற எமது செயற்பாடுகளை இது எந்தளவிற்குப் பாதிக்கப்போகிறது??

இவற்றால் எமக்கெதுவும் பாதிப்பில்லை என்றால், எமது போராட்டம் தோற்கடிக்கப்படாதென்றால் நாம் வாய்மூடி மவுணிகளாயிருப்போம். யார் எழுத்தாளர் மாநாடு நடத்தினாலென்ன, யார் களியாட்டம் நடத்தினாலென்ன, நமக்கென்ன??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை,

தமிழ்முரசு இணையத்தை நடத்தும் ஆசிரியர் யார் என்று நினைக்கிறீர்கள்?? அவர் முன்னால் புளொட் முக்கியஸ்த்தர் திரு பாஸ்கரன் அவர்கள். அவர் புளொட் காரனாக இருந்ததில் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் அவர் இங்கு நடந்துகொள்ளும் முறையே பிரச்சனை. இவரும் நடேசனும் சேந்துதான் இலங்கைப் பயணத்தை திட்டமிட்டார்கள். ஆனால் சிங்கப்பூர் கூத்துக் கலைந்து கொழும்புக் கூத்தாக மாறியபோது இவர் இடைநடுவே நழுவி விட்டு இங்கிலாந்து போய் ஒளிந்து கொண்டார்.

இதுவரை காலமும் சமூகத்தில் பெயரற்று இருந்த இவர்கள் இன்று வெஞ்சினம் கொண்டு கதறுகிறார்கள். பழிவாங்கலாக நமோ நமோ பாடுகிறார்கள். அவரது இ(ஈ)ணையத்தில் முருகபூபதி பற்றி இப்போது கட்டுரைகளும், புகழ்பாடல்களும் வருவதில் வியப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகாநாட்டை நடாத்துபவர்கள் முன்பு சிங்கள அரசைச் சந்தித்தபோது யாழில் வந்த பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55212

இந்த மகாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து கலந்துகொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பற்றிய பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67949

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D மாப்பிள்ளை,

இந்த மாநாடு பற்றி தமிழ் ஈழத்து எழுத்தாளர் எஸ்.போ அவர்கள் அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தி அலைகள் நிகழ்சிக்கு வழங்கிய செவ்வி யாழ் இணையத்தில் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் சொல்வதை நம்ப மறுத்தால் அதையாவது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ரகுநாதன்,

எனது வாதம் அல்லது விளக்கம் இதுதான், இதைத்தான் மற்றவர்களுக்கும் உரையாடும்போது கூறுவது:

அதாவது,

பெரிய விடயங்களை, திட்டங்களை செய்வதற்கு வழமையில் அரசுக்களின், அது தமிழ்நாடு அரசாக இருக்கட்டும், இலங்கை அரசாக இருக்கட்டும், அல்லது முன்பு காணப்பட்ட தமிழீழ அரசாக இருக்கட்டும்.. அவர்களின் பரந்த ஆதரவு தேவைப்படும்.

நீங்கள் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தீர்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது முழு அதிகாரத்தை உங்களுக்கு சார்பாக பிரயோகித்தும், அதன்பின்னரும் மேற்கண்ட முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்று இருக்குமாயின் அதன்பிறகும் கலைஞர் கருணாநிதி தலமையில் ஓர் மாநாடு நடைபெற்று இருக்குமாயின் அதை புறக்கணித்து இருப்பீர்களா?

நிச்சயமாக இல்லை.

அதாவது, உங்களுக்கு ஆதரவு தரவில்லை என்கின்ற பிரதான காரணத்திற்காகவே இந்த புறக்கணிப்பு நடைபெற்று உள்ளது.

நான் கூற விளைவது என்ன என்றால்..

எம்.ஜி.ஆர் அவர்கள் நீங்கலாக தமிழ்நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை கொண்ட அரச தலைவர்கள் எவரும் நீங்கள் விரும்பும்படியான ஆதரவை தாயகத்தின்பால் கொடுக்கவில்லை.

எதிர்காலத்திலும் இவ்வாறான நிலமையே காணப்படுமானால்.. கலைஞரின் பின் அதிகார பீடத்தில் ஏறக்கூடியவர்கள் தொடர்ந்தும் உங்கள் பார்வைக்கு எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே தென்படுவார்கள்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் இந்த புறக்கணிப்புக்கள் தொடர்கதையாகவே போகின்றன.

இதனால் இழப்பு யாருக்கு?

எப்போதும் அதிகார பீடத்தில் உள்ளவர்கள் தமது தலைமையின் கீழேயே பெரிய நிகழ்வுகளை நடாத்தப் பார்ப்பார்கள். மன்னர்கள் அந்தக்காலம் தொட்டு தமிழிற்கு பெரிய விழாக்கள் எடுத்து தமது புகழையும் ஓங்கச்செய்தார்கள். தற்போது மன்னர் ஆட்சி இல்லையென்றாலும் இதன் தாக்கங்கள் ஏதோ வகையில் இன்னமும் காணப்படத்தான் செய்கின்றன.

தமிழ்நாடாக இருக்கட்டும், இலங்கையாக இருக்கட்டும், தமிழீழ அரசாக இருக்கட்டும் எவையும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நீங்கள் 90களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்தால் த.வி.பு மூலம் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதும் முற்றவெளியில் பாரிய அளவில் முத்தமிழ் விழா எவ்வாறு நடைபெற்றது என்பதை நினைவுகூற முடியும்.

சும்மா ஓர் கதைக்கு கூறுகின்றேன். இன்னமும் பத்து பதினைந்து வருடங்களில் தற்போதைய தமிழ் சினிமா நட்சத்திரம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேறி, அதேசமயம் அவர் உங்களுக்கு ஆதரவு தராவிட்டால், அவர் தலைமையில் மீண்டுமொரு செம்மொழி மாநாடு வைக்கும்போது அதையும் புறக்கணிக்கப் போகின்றீர்களா?

அரச அதிகாரங்களில் உள்ளவர்கள் தமிழ்மொழி, அதன் வளர்ச்சி, நிகழ்வுகள் சம்மந்தப்பட்ட விடயங்களில் தம்மை பிரபலப்படுத்த முனைகின்றார்கள் என்கின்ற காரணத்திற்காக நாங்கள் தொடர்ந்து புறக்கணிப்புக்கள் செய்ய முயன்றால்.. ஒருநிலையில் எதுவித நிகழ்வுகளுமே, மாநாடுகளுமே வைக்கமுடியாத நிலமை தோன்றிவிடும். ஏன் என்றால் ஒருபோதும் அரச அதிகாரங்களில் உள்ளவர்கள் உங்களைக் கூப்பிட்டு “இந்தா வா தம்பி ராசா, உன் கைகளில் ஒரு கோடி பொற்காசுகள் தருகின்றேன். நீ விரும்பும்படியாக ஓர் பயனுள்ள செம்மொழி மாநாட்டை நடாத்து, நான் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கின்றேன்”.. என்று கூறமாட்டார்கள்.

காலத்திற்கு காலம் புறக்கணிப்பு என்று கூப்பாடு போடுவது நம்மவர்களிடையே ஓர் தொற்று வியாதியாகிவிட்டது.

மற்றவன் செய்ய விரும்புகின்ற செயல்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதை சதா நினைத்து, மற்றவன் செயல்களை தூற்றி காரியம் பார்க்காமல் நீங்கள் எப்படியான செயல்களை செய்யவேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்தினால் ஆகக்குறைந்தது உங்களுக்காவது ஏதோ சாதித்தோம் என்கின்ற உளத்திருப்தி ஏற்படக்கூடும்.

ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கின்றது. பலருடன் சேர்ந்து நீங்கள் ஓடுகின்றீர்கள். உங்களுக்கு இருபுறமும் உள்ள ஒழுங்கைகளில் ஓடுபவர்கள் முறைகேடாக ஓடுகின்றார்கள், உங்கள் ஒழுங்கையினுள்ளும் இடையிடையே பிரவேசம் செய்யப் பார்க்கின்றார்கள். இதுவே இறுதி ஓட்டம்.

என்ன செய்வீர்கள்?

பக்கத்தில் ஓடுபவர்களுடன் இழுபறிப்பட்டு மோதலில் ஈடுபடுவீர்களா? அல்லது தூரத்தில் தெரிகின்ற இறுதி இலக்கில் உங்கள் முழுக் கவனத்தையும் குவித்து தொடர்ந்து ஓடுவீர்களா?

தமிழ் மொழி, அதன் வளர்ச்சி சம்மந்தப்பட்ட விடயங்களில் ஒவ்வொரு விடயத்திற்கும் நதிமூலம், ரிசிமூலம் பார்க்க வெளிக்கிட்டால் கடைசியில் நாம் எழுதுகின்ற, பேசுகின்ற மொழியும் இழக்கப்பட்டுவிடும்.

சரி இறுதியாக கூறுகின்றேன். வேண்டுமானால் இதை ஓர் சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்மொழி வளர்ச்சிக்காக நம்மவர்கள் நம்மவர்கள் விரும்பும்வகையில் நமது மனிதவலுக்கள், வளங்களை பயன்படுத்தி பாரிய அளவில் பயன் தரக்கூடிய வகையில் ஓர் சர்வதேச தமிழ்மாநாட்டை அல்லது ஆய்வரங்கை விரைவில் செய்து காட்டமுடியுமா?

முடியாது என்றால் நடப்பவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி மட்டும் விட்டுக்கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களில் சிலர் பற்றிய பழைய பதிவு ஒன்று

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35020

  • கருத்துக்கள உறவுகள்

:D மாப்பிள்ளை,

இந்த மாநாடு பற்றி தமிழ் ஈழத்து எழுத்தாளர் எஸ்.போ அவர்கள் அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தி அலைகள் நிகழ்சிக்கு வழங்கிய செவ்வி யாழ் இணையத்தில் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. நாம் சொல்வதை நம்ப மறுத்தால் அதையாவது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

http://www.yarl.com/node/1515

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாடோ அல்லது தமிழ் எழுத்தாளர் மாநாடுகளோ நடத்தப்படுவதில் எந்தத் தவறுமில்லை..! ஆனால் இவற்றை நடத்துவதன் நோக்கம் தாயகத்தில் தமிழர்களுக்கென்று பிரச்சினைகள் ஏதுமில்லை என்பதை நிறுவதாகவிருந்தால் அந்த நோக்கம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு,

நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

செம்மொழி மாநாடுபற்றி இங்கே கதைக்க வேண்டி வந்ததன் காரணம் நீங்கள் கேட்ட கேள்வியே! அதாவது நாம் புறக்கணிப்புச் செய்ததால் என்னத்தைக் கண்டோம் என்பது. அதற்குத்தான் நான் பதில் எழுதினேன். ஆனாலும் நீங்கள் சொல்லியவாறு கருநானிதி ஈழத்தமிழர் அழிவை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல் ஏதாவது செய்து எம்மைக் காப்பாற்றியிருந்தால் நிச்சயம் நீங்கள் சொல்வதுபோல நாம் அனைவருமே இந்தச் செம்மொழி மாநாட்டை ஆதரித்திருப்போம். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றையது, இந்த மாநாடு நடந்த நேரம், முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சம் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்தவாடை காயமுன்னர், இன்னும் எமது உறவுகள் மர நிழலிலும், வெறும் பிளாத்திக் சீலையின் கீழும் வாழும் நிலையிலும், எமது விடுதலைப் போராளிகள் ஆயிரக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டும், நாள்தோறும் விலங்குகள் போல வேட்டையாடப்பட்டும், எமது தமிழ் பேசும் ஈழம் எனும் தேசம் திட்டமிட்டுச் சிங்கள மயமாகிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் செம்மொழி மாநாடு போன்றதொரு நிகழ்வு தேவைதானா என்பதுதான் எனது கேள்வி. இது எதை மறைக்கவோ சிலர் அவசர அவசரப்பட்டு நடாத்தி முடித்து, தனது கைய்யைக் கழுவிக்கொண்ட ஒரு சடங்கு என்றுதான் நினைக்கிறேன். ஆத்தை செத்துக்கிடக்கை, மகன் முன்னிக்கு அழுத்தானம் எனுமாப்போல், ஈழத்தில் தமிழன்னை செத்துப்போய்ச் சிதறிக்கிடக்க தமிழகத்தில் தமிழ்ப்பால் குடிக்க கலைஞரும் அவரது சகபாடிகளும் அல்லது அவரது பெயரை தூக்கி நிறுத்த சிலரும் செய்த அவசரக் கூழாகவே எனக்கு அது பட்டது.

ஆனால் அதுவல்ல இப்போதைய பிரச்சனை மாப்ஸ்,

கொழும்பில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் மாநாடு பற்றியதே அது. நீங்கள் சொல்லியதுபோல இவ்வாறானதொரு மாநாட்டை நடத்துவதென்பது தனிமனிதரால் முடியாது, அது நிச்சயமாக அரசு ஒன்றின் உந்துததலாலன்றி நடக்க முடியாது என்பதுதான் எனது வாதமும். ஆகவேதான், இந்த மாநாட்டை நடாத்த தூண்டிவருவது இலங்கை அரசாங்கம் என்று சொல்லவருகிறேன். இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர் மேல் கருணை கொண்டு எமது இன்னல்களைத் தீர்க்குமென்ற முடிவுக்கு நீங்கள் எப்போது வந்தீர்கள்?? அப்படி இன்னும் வரவில்லை என்றால், இலங்கை அரசினால் நடத்தப்படும் இந்த மாநாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? எமக்குத் தேவையானதுதான் என்று நினைக்கிறீர்களா?? எந்தவகையிலென்று கூறுங்கள். வெறுமனே, "யார் தமிழ் வளர்த்தாலும் என் ஆதரவு நிச்சயம் அவர்களுக்கு உண்டு" என்று மீண்டும் சொல்ல வேண்டாம். தமிழர் நலனென்றுதான் முள்ளிவாய்க்கால் வரை திரத்திச்சென்று"மனிதநேய நடவடிக்கை" மூலம் எம்மைக் கொன்று குவித்தார்கள். அதை மறைக்க இன்னொரு தமிழ்ச் சேவை என்கிற பெயரில் இன்று மாநாடு நடத்துகிறார்கள்.

முருக பூபதியை மட்டுமே பார்க்கும் நீங்கள் அவர் பின்னலிருக்கும் சிங்கள அரசாங்கத்தின் தமிழ் ரத்தம் வழியும் முகத்தைப் பார்க்க மறுக்கிறீர்கள். வெளுத்ததெல்லாம் பால் இல்லை நண்பரே. வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

இறுதியாக, நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல என்னால் உலகத்தமிழர் இலக்கிய மாநாடு நடத்தப் பணமுமில்லை, தைரியமுமில்லை, வசதியுமில்லை. ஆனால் நீங்களும் இன்னும் எல்லோரும் வந்தீர்களென்றால் நிச்சயம் நடத்துவேன். எத்தனை பேர் என்னுடன் வரத் தயார்?? இது சவால்தான் !!!!!

எந்தவொரு பாரிய மாநாடு நடத்துவதற்கு ஒரு நாட்டின் பலம் வேண்டுமென்றால், வாருங்கள் முதலில் எமக்கென்று நாடொன்று அமைப்போம். பின்னர் அரச விழாக்களே இங்கு நடைபெறட்டும். அதுவரை கொட்டாவி விட்டுப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

புறக்கணிப்பு ஒரு கீழ்த்தரமான செயல் அல்ல நண்பரே. அது ஒரு எதிர்ப்பின் வடிவம். உணர்வின் வெளிப்பட்டு. தனது கொள்கை மீதான வெறியின் நிலைப்பட்டு. நடப்பதைத் தடுக்க முடியவில்லை என்றால் குறைந்தது ஒதுங்கியாவது இருத்தல் வேண்டும். அபர்களுடன் சேர்ந்து செயல்ப்படுவதிலும் புறக்கணிப்பது சிறந்தது - இது செம்மொழி மாநாட்டுக்கு !

முடிந்தவரை தடுக்க முயலுவோம், முடியாவிட்டால் பின்னாலிருக்கும் கொலைஞர்களை தோலுரித்துக் காட்டுவோம் - இது கொழும்பு எழுத்தாளர் மாநாட்டிற்கு !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மொழி, அதன் வளர்ச்சி சம்மந்தப்பட்ட விடயங்களில் ஒவ்வொரு விடயத்திற்கும் நதிமூலம், ரிசிமூலம் பார்க்க வெளிக்கிட்டால் கடைசியில் நாம் எழுதுகின்ற, பேசுகின்ற மொழியும் இழக்கப்பட்டுவிடும்.

இன்றைய நிலையில் மொழியின் வளர்ச்சியிலும் பார்க்க, மொழியை பேசும் மக்கள் இன அடையாளத்தை இழக்காமல் இருப்பதே அவசியமானது. எனவே அதை சிங்கள தேசியத்துக்குள் கரைக்க தெரிந்தோ தெரியாமலோ உதவிபுரியும் சக்திகளை இனங்காணுவதும் எதிர்ப்பதும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன.

Edited by காட்டாறு

ரகுநாதன், கந்தப்ஸ்,

இதரவிடயங்கள் பற்றி பார்க்குமுன்னர், நான் மேலே இணைத்த முருகபூபதி அவர்களின் கருத்துக்களை முழுமையாக வாசித்தீர்களா? இதன்மூலம் நீங்கள் எவற்றை அறியக்கூடியதாக உள்ளன என்றும் உங்களுக்கு விளங்கியதை கூறுங்கள். யார் அதை பிரசுரித்தார்கள் என்பது வேறுவிடயம். இங்கு அவரின் கருத்துக்களே முக்கியம். முருகபூபதி அவர்களின் கருத்துக்கள் மீளவும்:

International Tamil Writers Forum

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

3B,46th Lane, Colombo-06, P.O.BOX 350,Craigieburn,Vic-3064

SRILANKA AUSTRALIA

T.Ph: O11 2586013 (Srilanka) T.Ph: 00 61 3 9308 1484 (Australia)

E.Mail:international.twfes@yahoo.com.au

21-08-2010

அன்புடையீர் வணக்கம்.

எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் அடுத்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் முற்பகுதியில் நான்கு நாட்கள் இலங்கையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த 03-01-2010 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள், பயிற்சிப்பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்து கருத்துக்களை பயனுள்ளமுறையில் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் எழுத்தாளர் சந்திப்புகள் ஒழுங்குசெய்யப்பட்டு தகவல் அமர்வுகள் நடைபெற்றன.

இம்மகாநாடு தொடர்பாக எமது சக்திக்கு அப்பாற்பட்ட செலவுகளை நாம் சந்திக்கநேர்ந்துள்ளது. முழுமையாக படைப்பாளிகள், கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்களின் நன்கொடைகளின் மூலமே நாம் இந்தப்பணியை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்காக கொழும்பில் நாம் வங்கிக்கணக்கும் ஆரம்பித்துள்ளோம். தங்கள் நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாதகாலத்துள் வரவு-செலவு அறிககை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நிறுவனத்தின் மேற்பார்வையுடன் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

நாம் எதிர்நோக்கும் செலவுகள்: மண்டப வாடகை, உணவு மற்றும் தங்குமிட வசதி, போக்குவரத்து, அச்சிடல் பணிகள்.

இலங்கையில் இலக்கிய ஆர்வம்மிக்க அன்பர்களின் ஆதரவையும் பெறவுள்ளோம். இந்தப்பாரிய பணிக்கு ஆதரவு வழங்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கியகுறிப்பு:- குறிப்பிட்ட வங்கிக்கு தாங்கள் நிதியுதவி அனுப்பும் பட்சத்தில் எமது மின்னஞ்சலுக்கும் அவசியம் தெரிவிக்கவும்

நன்றி

அன்புடன்

லெ.முருகபூபதி ( அமைப்பாளர்)

Bank Details:

Name: TAMIL WRITERS ASSOCIATION

Bank: HATTON NATIONAL BANK

Branch: WELLAWATTE, SRILANKA

SWIFT CODE: HBLKLILX

Branch No: 7083 009

A/C NO: 009010448539

தகவல் மூலம்: தமிழ்முரசு

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - பதில்

அன்புடையீர் வணக்கம்.

இலங்கையில் கொழும்பில் நாம் அடுத்த ஆண்டு (2011) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே நான் பல பத்திகள் எழுதியிருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டு நடந்த அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன்.

2009 ஆம் ஆண்டு வெளியான மல்;;லிகை 44 ஆவது ஆண்டு மலரில் நான் எழுதியிருந்த கட்டுரையிலும் பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் மல்லிகை 45 ஆவது ஆண்டு மலரிலும் மகாநாட்டின் தேவை குறித்து விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

கடந்த 2009 டிசம்பர் 27 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் ஞாயிறு இதழில் விரிவான (முழுப்பக்கம்) எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது.

அதன் பின்னர்தான் கொழும்பில் யழ்ப்பாணத்தில் வவுனியாவில் மட்டக்களப்பில் ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதையும் இலங்கை இணைப்பாளர்களூடாக சுற்றறிக்கை வடிவில் சகலருக்கும் தெரிவித்திருந்தோம்.

இவ்வளவும் நடந்துள்ளன. எட்டு மாதங்கள் வரையில் ஆழ்நத நித்திரையில் இருந்த சிலர் இப்போது, இலங்கையில பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவும் காலம்காலமாக மலையகத்தில் அல்லல்படும் மக்களுக்காகவும் எதுவித உதவியும் செய்யாமல் (கல்வி, கலை, இலக்கியம்) அவதூறாக பேசத்தொடங்கியுள்ளதுதான் கவலைக்குரியது.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தடவையாக தமிழ் எழுத்தாளர் விழாவை தன்னந்தனியனாக நான் நடத்த முன்வந்தபோது எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தன என்பது எனக்கும் அதில் கலந்துகொண்டவர்களுக்கும் தான் தெரியும்.

அத்திவாரம்போடுவதற்கு மண்ணோ கல்லோ சுமக்காதவர்களையும் எஸ்.பொன்னுத்துரை உட்பட பலரை நாம் எமது எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்திருக்கின்றோம்.

எஸ்.பொ. அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் யார் முதல் முதலில் இலக்கிய முகவரி தேடிக்கொடுத்தார்கள், என்பதையும் மாத்தைள சோமு என்பவரை முதல் முதலில் மெல்பனில் மேடையேற்றியவர் யார் என்பதையும் பேராசிரியர் ஆசி. கந்தராஜா என்பவருக்கு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் யார் தலைமைத்துவத்திற்கு பிரேரித்தார்கள் என்பதையும் மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து பாராட்டி கௌரவிப்பதற்கு யார் முன்னின்று உழைத்தார்கள் என்பதையும் அவரவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

காலம்பூராவும் கலை, இலக்கியத்தையும் படைப்பாளிகளையும் உலகம் பூராவும் நேசித்துவந்த நான், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களையும் படைப்பாளிகளையும் நேரில் சென்று பார்த்து வந்தவன். அத்துடன் சுனாமி; கடல்கோளின்போதும் இரண்டு கொள் கலன்களில் பொருட்களுடன் சென்றவன்.

எனது வாழ்வு இங்கிருந்தாலும் எனது வேர் எனது தாயகத்தில்தான் படர்ந்திருக்கிறது.

காணமல்போயுள்ள நண்பர் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தினரை திருகோணமலைவரை சென்று பார்த்து ஆறுதல் கூறியதுடன் அவர்பற்றிய உண்மைத்தகவல்களை அறியும் முயற்சியிலும் பல மாதங்களாக ஈடுபடுகின்றேன்.

பாதிக்கப்பட்ட எங்கள் தேசத்தை எட்டியும் பார்க்காதவர்கள் எனக்கு அவதூறு செய்யப்புறப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம் இருக்கும்போது என்றைக்குமே பொறுப்புணர்வுடன் கருத்துச்சொல்லாத எஸ்.பொ. அவர்களின் அவதூறான எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கு ஒத்து ஊதுபவர்களாக சில படைப்பாளிகள் ( என்னையும் எனது குண இயல்புகளையும் நன்கு தெரிந்தவர்கள்) மாறிப்போனதும்தான் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியத்துறையில ஒருவகை சூனியத்தை உருவாக்கப்போகிறார்களா?

அல்லது இலங்கையில் கலை, இலக்கியவாதிகளின் ஒன்றுகூடலுக்காக பலவருடங்களாக காத்திருக்கும் எமது உடன்பிறப்புகளான எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையுடையவர்களாக மாறப்போகிறார்களா என்பதை அவரவர் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றேன்.

மலேசியாவில்;, சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் மகாநாட்டை நடத்தியிருக்கலாம் எனச்சொல்பவர்கள் கடந்த பத்துவருடங்களா அவுஸ்திரேலியாவில் மெல்பனில் , சிட்னியில், கன்பராவில் எமது எழுத்தாளர் விழாக்களும் இலக்கியசந்திப்புகளும் நடந்தபோது எட்டியும் பார்தார்களா?

அப்படித்தான் இவர்கள் சொல்வது போன்று செய்திருந்தாலும் தமது இருப்பை வானொலிகளில் காட்டுவதற்காக எதிர்த்து கண்டனம்தான் தெரிவித்திருப்பார்கள்.

நரம்பில்லா நாக்கு நயமின்றிப்பேசும். இடத்துக்கு தக்கவாறு பேசும். ஒரு நிகழ்வைப்பற்றி கருத்துக்கூறுவது வேறு,அபாண்டமாக நானும் இந்த மகாநாட்டில் என்னுடன் இணைந்தவர்களும் லஞ்சம் வாங்கித்தான் நடத்தப்போகின்றோம் எனறு இழிவாகச்சொல்வது வேறு.

என்னிடமே பல தடவைகள் நன்கு பலனடைந்த எஸ்.பொ. எனது முதுகில் குத்தும்போது வேடிக்கை பார்த்த சிலர் வானொலிகளில் (ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டு) எரியும் நெருப்பை அணைக்காமல் எண்ணெய் ஊற்றி தீ வளர்த்து குளிர்காய்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தமக்குத்தெரிந்ததை பேசுவார்கள், செய்வார்கள்.நான் எனக்குத்தெரிந்ததை செய்வேன் , பேசுவேன். காலம் யாவற்றுக்கும் பதில் சொல்லும்

இந்த மகாநாட்டை திட்டமிட்டு குழப்பும் நோக்கத்துடன் சிலர் இப்பொழுது முனைந்திருப்பது கவலைக்குரியது. எம்முடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாக்களில் இணைந்து பயனடைந்த சிலரும் தற்போது மிகவும் இழிவான முறையில் வானொலிகளில் பேசத்தொடங்கியுள்ளனர். படைப்பாளிகளை வெட்கித்தலைகுனியச்செய்யும் இந்த ஈனச்செயலின் சூத்திரதாரியாக தமிழ்நாட்டிலிருந்து எஸ்.பொ. இயங்குகிறார். அவரது இற்றுப்போன கயிற்றில் தொங்குவதற்கு சிலர் முனைந்துள்ளனர்.

இதுநாள் வரையில் மதில் மேல் பூனைகளாக இருந்த சிலர் இப்போது, தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் கீற்று இணைய இதழில் எஸ்.பொன்னுத்துரை என்பவர் மிகவும் அவதூறாகவும் எமது பணிகளை கேவலப்படுத்தும்விதமாகவும் எழுதியுள்ளதையடுத்து (குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள்) இதுவரை ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்து பிதற்றத்தொடங்கியுள்ளனர்.

இலங்கை அதிபரையும் எம்மையும் தொடர்புபடுத்தி நாம் லஞ்சம் வாங்கித்தான் இம்மகாநாட்டை நடத்தமுன்வந்திருப்பதாக பொன்னுத்துரை அவதூறு செய்துள்ளார். எனவே அவருக்கும் குறிப்பிட்ட கீற்று இணைய இதழுக்கும் எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நன்றி; அன்புடன் லெ.முருகபூபதி (அமைப்பாளர்- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011)

( இது தொடர்பான எஸ்பொ வின் கட்டுரை சென்றவார தமிழ்முரசில் பிரசுரமாகியுள்ளது - முரசு )

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீற்று இணைய இதழில் ‘எஸ்.பொ.’ சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறு:

மகாநாட்டு அமைப்பாளர் இந்திய ரூபாவில் பத்துக்கோடி நட்டஈடு கோருகிறார்

இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கு எதிராக தமிழ்நாடு கீற்று இணைய இதழில் அவதூறான முறையில் செய்தி வெளியிட்டிருப்பதுடன் அதனை உலகெங்கும் பரவச்செய்து மகாநாட்டையும் மகாநாட்டுப்ணியாளர்களையும் அவமானப்படுத்தியுள்ள ‘எஸ்.பொ.’ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்பவருக்கு எதிராக இம்மகாநாட்டின் அமைப்பாளர் நட்டஈடுகோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இம்மகாநாடு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனும் அரச அதிபர் திரு. மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் பெற்றும் நடத்தப்படவிருப்பதாக உண்மைக்குப்புறம்பான முறையில் முற்றிலும் தவறான செய்தியை விஷமத்தனமாக எஸ்.பொன்னுத்துரை பரப்பியுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகிற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்கும் இந்த சர்வதேச மகாநாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும் எவ்வாறு இம்மகாநாடு பல வருடங்களாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காகவும் அதன் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் மகாநாட்டின் அமைப்பாளரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவுஸ்திரேலியாவிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இம்மகாநாடு பல வருடங்களாக ஆலோசிக்கப்பட்டு இலங்கையில் அமைதியான சூழ்நிலைக்காக காலம் தாழ்த்தி தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் 6,7,8,9, ஆம் திகதிகளில் நடத்தப்படவிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சுமார் 120 பேர் கலந்துகொண்ட விரிவான ஆலோசனைக்கூட்டம் காலை முதல் மாலை வரையில் நடந்தது.

இக்கூட்டத்தில் 12 அம்ச கலை, இலக்கிய , கல்;வி சார்ந்த ஆக்கபூர்வமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்துள்ளது.

அத்துடன் மகாநாட்டின் இலங்கை இணைப்பாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகம் சென்று விரிவான தகவல் அமர்வு சந்திப்புகளையும் நடத்திவருகிறார்.

சர்வதேச தரத்தில் அமைந்த ஒரு கட்டுரைத்தொகுதியும் புகலிடத்தை சித்திரிக்கும் புத்தம் புதிய கதைகளின் தொகுப்பும் ஈழத்து சிறுகதைகளின் தொகுப்பொன்றும் இம்மகாநாட்டை முன்னிட்டு தயாராகி வருகின்றன.

அத்துடன் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு மகாநாட்டு கருத்தரங்குகளில் கட்டுரைகளும் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சில இலக்கிய இதழ்கள் மகாநாட்டை முன்னிட்டு சிறப்பு மலர்களை வெளியிடவுள்ளன.

இவ்வளவு பணிகளும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களின் ஆதரவுடனும் நிதிப்பங்களிப்புடனும்தான் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுபற்றிய பல பத்தி எழுத்துக்கள் நேர்காணல்கள் இலங்கை மற்றும் தமிழ்நாடு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தத்தகவல்கள் யாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டே யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்துவருபவருமான எஸ்.பொ. என அழைக்கப்படும் திரு.எஸ்.பொன்னுத்துரை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ‘கீற்று’ என்னும் இணைய இதழில் மகாநாட்டுக்கு எதிராகவும் மகாநாட்டை இழிவுபடுத்தும்விதமாகவும் மகாநாட்டு அமைப்பாளர் இலங்கை அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இம்மகாநாட்டை நடத்தவிருப்பதாகவும் உண்மைக்குப்புறம்பான முறையில் முற்றிலும் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற அமைப்பை ஸ்தாபித்து நடத்திவரும் முருகபூபதி ஆகிய நான் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் இந்த மகாநாட்டுக்கான பணிகளை பலரதும் ஆலோசனைகளைப்பெற்று முன்னெடுத்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட திரு.எஸ்.பொன்னுத்துரை அவர்களையும் அவுஸ்திரேலியாவில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவுக்கு அழைத்து அவரது பவளவிழாவை முன்னிட்டு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துமிருக்கின்றேன்.

எமது கலை,இலக்கிய வளர்ச்சியையும் பரிமாணத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கும் எஸ்.பொ. அவர்கள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கலை, இலக்கிய இயக்கமானது சர்வதேச மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படுவது கண்டு பூரிப்படைந்து, தாமும் ஒரு பங்காளராக இணைந்து செயற்பட்டிருக்கவேண்டும். அதுவே அவர் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் இனி வரும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்திருக்கும்.

இது சம்பந்தமாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியிலேயே அவரது கவனத்திற்கு தமிழ்நாடு யுகமாயினி இதழ் ஆசிரியர் திரு.சித்தன் அவர்கள் ஊடாக தெரிவித்துமிருக்கின்றேன்.

எனினும் அவர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் விஷமத்தனமாகவும் அவதூறாகவும் அவர் கீற்று இணைய இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதுவித நம்பகத்தன்மையுமற்றவிதத்தில் அநாவசியமாக இலங்கை அதிபரையும் இதில் இணைத்து மகாநாட்டுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை மேற்கொண்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ருபா நட்ட ஈடுகோரி நான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி’- என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

லெ.முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

அவுஸ்திரேலியா

P.O.Box 350, Craigieburn,Victoria,Australia.

E.Mail: international.twfes@yahoo.com.au

letchumananm@gmail.com

T.Phone : 00 11 61 3 9308 1484

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முருகபூபதியின் கடிதத்திற்கு கீற்று ஆசிரியர் நந்தனின் பதில் ( பூபதியின் கடிதம் கீளே உள்ளது )

மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: கீற்று நந்தன்

மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கீற்று ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டோம். அதில் தாங்கள் கீற்று மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கீற்று இணையதளம் அனைத்துவிதமான சிந்தனைகளுக்குமான ஒரு வெளியாகத் திகழ்கிறது. கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் படைப்பாளிகளின் சிந்தனையைச் சார்ந்தே வெளிவரும் கருத்துக்களாகும். இதில் கீற்றிற்கு எவ்வித தனிப்பட்ட நலனும் ஆர்வமும் இல்லை. இதுபோன்ற மின்னஞ்சல்களை எமது கருத்துச் சுதந்திரத்திற்கான மிரட்டலாக நாங்கள் உணர்கிறோம்.

உலக நாடுகளினால் ‘போர்க்குற்றம் நடந்தது’ என அறிவிக்கப்பட்ட நாட்டில் நிகழும் ஒவ்வொரு பொதுநிகழ்வும் அரசியல் தன்மை கொண்டதாகவே கவனிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் அதை வெளியிடுவதற்கு கீற்று மாதிரியான ஊடகங்களுக்கும் உரிமை இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், மனித உரிமையாளர்களுக்கும் இன்னமும் இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கிற சிங்கள அரசின் ஆதரவில்லாமல் இலங்கையின் தலைநகரில் எவ்விதக் கூட்டமும் நடத்திட முடியாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்ததே. இந்நிலையில் தங்களது அமைப்பின் அறிவிப்பும் மாநாடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே அறிந்தே இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது மதிப்பிற்குரிய எஸ்.பொ. அவர்களின் விமர்சனத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறுவது பொருத்தமற்றது.

மேலும் அக்கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிரான எதிர்வினை ஆற்ற வேண்டுமாயின், கீற்று இணையதளத்திற்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். அவற்றையும் நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, தங்களையோ, தங்கள் அமைப்பையோ தனிப்பட்ட முறைமையில் தாக்க வேண்டிய அவசியம் கீற்று இணையதளத்திற்கு இல்லை. பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி வழக்குத் தொடரப்படுமாயின் அதனை சட்டரீதியில் எதிர்கொள்ள கீற்று தயாராகவே இருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

- கீற்று நந்தன் ( editor@keetru.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முருகபூபதி கீற்று இணைய இதழுக்கு எழுதிய கடிதம் இங்கு பிரசுரிக்க படுகிறது.

ஆசிரியர்

கீற்று இணைய இதழ்

தமிழ்நாடு

அன்புடையீர் வணக்கம்.

தங்களின் கீற்று இணையத்தளத்தில் (07-ஆகஸ்ட்2010) நாம் இலங்கையில் அடுத்த ஆண்டு (2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில்) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறான செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.

இந்த மகாநாடு சிலவருடங்களுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்ட கலை, இலக்கிய செயற்திட்டமாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் முருகபூபதியாகிய நான், இந்த நிகழ்வை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகர்.

இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் வதியும் தமிழ் எழுத்தாளர்களினது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சர்வதேச ஒன்றுகூடல் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பலரதும் ஆலோசனைகளைப்பெற்று கடந்த 03-01-2010 ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சுமார் 120 பேரளவில் கலந்துகொண்;ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். இக்கூட்டத்தில் படைப்பாளிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொழும்பில் வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய தமிழ்த்தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் மல்லிகை, ஞானம், கொழுந்து, செங்கதிர் முதலான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பயிற்சிப்பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றிய விரிவான செய்திகள் பல ஊடகங்களில் கடந்த ஜனவரி மாதமும் அதன் பின்னரும் வெளியாகியிருக்கிறது.

தமிழ் நாட்டில் இனிய நந்தவனம் மற்றும் யுகமாயினி இதழ்களிலும் விரிவான செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

இம்மகாநாடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய நகரங்களிலும் விரிவான ஆலோசனைக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் நான் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. சமீபத்திலும் மகாநாட்டு இணைப்பாளர் தலைமையில் இப்பகுதிகளில் கூட்டங்கள் நடந்துள்ளன. விரைவில் மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளி மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களும் இம்மகாநாட்டில் பங்கேற்று கருத்தரங்குகளில் தமது கட்டுரைகளை சமரப்பிக்கவிருக்கின்றனர்.

இம்மகாநாடு முடிந்த பின்னர் இலங்கை மலையகத்தில் பேராதனைப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழக வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் கலை, இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாக முதல்வர், கலைப்பீட பேராசிரியர்கள் ஆகியோரது சம்மதமும் பெறப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டினால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் பயனடையத்தக்கவிதமாகத்தான் நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த மகாநாடு அரசியல் சார்ந்தோ இலங்கை அரசாங்கம் சார்ந்தோ நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்பது இக்கூட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்.

12 அம்ச கலை, இலக்கியம் , கல்வி சார்ந்த யோசனைகளை முன்வைத்தே நாம் இந்த மகாநாட்டை கூட்டுகின்றோம்.

இந்த மகாநாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. எழுத்தாளர்களினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் சமூகநலன் விரும்பிகளினதும் நிதிப்பங்களிப்புடன்தான் இம்மகாநாடு நடைபெறவிருக்கிறது.

அப்படியிருக்க தங்களது கீற்று இணைய இதழில் மகாநாட்டு அமைப்பாளரான என்னையும் என்னோடு இணைந்து பணியாற்றவுள்ள கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாகவும் எமக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாகவும் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்கள் கருத்துக்கூறியிருக்கிறார்.

அமைப்பாளராகிய நான் இலங்கை அதிபர் திரு. ராஜபக்ஷ அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மகாநாடு நடத்துவதாக தங்களது கீற்று இதழில் எழுதப்பட்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒரு இருதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். கடந்த சில வருடங்களாக மருந்து மாத்திரைகளுடன்தான் எனது வாழ்க்கை நடக்கிறது.

1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுத்தாளனாக இலங்கையில் நன்கு அறியப்பட்டவன். வீரகேசரி நாளிதளில் உதவி ஆசிரியராகப்பணியாற்றியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் எனது இலக்கியப்பணி இதழியல் பணி தொடர்கிறது. நான் ஒரு படைப்பாளி அத்துடன் பத்திரிகையாளன். இதுவரையில் 18 நூல்கள் எழுதியிருக்கின்றேன். இரண்டு நூல்களுக்கு சாகித்திய விருதுகளும் பெற்றுள்ளேன். பல நாடுகளுக்கும் பயணித்து பயண இலக்கியங்கள் எழுதியிருக்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு மேற்கொள்ளும் பல சமூகப்பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான (யுரளவசயடயைn ஊவைணைநn யுறயசன 2002) விருதும் பெற்றுள்ளேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் சில தமிழ் சமூக அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருக்கும் எனக்கு, கீற்று இணைய இதழ் ஆசிரியரான தாங்களும் திரு. எஸ்.பொன்னுத்துரையும் அபகீர்த்தி ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் நான் ஒழுங்குசெய்துள்ள சர்வதேச எழுத்தாளர் மகாநாடு பற்றியும் அவதூறாக எழுதப்பட்டிருப்பதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் எனது மகாநாட்டுப்பணி பற்றியும் மிகவும் அவதூறாக எழுதியுள்ள திரு. எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைக்கும் தங்களது கீற்று இணைய இதழுக்கும் எதிராக நான் மானநட்ட வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளேன். இதுசம்பந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

தங்களது குறிப்பிட்ட கீற்று இதழ் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர ஒலிபரப்புச்சேவையான இன்பத்தமிழ் ஒலி வானொலியில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு கருத்துக்களம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, மேலும் பல நேயர்களினால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் தாங்களும் தங்கள் இதழும் திரு.எஸ்.பொன்னுத்துரையும்தான் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

எனவே மானநட்ட வழக்கு தொடருவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ரூபா நட்ட ஈடுகோரி தங்களுக்கும் திரு. எஸ்.பொன்னுத்துரைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

இக்கடிதத்தை சுயசிந்தனையுடனும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தங்கள் இருவராலும் நேர்ந்த அபகீர்த்தியினாலும் எழுதுகின்றேன்.

முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

தகவல் மூலம்: தமிழ்முரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிப் பேசுவதில் எந்தப்பயனுமில்லை. தாராளமாக அவர் அந்த மாநாட்டை நடத்தட்டும். நீங்களும் உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்.

நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்



சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - முருகபூபதி கூற்று பொய்யோ? மெய்யோ?

முருகபூபதி அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் ஸ்தாபகர் என்பதையோ, அவுஸ்ரேலியாவில் அவர் பல எழுத்தாளர் ஒன்றுகூடலை நடத்தினார் என்பதையோ நான் மறுக்கவில்லை. அத்தகைய ஒரு மகாநாடு மெல்பேர்ன் நகரத்தில் நடந்தபொழுது என்னை அழைத்துக் கெளரவித்துள்ளார். நான் வாழும் சாட்சி. இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்கிற அமைப்பு மூலம் கல்வி உதவி செய்கின்றார் என்பதை நான் அறிந்து, அதனை மனசாரப் பாராட்டவும் செய்துள்ளேன். நான் நீர்கொழும்பில் நடந்த தமிழ் விழாவில் கலந்து கொண்டபொழுது, அரைக் காற்சட்டை தாரியாக என்னைச் சந்தித்ததாக அவர் குழைவார். இந்த யதார்த்த உறவுகளை நான் மறந்தேனல்லன். இந்த உறவுகளுக்கு அப்பாற்பட இலக்கிய வாழ்க்கையில் தர்மம் நிலைநாட்டப்படுதல் வேண்டும் என்பது என் மதம்.

நான் என்னுடைய அறிக்கையில், தமிழ் ஈழர் இலங்கை மண்ணிலே படும் துயரங்கள் குறித்து என் ஆதங்கங்களை வெளிப்படுத்தினேன். அதற்கு இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியிலும், சென்னையிலும் கொட்டித் தீர்த்த குமுறல்களை ஆதாரமாகக் காட்டினேன். இன்று ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வாதிகாரத்தின் மூர்க்கம் கட்டவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், படைப்பாளிகள் தங்களுடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் களம் அமைத்துத் தரமுடியுமா என்கிற என் சந்தேகங்களையும் முன்வைத்தேன்.

இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிடுதல் பொருந்தும். எனக்கு இலங்கையில் பல நெருக்கடிகளும், இன்னல்களும் ஏற்பட்டன என கதைகள் சோடித்து நான் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்துக் கோரியவனல்லன். "நான் எழுத்தாளன். எழுத்துப் போராளியாகவே வாழ்ந்தவன். என் எழுத்தின் சுதந்திரத்தை அநுபவித்துச் சுதந்திரமாக வாழ்வதை விரும்புகின்றேன். இலங்கை திரும்பினால், இந்தச் சுதந்திரத்தை நான் அநுபவிக்கமுடியாது'' என்பது தான் என் அகதிமனுவின் சாரம்(வ.வா.-பக்கம் 1972). இதனை அவுஸ்ரேலியா அங்கீகரித்தது. இந்த சுதந்திரத்திற்காக நான் குரல் கொடுக்கும்பொழுது, முருகபூபதிக்கு எப்படி எதனால் மானபங்கம் ஏற்படுகின்றது என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

என் எழுத்துச் சுதந்திரத்தையும், என்னுடைய கருத்துச் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும் ஒரு ஜனநாயக அரசு அவுஸ்ரேலியாவில் நடைபெறுகின்றது. இந்த அரசியல் நாகரிகத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான் நான் அவுஸ்ரேலிய குடிமகனாய் வாழ்கின்றேன். கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும் அச்சமின்றி பரிமாறிக்கொள்ளுதலே ஜனநாயகத்தின் ஆணிவேர். இந்தச் சுயாதீனத்தினை அநுபவிக்கும் பிரஜை என்கின்ற நிலையில், என் கருத்துக்கு எதிர்க்கருத்துத் தெரிவிக்காமல், நான் பத்துக்கோடி இந்திய நாணய மதிப்பில் சங்கை நட்ட வழக்குத் தொடருவேன் என்று கூறுதல் ஒருவகையில் அச்சுறுத்தலும் மிரட்டலுமாகும். இது உண்மையில் வன்முறையே.

ஐ.நா. சபையின் விசாரணைக்குக் குறுக்கே நின்று, அந்தச் சபையின் கிளையையே மூடச் செய்தும், தராக்கி தொடக்கம் லசந்தா வரையிலும் எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்து நரபலியாடிய, ஜனநாயக உரிமைகளை ஆழமாகப் புதைத்துள்ள ஒரு மயான பூமியின் ஆட்சியாளரின் பாணியைப் பின்பற்றி மிரட்டல் மூலம் என்னை மெளனிக்கச் செய்யும் முயற்சி அவுஸ்ரேலியா பேணிப் பாதுகாக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் முற்றிலும் முரணானது; எழுத்தாளர் தகைமைக்கு ஒவ்வாதது. இதனை உணராது, `எடுப்பார் கைப்பிள்ளை' போன்று புலம்புதல் நான் அறிந்துள்ள முருகபூபதியின் இயல்புக்குப் பொருந்துவதில்லை என நினைத்துக் கவலைப்படுகின்றேன்.

`பைபாஸ் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவன்' என்று மருத்துவ காரணங்கள் காட்டி அநுதாபத்தினைச் சம்பாதிப்பதுகூட ஓரளவில் அறியாமை சார்ந்ததாகவே நான் கருதுகிறேன். `சரியான காரணங்களுக்காக அவ்வப்போது விவாதத்தில் ஈடுபடுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது' என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வு மையத்தின் ஆய்வாளர் Kira Birditt கூறுகிறார். விவாதத்தைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்குக் குந்தகமானது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்படி முருகபூபதியின் ஆரோக்கியத்தினைப் பேணும் வகையிலேதான், உண்மையைக் கண்டறியும் ஒரு விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பினை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.

நிற்க; முருகபூபதி தந்துள்ள விளக்கக் குறிப்புகள் மேலும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. முருகபூபதி பத்து ஆண்டுகளாக நடத்தும் அவுஸ்ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் இந்த மகாநாட்டினைக் கூட்ட நான்காண்டுகள் முயன்றதாகவும், 2011இல் அது சாத்தியமாவதாகவும் ஜூனியர் விகடனில் உருகியுள்ளார். இந்த மகாநாட்டை அவர் நிறுவிய கலைச்சங்கம் நடத்தப் போகின்றதா அல்லது புதிதாக முளைத்துள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தப் போகின்றதா? பின்னதுதான் நடத்துகின்றது என்றால், முன்னதின் நிறுவனருக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?

அவருடைய மிரட்டல் கடிதத்திலே, 3-1-2010 அன்று கொழும்பில் சுமார் 120 பேரளவில் கூடிய ‘மாபெருங் கூட்டத்தினை' தான் கூட்டியதாகவும், இலங்கை அரசு கொடுக்கும் சம்பளத்திலே வாழும் பல்கலைக்கழக ஆசிரியர்களும் பிறரும் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். அவருடைய கலைச் சங்கம் சகலவற்றையும் நடத்துவதான மயக்கத்தை ஏற்படுத்துகின்றார். இடையிலே இப்பொழுது International Tamil Writers Forum நடத்துவதாக பிரசாரம் நடைபெறுகின்றது. இந்த ஒன்றியம் இப்பொழுது முளைத்துள்ள மர்மம் என்ன? இந்த ஒன்றியம் அரசு அனுமதி பெறாமலா மகாநாடு நடத்துகிறது? இந்த அனுமதியைப் பெற்றுத் தந்துள்ள மர்ம நபர்கள் யார்? அவர்களுக்கும் அரசுக்குமுள்ள உறவு என்ன? இலங்கையின் மிக உயர்தளபதி பொன்சேகாவின் அனைத்து உரிமைகளையும் பறித்துள்ள ராஜபக்சே இந்தத் தமிழருக்கு இளகியதின் பின்னணி என்ன? ஊழலும் லஞ்சமும் நிகழ்ந்துள்ளதா? இத்தகைய சந்தேகங்கள் எழுதல் நியாயமானது. இவற்றைப் போக்குதல் அமைப்பாளரின் கடன். ஊழல், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, எதிர்ப்புகளை மெளனிக்கச் செய்தல் என்பன ராஜபக்சே சகோதரரின் ஆட்சி `ஸ்டைல்'. இவற்றிலிருந்து விலகிச் சுத்த சுயம்புவான தர்மசீலர்களுடைய எழுத்தாளர் ஒன்றுகூடல் சாத்தியமானதா? இதனைக் கேட்டால் `லஞ்சம் வாங்கிவிட்டேன்' என்று முருகபூபதி துள்ளிக் குதிப்பதா?

தமிழ் இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் சிங்களத்துக்கு அடிமையாக்குதல் மிக வெறுக்கத்தக்க ஈனமான செயல். இதன் ஆரம்பம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸாஹிரா மாநாட்டிலே துவங்கிற்று. மார்க்ஸியராயினும் தமிழ் இலக்கியமும் மொழியும் பேணிப் பாதுகாத்துள்ள தமிழ்க்கூறினை மறுதலிக்கலாகாது என்கிற கோரிக்கைதான் `நற்போக்கு இலக்கிய'ப் பிரகடனம். இந்தக் கருத்துப் போருக்குத் தலைமை தாங்கியவன் நான். அதன் பயனாக நானூறுக்கு மேற்பட்ட கலை - இலக்கியவாதிகள் 1963இல் மட்டக்களப்பில் கூடி ஒரு தமிழ் விழாவை நடத்தினார்கள். மூன்று நாள்கள் ஒரே இடத்தில் ஒன்றாகவே தங்கி, உண்டு, அளவளாவிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வசதியைச் சகாயித்தது. அதனைத் தொடர்ந்து கிண்ணியா, மூதூர், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களிலும் தமிழ் விழாக்கள் நடை பெற்றன. இயக்கவாதியாகவும் வாழும் ஓர் இலக்கியவாதிக்குக் கிட்டிய பெருமை இது. இருப்பினும், அரசியல் பின்புலத்தினைப் பயன்படுத்தி, கைலாசபதி - சிவத்தம்பி தலைமைத்துவம், தமிழ்நாட்டு கலை - இலக்கியத் தொடர்புகளைத் துண்டிக்கும் வகையிலே, தமிழ் ஈழரின் கலைகளைச் சிங்களமயமாக்குதலை முன்னெடுத்தார்கள். இதற்காகவே யாழ் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டு, கைலாசபதி அதன் தலைவரும் ஆக்கப்பட்டார். இது வரலாறு. 1983ஆம் ஆண்டு அநர்த்தங்களின் பின்னர், போராட்டக் குழுக்களின் கை ஓங்கியதினால், இந்த சிங்களமயமாக்கல் முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது, தமிழ் ஈழத் தாயகத்தைச் சிங்களர் "மண்கொள்ளை' அடித்தபின்னர், தமிழர்களைச் சிங்களமயமாக்குதலிலே கணிசமான வெற்றியைச் சாதித்துள்ளதான இறுமாப்புடன், தமிழ் கலை - இலக்கியங்கள் சிங்கள மொழியை மூத்த மொழியாகவும், கலாசார மொழியாகவும் திணிக்கும் முயற்சியை சிங்கள இனவாதம் மேற்கொண்டுள்ளது. முன்னரே இதற்கு முண்டு கொடுத்து வாழ்ந்த சீனச் சார்பாளர்களையும், மார்க்ஸியம் பேசும் முற்போக்கு எழுத்தாளர்களையும் வளைத்துள்ளது போலத் தோன்றுகின்றது. `ஒன்றியம்' என்கிற சொல்லே மொஸ்கோ புத்திஜீவிதம் பிரசவித்துள்ள சொல்.

கருணா, கே.பி., டக்ளஸ், வரதராசப் பெருமாள் ஆகியோர் எதற்காக ராஜபக்சே அணியிலே சேர்ந்து தமிழ் இனத்தைக் கருவறுக்கும் செயலிலே ஈடுபடுகிறார்கள்? அவர்களுடைய செயற்பாட்டிற்குப் பின்னால் ஊழலும் லஞ்சமும் இல்லையா? யாழ்ப்பாணத்திலே இந்த மகாநாடு சம்பந்தமாக ஓர் எழுத்தாளர் வீட்டில் ஆலோசனை நடந்ததாகச் செய்தி கசிந்துள்ளது. அவர் இராஜபக்சே குரலில் அரசியல் பேசுவதற்காக பல லட்சங்களைப் பெற்றதும் அம்பலமாகியுள்ளது. இவர்களுடைய அநுசரணைகள் எதுவும் பெறப்படமாட்டாது என முருகபூபதி அமைப்பாளர் சார்பில் உறுதிமொழி தரத்தயாரா?

இப்பொழுது இதே கைங்கரியத்தை கலை - இலக்கியக் களத்திலேயும் உபயோகிக்கிறார்கள் என்று சந்தேகப்படுவதிலே நியாயமில்லையா? சேடம் இழுத்துக்கிடந்த பழைய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சக பயணிகள் இந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு இலங்கையின் அநுசரணையாளராகச் செயற்படுகிறார்கள் என்பதை மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளிலே உள்ள கலாநிதிகளிலே அநேகர் கைலாசபதி - சிவத்தம்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டவர்கள்; அன்றேல் அவர்களுடைய அடிப்பொடிகளான கலாநிதிகளாலே உருவாக்கப்பட்டவர்கள். அவர்களிலே பலர் இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு ஒத்துழைக்கிறார்கள். பதவி பெறுவதுகூட லஞ்சமே! இவர்கள் தான் பல்வேறு இடங்களிலே கருத்தரங்குகள் நடத்த முன்வருகின்றார்கள். இவை உண்மையல்ல என்பதற்காக சான்றுகள் தந்து என் போன்ற படைப்பாளிகளின் ஆதங்கங்களைப் போக்குவார்களா? இவற்றைப் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதற்கு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து ஊழியம் பயிலும் எனக்கு உரிமை இல்லையா என்பதுதான் கேள்வி.

பிறிதொன்றையும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 1915இல் தமிழர் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் தமிழ் ஈழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிவிட்டார்கள். 1949இல் தமிழ்த் தலைவர். G.G. பொன்னம்பலத்தினால் மலைநாட்டுத் தமிழர்களும் தமிழ் ஈழரின் தேசிய நீரோட்டத்திலிருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள். இப்பொழுது இவர்கள் மத்தியிலிருந்து தான் முக்கியமான பொறுப்பாளர்களைப் பொறுக்க வேண்டிய அவதி அமைப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றிலிருந்து இலங்கையில் வாழும் தமிழ் ஈழரின் ஆதரவு மேற்படி எழுத்தாளர் ஒன்று கூடலுக்குக் கிடைக்கவில்லை என்று ஊகிப்பதில் என்ன தவறு?

முள்ளிவாய்க்கால் பகுதியிலே தமிழ் இனச் சங்காரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு ஒத்துழைக்கும் எழுத்தாளர் பலரும் ராஜபக்சேயுடன் கூடிக் குலவி இருக்கிறார்கள். அவர்களுடைய பட்டியலையும், தொடர்புகளையும் என்னால் வெளியிட முடியும். அவர்களிலே பலர் ராஜபக்சேயின் உத்திகள் பலவற்றினால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களைப் போலவே, மூளைச்சலவைக்கு உட்பட்ட சங்கங்களுடன் முருகபூபதி செயற்படுவதுதான் வேதனையானது.

இறுதியாக ஒன்று கேட்கிறேன். இந்த எழுத்தாளர் ஒன்றுகூடலிலே உலக மாந்தநேயர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ராஜபக்சே அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்கிற தீர்மானத்தை நிறைவேற்றுமா? இந்த எழுத்தாளர் ஒன்று கூடலுக்குப் பின்னால் அரசியல் எதிர்பார்ப்புகள் பலவும் பின்னிப் பிணைந்துள்ளன என்கிற என் சந்தேகத்தினை முருகபூபதி மட்டுமன்றி இந்த ஒன்றியத்தின் அமைப்பாளர் சகலரும் போக்க முன்வருவார்களா? தமிழ் ஈழரின் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அமைதி நிலைகள் ஏற்பட்டுள்ளன என அவர்கள் கருதுகிறார்களா? ஜஃபா நிகழ்ச்சியை தமிழ்த்திரைப் படவுலகம் முற்றாகப் புறக்கணித்தது. அத்தகைய தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலே வாழும் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொழும்பு வாருங்கள் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கடை விரித்துள்ளீர்கள்?

இது எச்சரிக்கை அல்ல. நான் எழுத்துப் போராளியாக வாழும் படைப்பாளி என்பது முருகபூபதி உட்பட அமைப்புக் குழுக்களிலே செயற்படும் அனைவரும் அறிவர். எத்தனையோ இழப்புகள் ஏற்பட்ட பின்னரும், இந்த இலக்கிய ஓர்மத்தினையும், இலக்கிய தர்மத்தையும் பேணி வாழுதல் எனக்குப் பெருமையாகவும் இருக்கின்றது.

வினா - விடைகள் மூலம், அவுஸ்ரேலியா பேணும் ஜனநாயக முறையிலே கருத்துப் பரிவர்த்தனைக்கு முருகபூபதியை மட்டு மன்றி, இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகளிலே ஒத்துழைக்கும் அனைவரையும் அழைக்கின்றேன். அந்த மகாநாட்டுக்கு முன்னராவது கருத்துச் சுதந்திரம் நலமுடன் வாழட்டும்!

- எஸ்.பொ.

தொடர்புக்கு: +919176333357

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10418:2010-08-17-10-59-39&catid=1:articles&Itemid=264

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.

eelam_tamils_380அண்மையில் இலங்கை நாடாளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் தில்லியிலுள்ள அரசியல் தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களையும் சந்தித்து ஈழத் தமிழனத்தின் சோகங்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் தமிழ் ஈழரை மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் ஈழரின் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து ஓராண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழரின் புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் இந்தியா கொடுத்துள்ள 500 கோடி ரூபாயும் தமிழ் இனத்தைத் தமிழ் மண்ணிலே நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ராஜபக்சே அரசு செலவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுவரை நான்கு லட்சம் சிங்கள இராணுவக் குடும்பத்தினர் தமிழ் மண்ணிலே குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாம் பிறந்த மண்ணிலே தமது மானத்தையும் கற்பையும் காப்பாற்றி வாழ முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலம் தொடர்கதை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

‘இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட தமிழ் ஈழருடைய மண் சிங்களருக்குச் சொந்தமானது' என்று ராஜபக்சே கொக்கரிப்பதாகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமுறினார்கள். தமிழ் ஈழர் நிரந்தரமாக அடிமைகளாக்கபட்டுள்ள ஒரு சூழலிலே உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு நடத்துவது அவசியமானதா? உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா மனச்சாட்சியாகவும், இனத்தின் சுதந்திரத்திற்காக மூர்க்கங் கொண்ட விடுதலை வெறியனாகவும் வாழ்தல் அவசியம். அவற்றை எல்லாம் தொலைத்து விட்டு, இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று போக்குக் காட்டுவதற்காகவா இந்த உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்படுகிறது?

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள தமிழ்ப் படைப்பாளிகள், அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் ராஜபக்சே அடாவடிகளுக்கு எதிராகக் குரலும் குமுறலும் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் ஈழருடைய இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்கும் பணியிலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வீறுமிக்க அக்கறை கொண்டவர்களாக வாழ்வதாகவும் சாட்சியம் கூறுகின்றார்கள். இத்தகைய சூழலிலே ஒரு மாநாடு கொழும்பில் ஏன் நடத்தப்படுகிறது என்ற கேள்வி தமிழ்ப் படைப்பாளிகள் அனைவர் மத்தியிலேயும் எழுதல் நியாயமானது.

1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.

சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு?

மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை நீதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க வேண்டுமென்று உலக மாந்த நேயர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையிலே தான் ராஜபக்சே அரசு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினை முரட்டுத்தனமாகத் தாக்கி உள்ளார்கள். சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?

சர்வதேச சமூகம் இலங்கையில் நடைபெற்ற இன சங்காரத்துக்கும், நரபலி வெறி யாட்டத்திற்கும் எதிராக இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் சிங்கள ராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியுமா? தமிழ் ஈழருக்கு இலங்கையில் சாதாரணமான மனித உரிமைகளை வென்றெடுத்துத் தரமுடியுமா? அன்றேல், இன்றும் கொலை வெறித் தாக்குதனின் இரத்தத்தினால் கறை படிந்து கிடக்கும் இலங்கை ஆட்சியாளரின் மனநிலையில் அற்ப மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? இவை சாத்தியப்படாவிட்டால், கொழும்பில் நடத்தப்பட இருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் யாது பயன்?

ராஜபக்சே சகோதரர்களுடைய அராஜகத்தைக் கொழும்பிலே தட்டிக் கேட்கக்கூடிய ‘தில்' உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் யார் கொழும்பிலே கூடுகிறார்கள்? ‘சிங்கள அரசு பற்றி எத்தகைய விமர்சனமும் செய்ய மாட்டோம்' என்கிற உறுதிமொழி வழங்கித்தான் மாநாடு நடத்துவதற்கான அனுமதியே பெறப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

தமிழ் ஈழர் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார்கள். தமிழச்சிகள் தங்கள் கர்ப்பப் பைகளில் சிங்களக் குழந்தைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். சொந்த மண்ணில் அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி, விவசாயம் ஆகிய சகல ஜீவாதாரங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. கல்வி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையிலே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டி தமிழர்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் கொடுக்கப் போகிறோம் என்று வலைச் செய்திகள் பரப்புவது எவ்வளவு கேலிக்குரியது?

espo_350பிரான்சு நாட்டு ராணி ஒருத்தி அகங்காரத்துடன் கேட்டாளாம், "தின்பதற்கு ரொட்டியில்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே' என்று! எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

காட்டுபிராண்டிகள் வாழும் ஆப்பரிக்காக் கண்டம் என்று சொல்வார்கள். நைஜீரியாவில் இபோ இன மக்கள் தனி நாடு கோரிப் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டம், இபோ மக்களுக்கு தோல்வியில் முடிந்தது. ஆனால் ஓராண்டுக்கிடையில் போரினால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளும் மறக்கப்பட்ட நைஜீரியாவில் இவர்கள் இப்பொழுது தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள். புத்தர் பெயரால், நீச ஆட்சி நடத்தும் ராஜபக்சே ஆட்சி நிலவும் வரையில் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் வாழும் ஒரு மயான பூமி என்று வெறுத்து ஒதுக்கப்படுவதுதான் தர்மம்.

இந்த ஆட்சியினரால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்ன? எழுத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துச்சொன்னது என்பதற்காக சிங்களனுக்குச் சொந்தமான ஓர் ஒளிபரப்பு நிலையமே சாம்பலாக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி நடக்கும் மயான பூமியிலே, ஏன் அவசரமாகச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல்?

இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா? மாநாடு கூட்டுவதற்கு முன்னர், இதனை உலகப் படைப்பாளிகள் சமூகத்திற்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த மாநாட்டினைக் கூட்டும் அமைப்பாளருக்கு உண்டு. தங்கள் பக்கத்து நியாயங்களை ஏனைய தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் முன்வைக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழருடைய மூத்த படைப்பாளி என்கிற உரிமை கோரலுடன் முன் வைக்கின்றேன்.

- எஸ்.பொ.

தொடர்புக்கு: +919176333357

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10291:2010-08-07-08-44-51&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

ரகுநாதன், கந்தப்ஸ்,

இந்த மாநாட்டை ஏன் நடாத்தக்கூடாது என்பதற்கு 1900களில் இருந்து வரலாற்றை தூக்கி பிரட்டிப்போடுகின்ற எஸ்.பொ அவர்களின் ஆயிரத்து எட்டு காரணங்களைப்போல் இந்த மாநாட்டை ஏன் நடாத்தவேண்டும் என்பதற்கும் ஆயிரத்து எட்டு காரணங்களை கூறமுடியும்.

அடிப்படையில் பார்க்கப்போனால் இங்கு எஸ்.பொ அவர்கள் ஓர் பனிப்போரை தொடுத்து உள்ளார். அவர் யாழ் பல்கலைக்கழகம் தொடக்கம் அங்கு உருவாக்கப்பட்ட கலாநிதிகள் வரை அனைவரையுமே தூக்கி எறிகின்றார். தன்னை மாத்திரமே ஓர் சீரிய இலக்கியவாதியாக காட்ட முனைகின்றார்.

இலங்கை சென்றால் தான் சுதந்திரமாக வாழமுடியாது என்று தனது அவுஸ்திரேலிய அகதி மனுவில் எழுதியுள்ளதாக கூறியுள்ள எஸ்.பொ அவர்கள் இலங்கையில் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கை அதிபருக்கு எதிராக அவர் போர்க்குற்றம் செய்தார் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வது நடைமுறை வாழ்வு புரியாமல் எவ்வளவு தூரம் குதர்க்கமாக கதைக்கின்றார் என்பதற்கு தெளிவான ஓர் சிறு உதாரணமாக உள்ளது.

எஸ்.பொவை தூக்கிப்பிடித்து போற்றுகின்ற நமது தேசிய ஊடகங்கள் (?) முருகபூபதி அவர்களின் மாநாட்டை தூற்றுவது ஆச்சரியப்படக்கூடிய ஓர் விடயம் இல்லை.

நான் ஆரம்பத்திலேயே கூறினேன். இந்த புறக்கணிப்பின் பின்னால் ஏதோ சூக்குமம் எழுத்துலக அரசியல் உள்ளது என்று. அந்த சூக்குமப்புள்ளி எஸ்.பொ என்பது இப்போது மிக நன்றாகப் புரிகின்றது.

எஸ்.பொ அவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துகள்!

நமக்கு யாருக்கும் முண்டு கொடுக்கவேண்டிய தேவை இல்லை. மாநாடு நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன நமக்கு பிரச்சனை இல்லை. முருகபூபதி என்று ஒருவரைப்பற்றி இன்றுதான் அறிகின்றேன். ஆரம்பத்தில் மோகன் யாழில் இணைத்த எஸ்.பொ அவர்களின் பேட்டியை முழுமையாக கேட்டு அங்கு கருத்து கூறினேன். அதில் எஸ்.பொ அவர்களின் தொனியைப் பார்த்தபோதே சில சந்தேகங்கள் ஏற்பட்டன. இப்போது ரகுநாதன் இணைத்த விடயத்திற்கு நமது அபிப்பிராயத்தை கூறவேண்டி வந்துவிட்டது. நமது பார்வையை கூறியுள்ளோம். நமது கருத்துக்கள் எவரதும் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிம்மதியாகவும்இ மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு உங்கள் மேற்கண்ட செயல்கள் எவ்விதத்தில் உதவியாகஇ உறுதுணையாக அமைந்தன ஃஃ அமையும் என்பதை சற்று விளக்கமாக கூற முடியுமா? அல்லது தமிழ் மொழியின்இ தமிழின் வளர்ச்சிக்கு உங்கள் செயல்கள் எவ்விதத்தில் உதவியாகஇ உறுதுணையாக அமைந்தன ஃஃ அமையும் என்பதை சற்று விளக்கமாக கூற முடியுமா?

செம்மொழிமா நாட;டை நடhத்தியதன் மூலம் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதாவது பதில் கிடைத்ததா

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் காக்கை நீர் கழுகு. கொழும்பில் இருந்து இயங்கும் வீரகேசரி, தினக்குரல் தொடக்கம் இதர தமிழ் ஊடகங்களையும், பம்பலப்பிட்டி இந்து, இராமநாதன், சைவ மங்கையர் கழகம் இதர பள்ளிகளையும் மூடுமாறும் உத்தரவு கொடுங்கள் தலைவரே!

தமிழரை அழிக்க கூடிய இதுபோன்ற எட்டப்ப வேலைகள் உங்களுக்கே கைவந்த கலை!

மற்றையபடி சிங்களவனிடம் நக்கி வளரும் நாய்கள் குரைத்து வளர தமிழ் ஒன்றும் உங்கள் எஜமானி கண்டெடுத்த கரடிமொழியல்ல...

சங்கம்வைத்து வளர்ந்த மொழி. தமிழ்மொழி

அது புலிமொழி

  • கருத்துக்கள உறவுகள்

"சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்"

இதற்கு அர்த்தம் புரியுமோ தெரியாது அவூஸ்ரேலியாவில் இருந்து புலிவாந்தியெடுக்கும் சிங்களநாய்களின் கால்களை நக்கிவாழும் புழுக்களுக்கு.

இதில் சர்வதேசமாம்.... ஐயோ ஐயோ

சிங்களவன் காசை கொடுக்கிறான்............ ஈப்பி சாப்பி துவக்கை காட்டி மிரட்டி அழைப்பிதளை கொடுக்குது....

பயத்தில் நான்கு பேர் வந்து மேடையில் அமரபோகிறார்கள்.

இந்த தமிழ் தெரியாத சிங்களவனின் வளாப்பு நாய்கள்............ ஏதோ தெரிந்த நாலு தமிழ்சொல்லை சொல்லிபோட்டு அதற்கு பேச்சு என்று பெயர்வைக்க போகின்றது.

இதை எதிர்ப்பதால்தான் அவர்களுக்கு லாபம். இலவசத்தில் விளம்பரம் கிடைக்கும்.

நாய்கள் நக்குவதெல்லாம் ஒரு செய்தியா?

அப்படியே விட்டுவிட வேண்டும். வந்து நக்கிட்டு கூலி வேண்டிகொண்டு அது தன்பாட்டில போகும்.

தமிழரை அழிக்க கூடிய இதுபோன்ற எட்டப்ப வேலைகள் உங்களுக்கே கைவந்த கலை!

புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் ஒரு முடிவோட கிளம்பி இருக்கிற கூட்டம். அதுகளை சொல்லி திருத்த ஏலாது. அதனால அதுகள் செய்யுறதுகளை கண்டும் காணாமலும் இருந்திட்டா ஓரளவு விளம்பரப்படுத்தலையாவது குறைக்கலாம்.

அவன் ஒருத்தன்.. செம்மொழி மாநாடென்று பேத்திக்கும் கட்சிக்கும் அரங்கேற்றம் நடத்தின மாதிரி.. இதுவும் யாரேனும் தங்கட பிள்ளைகளின் புத்தக வெளியீடு செய்யினம் போல..!

இதெல்லாதாப்பா நம்ம இனப் பெருமை..! சிங்களவனுக்கு வால் பிடிக்கிறது.. தேசிய கடமை. இந்தியனுக்கு காக்கா பிடிக்கிறது.. தேசிய கடமை. வெள்ளைக்காரனுக்கு மாலை போடுறது.. சர்வதேச இராஜதந்திரம்.. வெளிநாட்டில இருந்து ஊரில போய் பந்தா காட்டிறது.. தேசிய கடமை. வெளிநாட்டில தாங்களே தங்களுக்க போட்டி வைச்சு தங்கட பிள்ளைகளைப் பற்றி தாங்களே மேடைகளில அறிவிக்கிறது.. கொடுமை.. இருந்தாலும் அதுவும் தேசிய கடமை. :lol::)

போங்கடா நீங்களும் ஒரு ஆக்களுன்னு.. உங்களுக்க ஒரு எழுத்தாளர் மாநாடு. அப்படி எழுதி என்னத்தைத்தான் உலகத்தில வெட்டிக் கிழிச்சிங்க..! வெங்காயங்களா..! :):wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா? :rolleyes:

சுருக்கமாக சொல்லப் போனால் நீங்கள் மக்களை குழப்புவதன் மூலம் பிரபல்யமாக பார்க்கிறீர்களாம்...நீங்கள் துரோகியாம் :unsure:

சுருக்கமாக சொல்லப் போனால் நீங்கள் மக்களை குழப்புவதன் மூலம் பிரபல்யமாக பார்க்கிறீர்களாம்...நீங்கள் துரோகியாம் :rolleyes:

நீங்க ரதியோ இல்லை கூனியோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.