Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதையால் தமிழ்க் கலாச்சாரத்தை சீரழித்த கல்லூரி மாணவி. விபரீதம் நடக்குமுன் தடுத்த காவல்துறை.

Featured Replies

கே.கே. நகரைச் சேர்ந்தவர் அகல்யா (வயது 21) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர், நேற்று முன்தினம் இரவு ராயபுரத் தைச் சேர்ந்த தனது காத லுடன் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தி விடிய விடிய கும்மாளம் அடித்தனர்.

அதிகாலை 3 மணியளவில் போதை மயக்கத்தில் தள்ளாடியபடியே இருவரும் ஓட்டலை விட்டு வெளியில் வந்தனர். தனது காரில் அகல்யாவை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் காதலன். உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடை முன்பு அகல்யாவை இறக்கி விட்டார். அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே மயங்கி கீழே சாய்ந்தார்.

டி.சர்ட், குட்டைப் பாவாடை அணிந்திருந்த அகல்யா மல்லாந்து படுத்த நிலையில் மயக்கமானார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமாக காட்சி அளித்தன. இந்த நேரத்தில் அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர்.

இளம்பெண் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் தனிமையில் மயங்கி கிடப்பதை பார்த்ததும் இவர்களுக்கு காமம் தலைக்கேறியது. 4 பேரும் போதை மயக்கத்தில் இருந்தனர். அகல்யாவின் அருகில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட தொடங்கினர்.

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோந்து வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். போலீசை பார்த்ததும் அகல்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இத்தனை பரபரப்புகள் நடந்தும் அகல்யா இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அரை குறை மயக்கத்திலேயே இருந்தார்.

இதையடுத்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு அகல்யாவை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் பாதுகாப்பாக அவரை தூங்க வைத்தனர். நேற்று காலை 6.30 மணியளவில்தான் அவருக்கு மயக்கம் தெளிந்தது. லேசாக கண் விழித்து பார்த்தார்.

நான் எங்கு இருக்கிறேன் என்று அகல்யா கேட்டார். அருகில் இருந்த பெண் போலீசார் போலீஸ் நிலையத்தில் என்றனர். எப்படி இங்கு வந்தேன் என்று அகல்யா திருப்பிக் கேட்க... நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிளாஸ்பேக்காக சொல்லி முடித்தனர் போலீசார். இதைக்கேட்டு அகல்யா கண்ணீர் வடித்தார்.

பின்னர் அகல்யாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது தாயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். எழுதி வாங்கிக் கொண்டு அகல்யாவை தாயிடம் ஒப்படைத்தனர். போலீசாருக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு தள்ளாடியபடியே அகல்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். போதை மாணவி ஒருவரின் மயக்க போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

செக்ஸ் சில்மிஷத்தில் இதற்கிடையே ஈடுபட்டு சிக்கிய வாலிபர் போலீசாரிடம் கூறும்போது, ஓட்டலில் வைத்தே இப்பெண்ணை நாங்கள் பார்த்தோம். ஆனால் அவருடன் வந்த வாலிபரின் தோளில் கையை போட்டபடியே நடக்க முடியாமல் அவர் நடந்து வந்தார். இவர்களது காரை நாங்கள் பின் தொடர்ந்து வந்தோம். இடையில் கார் எங்கோ சென்றுவிட்டது.

இதனால் தி.நகர் முழுவதும் மோட்டார் சைக்கிளில் தேடினோம். உஸ்மான் ரோட்டில் நாங்கள் வந்த போது, அப்பெண் மயங்கி கிடப்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தோம் என்று தெரிவித்தார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கு முன்பு சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர், அண்ணாநகர் சாந்தி காலனி ஆகிய பகுதிகளில் இதேபோல நவநாகரீக இளம் பெண்கள் சாலையில் மயங்கி கிடந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் விடிய விடிய தண்ணி ஆறாக ஓடுகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் பலர் தங்கள் காதலனுடன் குடித்து கும்மாளமடிக்கிறார்கள். இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பார்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இதுபோன்ற பார்களுக்கு தங்கள் காதலனுடன் சென்று முதலில் ஸ்னாக்ஸ் மட்டுமே சாப்பிட தொடங்கும் மாணவிகள் நாளடைவில் மொடாக் குடிகாரிகளாக மாறிவிடுகிறார்கள். இதன் பிறகு இதில் இருந்து அவர்களால் எளிதாக மீள முடிவதில்லை.

சென்னை மாணவிகளிடம் இதுபோன்ற மோசமான கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நட்சத்திர ஓட்டல்களின் பார்கள் நள்ளிரவு வரை திறந்திருப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே போலீசார் விழித்துக்கொண்டு செயல்படுவார்கள். டாஸ்மாக் பார்களில் 10 மணி வரையும், நட்சத்திர ஓட்டல் பார்களில் 11 மணி வரையும் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

http://www.thedipaar.com/news/news.php?id=17638

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்..! காதலியை நடுரோட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டுப் போகிறவன்தான் காதலனா?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காதலனுடன் என்று எழுதுவதற்கு தயங்கி ...... காதலுடன் என்றே எழுதியுள்ளார்கள்.

ஆக ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயாத்து போட்டிருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.

இந்த செய்திகள் யாழில் நடப்பதற்கு இன்னமும் சில காலங்களே உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடம்பரத்தில் அனுபவப்பட்ட மேலைத்தேயவன்.....

உரலையும் உலக்கையையும் நாடிப்போக......

வயலும்வாழ்வும் என வாழ வேண்டிய கீழைத்தேயவன் கிரைண்டர் மிக்ஸர் என கனவு காண்கிறான். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. பட்டு திருந்தினால்தான் உண்டு... பெங்களூரு... எம்.ஜி ரோடு.. இதவிட மோசம்... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அப் பெண் தங்கி இருந்தவராம் அவர்கள் ஒன்டுமே செய்யவில்லையா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்..! காதலியை நடுரோட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டுப் போகிறவன்தான் காதலனா?? :rolleyes:

அதுதானே ஒரு ஓரமாய் இறக்கிவிட்டிருக்கலாம். :lol:

இப்படியான சம்பவங்கள் நடக்க காரணங்கள் எது?

பிள்ளைகள் பெற்றோரை மதிப்பது குறைந்து வருகின்றமையா?

பிள்ளைகளை கவனிக்க நேரமிலாமல் அல்லல்படும் பெற்றோரின் பொறுப்பின்மையா?

தவறான நட்புச் சூழலா?

பொறுப்பற்ற, வியாபார நோக்கமுடைய சினிமாக்களா? குறுந்திரைத் தொடர்களா?

அல்லது நவநாகரிக உலகில் இவை ஏற்றுக்கொள்ளப் படுகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுபான விற்பனையால் தமிழ் நாடு அரசின் வருமானம் மிக அதிகமாம்.கருணாநிதி குடும்பத்திற்கும் sonthamaana மதுபான கடைகள் பார்கள் அதிகமாம் என்று செய்தி சமீபத்தில் வந்தது. தமிழ் வளர்த்த கலைஜ்நேர் தமிழுக்கு செய்யும் தொண்டுஇதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே ஒரு ஓரமாய் இறக்கிவிட்டிருக்கலாம். :rolleyes:

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு முழுவதும் காவல் நிலையத்தில் அப் பெண் தங்கி இருந்தவராம் அவர்கள் ஒன்டுமே செய்யவில்லையா :rolleyes:

என்னட்டை வீடியோவிலை எடுத்த படம் கிடக்கு! போட்டு காட்டட்டே?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: இது விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திலும், விடிந்துவரும் கிழக்கிலும் நடக்கும், பொறுத்திருந்து பாருங்கள். கடத்தல்கள், வானில் சென்று தூக்குவது, 4, 5 பேர் சேர்ந்து கற்பழிப்பது இப்போது யாழ்ப்பாணத்தில் சர்வ சாதாரணமாகி விட்டதாம். சனமே ராணுவத்திடம் போய், "தயவுசெய்து உங்கள் காவலரண்களை இனி இரவில் அகற்ற வேண்டாம்" என்று கேட்குமளவிற்கு நிலமை !!!!!!

அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள், இலக்கற்ற எமது இளைய தலைமுறை இப்போது செய்துகொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பிற்குள்ளாக்காப்பட்ட காலத்திலிருந்து போராட்டம் யாழில் அரசியல் மயமாக்கப்படாமையாலும், சமூக விழிப்புணர்ச்சியின்மையாலும் எமது இளைய சமூகம் சீரழிந்துகொண்டு செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பிற்குள்ளாக்காப்பட்ட காலத்திலிருந்து போராட்டம் யாழில் அரசியல் மயமாக்கப்படாமையாலும், சமூக விழிப்புணர்ச்சியின்மையாலும் எமது இளைய சமூகம் சீரழிந்துகொண்டு செல்கிறது.

ஒரு சமூகத்தில் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். எல்லோரும் ஒரே மாதிரி நடக்கவேண்டுமென்றால் வடகொரியாவில்தான் முடியும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகத்தில் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். எல்லோரும் ஒரே மாதிரி நடக்கவேண்டுமென்றால் வடகொரியாவில்தான் முடியும் :lol:

எங்கட ஊரில ஒரு காலத்தில கமலம் கொலைவழக்கு எண்டு ஒண்டு மெகாசீரியல் கணக்கா வருசக்கணக்கில ஓடினது.. அப்ப கொலைகளுக்கு அவ்வளவு பஞ்சம்..! :rolleyes:

நீலப்படங்களையும் புத்தகங்களையும் தாராளமா தவழவிட்டு சமூகக் கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டால் இதுதான் நடக்கும். இப்ப நம்ம சனங்களே அவனிட்ட பாதுகாப்பு தேடவேண்டிய நிலைமை..!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.