Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 12.09.2010

Featured Replies

DSC012391.jpg

http://www.nerdo.lk/wp-content/uploads/2010/09/DSC012283.jpg

கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால்; படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இந்தவாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.�

இப்படியான சூழ்நிலையில்இ புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் சில கருத்துகள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.

தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோஇ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான். அப்படியான நிலையில் இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது.

அதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. இந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள்இ அல்லது அந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை.

இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது.

ஆனால் அதேநேரத்தில் இப்படியான கதைகள் வெளியே உலாவிக் கொண்டிருப்பது தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் நிலைமையைத்தான் மேலும் சிக்கலாக்கி விடுகின்றது என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே கதை விட்டுக் கொண்டிருப்பது தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடும்.

இந்த விஷயம் இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோஇ இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன.

அப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

அவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம்இ உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.

www.Nerdo.lk

விடுவிக்கப்பட்ட போராளிகளை மீண்டும் கைது செய்யும் படையினர். பெற்றோர்கள் பதட்டம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75320

... "முதலைக் கண்ணீர்" என்று சொல்வார்களே, அதற்கு சிறந்த உதாரணம் இங்கே உள்ளது!!!

ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்களின் காட்டில் அடைமழைதான்!

இன்று எனது நல்ல நண்பரும்/ முன்னால் புளொட் இயக்க உறுப்பினரும், புலி எதிர்ப்பாளர் சில தினங்களுக்கு முன் யாழ் சென்று வந்தவருடன் சில மணிநேரம் தொலைபேசியில் உரையாடினேன் ... நடந்தவை/நடப்பவை/நடக்க இருப்பவற்றை தூக்கிப்போட்டார்!! அன்பின் பாண்டர் நீங்கள் விரும்பின் அவருடன் சில மணிநேரம் உரையாட என்னால் ஆவன செய்ய முடியும்! ... அதன் பின்னாவது புரிவீர்கள் ... சொந்த அறிவில் செயற்படுபவராக இருந்தால்!!!!!!!!!!!!!????????????????

தயவுசெய்து இனியாவது, ஏவலில் இப்படியான இணைப்புகளை இங்கு இணையாதீர்கள்! கேவலம் இப்படியான முதலைக்கண்ணீர்கள் இனியும் எடுபடவா போகிறது??????????????? :(

பாண்டு சொன்னதில் என்ன தப்பு? போராட்டம் வெடிக்கும் எண்டு கயிறு விட்டுக்கொண்டு திரியிறதை விட்டுவிட்டு மக்கள் (முன்னாள் போராளிகளும் மக்களே) இற்கு உதவி செய்வதையிட்டு சிந்தியுங்கள்.

போராளிகளுக்கு உதவி செய்வது நாலா பக்கமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. படத்தில் வருவதனை விட பல்மடங்கு நடக்கின்றது. செய்யும் பணிகளை விரைவில் தளத்தில் இட கதைத்துக்கொண்டிருக்கின்றேன். கட்டாயம் போடவேண்டும் இல்லையேல் போலி ஆசாமிகள் விலாசம் அடித்துக்கொண்டு இருப்பாங்கள். எனக்கு தெரியும் சிலர் இந்த வேலைத்திட்டங்களிற்கு புலிச்சாயம் போட்டு. கோட்டாவிற்கு போட்டு கொடுத்துப்போடுவாங்கள். ஏனென்றால் தாம் மட்டும்தான் செய்கின்றோம் என்று காட்டுவதற்கு. எப்ப பார்த்தாலும் ஒரே கதைகளை கதைச்சுக்கொண்டு இருப்பது நல்லதல்ல.

எனக்கு தெரிய கூடியதாக 947 குடும்பம்வரை இரண்டு மூன்று பிரிவுகள் மாதாந்தம் சிறையில் உள்ள குடும்பங்களுக்கு காசு வங்கி மூலம் அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது விடுவிக்கபப்ட்ட போராளிகளுக்கும். சுயதொழில் வேலைவாய்ப்பிற்காக உதவிகள் செய்யினம்.

நான் மட்டும் என் நண்பர்களுடன் 12 பேருக்கு ஒழுங்கு படுத்தி செய்து கொடுத்திருக்கின்றேன்.

என்ன நெல்லையன் விட்ட 908 பேரையும் திருமப கைது செய்துவிட்டார்களா?

உங்களை நம்புவதா சிங்களவனை நம்புவதா என தெரியவில்லை.என்ன இப்ப அடிக்கடி புளொட் தோழர்களை சாட்சிக்கு இழுக்கின்றீர்கள்.இப்ப தான் வியூகம் 2 பகுதி கூட்டத்திற்கு போட்டு வந்தேன்.முக்கால் வாசி பழைய புளொட் பேர்வளிகள் தான் அங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேல உள்ள கட்டுரையில் உண்மை உள்ளதா இல்லையா என்பதற்கும். சிங்களவனால் தடுப்பு முகாமில் உள்ளவர்கள் விடுவிக்க படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

யார் எதை எழுதினாலும்...............?

சிங்களபடைகளால் தலைவர் கொலைசெய்யபட்டு எஞ்சியவர்கள் கைது செய்யபட்டு ஆயுதபோராட்டத்திற்கு எந்த சாத்தியமும் அங்கு இல்லை என்பது யாதார்த்தமான உண்மையெனில்?. புலத்தில் புளியங்காய் புடுங்க எழுதும் கட்டுரைகளை வாசித்து. விடுதலையெ பின்போட வேண்டியதற்கான காரணம் என்ன?

அப்ப கட்டுரை எழுதுபவர்களுக்கு ஆயுதபோராட்டத்தை முன்னெடுக்கும் சக்த்தி உண்டு என்று மேலே மாங்காய் புடுங்க கட்டுரை எழுதியவரால் ஏற்றுகொள்ள முடிகின்றதா????

"சிங்களவன் செய்வது தமிழ்இன அழிப்பு" அது இன்றல்ல எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே நடக்கின்றது. தனது இன அழிப்பை எப்படி செய்ய வேண்டும் அதற்கு யாரை விடுதலை செய்ய வேண்டும் யாரை கொலை செய்ய வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். அதை யாரும் ஏதும் எழுதுவதால் மாற்ற முடியாது. காரணம் நாமே எழுதி நாமே வாசிக்கிறோம்.

ஆனால் சிங்கள சிப்பாய்கள் தமிழரின் நிலை கண்டு கண்ணீர் சிந்துகிறார்கள் என்று கூலி வாங்குபவர்கள் எழுதித்தான் ஆகவேண்டும்.

என்ன............ யாழ்களத்தில் எழுதினால் நாமும் வாசித்தாக வேண்டும் என்பது துர்ரதிஸ்டநிலை.

பாண்டு சொன்னதில் என்ன தப்பு?

ம்ம்ம்ம்ம்... முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சையிலை தெரியுமாம்!!! .... அதுக்கு மேலால சோழியன் குடுமி, சும்மா ஆடாதாம்¬!!!

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு உதவி செய்வது நாலா பக்கமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. படத்தில் வருவதனை விட பல்மடங்கு நடக்கின்றது. செய்யும் பணிகளை விரைவில் தளத்தில் இட கதைத்துக்கொண்டிருக்கின்றேன். கட்டாயம் போடவேண்டும் இல்லையேல் போலி ஆசாமிகள் விலாசம் அடித்துக்கொண்டு இருப்பாங்கள். எனக்கு தெரியும் சிலர் இந்த வேலைத்திட்டங்களிற்கு புலிச்சாயம் போட்டு. கோட்டாவிற்கு போட்டு கொடுத்துப்போடுவாங்கள். ஏனென்றால் தாம் மட்டும்தான் செய்கின்றோம் என்று காட்டுவதற்கு. எப்ப பார்த்தாலும் ஒரே கதைகளை கதைச்சுக்கொண்டு இருப்பது நல்லதல்ல.

எனக்கு தெரிய கூடியதாக 947 குடும்பம்வரை இரண்டு மூன்று பிரிவுகள் மாதாந்தம் சிறையில் உள்ள குடும்பங்களுக்கு காசு வங்கி மூலம் அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது விடுவிக்கபப்ட்ட போராளிகளுக்கும். சுயதொழில் வேலைவாய்ப்பிற்காக உதவிகள் செய்யினம்.

நான் மட்டும் என் நண்பர்களுடன் 12 பேருக்கு ஒழுங்கு படுத்தி செய்து கொடுத்திருக்கின்றேன்.

நான் மட்டும் என் நண்பர்களுடன் 12 பேருக்கு ஒழுங்கு படுத்தி செய்து கொடுத்திருக்கின்றேன்.

தலை வணங்குகின்றேன் உமை.

இதைப்போல் ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் செய்யும்போது..

சிங்களசனது திட்டங்களை இலகுவாக வெல்ல முடியும்

நன்றி ஐயா..........

"சிங்களவன் செய்வது தமிழ்இன அழிப்பு" அது இன்றல்ல எமது பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்தே நடக்கின்றது. தனது இன அழிப்பை எப்படி செய்ய வேண்டும் அதற்கு யாரை விடுதலை செய்ய வேண்டும் யாரை கொலை செய்ய வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். அதை யாரும் ஏதும் எழுதுவதால் மாற்ற முடியாது. காரணம் நாமே எழுதி நாமே வாசிக்கிறோம்.

ஆனால் சிங்கள சிப்பாய்கள் தமிழரின் நிலை கண்டு கண்ணீர் சிந்துகிறார்கள் என்று கூலி வாங்குபவர்கள் எழுதித்தான் ஆகவேண்டும்.

என்ன............ யாழ்களத்தில் எழுதினால் நாமும் வாசித்தாக வேண்டும் என்பது துர்ரதிஸ்டநிலை.

இதை புரிந்தவர்கள் தெளிவாகவே உள்ளோம்

புரியாதவர்கள் போய் புரிந்து வந்துள்ளனர்

இனியும்போய் வரட்டும்

நன்றி தங்களது நேரத்திற்கு

குடாநாட்டில் திட்டமிட்ட காட்டிக் கொடுப்புகள் நடக்கிறதா,

சிறீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் மீண்டும் அரச புலனாவுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக குடாநாட்டிலுள்ள சில ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு கேட்ட போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதகாக இருந்தது.

குடாநாட்டிற்கு தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த மக்கள் விடுமுறைக்காக வருவதையும் தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் சிறீலங்கா அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதையும் விரும்பாத புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில சக்திகள் அங்குள்ள சிலருக்கு பணத்தைக் கொடுத்து குடாநாட்டில் இராணுவ நெருக்கடியை இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகரிப்பதற்கான வேலைகளை செய்யும்படியும் தினசரி கைதுகளும் காணமல்போதல்களும் சுற்றிவளைப்புக்குளும் நடக்கின்ற ஒரு சூழ்நிலையை தொடரவைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சக்திகளிடம் பணம் பெறும் நபர்களே ‘விடுதலைப்புலிகள் மீண்டும் ஒருங்கிணைகிறார்கள்,அவர்கள் சிறீலங்கா படையினர் மீது கெரில்லா தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்கள்’ என்பது போன்ற தகவல்களை சிறீலங்கா புலனாய்வுத் துறையினருக்கு வழங்குவதாகவும் விடுதலையாகி வந்த போராளிகள் மீண்டும் ஒருங்கிணைகிறார்கள் என்ற தகவலையும் இவர்களே வழங்குவதாகவும் அண்மையில் லண்டனில் இருந்து வந்த குடும்பத்தினர் கடத்தப்பட்டதன் பின்னணியில் இவர்களே இருந்ததாகவும் குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் குடாநாட்டு ஊடகவிலாளர் ஒருவரை பாரிசை தளம்கொண்டு இயங்கும் ஊடகமொன்றின் நிர்வாகி அண்மையில் தொடர்பு கொண்டு இவ்வாறான செயற்பாட்டை செய்வதற்கு உதவி செய்யுமாறு கோரியதாகவும,; ‘ஊர் நெருக்கடி நிலையில் இருந்தால்தான் புலம்பெயர்ந்த நாடுகளின் மக்களை எழுச்சி கொள்ள வைக்க முடியும் என்றும் தற்போது மக்களிடம் எழுச்சி இல்லாததால் அவர்களது பங்களிப்பை கோரமுடியவில்லை என்றும் ஊடகங்களை கூட நடத்த முடியவில்லை என்றும் கூறியதாகவும் அந்த ஊடகவிலாளர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய உணர்வாளர்கள் எவரும் மக்களை அவலத்துக்குள் தள்ள விரும்பாத சூழ்நிலையில் இந்த சக்திகள் தங்களது தேவைகளுக்காக மாற்றுக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தவதாகவும் புலத்தில் துரோகிப்பட்டம் வழங்குவதன் தொடர்ச்சியாகவே தாயகத்தில் விடுதலையாகி வந்த முன்னாள் போராளிகள் பொய்யான காரணங்களை கூறி காட்டிக் கொடுக்கப்படுகிறார்கள் என்று அந்த ஊடகவியலாளர் உறுதிபடத் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

.

இது தொடர்பாக குடாநாட்டிலுள்ள சில ஊடகவியலாளர்களை குடாநாட்டிற்கு தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த மக்கள் விடுமுறைக்காக வருவதையும் தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் சிறீலங்கா அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதையும் விரும்பாத புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில சக்திகள் அங்குள்ள சிலருக்கு பணத்தைக் கொடுத்து குடாநாட்டில் இராணுவ நெருக்கடியை இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகரிப்பதற்கான வேலைகளை செய்யும்படியும் தினசரி கைதுகளும் காணமல்போதல்களும் சுற்றிவளைப்புக்குளும் நடக்கின்ற ஒரு சூழ்நிலையை தொடரவைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது.சந்தேகம் மட்டும் தான்.

  • தொடங்கியவர்

நடந்தவை நடப்பவை நடக்க இருப்பவைக்கு முன்பாக ஒரு விடயம்! போராளிகளை தடுத்து வைத்திருப்பது சிறீ லங்கா அரசு! இவர்களுக்கு உதவ அரசு ஓரே ஒரு கதவை தற்போது திறந்துள்ளது! இருட்டாக இருந்தாலும் கதவினுள் நழைய வேண்டிய கட்டாயம்! காரணம் இது 7800பேரின் வாழ்வு சம்பந்தமானது. இன்று பலர் பல விதமான விடயங்களை கூறினாலும் அவர்களின் நிலை ஒரு பயணக்கைதியின் நிலை! இங்கே பயணக்கைதியின் உயிரா பணமா முக்கியம்?

அடுத்த விடயம் எமது பத்திரிகைகளின் மிக மோசமான போக்கு! செய்திகள் வரவேண்டும் என்பாற்காகவும் அரசை மட்டந்தட்ட வேணும் என்ற நோக்கிலும் தான் இன்று பலம் பெயர் பத்திரிகைகள் கவனம் செலுத்துகின்றதே ஒளிய. மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றியோ அவர்களின் உளவியல் நிலை பற்றியோ யாரும் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இந்த மக்கள் கொடிய யுத்தத்திலிருந்து தற்போது தான் மிண்டு எழுந்து வருகிறார்கள்! இவர்களின் உளவியல் பாதிப்புகள் ஏராளம். இதற்குள் தற்போது தடுத்து வைக்கப்படடிருக்கும் போரளிகள் பலர் வலிந்து இணைக்கப்பட்டவர்கள். இன்று சிறையில் வாடும் இந்த போராளிகளின் எதிர்காலம் என்ன? அதற்கு உங்களின் பதிலல் என்ன?

அரசு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த போராளிகளை விடுவிக்க தயாராக உள்ளது. அனால் இவர்கள் ஒரு தொழில் பயிற்சி பெற்று ஒரு வேலையுடன் அல்லது முழுநேர உயர்படிப்புடன் வெளியேறுவதை தான் அனுமதிக்கும். விடுவிக்கப்படும் அனைவரும் நிண்ட காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கவேண்டும். இவர்கள் வேலையற்று வெறுமனே ஒன்றும் செய்யாதிருந்தால் இவர்களை மீள தடுத்துவைக்க அரசிற்கு அதிகாரங்கள் உள்ளது. அரசைப்பொறுத்தவரை இவர்கள் விடயத்தில் ஒரு சிறிதளவேனும் ரிஸ்க் எடுக்கவோ இரக்கம் காட்டவோ விருப்பமில்லை.

இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் அரசின் கையிலேயே தங்கியுள்ளது. அனால் அரசு தனது சொந்த நிதியில் இவர்களை முற்று முழுதாக புதிய வாழ்விற்கு தயார் படுத்த தயாரில்லை. போரின் பங்காளிகளாக புலம் பெயர்ந்தவர்களும் இருந்ததால் அவர்களை பங்களிக்குமாறு அரசு கூறுகிறது. நீங்களே அது சரிவராது முதலைக்கண்ணீர் முஞ்சூறு சிறுநீர் என்று போட்டு வாங்ககிறீர்கள். பூனைக்கு விழையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். அரசிற்கும் புலம் பெயர் சமூகத்திறகும் இடையில் சிக்கி தவிப்பது அப்பாவி போராளிகள்! சரி தவறு என்பதற்கு முன் கடமைகளை மறப்பது நல்லதல்ல. கணனிக்கு முன் ஒரு பியர் அடித்துக்கொண்டு கருத்தெழுவது மிகவும் சுலபம்! ஆனால் போராட்டத்தில் இணைக்கப்பட்டு பின் கைவிடப்பட்டு பின் சிறையில் இருந்து கமம் செய்வது எப்படியிருக்கும் என்பதை புரிவதே மிகவும் கடினம்.

சிறையில் ஒரு நாள் கூட இருந்து அனுபவம் இல்லாதவர்கள் - போராளிகளாக மாறவேண்டும் என ஒரு நாள் கூட சிந்திகாதவர்கள் இன்று தமிழ் ஊடகங்களை நடாத்தியபடி வெளியிடும் செய்திகளை நிங்கள் நன்கே வாசியுங்கள்! அவர்களின் எழுத்து எவ்வளவு ஏமாற்று என்பதை நீங்கள் ஒரு காலத்தில் அறிவீர்கள்!

  • தொடங்கியவர்

யாழ். கொக்குவில் கிழக்குப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தை தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குழந்தை தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தையொன்று துணியில் சுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிசாரினால் நேற்று மீட்க்கப்பட்டது. கோப்பாய் அம்மன் கோவில் வீதியும் சம்பியன் விதியும் சந்திக்கும் முகப்பில் இந்தப் குழந்தை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உதுக்கும் செய்தித்தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்

  • தொடங்கியவர்

உதுக்கும் செய்தித்தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்

குழந்தையை பெற்றோர்கள் கைவிட்டனர்! போராளிகளை புலம்பெயர் மக்கள் கைவிட்டுள்ளனர். இது தான் இன்றைய யதார்த்தம்!

குழந்தையை பெற்றோர்கள் கைவிட்டனர்! போராளிகளை புலம்பெயர் மக்கள் கைவிட்டுள்ளனர். இது தான் இன்றைய யதார்த்தம்!

உங்கட கையிலை காசை தந்து செய்யுங்கோ எண்டு விட இல்லை எண்டதும் யாரும் செய்ய இல்லை எண்டு அர்த்தம் இல்லை...!

14000 போராளிகள் கைது செய்யப்பட்டு இருந்த இடத்திலை நீங்கள் மேலை 7800 போராளிகள் தான் எண்டு ஒரு அறிக்கையை விட்டு இருக்கிறீயள்... மிச்சம் சொச்சம் 6000 பேருக்கும் என்ன நடந்தது எண்டு ஒருக்கா சொல்லுவியளோ...??

ஆகக்குறைந்தது நடேசன் அண்ணைக்கும் அவரோடு வந்த போராளிகளுக்கும் என்ன நடந்தது எண்டாவது சொல்லுவியளோ....??

யோகி அண்ணை, பாலகுமார் அண்ணை, கரிகாலன் அண்ணை, தங்கன் அண்ணை( சுதா) எண்ட நீண்ட பட்டியல் இருக்கு... அவர்கள் எல்லாரையும் காண இல்லை...! ஆனால் இலங்கை அரசுக்கு பாடும் KP மட்டும் எப்படி உயிரோடை...?? இரகசியமாக இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கைக்கு இரகசியமாக போடத்தெரிய வில்லையோ...??

ஒரு காலத்துக்கு முன்னம் கூட்டணி, பிறகு சுரேஸ், செல்வம், சித்தார்த்தன், பிறகு டக்கிளஸ், அதுக்கும் பிறகு கருணா... நல்லா வாய் கிளிய சகோதரத்துவம் பேசினவையாலை எந்த நன்மையும் தமிழருக்கு இல்லை... ! சிங்களவனின் படுகொலையை நியாயப்படுத்த மட்டுமே பயன் பட்டனர்.... எல்லாரையும் கருவேப்பிலை ஆக்கின சிங்களவன் இப்ப வச்சிருக்கிறது KP...

இவை எல்லாமே எங்களை கடந்து போகும்...

புலிகளும் பிரபாகரனும் மக்களிடம் இருந்து சோத்துபாசல் வாங்கி தங்களை வளர்த்துக்கொள்ள இல்லை.... பண்ணைகள் வைத்து கடுமையாக சுயமாக முயண்றுதான் தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்... மக்களிடம் நம்பிகையையும் பெற்றுக்கொண்டனர்... அதன் பின்னரே மக்களிடம் உதவி கேட்டு போய் நிண்றனர்... அதையே KP க்கும் உங்களுக்கும் பரிந்துரைக்கின்றேன்...

Edited by தயா

மக்களின் துயரம் பற்றியும் போராளிகளின் அவலம் பற்றியும் நிறையக் கதைக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவு வதற்கான செயற்திட்டம் என்பது.எழுத்திலும் பேச்சிலும் இருக்கும் அளவுக்கு இல்லை என்பது தான் யதார்த்தம்.

புரட்சியும் விடுதலையும் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு மேடை போட்டு நடத்தப்படும் அரசியல் கூட்டம் அல்ல

பொங்கு தமிழ் இணையத்தில் வந்த இந்தக் கட்டுரை யதார்த்தத்தை பேசுகிறது…..

அதற்காக இந்தக் கட்டுரையை எழுதியவரும் அதை வெளிட்ட ஊடகத்தினரும் கூட துரோகள் என்று தூற்றப்படக் கூடும்…

இவ்வாறான ஒரு பொறுக்கினத்தனம் 32அயிரத்துக்கும் அதிகமான மாவீரர்கள் செய்த அளப்பரிய தியாகத்தின் அறுவடை?

000000

அமோக விற்பனையில் 'துயரேந்திகளின் கதைகள்'

விதுல் சிவராஜா

வன்னிச் சனங்களின் நிலைமையைப் பற்றி பலரும் எழுதுகிறார்கள். கதைக்கிறார்கள். படம் பிடித்துப் போடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் தொடங்கி பட்டி தொட்டி என்று சொல்வார்களே, அப்பிடி எல்லா இடமும் பேசுகிறார்கள்.

ஒரு நண்பர் சொன்னதைப் போல லட்சக்கணக்கான அவலப் படங்கள் வன்னி மக்களைப் பற்றி வெளியாகியிருக்கின்றன. எந்தத் தமிழ்ப் பத்திரிகையைப் பார்த்தாலும் அதில் தமிழ்ப் பிணங்களைப் பார்க்கலாம். அல்லது தமிழ் அகதிகளைப் பார்க்கலாம்.

குருதி ஒழுக ஒழுகப் பிடிக்கப்பட்ட படங்கள். கண்ணீர் வடிய வடியப் பிடிக்கப்பட்ட காட்சிகள். பொதுவாகவே ஈழத்தமிழர் அவலம் என்பது மிகப் பிரபலமாகிய ஒரு விசயம். ஆனால் பொதுவாக இப்படிச் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கான காட்சிகளைக் காண்பிப்பதில்லை என்பது உலக ஊடக நடைமுறை. அப்படியிருந்தும் எமது தமிழ் ஊடகங்கள் நெஞ்சைப் பிழியும் விதமாக கண்ணீரையும் குருதியையும் காட்டுகின்றன. காட்டி...

ஆகவே, தமிழ் மக்களைப் பற்றி, அவர்களுடைய நிலைமையைப் பற்றி யாருக்கும் தெரியாதென்றில்லை. அதிலும் வன்னி மக்களின் துயரங்களைப் பற்றி அறியாதார் யாருமில்லை எனலாம்.

அந்த அளவுக்குத் தரப்பாள் கூடாரங்களின் கதையை, முகாம் வாழ்க்கையின் அவலத்தை, உறவுகளை இழந்தோரின் துயரத்தை, பிள்ளைகளையும் புருசன்களையும் காணாமலே இதுவரையிலும் இருக்கின்ற சோகத்தை, வீடில்லாமல், தொழில் இல்லாமல், வருவாயில்லாமல் அவதிப் படுவோரின் நிலையை எல்லாம் தாராளமாகவே இவை எழுதியும் பேசியும் காட்டியும் விட்டன.

ஆனால், இதெல்லாம் எதற்காக? இப்படி இந்த அவலங்களையும் துயரங்களையும் பகிரங்கப் படுத்தித்தான் இந்த மக்களுக்கு என்ன லாபம் கிடைத்திருக்கிறது?

இதுவரையில் தாய் தந்தை இல்லாத எத்தனை பிள்ளைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்? அல்லது இவர்களில் எத்தனை பேர் ஒரு ஒழுங்கான உதவித்திட்டங்களுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்?

கணவனை இழந்த எத்தனை பெண்களுக்கு முறையான உதவிகள் கிடைத்திருக்கின்றன? அதாவது கிடைத்த உதவியை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை, தங்கள் குடும்பத்தை ஓரளவுக்கேனும் வாழவைக்கக் கூடிய உதவிகள்?

எத்தனை பிள்ளைகளுக்கு கல்வியைத் தொடரக்கூடிய சீரான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?

போரினால் கால், கை, கண்பார்வை இல்லாத எத்தனை பேருக்கு நிரந்தர உதவித்திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்படுகின்றன?

வீடோ பிற ஆதரவோ உதவியோ இல்லாத பல முதியவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேருக்கு யார் மூலம் உதவிகள் கிடைத்திருக்கின்றன?

இப்படி ஒழுங்கமைக்கப்பட்ட உதவிகளைச் செய்வோர், செய்யும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் ஏதேனும் இதுவரையில் உண்டா? அப்படியென்னறால் தயவு செய்து அவற்றின் விவரங்களை அறியத்தாருங்கள்.

பரிதவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான 'துயரேந்தி'களுக்கு உதவுவதற்காக அந்த விவரத்தைக் கொடுத்து, அவர்களைத் தொடர்புபடுத்தி விடலாம்.

நடந்தது பெரும்போர். அதிலும் இறுதிப் போர். தமிழர்களைப் பொறுத்தவரையில் அது முடிந்தது தோல்வியில். தோல்வியைச் சந்திக்கும் எந்தத் தரப்பும் முடிவற்ற அவலங்களுக்குள் தள்ளப்படும். வென்ற தரப்பு தோற்ற தரப்பிடமிருந்து எல்லாற்றையும் பிடுங்கி எடுத்து விடும். எல்லாவற்றையும் உரித்துக் கொண்டு போய்விடும். மிஞ்சியவற்றை எரித்தழித்து விடும். இது பொதுவாகவே போர் நடக்கும் சூழலில் நிலவுகின்ற ஒரு இயல்பு. ஒரு நடைமுறை.

ஆகவே வன்னிச் சனங்களும் இப்படி உரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்தழிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகள், ஊர்கள் எல்லாவற்றையும் இன்றும் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் இப்படியான சனங்களின் நிலைமையைப் பற்றிக் கவலைப்படுகிற ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் மிகக் குறைவு. அவர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களால் முடிந்த உதவிகளைச் சிறிய அளவில் செய்து கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த உதவிகள் தனிப்பட்ட அளவிலேயே அமைகின்றன.

அதேவேளை இந்தச் சனங்களை வைத்து, இந்தச் சனங்களின் துயரங்களையும் அவலங்களையும் வைத்து, இதுகளின்ரை கண்ணீரை வைத்து, இந்தப் பாவப்பட்ட சனங்களின் சீரழிஞ்ச நிலைமையை வைத்துப் பிழைப்பு நடத்துகிற போக்கும் ஆட்களும்தான் இப்ப அதிகம்.

'தம்பி, எங்களுக்குக் கொடுக்கிறது பிச்சை. எடுக்கிறது போட்டோ. அப்பிடிப் போட்டோக்களை எடுத்துப் போட்டு எங்களை விற்று அவையள் நல்லாச் சம்பாதிக்கினம்' என்று ஒரு முதியவர் சொல்லிக் கவலைப்பட்டார். ஆனால், தங்களை இவர்கள் வைத்து இப்படி முறைகேடாக வியாபாரம் செய்கிறார்கள் என்று இந்தச் சனங்களுக்குத் தெரிந்தாலும் இவர்களால் அதை எதிர்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு இவர்களின் இயலாத நிலையிருக்கிறது. மறுக்க முடியாமல் சிறு உதவிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை. அதனால் அவரவர் தமக்கு ஏற்ற மாதிரிச் சவாரி விடுகிறார்கள்.

இப்படி அந்த முதியவர் சொன்ன பிறகு இந்த மாதிரி அரசியல் உள் நோக்கங்களுடன் போட்டோ எடுத்து பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் போடும் காட்சிகளைப் பார்க்கும் போது, அந்தக் காட்சிகளில் எனக்குத் தெரிவதெல்லாம் அந்த முதியவரின் வெறுப்புமிழும் கண்களும் வாடிய முகமுமே.

இவ்வளவு அவலங்களையும் துயரங்களையும் பார்த்த பிறகும் உலகம் முழுவதும் உள்ள எட்டுக் கோடி தமிழ்ப் பெருங்குடிகளும் இந்த அவலங்களைப் போக்குவதைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதேன்?

இந்த அவலங்களைப் போக்குவதற்கு இந்த எட்டுக்கோடி பேரும் ஒரு வழியைக் காணமுடியாமல் இருப்பது ஏன்?

அல்லது இவர்களால் முடியாமல் இருப்பது ஏன்?

எல்லோரும் இலங்கை அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள். ஆண்டுக்கணக்காகத் திட்டுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகத் திட்டுகிறார்கள். அவ்வப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்களின் கொடும்பாவியைக் கூட இழுத்துத் தீயிட்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரித் திட்டுகளையும் எதிர்ப்புகளையும் கண்டு புளித்துப் போனவர்களாக இலங்கையின் ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள். அவர்களுக்கு எட்டுக்கோடி தமிழர்களின் கதைகளும் திட்டுக்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் விளையாட்டாகவோ வேடிக்கையாகவே போய்விட்டது.

இதற்கு நாம்தான் பெருமளவுக்குக் காரணமாகியிருக்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தைத் தோற்கடிக்கக் கூடியமாதிரியோ, பரிதவிக்கும் மக்களுக்கு உதவக்கூடிய மாதிரியோ எந்த வேலைத்திட்டமும் எங்களிடம் இல்லை. சக்தி மிக்க எந்தப் பொறிமுறையும் இல்லாமல் காரியமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வேண்டுமானால் இலங்கை அரசை அல்லது இந்திய அரசை, சிலவேளைகளில் கருணாநிதியை திட்டுவதுடன் எல்லாப் பணியும் நிறைவடைந்து விடுவதாகவே தமிழ்ப் பெருமனதாளர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் உண்மையும் துக்கந்தரும் வேடிக்கையும் என்னவென்றால், தமிழர்களின் அவலக்குரல்களையும் வேதனையையும் யாருமே பொருட்படுத்தாத நிலை உருவாகியிருக்கிறது. ஏன், தமிழர்களே அதைப் பொருட்படுத்தாதபோது மற்றவர்கள் எப்படி இதையெல்லாம் பொருட்படுத்துவார்கள்?

ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் பலர் நீண்டகாலமாகவே குரல் கொடுக்கிறார்கள். இது முன்னர் உணர்வு பூர்வமானதாக இருந்தது. இப்போது வெறும் சம்பிரதாயமானதாக மாறிவிட்டது. இது இப்போது – புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் ஏற்பட்ட நிலைமை அல்ல. அதற்கு முன்னரே, தமிழகத்திலுள்ள இந்த நிலைமையை புலிகளே உணர்ந்திருந்தனர்.

செயலற்ற வெறும் வாய்ப்பேச்சு இடதுசாரிகளைப் போல இவர்களும் காலம் முழுதும் இப்படியே கூச்சலிட்டுக் கொண்டும் ஏதோ சொல்லிக் கொண்டும் இருப்பார்கள்.

அங்கே இருந்து கொண்டு, இலங்கை அரசாங்கத்தைத் திட்டுவதை விட்டு விட்டு தமிழ் நாட்டு அரசாங்கத்தையோ, இந்திய அரசாங்கத்தையோ ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான நல்ல நடவடிக்கைகளுக்காக இவர்கள் உதவலாம். அல்லது அதற்காகப் போராடலாம்.

தமிழக மக்களிடமிருந்தும் அங்குள் பெரிய நிறுவனங்களிடமிருந்தும் உதவிகளைப் பெறலாம். ஆனால், இதை மனிதாபிமானப் பணியாகவே இவர்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் அரசியல் ரீதியான தடைகளோ போட்டிகளோ நெருக்கடிகளோ உருவாகாது.

ஆனால், இதற்கு அங்குள்ள எந்தச் சக்தியும் தயாரில்லை. பதிலாக இந்தச் சக்திகள், அறிக்கைப் போர், தடலாடி அறிவிப்புகள் என்று காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, உருப்படியாக எந்த நடவடிக்கையையும் இவை எடுத்ததில்லை. இதைப்பற்றி, யதார்த்த நிலைமையைப் பற்றி, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி இந்தச் சக்திகளுடன் கதைத்தால், அதை ஏற்கும் நிலையிலும் இவை இல்லை.

'ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சிங்கள அரசே! உனக்குத் தகுந்த பாடம் படிப்பிப்போம்' என்று முழங்கும் தமிழகச் சூழலில் நூறு கோடி ரூபாய், நூற்றியம்பது கோடி ரூபாய் 'பட்ஜெட்'டில் மாபெரும் படங்களை எடுக்கிறார்கள். இப்படிக் கோடி ரூபாய் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் என்ன விஞ்ஞானப்படங்களா? அல்லது புதிய சேதிகளைச் சொல்லும், வாழ்க்கையைச் சொல்லும் படங்களா? ஆகக்குறைந்தது ஈழத்தமிழரின் உண்மைப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படங்களா?

சரி, அவர்களை விட்டுவிடுவோம், எங்கள் ஈழத்தமிழர்கள் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? புலம்பெயர் நாடுகளில் அணிகள், குழுக்கள், தனிநபர்கள் என்று ஆளாளுக்கு துண்டு பட்டுக்கிடக்கிறார்கள். அவரவருக்கு என்று நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நியாயப்படுத்துவதிலும் மற்றவர்களைக் குறைசொல்வது, மற்றவர்களில் குற்றம் காண்பதுளூ மற்றவர்களைக் குற்றஞ்சாட்டுவது, துரோகி – தியாகிப் பட்டங்களைச் சூட்டுவது எனறு காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். சக்தியை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வன்னியில் சனங்கள் இன்னும் தீராத பெருஞ்சோகங்களோடுதான் வாழ்கிறார்கள்.

இதேவேளை இங்கே ஒரு முக்கியமான விசயத்தையும்; சொல்ல வேணும்.

எட்டுக் கோடி தமிழர்களின் உதவியையும் விட, இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் கருணாநிதியின் தமிழ்நாட்டு அரசினதும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடருமானால் அடுத்த மூன்றாண்டுகளில் வன்னி மக்கள் ஓரளவுக்கான சுயபொருளாதாரக் கட்டமைப்புக்கு வந்து விடுவார்கள்.

ஆனால், இப்போது அவர்களுக்கு பல தேவைகளும் ஆறுதலும் ஆதரவும் இன்று அவசரமாக வேண்டும். அந்தரிக்கும்போது செய்யப்படும் உதவிகள்தான் பெறுமதியானவை. அப்போது செய்யப்படுவதுதான் உதவியுமாகும். அதைத்தான் மக்கள் என்றும் நினைவில் வைத்தும் இருப்பர்.

வன்னித்துயரத்தைத் தீர்ப்பதற்கு இனியும் காலந்தாழ்த்த முடியாது. அடுத்து வருகின்ற மாரிகாலத்தில் இந்த மக்கள் பெருங்கஸ்ரங்களைச் சந்திக்கப் போகிறார்கள். நிச்சயமாக அதுவொரு பெரும் அவலமாகவே இருக்கப்போகிறது. அரசின் உதவி என்பது குறைவானது. தாமதமானது. அது அடுத்து வரும் மாரிகாலத்தைச் சமாளிக்க முடியாது.

ஆகவே இதைப் புரிந்து கொண்டும் இன்னும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் என்ன நன்மை கிட்டிவிடப் போகிறது?

அரசாங்கத்தைத் திட்டும் எந்தப் பெரிய திட்டினாலும் எந்த மாபெருங் குற்றச்சாட்டினாலும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. பதிலாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அசமந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அமையும் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைளை வலுவாக நடத்தினாலே ஏதாவது விளைவுகள் ஏற்படும்.

ஆனால், பல ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அடுத்த மாரிகாலத்துக்காகவே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது இந்த மக்கள் கண்ணீருக்குள்ளும் தண்ணீருக்குள்ளும் சிக்குண்டிருப்பார்கள். அதை வைத்தே அரசியல் நடத்தலாம். அதை வைத்தே ஆதாயங்களைத் தேடிக்கொள்ளலாம் அல்லவா!

வேண்டுமானால், இருந்து பாருங்கள் இந்தக் கூற்று சரியா பிழையா என்பதை அறிய இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருந்தால் புரிந்து கொள்ளலாம்.

வன்னித்துயரம் மக்களுக்கு நீடித்த கண்ணீரையும் வியாபாரிகளுக்கு அதிக லாபங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மனச்சாட்சியோ மனிதாபிமானப் பண்புகளோ இல்லாத ஒரு சமூகமாக தமிழ்;ச் சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் வன்னித்துயரத்தையும் விடப் பெரிய – ஆபத்தான துயரம் இதுவே.

நன்றி பொங்கு தமிழ்

  • தொடங்கியவர்

உங்கட கையிலை காசை தந்து செய்யுங்கோ எண்டு விட இல்லை எண்டதும் யாரும் செய்ய இல்லை எண்டு அர்த்தம் இல்லை...!

14000 போராளிகள் கைது செய்யப்பட்டு இருந்த இடத்திலை நீங்கள் மேலை 7800 போராளிகள் தான் எண்டு ஒரு அறிக்கையை விட்டு இருக்கிறீயள்... மிச்சம் சொச்சம் 6000 பேருக்கும் என்ன நடந்தது எண்டு ஒருக்கா சொல்லுவியளோ...??

ஆகக்குறைந்தது நடேசன் அண்ணைக்கும் அவரோடு வந்த போராளிகளுக்கும் என்ன நடந்தது எண்டாவது சொல்லுவியளோ....??

யோகி அண்ணை, பாலகுமார் அண்ணை, கரிகாலன் அண்ணை, தங்கன் அண்ணை( சுதா) எண்ட நீண்ட பட்டியல் இருக்கு... அவர்கள் எல்லாரையும் காண இல்லை...! ஆனால் இலங்கை அரசுக்கு பாடும் KP மட்டும் எப்படி உயிரோடை...?? இரகசியமாக இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கைக்கு இரகசியமாக போடத்தெரிய வில்லையோ...??

ஒரு காலத்துக்கு முன்னம் கூட்டணி, பிறகு சுரேஸ், செல்வம், சித்தார்த்தன், பிறகு டக்கிளஸ், அதுக்கும் பிறகு கருணா... நல்லா வாய் கிளிய சகோதரத்துவம் பேசினவையாலை எந்த நன்மையும் தமிழருக்கு இல்லை... ! சிங்களவனின் படுகொலையை நியாயப்படுத்த மட்டுமே பயன் பட்டனர்.... எல்லாரையும் கருவேப்பிலை ஆக்கின சிங்களவன் இப்ப வச்சிருக்கிறது KP...

இவை எல்லாமே எங்களை கடந்து போகும்...

புலிகளும் பிரபாகரனும் மக்களிடம் இருந்து சோத்துபாசல் வாங்கி தங்களை வளர்த்துக்கொள்ள இல்லை.... பண்ணைகள் வைத்து கடுமையாக சுயமாக முயண்றுதான் தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்... மக்களிடம் நம்பிகையையும் பெற்றுக்கொண்டனர்... அதன் பின்னரே மக்களிடம் உதவி கேட்டு போய் நிண்றனர்... அதையே KP க்கும் உங்களுக்கும் பரிந்துரைக்கின்றேன்...

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு கணணி தொழில்நுடபப் பயிர்ச்சி

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு 3டீ,ஒரோகெட் பயிர்ச்சிகளை வளங்கி அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் மேன்படுத்த புனர்வாழ்வு நாயகம் இப்பயிர்ச்சி வகுப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் எல்ரிரிஈ பெண்களுக்கு இப்பயிர்ச்சியை வளங்கு முதல்கட்டமாகும்.இப்பயிர்ச்சி வகுப்புகள் இலங்கை வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டுவருவதாக புனர்வாழ்வு ஆனையாளர் நாயக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இப்பயிர்சி நெறியில் 60 பேர் கலந்து கொன்டுள்ளனர், எதிர்காலத்தில் இவர்குக்கு உயர் தொழில்வாய்பைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகும் என புனர்வாழ்வு நாயகம் தெவித்தார்.

இப்பயிர்ச்சியை ஆரம்பிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி பம்பைமடு நிலையத்தில் நடந்தது.இந்த நிகழ்வில்

புனர்வாழ்வு நாயகம் பிகேடியர் சுதந்த ரனசிங்க,வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் பொதுச் செயலாளர் துசித தென்னகோன்,அதன் தலைவர் விக்ரமநாயக மற்றும் வவுனியா புனர்வாழ்வு நிலைய இணைப்பதிகாரி கேனல் குனசிங்க ஆகியோரும் கலந்து கொன்டனர்.

பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் புனர்வாழ்வு நாயக ஆனையாளர், முன்னாள் எல்ரிரிஈயினருக்கு திறமையையும் அறிவையும் விருத்தி செய்யும் பல பயிர்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் நாட்டின் அபிவிருத்தியிலும் பங்கு கொள்ளும் வகையிலும் தயார் படுத்தியும் வருகின்றனர்.

Edited by Bond007

"பண்ணை போட்டு சுயமாக தங்களை வளர்த்துக்கொண்டார்கள்"

பண்ணையில்தான் இப்ப அரசாங்கம் தோண்டிஎடுக்கும் தங்கத்தையும் செய்தார்களோ?.ஊருக்கு இப்ப ஒருக்கா போனா சனம் நடந்தது எல்லாம் இப்ப வடிவாகச்சொல்லும்.புலம்பெயர்ந்தவர்கள்தான் இன்னும் அந்த மாயையில் இருந்துவிடுபடவில்லை.ஆரமப கால அத்தனை கொள்ளையிலும் தலைவரின் பங்கு இருந்தது.

பண்ணை போட அடிச்சாரோ தெரியாது.

ஏன் கனடாவிற்கு வந்தவர்களை இவ்வளவு தீவிரமாக புலிகளும் இருக்கின்றார்களோ என விசாரிக்கின்றார்கள்.அதே நிலைதான் நாட்டிலும்.அப்படியான ஒரு நிலையை அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திகொண்டுவிட்டார்கள்.

இன்று கேபி என்ற மாமா, முன்னால் டக்லஸ் மாமா, சித்தார்த்தன் மாமா போன்றவர்களை கொஞ்சம் தள்ளி விட்டுட்டு, புலி முலாம் பூசி "மகிந்த சிந்தனையாளர்களினால்" எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். முன்பு டக்லஸ் மாமா, சித்தார்த்தன் மாமாக்கள் 80000 இருந்து 30 லட்சம் வரை வாங்கி, அதில் ஒருபகுதியை தமக்கு ஒதுக்கி விட்டு ராஜபக்ஸ குடும்பத்துக்கு கொடுத்து முன்னால் போராளிகளை விடுவித்தவர்கள். ராஜபக்ஸ பார்த்தார் உது சரிவராது முழுவதும் எனக்கு வேணும் எண்டு புது கேபியை மாமாவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ராஜபக்சக்கலுக்கும் புது மாமாவான கேபி சொல்லியிருப்பார்/அவர்களும் யோசித்திருப்பார்கள், ... உந்த முட்கம்பிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களும், போராளிகளும் ... பொன் முட்டையிடும் வாத்துக்கள், உவையளை வெளியிளை விடாமல் உந்த புணர்வாழ்வு என்று ஒரு நாடகம் போடுவோம், கேபி மாமாவின் அடியாட்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள், அவர்கள் உதை செவ்வனே செய்வார்களென்று!! ... ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் ... உந்த கேபி மாமாவின் அடியாட்களில் சிலர், ஒரு புறம் ஈபிடிபியினர் போலவும், மறுபுறம் கேபியின் தொண்டர்கள் போலவும் செயற்படுகிறார்கள். இல்லையா பாண்டண்ணா???? ... பாண்டண்ணா உட்பட ...

உந்த போராளிகளின் மறுவாழ்வு/புனர்வாழ்வு மட்டுமல்லாமல், இம்மாமாவின் அடியாட்கள், இங்கு புலத்திலிருந்து, கறுத்தப்பனங்கள் வைக்க இடமில்லாமல் திரிபவர்களை பிடித்து, அங்கு முதலிடுவது என்று கூட்டிச் சென்று, பசிலாருக்கு 30, 40 வீத வருமானத்தை நீங்கள் எடுத்துக்கங்கோ என்று கொண்டு போய் டீலும் போட்டு, சிந்தனையாளர்களின் வருவானத்தை கூட்டுகிறார்களாம்.

நம்பிக்கையே வாழ்க்கையானவர்களே!!!!!!

முதலில் அங்கு எத்தனை போராளிகள் சரனடைந்தார்கள்? இப்போ எவ்வளவை மிச்சமாக வச்சிருக்கினம்? சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றிடம், அங்கு சரனடைந்தவர்களின் விபரங்கள் இருக்கின்றனவா? இல்லை அவர்களையேனும் கண்காணிக்க அனுமதித்துள்ளார்களா? ... இதுகளை கேட்டுச் சொல்லுங்கோ?????

அங்கு இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கோ, தாருங்கோ என்ற குரல்களுக்கு மேல் அங்கு இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா? என்பதை தெரியாமல் என்னவென்று நாம் தருவோம் என எண்ணுகிறீர்கள்???

இங்கிருந்து நம்பிக்கையே வாழ்க்கையானவர்கள் பல சவுண்டுகள் விடுகிறார்கள், ஆனால் அங்கு போனதும் சுருண்டு விடுகிறார்களாம்!!!! உண்மையில்லையா?????? இப்படித்தான் இங்கு லண்டனிலிருந்து ஒன்பதுகள் போனதுகள், அவர்கள் போனவுடன் அவர்கலை அனுப்பிய டாக்குத்தர் சொன்னாராம், நாங்கள் சிங்களவனுடன் கதைத்து 13வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த தான் போயுள்ளோம் என்று!!!!!! ஆனால் ஒன்பதுகள் கொழும்பில் இறங்கியவுடன் சொல்லப்பட்டதாம் ... வாங்கோ, போங்கோ, பணத்தை கொண்டுவாங்கோ/முதலிடுங்கோ, அதுவும் நாம் சொல்வதின்படியேதான் ... ஆனால் நாம் செய்வதைப் பற்றி கதையாதையுங்கோ!!! அரசியல் தீர்வு பற்றியெல்லாம் கதைப்பதாயின் இங்கிருந்து கிளம்பி விடுங்கோ!!! ....

ஆமா, எமக்கா போராட புறப்பட்ட போராளிகளின் நலன்களில் நாம் அக்கறை கொள்ளத்தான் வேண்டும், அதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை!!! ஆனால் அதையே ஆயுதமாக்கி எமது 60 வருடங்களுக்கு மேலாக நடந்த அடக்குறைகளுக்கு, அழித்தொழிப்புகளுக்கும் தீர்வில்லாமல்/விடயில்லாமல், எல்லாவற்றையும் இந்த போராளிகளின் மறுவாழ்வு என்பதற்காக விட்டொழிய வேண்டும் என சிங்களமும்/நம்பிக்கையே வாழ்க்கைகளும்/ஒட்டு ஓணான்களும் எதிர்பார்க்கின்றன.!!!!!!!!!!! ... இதை எம்மக்களின் எதிர்காலத்துக்காக தம்மை அர்ப்பணித்து புறப்பட்ட இப்போராளிகள் உண்மையில் ஏற்றுக்கொள்வார்களா/உடன்படுவார்களா??????????

முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு கணணி தொழில்நுடபப் பயிர்ச்சி

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு 3டீ,ஒரோகெட் பயிர்ச்சிகளை வளங்கி அவர்களின் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் மேன்படுத்த புனர்வாழ்வு நாயகம் இப்பயிர்ச்சி வகுப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் எல்ரிரிஈ பெண்களுக்கு இப்பயிர்ச்சியை வளங்கு முதல்கட்டமாகும்.இப்பயிர்ச்சி வகுப்புகள் இலங்கை வர்தக மற்றும் கைத்தொழில் பெடரேசனின் ஒத்துளைப்புடன் வழங்கப்பட்டுவருவதாக புனர்வாழ்வு ஆனையாளர் நாயக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இப்பயிர்சி நெறியில் 60 பேர் கலந்து கொன்டுள்ளனர், எதிர்காலத்தில் இவர்குக்கு உயர் தொழில்வாய்பைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகும் என புனர்வாழ்வு நாயகம் தெவித்தார்.

இப்பயிர்ச்சியை ஆரம்பிக்கும் நிகழ்வு கடந்த 5ஆம் திகதி பம்பைமடு நிலையத்தில் நடந்தது.இந்த நிகழ்வில்

பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் புனர்வாழ்வு நாயக ஆனையாளர், முன்னாள் எல்ரிரிஈயினருக்கு திறமையையும் அறிவையும் விருத்தி செய்யும் பல பயிர்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.

பெடியளுக்கு பயிற்ச்சி குடுக்கினமே எந்த அடிப்படையில்... வெளியிலை போய் தச்சு வேலையும், கட்டிட தொழிலும் செய்ய வேண்டும் எண்று அவர்கள் விரும்பியதின் பெயரிலா...?? அதோடு கணனி படிப்பது கூட அவர்களின் பொது அறிவை வளர்க்க போதுமானதாக மட்டுமே இருக்குமே அண்றி அவர்களை சொந்தக்காலில் நிக்க வைக்க வேணும் எண்டால் வெளியிலை விட வேண்டும்... வெளியிலை விட உங்களால் முடியுமா...??

வலுக்கட்டாயமாக புலிகளால் பிடிக்கப்பட்டவர்கள் எண்டு சொல்லப்பட்ட Zone 4 இலை இருக்கும் போராளிகளுக்கு கணனி வித்தை காட்டுறை தோடை Zone 2, 3 லை இருப்பவர்களை விட்டு காடு அழித்து முகாம் அடிப்பதையும் வெளியுலக்குக்கு தொரியாமல் எவ்வளவுகாலம் வைத்து இருக்க போகினமாம் எண்டு சொல்லுங்கோவன்...??

அது மட்டும் இல்லாமல் நீண்ட ஒரு பட்டியலோடை கேள்வி முன்னம் கேட்டு இருக்கன் அதுக்கும் பதில் வேண்டும்...

"பண்ணை போட்டு சுயமாக தங்களை வளர்த்துக்கொண்டார்கள்"

பண்ணையில்தான் இப்ப அரசாங்கம் தோண்டிஎடுக்கும் தங்கத்தையும் செய்தார்களோ?.ஊருக்கு இப்ப ஒருக்கா போனா சனம் நடந்தது எல்லாம் இப்ப வடிவாகச்சொல்லும்.புலம்பெயர்ந்தவர்கள்தான் இன்னும் அந்த மாயையில் இருந்துவிடுபடவில்லை.ஆரமப கால அத்தனை கொள்ளையிலும் தலைவரின் பங்கு இருந்தது.

பண்ணை போட அடிச்சாரோ தெரியாது.

ஏன் கனடாவிற்கு வந்தவர்களை இவ்வளவு தீவிரமாக புலிகளும் இருக்கின்றார்களோ என விசாரிக்கின்றார்கள்.அதே நிலைதான் நாட்டிலும்.அப்படியான ஒரு நிலையை அவர்கள் தாங்களாகவே ஏற்படுத்திகொண்டுவிட்டார்கள்.

தோண்டி எடுக்கப்பட்ட தங்கங்கள் எப்படி வந்தது எண்டு தமிழீழ வைப்பகத்தின் பணிப்பாளர் சொன்னதாக செய்தி முன்னமே வந்திட்டு போட்டுது...! தமிழீழ வைப்பகத்தில் மக்கள் அடகு வைத்த நகைகள் அதுக்கான பற்றுக்களோடு புதைக்கப்பட்டு இருந்தன...

பழைய செய்திகளையும் எடுக்கிறதோடை தோண்டி எடுத்து படியுங்கோ.. அப்படியாவது பொது அறிவு வளரட்டும்...

நீங்கள் தானே சொல்லி திரிஞ்ச ஆள் புலம் பெயந்த மக்களிட்டை சேத்ததுகளை உங்களுக்கு தெரிஞ்சவை ஆட்டையை போட்டு விட்டினம்... ஹமர் எல்லாம் ஓட்டுறாங்கள் எண்டு... அப்ப தங்கம் எப்பிடி போனது...??

அதுசரி சோத்துப்பாசல் எண்ட உடனை ஏன் உங்களுக்கு பத்துது...???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தால் சொல்ல மாட்டாரா...

பதில் வருமட்டும் காத்திருக்கிறார்

நீங்கள் வேறு அவர் ஏதோ வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது மாதிரி :(

குடாநாட்டில் திட்டமிட்ட காட்டிக் கொடுப்புகள் நடக்கிறதா,

சிறீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் மீண்டும் அரச புலனாவுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக குடாநாட்டிலுள்ள சில ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு கேட்ட போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதகாக இருந்தது.

குடாநாட்டிற்கு தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த மக்கள் விடுமுறைக்காக வருவதையும் தடுப்புக்காவலில் உள்ள போராளிகள் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் சிறீலங்கா அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதையும் விரும்பாத புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில சக்திகள் அங்குள்ள சிலருக்கு பணத்தைக் கொடுத்து குடாநாட்டில் இராணுவ நெருக்கடியை இப்போதுள்ளதைவிட இன்னும் அதிகரிப்பதற்கான வேலைகளை செய்யும்படியும் தினசரி கைதுகளும் காணமல்போதல்களும் சுற்றிவளைப்புக்குளும் நடக்கின்ற ஒரு சூழ்நிலையை தொடரவைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வாவ்வ்வ்வ்வ்வ் ... அண்ணா!!!!! ........ கொழும்பிலையும் தமிழர்களுக்கு ஆட்பதிவு தொடங்கி விட்டதாம்!........ யாழ்பாணம் உட்பட மூலை முடுக்கெல்லாம் புத்த விகாரைகள் முளைக்குதாம்!!!......... அங்கு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை ஆ9 ரோட்டு பூராவும் பெரிய சீமெந்து தூணுகளும், அச்பெஸ்ரோஸ் சீட்டுகளும் இறங்கி அடுங்கி விடப்பட்டிருக்கிறதாம், அவ்வளவும் அங்கு நீட்டுக்கு சிங்கள குடியேற்றத்துக்குதானாம்"!!!!! ... இப்படி பலவும் புலம்பெயர்ந்தவைகளின் விருப்ப்பத்துக்குதான் நடக்குது என்டதை ஏனுங்கோ விட்டனீங்கள்!!!!!!!! ... எல்லாத்துக்கும் மேலாக சிங்களவன் நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ... அதையும் எழுதுங்கோ!!!!!!!! :(

தெரிந்தால் சொல்ல மாட்டாரா...

பதில் வருமட்டும் காத்திருக்கிறார்

நீங்கள் வேறு அவர் ஏதோ வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது மாதிரி :(

இங்கை அவர்கள் சொல்ல வாறது என்ன எண்டால் 300 000 மக்களையும் போராளிகளையும் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழரையும் சிங்கள அரசு பணயக்கைதிகளாக பிடிச்சு வைச்சுக்கொண்டு காசை கொண்டு வந்து தாங்கோ அவர்களை வாழவைக்க வேண்டும் எண்றால் என்கிறது... அதுக்கு இவர்கள் சொல்லுகினம் ஓடிவந்து கொட்டுங்கோ குடுத்து காப்பாத்துவம் இல்லை எண்டால் அவர்களுக்கு கோபம் வருமாம்... ஆனால் மகிந்த நல்லவராம், கோத்தா நல்லவராம், சிங்களவர்கள் நல்லவர்களாம்....! ஒற்றுமையாக வாழலாமாம்....

எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்வ்வ்வ்வ்வ் ... அண்ணா!!!!! ........ கொழும்பிலையும் தமிழர்களுக்கு ஆட்பதிவு தொடங்கி விட்டதாம்!........ யாழ்பாணம் உட்பட மூலை முடுக்கெல்லாம் புத்த விகாரைகள் முளைக்குதாம்!!!......... அங்கு வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை ஆ9 ரோட்டு பூராவும் பெரிய சீமெந்து தூணுகளும், அச்பெஸ்ரோஸ் சீட்டுகளும் இறங்கி அடுங்கி விடப்பட்டிருக்கிறதாம், அவ்வளவும் அங்கு நீட்டுக்கு சிங்கள குடியேற்றத்துக்குதானாம்"!!!!! ... இப்படி பலவும் புலம்பெயர்ந்தவைகளின் விருப்ப்பத்துக்குதான் நடக்குது என்டதை ஏனுங்கோ விட்டனீங்கள்!!!!!!!! ... எல்லாத்துக்கும் மேலாக சிங்களவன் நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ... அதையும் எழுதுங்கோ!!!!!!!! :(

இதையும் சேருங்கோ

இன்னும் 30 வருடத்துக்கு மகிந்த தானாம் ஆட்சி

அத்துடன் தமிழர் இருந்தனர் என்பதே தேடப்படும் பொருளாகியிடும்

நீங்கள் தொடர்ந்து திட்டி காலத்தை போக்குங்கோ இல்லாதவர்கள் அத்தனைபேரையும்கூப்பிட்டு வைத்து.

சிங்களவன் எதிரி என்றாலும் தலை சாய்க்கின்றேன் அவனது குறிக்கோளின் பிடிப்புக்காக...

அவனது ஒவ்வொரு காய் நகர்த்துதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது

எமக்கோ பிரபாகரனை விட்டதால் வேறு கதி தெரியவில்லை

பூச்சியத்தில் தமிழினம்

இங்கை அவர்கள் சொல்ல வாறது என்ன எண்டால் 300 000 மக்களையும் போராளிகளையும் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த தமிழரையும் சிங்கள அரசு பணயக்கைதிகளாக பிடிச்சு வைச்சுக்கொண்டு காசை கொண்டு வந்து தாங்கோ அவர்களை வாழவைக்க வேண்டும் எண்றால் என்கிறது... அதுக்கு இவர்கள் சொல்லுகினம் ஓடிவந்து கொட்டுங்கோ குடுத்து காப்பாத்துவம் இல்லை எண்டால் [u] அவர்களுக்கு கோபம் வருமாம்... ஆனால் மகிந்த நல்லவராம், கோத்தா நல்லவராம், சிங்களவர்கள் நல்லவர்களாம்....! ஒற்றுமையாக வாழலாமாம்....

எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்...

இதென்ன கேள்வி

போதைக்கு அடிமைப்பட்டவனின் அவசர தேவை எது.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.