Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய போட்டிகள் - வெட்கித் தலைகுனியும் இந்தியா !

Featured Replies

அதிலும் கர்நாடகத்துக்கா... ராஜஸ்தானுக்கா... ம.பீக்கா ...உ.பீக்கா.... யாருக்கு அதிகம் என சண்டை வரும்.. :lol: :lol:

யார் கூட நாறினது/நாறடிச்சது என்றா? :lol:

  • Replies 66
  • Views 5.6k
  • Created
  • Last Reply

First Published : 24 Sep 2010 11:48:37 AM IST

மெல்போர்ன், செப்.24:

காமன்வெல்த் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற அதன் 72 உறுப்பு நாடுகளுக்கு இந்தியா லஞ்சம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெய்லி டெலிகிராஃப் பத்திரிகை இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. போட்டியை நடத்துவது தொடர்பாக ஜமைக்காவில் இறுதி முடிவெடுக்கப்படும்போது 72 உறுப்பு நாடுகளுக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 100,000 டாலர் வழங்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உதவிசெய்வதற்காக ஆஸ்திரேலியாவும் 125,000 டாலரைப் பெற்றுள்ளது. இதனால் காமன்வெல்த் போட்டிக்கான வாக்கெடுப்பில் சிறிய நாடுகளின் ஆதரவுடன் கனடாவை 46-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது.

கனடா அனைத்து நாடுகளுக்கும் தலா 70,000 டாலர் வழங்க முன்வந்ததாகவும் அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துவரும் நிலையில் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற இந்தியா பெரிய அளவில் லஞ்சம் கொடுத்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=308116&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

இந்தியாவின் பழைய பிரச்சாரத்தை வன்மமாக வைத்து ஆஸி நல்லா பழி தீர்க்குது...

Games should not have gone to Delhi, says Australia

Australia's Olympic Committee president has said the Commonwealth Games should not have been awarded to Delhi.

John Coates said the Commonwealth Games Federation lacked the resources to monitor progress and to ensure that construction deadlines were met.

............

...........

Team England members at airport in Delhi on 24 September 2010 England's has become the first overseas team to reach Delhi, although they will stay in a hotel initialyl

http://www.bbc.co.uk/news/world-south-asia-11403204

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா வீரர்கள் தங்கும் விடுதி ஒன்றில் பாம்பு ஒன்று இருந்தது . ஆனால் கொல்ல முன்பு ஒடி மறைந்து விட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா வீரர்கள் தங்கும் விடுதி ஒன்றில் பாம்பு ஒன்று இருந்தது . ஆனால் கொல்ல முன்பு ஒடி மறைந்து விட்டதாம்.

பாம்பும் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளவந்திருக்கும். நிச்சயம் ஸ்ரேடியத்தில் தான் இருக்கும்.snake1.gif

snake.gif ஆரை கடிக்கப் போகுதோ.... snake.gif

  • கருத்துக்கள உறவுகள்

கேம்ஸ் வில்லேஜ் அறையில் பாம்பு ஊடுறுவியதாக தென் ஆப்பிரிக்கா புகார்

டெல்லி: இந்திய குத்துச் சண்டை வீரர் அகில், தான் கட்டிலில் உட்கார்ந்ததும் அது உடைந்து போனதாக நேற்று புலம்பிய நிலையில், தனது அறையில் பாம்பு ஊடுறுவியதாக தென் ஆப்பிரிக்க துணைத் தூதர் ஹாரிஸ் மபுலா மெஜகே கூறியிருப்பது காமன்வெல்த் போட்டி மீதான குளறுபடிகளை மேலும் அதிகரித்துள்ளது.

காமன்வெல்த் போட்டிக்கு நேரம் சுத்தமாக சரியில்லை. அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சை கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் அறையில் பாம்பு ஊடுறுவியதாக பரபரப்பு ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்னும் வரவில்லை. ஆனால் வீரர்கள் தங்கும் அறையைப் பரிசோதிப்பதற்காக துணைத் தூதர் ஹாரிஸ் நேற்று அறைகளை சுற்றிப் பார்த்தார். அப்போது ஒரு அறையில் பாம்பு இருந்ததைப் பார்த்தாராம் ஹாரிஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் நாங்கள் அறைகளுக்குப் போகாத நிலையில் அதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தங்க முடியாத அளவுக்கு அவை உள்ளன.

நேற்று ஒரு அறையில் பாம்பைப் பார்த்தேன். அது இந்திய பாம்பா என்பது சரியாகத் தெரியவில்லை. இப்படி பாம்புகள் வந்து போனால் நாங்கள் எப்படி தங்க முடியும். இப்படிப்பட்ட அறைகளில் தங்க வேண்டாம் என்றுதான் எங்களது வீரர்களை நாங்கள் அறிவுறுத்த முடியும்.

எங்களது வீரர்களின் உயிருக்கு இது பேராபத்தாக முடியும். இது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து எங்களுடன் வந்த அதிகாரியிடம் கூறினேன். அனைத்தும் சரி செய்யப்பட்டுவிடும் என்று அவர் உறுதியளித்தார்.

நாங்கள் போட்டியில் பங்கேற்கிறோம். அதேசமயம், அனைத்துப் பிரச்சினைகளும் சரியானால்தான் எங்களது அணிகளை நாங்கள் இந்தியாவுக்குக் கிளம்பி வரச் சொல்வோம் என்றார் ஹாரிஸ்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

டில்லியில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டவகையில் நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.

இந்தியத் தலைநகரான டில்லியில் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இரு வாரங்களே இருக்கின்ற நிலையில், அந்தப்போட்டிகள் திட்டமிட்டவகையில் நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கான கிராமம் உரியமுறையில் ப+ர்த்திசெய்யாமல் அழுக்கு நிறைந்து காணப்படுகின்றமை போட்டி நடைபெறும் பகுதியைச் சுற்றி வெள்ளநீர் தேங்கிக்காணப்படுகின்றமை சுற்றுலாப்பயணிகள் இருவர் டில்லியில் சிலதினங்களுக்கு முன்பாக துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் காயமுற்றமை டெல்லியில் டெங்கு பரவுகின்றமை போன்ற பல்வேறு காரணங்களே இந்த சந்தேகங்களை வலுப்படுத்திவருகின்றன.

டில்லி பொதுநலவாய போட்டிகளில் இருந்து இரு வெளிநாட்டு நாட்டு வீரர்கள் விலகிக்கொண்டுள்ளமை மற்றும் 40ற்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளைக்கொண்ட ஸ்கொட்லாந்து குழாம் டில்லிக்கான விஜயத்தை ஒத்திவைத்துள்ளமை ஆகியன திட்டமிட்ட வகையில் டில்லி விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுமா என்ற ஐயப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. பாதுகாப்புக்காரணங்களை முன்னிறுத்தி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பரிதிவட்ட சம்பியன் வீரரும், இங்கிலாந்தைச் சேர்ந்த முப்பாய்தல் விளையாட்டு வீரரும் செவ்வாயன்று தமது விஜயத்தை இரத்துச்செய்துள்ளனர்.

டில்லி பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்காதிருக்க நியுஸிலாந்து வீரர்கள் எவரேனும் தீர்;மானித்தார் அதனை ஆதரிப்பதாக அந்நாட்டுப்பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த அறிவுப்புக்கள் யாவும் டில்லியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வோர் தங்குவதற்கான கிராமத்தில் உள்ள வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனை அவசரமாக மேம்படுத்துமாறும் பொதுநலவாய விளையாட்டு சம்மேளத்தின் தலைவர் மைக்கல் ஃபென்னல் இந்திய அரசாங்கத்திடம் நேற்றையதினம் விடுத்த கோரிக்கையை அடுத்தே வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வோர் தங்குவதற்கான கிராமத்தில் உள்ள வசதிகள் மிகவும் மோசமாக இருப்பது குறித்து அதில் கலந்துகொள்ளவுள்ள நாடுகளைச் சேர்ந்த முன்னாய்வுக் குழுக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியிருக்கின்ற மைக்கல் ஃபென்னல் அந்த வசதிகள், அருவருக்கத்தக்க வகையில், சுகாதாரமற்றவையாக, ஆட்கள் தங்குவதற்கு பொருத்தமற்றவையாக இருப்பதாக விபரித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் தாமதங்கள் தொடர்பான ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகிய நிiயில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பாக டில்லி விளையாட்டுப்போட்டிகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ,ந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக தற்போது பொதுநலவாய விளையாட்டு சம்மேளத்தின் தலைவர் மைக்கல் ஃபென்னல் டில்லிநோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்த்ககது. விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளுமாக 7000 பேர் கலந்துகொள்ளவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக உரிய வேளையில் இந்த வசதிகள் சீர் செய்யப்படாவிட்டால், போட்டிகளை ரத்துச் செய்யும் நிலை உருவாகலாம் என்று நியூசிலாந்து அணியின் முகாமையாளரான டேவ் கரி கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. நேற்றையதினம் டில்லி பொதுநல விளையாட்டு திடலுக்கு அருகே பாதசாரிகளுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்குக்கு வெளியே இந்தக் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது. விளையாட்டு மைதானத்துக்கான கார் தரிப்பிடத்தை, விளையாட்டரங்குடன் இணைப்பதற்காக இந்த பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. இதில் 27பேர் காயமுற்றதுடன் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றையதினம் பளுத்தூக்கும் விளையாட்டுத்திடலின் மேலான கூரையின் ஒருபகுதி உடைந்து விழுந்தபோதும் அதுபற்றி கவலைகப்படுவதற்கொன்றும் இல்லை என இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .

தலைநகர் டில்லியின் ஜும்மா மஸ்ஜித்திற்கு முஸ்லிம் பள்ளிவாசல் முன்பாக கடந்த வார இறுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப்பிரயோகத்தில் சுற்றுலாப்பயணிகள் ,ருவர் காயமுற்றதையடுத்து பாதுகாப்பு குறித்த அச்சநிலை உச்சம் பெற்றது. போட்டிகள் தொடர்பாக இத்தனை கரிசனைகள் வெளியிடப்படுகின்ற நிலையிலும் போட்டிகளுக்கு திட்டமிட்டவகையில் நகரம் தயாராகிவிடும் போட்டிகளும் திட்டமிட்ட வகையில் ,டம்பெறும் என போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர் சிலர் சில காரணங்களுக்காக வராது விட்டாலும் புதுடில்லிக்கு வருகின்றவர்கள் ,ங்கிருக்கும் காலப்பகுதியை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள் என ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் நாயகம் லலித் பனோட் தெரிவித்துள்ளார். விளையாட்டரங்கங்களும் விளையாட்டுவீரர்களுக்கான தங்குமிட கிராமமும் உலகத்தரம்வாய்ந்தவை எனக்குறிப்பிட்டுள்ள அவர் வீரர்கள் ,ந்தவாரத்தில் வரத்தொடங்குகின்றபோது தாம் அதற்கு தாயாராகிவிடுவர் எனக்குறிப்பிட்டுள்ளார். இதேவேளை டில்லி விஜயத்தை இரத்துச்செய்துள்ள அவுஸ்திரேலிய பரிதி வட்டச்உலகச் சம்பியன் டானி சாமுவல்ஸைப் மேலும் பல அவுஸ்திரேலிய வீரர்கள் பின்பற்றக்கூடும் என அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் மார்க் அரிப் தெரிவித்துள்ளார். இதேவேளை பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதா இல்லையா என்ற ,ங்கிலாந்தின் தீர்;மானம் அடுத்துவரும் 48மணிநேரத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதன் ஆரம்ப வைபவம் ஒக்டோபர் 3ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 70நாடுகளைச்சேர்ந்த வீரர்களும் அதிகாரிகளுமாக 7000பேர் இதில் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .உலகையே வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் ஒலிம்பிக்போட்டிகளை 2008ம் ஆண்டில் சீனா நடத்தியிருக்க அதற்கு இணையான வல்லரசு நாடு என தம்பட்டமடித்துக்கொள்ளும் இந்தியாவால் ஒலிம்பிக்கிலும்பார்க்க பரிமாணத்தில் பன்மடங்கு குறைவான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளையே நடத்தமுடியுமா என சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருப்பது அந்நாட்டின் உண்மையான இயலாமையின் சுயவடிவத்தை காண்பித்துநிற்பதாக விமர்சகர்கள் கருத்துவெளியிட்டு;ள்ளனர்.

http://www.deepamtv.tv/?p=5572

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடுகளும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக சதி செய்கிறது :):unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

2 பாம்புகள் என்று சண் பேப்பரில் போட்டிருக்கிறார்கள்.அதில் ஒன்று நாகபாம்பாம். (பாம்) குண்டு ஒன்று தான் வைக்காத குறை.அதுவும் கொஞ்ச நாளில வெடிக்குதோ தெரியாது. ஏனென்றால் இந்தியா எந்த ஒரு அயல்நாட்டோடும் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

:lol::lol::lol::lol:

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா?

:):unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலை விளையாட்டுப் போட்டியாம்

ஊரெல்லாம் நாத்தம் தாங்க முடியலையாம்

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

இந்த எழுத்து அதில் உள்ள குறும்பு எல்லாம் எனக்கு குசா அண்ணாவை ஞாபகப்படுத்துகிறது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

ஒரு பச்சை

இந்த அருமையான உபமானத்துக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை காறர் அதிகமாக இருக்கிற நாட்டில பாம்புக்கு ரூம்போட்டு கொடுக்கும் மனிதாபிமானத்தை பற்றி ஏன் உலகநாடுகள் பெருமையாக கதைக்கினம் இல்லை, வீரர்கள் தங்கியபின்னர் பாம்பு வந்தால்தான் குற்றம், அதற்கு முதல் பாம்பு வாடகைக்கு ரூம் எடுத்திருக்க முடியாதா? அதுவரை அது தங்கத்தான் கூடாதா? அதுவும் அது நல்லபாம்பாம் அதுபாட்டுக்கு ஒருமூலையில் அக்கடா என்று படுத்து இருந்துட்டு போனால் இவயளுக்கு என்ன வந்து விடும், அது என்ன இவயளின் அந்தரங்கத்தை படம் எடுத்து யூத்ரூப்பில் போட்டு விடுமா? :):unsure: :unsure:

:lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.