Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமானம் இல்லாதா மனிதர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு இந்தியனின் கடையில் ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து ஐம்பது பவுண்ட்ஸ் பெற்று அதில் ஒரு சிறிய அறை வாடகை, பில்ஸ் போக மீதியை ஊருக்கு அனுப்பினேன். சாப்பாடுச் செலவு இருந்ததில்லை. ஒரு நாளைக்கு 2 mars bars & tap water மட்டும் தான் மிஞ்சி, மிஞ்சி போனால் பாண் அப்போது 9p, குறைந்தது 4 நாட்களுக்குப் போதுமானதாக இருந்தது, ஆறு மாதங்கள் இப்படித் தான் இருந்தேன். அதன் பிறகு கடைக்கு வரும் சிலர் நன்புடன் இந்த நாடு சட்டங்களை அறியத் தன்மையால் நான் அங்கிருந்து வேறு வேலை எடுத்து மாறக் கூடியதாக இருந்தது. பல வருடங்கள் ஆனாலும், பல மாற்றங்கள் ஆனாலும் வந்த பாதையை, வாழ்க்கை தந்த அனுபவத்தை மறக்க முடியாது தானே?

இங்கு யாரும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றேன் என்று நினைக்கவேண்டாம்

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கான அடுத்த படி அதுதான்.

அதை சகட்டுமேனிக்கு போட்டுத்தாக்காமல்

எடுத்ததுக்கும் காட்டிக்கொடுப்போம் அடிப்போம் உதைப்போம் என்றில்லாமல்...

தவறு செய்பவர்களும் எம்மவர் என்ற ரீதியில் திருத்துவதற்கு முயலவேண்டும்

ஏன் இங்கு சட்டம் பற்றி எழுதுவோர்

அந்த வயோதிபர் இரண்டு பக்க வருமானம் எடுத்தது எவ்வளவு குற்றம் என்று வாதிடவே இல்லை.

எப்போதுமே எமது சமுதாயத்தில் உள்ளதுதான்

தானும் தின்னாது தள்ளியும்படாது

அல்லது

வாழ்ந்தாலும்ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

எனது கோணம் வேறு குட்டி

அந்த நிலையில் தங்களுக்கு சோறும் தங்களது குடும்பத்துக்கு சிறு உதவியும் செய்த தொழிலை

வளர்ந்ததும் தாங்கள் மிதிக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா...???

அந்த வேலைக்கும் போகாமல் தாங்கள் வீட்டில் உட்கார்ந்திருந்தால்...

இன்றும் அதேநிலைதான்

எப்போதுமே கிடைப்பதை பிடித்துக்கொள்ளவேண்டும்

அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு உழைக்கவேண்டும்

மேலே போனதும் இதைக்கடந்தா வந்தேன் என்று நினைக்கக்கூடாது

கிடைத்ததை பிடித்துக்கொண்டு

அதையும் துரும்பாக பயன்படுத்திக்கொண்டு உயர்ந்தேன் என்று நினைக்கவேண்டும்

Edited by விசுகு

  • Replies 51
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலே போனதும் இதைக்கடந்தா வந்தேன் என்று நினைக்கக்கூடாது

கிடைத்ததை பிடித்துக்கொண்டு

அதையும் துரும்பாக பயன்படுத்திக்கொண்டு உயர்ந்தேன் என்று நினைக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இங்கு சட்டம் பற்றி எழுதுவோர்

அந்த வயோதிபர் இரண்டு பக்க வருமானம் எடுத்தது எவ்வளவு குற்றம் என்று வாதிடவே இல்லை.

விசுகு அண்ணையின் இந்தக் கருத்தை வரவேற்கிறேன். நாம் நேர்மையைக் கைவிட்டுவிட்டு பின்னர் அடுத்தவனிடம் மட்டும் நேர்மையை எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளிமார் புலம் பெயர் நாட்டிற்கு வந்த உடனே உங்களுக்கு வேலை தருகினம் என்டதும் இல்லாமல் அதிக சம்பளம் தா எனக் கேட்டுக் கொண்டு...குறைந்த சம்பளம் தான் என்டாலும் விரும்பினால் வேலை இல்லா விட்டால் போ யார் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன...அந்த முதியவர் இந்த வயசிலயும் கால் கடுக்க நின்டு வேலை செய்தது பெரிதில்லை ஏன் என்டால் எங்களுக்கு முதியவருக்கோ அல்லது மற்றவனுக்குகோ மரியாதை கொடுக்க தெரியாது...அந்த முதியவரை வேலைக் எடுக்கும் போது அந்த முதலாளி அவருக்கு வேலை செய்யும் உரிமைப் பத்திரத்திரத்தை பார்க்காமலா வேலை கொடுத்தார் எனக்குப் புரியல்ல...அப்படி என்டால் அவருக்கு அதிக பட்சம் சம்பளம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும் அது குற்றம் இல்லையா...அந்த முதியவர் இந்த வயதிலும் இவ்வளவு கஸ்டப்பட்டு வேலை செய்கிறார் என்டால் அவரது குடும்பத்தில் எவ்வளவு கஸ்டம் என்பதை புரிந்து கொள்ள வேணாம்...தொழிலாளி வர்க்கம் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை ஏனென்டால் நான் முதலாளி வர்க்கம் :D

எனது கோணம் வேறு குட்டி

அந்த நிலையில் தங்களுக்கு சோறும் தங்களது குடும்பத்துக்கு சிறு உதவியும் செய்த தொழிலை

வளர்ந்ததும் தாங்கள் மிதிக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா...???

அந்த வேலைக்கும் போகாமல் தாங்கள் வீட்டில் உட்கார்ந்திருந்தால்...

இன்றும் அதேநிலைதான்

எப்போதுமே கிடைப்பதை பிடித்துக்கொள்ளவேண்டும்

அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு உழைக்கவேண்டும்

நான் மிதிக்கவில்லை! அன்றைய கால கட்டம் எனக்கு மிக மிக புதியது, எனக்கு அன்றிருந்த அறியாமையை அடுத்தவன் தனக்கு சார்பாக்கிக் கொண்டான் என்பது தான் உண்மை!. அதே கடையில் அதே வேலை செய்த குஜராத்காரனுக்கு என்னைவிட அதிக ஊதியம் (£110) கொடுக்கப் பட்டது. அவனை சட்டப் படி பதிந்தபடியால் அவனுக்கு அந்தத் தொகை கொடுக்கப் பட்டு இருக்கலாம். ஆனால், என்னிடம் எல்லா பத்திரங்களும் வாங்கியும் கடை முதலாளி தனது லாபம் கருதி எனது பெயரை பதிவு செய்யவில்லை என்றே பின்பு அறிந்தேன். அந்த நேரத்தில் இந்த விபரங்களை எனக்கு அறியத் தருவதற்கு யாரும் இருக்கவில்லை. நான் வேறு இடம் மாறிய சிறிது காலத்தில் அந்தக் கடை மூடப்பட்டு, நீண்ட காலத்திகுப் பிறகு மீண்டும் அவரின் மகன் வைத்து நடத்தினார்.

வந்த பாதையை நான் என்றும் மறந்தது இல்லை. அன்று அப்படி வாழ்க்கை இருந்ததால் தான் ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குட்டி தங்களது அடக்கமான பதிலுக்கு...

நாங்கள் எல்லோருமே வந்தவுடன் அப்படியான வேலை செய்துதான் அடுத்தபடிக்கு ஏறினோம்

அந்த நிலை அல்லது அந்த படி இருந்தபடிதான் இருக்கும்

இன்று அது கிழக்கு ஐரோப்பியர்களுக்கு உதவுகிறது

நாம் அதைக்கடந்துவிட்டோம்

இன்று எமக்கு உதவி செய்யவும்ஆலோசனை தரவும்உறவுகள் வந்து விட்டார்கள்

ஆனால்அது இல்லாதவர்கள்

அதைக்கடந்துதான் வரவேண்டும்

இதுவும் எழுதப்படாத விதிதான்.அது வேலைக்கு செல்பவருக்கும் தெரியும் வேலை கொடுப்பவருக்கும் தெரியும்

இத்தனை காலம்தான் இவர் என்னுடன் இருப்பார் என்பது இருவருக்கும்புரியும் பாசை........

மற்றது

வியாபாரத்துக்கும்

வயதுக்கும்

மரியாதைக்கும்

ஏன் இந்த தலைப்புக்கும் சம்பந்தமில்லை

அப்படிருந்தால் அதற்கு பெயர் வயோதிப மடம் அல்லது அன்னதான மடம்

ஒரு தொழிலாளி செய்யும் வேலைக்கு சட்டப் படி வகுக்கப் பட்ட அல்லது முதலாளி- தொழிலாளியால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஊதியம் கொடுக்கப் படவேண்டும்! அது அங்கே நடக்கவில்லை என்பது சுஜியின் ஆதங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபப்படி சம்பளம் கொடுக்கப்படாதது வெட்கக்கேடானதுதான்

ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தை ஒருவர் மீறியிருக்கின்றார் என்பதும் உண்மை

அத்துடன் இருவரும் சட்டத்தை மதிக்கவில்லை

அதேநேரம் ஒரு பக்க வாக்குமூலமே பெறப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

எனக்குப்புரியவில்லை சிலர் ஏன் இந்த முதலாளிக்கு சார்வாக கருத்து எழுதுகிறிர்கள் என்று.... எனக்கு இருவருமே அறிந்தவர்கள் இல்லை...கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அந்தப்பெரியவரிடம் தப்பில்லை... இவ்வளவு காசு வைத்திருப்பவர் 100பவுண்ஸ் குடுக்கிறாதல் குறைந்து போகமாட்டார்...அரசாங்கம் என்ன அள்ளியா குடுக்கிறது இங்கே தனி மனிதனுக்கு அவருக்கு எப்படி அது போதும் தானும் சாப்பிட்டு தன் குடும்பத்தாரையும் கவனிக்க.... ஒரு வேளை அவரே தப்பு பண்ணியதாகவே இருந்தாலும் அவர் வயதுக்கு முதியவர்... அவர் வயதுக்கு மரியாதை குடுத்துப்பேசவேண்டாமா அந்த பண்பும் அந்த முதலாளியிடம் இல்லை....

ஒருவரின் கண்ணால் கண்ணீர் வருவது என்றால் எவ்வளவு கஸ்ரப்பட்டு வேலை செய்து இருக்கார்..... அதைவிட இருந்த இடத்தை விட்டு திடிர் என துரத்தி விட்டது முழுத்தப்பு.... சிலர் சொல்லுகிற மாதிரி நான் அவருக்கு உதவி பண்ணியிருக்க முடியும் ... ஆனால் அவர் லூசியம் பகுதியில்லை... நான் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் திரும்பி வராது என்று நினைக்கிறேன்... இந்த முதலாளி பற்றி லூசியம் பகுதியில் இருக்கும் அனைவருக்குமே நன்றாகவே தெரியும்... திடிர் என இந்தக்கடை ஒரு கிழமை மூடப்பட்டு திரும்ப திறந்ததையும் நானே பார்த்திருக்கிறேன்.... ஏன் என்ன காரணம் என்று இன்றுவரை தெரியாதா புரியாதா விடயம்...

கஸ்ரப்பட்டு வேலை செய்கிறவனுக்குத்தான் வலி தெரியும்.... குடும்ப கஸ்ரங்களால் படிக்கவும் முடியாமல் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று மாடாய் உழைக்கிறவனுக்குத்தான் உழைப்பாளி வர்க்கத்தின் வலி தெரியும்... குட்டி சொன்ன மாதிரி வந்த புதிசில் நானும் தமிழ் கடையில் வேலை செய்த அனுபவம் எனக்கும் இருக்கு... வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அங்கே என்ன நடந்தது என்றும் எழுதுகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி.. உங்கள் கருத்தை மறுதலிக்கவில்லை. அந்த முதலாளி செய்தது அநியாயம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் அந்த முதியவர் அரசாங்கப் பணத்தை வாங்கிக்கொண்டு கைக்காசுக்கு வேலை செய்தது அரசாங்கத்தை ஏமாற்றிய செயல். அதனால் ஏமாற்றப்பட்டபோது அரசை அணுகும் பாதுகாப்பை இழந்துவிட்டார்..! :D

இந்த விடயத்தில் நீங்கள் கொடுத்த தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் தவறு இருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நீங்கள் கொடுத்த தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் தவறு இருக்கிறது. :D

ஆமென்

சுஜி, முதலாளி தவறு செய்து இருக்கலாம். அதற்காக அவரது அடிவயிற்றில் கையை வைக்கவேண்டிய தேவை இல்லைத்தானே? அவருக்கும் பிரச்சனைகள் காணப்படலாம். அவரும் கூலித்தொழிலாளியாக உடலை வருத்தி குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்து இருக்கலாம். நீதி என்று வரும்போது ஆழமாக விபரங்களை அறியாது ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு கூறமுடியாது. ஓர் பிரச்சனை என்று வரும்போது முதலில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம், நீதி கிடைக்கவேண்டும். உங்களால் பாதிக்கப்பட்டவரையே தேடிக்கண்டுபிடிக்க முடியாத நிலையில்... இன்னொரு தரப்பிற்கு மட்டும் குருட்டுத்தீர்ப்பு கூறமுடியாது. இங்கு நாங்கள் முதலாளிக்கு ஆதரவாக பேசவில்லை. ஓர் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புக்கள் பற்றி பேசுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கரும்பு

அத்துடன் நீங்கள் வேலை செய்யும் முதலாளியிடமோ அல்லது தங்கள் உயர் அதிகாரியிடமோ பொய் சொல்லி வேலையைப்பெற்றிருந்தால்

அல்லது ஏதாவது நம்பிக்கையீனமான காரியங்களில் ஈடுபட்டால்

என்ன நடக்கும் என்றும் சிந்தித்து பார்க்கவேண்டும்

உடனடியான வேலை இழப்பு

சம்பள பாக்கி இழுத்தடிப்பு

சட்டப்படி நடவடிக்கை என்பன உடனடியாக செய்யப்படும்

என்னைப்பொறுத்தவரை

அந்த முதலாளிக்கு இவருக்கு கொடுக்கவேண்டிய சொற்ப பணம் பெரிதாக தெரிந்திருக்காது

தான் ஏமாற்றப்பட்டது

தன் சொல்லுக்கு மரியாதை கொடுக்காதது

மற்ற தொழிலாளிகளுக்கு தன் மீது இருந்த மதிப்பைக்குறைத்தது

என்பது தான் பெரிதாக இருந்திருக்கும்

அதேநேரம் உடனடியாக இப்படி கத்தினாலும் பின்னர் பணத்தை கொடுத்திருப்பார் என்றுதான் நினைக்கின்றேன்

இப்படியான பல நிகழ்வுகளை கனடாவில் பார்த்திருக்கின்றேன்.இங்குள்ள பல வியாபாரநிலையங்களில் இப்படியான முதியவர்கள் தான் (அதுவும் மீன் வெட்டுதல்) கைக் காசிற்கு வேலை செய்கின்றார்கள்.பாசையும் பெரிதாக தெரியாது,வயதும் போய் விட்டது அதனால் வேறுஇடங்களில் வேலை கிடைப்பது கஸ்டம்.அரசாங்கம் கொடுக்கும் பணத்தைவிட கொஞ்சம் தாங்களும் உழைத்தால் பல விடயங்களுக்கு பயன்படும் என்று வேலை செய்கின்றார்கள்.பல முதலாளிமார்கள் மேலே சொன்ன முதலாளி போலவே நடந்துகொள்கின்றார்கள்.கள்ளமாக வெலை செய்வது அறிந்து அவர்களை போட்டு வாட்டுவதும்,2,3 மாதங்கள் வேலை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் துரத்துவதும் வெகு சகஜம்.அரசாங்கத்திற்கு இதை காட்டிக் கொடுக்கவெளிக்கிட்டால் ஏறக்குறைய முழுத்தமிழ்கடைகளுமே இந்த நிலைதான்.எனது வீட்டுக்கருகில் இருக்கும் பிளாசாவில் இருக்கும் பேக்கரியில் 3 வருடமாக சமைத்த சிம்ரனை (மெல்லியதாக இருப்பதால் முதலாளி அவாவை இப்படித்தான் கூப்பிடுவார்) பிடித்து வெளியில் விட்டார்.நாட்டுக்கு போகும் போது தந்தால் காணும் என்று சம்பளத்தை சேரவிட்டு கேட்டபோது இந்த கதி.ஒரு நாள் முழுக்க இருந்து அழுது,திட்டிவிட்டு மனுசி ஒன்றுமில்லாமல் போனது

ஊரில இந்திய வம்சாவழியினருக்கு நாங்கள் செய்த இதே மாதிரி பாவத்தின் பலாபலன்களோ என்று எண்ணத்தோன்றும்.எனக்கு எம்மவரில் எவரிலும் நம்பிக்கையில்லை வானொலியிலும்,பத்திரிகையிலும்,இணயத்திலும் எல்லோரும் நல்லவர்களே. நிஜத்தில் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்த பழசுகளை நினைச்சு நினைச்சு.......

வரப்போற நல்லதுகளையும் ஒருமாதிரி இல்லாமல் பண்ணிடுவம்.

greendot.jpg

இவர்களை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. காசுக்கு வேலைக்கு போகும் அப்பாவிகளை ஏமாற்றி வேலை வாங்கிவிட்டு காசு இல்லை என்றே கூறுவார்கள்.இது எல்லா நாட்டு மக்களிலிலும் உள்ளது.ஆனால் குறிப்பாக ஆசிய நாட்டவர்கள் தான் மிக மோசம். விசுகு அண்ணா கூறியவர்கள் போல ஒருசிலர் இருக்கலாம்.ஆனால் அனேகர் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் தான்.ஒரு பெண் இப்படி ஒருவரிடம் வேலை செய்து விட்டு இறுதி நாளில் காசை கேட்ட போது ஒரு மணித்தியால பணத்தை எடுத்து விட்டார்.அதற்கு அவர் சொன்ன பதில் இத்தனை தரம் நீர் மலசல கூடம் சென்றுள்ளீர்.அந்த நேரம் தான் கழிக்கப்படுகிறதாம். :unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் சிலர் எழுதுவது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைப் பற்றியதாகவே இருக்கின்றது.

ஆனாலும் மேற்குலகம் வந்த எல்லா ஈழத்தவர்களும் சந்தித்த இந்த வேலைவாய்ப்புப் பிரச்சனை மிக மோசமானது.இதை நானும் அனுபவித்தவன்.

அனுமதி இல்லை என்பதற்காக வெட்டியாக வீட்டிற்குள்ளேயே இருக்க முடியுமா?

எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டாலும் தங்களால் முடிந்த அளவிற்குத் தேடி வேலைகளைச் செய்கின்றார்கள். முதலாளிகளும் அனுமதிப் பத்திரம் இல்லாமலேயே வேலை வழங்குகின்றார்கள்

இங்கே எனது கண்களுக்கு மனிதாபிமானம் மட்டும் தான் தெரிகின்றது

எது எப்படி இருந்தாலும் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஒரே நாட்டாவர்களாக இருந்தும் நிலமையைத் தனக்குச் சார்பாக எடுத்துக் கொண்டு ஒருவரின் உழைப்பை உறிஞ்சிய இந்த முதலாளி கண்டிக்கப்பட வேண்டியவரே.

வாத்தியார்

********

வாத்தியார்.. உங்கள் நாட்டின் நிலைமை என்னவோ தெரியாது. ஆனால் கனடாவில் அகதி விண்ணப்பம் கோரும்போதே குறைந்தபட்ச உதவிகள் கிடைக்கத் தொடங்கிவிடும். அதற்கு மேலும் வருமானம் கிடைக்க வேணும் எண்டால் களவாக வேலைக்குப் போக வேண்டும். களவாக எதைச் செய்ய முயன்றாலும் நாம் சட்டப் பாதுகாப்பு அற்றவர்களாகி விடுகிறோம்.

அதற்காக முதலாளிகள் ஏமாற்றுவது நல்ல செயல் என்று சொல்ல வரவில்லை. வியாபாரம் என்று வந்தவுடம் எம்மவர்கள் முதலில் இழப்பது மனிதாபிமானத்தைத்தான். :)

அகதியாகப் பதிந்துவிட்டு களவாக வேலைக்குச் செல்வதைப் பற்றி இன்னுமொரு சிறு விடயம். அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் காசு வரிசெலுத்தும் மற்றவர்கள் மற்றும் நிறுவனங்களின் வரிப்பணங்களால் வழங்கப்படுவது. அப்படியானால் அகதிப் பணத்தையும் வாங்கிவிட்டு திரைமறைவில் அரசின் பார்வைக்குத் தெரியாமல் வேலை செய்வது அரசை மட்டும் ஏமாற்றும் செயல் இல்லைதானே..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் சிலர் எழுதுவது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைப் பற்றியதாகவே இருக்கின்றது.

ஆனாலும் மேற்குலகம் வந்த எல்லா ஈழத்தவர்களும் சந்தித்த இந்த வேலைவாய்ப்புப் பிரச்சனை மிக மோசமானது.இதை நானும் அனுபவித்தவன்.

அனுமதி இல்லை என்பதற்காக வெட்டியாக வீட்டிற்குள்ளேயே இருக்க முடியுமா? எல்லோரும் அனுமதி மறுக்கப்பட்டாலும் தங்களால் முடிந்த அளவிற்குத் தேடி வேலைகளைச் செய்கின்றார்கள். முதலாளிகளும் அனுமதிப் பத்திரம் இல்லாமலேயே வேலை வழங்குகின்றார்கள்

இங்கே எனது கண்களுக்கு மனிதாபிமானம் மட்டும் தான் தெரிகின்றது

எது எப்படி இருந்தாலும் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஒரே நாட்டாவர்களாக இருந்தும் நிலமையைத் தனக்குச் சார்பாக எடுத்துக் கொண்டு ஒருவரின் உழைப்பை உறிஞ்சிய இந்த முதலாளி கண்டிக்கப்பட வேண்டியவரே.

வாத்தியார்

********

நாங்கள் எல்லோருமே வந்தவுடன் அப்படியான வேலை செய்துதான் அடுத்தபடிக்கு ஏறினோம்

அந்த நிலை அல்லது அந்த படி இருந்தபடிதான் இருக்கும்

இன்று அது கிழக்கு ஐரோப்பியர்களுக்கு உதவுகிறது

நாம் அதைக்கடந்துவிட்டோம்

இன்று எமக்கு உதவி செய்யவும்ஆலோசனை தரவும்உறவுகள் வந்து விட்டார்கள்

ஆனால்அது இல்லாதவர்கள்

அதைக்கடந்துதான் வரவேண்டும்

இதுவும் எழுதப்படாத விதிதான்.அது வேலைக்கு செல்பவருக்கும் தெரியும் வேலை கொடுப்பவருக்கும் தெரியும்

இத்தனை காலம்தான் இவர் என்னுடன் இருப்பார் என்பது இருவருக்கும்புரியும் பாசை........

மற்றது

வியாபாரத்துக்கும்

வயதுக்கும்

மரியாதைக்கும்

ஏன் இந்த தலைப்புக்கும் சம்பந்தமில்லை

அப்படிருந்தால் அதற்கு பெயர் வயோதிப மடம் அல்லது அன்னதான மடம்

  • கருத்துக்கள உறவுகள்

இசை

நீங்கள் சொல்வதையும் மறுக்க முடியாது தான்.

இருந்தாலும் மக்களுக்குப் போதிய உதவித் தொகை கிடைத்தால் அவர்கள் ஏன் களவாக வேலைக்குச் செல்ல முயற்சிக்கின்றார்கள்.

களவு வேலைகளைக் கண்காணிப்பது அரசின் கடமை அல்லவா?

அதையும் அவர்கள் சரியாகச் செய்வதில்லை.

காரணம் என்ன?

அதைவிட பெரிய பெரிய முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பல வழிகளில் வரிவிலக்குகள் அளிக்கப்படுகின்றன.

முதலாளிகளை மேலும் முன்னேற வைத்து ஏழைத் தொழிலாளர்களின் அடிவயிற்றில் கை வைக்கும் இன்றைய உலக அரசியலே இதற்குக் காரணம்.

அதை விட அரசியல்வாதிகளும் மக்களின் வரிப் பணத்தில் தானே வாழ்கின்றார்கள்

அவர்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய தொகை ஊதியமாக வழங்கப்படுகின்றது?

வளங்களும் உழைப்புக்களும் சரியான முறையில் பங்கீடு செய்யப் படும் வரை இந்தப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வயோதிபர் போன்ற பலர்

சாதாரண ஒருவர் ஒரு வேலை செய்து வரி கட்டி எடுக்கும் சம்பளத்தைவிட அதிகம்பெறுகின்றனர்

அதை தமிழன் என்ற முறையில் வரவேற்கின்றேன்

எப்படியாவது எனது சமூகம் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற வகையில்.

ஆனால் இங்கு ஒரு தரப்பு சாட்சியத்துடன் மரண தண்டனைக்கு நிகரான தண்டனையை சிலர் முன் மொழிந்தனர்

அதையே நான் எதிர்த்தேன்

இங்கு சிலர் குறிப்பிட்டுள்ளனர்

பல இடங்களில் இது நடப்பதாக....

அதில் ஏதாவது ஒரு இடத்தில்

அந்த முதலாளி ஒருவரை பலாக்காரமாக பிடித்துவந்து அல்லது தேடிச்சென்று இவர்தான் தனக்கு வேலைக்கு வேண்டும் என்று வேலை கொடுத்தாரா....???

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு அண்ணா

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றவர்களின் உழைப்பைச் சுறண்டும் முதலாளிகளைப் பற்றியே நான் இங்கு எழுதுகின்றேன்.

அதனால் தான் பையன்26 இன் இருட்டடிக்கும் ஆதரவு வழங்கினேன்.

உண்மையிலேயே இந்த முதலாளி சட்டத்தை மதிப்பவ்ராக இருந்தால் செய்த வேலைக்குரிய பணத்தினை அந்த வயதானவரிடம் கொடுத்து விட்டு அவர் செய்த பிழையைச் சுட்டிக் காட்டி அவரை வேலையிலிருந்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அது தான் மனிதாபிமானம்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாத்தியாராகவே இருங்கள்.......... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நல்ல கருத்துக்கள் பலராலும் வைக்கப்பட்டிருக்குது. மேலதிகமாக ஒன்றும் எழுத தெரியவில்லை. உண்மையிலே அந்த முதியவர், அவரை போன்ற வேலைகள் செய்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இங்கே ஒன்று அவருடைய முதுமை மட்டுமல்ல, மற்ற எல்லா காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எனது வேலை இங்கே கிட்டத்தட்ட 600 மணியில் இருந்து பின்னேரம் 600 மட்டும், சில நாட்டகளில் 1000 மணி மட்டும். அழுதழுது தான் வேலை செய்வது. சம்பளத்தை மணித்தியாலத்தால் பிரித்தால் நெ சொன்ன கணக்குதான். ஊரில சொன்ன மாதிரி உழுதவன் கணக்குப்பாத்தல் உழவு காசும் வராது என்ற மாதிரியான வாழ்க்கை. இதே நேரத்தில், இதே அளவு சம்பளத்தில்( உண்மையில் கிட்டத்தட்ட அரைவாசிக்கு கிட்ட) வேலை செய்கிற என்னைப்போன்ற பின்னணி உள்ளவர்களை தெரியும் எனக்கு/ எனது நண்பர்களையும் உள்ளார்கள். ( எனக்கு பெரியளவில் ஒட்ட்ஜோப் செய்கிற பாக்கியம் கிடைக்கவில்லை அல்லது தேவைப்படவில்லை.மனைவி வேலை செய்தபடியால் இதுவும் சுய தம்பட்டமோ தெரியவில்லை) ஏன் இதை எழுதுகிறேன் என்றால் குறைந்தளவு உஊதியத்தில் பலரும் வேலை செய்கிறார்கள், வேலை செய்திருக்கிறார்கள். இங்கே பிறந்த/ எல்லா விசா உள்ளவர்களும் பெரியளவில் "தொண்டர்" என்கிற பெயரில் வேலை செய்கிறார்கள். இது ஒருவிதமான வாழ்க்கை முறை இங்கே. உஊரில என்றால் திருவிழாவிற்கு முதல் நாள் புல் வேட்டுவதோடோ, அல்லது இசைநிகழ்ச்சிக்கு காசு செய்வதோடோ எங்கள் தொண்டர் பணி நிறைவு பெற்றுவிடும்.

சரி இந்த நிகழ்வை எடுத்தால்

இங்கே எல்லார் சொன்ன கருத்துகளும் சரி...விசுவை பாராட்டுகிறேன், நான் நினைக்கிறேன் முதன் முதலில், திரி சென்ற திசைக்கு மாற்றாக கருத்தை வைத்தவர் என்ற வைகையில். பலருடைய உதாரனங்களும் காத்திரமானவை, பலவும் சொந்த அனுபவமாய் இருப்பது அதற்ற்கு வலு செய்கிறது.

அருர்ஜுன் இன் கருத்து நன்றாக யதார்த்தமாக உள்ளது. நாங்கள் கனடாவில் சந்திக்கிற ஆட்கள்.

எனது மற்றை கருத்து என்ன வென்றால் ...இது ஒரு சமூக்கப் பிரச்சனை, இது தனியே அந்த முதலாக்கும், அங்கே குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறவர்களுக்கு இடையிலான பிரச்சனை அல்ல.

சுஜி சொன்ன கடை என்ன கடையோ தெரியாது, இங்கே உதரணத்துக்கு மீன் கடை ஒன்றை எடுப்போம், தமிழ் கடையில் "ரெட் சிநேப்பர்" 499 வாங்கலாம், ஆனால் அதை இங்குள்ள சூப்பர் மார்க்கெட் இல் வாங்க வெளிக்கிட்டால் 699 அல்லது 799 வரும். அர்ஜுனின் (சிம்ரன்) கதை எழுத்தால் தமிழ் கடையில் 5 பேர் சாப்பிடுகிறது கிட்டதட்ட 25 - 30 டொலருக்கு காணும், அதே வெள்ளைகளிடம் போனால் 60 -80 ஆக போகும். அப்ப என்ன மாதிரி இந்த தமிழ் கடைக்காரன் தனது விலைகளை கட்டுப்பாடில் வைத்திருக்க முடியும். கடை வாடை, மற்ற மற்ற செலவுகள் எல்லாருக்கும் ஒன்றுதான் இந்த நிலையில், தனது உற்பத்தி செலவை குரப்பதர்ற்கு, குறைந்த உஊதிய தொழிலார்களை பெருவதது தான் ஒரு வழி. அவர் தனது ஊளியருக்கு எல்லாவித சலுகையும் கொடுத்தால், விலையும் கூடும் அந்த இடத்தில், நாங்கள் இலகுவாக மற்ற மற்ற கடைகளை தேடி செல்வோம். "100 டொலருக்கு இடியப்பம் சாப்பிடுவதை விட சைநீசுக்கு போவம்" என்றுதான் நாங்கள் வெளிக்கிடுவம். நாங்கள் அந்த கிழவன்/ முதியவர் தமிழ் என்று நினைத்தால் தமிழ் ஆக்களின் வியாபாரத்தை வளர்க்க உதவ வேண்டும். அதே நேரத்தில் முதலாளிகளும் பதில் உதவி செய்ய வேண்டும்.( இங்கே கனடாவில் ஒரு நண்பன் சொன்னான் "பசிபிக் மோல்" என்று ஒன்று உள்ளது, அங்கே சைனீஸ் போனால் விசேட சலுகையாம். அது மாதிரி தமிழ் கடைகாரரும் செய்ய வேண்டும்.

மற்றது, விசு சொன்ன கடைசி கருத்து

இப்படி கைக்கசுக்கு வேலை செய்பவர்கள் சில சந்தர்பங்களில் முறையாக வேலை செய்பவர்

  • கருத்துக்கள உறவுகள்

.

எனது மற்றை கருத்து என்ன வென்றால் ...இது ஒரு சமூக்கப் பிரச்சனை,

தமிழ் கடையில் "ரெட் சிநேப்பர்" 499 வாங்கலாம், ஆனால் அதை இங்குள்ள சூப்பர் மார்க்கெட் இல் வாங்க வெளிக்கிட்டால் 699 அல்லது 799 வரும் . அர்ஜுனின் (சிம்ரன்) கதை எழுத்தால் தமிழ் கடையில் 5 பேர் சாப்பிடுகிறது கிட்டதட்ட 25 - 30 டொலருக்கு காணும், அதே வெள்ளைகளிடம் போனால் 60 -80 ஆக போகும். அப்ப என்ன மாதிரி இந்த தமிழ் கடைக்காரன் தனது விலைகளை கட்டுப்பாடில் வைத்திருக்க முடியும். கடை வாடை, மற்ற மற்ற செலவுகள் எல்லாருக்கும் ஒன்றுதான் இந்த நிலையில், தனது உற்பத்தி செலவை குரப்பதர்ற்கு, குறைந்த உஊதிய தொழிலார்களை பெருவதது தான் ஒரு வழி. அவர் தனது ஊளியருக்கு எல்லாவித சலுகையும் கொடுத்தால், விலையும் கூடும் அந்த இடத்தில், நாங்கள் இலகுவாக மற்ற மற்ற கடைகளை தேடி செல்வோம். "100 டொலருக்கு இடியப்பம் சாப்பிடுவதை விட சைநீசுக்கு போவம்" என்றுதான் நாங்கள் வெளிக்கிடுவம். நாங்கள் அந்த கிழவன்/ முதியவர் தமிழ் என்று நினைத்தால் தமிழ் ஆக்களின் வியாபாரத்தை வளர்க்க உதவ வேண்டும்.

நன்றி ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.