Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு!

இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) இன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றுஅறி வித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அறிக்கை வருமாறு:-

நாடு கடந்த தமிழீழ அரசில் ஒரு சிலர் சர்வாதிகாரப் போக்குடன் நடக்கின்றார்கள். இதனால் தமிழ் தேசியத்தின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாடு கடந்த அரசை விட்டு வெளியேற வேண்டிய நிலை தோன்றி உள்ளது.

எனவே நாடு கடந்த அரசின் பிரதிநிதியாக நான் தொடர்ந்து செயற்படலாமா? இல்லையா? என்று சுய தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கின்றமைக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இதனால்தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்கிற விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட்டோம். இத்தேர்தல் மூலம் தமிழ் தேசியத்தின் சார்பாக அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டோம். நான் புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவருக்குள்ளும் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவன்.

ஆனால் நாடு கடந்த அரசை உருவாக்கியவர்களும், அதன் இடைக்கால நிறைவேற்றுனரும் ஆரம்பம் முதலே வேறு திட்டங்களுடன் செயற்பட்டு வந்திருக்கின்றனர். தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களை வேண்டும் என்றே ஓரம் கட்டிச் செயற்படத் தொடங்கியிருந்தனர்.

ஆனால் ஒற்றுமையாகவும் வெளிப்படையாகவும் இயங்குகின்றனர் என்று மக்களுக்குத் தெரிவித்து வந்திருக்கின்றனர். லண்டனில் கடந்த மே மாதம் 17,18,19 திகதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

அதில் நான் உரையாற்றி இருந்தேன். சர்வதேச வலைக்குள்ளேயோ அல்லது இலங்கை அரசின் நிகழ்சி நிரலுக்குள்ளேயோ சென்று விடாது ’தமிழர்களின் ஒரே தலைமை-எமது தேசியத் தலைமை’ என்கிற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு கடந்த அரசு செயற்பட வேண்டும் என்று அவ்வுரையில் கோரி இருந்தேன் ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிறைவேற்றுனராக தெரிவு செய்யப்பட்டிருந்த வி.உருத்திரகுமாரன் சக பிரதிநிதிகளை அரவணைத்து நடக்கத் தவறி விட்டார்.

ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டார். அது மாத்திரமின்றி இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் குமரன் பத்மநாதனின் செயல் திட்டங்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு இடம்பெற்றுள்ளது. ஒரு நாட்டின் அரசமைப்பு என்பது பல விடயங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு நாட்டுக்கான வலுவைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினால் உருவாக்கப்பட்டுள்ள யாப்பு ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் யாப்பைப் போன்றுகூட இல்லை என்பது எனது கருத்தாக உள்ளது. மாறாக தனிப்பட்ட நபர் ஒருவரின் அல்லது ஒரு குழுவின் கரத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்து விட்டது.

எனவே ஒரு நாட்டின் அல்லது தேசியத்தின் விடுதலைக்கான யாப்பாக இதைப் பார்க்க முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வில் ஏராளமான முறைகேடுகளும், பக்கச்சார்பான-தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. என்னைப் போன்று தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களோ அல்லது விலை போனவர்களோ அல்லர்.

புலம் பெயர் தேசத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்றமை மூலம் தமிழ் இனத்தின் விடுதலையை அடைகின்றமையே எமது நோக்கம். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆரம்பிக்கப்பட்டது முதல் அங்கு ஐனநாயகம் என்பது கடைப்பிடிக்கப்படவே இல்லை. பக்க சார்பான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

இரண்டாவது அமர்வு இடம்பெற்றபோது நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியமான பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஜனநாயக வாக்கெடுப்பைத் தடுத்து நிறுத்தினர். தான்தோன்றித்தனமான முறையில் தெரிவுகள் இடம் பெற்றன. இது ஐனநாயகத்திதுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். மக்களின் விருப்பு, வெறுப்புகள் கருத்தில் கொள்ளப்படவே இல்லை. தமிழ் தேசியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலர் நியூயோர்க், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களில் இருந்து இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.

ஆனல் அமர்வில் கலந்து கொள்ள முடியாதபடி நடத்தப்பட்டனர். இதனால் இவர்கள் அமர்வில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தெரிவுகள் இடம்பெற்றன. நான் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

எனினும் அங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கடந்த மே மாதம் இடம்பெற்றிருந்த முதலாவது அமர்விலேயே எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் நாடு கடந்த அரசின் மீது நம்பிக்கையீனம் ஏற்பட்டது என்பதும் உண்மையே.

ஆகவேதான் உறுப்பினர்கள் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மக்கள் சந்திப்புகளில் நான் அதன் பின் கலந்து கொள்ளவில்லை. உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்று அவர்களை பிழையாக வழி நடத்த நான் விரும்பி இருக்கவில்லை. எனக்கும், தேசியத்துக்கும் வாக்களித்த மக்களுக்கு உண்மையான விடயங்களையே முன் வைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

அந்த உண்மையான விடயங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்து விட்டன. நாடு கடந்த தமிழீழ அரசின் நோக்கத்தையும், போக்கையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே நாடு கடந்த அரசில் தொடர்ந்து செயற்படலாமா? இல்லையா? என்பதை நான் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்கருத்தையே தேசியத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் கொண்டுள்ளனர்.

எனவே நாம் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசும், அதன் சர்வாதிகாரப் போக்குடைய ஒரு சிலரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். மக்களின் விருப்பு, வெறுப்புகளையோ- அரசியல் அபிலாஷைகளையோ கைவிட்டு விட்டு, தனிநபர்களின் அல்லது சர்வாதிகாரப் போக்குடைய ஒரு குழுவின் திட்டங்களுடன் இணைந்து செயற்பட என்னால் முடியாது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் தாயகம், தேசியம், கொள்கை என்பவற்றை இறுகப்பற்றிக் கொண்டு தேசியத் தலைமையின் வழியில் எமது மக்களின் விடுதலையை நோக்கிய எனது செயற்பாடு தொடரும்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11541:2010-10-04-08-50-44&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

நுணாவிலானும் தமிழ் சீ என் என் இன் விசிறியாகி விட்டீங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானும் தமிழ் சீ என் என் இன் விசிறியாகி விட்டீங்களோ?

ஒரு தளத்துக்கும் நான் விசிறி இல்லை.பல தளங்களில் சென்று வாசிப்பேன்.தனியாக ஒரு தளம் உண்மை செய்தியை தருகின்றது என சொல்ல முடியாது.வாசகர்கள் செய்தியின் உண்மையா இல்லையா என அறிவதில் வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தளத்துக்கும் நான் விசிறி இல்லை.பல தளங்களில் சென்று வாசிப்பேன்.தனியாக ஒரு தளம் உண்மை செய்தியை தருகின்றது என சொல்ல முடியாது.வாசகர்கள் செய்தியின் உண்மையா இல்லையா என அறிவதில் வல்லவர்கள்.

சரியாகச் சொன்னீர்கள் நுணாவிலான்

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் மத்தியில் புலிகள் ஜனநாயகப் பாதைக்கு வரக்கூடாது என்பதில் கொஞ்சப் பேரும்..

புலிகள் ஜனநாயக வழியை தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கொஞ்சப் பேரும் இருக்கின்றனர்.

அப்போதுதானே அவர்கள் ஜனநாயகத்தின் பெயரால் இன அழிப்புக்கு ஒத்தூதும் அரசியல் நடத்தலாம்...!

நாடு கடந்த அரசு அதன் அரசியல் யாப்பினை தயாரித்த பெருமையோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் வளர்ச்சியை இருப்பை விரும்பாதவர்களும் அதன் ஜனநாயகத் தன்மை தமக்கு சவாலாகிடுமோ என்று பயப்பிடும் எதிரிகளுக்கு வால் பிடிப்போரும் ஜனநாயக விரோதமாக நாடு கடந்த அரசை சித்தரிப்பதுதான் வேடிக்கை.

ஏதோ மற்றவர்கள் எல்லாம் குத்துவெட்டில்லாமல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது போல.

ஆனந்தசங்கரி சரி.. டக்கிளஸ் சரி.. சித்தார்த்தன் சரி.. வரதராஜப் பெருமாள் சரி.. கருணா சரி.. பிள்ளையான் சரி.. சம்பந்தன் சரி... இவர்களின் கட்சிகளுக்குள் நடக்கும் குத்துவெட்டுக்களை விட நாடு கடந்த அரசு பலமாகவே இருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டு அல்லது முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. ஆனால் எதிரியின் நோக்கங்களுக்கு இசைவாக நாடு கடந்த அரசுக்குள் நடக்கும் ஜனநாயகத் தன்மையான சில விடயங்களை குத்துவெட்டுகளாக சித்தரிக்கச் சிலர் முனைகின்றனர். அதற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் ஒரு பகுதியினரும் துணை போகின்றனர்.

நாடு கடந்த அரசு.. தமிழ் மக்கள் அனைவரினதும் அபிலாசைக்குரிய ஒன்று. அதன் மூலம் சாதிக்கக் கூடியவற்றை சாதிக்க முயல வேண்டுமே அன்றி.. எதிரிக்கு எலும்பு பொறுக்குவதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஜனநாயகம் என்று சித்தரிக்க முற்படுபவர்கள் முழு அரசியல் முட்டாள்கள் என்று சொல்லப்பட வேண்டுமே தவிர.. அவர்களை அரசியல் ஜனநாயகவாதிகள் என்று உச்சரிப்பதை மக்கள் கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் ஏகபோக தலைவர், ஒருவரிடத்தில் அதிகாரம் குவிந்து இருக்க கூடாது என்று வாயிறுகிழிய கத்தியவர்கள் உருத்திரகுமாருக்கு அனைத்து அதுகாரங்களையும் கொடுக்க பாடுபடுவது ஏன், ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பது என்றால் எதற்காக மக்கள் பிரதி நிதிகள் தெரியு செய்யபட்டார்கள், அதிகாரஙளை பகிர்ந்து கொடுக்கத்தானே சனநாயக தேர்தல் நடத்தப்பட்டது, அல்லது ஏக போக தலைவரை தெரிவு செய்வதற்காகவா? ஏக போக தலைமையால் தமிழர்கள் அழிந்தது போதாதா? விடுதலை புலிகளின் ஆட்களுக்கு விக்ஷ ஊசி ஏற்றி கொல்ல வேண்டும் என ஒரு, நாடுகடந்த அரசின் ஒரு அவை எம்.பி ஊறுகிறார் என்றால். இவர்கள் யாரை காப்பறுவதற்காக நாடுகடந்த அரசை அமைக்கிறார்கள். நாடுகடந்த அரசின் யாப்பை அங்கிகார வாக்கெடுப்பிலேயே அரைவாசி அவை அங்கத்தவர் ஒட்டுமொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள் என்றால். இது என்ன விதமான சன நாய் அகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் மத்தியில் புலிகள் ஜனநாயகப் பாதைக்கு வரக்கூடாது என்பதில் கொஞ்சப் பேரும்..

புலிகள் ஜனநாயக வழியை தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கொஞ்சப் பேரும் இருக்கின்றனர்.

அப்போதுதானே அவர்கள் ஜனநாயகத்தின் பெயரால் இன அழிப்புக்கு ஒத்தூதும் அரசியல் நடத்தலாம்...!

நாடு கடந்த அரசு அதன் அரசியல் யாப்பினை தயாரித்த பெருமையோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் வளர்ச்சியை இருப்பை விரும்பாதவர்களும் அதன் ஜனநாயகத் தன்மை தமக்கு சவாலாகிடுமோ என்று பயப்பிடும் எதிரிகளுக்கு வால் பிடிப்போரும் ஜனநாயக விரோதமாக நாடு கடந்த அரசை சித்தரிப்பதுதான் வேடிக்கை.

ஏதோ மற்றவர்கள் எல்லாம் குத்துவெட்டில்லாமல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது போல.

ஆனந்தசங்கரி சரி.. டக்கிளஸ் சரி.. சித்தார்த்தன் சரி.. வரதராஜப் பெருமாள் சரி.. கருணா சரி.. பிள்ளையான் சரி.. சம்பந்தன் சரி... இவர்களின் கட்சிகளுக்குள் நடக்கும் குத்துவெட்டுக்களை விட நாடு கடந்த அரசு பலமாகவே இருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டு அல்லது முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. ஆனால் எதிரியின் நோக்கங்களுக்கு இசைவாக நாடு கடந்த அரசுக்குள் நடக்கும் ஜனநாயகத் தன்மையான சில விடயங்களை குத்துவெட்டுகளாக சித்தரிக்கச் சிலர் முனைகின்றனர். அதற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் ஒரு பகுதியினரும் துணை போகின்றனர்.

நாடு கடந்த அரசு.. தமிழ் மக்கள் அனைவரினதும் அபிலாசைக்குரிய ஒன்று. அதன் மூலம் சாதிக்கக் கூடியவற்றை சாதிக்க முயல வேண்டுமே அன்றி.. எதிரிக்கு எலும்பு பொறுக்குவதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஜனநாயகம் என்று சித்தரிக்க முற்படுபவர்கள் முழு அரசியல் முட்டாள்கள் என்று சொல்லப்பட வேண்டுமே தவிர.. அவர்களை அரசியல் ஜனநாயகவாதிகள் என்று உச்சரிப்பதை மக்கள் கைவிட வேண்டும்.

பாராளு மண்றம் எண்டு வரும் போது எல்லாரும் ஒத்த பாட்டுக்கு பாடுவதை ஜனநாயகம் எண்டு யாரும் சொல்வதில்லை... ! ஆட்ச்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்ச்சிகள் எண்று முரண்பாடானவர்கள் தான் பாராளுமண்றின் அங்கத்துவர்கள்... அங்கே கூடுவதே விவாதத்துக்காகத்தான்... அங்கே ஆட்ச்சியில் இருப்பவர்கள் விடும் தவறுகள், குறைகளை சுட்டிக்காட்டவே எதிர் தரப்பு வரிசையில் எப்போதும் ஆக்கள் தேவை...

அப்படிப்பார்க்கையில் ஜனநாயகத்தின் விழுமியங்களை கொண்டு நாடுகடந்த அரசு முழுமை பெற்று உள்ளது...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசின் யாப்பை என்ன உருத்திரகுமாரா எழுதினார்?

அந்த அரசின் உறுப்பினர்கள் பலர் சேர்ந்து தான் எழுதினார்கள்.

முதல் இரு நாட்களும் யாப்பில் ஏதாவத பிழை திருத்தம் செய்ய வேண்டுமா என்று கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களையும் கேட்டு சிலவற்றில் திருத்தங்களும் மேற்கொண்டு

உதவி பிரதமர்(3)

அமைச்சர்கள் (7)

எப்படி தெரிவாக வேண்டும் என்று உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது இப்படியிருக்க ஏன் எதற்கு எடுத்தாலும் உருத்திரகுமார் எப்படி இப்படி என்று ஆதாரமில்லாத குற்றச் சாட்டுக்களை வைத்து மக்களைக் குழப்பிறார்களோ தெரியாது.

இப்போ கட்டுரை எழுதிறவர்கள் யாரைப் பார்த்தாலும் எல்லாவற்றிலம் கேபீ கேபீ பீப்பீ பீப்பீ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய மாதிரி அவர்களது பெயர்களைப் போட்டு தங்களது ஒன்றுக்குமே உதவாத சரக்குகளை விற்க முனைகிறார்கள்.

உதவி பிரதமர்களையும், அமைச்சர்களையும் தெரிவு செய்பவர் ஒருவராக இருப்பது ஜனநாயக பண்பா? உறுப்பினர்கள் அனைவரும் தெரிவு செய்வது ஜனநாயக பண்பா? எது அதிகூடிய ஜனநாயகம், எது பாதுகாப்பானது? கொஞ்சம் சிந்திக்க வேண்டும். :rolleyes:

கடந்த சனி இரவு ரொறோன்ரோவில் நடந்த நா த அரசின்

கூட்டத்தை சிலர் குழப்பமுயன்றனர் என தகவல்

ஆனால் காவல் துறை அழைக்கப்பட்டதால்

குழப்பவந்த கோஷ்ட்டி கப்சிப்பாம்

அன்பின் ஜெயானந்த மூர்த்தி உண்மையிலேயே அங்கு ( நா.க. அரசு) தவறுகள் இடம்பெறுவதாகக்கருதினால், உள்ளிருந்தபடியே அதை மக்களிடம் கொண்டுசெல்வதன்மூலம், ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சியாகவும் செயற்படலாம்.

ஒரு ஆரோக்கியமான பாராளுமன்றுக்கு எதிர்க்கட்சி இன்றி அமையாதது.

நாடு கடந்த அரசிற்கு ஆகக்கூடிய ஆயுள் 5 வருடங்கள்தான்.

தளத்தில் இருப்பிலாமல் எதுவுமே சாத்தியமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசிற்கு ஆகக்கூடிய ஆயுள் 5 வருடங்கள்தான்.

தளத்தில் இருப்பிலாமல் எதுவுமே சாத்தியமில்லை.

அர்ஜுன்,நாடு கடந்த அரசு உருவாக்கப்பட்டதே தாயகத்தில் ஜனநாயக ரீதியில் இயங்க முடியாது என்பதால் தானே.ஆனால் கட்டாயம் தொடர்புகளாவது இருக்கவேண்டும்.

Edited by nunavilan

தமிழ் சீ என் செய்திகளை யாழ் களத்தில் இணைக்கும் உறவுகளுக்கு எதிராக கருத்து எழுதிவரும் இவரது கருத்துக்கள் இவருடைய தனிப்பட்ட கருத்தா?

யாழ்கள நிர்வாகம் இதை கருத்தில் கொன்டு இதற்கு தகுந்த ஒரு பதிலை முன் வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='eelapirean' date='05 October 2010 - 07:47 PM' timestamp='1286300837' post='613331']

சித்தன் உருத்திரகுமார் ஒன்றும் வீட்டில் இருந்து எழுதிக் கொண்டு வந்து ஒன்றையும் திணிக்கவில்லை.

உறுப்பினர்களாலேயே யாப்பு எழுதப்பட்டது.

கூடிய உறுப்பினர்களாலேயே நிறைவேற்றப்பட்டது.

இங்கே தான் சிக்கல்

மற்றும் படி நீங்கள் சொல்வதை ஏற்றக் கொள்கிறேன்.

ஜெயானந்தமூர்த்தி போன்றவர்களுக்கு யாப்பு முன்னமே கிடைத்திருந்தும் போய் அதை விவாதித்து அவர்களின் வாக்கை போட்டு தோற்கடித்திருக்கலாம்.

பதிலுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் நான் சொல்வதை நீங்கள் சரியாக புரியவில்லை.

மீண்டும் சொல்கிறேன் நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் நடந்த கூட்டத்தில் பங்கு கொண்டு அதன் நன்மை தீமைகளை விவாதித்து அந்த தீர்மானத்தைத் தோற்கடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு பத'திரிகைகளிலும் இணையங்களிலும் வந்து சேறு பூசுவது ஏன் என்பது தான் எனது ஆதங்கம்.

முதாலவது பிரச்சினை 137 அவை உறுப்பினரையும் தெரிவு செய்யாமல், 84பேருடன் யாப்பை நிரைவேற்ற முற்பட்டது.

இரண்டாவது பிரச்சினை ரத்து செய்யபட்ட தேர்தல் முடிவுகளை ஒன்ரறை மாதத்தில் நடத்தி முடித்து இருக்க வேண்டும்,

மூன்றாவது பிரச்சினை அவைக்கு வந்தவரையே கத்திகாட்டி மிரட்டி இருக்கிறர்கள், குறிப்பிட்ட சிலரை பார்த்து இவர்கள் புலிகளின் ஆட்கள் இவர்களை விக்ஷ ஊசி ஏற்றி கொல்ல வேண்டும் என்று, ஒரு நாடுகடந்த அரசின் அங்கத்தவர் கூறுகிறார் என்றால் இவர்கள் யாரின் ஆட்கள். அங்கத்தவரின் பாதுகாப்புதான் என்ன? யாருக்காக போராட போகிறர்கள்?

போன்ற கேள்விகள் இவற்றைபார்க்கும் ஒரு சாமானியனுக்கு எழுவது இயற்கைதானே.

Edited by சித்தன்

ஒருபேச்சுக்கு, கேபிக்கு 2006 இருந்து இலங்கை புலனாய்வு துறையுடனும், இந்திய புலநாய்வு துறையுடனும் தொடர்பு இருந்தது என நிரூபிக்க பட்டால், உருத்திர குமாரை நியமிச்சது யார்? புலனாய்வு துறையின் தொடர்பில் இருப்பவர் தனக்கு சாதகமாக இயங்க கூடியவரை நியமிப்பது இயல்புதானே,

."சிந்திக்க தெரிந்த மிருகத்துக்கு பேர்தான் மனிதன்" நாம் மனிதர்களாக இருப்போம்

உதைத்தான் கேபியரும் சொல்கிறார் ... தன்னை தலை முள்ளிவாய்க்காலில் இருந்து கொண்டு நியமிச்சது எண்டு!! ... அப்ப தலையும், உந்த புலனாய்வுத்துறைகளுடன் தொடர்போ?????

சும்மா, குழப்பி அடிக்க வேண்டும், வதந்திகளை கிளப்ப வேண்டும் .... என்றொரு கூட்டம், கையில் அகப்பட்ட பணம்/பதவிகளுக்காக தலை கீழாக நிற்கிறது!! அதன் வாலுகளை கொண்டு இப்படியான இணையங்களில் குப்பையை தொடர்ந்து கொட்டுகிறார்கள்!!!

இன்று தமிழன் ஏதாவது, அங்குள்ள மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உரிமைகள் கிடைக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் ... புலத்தில் ஏதாவது செய்தால் சரி ஒழிய, அங்கு தாயகத்தில் ஒன்றுமே செய்ய/கதைக்க/கேட்க முடியாத நிலை!!! அப்படி புலத்தில் ஏதாவதை செய்வோமென்று யாரும் வெளிக்கிட்டாலும், இவ்வளவு காலமும் ஏகபோக அரசியல் நடத்திய புலத்து கூட்டங்கள் விடப்போவதில்லை!!!

இன்று புலத்தில் நீதி கேட்டு நடைபெறும் எம் அரசியல்களை. சிங்களவனோ, ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாணிக்கங்களோ குழப்ப வேண்டிய அவசியமில்லை! அதனை இந்த புலத்து பூசாரிகளே செவ்வனே செய்வார்கள்!!!!

Edited by Nellaiyan

இப்ப மக்களின் முன் உள்ள கேள்வியே இதுதான்,

1,தலைமைதான் உன்மையிலேயே கேபியை நியமிச்சதா?

2,அல்லது தலைமை கேபியை நியமிக்கும் போது கேபிக்கும் இலங்கை இந்திய புலானாய்வு துறைக்கும் இருந்த தொடர்பு தலைமைக்கு தெரியவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.