Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம்

Featured Replies

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம்

சனி, 9 அக்டோபர் 2010( 08:29 IST )

அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சந்திரனை அனுமதித்துள்ளனர்.

அங்கு எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதத்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.சந்திரன் உடல் செ‌ன்னை கொண்டுவர ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் அவரது ‌வீ‌ட்டி‌ல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக வை‌க்க‌ப்படு‌கிறது.

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌‌பினராக இரு‌ந்த எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் 100‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்‌க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர்.

நன்றி

வெப்டுனியா

  • கருத்துக்கள உறவுகள்

.

எஸ். எஸ். சந்திரன் அவர்களின் மறைவால் துயருறும்....... அவரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

http://www.youtube.com/watch?v=afItRK954OA

இவர் ஒரு மக்களவை உறுப்பினாராக இருந்தும்.... ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்ததை கேட்க முடியவில்லை எனும் போது.... துக்கம் தொண்டையை அடைக்கின்றது.

.

இவர் முன்னர் கொழும்பில் கிங்ஸ்லி தியேட்டரின் பின்னால் உள்ள சேரிப் பகுதியில் வாழ்ந்தவர். பின் தமிழகம் சென்றவர். இந்திய வம்சாவளி ஈழத் தமிழர் இவர் என்று பலருக்கு தெரியாது. மிக ஆபாசமான அருவருக்கத்தக்க நகைச்சுவைக்கு சொந்தக்காரர். செயலலிதாவுக்கு ஆதரவான கூட்டங்களில் படு கேவலமாக மற்றவர்கள் பற்றியும் புலிகளின் ஆதரவாளர்கள் பற்றியும் விமர்சிப்பவர்

ஒருவர் மரணிப்பதால் புனிதமாவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாரும் அவரை புனிதராக்கவில்லை.

நான் எழுதிய எழுத்தின் உள் குத்துக்களை நீங்களே..... புரியாவிட்டால் என்ன செய்வது?

இங்கு யாரும் அவரை புனிதராக்கவில்லை.

நான் எழுதிய எழுத்தின் உள் குத்துக்களை நீங்களே..... புரியாவிட்டால் என்ன செய்வது?

உங்களுக்கு இந்தப் பதில் எழுதவில்லை தமிழ் சிறி.... இவர் ஈழத்தமிழராக இருந்தும் எம்மை மிக தாழ்த்தி பிரச்சாரம் செய்தவர் என்ற அடிப்படையில் எழுதினேன். வழக்கமாக ஒருவர் மரணித்தால் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவரை புனிதர் ஆக்கிவிடுவினம்...ஆனால் எஸ்.எஸ்.சந்திரன் அதற்குரியவர் அல்ல

Edited by நிழலி

ஆழ்ந்த அனுதாபங்கள். இவருக்கு பெயர் எஸ்.எஸ்.சந்திரன் என்று இன்றுதான் தெரியும். நான் எஸ்.எஸ்.சந்திரன் என்று வேறொருவரை நினைத்திருந்தேன். நிறைய நகைச்சுவைகள் பார்த்தேன். வில்லன் பாத்திரத்திலும் பல தடவைகள் நடித்தார் என்று நினைக்கின்றேன்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இந்தப் பதில் எழுதவில்லை தமிழ் சிறி.... இவர் ஈழத்தமிழராக இருந்தும் எம்மை மிக தாழ்த்தி பிரச்சாரம் செய்தவர் என்ற அடிப்படையில் எழுதினேன்

அது தானே.... பார்த்தேன் நிழலி.

ஒரு அரசியல் நாகரீகமற்றவர்.

ஜெயா இவரை கருணாவை திட்டுவற்கே வளர்த்த கிடாய். என்று கதை.

நிழலி, படங்களில் எவ்வாறான நகைச்சுவைகளில் நடிப்பது என்பதை நடிகர்கள் தேர்வு செய்வது இல்லைதானே. அவருக்கு சூழ்நிலை அப்படி அமைந்திருக்கலாம். அவரது முகத்தோற்றம், நடிக்கும்விதம் சிலவேளைகளில் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். சில நடிகர்கள் சிலமாதிரியான கட்டங்களில், நகைச்சுவைகளில் நடிக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கலாம். சிலர் தொழிலாக கருதி அவற்றை செய்யலாம். எப்படியானாலும் எஸ்.எஸ்.சந்திரன் ஓர் கலைஞர்தானே? எஸ்.எஸ்.சந்திரன் அரசியலில் ஈடுபட்டவர் என்று முன்பு செய்திகளில் கேள்விப்பட்டேன். அவர்தான் இவர் என்று இன்று அறியும்போது ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். இவருக்கு பெயர் எஸ்.எஸ்.சந்திரன் என்று இன்றுதான் தெரியும். நான் எஸ்.எஸ்.சந்திரன் என்று வேறொருவரை நினைத்திருந்தேன். நிறைய நகைச்சுவைகள் பார்த்தேன். வில்லன் பாத்திரத்திலும் பல தடவைகள் நடித்தார் என்று நினைக்கின்றேன்.

இவரின் நகைச்சுவையை இன்னும் நான் பார்க்கவில்லை. அது எனது தூரசிஷ்டம். மிக கவலையாக உள்ளது.

இவரின் நகைச்சுவையை இன்னும் நான் பார்க்கவில்லை. அது எனது தூரசிஷ்டம். மிக கவலையாக உள்ளது.

அதாவது அவரது நகைச்சுவை நகைச்சுவை இல்லை என்று சொல்லுறீங்கள்? :o

நிழலி, படங்களில் எவ்வாறான நகைச்சுவைகளில் நடிப்பது என்பதை நடிகர்கள் தேர்வு செய்வது இல்லைதானே. அவருக்கு சூழ்நிலை அப்படி அமைந்திருக்கலாம். அவரது முகத்தோற்றம், நடிக்கும்விதம் சிலவேளைகளில் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். சில நடிகர்கள் சிலமாதிரியான கட்டங்களில், நகைச்சுவைகளில் நடிக்கமாட்டோம் என்று அடம்பிடிக்கலாம். சிலர் தொழிலாக கருதி அவற்றை செய்யலாம். எப்படியானாலும் எஸ்.எஸ்.சந்திரன் ஓர் கலைஞர்தானே? எஸ்.எஸ்.சந்திரன் அரசியலில் ஈடுபட்டவர் என்று முன்பு செய்திகளில் கேள்விப்பட்டேன். அவர்தான் இவர் என்று இன்று அறியும்போது ஆச்சரியமாக உள்ளது.

முரளி,

இவரின் பல பேட்டிகள், சூடான விவாதங்கள் என்று விகடனிலும், குமுதத்திலும் பல வந்துள்ளன. அவற்றை வாசித்தன் அடிப்படையிலும், அவரின் பல சினிமாக் காட்சிகளின் அடிப்படையிலும் தான் சொன்னேன். மற்றது, டைரக்ரர் சொன்னார் நான் நடித்தேன் என்று ஒரு கலைஞன், அதுவும் மற்றவர்களை அவர்தம் துயரில் இருந்து தற்காலிகமாகவேனும் விடைபெற உதவும் நகைச்சுவை நடிகர் சொல்வதை ஏற்க முடியவில்லை. ஒரு கலைஞன் என்பவர் மற்றவர் ஆட்டுவிக்கும் பொம்மை அல்ல. இதே இவரை செயலலிதாவுக்கு எதிராக ஒரு கருத்தை சினிமாக் காட்சியில் சொல்லுங்கள் என்றால் கடைசி வரைக்கும் மாட்டன் என்று சொல்லியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அவரது நகைச்சுவை நகைச்சுவை இல்லை என்று சொல்லுறீங்கள்? :rolleyes:

கொல்லுறீங்களே.... கரும்பு, அவரின் மரணத்தின் பின் தான்...... நகைச்சுவையாக இருக்கின்றது.

முரளி,

இவரின் பல பேட்டிகள், சூடான விவாதங்கள் என்று விகடனிலும், குமுதத்திலும் பல வந்துள்ளன. அவற்றை வாசித்தன் அடிப்படையிலும், அவரின் பல சினிமாக் காட்சிகளின் அடிப்படையிலும் தான் சொன்னேன். மற்றது, டைரக்ரர் சொன்னார் நான் நடித்தேன் என்று ஒரு கலைஞன், அதுவும் மற்றவர்களை அவர்தம் துயரில் இருந்து தற்காலிகமாகவேனும் விடைபெற உதவும் நகைச்சுவை நடிகர் சொல்வதை ஏற்க முடியவில்லை. ஒரு கலைஞன் என்பவர் மற்றவர் ஆட்டுவிக்கும் பொம்மை அல்ல. இதே இவரை செயலலிதாவுக்கு எதிராக ஒரு கருத்தை சினிமாக் காட்சியில் சொல்லுங்கள் என்றால் கடைசி வரைக்கும் மாட்டன் என்று சொல்லியிருப்பார்.

சரியாய் சொன்னீங்கள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பின், சிரிக்க வைத்த..... அமரர் எஸ். எஸ். சந்திரன் அவர்களுக்கு........

களத்தின் சார்பில் பட்டுப் பொன்னாடை போர்த்தப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒருகாலத்தில் தானைத்தலைவரின் தொண்டன்..! அப்போது அம்மாவை பலவிதமாக திட்டினார். பிறகு ஐயாவின் குடும்ப அரசியலைத் தாங்கமுடியாமல் அம்மா பக்கம் தாவிவிட்டார்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முன்னர் கொழும்பில் கிங்ஸ்லி தியேட்டரின் பின்னால் உள்ள சேரிப் பகுதியில் வாழ்ந்தவர். பின் தமிழகம் சென்றவர். இந்திய வம்சாவளி ஈழத் தமிழர் இவர் என்று பலருக்கு தெரியாது. மிக ஆபாசமான அருவருக்கத்தக்க நகைச்சுவைக்கு சொந்தக்காரர். செயலலிதாவுக்கு ஆதரவான கூட்டங்களில் படு கேவலமாக மற்றவர்கள் பற்றியும் புலிகளின் ஆதரவாளர்கள் பற்றியும் விமர்சிப்பவர்

ஒருவர் மரணிப்பதால் புனிதமாவதில்லை

ஆமென்

ஒருவர் உயிருடன் இருக்கும்போது விமர்சிக்கலாம், அவரிடம் இருந்து அவர் சார்பான கருத்தை எதிர்பாக்கலாம்.!

இப்போ அவரை திட்டி என்ன பலன்!? <_<

எந்த மலைவிழுங்கியானாலும் இறந்தபின் அவரை குணக்குன்று என்றுதான் சொல்லவேணுமாம்..

இந்த ஆள் கோவை சரளாவுடன் சேர்ந்து இனிமேல் இல்லாத மூன்றாந்தர பகிடிகள் விட்டுவந்தவர்.தமிழ் நாடு ? கருத்து சொல்ல எனக்கு விருப்பமில்லை.இங்கும் சிலர் இருக்கின்றார்கள்.

எந்த மலைவிழுங்கியானாலும் இறந்தபின் அவரை குணக்குன்று என்றுதான் சொல்லவேணுமாம்..

இந்த ஆள் கோவை சரளாவுடன் சேர்ந்து இனிமேல் இல்லாத மூன்றாந்தர பகிடிகள் விட்டுவந்தவர்.தமிழ் நாடு ? கருத்து சொல்ல எனக்கு விருப்பமில்லை.இங்கும் சிலர் இருக்கின்றார்கள்.

அவர் முன்பு கோவை சரளாவுடன் சேர்ந்து இனிமேல் இல்லாத மூன்றாந்தர பகிடிகள் செய்யும்போது...

நீங்கள் யாழிகளத்தில் இதைபற்றி விமர்சித்து இருக்கலாம்...

அவர் இறந்தபின் ... இப்போ விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பதுக்கு சமம்.!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முன்பு கோவை சரளாவுடன் சேர்ந்து இனிமேல் இல்லாத மூன்றாந்தர பகிடிகள் செய்யும்போது...

நீங்கள் யாழிகளத்தில் இதைபற்றி விமர்சித்து இருக்கலாம்...

அவர் இறந்தபின் ... இப்போ விமர்சிப்பது செத்த பாம்பை அடிப்பதுக்கு சமம்.!!!

அவர் செத்த பாம்பை அடிக்கிறதை விட்டு விட்டு வேற வேலை பார்ப்பவராககின் அவரின் அனுபவத்துக்கும் வயதுக்கும் அவரால் எம்மினம் எவளவோ பயன் பெறும்.யோசிப்பரா <_<

அவர் இறந்திருக்காவிட்டால் யாழில் அவரைப் பற்றிய திரியேதும் வந்திருக்குமோ என்பது சந்தேகமே.

செத்த பாம்பு உயிர்த்த பாம்பு இதுவொன்றும் எனக்கு தெரியாது.

நாளைக்கு எங்கட கலைஞர் மு.க மண்டையை போட்டால் செத்தபாம்பென்றுவிடவா போகின்றீர்கள்.

தம்பி சஜீவன் இன்றும் சேர் பொன் இராமனாதன்,அருணாசலம்,ஜீ.ஜீ,தந்தை செல்வா,அமிர் பற்றியெல்லாம் விட்ட சரி,பிழைகளை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கின்றோம்.இவர்கள் தனி நபர்களல்ல.ஒரு இனத்தின் தலைவிதியே இவர்களி நம்பி இருந்தது.அது மாதிரித்தான் புலிகளும். உங்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடந்த சரி,பிழைகளை ஆராயமல் விடமுடியாது.

இது தான் தமிழனின் குணம் யாரையும் பற்றி தான் எவ்வளவும் வம்பு கதைப்பான். தனைப் பற்றி யாரும் கதைக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவரை விமர்சிக்கக்கூடாது என்பதற்குக் காரணம் அவர் மீண்டும் எழுந்துவந்து தன் தரப்பு நியாயங்களை வைக்க முடியாது என்பதால்தான். அந்தவகையில் இறப்புக்கு உரிய மரியாதையை வழங்கி அவர்தம் கொள்கைகளை / கருத்துக்களை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.எஸ்.சந்திரன் - அரசியலால் அலைக்கழிக்கப்பட்ட கலைஞன்..!

எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கிடைக்காத பெரும்பேறு மரணத்தின் மூலம் கிடைத்திருக்கிறது எஸ்.எஸ்.சந்திரன் என்னும் தொண்டனுக்கு. அதே சமயத்தில் எந்தவொரு கலைஞனுக்கும் கிடைக்கக் கூடாத அவமரியாதை, அதே மரணத்தின் மூலம் எஸ்.எஸ்.சந்திரனுக்குக் கிடைத்திருப்பது அவரது துரதிருஷ்டம்தான்..!

கட்சிக்காகப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முழங்கிவிட்டு, அறைக்கு வந்து படுத்தவரை கொள்ளை கொண்டு போனது சாவு.. சாவோடு ஊர் திரும்பியவரை தனது மகவு என்றொரு மரியாதையோடு அனுப்பி வைக்கத் தவறிவிட்டது கலையுலகம்..!

இத்தனைக்கும் நான்காண்டு காலம் தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொருளாளராகப் பதவி வகித்தவர் எஸ்.எஸ்.சந்திரன். நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு சிறிய மாலைகூட அவருக்கு அணிவிக்கப்படாதது நிச்சயம் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கு மிகப் பெரும் சோகமே..!

பொதுவாகவே கலையுலகில் மிகப் பிரபலமானவர்கள் இறந்தால் அந்தத் துறையினர் அதிக அளவில் கூடுவது வாடிக்கை. அதில் சந்திரனுக்கு மட்டும் அவர்களது சக கலைஞர்களே விதிவிலக்கை அளித்துள்ளார்கள் அ.தி.மு.க. சார்பு நடிகர்களும், சத்யராஜ், கவுண்டமணி, விவேக் தவிர மற்ற பெரிய நடிகர்களும், நகைச்சுவை நடிகர்களும் திரும்பிப் பார்க்காதது அவருக்குக் கிடைத்தத் துர்பாக்கியம்தான்.

இத்தனைக்கும் காரணம் அவரது அரசியல் பேச்சுக்கள்தான். எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு உண்மையானவராக இருப்பார் சந்திரன். இது அவரது குணம். அதுவே அவருக்கு எமனாகவும் ஆகிவிட்டது.

13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்று மாலையே சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் நடைபெற்ற நன்றியறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞருக்கு முன்பாக கடைசி நபராகப் பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.

“13 வருஷம் கழிச்சு ஆட்சிக் கட்டில்ல உக்காந்திருக்கோம். இனிமே இங்க எல்லாமே நாமதான்.. நமக்குத்தான் தொண்டர்களே.. அருமை உடன்பிறப்புக்களே நாம் வாழப் போவது இனிமேல்தான்.. நாம பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து போச்சு.. இனி நமக்கு நல்ல வாழ்க்கைதான்.. வேட்டைதான். விட்ராதீங்க” என்று பேசிவிட்டு மொத்தக் கை தட்டலையும் அள்ளிக் கொண்டு போனார்.

பின்னாலேயே பேச வந்த கலைஞர் எடுத்த எடுப்பிலேயே எஸ்.எஸ்.சந்திரனைக் கண்டித்து, “நாம் இதற்காக ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை. மக்களும், தொண்டர்களும் நமக்கு ஒன்றுதான்.. சந்திரன் அந்த நினைப்பை தன் மனதில் இருந்து நீக்க வேண்டும்” என்று அட்வைஸ் செய்தார்.

இப்படித்தான் தன் மனதில் பட்டதை பளி்சசென்று சொன்னாலும் அவருக்குத் தேவை தன் பேச்சில் நகைச்சுவையும், கை தட்டலும்தான். இதனாலேயே அ.தி.மு.க.வுக்கு வந்த பின்பு, தீப்பொறி ஆறுமுகத்தின் இடத்தைப் பிடித்து சில மாதங்களில் அவரையே மிஞ்சிவிட்டார்.

“ராதிகாவை இப்ப சரத்குமார் வைச்சிருக்கார். நாளைக்கு யார் வேண்ணாலும் வைச்சுக்குவாங்க. ஆனாலும் நான்கூட ராதிகாவுக்கு மாமாதான்..” என்று போகிற போக்கில் அவர் பேசிய பேச்சால்தான், நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் வரவில்லை.

“ராதாரவியை எம்.எல்.ஏ. ஆக்கினது அம்மாதான். ராதாரவிக்கு இதய ஆபரேஷன் நடந்தப்போ இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செஞ்சது அம்மாதான். இப்போ ராதாரவிக்கு எம்.எல்.ஏ. பென்ஷனும் வருது. அதைச் சாப்பிடறாருல்ல.. ஏன் அம்மாவே வேணாம்ன்னா அந்தப் பென்ஷன் மட்டும் எதுக்காம்?” என்று பத்திரிகைகளிடம் கேட்டதற்குப் பலனாக ராதாரவியும் வரவில்லை.

ம.தி.மு.க.வுக்கு எஸ்.எஸ்.சந்திரன் சென்றபோது கருணாநிதியையும், அவர் குடும்பத்தையும் சாட ஆரம்பித்தவர் ஒரு கட்டத்தில் கருணாநிதியை ஒருமையிலேயே அழைக்க ஆரம்பித்தார். இதனை ஒரு பொதுக்கூட்டத்தில் வைகோ மேடையிலேயே நேருக்கு நேராகக் கண்டித்தார்.

அடுத்தப் பொதுக்கூட்டத்தில் வைகோ முன்பாகவே பேச வந்த சந்திரன், “இந்த ஊர் நல்லாயிருக்கு.. ஊர் ஜனங்களும் நல்லாயிருக்காங்க.. மேடை பிரமாதமா போட்டிருக்காங்க.. கலர் சோடா எனக்கு மட்டும் 2 வாங்கிக் கொடுத்தாங்க. வட்டமும், மாவட்டமும் நல்ல சாப்பாடு வாங்கித் தந்தாங்க.. சீரியல் லைட்டெல்லாம் நல்லாவே போட்டிருக்காங்க.. நம்ம தலைவர் வைகோ உச்சி வகிடெடுத்து கச்சிதமா தலையைச் சீவிட்டு வந்திருக்காரு.. அவரை மாதிரியே நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க. எல்லோரும் நல்லாயிருங்க.. எதுவுமே பேசக் கூடாதுன்னா இப்படித்தான் பேசணும்.. நன்றி..” என்று சொல்லிவிட்டுப் போய் அமர.. இந்தக் கூத்தை அனைத்துப் பத்திரிகைகளும் 'ஏழு காலம்' அளவுக்கு போட்டுச் சிரித்தன.

சந்திரன், ம.தி.மு.க.வில் இருந்தபோது அவ்வப்போது தி.மு.க.வை சீண்டுவதைப் போல் “அங்கே என் மாப்ளை ராதாரவியை விட்டு வைச்சிருக்கேன். எதுக்குத் தெரியுமா? உளவு சொல்லத்தான். டெய்லி ராத்திரி பத்து மணிக்கு மேல நானும் அவனும்தான் புருஷன், பொண்டாட்டி மாதிரி மணிக்கணக்கா பேசுறோம்.. தெரியும்ல்ல..” என்று பேசித் தொலைக்க இதனாலேயே ராதாரவிக்கு பல்வேறு தொல்லைகள்..

அதுவரையிலும், செயற்குழுக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று கொண்டிருந்த ராதாரவிக்கு அதன் பின்பு அழைப்பு வராமல் போக.. தி.மு.க.வில் இருந்து ஒதுங்க வேண்டிய கட்டாயம் வந்தது.

தி.மு.க.வில் இருக்கின்றவரையில் “மாமா.. மாமா..” என்று சந்திரனை செல்லமாக அழைத்து வந்த சந்திரசேகர், சந்திரன் கட்சி மாறி, தி.மு.க.வையும், கலைஞரையும் சந்திரன் தாக்கத் துவங்கியவுடன், “அவனை நேர்ல பார்த்தா அடிச்சிருவேன் தம்பி.. அவனையும் என்னையும் ஒண்ணா கூப்பிடாதீங்க.. விட்ருங்க” என்று தேர்தல் நேரத்து விவாதங்களுக்கு அழைக்கப் போனவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஏதோ ஒரு மாநாட்டின் முடிவுக்குப் பின்புதான் சந்திரன் தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க.வுக்கு தாவினார் என்பது எனது நினைவு. அப்போது அந்த மாநாட்டில் சந்திரன் பேச வேண்டிய குறிப்புகளுக்காக 'முரசொலி'யின் கட்டுரைச் சேமிப்புகளை கலைஞரே, சந்திரனை அழைத்துக் கொடுத்திருந்தார்.

“அவர் போனா போகட்டும். அந்தக் கட்டுரை புத்தகத்தை மட்டும் வாங்கிட்டு வந்திருங்கப்பா...” என்று சந்திரசேகரிடமும், தியாகுவிடமும் கலைஞரே சொல்லியனுப்ப.. சந்திரசேகர் தான் வர முடியாது என்று சொல்லிவிட்டதால் தியாகுதான் மிகப் பிரயத்தனப்பட்டு சந்திரனிடம் இருந்து அதனை வாங்கி வந்து கலைஞரிடம் கொடுத்ததாக பின்னாட்களில் பேட்டியளித்திருந்தார்.

“சிவகங்கைச் சிங்கமே..! நீ இருக்க வேண்டிய இடம் என் பக்கத்தில்தான். வந்து விடு..!” என்று மேடைப் பேச்சைப் போலவே போனிலும் பேசி வைகோ, சந்திரசேகருக்கு அழைப்பு விடுத்தும் அவர் அங்கு செல்ல மறுத்திருந்தார். அதனை சந்திரன் தனக்கே உரித்தான பாணியில் ஆடு, மாடு, கோழி பண்ணைகளில் அவைகளைப் பார்த்து பண்ணை உரிமையாளன் எப்படிப் பேசுவான் என்பதைப் போல் மேடைகளில் பேசித் தொலைக்க அன்றோடு சந்திரசேகரின் சகவாசமும் முடிந்தது.

தி.மு.க.வின் சார்பாக அப்போது இருந்த பிரபலங்களில் விஜயகாந்த், சந்திரசேகர், தியாகு, இராம.நாராயணன், என்று அனைவரையும் சமீப காலங்களில் வறுத்தெடுத்துவிட்டார் எஸ்.எஸ்.சந்திரன்.

விஜயகாந்த் பற்றி மிகச் சமீபத்தில் அவர் பேசிய பேச்சு மிகக் கலவரமானது.

“குஷ்பு என்ன நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கஸ்தூரிபாயா? குஷ்பு எப்படின்னு எம் மாப்ள கார்த்திக்கிட்ட கேளு. இல்லன்னா மாப்ள விஜயகாந்த்கிட்ட கேளு. நெறயச் சொல்லுவான். நான்கூட விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'தமிழ்நாட்டுல அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான் பெரிய கட்சி. கூட்டணிக்கு வாங்கன்னு ரெண்டு கட்சியும் கூப்பிட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. நீ ஒரு துக்கடா கட்சிய வச்சிக்கிட்டு என்கிட்ட வா கூட்டணிக்குன்னு கூப்பிடறியே... உனக்கே இது ஓவராத் தெரியலியா?'ன்னு கேட்டேன். அதுக்கு விஜயகாந்த் மாப்ளே, 'ஜாதகத்துல நான் முதலமைச்சராவேன்னு இருக்கு. அத யாரும் தடுக்க முடியாது. அதான், என் தலைமைல கூட்டணின்னு துணிஞ்சு சொல்றேன்'னு வாய் கூசாம சொல்லுறான். அட.. ஜாதகத்த நம்புற மூதேவி. நீ பாட்டுக்கு ஜாதகப் பைய கக்கத்துல வச்சிக்கிட்டு திரிய வேண்டியதுதானே. அரசியலுக்கு ஏன் வந்து மக்களக் குழப்புற..? பண்ருட்டி ராமச்சந்திரன் உன்ன இம்சை பண்றான்னு நல்லாத் தெரியுது. என் ஜாதகப்படி இந்நேரம் நான் பிரதமரா இருக்கணும். நானே கம்முன்னு இருக்கேன். நீ ஏன் துடிக்குற...?''

அ.தி.மு.க.வின் சாதாரணத் தொண்டனால்கூட இப்படி பேசிவிட முடியாது. என்ன தைரியம்..? ஆனாலும் விஜயகாந்த் நேரில் வந்து அஞ்சலியைத் தெரிவித்துவிட்டுத்தான் போனார்.

இதுதான் அவரது குணம் என்கிறார்கள் திரையுலகில். அவருக்கு யாராவது உதவி செய்துவிட்டால் உடனேயே அவர்களை அங்கேயே இயேசுநாதர் ரேஞ்ச்சுக்கு உயர்த்திப் பேசிவிடுவார். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்.

தான் மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேஷனுக்காக இருந்தபோது தனக்கு ரத்தம் கொடுத்த ஒரு இளைஞரை, “இனி்மே.. என்னோட பையனுகள்ல இவனும் ஒருத்தன்யா.. எனக்கு உசிர் கொடு்ததவனே இவன்தாம்பா..” என்று பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் வைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

ம.தி.மு.க.வில் அவருடைய 'கனமான' பேச்சுக்கு அடிக்கடி தடை போடுவதும், பேச்சுச் சுதந்திரம் தராமல் வைத்திருந்ததும்தான் அவர் அங்கிருந்து விலகிச் செல்ல காரணமாக இருந்தது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தவுடன், ஜெயலலிதாவுடனான தனது முதல் சந்திப்பிலேயே, 'அம்மா'வின் தலையில் தென்பட்டிருந்த சில வெள்ளி முடிகிளைப் பார்த்துவிட்டு, “டை அடிக்க வேண்டியதானம்மா.. பளிச்சுன்னு வெளில வாங்கம்மா. அப்போத்தான் மங்களகரமா இருக்கும்..” என்று தைரியமாகச் சொன்ன ஒரே மனிதன் சந்திரன் மாமாதான்.

இதையே ஒரு முறை ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார். “எங்கம்மா மட்டும் தலைக்கு டை அடிச்சு, மேக்கப் போட்டுட்டு வந்து தேர்தல் களத்துல குதிக்கட்டும்.. தமிழ்நாட்டுல அத்தனை பேரும் அம்மாவைப் பார்த்து அசந்து போய் நமக்கு ஓட்டை நச்.. நச்சுன்னு குத்திருவாங்க..” என்றும் சொன்னவர் சந்திரன்.

“நான் தி.மு.க.வில் இருந்தப்போ என்னைத் தூரத்துல பார்த்தவுடனேயே கருணாநிதி திடீர்ன்னு ‘பாசமலர்’ சிவாஜி மாதிரி துண்டை வாய்ல வைச்சுக்கிட்டு அழுற ஸ்டேஜூக்கு போயிருவாரு. நான் பக்கத்துல போனவுடனேயே 'தம்பி'ன்னு சொல்லி உதடு துடிக்க நடிச்சு தோள்ல கை போட்டு 'என் இதயத்துல உனக்கும் இடம் இருக்கு'ன்னு சொல்லாம சொல்லி அனுப்பிருவாரு. ஆனா இங்க 'அம்மா' மட்டும்தான் அ.தி.மு.க.வுக்கு வந்த ரெண்டாவது வருஷமே என்னை எம்.பி.யாக்கிட்டாங்க. நான் தி.மு.க.வுல இருந்தவரைக்கும் தம்பிதான். ஆனா அ.தி.மு.க.வுக்கு வந்த பின்பு நான் எந்த எம்பும் எம்பாமலேயே எம்.பி.யாயிட்டேன். இதுதான் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வித்தியாசம்..” என்றார்.

இந்த எம்.பி. பதவி கொடுத்த பாசத்தை ஒரு காரணமாக வைத்துக் கொண்டாலும், பைபாஸ் ஆபரேஷனுக்காக சந்திரன், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து செல்வுகளையும் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டு அதன் பின்பும் மாதந்தோறும் 25000 ரூபாய் நிதியுதவியாக வழங்கிக் கொண்டிருந்ததும்தான் அவரது கண்மூடித்தனமான அ.தி.மு.க. பக்திக்குக் காரணமாக ஆகிவிட்டது. கூடவே அவர் மீது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போடப்பட்டிருந்த அவதூறு வழக்குகளும் அவரை அ.தி.மு.க.வில் புடம் போட்டத் தங்கமாக காட்சியளிக்க வைத்திருந்தது.

இதனால்தான் “ரெஸ்ட் எடுங்கள். மீட்டிங்குக்கெல்லாம் போக வேண்டாம்...” என்று ஜெயலலிதா தடுத்தும், மருத்துவர்களிடத்திலெல்லாம் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு போய் நேரில் கொடுத்து கூட்டங்களுக்குச் செல்ல அனுமதி வாங்கி வந்தாராம்..!

இதற்கு முன்பாக கடந்த லோக்சபா தேர்தலின்போதே மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தயாநிதி மாறனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டவர் சந்திரன்தான். அறிவிப்பு வந்த மறுநாளே ஓட்டு வேட்டையில் இறங்கியும்விட்டார்.

அதன் பின்பு அவருடைய குடும்பத்தினரின் ரகசிய வேண்டுகோளுக்கிணங்க “ச்சும்மா போயஸ் கார்டனுக்கு வந்துட்டுப் போங்க” என்று அவரை அழைத்து வந்து ஜெயலலிதா முன்பு நிறுத்தியிருக்கிறார்கள். அவரிடம் பக்குவமாக விஷயத்தைச் சொன்ன ஜெயலலிதா, “அந்தத் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்குக் கொடுக்குறதா இப்ப முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கும் உடம்பு சரியில்லை. மொதல்ல உடம்பை கவனிங்க.. இந்த நேரத்துல இது வேண்டாம். வெளில இருந்தீங்கன்னா வேற மாதிரி பேசுவாங்க. அதுனால நீங்க ராமச்சந்திரா மருத்துவனையில் அட்மிட் ஆயிருங்க.. ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வாங்க..” என்று சொன்ன தனது தலைவியின் வேண்டுகோளை அப்போது தட்டாமல் கேட்டவர், இப்போது கேட்க மறுத்து, தனது சாவுக்குத் தானே வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக 'பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்கள் அதிகம் பேசக் கூடாது..' 'டிராவல் செய்யக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது.' 'உடம்பு அதிரும்வண்ணம் எதையும் செய்யக் கூடாது' என்பார்கள். இது அத்தனையையும் கடந்த 3 மாதங்களில் செய்துவிட்டார் சந்திரன்.

கடந்த ஜூலை மாதத்தில்தான் அ.தி.மு.க.வில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சந்திரன். இதன் பின்புதான் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவக்கினார் சந்திரன். மரணத் தூதுவன் அருகில் இருக்கிறான் என்பது தெரிந்தும் நன்றிக் கடனுக்காக தனது உயிரையே கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாகவே அனைத்துக் கட்சிகளிலுமே ஆபாசப் பேச்சாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், காலப்போக்கில் அவர்கள் அத்தனை பேருக்குமே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு திறமைசாலியாகிவிட்டார் சந்திரன். ஆனாலும் அது எதுவுமே இல்லாமலும் அவரால் வெறும் வார்த்தை ஜாலத்தாலேயே பேசவும் முடியும்.

உதாரணத்திற்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜெயலலிதாவுக்கு, தமிழ்த் திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் சந்திரனின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள்.. எந்தவிதக் குறிப்புகளும் வைத்துக் கொள்ளாமல் அடுக்கு மொழியில் துளியும் ஆபாசமில்லாமல் வெளுத்துக் கட்டியிருப்பார்.

அதேபோல் இப்போதைய தி.மு.க.வின் ஆட்சிக் காலம் துவங்கிய நேரத்தில் எம்.ஜி.ஆர். சமாதியை தி.மு.க.வினர் புனரமைப்பு செய்தது பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது ஜெயா டிவிக்காக தயாரிக்கப்பட்ட அரை மணி நேர நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் நான் ஸ்டாப்பாக எம்.ஜி.ஆரைப் பற்றி அவர் பேசிய பேச்சு அசத்தல்..! எப்படியோ திராவிட இயக்கக் கட்சிகளில் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர்.. திசை மாறியது சோகம்தான்..!

இப்போது ரொம்பவே சோகத்தில் இருப்பவர்கள் அ.தி.மு.க.வினர்தான். அவர்களது கட்சியில் கூட்டத்தைக் கூட்டம் சேர்க்கும் வல்லமை ஜெயலலிதாவைத் தவிர சந்திரனுக்கு மட்டுமே இருந்தது. இப்போது அதுவும் தகர்ந்துவிட்டது. இனிமேல் அந்தப் பொறு்பபை பழையபடி வளர்மதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

"சந்திரன் தனது இரட்டை அர்த்த பேச்சுக்களை தனது பிற்காலத்திய சினிமாவில்தான் ஆரம்பித்தார்.." என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். ஆரம்பக் காலத்தில் சிவகங்கையில் பிறந்து வளர்ந்து அங்கேயே சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார். சிவகங்கைச் சீமைப் பக்கமிருந்து இலங்கைக்கு தொழில் செய்யச் சென்ற ஒரு செட்டியார் குடும்பத்தின் உதவியோடு இலங்கைக்குத் தானும் பயணமாகியிருக்கிறார். அங்கேயும் கொழும்பில் இருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடன் நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார்.

தனது வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை அடை வேண்டித்தான் இதன் பின்பு சென்னைக்கு படையெடுத்திருக்கிறார். சென்னை வந்த பின்பு பல்வேறு நாடக சபாக்களில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டே சிறிய சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாடகங்களில் படுதாவை ஏற்றி, இறக்குவது முதல், பாடுவது வரையிலும் பல வேலைகளையும் செய்து வந்திருக்கிறார் சந்திரன்.

'முத்துவேல் ஸ்டேஜ் நாடக சபா' என்ற குழுவில் பிரதானமாக பல வேடங்களைச் செய்து வந்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களுக்கு பிரதானமே அவர்களது வித்தியாசமான குரலும், மாடுலேஷனும்தான். இதனை வைத்துத்தான் அவர்கள் முதல் போட முடியும். 'காசி யாத்திரை' என்றொரு நாடகத்தில் சந்திரன் போட்ட அப்பா வேஷம், நாடகத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்களையும் அசத்திவிட்டது. ஆனால் அப்போது அவர் இளைஞர்.

இந்த நாடகத்தின் மூலம்தான் பிரபல மலையாள இயக்குநர் ஜோஸப் தளியத்தின் 'காதல் படுத்தும் பாடு' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றியிருக்கிறார்.

எனக்கு அவருடைய முகம் முதலில் தென்பட்டது 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில்தான். அந்தப் படத்தில் கவுண்டமணி வீட்டு ஓனராகவும், எஸ்.எஸ்.சந்திரன் ஒரு வீட்டில் குடியிருப்பவராகவும் நடித்திருந்தார். அதில் அவருடைய வித்தியாசமான ஹேர்ஸ்டைல் இன்றைக்கும் எனக்கு ஞாபகமிருக்கிறது.

'பூக்காரி', 'சிவப்பு மல்லி', 'அவன்', 'சகாதேவன் மகாதேவன்', 'தங்கமணி ரங்கமணி', 'தைப்பூசம்', 'உழவன் மகன்', 'என்னை விட்டு போகாதே', 'பொங்கி வரும் காவேரி', 'கூட்டுப் புழுக்கள்', 'கனம் கோர்ட்டார் அவர்களே..' 'பாட்டி சொல்லைத் தட்டாதே', 'ஒன்ஸ்மோர்', 'அமைதிப்படை', 'ஒரு முறை சொல்லிவிடு', 'எங்கள் குரல்', 'புருஷன் எனக்கு அரசன்', என்று அவர் நடித்த 800 திரைப்படங்களில் சிலவற்றை மட்டுமே கூகிளாண்டவர் துணையுடன் என்னால் சொல்ல முடிகிறது.

இதில் 'கூட்டுப் புழுக்கள்' படமும், 'கனம் கோர்ட்டார் அவர்களே' படமும் அவருடைய கேரக்டர்களுக்காக கவனிக்கத்தக்கவை போல் எனக்குத் தோன்றுகிறது.

'கூட்டுப் புழுக்கள்' படத்தில் வயதுக்கு வந்த மகளை வீட்டில் வைத்துக் கொண்டு இள வயது வாலிபனைப் போல் நடந்து கொள்வதும் பெண்களைத் தேடிச் செல்வதுமான ஒரு குற்றவியல் நடிப்பில் அசத்தியிருந்தார் மனிதர். ஒரு முறை சுகம் தேடிச் செல்லும் இடத்தில் தனது மகளைப் பார்க்கும் தருணம்தான் மிக அற்புதமானது.

'கனம் கோர்ட்டார் அவர்களே' படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்திருப்பார். பயிற்சி வக்கீல்களை பெரிய வக்கீல்கள் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் காமெடியாகவே சொல்லியிருந்தாலும், சந்திரன் மட்டும் இப்படத்தில் சீரியஸாகவே நடித்திருந்தார்.

'திருடா திருடா' படத்தில் லாரி டிரைவராக வந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கொண்டு போக உதவி செய்யும் கேரக்டரில் வரும் சந்திரன், பிரசாந்த் லாரி ஓட்டும் அழகைப் பார்த்து, “மாப்ளை என்ன அழகா வண்டியை ஓட்டுற..? என் பொண்ணு உனக்குத்தான் மாப்ளை..!” என்று அவர் பேசும் பேமஸான டயலாக்கும் மறக்க முடியாதது..

'ஒரு முறை சொல்லி விடு' படத்தில்தான் தனது மகன் ரோஹித்தை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். தனது சொந்த சம்பாத்தியம் அனைத்தையும் இந்த ஒரு படத்தில் தொலைத்துவிட்டார் சந்திரன். இதன் பின்பு அவரது வருமானமே கட்சிக் கூட்டங்களில் பேசுவதற்காக தரப்படும் சன்மானம்தான் என்றாகிவிட்டது.

பைபாஸ் ஆபரேஷன் செய்த பின்பு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட சந்திரன் இதன் பின்பு கட்சியை சார்ந்தே தனது பொழைப்பை நடத்தி வந்திருக்கிறார். கட்சிக் கூட்டங்களில் பேசுவதற்கு மிகப் பெரும் தொகையை வாங்கும் ஒரே நபர் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கின்றேன்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதினாலும், தி.மு.க. சார்பானவர்கள் என்பதாலும் ஆரம்பக் கட்டங்களில் இராம.நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படங்களிலும், சங்கிலி முருகன் தயாரித்த அனைத்துப் படங்களிலும் சந்திரன் தவறாமல் இடம் பெற்று வந்தார்.

இராம.நாராயணன் காமெடி திரைப்படங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியபோது சந்திரன்தான் அவருடைய பெஸ்ட் சாய்ஸ்.. முதலில் சாதாரணமாகவே டயலாக்கை எடுத்துவிட ஆரம்பித்து பிற்பாடு அதில் டபுள் மீனிங்கையும் சேர்த்து அடிக்க ஆரம்பித்தது இங்குதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் இதற்கு ஒரு பக்கம் இயக்குநர்களும் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதே வேகத்தில்தான் இந்தக் காலக்கட்டத்தில் கோவை சரளாவுடனான தனது வாழ்க்கையையும் வெளிப்படையாகப் போட்டுத் தாக்க சினிமாவுலகம் கொஞ்சம் பதைபதைத்துப் போனதென்னவோ உண்மை.

கோவை சரளா-சந்திரன் ஜோடி மகத்தான காமெடியை கொண்டு வந்ததாலோ என்னவோ, அது அபாரமாக வொர்க் அவுட்டாகிவிட்டது. கோவை சரளாவை அ.தி.மு.க.விற்கு அழைத்து வந்ததும் சந்திரன்தான்..!

தனது குடும்பத்தினரின் நெருக்கடித் தாக்குதல்கள், நண்பர்களின் அறிவுரை, மேலிடத்தின் கோபம் என்று எல்லாவற்றாலும் சரளாவிடமிருந்து விலகினார். பிற்பாடு அதனை வெளியில் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளவும் செய்தார். இதுதான் எஸ்.எஸ்.சந்திரன். இருந்தும் கோவை சரளா இறுதியஞ்சலிக்கு வரவில்லை என்பதில் அவருக்கு நிச்சயம் வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.

சினிமாவுலகமாகட்டும்.. அரசியல் உலகமாகட்டும்.. இரண்டிலுமே 'மாமா' என்றே அனைவராலும் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.சந்திரன், அரசியலில் இரட்டை அர்த்தப் பேச்சு வியாபாரியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.. ஆனாலும் வெளிப்படைத்தன்மையான பேச்சு.. கண்மூடித்தனமான கட்சிப் பாசம்.. வெறித்தனமான அரசியல்.. இது அனைத்திற்கும் தனது வாழ்க்கையையும், தனது குடும்பத்தினரையும் பலிகடாவாக்கிவிட்டார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

http://truetamilans.blogspot.com/2010/10/blog-post_12.html

அவர் இறந்திருக்காவிட்டால் யாழில் அவரைப் பற்றிய திரியேதும் வந்திருக்குமோ என்பது சந்தேகமே.

செத்த பாம்பு உயிர்த்த பாம்பு இதுவொன்றும் எனக்கு தெரியாது.

நாளைக்கு எங்கட கலைஞர் மு.க மண்டையை போட்டால் செத்தபாம்பென்றுவிடவா போகின்றீர்கள்.

தம்பி சஜீவன் இன்றும் சேர் பொன் இராமனாதன்,அருணாசலம்,ஜீ.ஜீ,தந்தை செல்வா,அமிர் பற்றியெல்லாம் விட்ட சரி,பிழைகளை ஆராய்ந்துகொண்டுதான் இருக்கின்றோம்.இவர்கள் தனி நபர்களல்ல.ஒரு இனத்தின் தலைவிதியே இவர்களி நம்பி இருந்தது.அது மாதிரித்தான் புலிகளும். உங்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடந்த சரி,பிழைகளை ஆராயமல் விடமுடியாது.

இது தான் தமிழனின் குணம் யாரையும் பற்றி தான் எவ்வளவும் வம்பு கதைப்பான். தனைப் பற்றி யாரும் கதைக்க கூடாது.

]

S.S.சந்திரன் உயிருடன் இருக்கும்போது நீங்களும் உயிரோடுதான் இருந்தீங்க இல்லையா!? இதே யாழில் அவரை விமர்சித்து இருக்கலாம்.! இல்லையா!?

ஒருவன் இறந்தபின் எழும் விமர்சனங்கள் அந்த குடும்பத்தைதான் தாக்கும்.

ஊரிலை சில நாய்கள் இருக்கு ஒரு ஆள் தன்னை தாண்டி 100 அடி போனால் பிறகுதான் குலைக்கும். அதுபோல்தான் உங்கள் விமர்சனத்தையும் எடுக்கவேண்டியதாய் உள்ளது. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.