Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபுதேவாவை முன்வைத்து “காதல்” பற்றி ஒரு விசாரணை

Featured Replies

“மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் “பனி விழும் இரவு” என்று ஒரு அற்புதமான பாடல். அந்தப் பாடலில் இடையில் ஒரு காட்சியில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பான்.

இதுதான் பிரபுதேவா முதன் முறையாக திரையில் தோன்றிய காட்சி. சிறுவனாக இருந்தவர் சற்று வளர்ந்ததும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் உருவான நடனங்களில் தலையைக் காட்டத் தொடங்கினார்.

நன்றாகக் கவனித்தால் “அக்னி நட்சத்திரம்” படத்தில் “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுக்கு கார்த்திக்குக்கு பின்னால் ஆடிக் கொண்டு நிற்பார். இப்படி பின்னால் ஆடியவர் மெது மெதவாக வளர்ந்து முன்னால் ஆடுகின்ற அளவிற்கு வந்தார்.

ஜென்டில்மேன்” போன்ற சில படங்களின் வெற்றிக்கு இவருடைய நடனமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கதாநாயகனாக நடிப்பதற்கும் அழைப்புகள் வந்தன.

ஒரு நேரத்தில் “அடுத்த சுப்பர் ஸடார்” என்று பத்திரிகைகள் அவரைப் பற்றி எழுதுகின்ற அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருந்தது.

பிரபுதேவாவின் வளர்ச்சி

பிரபுதேவா கதாநாயகனாக நடித்த “காதலன்” திரைப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. பக்கத்து வீட்டுப் பையனை மாதிரி இருந்த பிரபுதேவாவை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அந்தக் காலத்தில்தான் “அடுத்த சுப்பர் ஸ்டார்” ஆகின்ற வாய்ப்பு பிரபுதேவாவிற்கு இருப்பதாக சில பத்திரிகைகள் எழுதின.

இப்பொழுது போன்று அப்பொழுது “சுப்பர் ஸ்டார்” நாற்காலிக்கு கனவு கொண்டிருந்த நடிகர்கள் என்று யாரும் இருக்கவில்லை. ரஜினி கமலுக்கு அடுத்த இடத்திற்கான போட்டிதான் இருந்தது. விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்றவர்கள் மூன்றாம் இடத்தைப் பெறுவதற்கான போட்டியில் மும்மரமாக இருந்தார்கள்.

விஜய், அஜித் அறிமுகமாகியிருந்தார்கள். ஆனாலும் பெரிய வெற்றிகள் அவர்களை தேடி வரவில்லை. சொல்லப் போனால் அப்பொழுது அவர்களை பலருக்கு தெரிந்திருக்கவும் இல்லை.

ஆனால் பிரபுதேவாவின் நடனமும், அது தந்த பிரமிப்பும் “காதலன்” படத்தின் மிகப் பெரும் வெற்றியும் பிரபுதேவா பற்றிய எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

இப்படி புகழின் உச்சியில் இருந்த பிரபுதேவாவைப் பற்றி அப்பொழுது ஒரு பரபரப்பு செய்தி பரவியது. நடனக் குழுவில் ஆடுகின்ற ஒரு பெண்ணை பிரபுதோவ இரகியத் திருமணம் செய்து விட்டார் என்கின்ற அந்தச் செய்தி பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.

ரம்லத்

பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டரின் குழுவில் ஆடிக் கொண்டிருந்த பெண் அவர். பெயர் ரம்லத். ஒரு முஸ்லீம். கூட்டத்தோடு கூட்டமாக ஆடுகின்ற ஒருவர்.

சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த படங்களில் பின்னணியில் கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த அவருக்கும் அதே கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவாவிற்கும் காதல் மலர்ந்தது.

பிரபுதேவா நடனம் அமைத்த படங்களிலும் ரம்லத் குழுவில் ஆடினார்.

ஆனால் பிரபுதேவா போன்ற ரம்லத்தால் முன்னணிக்கு வர முடியவில்லை. அதற்கான வாய்ப்புகள் குழுவில் ஆடுகின்ற நடனப் பெண்களுக்கு அமைவதும் இல்லை. சிலருக்கு மட்டும் கவர்ச்சி நாயகியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும். சிலர் தமது தொடர்புகள் மூலம் சில துணைப் பாத்திரங்களை பெறுவதும் உண்டு.

சர்மிலி, அனுஜா போன்றவர்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம். இவர்களும் குழுவில் ஆடியவர்கள்தான். அனுஜா ஒரு காலத்தில் மணிவண்ணனின் அனைத்துப் படங்களிலும் இருப்பார். கவர்ச்சி நடனங்களை செய்தார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சர்மிலி கவுண்டமணிக்கு சோடியாக பல படங்களில் நடித்தார். கடைசியாக சகீலாவுக்கு போட்டியாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

நடனக் குழுவில் ஆடுகின்ற பெண்களால் இதைத் தாண்டி முன்னணிக்கு செல்ல முடியாது. பிரபுதேவாவை காதலித்த ரம்லத்திற்கு கவர்ச்சி நடனம் ஆடி முன்னுக்கு வருகின்ற சிந்தனை இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

கடைசி வரை அவர் குழுவில்தான் ஆடினார். பிரபுதேவா கதாநாயகனாக நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற “கோபாலா கோபாலா” போன்ற பாடல்களிலும் ரம்லத் கூட்டத்தோடு கூட்டமாக பின்னணியில் ஆடினார்.

காதலும் திருமணமும்

ரம்லத் என்கின்ற குழுவில் ஆடுகின்ற ஒரு சாதரண நடனப் பெண்மணியை பிரபுதேவா திருமணம் செய்தார் என்கின்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது.

அந்த நேரத்தில் பல நடிகைகள் பிரபுதேவாவோடு சோடி சேர்வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். நக்மா பிரபுதேவாவின் மீது ஆர்வமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் உலாவின. பிரபுதேவாவின் திருமணச் செய்தியை அறிந்த நக்மா மிகவும் பரபரப்பாக அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் விசாரித்துக் கொண்டிருந்ததாகவும் கதைகள் வந்தன.

பிரபுதேவவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் தரப்பில் பலத்த எதிர்ப்பு இருந்தது. பிரபுதேவாவின் திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரம்லத்தை பிரபுதேவா திருமணம் செய்தார். புகழிலும், வசதியிலும் மிகவும் உச்சத்திற்கு சென்று விட்ட பிரபுதேவா, எந்தத் தடுமாற்றமும் இன்றி, தன்னுடைய காதலில் உறுதியாக நின்று, தான் காதலித்தவளை திருமணமும் செய்தார்.

இன்றைக்கு தன்னுடைய காதலில் உறுதியாக நிற்பது போன்று அன்றைக்கும் பிரபுதேவா உறுதியாக நின்றார்.

பிரபுதேவாவின் மீள் எழுச்சி

காதலன் படத்திற்கு பின்பு பிரபுதேவாவற்கு பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. அடுத்து வந்த படங்கள் மிகச் சுமாராக ஓடின அல்லது ஓடவில்லை. இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து, பின்பு கதாநாயகனின் தம்பியர்களில் ஒருவராக துணைப் பாத்திரங்களில் நடிக்கின்ற அளவிற்கு அவருடைய நிலைமை மாறிப் போனது.

ஆனாலும் நடிப்பைக் குறைத்துக் கொண்டு இயக்கத்தில் இறங்கினார். அவர் இயக்கிய முதலாவது தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் இயக்கிய போக்கிரியும் வெற்றி பெற்றது. ஹிந்தியில் இயக்கிய “வாண்டட்” திரைப்படமும் வெற்றி பெற்றது.

இயக்கிய படங்களில் “வில்லு” போன்ற சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இன்றைக்கு பிரபுதேவா நம்பிக்கைக்கு உரிய ஒரு வெற்றி இயக்குனராகவே வலம் வருகிறார்.

காதல் பற்றிய கேள்விகள்

திரைத்துறை சார்ந்து பிரபுதேவா பற்றி பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தாலும் அவருடைய காதல் விவகாரம் சர்ச்சையை கிளப்பும் விவகாரமாக போய்விட்டது.

ரம்லத் கொடுத்த கண்ணீர் பேட்டிகளும், வேலைவெட்டியில்லாத சில பெண்கள் சங்கங்களும் இந்து மக்கள் கட்சியும் கொடுத்த ஆர்ப்பாட்ட அறிக்கைகளும் பிரபுதேவாவை பற்றிய சர்ச்சைகளை ஊடகங்கள் மத்தியில் உருவாக்கி விட்டது.

பல சவால்களுக்கு மத்தியில் அன்றைக்கு காதலித்த பெண்ணை கரம் பிடித்த பிரபுதேவா இன்றைக்கு மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் தற்பொழுது காதலிக்கின்ற பெண்ணை கரம் பிடிப்பதில் தீவிரமாக இருக்கின்றார்.

“காதல்” என்பது என்ன? அது மகத்துவமானதா? அது ஒரு முறைதான் வருமா? பலமுறை வராதா? பலமுறை வந்தால் அந்தக் காதல்கள் பொய்யானதா? முதன்முறை வருகின்ற காதல் மட்டும்தான் உண்மையானதா? திருமணம் ஆன பின்பு காதல் வராதா? இப்படி பல கேள்விகளை கேட்பதற்கும், “காதலை” விசாரணணை செய்வதற்கு ஒரு வாய்ப்பை பிரபுதேவா விவகாரம் எமக்கு ஏற்படுத்தி தருகிறது.

எல்லாக் காதலும் காதலே

சில மாதங்களுக்கு முன்பு அயல் நாடு ஒன்றிற்கு ஒரு நிகழ்விற்காக சென்றிருந்தேன். எனக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். என்னுடன் மிகவும் வெளிப்படையாக பேசுகின்ற அளவிற்கு நெருக்கமானவர் அவர். ஐம்பதைக் கடந்தவர். அவருடைய பிள்ளைகள் திருமண வயதில் நிற்கிறார்கள்.

அடுத்த நாள் அவருடன் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். இல்லை, ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கிறது என்றார். தான் ஊரில் வாலிப வயதில் காதலித்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்ணுக்கும் திருமணமாகி வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் அவர் தன்னுடைய காதலை கடைசி வரை சொல்லவே இல்லை.

அண்மையில் அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அப்பொழுதுதான் அந்தப் பெண் அந்த விடயத்தை சொன்னர். அந்தப் பெண்ணும் முன்பு அவரை காதலித்திருந்தாராம். அச்சம் காரணமாக சொல்லவில்லையாம். இவரும் தானும் காதலித்ததை சொல்லியிருக்கிறார்.

முகத்தில் பிரகாசம் தெரிய, கண்களில் ஆர்வம் மின்ன அடுத்த நாள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவருடைய குடும்பத்தையும் சந்திக்கப் போகிறேன் என்று சொன்னார்.

எனக்கு அவருடைய செய்கை ஆர்வத்தை தூண்டியது. காதல் பற்றி பேச்சு வந்தது. காதல் எப்பொழுதும் வரும் என்றார். திருமணத்திற்கு பின்பும் வேறொரு பெண் மீது காதல் நிச்சயமாக வரும் என்றார். எல்லாக் காதலும் காதலே என்றார்.

இவரைப் போன்று சிலரை சந்தித்திருக்கிறேன். தங்களின் குடும்பத்தை குலையாமல் பாதுகாத்துக் கொண்டே வெளியில் காதல் என்னும் உணர்வை பரவசமாக அனுபவித்தபடி இருப்பார்கள். இந்தக் கலை எல்லோருக்கும் கைவருவதில்லை.

என்னுடைய வேறு சில அவதானிப்புகளையும் சொல்ல வேண்டும். ஓரிரு நாளில் தொடர்கிறேன்……………

Edited by சபேசன்

உங்கள் வழமையான ஆய்வுக்கட்டுரைகளை விட இந்த ஆய்வுக்கட்டுரை நல்ல சுவாரசியமாக உள்ளது. :lol: கிட்டத்தட்ட உங்கள் நண்பன் விடயம் போன்றதொரு விடயத்தை இன்னொரு யாழ் உறவான அர்ஜுனும் சொல்லியுள்ளார். காதலைப்பற்றி நிறைய ஆராயலாம், எழுதலாம், விவாதிக்கலாம். ஆனால் என்னால் ஏதும் சொல்லமுடியவில்லை. :lol:

Edited by கரும்பு

காதல் என்ற உணர்வு நிலையாக இருக்கவே செய்கின்றது. திருமணம் குடும்ப வாழ்வு இந்த உணர்வை எவ்வளவு தூரம் வரையறை செய்து ஒரு கட்டத்துள் அடக்கிவிடும் என்பது கேள்விக்குறியாகவே அனுபவத்தின் ஊடாக உணரமுடிகின்றது. காதல் என்ற உணர்வு நிபந்தனைகளுக்கு உட்பட்டதொன்றாக இருக்கமுடியாது. அது வளர்ந்துகொண்டே இருக்கும். ஒருவர் என்னுமொருவர் மீது ஈர்க்கப்பட்டுக்கொண்டு இருப்பது இயற்கையானது.

குடும்பவாழ்வில் சலிப்பு என்பது தேடலில் குறைபாடு எனவும் அர்த்தப்படுத்த முடியும். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் உணர்ந்துகொள்ளும் புதியவிடயங்கள் இறக்கும்வரை முடிவுக்கு வந்துவிடாது. ஏனெனில் காலங்கள் மாறவும் சூழல்கள் மாறவும் ஒவ்வொருவரும் மாற்றம் அடைகின்றார்கள். உணர்வுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. காமத்தை அடிப்படையாக வைத்து தேடலுக்கு முற்றுப்புள்ளிவைப்பதும் அந்தப் புள்ளியில் இருந்து என்னுமொருவர் மீது தேடலை தொடர்வதையும் காதல் என்று சொல்லிவிடமுடியாது.

காதலையும் காமத்தையும் குடும்பவாழ்வையும் நிதானத்துடன் ஆரோக்கியமான பாதையில் நகர்த்துவதற்கு மனிதநேயம் என்ற பொது உணர்வுத் தளம் அவசியமானது என எண்ணுகின்றேன். இந்த தளத்தை அடிப்படையாகக் கொண்டு சில ஊடாட்டங்களை அனுசரித்தும் அனுமதித்தும் அனுபவித்தும் வாழ முற்படுவது ஆரோக்கியமானது.

  • தொடங்கியவர்

கரும்பு,

பாராட்டுவது மாதிரி ஒரு அடி போட்டு விட்டீர்கள். :lol: மற்றைய கட்டுரைகளையும் சுவாரிசயமாக எழுதுவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் சினிமாவைப் பற்றியும் காதலைப் பற்றியும் எழுதுவது எப்பொழுதும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

சுகன்,

கடவுளைப் பற்றி எழுதுவதை விட காதலைப் பற்றி எழுதுவது கடினமானது. ஏதோ துணிவில் எழுதத் தொடங்கினாலும் கட்டுரையை முடிப்பது பற்றி எனக்குள் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. உங்களைப் போன்றவர்களின் கருத்துகள் ஒரு தெளிவான முடிவோடு கட்டுரையை முடிப்பதற்கு எனக்கு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நானும், ஒருத்தரை இல்லை நான்கு பெண்களை காலக்கிரமத்தில் காதலித்தவன் (இதில் காலக்கிரமத்தில் என்பது ஒரே நேரத்தில் என்பதாக அர்த்தம் இல்லை) என்னால் அவர்களில் இருவரிடம்தான் சாடைமாடையாக எனது விருப்பத்தை உணர்த்தமுடிந்தது அதுக்கும் பதிலே எனக்குத் திரும்பிவரவில்லை. அதில் ஒரு பெண் என்னிடம் தனது காதலை சாடைமாடையாக அறியத்தந்தாள் ஆனால் அந்த மெல்லிய உணர்வை அவ்வேளையில் களங்கப்படுத்தாது தவிர்த்துவிட்டேன். இருந்தும் அந்தநால்வரையும் இப்போதும் நினைப்பதுண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்கவும் வருப்பமுண்டு. காதல் எப்போது தொடர்ந்தும் உயிர்வாழகிறதெனில் அவ்வுறவு அடுத்தகட்டத்திற்குச் சென்று திருமண உறவாக மாறாதவரைக்கமே என்பது எனது கருத்து. ஒருவேளை எனக்கு காதல், எனது வசப்பட்டுவரவில்லை அன்றேல் எனது காதல் வெற்றிபெறவில்லை என்பதற்காக நான் கூறும் சீச்சீ இந்தப்பழம் பளிக்கமென்பதாக நான் கருத்துச் சொல்கிறேணோ தெரியவில்லை. ஆனால் தப்பாக விளங்கினால் விளங்கிவிட்டுப் போகவும் இப்போதும் அவர்கள் அனைவரையும் நான் காதலிக்கிறேன்.

சபேசன் கூறிய பிரபுதேவா - நயன் மற்றும் எழுத்தாளரினது காதல்கள் வேறுபட்டவை என நினைக்கிறேன். எழுத்தாளருக்கு அன்றாட வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களுக்கு பருவ வயது காதல் நினைவுகள் தித்திப்பாய் இருக்கும். இது உண்மையான காதலா அல்லது யதார்த்த வாழ்வின் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு தன்னை ஆசுவாசப்படுத்திகிறாரா?

ஒரு பேச்சுக்கு இந்நிலை மாறி தனது காதலியை கைப்பிடித்து மனம் முடித்த மனைவியை அடையாது விட்டிருந்தாலும் இதே நிலைதான். மனிதனுக்கு இக்கட்டான நிலையில் ஒரு தப்பித்தல் தேவைப்படும்.

சிறு உதாரணம் புலம் பெயர்ந்தவர்களை படைப்புகளில் பார்ததால் தெரியும். ஆக்கங்களில் படைப்பின் தேவை மீறி அவர்கள் இழந்தவை பற்றியே கூடுதலாக சொல்லியிருப்பார்கள்.

காதல் என்ற சொல் ஒரு கோணிப்பை போன்றே பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகப்படுகின்றது. அதாவது, உணர்வுகளைப் பற்றி இனம்பிரித்துப் பேசுவதற்கான சோம்பல் அல்லது முடியாமை காரணமாக காதல் என்ற ஒரு வார்த்தைக்குள் காமம், கவர்ச்சி, துணை, தேடல், தப்பித்தல் போன்ற இன்னோரன்ன தேவைகள் அல்லது உணர்வுகள் உள்ளடக்கப்பட்டுவிடுகின்றன. இதனால், காதல் என்றால் என்ன என்று கேட்டால் அதை வரைவிலக்ககணப்படுத்த முடியாத முழிப்பே பல சமயங்களில் எமக்கு மிஞ்சுகின்றது. மொத்தத்தில் காதல் என்பது அல்லது காதல் என்ற கோணிப்பையிற்குள் வரக்கூடிய உணர்வுகள் என்பன நாம் வாழும் வரை வந்துகொண்டுதான் இருக்கும்.

அன்பிற்கு ஒத்த கருத்துள்ள சொல் காதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அன்பையும் வேண்டுமானால் காதல் என்ற கோணிப்பையிற்குள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அன்பைக் காதல் என்று கூறிவிட முடியாது. நான் நினைக்கிறேன் திருமண பந்தத்தில், படிப்படியாய் அன்பு என்பதன் பங்கு மற்றையனவற்றை விடச் சற்றுத் தூக்கலாக, அதிகரித்துச் செல்லும். சில சமயத்தில் காதல் என்ற கோணிப்பை, திருமண பந்தத்தில், அன்பு என்ற ஒன்றால் மட்டும் நிரம்பக்கூடும். ஒருவேளை அத்தருணங்களில் தான் காதல் என்ற பையிற்குள் வரக்கூடிய மற்றைய விடயங்கள் இதர நபர்களில் குவியம் பெறுகின்றனவோ என்னவோ? ஏனெனில். இரு மனிதர்களின் அவர்கள் சார்ந்த பரஸ்பர உணர்வுகளிற்கு ஒரு கோணிப்பை என்று கொண்டால், புதியவர்களுடனான உறவுகளில் கோணிப்பைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் இன்னோரன்ன ஆசைகளிற்கு நாளாந்தம் கட்டுப்பாடுகளை நாங்களாக வரையறுத்து வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல, இந்தக் காதல் விடயத்திலும் வரையறைகள் பற்றி மட்டும் தான் பேச முடியுமே தவிர காதல் பற்றி பேசமுடியாது என்றே படுகிறது. மேலும். காதல் என்ற சொல்லால் அழைக்கப்படுவதால் ஒருவரிற்குத் தோன்றும் அனைத்துக் காதல்களும் ஒரேவாறு இருக்கவேண்டும் என்பதில்லை. காதல் என்ற பையிற்குள் வரக்கூடிய உணர்வுகளில் ஒவ்வொருவரில் ஒவ்வொருகாலகட்டத்தில் ஒவ்வொரு உணர்வுகள் தூக்கலாக வெளிப்படலாம் என்றே படுகிறது. ஆதலால் காதல் என்ற சொல்லினால் அழைக்கப்படுவதால் அனைத்துக் காதல்களும் ஒரே வகையின அல்ல என்றே சொல்லத் தோன்றுகின்றது.

காதல் (என்பது) எதுவரை?

உன்னாலே உன்னாலே படம் (விமர்சனம் பின்னர் எப்பொழுதாவது!) பார்த்தபின் நானும் க.ந.(சு- இல்லை!)வும் பேசிக் கொண்டதை இயன்றவரை இங்கே எழுத்து வடிவமாக்கியிருக்கின்றேன். எனக்கு மட்டும் தெரிந்த (பிரபலமல்லாதவன்) நண்பன் க.ந. என்பதால் அவன் பற்றிய விபரங்களை இங்கே தவிர்த்திருக்கின்றேன்.

நான்: (படத்தில்) நல்ல முடிவு. புரியாமல் சேர்வதைவிட புரிந்து பிரிந்துவிடலாம்.

க.ந: காதல் என்பதே பிரிந்திருப்பதுதான்.

நான்: பிரிந்தால்தான் காதலா?

க.ந: சேர்ந்தால் காதல் இல்லை.

நான்: காதலிப்பது ஒருவராகவும், கல்யாணம் செய்துகொள்வது வேறொருவராகவும் இருக்க வேண்டுமா?

க.ந: நான் அப்படிச் சொல்லவில்லை. காதல் கல்யாணத்தின் பின் செத்துவிடுகிறது.

நான்: கல்யாணத்தின் பின் ஒருவரையொருவர் காதலிக்க முடியாதா?

க.ந: காதலிக்கும் போதிருக்கும் சூழல் கல்யாணத்தின் பின் இருப்பதில்லை. சூழல் மாறிவிடுவதால் காதலித்த மனிதர்களும் கல்யாணத்தின்பின் மாறிவிடுகிறார்கள்.

நான்: காதல் என்பது உணர்வு. அதெப்படி மாறும்?

க.ந: உணர்வையே அந்தந்தச் சூழல்தான் தீர்மானிக்கிறது.

நான்: பொதுமைப்படுத்திக் கதைப்பதால் எனக்கு விளங்கிக்கொள்ளக் கடினமாயிருக்கிறது.

க.ந: நான் காதலித்தேன்.

நான்: அட, புதிசாயிருக்கிறதே! யார் அவள்?

க.ந: அவள் இப்போது திருமணம் செய்து குழந்தைகளுடன் இருப்பதால் அவளின் விபரங்களைச் சொல்ல விரும்பவில்லை.

நான்: அவள் வேறொருவரைத் திருமணம் செய்திருக்கிறாளா?

க.ந: ஓம்.

நான்: ஏன் ஒருதலைக் காதலா?

க.ந: அப்படியென்றால்?

நான்: நீ அவளைக் காதலித்தாய். அவள் உன்னைக் காதலிக்கவில்லை.

க.ந: நான் அவளைக் காதலித்தேன் என்று எனக்குத் தெரியும். அவள் என்னைக் காதலித்தாளா என்று அவளுக்குத்தான் தெரியும். அவளும் என்னைக் காதலிப்பதாகவே எனக்கு ஒரு உணர்வு இருந்தது.

நான்: ஏன் நீங்கள் இதைப் பற்றி ஒருவருடன் ஒருவர் கதைக்கவில்லையா?

க.ந: இதைத் தவிர எல்லாவிடயங்களையும் பற்றிக் கதைத்திருக்கிறோம்.

நான்: ஏன் முக்கியமான விடயத்தைப் பற்றிக் கதைக்கவில்லை?

க.ந: நீ என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பது முக்கியமான விடயமாக எங்களுக்குள் இருந்திருக்கவில்லை.

நான்: இரண்டுபேரும் அறிவாளிகளாகத்தான் இருந்திருக்கிறீர்கள். சரி அதைவிடு. அவளை நீ காதலிப்பது உனக்கு எப்படித் தெரியும்?

க.ந: அவளைப் பார்த்ததில் பிடித்துப் போயிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவளுடையதும் என்னுடையதுமான பெரும்பாலான கருத்துகள் ஒத்துப்போயிருந்தன. அவள் எனது வாழ்க்கைத் துணையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்.

நான்: அப்பிடிப் போடு. பிறகேன் இதைப் பற்றி அவளுடன் கதைக்கவில்லை?

க.ந: பயம்.

நான்: அவளுடன் கதைப்பதற்கு உனக்குப் பயமா?

க.ந: இல்லை. அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இதே போல அவளைத் தொடர்ந்தும் காதலிக்க முடியுமா? இதேபோல அவளுடன் தொடர்ந்தும் பழக முடியுமா என்ற பல பயங்கள்.

நான்: என்னைக் கொலைகாரனாக்காதே. அவளை உனக்குப் பிடித்திருந்தது. அவளுடன் சேர்ந்து வாழவும் விரும்பியிருக்கிறாய். அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள். பிறகேன் உனக்குப் பயம் வருகிறது? உனக்கு உன் மீதே நம்பிக்கையில்லையா?

க.ந: உனக்கு விளங்கும்படியாக சொல்ல எனக்கு முடியவில்லை. காதலிக்கும்போது எந்தக் கட்டுபாடுகளுமில்லை. எந்தச் சுமைகளோ, பாரங்களோ இல்லை. இவற்றைவிட முக்கியமான விடயம் நானும் அவளும் தனித்தனி மனிதர்கள் என்ற உணர்வு இருப்பதால் ஒருவரையொருவர் அவரவர் பலம்/பலவீனங்களுடன் அங்கீகரிக்க முயல்கின்றோம். குடும்பம் என்பது ஒரு வடிவமைக்கப்பட்ட நிறுவனம். அதற்குள் போய்விட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குரிய சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஒருவர் மற்றவரின் சொத்தாகவோ பொருளாகவோ ஆகிவிடுகிறோம். குடும்பப் பாரங்கள் அதிகரிக்கின்றன. எனக்கும் அவளுக்குமிடையிலான மெல்லிய உணர்வுகள் சாகடிக்கப்படுகின்றன. அல்லது அவற்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. இறுகிப்போன சட்டங்களுக்குள் மனித உறவுகளுக்கு அர்த்தமில்லை.

நான்: அட, இதுதான் விசயமா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? உலகம் எங்கேயோ போய்விட்டது மகனே! நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்ய் வேண்டும்? நண்பர்களாகச் சேர்ந்து வாழலாமே?

க.ந: அவளுக்கு இதில் உடன்பாடில்லை. பெண் என்ற ரீதியில் அவளுக்கிருக்கும் மேலதிக பயங்கள், பாதுகாப்பின்மை, சமூக அழுத்தங்களை நான் விளங்கிக் கொண்டேன். அதனால் அவளை வற்புறுத்தவில்லை. இதைவிட, சேர்ந்து வாழ்வதில் கூட குடும்பங்களுக்குரிய வடிவம் மறைமுகமாக இருப்பதாகவே நான் நினைக்கின்றேன்.

நான்: சரி, இப்போது அவளையே நினத்துக்கொண்டு இப்படியே இருக்கப்போகிறாயா?

க.ந: அருகில் இருக்கும்போது மட்டுமே நெருக்கம் இருக்கும். அவளது நினைவுகள் இனிய ஞாபகங்களாக் இருக்கின்றன. அவ்வளவுதான். இனிவரும் நாட்களில் நான் இன்னும் ஒருவரையோ இருவரையோ அல்லது பலரையோ காதலிக்கலாம். யாருக்குத் தெரியும்!

க.ந.வுடன் கதைத்து முடிந்தபின் எனது தலைமுடி ஏராளமாக உதிர்ந்துவிட்டது.

பிறிதொருநாளில் க.ந.வைச் சந்தித்தபோது அவன் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லையா என்று கேட்டேன். தனக்கு இன்னும் பயம் போகவில்லை என்று பதிலளித்தான். கூடவே இந்தப் பிரச்சினைக்கு தன்னிடம் தீர்வில்லையென்றும் சொல்லிவைத்தான்

Read more: http://porukki.weblogs.us/2007/07/18/kaathal_ethuvatai/#ixzz12gB8pVdS

  • கருத்துக்கள உறவுகள்

A group of professional people posed this question to a group of four through eight year olds, "What does love mean?" The answers they got were broader and deeper than anyone could have imagined. See what you think: :):)

"Love is that first feeling you feel before all the bad stuff gets in the way."

"When my grandmother got arthritis, she couldn’t bend over and paint her toenails anymore. So my grandfather does it for her all the time, even when his hands got arthritis too. That’s love."

"When someone loves you, the way they say your name is different. You know that your name is safe in their mouth."

"Love is when a girl puts on perfume and a boy puts on shaving cologne and they go out and smell each other."

"Love is when you go out to eat and give somebody most of your french fries without making them give you any of theirs."

"Love is when someone hurts you. And you get so mad but you don’t yell at them because you know it would hurt their feelings."

"Love is what makes you smile when you’re tired."

"Love is when my mommy makes coffee for my daddy and she takes a sip before giving it to him, to make sure the taste is OK."

"Love is what’s in the room with you at Christmas if you stop opening presents and listen."

"If you want to learn to love better, you should start with a friend who you hate."

"When you tell someone something bad about yourself and you’re scared they won’t love you anymore. But then you get surprised because not only do they still love you, they love you even more."

"There are two kinds of love: Our love and God’s love. But God makes both kinds of them."

"Love is when you tell a guy you like his shirt, then he wears it everyday."

"Love is like a little old woman and a little old man who are still friends even after they know each other so well."

"During my piano recital, I was on a stage and scared. I looked at all the people watching me and saw my daddy waving and smiling. He was the only one doing that. I wasn’t scared anymore."

"My mommy loves me more than anybody. You don’t see anyone else kissing me to sleep at night."

"Love is when mommy gives daddy the best piece of chicken."

"Love is when your puppy licks your face even after you left him alone all day."

"I let my big sister pick on me because my Mom says she only picks on me because she loves me. So I pick on my baby sister because I love her."

"Love cards like Valentine’s cards say stuff on them that we’d like to say ourselves, but we wouldn’t be caught dead saying."

"When you love somebody, your eyelashes go up and down and little stars come out of you"

"You really shouldn’t say ‘I love you’ unless you mean it. But if you mean it, you should say it a lot. People forget."

"God could have said magic words to make the nails fall off the cross, but He didn’t. That’s love."

http://www.appleseeds.org/love-mean.htm

பிரபுதேவாவின் ஒரு மகன் 2 வருடங்களுக்கு முதல் நோய் வாய்பட்டு இற்ந்திருந்தார்.நடிக,நடிகைகளாக இருப்பதால் செய்தி ஆகின்றது..ஆனால் அன்றாடம் இவை எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மனித மனமென்பது புரியமுடியாத ஒன்று.இன்னார் இப்படித்தான் இருப்பார் என நாம் ஒன்றை உருவகப்படுத்தலாம்.அவரின் உண்மை நிலை அவருக்கு மட்டுமே தெரியும்.சந்தர்பங்களும் சூழ்நிலைகளுமே மனிதனின் பல முடிவுகளுக்கு காரணமாகின்றன.

எனது முதல் காதலி (பள்ளிக்கூட காதல் பஸ் உடன் முடிந்தது) நான் லண்டனில் இருக்கும்போது திருமணமாகி வந்தார்.ஒரு நாளும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த நேரங்களில் வந்ததில்லை.படிப்பு,வேலை அடுத்த காதலியின் நினைப்பு என்று அந்த நினைப்பு அறவே மறந்து போச்சு.ஆனால் என்ன செய்கின்றா எத்தனை பிள்ளைகள் என்பது மாதிரியான விசயங்களை யார்மூலமாவது அறிந்துகொண்டே இருந்தேன்.இன்றுவரை சந்திக்கவில்லை ஆனால் இடைகிடை நினைவு,கனவு வரும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆழம் அறியாமல் காலை விட்டு விட்டேன் போலிருக்கிறது. பிரபுதேவா, நயன்தாரா விவகாரத்தை சினிமா சார்ந்து மட்டும் எழுதி முடித்திருக்கலாம். ஆனால் காதலை விசாரணை செய்ய முற்பட்டது பெரும் தலைவலியாகப் போய் விட்டது.

எந்தக் கட்டுரை எழுதுகின்ற பொழுது இத்தனை குழப்பங்கள் எனக்குள் வந்தது இல்லை. நானே தெளிவாக இல்லாத ஒரு விடயத்தைப் பற்றி எப்படி எழுத முடியும்?

ஓரிரு நாட்களில் மிகுதியை எழுதுகிறேன் என்று வேறு சொல்லித் தொலைத்து விட்டேன். உண்மையில் ஒவ்வொருமுறையும் இக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத உட்காருவதும், சில பந்திகள் எழுதி விட்டு திருப்தி இல்லாமல் அப்படியே வைத்து விட்டு போவதுமாகத்தான் நிலைமை இருக்கிறது.

நான் கட்டுரை எழுது ஆரம்பித்தால், அதை எழுதி முடித்து விட்டுத்தான் எழுந்திருப்பேன். நிறைய நேரங்களும் எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் மிகவும் திணறிக் கொண்டிருக்கிறேன்.

பிரபுதேவா பற்றிய கட்டுரையை முடிக்காமல் அடுத்த கட்டுரைக்குள் போக விரும்பாததால் மீண்டும் ஒரு வார இடைவெளி விழுந்து விட்டது. காதல் பற்றி சொல்வதற்கு எனக்கு நிறைய அனுபங்கள் இருக்கின்றன. நிறைய அவதானிப்புகள் இருக்கின்றன.

அதே வேளை காதல் என்கின்ற உணர்வு பற்றிய தேடல்களும் கேள்விகளும் எனக்குள் இருக்கின்றன.

ஆனாலும் நிச்சயமாக பிரபுதேவா கட்டுரையை நான் எழுதி முடிப்பேன். ஓரிரு நாட்களில் அல்ல, ஓரிரு வாரங்களில். குழப்பம் இல்லாமல் ஒரு தெளிவான முடிவைத் தர விரும்புகிறேன். அதற்கே ஓரிரு வாரங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் இக் கட்டுரை தொடர்பான எனது கேள்வி என்ன என்டால் பிரபுதேவாவுக்கு ரம்லத் மீது அசைக்க முடியாத காதல் ஏற்பட்டு போராடி வெற்றி பெற்றார்...அதே பிரபுதேவா சிறிது காலத்தின் பின் நயந்தாரா மீது காதல் கொண்டார் என சொல்கிறார்கள்...இது காதலா அல்லது ஈர்ப்பா?...ஒருவரை நேசிக்கும் போது மற்றவர் எல்லா விதத்திலும் அவர‌து ரசனைக்கு உரியவராக இருந்தால் தான் அவரால் அந்த மற்றவரைக் காதலிக்க முடியும்...ஆனால் திடிரென அந்த ரசனை எவ்வாறு மாறும் எனக்குப் புரியவில்லை...உண்மையாகவே பிரவுதேவா தனது முதல் மனைவி நேசித்து இருந்தால் நயந்தாராவைக் காதலித்து இருக்க மாட்டார் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

.உண்மையாகவே பிரவுதேவா தனது முதல் மனைவி நேசித்து இருந்தால் நயந்தாராவைக் காதலித்து இருக்க மாட்டார் என்பது என் கருத்து.

காலநதியில் நீந்தும்போது, கணங்கள் மாறும்போது, காதலும் மாறலாம். மனிதர் தாம் அகவயமான/புறவயமான மாற்றங்களை அடைவதில்லை என்று நம்புவதால் தாங்கள் பத்து வருடத்திற்கு முன்பு உள்ள சிந்தனையோடுதான் இப்போதும் உள்ளதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் மாற்றங்கள் நிச்சயமாக இருக்கும். எனவே நேசங்களும் மாறலாம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலநதியில் நீந்தும்போது, கணங்கள் மாறும்போது, காதலும் மாறலாம். மனிதர் தாம் அகவயமான/புறவயமான மாற்றங்களை அடைவதில்லை என்று நம்புவதால் தாங்கள் பத்து வருடத்திற்கு முன்பு உள்ள சிந்தனையோடுதான் இப்போதும் உள்ளதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் மாற்றங்கள் நிச்சயமாக இருக்கும். எனவே நேசங்களும் மாறலாம். :)

அருமையான பதில் கிருபன் அண்ணா. :)

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.

  • கருத்துக்கள உறவுகள்

காலநதியில் நீந்தும்போது, கணங்கள் மாறும்போது, காதலும் மாறலாம். மனிதர் தாம் அகவயமான/புறவயமான மாற்றங்களை அடைவதில்லை என்று நம்புவதால் தாங்கள் பத்து வருடத்திற்கு முன்பு உள்ள சிந்தனையோடுதான் இப்போதும் உள்ளதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் மாற்றங்கள் நிச்சயமாக இருக்கும். எனவே நேசங்களும் மாறலாம். :)

ஒருவர் ஒரு பெண்னை உண்னையாகவே காதலித்து மணம் முடித்திருந்தால்...தன் ஆயுட் காலமும் தன்னுடன் வாழப் போறவள் என நினைத்திருந்தால் என்னவென்டு என்னொரு பெண்ணிடம் காதல் வரும்...மனைவி இருக்கும் போது மற்றப் பெண்களை ரசிக்கலாம் தப்பில்லை ஆனால் அவள் மீது காதல் என்பது?...இதில் எந்தக் காதல் உண்மையான காதல் :) ..பத்து வருடத்தில் அவரது ரசனை வித்தியாசப்படலாம் தான் இல்லை என்டு இல்லை...இன்னும் 10 வருடத்தில் இன்னும் அவரது ரசனை வித்தியாசப்படும் :D அப்போது இன்னொருவரைக் காதலிப்பாரா :D இதுக்குப் பெயர் காதல் இல்லை கவர்ச்சி :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு பெண்னை உண்னையாகவே காதலித்து மணம் முடித்திருந்தால்...தன் ஆயுட் காலமும் தன்னுடன் வாழப் போறவள் என நினைத்திருந்தால் என்னவென்டு என்னொரு பெண்ணிடம் காதல் வரும்...மனைவி இருக்கும் போது மற்றப் பெண்களை ரசிக்கலாம் தப்பில்லை ஆனால் அவள் மீது காதல் என்பது?...இதில் எந்தக் காதல் உண்மையான காதல் :D ..பத்து வருடத்தில் அவரது ரசனை வித்தியாசப்படலாம் தான் இல்லை என்டு இல்லை...இன்னும் 10 வருடத்தில் இன்னும் அவரது ரசனை வித்தியாசப்படும் :D அப்போது இன்னொருவரைக் காதலிப்பாரா :D இதுக்குப் பெயர் காதல் இல்லை கவர்ச்சி :D

அவ்வளவு இலகுவாக காதலையும் கவர்ச்சியையும் வேறுபடுத்திவிடமுடியாது. மேலை நாடுகளில் 25 வருடத்திற்கு மேல் திருமணம் முடித்தவர்கள்கூட விவாகரத்துப் பெற்றுவிட்டு வேறு துணையுடன் வாழ்கின்றார்கள். தமிழர்கள்தான் தங்கள் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க "ஏதோ விதி" என்று சொல்லி ஒன்றாக வாழத் தலைப்பட்டுள்ளனர் :lol:

இன்னுமொன்று.. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருக்கின்றார்கள் (நன்றி எஸ்.பொ... இது பெண்களுக்கும் பொருந்தும்) காதலிக்கும்போது நல்லவனின் பக்கத்தையே அதிகம் காட்டுவதால், ஊத்தையனைப் பற்றி துணையாக வரவிருப்பவருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. மணமுடித்த பின்னர் ஊத்தையனும் வெளிவரும்போது பிரச்சினைகள் வரலாம். சகித்துப் போனால் ஆயுட்காலமும் வாழ்ந்து சிரஞ்சீவித்தனமாக காதலாக மற்றையோருக்குக் காட்டலாம். சரிவராவிட்டால் தனக்கு ஏற்ற துணையைத் தேடலாம்.

பிடிக்காத ஒருவருடன் தினமும் மல்லுக் கட்டுவதைவிட பிடித்தவருடன் வாழ்வதே மேல். அதுவே முதல் காதலியாக இருந்தால் அதிர்ஸ்டம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.