Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினம் சார்ந்து ஒரு உணர்வுப் பகிர்வு

Featured Replies

அன்னையின் தேடலின் அர்த்தம் எனக்கு நன்கு புரிகிறது. தன் கோடானு கோடி அணுக்கள் எல்லாம் உதிரம் சிந்தி நொந்து கிடக்கக் காரணமான தன் மகனின் மரணத்தில் அர்த்தம் இருந்ததாய் அவ்வன்னையினை நம்பவைத்து அவளின் இரத்தப்போக்கை நாங்கள் கட்டி வைத்திருந்தோம்.

இந்தக் கூற்றில் என்ன தவறும் கேவலப்படுத்தலும் இருக்கின்றது? மகத்தான தியகங்களை அர்த்தமற்றதாய் ஆக்கியவர்கள் நாங்கள். அதை நாம் உணர்வது கூட கேவலம் என்றால் நாம் மானுடராய் இருப்பதற்கே தகுதியற்றவர்களாகவே கருத முடியும். கருத்து எழுதியவரை முன்நிறுத்தியே வைக்கப்படுகின்றது. நான் எழுதும் இந்தப் பதிலும் என்னை முன்நிறுத்தியே வைக்கப்படுகினறது. தன்னை முன்நிறுத்தி உணரப்படும் தவறுகளுக்கே வாய்ப்பூட்டு போட முற்படுவதால் சாதிக்கப்போவது என்னவென்று தெரியவில்லை.

நாடுவேணும் தேசியம் உயிரானது தேசப்பற்று வாழ்வானது என்று கருத்தளவில் உணர்ச்சி அரசியல் நடத்தியவர்கள் இன்றும் நடத்திக்கொண்டிருப்பவர்கள் நாங்கள். இதே கூற்றுக்கு செயலாக வாழ்ந்து மடிந்தவர்கள் அவர்கள். அவர்களது செயலை அர்த்தமற்றதாக்கியது எங்களது சுயநலம். அவர்கள் தேசத்துக்காக வாழ்ந்தவர்கள் நாம் எமக்காக குடும்பத்துக்காக என குறுகிய வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புலம்பெயர்ந்தவர்கள். தேச விடுதலையை விட புலப்பெயர்வு மேலான வாழ்வு என எமது செயல் தேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ச்சி பொங்க பேசிய நாங்களேதான் போராட்டத்தை சிதைப்பதற்கும் வழிசமைத்தவர்கள். ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எமது புலப்பெயர்வு அதனூடான வாழ்க்கைமுறை பொருளாதாரம் கல்வி என்பன தேசம் என்ற கனவை நீக்கி வெளிநாடு என்ற கனவை விதைத்தது. போராட்டத்தில் இருந்து மக்கள் ஒதுங்கினார்கள் வெளிநாட்டை குறிவைத்தார்கள் சிங்களத்தை அனுசரிக்கமுற்பட்டார்கள். போராட்டம் மக்கள் இழந்து சக்தி குன்றியது. ஆட்பலத்தை நிர்மூலமாக்க மூல காரணமாக நாங்கள் இருந்தோம். ஆனால் உணர்ச்சி பொங்க தேசியம் பேசினோம் பேசிக்கொண்டிருக்கின்றோம். செயலில் இல்லை. இங்கே முதன்மைக் குற்றவாளிகள் நாங்களே.

அந்தத் தாய்க்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தால் தியாகத்துக்கு அர்த்தம் கொடுப்பதாக இருந்தால் நாம் தாயகம் சென்று செயலில் இணைந்திருக்கவேண்டும். அதற்குரிய எந்த அடிப்படையும் எம்மிடம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. பணத்தை கொடுத்து நாட்டை அமைப்பதற்கு ஒப்பான செயலையே செய்துகொண்டிருந்தோம். எமது செயல்கள் நம்பவைத்துக் கழுத்தறுத்த செயல் என்பதே உண்மை. அதை உணர்வு பூர்வமாக புரிந்துகொள்ள முற்படுவதே நாம் திருந்துவதற்கான முதற்படி. அதையும் மறுத்து என்ன தேசியத்தை எங்கே நிலைநாட்டப்போகின்றார்கள்?

புரிதலுக்கு நண்றி சகரா அக்கா.... நீண்ட நெடிய காலமாக மாவீரர் ஆன பல போராளிகளோடு நான் உறவாடி இருக்கிறேன்... அவர்களின் ஆன்ம பலம் என்ன... ஏன் இதை எல்லாம் செய்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...

நெடுங்காலமாக என்னுடன் இருந்த நண்பனின் உடலை எடுக்க அவனின் சாவுக்கு அடுத்த நாள் அவன் உடல் விடுபட்ட இடத்துக்கு போய் அவனது உடலை கண்டு எடுத்த போது அவனது உடலில் இருந்து வாடை வீச தொடங்கி இருந்தது... என்னையறியாமல் என் கைகள் முக்கை மூடிக்கொண்டது... நீண்டகாலத்துக்கு பிறகு எனது கண்கள் பனிக்க வைத்த நிகழ்வும் அதுதான்... எனது நண்பனின் உடலை நாற்றம் அடிக்கும் வரைக்கும் அங்கு விட்டிருந்தோமே எனும் குற்ற உணர்விலான உணர்வு அது...

இது எனக்கு மட்டும் இல்லை சக போராளிகளாக இருந்த எல்லாருக்குள்ளும் இருக்கும் உணர்வு அதுதான்... அண்று எனக்குள் இருந்தவன் இண்றும் இருக்கிறானா என்பது சந்தேகமானது எண்றாலும் , அங்கு ஒவ்வொரு போராளியும் தாயாக தான் இருந்திருக்கிறான்... எல்லாருக்குள்ளும் ஒரு வலி இருந்தது... அது கூட ஒரு வகையான பாசம் தான்...

தொடங்கப்பட்ட திரியில் இருந்து திசை மாறி செல்கின்றோமா?

ஒரு தாயின் முகத்தில் தெரிந்த பாவமே.எம்மை இவ்வளவும் எழுத வைத்தது.எனது உறவினர் வீட்டிற்கு நான் போகும் போது அங்கு இருக்கும் முதியமாது சந்தோசமாக கதைத்துவிட்டு பின் எப்போதும் சோகமாக முகத்தைவைத்து ஒரு கதை தொடங்குவா.எனக்கு அந்த்ம்மா நடிப்பதுபோல் தான் எப்பவும் தோன்றும்.6 பிள்ளைகள் மூத்தது நாலும் பெடியங்கள் அந்த மாதிரி இருக்கின்றார்கள்.அடுத்த இரண்டும் பெண் பிள்ளைகள்.கடைசி மகளுடன் தான் இருக்கின்றா இனிமேல் என்ற வசதிகளுடன்.

அண்ணை உங்கட உண(ர்)வை பற்றி சொல்ல வேணுமே...??

அம்மாவின் துடித்த கண்களையும் அம்மா போட்டிருந்த தடித்த கண்ணாடிக்குள்ளாலை துடித்த இமைகளையும் காட்டின காளொளியிலை கண்டு உணர்வு பெற்றது போலையோ இதுவும்....?? :rolleyes:

Edited by தயா

இந்த திரியில் தயா குறிப்பிட்ட வரிகளை நானும் தயா மற்றும் சிலரும் புரிந்து கொண்ட விதத்தில் தான் புரிந்து கொண்டேன். இன்னுமொருவன் இதனை பிரசுரித்த உடனே வாசித்து விட்டு என் புரிதலில் உணர்ச்சி வேகம் இருப்பதாய் தோன்றியதால் ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டேன். இந்த திரியில் இன்னுமொருவன் எழுதிய அனைத்தையும் இந்த சில வரிகள் மாற்றியமைப்பதாகவே உணருகின்றேன். பொதுவாக போராளிகளின் வீர மரணம், அந்த மரணத்தினை அவர்கள் விரும்பி பெற்றதன் பின்னால் இருக்கும் தாயாக விடுதலை பற்றிய அவர்களின் அவா, அந்த அவாவை காரண காரியங்கள் வைத்து விமர்சிப்பது,அவர்களின் உறவுகளின் சோகம் என்பவை மிக sensitive ஆன விடயம். இவை பற்றி எழுதும் போதும் எழுதியதற்கு எதிர்வினை எழுதும் போதும் வெறும் உணர்வு நிலைப் பட்டு எழுத முடியாது..

மற்றது, இன்னுமொருவன் தன் உணர்வினைதானே எழுதினார்..அதில் ஏன் பிழை கண்டு பிடிக்கிறியள் என்பதும், அதை விமர்சித்தால் கருத்து சுதந்திரம் இல்லை என்று வாயிற்கு பூட்டு போட்டு கரும்பு நக்கல் அடிப்பதும் தவறு. அவர் என்று தன் உணர்வினை மற்றவர்களுடன் பகிர பொது மேடைக்கு கொண்டு வந்து பிரசுரித்தாரோ, அந்த நிமிடமே அது விவாதத்திற்கான விடயமா ஆகி அவரின் தனிப்பட்ட கருத்து என்பதில் இருந்து மாறி விடுகின்றது

இன்னுமொருவன்,

போகிற போக்கில் 'யாழில்' இதை போன்றவற்றினை பகிரக் கூடாது என்ற பொருள் பட எழுதியுள்ளீர்கள். ஒரு சிறந்த கருத்தாளரான நீங்களே மற்றவர்களின் விமர்சனத்தினை பார்த்து சில கருத்து நிலைகளை எழுதாமல் விட்டு விட்டு ஒதுங்குவது சரியான விடயமா என்று யோசியுங்கள். எப்போதும் விமர்சனம் இனிப்பாகத் தான் இருக்க வேண்டுமா?

  • தொடங்கியவர்

வல்லைசகாரா,

நீங்கள் கேட்ட விளக்கத்தை இயன்றவரை தர முயலுகின்றேன்.

முதலில் என்னை ஒரு நிகழ்வு உலுக்கிப்போட்டது என்று பொய்யிற்கு எழுதவேண்டிய கட்டாயத்;தில் நானில்லை. என்னை ஒரு காட்சி உலுக்கியது என்று நான் எழுதினேன் என்றால் அக்காட்சி என்னை உலுக்கியது என்ற குறைந்தபட்ச ஒத்துக்கொள்ளல் ஆவது இல்லாத பட்சத்தில் பதிவு பினாத்தலாகத் தான் இருக்கும். அவ்வாறே, என்னை உலுக்கிய நிகழ்வு என்றால் அது உலகத்தையே உலுக்கும் நிகழ்வாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அளவில் நானில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆக, ஒரு காட்சி என்னுள் பதிந்த விதத்தில் எனக்குள் பிறந்து உணர்வு தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முதலிற் கூறி, நான் எதை எவ்வாறு உணரலாம் என்ற விடயத்தை எவரிடமும் கொடுக்க நான் தயாரில்லை என்பதைதயும் கூறி உங்கள் கேள்விக்குள் செல்லுகின்றேன்.

புpரசங்கத்தனமாக எழுதுவதில் அலுப்புத்தட்டியதால், சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு அவரவர் தங்களிற்குள் தோன்றும் உணர்வுகளை அல்லது புரிதல்களைப் பெற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்தேன். ஆனால், அது எத்தகைய ஆபத்தானது என்பதனை எனது கட்டுரை “அனைத்து மாவீரர்களின் தியாகத்தையும் அர்த்தம் அற்ற செயல் என்று குறிப்பிடுகிறது” என்று புரிந்து கொள்ளப்பட்டதில் இருந்து தெரிகிறது. ஏங்களது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளில் ஒன்று, தன்னைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் கீளானவர்கள் என்று பொதுவாகக் கருதுவது. அதாவது தேசியம், நாட்டுப்பற்று, மாவீரர் மரியாதை என்ற விடயங்களில் கூட, தம்மளவிற்கு நாட்டின்மீதோ நாடு சார்ந்தவை மீதோ எவரிற்கும் அக்கறை இருக்கமுடியாது என்ற இறுமாந்த தளத்தில் இருந்து தான் பலர் எந்த உரையாடலையும் உள்வாங்கத் தலைப்படுகிறார்கள். தம்மை நீதவான்களாகக் கருதி விடங்களைப் பார்க்கிறார்களே தவிர, கருத்தாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் அரிதாகக் காணப்படுகிறார்கள். நாடு என்றால் என்ன என்பதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தாம் நாட்டுப்பற்றார்ளர்கள் என்று உரக்கக் கூறுகிறார்கள். எவர் என்னத்தை நினைக்கலாம் உரைக்கலாம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே இவர்களின் மனநிலையினைச் சரியோ பிழையோ என்று இங்கு நான் கூறவில்லை. மாறாக, பல கருத்துக்கள் பின்னிப்பெடலெடுக்கப்படுவதற்கான அடித்தளமாக எனது சிற்றறிவிற்கு எட்டிய ஒரு விடயமாக மட்டும் இதைக் குறிப்பிடுகிறேன்.

எனது பதிவு முளுவதும் “நாங்கள்” என்ற பதத்தைத் தான் இயன்றவரை பாவித்துள்ளேன். மற்றையவர்கள் நாங்க்ள் என்ற பதிவினை எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், என்னபை; பொறுத்தவரை நாங்கள் என்ற பதம் என்னையும் உள்ளடக்கியதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது இனியும் இருக்கும். மேலும், ஒரு காணொளி ஒரு உணர்வினை எழுப்புகிறது என்றால், மூளையில் முன்னெப்போதும் அறவே படாத ஒரு புதியவிடயத்தை அந்தக் காணொளி காட்டி அந்தக் காணொளியின் ஊடாக மட்டும் தான் அந்த விடயம் அறியப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. ஏற்கனவே உணரப்பட்டு, கிரகிக்கப்பட்டு உச்சத்தில் இருந்த ஒரு உணர்வு நிலை காணொளியால் கடைசியாக உருட்டிவிடப்பட்டதாயும் அர்த்தம் கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் சிவப்பிட்டுக்குறிப்பிட்டுக் கேட்ட விடயத்தை நானுணர்ந்தவகையில் ஏறத்தாள சுகனின் பதிவு புரிந்து விளக்கியுள்ளது. என்னை எவ்வாறு தாக்கலாம் என்ற கோணத்தில் மட்டும் சிந்தியாது, சொல்லப்பட்ட விடயத்தைக் கொஞ்சமேனும் கிரகிக்கத் தலைப்படும் எவரிற்கும், என்ன அர்த்தத்தில் மேற்படி வசனம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான விடயங்கள் பதிவில் நிறைந்து கிடக்கின்றன. ஏற்கனவே சொல்லியது போல, பிரசங்கங்களைக் கேட்பதிலும் எழுதுவதிலும் ஏற்பட்ட வெறுப்பால் தான் அனைத்தையும் எழுத்துக் கூட்டிச் சொல்லவில்லை. அவ்வாறு எழுதியதிலும் ஒரு பலன் கிடைக்கவே செய்கின்றது. இங்கு கேட்கப்பட்டதாலும் திரிக்கப்படதாலும் சொன்னதைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் குறிப்பிட்ட தாயின் உரையும் அது நடந்த நிகழ்வும் புலத்தில் நடந்தது. புலத்தில் ஆனையிறவு வீழ்ச்சிக்காலத்தில் குறைந்தபட்சம் 75 வீததத்திற்கு மேலானோர் உடல் மண்ணிற்குத் உயிர் தமிழிற்கு என்று வாழ்பவர்களாகவே வெளிப்பட்டார்கள். தமிழரல்லாதவர்களும் கூட இவ்வாறே தமிழரைக் கண்டார்கள். கனடாவிலும் கூட நிகழ்நத ஆனையிறவு வெற்றி நிகழ்வு, பொங்கு தமிழ் என்பன பிரமிப்பூட்டும் வகையில் பல விடயங்களைக் காட்டின. ஆனால் கூட்டத்தில் கோசம் போடுவதற்கும் தனிநபர் பங்களிப்பிற்குமிடையேயான மலையளவு வேறுபாட்டினை தொண்டர்களாக வாழ்வின் ஏதாவது ஒரு சமயத்தில் ஏனும் பணிபுரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும், ஊhரிற்குப்போகும் போது தாம் தன்னிகரில்லா ஆதரவாளர்கள் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் அவசியம் என்பதைப் பலர் விரும்பினார்கள். இதனால் பொதுமேடைகள் மற்றும் நிகழ்வுகளில் உணர்ச்சி சற்று அபரிமிதமாகக் கொப்புளித்துக்கொண்டிருந்தது. நான் கூறிய உரையினை மேற்கொண்ட தாயார், அவரது வயது முதலியன காரணமாக எமது மக்களைப் பொது இடங்களில் மட்டுமே கண்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இன்று நிலைமை வேறு. முன்னர் ஆதரவு முகம் காட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தபலர் இன்று சிங்களம் தம்மை கொழும்பு விமானநிலையத்தில் அடையாளம் காணாது இருக்கவேண்டும் என்ற அவசியத்தை உணருகிறார்கள். இதனால் பொது இடங்கள், குறிப்பாக நிகழ்வுகள் படமாக்கப்படும் இடங்களில் எம்மவர் பலர் மிகுந்த அவதானத்தோடு செயற்படுகிறார்கள். முன்னர் இருந்த மேடைகளிற்கும் இன்று இருக்கும் மேடைகளிற்கும் நிகழ்வுகளிற்கும் இடையே பலத்த வேறுபாடு. இதை அவதானிப்பதற்கு அறிவு தேவையில்லை, கண்கள் இருந்தால் போதுமானது. இல்லை அப்படி இல்லை என்று தீக்கோளித்தனமாக கண்களை இறுக்க மூடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது முதலாவது.

ஆனையிறவு வெற்றிவிழா மற்றும் பொங்குதமிழ் முதலியனவற்றில் 75 வீதத்திற்கு மேல் என்று கஸ்ரமில்லாமல் எம்மால் வெள்ளையிரிற்கு நிறுவ முடிந்த எமது ஆதரவுத் தளம், வட்டுக்கோட்டை வாக்கெடுப்புத் தொடங்கிய வெள்ளப் பெருக்கான தேர்தல்களில் 18 வீதத்திற்கும் குறைந்து போனதை மறைப்பது அவசியமற்றது. அடாது மழை பெய்தாலும் விடாது புயலடித்தாலும் தமிழீழக்கனவிற்காய் கதவு திறப்போராய் 18 வீதத்தினரை மட்டுமே நிறுவக்கூடிய நிலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்தேறியது.

அடுத்து, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழத்தாகத்தை சுவாசத்தோடு ஒப்பிட்டு அதை விட்டால் வேறுவழியில்லை என்று நிலவிய கருத்தில் வஞ்சக சூழ்ச்சி ஏதுமின்றி உண்மையில் விவாதங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்தவண்ணம் உள்ளன. மாற்றுக்கருத்து என்று இருந்துவரும் தளங்கள் கூட வினைத்திறன் இழந்து, ஆதரவுத்தளத்து மக்கள் தங்களிற்குள் நடந்தேறிய விடயங்கள் பற்றிக் கதைக்கிறார்கள். மீளாய்வுகள் நடக்கின்றன. இந்த மாற்றம் அவசியமானது தான். குறிப்பாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து, தனிநபர் பங்களிப்பு மற்றும் தியாகம் என்று வரும்போது ஓடி ஒளிப்பவர்களே தமிழ் நடுத்தரவர்க்கம் மற்றும் அதற்கு மேலான மட்டங்களில் காணப்படுகிறார்கள் என்பது. அதாவது காசு கொடுத்து, காசையும் ஏலமெண்டால் கொடுக்காமல் விட்டு கோசம் மட்டும் போட்டு, சண்டை நடத்த சண்டியர் தேடும் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. எங்கட பெடியள் என்று கண்ணை மின்னின பலர், இன்று வேறுவிதமாய்க் காதுபடக் கதைக்கிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேடல்கள் என்பவற்றிற்கு அப்பால் எம்மவரின் சந்தர்ப்பவாதம் சாhந்;த நடித்தல்களும் பிதற்றல்களும் கடந்த ஒன்றரை ஆண்டில் பொத்திவைக்கமுடியாதபடி வெளிப்பட்டுள்ளது. யார் நம்புகிறார்களோ இல்லையோ, தனது மகனை மாவீரர் பட்டியலில் பார்க்கின்ற ஒரு தாயால், இன்றயை நிலையில் எங்கள்; சமூகத்தின் முகடூடிககள் களட்டப்பட்ட உண்மையான அபிலாசைகளைக் காணமுடிகிறது. இல்லை அப்பிடி இல்லை என்பவர்களுடன் விவாதிக்க நான் தயாரில்லை. இது இரண்டாவது.

உணர்வை வியாபாரமாக்கும் ஒரு கூட்டம் பற்றி யாழ்களத்தில் பலர் கதைத்துள்ள நிலையில் இது பற்றி எதையும் மேலதிகமாகக் கூறத் தேவையில்லை. ஆனால், வெளியில் கமராவில் முகம் வராதிருப்பதில் கவனமாக இருக்கும் பலர் இணையத்தளங்களில் முகமூடி போட்டுக் கோசம் போடுவது நடக்காமல் இல்லை. அதுவும், உணர்வுப் பொறுப்பாளர்களிடம் இரகசியமாக இந்த முகடூடியில் இந்தத் தளத்தில் நான் தான் எழுதுகிறேன் கவனியுங்கள் என்று கூறிவிட்டு, கருத்து மழை பொழிவதும் இதனால் உணர்வுப் பொறுப்பாளரின் மோதிரக்கையால் குட்டுவாங்குவதும் எமது சமூகத்தில் இல்லை என்று எவரின் கூறின், அது அவர்கள் தெரிவு. இது மூன்றாவது.

நாடு என்றால் என். நாட்டின் அங்கங்கள் எவை. போராட்டம் என்றால் என்ன. அப்ஸ்ற்றாக்ற் கோசங்களிற்கு அப்பால், அடிப்படைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத பலர் அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை ஓய்வின்றி கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு மாவீரனின், எங்களிற்காக மரித்த தியாகியின், தாயாரின் உணர்வுகளைப் புரியமுடியாத கூட்டம், அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை மட்டும் மூச்சுவிடாது கத்திக்கொண்டிருக்கின்றது. தனது தாயார் தான் எவ்வாறு நினைப்பார் என்று கிஞ்சித்தும் எண்ணாது, மாவீரர் என்பதை ஒரு அப்ஸ்ற்றாக்க் கருத்தியலாக மட்டும் கருதி, மாவீரரின் தாயார் என்றால் இப்டித்த் தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறையினை உலகில் உள்ள அனைத்து மாவீரர் தாய் தொடர்பிலும் தாமாக முன்வைத்து, ஹிப்போகிறசியே சுவாசமாகக் கருத்தாடும் கூட்டத்தோடு விவாதிப்பது இலகுவல்ல. பல சமயங்களில் எதையும் கூறாதிருப்பது பலன் மிக்கது. தன் பிள்ளையின் இலக்கை அடைய அனைவரும் ஆயுதம் தூக்கி எதிரிகளை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்கள் என்று கூறுபவர் மட்டுமே ஒரு மாவீரர் தாயாராக இருக்கமுடியும் என்று விவாதிப்பவர்களோடு விடயங்கள் பற்றிக் கதைப்பது நேர விரயம் என்பதால் இவ்விடயத்தில் நான் விவாதத்தை இயலுமானவரை குறைத்து வருகிறேன்.

இழப்பு என்பது கொடியது. ஆதை ஆற்றுப்படுத்துவது உண்மைய்pல் இயலாதது. ஆனால் வாழ்வு தொடர்கையில் இழப்பின் நோவைக் கட்டுப்படுத்தப் பலரும் பல வழிகளில் முனைகிறார்கள். போராட்டம் மட்டும் அன்றி அனைத்து வாழ்விலும் இது உண்டு. சிலர் தன் அன்பிற்குரியவர் கடவுளிடம் சென்றதாய் நம்பி ஆறதல் பட முனைகிறார்கள். இறப்பில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ ஆற்றுப்படுத்தல்கள் பொதுவாக அர்த்ம் கற்பிப்பனவாகவே இருந்துவருகின்றன. அவ்வகையில், எங்க்ள் மாவீரர் பெற்றோரை நாங்களாககத் தேடித் தேடி அவர்களின் பிள்ளைகளின் தியாகம் பற்றி நா தழுதழுக்கக் கதைத்து, நாங்கள் எவ்வாறு அந்த வழியில் இறுதி வரை செல்வோம் என்று நம்ப வைத்து, கோசமெழுப்பி விட்டு, இன்று எங்களிற்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நாங்கள் பலர் வாழ்கிறோம். நடந்து முடிந்த எதிலும் எங்களிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பது போல் இருக்கின்றோம். நாங்கள் எங்களிற்குள் கன்னை பிரித்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டு கிடக்கிறோம். இதைப்பார்க்கும் ஒரு மாவீரர் தாய் தன்னை முன்னர் தற்காலிகமாகவேனும் ஆற்றுப்படுத்திய பல விடயங்கள் இன்று வலுவிழந்து நிற்பதனை உணர்வு தவிர்க்க முடியாதது. உண்மையில் கோசங்களை விட்டு நிய உலகில் மாவீரர் பெற்றோரோடு சக மனிதர்களாகப் பழகுபவர்கள் இதை அறிவது மிக இலகு.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் எழுதியது சரியென்று வாதிடுவதில் தவறில்லை.

ஆனால் அந்த வசனங்கள் எம்மை சீண்டின அல்லது காயப்படுத்தின என்று நாம் சொல்லுவதை

அவ்வரிகள் எதற்காக எம்மை பாதித்தன

அல்லது நாம் யாரை நேசித்ததால் எம்மை அவை தாக்கின என்று புரிந்து கொள்ளக்கூடவா தங்களால் முடியவில்லை.

நீங்கள் எம்மை

விசுகுவை அல்லது தயாவை அல்லது ஜீவாவை அல்லது நிழலியை எங்கும் சீண்டவில்லையே.

தாங்களும் எம்மைப்போல் அந்த தியாகங்களை நேசிப்பவராக இருந்தால்...........?

எம்மை புரிந்து கொள்ள தாமதிக்கும் காரணமென்ன..?

இது வெகு சென்சிட்டிவான விடயம் நேரடியா உண்மையை எழுதமுடியாது.

எமது அரசியல் தேவைக்காக உருவகிக்கபட்ட ஒருவிடயம்.பாவம் அந்த அம்மாக்களை வாய் திறந்து அழக்கூட விடவில்லை.அவர்களுக்கு வேறு ஒரு தெரிவும் இல்லை என்பதே உண்மை.நீங்கள் ஒரு போதும் உண்மையை ஒப்புக்கொள்ளப்போவதில்லை.

இதற்கு இங்கு வந்து சிலர் வியாக்கியானம் வேறு.

உங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு இங்கு வந்து அதை நியாயப்படுத்தி கருத்து எழுதினால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை ஆயிரம் தாய்மார் தம்பிள்ளைகளை(போராடப்போய் இறந்த மாவீரர்களை தவிர்த்து)விமானக்குண்டு வீச்சிலும், இனந்தெரியாதோர்,மாற்றுக்குழுக்களால் நாயைச் சுடுவது போல நடுத்தெருவில் சுட்டு தம் பிள்ளைகளை இழந்த பின்னரும் அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தாய்மாரின் உணர்வுகளை பதிந்திருந்தால் உண்மையாகவே அந்த உணர்வு எல்லாரையுமே உலுக்கிப்போட்டிருக்கும், அந்த தாயின் நிலைமை தானே அநியாயமாகப் பறிக்கப்பட்ட தம் பிள்ளைகளின் தாயின் மனநிலையாகவும் இருக்கும்? போராடப்போன மகனின் தாய்க்கு கொஞ்சந்தன்னும் ஆறுதல் இருக்கும் அல்லது தன்னைத்தானே தேற்றிக்கொள்ளவாவது முடியும் தன் பிள்ளை தமிழீழ தாய் நாட்டிற்கும்,தமிழ் மக்களின் விடிவிற்காக‌ தன்னும் இறந்தான் என்று ஆனால் மற்ற தாய்மாரின் உணர்வுகளை தன்னும் யாராச்சும் பதிவு பண்ணினோமா?

"மாவீரர்தினம் சார்ந்து ஒரு உணர்வுப்பகிர்வு" என்று மாவீரர்தினம் நெருங்கும் வேளையில் சொல்லவருவது என்னவென்று ஒவ்வொரு பந்தியிலும் அப்பட்டமாகத்தெரிகிறது. அதை படிக்கும் ஒவ்வொருக்கும் புரியும் ஆனால் "அரிவரி பிள்ளைக்கு அம்புலிமாமா கதை சொல்வது போல" சொல்லிவிட்டு அதுக்கு தஞ்சாவூர் பொம்மை தலையாட்டுவது போல ஆட்டவேண்டுமாம்.

"மாவீரர்களின் தியாகத்தை கேள்விக்கு உட்படுத்தவோ,கொச்சைப்படுத்தவோ யாருக்கும் தகுதியோ,அருகதையோ கிடையாது." மேற்கண்டவரி மூலம் நான் சொல்ல வந்ததில் எந்த தவறும் இருப்பதாகத்தெரியவில்லை. இது எனக்கும் சேர்த்து தான். ஏன் அது எம் தேசியத்தலைவராய் இருந்தால் கூடத்தான்.

கரும்பு நக்கல் அடிப்பதும் தவறு.

குறிப்பிட்ட புகைப்படம் நக்கலிற்கு இணைக்கப்பட்டது என்று எதை வைத்து கூறுகின்றீர்கள்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வல்லைசகாரா,

நீங்கள் கேட்ட விளக்கத்தை இயன்றவரை தர முயலுகின்றேன்.

முதலில் என்னை ஒரு நிகழ்வு உலுக்கிப்போட்டது என்று பொய்யிற்கு எழுதவேண்டிய கட்டாயத்;தில் நானில்லை. என்னை ஒரு காட்சி உலுக்கியது என்று நான் எழுதினேன் என்றால் அக்காட்சி என்னை உலுக்கியது என்ற குறைந்தபட்ச ஒத்துக்கொள்ளல் ஆவது இல்லாத பட்சத்தில் பதிவு பினாத்தலாகத் தான் இருக்கும். அவ்வாறே, என்னை உலுக்கிய நிகழ்வு என்றால் அது உலகத்தையே உலுக்கும் நிகழ்வாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அளவில் நானில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆக, ஒரு காட்சி என்னுள் பதிந்த விதத்தில் எனக்குள் பிறந்து உணர்வு தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முதலிற் கூறி, நான் எதை எவ்வாறு உணரலாம் என்ற விடயத்தை எவரிடமும் கொடுக்க நான் தயாரில்லை என்பதைதயும் கூறி உங்கள் கேள்விக்குள் செல்லுகின்றேன்.

புpரசங்கத்தனமாக எழுதுவதில் அலுப்புத்தட்டியதால், சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு அவரவர் தங்களிற்குள் தோன்றும் உணர்வுகளை அல்லது புரிதல்களைப் பெற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்தேன். ஆனால், அது எத்தகைய ஆபத்தானது என்பதனை எனது கட்டுரை “அனைத்து மாவீரர்களின் தியாகத்தையும் அர்த்தம் அற்ற செயல் என்று குறிப்பிடுகிறது” என்று புரிந்து கொள்ளப்பட்டதில் இருந்து தெரிகிறது. ஏங்களது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளில் ஒன்று, தன்னைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் கீளானவர்கள் என்று பொதுவாகக் கருதுவது. அதாவது தேசியம், நாட்டுப்பற்று, மாவீரர் மரியாதை என்ற விடயங்களில் கூட, தம்மளவிற்கு நாட்டின்மீதோ நாடு சார்ந்தவை மீதோ எவரிற்கும் அக்கறை இருக்கமுடியாது என்ற இறுமாந்த தளத்தில் இருந்து தான் பலர் எந்த உரையாடலையும் உள்வாங்கத் தலைப்படுகிறார்கள். தம்மை நீதவான்களாகக் கருதி விடங்களைப் பார்க்கிறார்களே தவிர, கருத்தாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் அரிதாகக் காணப்படுகிறார்கள். நாடு என்றால் என்ன என்பதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தாம் நாட்டுப்பற்றார்ளர்கள் என்று உரக்கக் கூறுகிறார்கள். எவர் என்னத்தை நினைக்கலாம் உரைக்கலாம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே இவர்களின் மனநிலையினைச் சரியோ பிழையோ என்று இங்கு நான் கூறவில்லை. மாறாக, பல கருத்துக்கள் பின்னிப்பெடலெடுக்கப்படுவதற்கான அடித்தளமாக எனது சிற்றறிவிற்கு எட்டிய ஒரு விடயமாக மட்டும் இதைக் குறிப்பிடுகிறேன்.

எனது பதிவு முளுவதும் “நாங்கள்” என்ற பதத்தைத் தான் இயன்றவரை பாவித்துள்ளேன். மற்றையவர்கள் நாங்க்ள் என்ற பதிவினை எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், என்னபை; பொறுத்தவரை நாங்கள் என்ற பதம் என்னையும் உள்ளடக்கியதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது இனியும் இருக்கும். மேலும், ஒரு காணொளி ஒரு உணர்வினை எழுப்புகிறது என்றால், மூளையில் முன்னெப்போதும் அறவே படாத ஒரு புதியவிடயத்தை அந்தக் காணொளி காட்டி அந்தக் காணொளியின் ஊடாக மட்டும் தான் அந்த விடயம் அறியப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. ஏற்கனவே உணரப்பட்டு, கிரகிக்கப்பட்டு உச்சத்தில் இருந்த ஒரு உணர்வு நிலை காணொளியால் கடைசியாக உருட்டிவிடப்பட்டதாயும் அர்த்தம் கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் சிவப்பிட்டுக்குறிப்பிட்டுக் கேட்ட விடயத்தை நானுணர்ந்தவகையில் ஏறத்தாள சுகனின் பதிவு புரிந்து விளக்கியுள்ளது. என்னை எவ்வாறு தாக்கலாம் என்ற கோணத்தில் மட்டும் சிந்தியாது, சொல்லப்பட்ட விடயத்தைக் கொஞ்சமேனும் கிரகிக்கத் தலைப்படும் எவரிற்கும், என்ன அர்த்தத்தில் மேற்படி வசனம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான விடயங்கள் பதிவில் நிறைந்து கிடக்கின்றன. ஏற்கனவே சொல்லியது போல, பிரசங்கங்களைக் கேட்பதிலும் எழுதுவதிலும் ஏற்பட்ட வெறுப்பால் தான் அனைத்தையும் எழுத்துக் கூட்டிச் சொல்லவில்லை. அவ்வாறு எழுதியதிலும் ஒரு பலன் கிடைக்கவே செய்கின்றது. இங்கு கேட்கப்பட்டதாலும் திரிக்கப்படதாலும் சொன்னதைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் குறிப்பிட்ட தாயின் உரையும் அது நடந்த நிகழ்வும் புலத்தில் நடந்தது. புலத்தில் ஆனையிறவு வீழ்ச்சிக்காலத்தில் குறைந்தபட்சம் 75 வீததத்திற்கு மேலானோர் உடல் மண்ணிற்குத் உயிர் தமிழிற்கு என்று வாழ்பவர்களாகவே வெளிப்பட்டார்கள். தமிழரல்லாதவர்களும் கூட இவ்வாறே தமிழரைக் கண்டார்கள். கனடாவிலும் கூட நிகழ்நத ஆனையிறவு வெற்றி நிகழ்வு, பொங்கு தமிழ் என்பன பிரமிப்பூட்டும் வகையில் பல விடயங்களைக் காட்டின. ஆனால் கூட்டத்தில் கோசம் போடுவதற்கும் தனிநபர் பங்களிப்பிற்குமிடையேயான மலையளவு வேறுபாட்டினை தொண்டர்களாக வாழ்வின் ஏதாவது ஒரு சமயத்தில் ஏனும் பணிபுரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும், ஊhரிற்குப்போகும் போது தாம் தன்னிகரில்லா ஆதரவாளர்கள் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் அவசியம் என்பதைப் பலர் விரும்பினார்கள். இதனால் பொதுமேடைகள் மற்றும் நிகழ்வுகளில் உணர்ச்சி சற்று அபரிமிதமாகக் கொப்புளித்துக்கொண்டிருந்தது. நான் கூறிய உரையினை மேற்கொண்ட தாயார், அவரது வயது முதலியன காரணமாக எமது மக்களைப் பொது இடங்களில் மட்டுமே கண்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இன்று நிலைமை வேறு. முன்னர் ஆதரவு முகம் காட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தபலர் இன்று சிங்களம் தம்மை கொழும்பு விமானநிலையத்தில் அடையாளம் காணாது இருக்கவேண்டும் என்ற அவசியத்தை உணருகிறார்கள். இதனால் பொது இடங்கள், குறிப்பாக நிகழ்வுகள் படமாக்கப்படும் இடங்களில் எம்மவர் பலர் மிகுந்த அவதானத்தோடு செயற்படுகிறார்கள். முன்னர் இருந்த மேடைகளிற்கும் இன்று இருக்கும் மேடைகளிற்கும் நிகழ்வுகளிற்கும் இடையே பலத்த வேறுபாடு. இதை அவதானிப்பதற்கு அறிவு தேவையில்லை, கண்கள் இருந்தால் போதுமானது. இல்லை அப்படி இல்லை என்று தீக்கோளித்தனமாக கண்களை இறுக்க மூடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது முதலாவது.

ஆனையிறவு வெற்றிவிழா மற்றும் பொங்குதமிழ் முதலியனவற்றில் 75 வீதத்திற்கு மேல் என்று கஸ்ரமில்லாமல் எம்மால் வெள்ளையிரிற்கு நிறுவ முடிந்த எமது ஆதரவுத் தளம், வட்டுக்கோட்டை வாக்கெடுப்புத் தொடங்கிய வெள்ளப் பெருக்கான தேர்தல்களில் 18 வீதத்திற்கும் குறைந்து போனதை மறைப்பது அவசியமற்றது. அடாது மழை பெய்தாலும் விடாது புயலடித்தாலும் தமிழீழக்கனவிற்காய் கதவு திறப்போராய் 18 வீதத்தினரை மட்டுமே நிறுவக்கூடிய நிலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்தேறியது.

அடுத்து, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழத்தாகத்தை சுவாசத்தோடு ஒப்பிட்டு அதை விட்டால் வேறுவழியில்லை என்று நிலவிய கருத்தில் வஞ்சக சூழ்ச்சி ஏதுமின்றி உண்மையில் விவாதங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்தவண்ணம் உள்ளன. மாற்றுக்கருத்து என்று இருந்துவரும் தளங்கள் கூட வினைத்திறன் இழந்து, ஆதரவுத்தளத்து மக்கள் தங்களிற்குள் நடந்தேறிய விடயங்கள் பற்றிக் கதைக்கிறார்கள். மீளாய்வுகள் நடக்கின்றன. இந்த மாற்றம் அவசியமானது தான். குறிப்பாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து, தனிநபர் பங்களிப்பு மற்றும் தியாகம் என்று வரும்போது ஓடி ஒளிப்பவர்களே தமிழ் நடுத்தரவர்க்கம் மற்றும் அதற்கு மேலான மட்டங்களில் காணப்படுகிறார்கள் என்பது. அதாவது காசு கொடுத்து, காசையும் ஏலமெண்டால் கொடுக்காமல் விட்டு கோசம் மட்டும் போட்டு, சண்டை நடத்த சண்டியர் தேடும் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. எங்கட பெடியள் என்று கண்ணை மின்னின பலர், இன்று வேறுவிதமாய்க் காதுபடக் கதைக்கிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேடல்கள் என்பவற்றிற்கு அப்பால் எம்மவரின் சந்தர்ப்பவாதம் சாhந்;த நடித்தல்களும் பிதற்றல்களும் கடந்த ஒன்றரை ஆண்டில் பொத்திவைக்கமுடியாதபடி வெளிப்பட்டுள்ளது. யார் நம்புகிறார்களோ இல்லையோ, தனது மகனை மாவீரர் பட்டியலில் பார்க்கின்ற ஒரு தாயால், இன்றயை நிலையில் எங்கள்; சமூகத்தின் முகடூடிககள் களட்டப்பட்ட உண்மையான அபிலாசைகளைக் காணமுடிகிறது. இல்லை அப்பிடி இல்லை என்பவர்களுடன் விவாதிக்க நான் தயாரில்லை. இது இரண்டாவது.

உணர்வை வியாபாரமாக்கும் ஒரு கூட்டம் பற்றி யாழ்களத்தில் பலர் கதைத்துள்ள நிலையில் இது பற்றி எதையும் மேலதிகமாகக் கூறத் தேவையில்லை. ஆனால், வெளியில் கமராவில் முகம் வராதிருப்பதில் கவனமாக இருக்கும் பலர் இணையத்தளங்களில் முகமூடி போட்டுக் கோசம் போடுவது நடக்காமல் இல்லை. அதுவும், உணர்வுப் பொறுப்பாளர்களிடம் இரகசியமாக இந்த முகடூடியில் இந்தத் தளத்தில் நான் தான் எழுதுகிறேன் கவனியுங்கள் என்று கூறிவிட்டு, கருத்து மழை பொழிவதும் இதனால் உணர்வுப் பொறுப்பாளரின் மோதிரக்கையால் குட்டுவாங்குவதும் எமது சமூகத்தில் இல்லை என்று எவரின் கூறின், அது அவர்கள் தெரிவு. இது மூன்றாவது.

நாடு என்றால் என். நாட்டின் அங்கங்கள் எவை. போராட்டம் என்றால் என்ன. அப்ஸ்ற்றாக்ற் கோசங்களிற்கு அப்பால், அடிப்படைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத பலர் அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை ஓய்வின்றி கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு மாவீரனின், எங்களிற்காக மரித்த தியாகியின், தாயாரின் உணர்வுகளைப் புரியமுடியாத கூட்டம், அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை மட்டும் மூச்சுவிடாது கத்திக்கொண்டிருக்கின்றது. தனது தாயார் தான் எவ்வாறு நினைப்பார் என்று கிஞ்சித்தும் எண்ணாது, மாவீரர் என்பதை ஒரு அப்ஸ்ற்றாக்க் கருத்தியலாக மட்டும் கருதி, மாவீரரின் தாயார் என்றால் இப்டித்த் தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறையினை உலகில் உள்ள அனைத்து மாவீரர் தாய் தொடர்பிலும் தாமாக முன்வைத்து, ஹிப்போகிறசியே சுவாசமாகக் கருத்தாடும் கூட்டத்தோடு விவாதிப்பது இலகுவல்ல. பல சமயங்களில் எதையும் கூறாதிருப்பது பலன் மிக்கது. தன் பிள்ளையின் இலக்கை அடைய அனைவரும் ஆயுதம் தூக்கி எதிரிகளை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்கள் என்று கூறுபவர் மட்டுமே ஒரு மாவீரர் தாயாராக இருக்கமுடியும் என்று விவாதிப்பவர்களோடு விடயங்கள் பற்றிக் கதைப்பது நேர விரயம் என்பதால் இவ்விடயத்தில் நான் விவாதத்தை இயலுமானவரை குறைத்து வருகிறேன்.

இழப்பு என்பது கொடியது. ஆதை ஆற்றுப்படுத்துவது உண்மைய்pல் இயலாதது. ஆனால் வாழ்வு தொடர்கையில் இழப்பின் நோவைக் கட்டுப்படுத்தப் பலரும் பல வழிகளில் முனைகிறார்கள். போராட்டம் மட்டும் அன்றி அனைத்து வாழ்விலும் இது உண்டு. சிலர் தன் அன்பிற்குரியவர் கடவுளிடம் சென்றதாய் நம்பி ஆறதல் பட முனைகிறார்கள். இறப்பில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ ஆற்றுப்படுத்தல்கள் பொதுவாக அர்த்ம் கற்பிப்பனவாகவே இருந்துவருகின்றன. அவ்வகையில், எங்க்ள் மாவீரர் பெற்றோரை நாங்களாககத் தேடித் தேடி அவர்களின் பிள்ளைகளின் தியாகம் பற்றி நா தழுதழுக்கக் கதைத்து, நாங்கள் எவ்வாறு அந்த வழியில் இறுதி வரை செல்வோம் என்று நம்ப வைத்து, கோசமெழுப்பி விட்டு, இன்று எங்களிற்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நாங்கள் பலர் வாழ்கிறோம். நடந்து முடிந்த எதிலும் எங்களிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பது போல் இருக்கின்றோம். நாங்கள் எங்களிற்குள் கன்னை பிரித்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டு கிடக்கிறோம். இதைப்பார்க்கும் ஒரு மாவீரர் தாய் தன்னை முன்னர் தற்காலிகமாகவேனும் ஆற்றுப்படுத்திய பல விடயங்கள் இன்று வலுவிழந்து நிற்பதனை உணர்வு தவிர்க்க முடியாதது. உண்மையில் கோசங்களை விட்டு நிய உலகில் மாவீரர் பெற்றோரோடு சக மனிதர்களாகப் பழகுபவர்கள் இதை அறிவது மிக இலகு.

நன்றி இன்னுமொருவன்,

உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திரியில் உள்ள ஒரு சொற்பதம் அதனை வாசிக்கும் கருத்தாளர்களின் உடனடிப் பார்வைக்கு தவறானதான நிலைப்பாட்டைச் சுட்டக்கூடியதாக தோற்றப்பாட்டைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. அதனையே ஆழமாக ஊன்றிய வாசித்தலுக்கு உள்ளாக்கும்போது, அத்தோடு இன்றைய நிலைமைகளையும் கூட்டிக் கழித்து பார்க்கும்போது தவறானது என்ற அவசரகதியில் உணர்ச்சிவசப்படுதலுக்கு அப்பால் யதார்த்தம் என்பது தெளிவாகத் தன்னை இனங்காட்டுகிறது. உங்களுடைய பதிவின் தன்மையை ஆரம்பத்திலிருந்தே என்னால் உணரக்கூடியதாக இருந்தது., இருப்பினும் தாயகத்தையும், தமிழர் வாழ்வையும் உறுதியாக நேசிக்கும் தயா உங்களுடைய பதிவைச் சுட்டிக்காட்டி கேள்விக்குள்ளாக்கும்போது அதற்கான தெளிவை நீங்களே பதிவிடுவது சிறப்பானது என்பதால் உங்களிடம் தெளிவிடும்படி கேட்டிருந்தேன். உங்களுக்கு முன்பாகவே சுகன் தன் பதிவில் அழுத்தமாக பேசியிருக்கிறார்.

தயா, உங்களுடைய சுட்டிக்காட்டல் காலத்தின் தேவை, அப்பதிவு வெளிப்படையாகச் சொல்லாத விடயங்களை உங்களின் சுட்டிக்காட்டலுக்குப் பின்னர் வெளிப்படுத்தியிருக்கிறது.

நாங்கள் பல சந்தர்ப்பங்களில் எங்கள் பார்வையில், ஒருவரில் ஏதோ ஒரு வகையில் குற்றங்காண நேர்ந்தால், அது குற்றமா குற்றமற்றதா என்ற தெளிவடைதலுக்கு இடங்கொடுக்காமலே, எங்கள் எண்ணத்தவறை தொடர்ச்சியாக விபரீதமாக வளர்ப்பதையே அடிப்படையாக கொண்டவர்களாக இருக்கிறோம். அதனாலேயே எங்கள் இனம் வலுவிழந்த நிலையை தொடர்ச்சியாக அடைந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குள் மாற்றம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நான் நாடு விட்டு புலம் பெயர்ந்த போராளிகளின் தாய்மார்களுக்கு தங்கள் மகன் மீது பாசம் இல்லை என சொல்லவில்லை ஆனால் எப்படி அவர்களால் தங்கள் பிள்ளைகளை நாட்டுக்காக கொடுத்து விட்டு புலம் பெயர்ந்து அவர்களால் வாழ முடிகிறது என்பது தான் எனது கோணம்.அது தப்பாகவும் இருக்கலாம்.

வல்லைசகாரா,

நீங்கள் கேட்ட விளக்கத்தை இயன்றவரை தர முயலுகின்றேன்.

முதலில் என்னை ஒரு நிகழ்வு உலுக்கிப்போட்டது என்று பொய்யிற்கு எழுதவேண்டிய கட்டாயத்;தில் நானில்லை. என்னை ஒரு காட்சி உலுக்கியது என்று நான் எழுதினேன் என்றால் அக்காட்சி என்னை உலுக்கியது என்ற குறைந்தபட்ச ஒத்துக்கொள்ளல் ஆவது இல்லாத பட்சத்தில் பதிவு பினாத்தலாகத் தான் இருக்கும். அவ்வாறே, என்னை உலுக்கிய நிகழ்வு என்றால் அது உலகத்தையே உலுக்கும் நிகழ்வாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைக்கும் அளவில் நானில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆக, ஒரு காட்சி என்னுள் பதிந்த விதத்தில் எனக்குள் பிறந்து உணர்வு தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முதலிற் கூறி, நான் எதை எவ்வாறு உணரலாம் என்ற விடயத்தை எவரிடமும் கொடுக்க நான் தயாரில்லை என்பதைதயும் கூறி உங்கள் கேள்விக்குள் செல்லுகின்றேன்.

புpரசங்கத்தனமாக எழுதுவதில் அலுப்புத்தட்டியதால், சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு அவரவர் தங்களிற்குள் தோன்றும் உணர்வுகளை அல்லது புரிதல்களைப் பெற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்தேன். ஆனால், அது எத்தகைய ஆபத்தானது என்பதனை எனது கட்டுரை “அனைத்து மாவீரர்களின் தியாகத்தையும் அர்த்தம் அற்ற செயல் என்று குறிப்பிடுகிறது” என்று புரிந்து கொள்ளப்பட்டதில் இருந்து தெரிகிறது. ஏங்களது சமூகத்தில் உள்ள பல குறைபாடுகளில் ஒன்று, தன்னைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் கீளானவர்கள் என்று பொதுவாகக் கருதுவது. அதாவது தேசியம், நாட்டுப்பற்று, மாவீரர் மரியாதை என்ற விடயங்களில் கூட, தம்மளவிற்கு நாட்டின்மீதோ நாடு சார்ந்தவை மீதோ எவரிற்கும் அக்கறை இருக்கமுடியாது என்ற இறுமாந்த தளத்தில் இருந்து தான் பலர் எந்த உரையாடலையும் உள்வாங்கத் தலைப்படுகிறார்கள். தம்மை நீதவான்களாகக் கருதி விடங்களைப் பார்க்கிறார்களே தவிர, கருத்தாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்வோர் அரிதாகக் காணப்படுகிறார்கள். நாடு என்றால் என்ன என்பதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தாம் நாட்டுப்பற்றார்ளர்கள் என்று உரக்கக் கூறுகிறார்கள். எவர் என்னத்தை நினைக்கலாம் உரைக்கலாம் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே இவர்களின் மனநிலையினைச் சரியோ பிழையோ என்று இங்கு நான் கூறவில்லை. மாறாக, பல கருத்துக்கள் பின்னிப்பெடலெடுக்கப்படுவதற்கான அடித்தளமாக எனது சிற்றறிவிற்கு எட்டிய ஒரு விடயமாக மட்டும் இதைக் குறிப்பிடுகிறேன்.

எனது பதிவு முளுவதும் “நாங்கள்” என்ற பதத்தைத் தான் இயன்றவரை பாவித்துள்ளேன். மற்றையவர்கள் நாங்க்ள் என்ற பதிவினை எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், என்னபை; பொறுத்தவரை நாங்கள் என்ற பதம் என்னையும் உள்ளடக்கியதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது இனியும் இருக்கும். மேலும், ஒரு காணொளி ஒரு உணர்வினை எழுப்புகிறது என்றால், மூளையில் முன்னெப்போதும் அறவே படாத ஒரு புதியவிடயத்தை அந்தக் காணொளி காட்டி அந்தக் காணொளியின் ஊடாக மட்டும் தான் அந்த விடயம் அறியப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. ஏற்கனவே உணரப்பட்டு, கிரகிக்கப்பட்டு உச்சத்தில் இருந்த ஒரு உணர்வு நிலை காணொளியால் கடைசியாக உருட்டிவிடப்பட்டதாயும் அர்த்தம் கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் சிவப்பிட்டுக்குறிப்பிட்டுக் கேட்ட விடயத்தை நானுணர்ந்தவகையில் ஏறத்தாள சுகனின் பதிவு புரிந்து விளக்கியுள்ளது. என்னை எவ்வாறு தாக்கலாம் என்ற கோணத்தில் மட்டும் சிந்தியாது, சொல்லப்பட்ட விடயத்தைக் கொஞ்சமேனும் கிரகிக்கத் தலைப்படும் எவரிற்கும், என்ன அர்த்தத்தில் மேற்படி வசனம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கான விடயங்கள் பதிவில் நிறைந்து கிடக்கின்றன. ஏற்கனவே சொல்லியது போல, பிரசங்கங்களைக் கேட்பதிலும் எழுதுவதிலும் ஏற்பட்ட வெறுப்பால் தான் அனைத்தையும் எழுத்துக் கூட்டிச் சொல்லவில்லை. அவ்வாறு எழுதியதிலும் ஒரு பலன் கிடைக்கவே செய்கின்றது. இங்கு கேட்கப்பட்டதாலும் திரிக்கப்படதாலும் சொன்னதைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் குறிப்பிட்ட தாயின் உரையும் அது நடந்த நிகழ்வும் புலத்தில் நடந்தது. புலத்தில் ஆனையிறவு வீழ்ச்சிக்காலத்தில் குறைந்தபட்சம் 75 வீததத்திற்கு மேலானோர் உடல் மண்ணிற்குத் உயிர் தமிழிற்கு என்று வாழ்பவர்களாகவே வெளிப்பட்டார்கள். தமிழரல்லாதவர்களும் கூட இவ்வாறே தமிழரைக் கண்டார்கள். கனடாவிலும் கூட நிகழ்நத ஆனையிறவு வெற்றி நிகழ்வு, பொங்கு தமிழ் என்பன பிரமிப்பூட்டும் வகையில் பல விடயங்களைக் காட்டின. ஆனால் கூட்டத்தில் கோசம் போடுவதற்கும் தனிநபர் பங்களிப்பிற்குமிடையேயான மலையளவு வேறுபாட்டினை தொண்டர்களாக வாழ்வின் ஏதாவது ஒரு சமயத்தில் ஏனும் பணிபுரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும், ஊhரிற்குப்போகும் போது தாம் தன்னிகரில்லா ஆதரவாளர்கள் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் அவசியம் என்பதைப் பலர் விரும்பினார்கள். இதனால் பொதுமேடைகள் மற்றும் நிகழ்வுகளில் உணர்ச்சி சற்று அபரிமிதமாகக் கொப்புளித்துக்கொண்டிருந்தது. நான் கூறிய உரையினை மேற்கொண்ட தாயார், அவரது வயது முதலியன காரணமாக எமது மக்களைப் பொது இடங்களில் மட்டுமே கண்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இன்று நிலைமை வேறு. முன்னர் ஆதரவு முகம் காட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தபலர் இன்று சிங்களம் தம்மை கொழும்பு விமானநிலையத்தில் அடையாளம் காணாது இருக்கவேண்டும் என்ற அவசியத்தை உணருகிறார்கள். இதனால் பொது இடங்கள், குறிப்பாக நிகழ்வுகள் படமாக்கப்படும் இடங்களில் எம்மவர் பலர் மிகுந்த அவதானத்தோடு செயற்படுகிறார்கள். முன்னர் இருந்த மேடைகளிற்கும் இன்று இருக்கும் மேடைகளிற்கும் நிகழ்வுகளிற்கும் இடையே பலத்த வேறுபாடு. இதை அவதானிப்பதற்கு அறிவு தேவையில்லை, கண்கள் இருந்தால் போதுமானது. இல்லை அப்படி இல்லை என்று தீக்கோளித்தனமாக கண்களை இறுக்க மூடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது முதலாவது.

ஆனையிறவு வெற்றிவிழா மற்றும் பொங்குதமிழ் முதலியனவற்றில் 75 வீதத்திற்கு மேல் என்று கஸ்ரமில்லாமல் எம்மால் வெள்ளையிரிற்கு நிறுவ முடிந்த எமது ஆதரவுத் தளம், வட்டுக்கோட்டை வாக்கெடுப்புத் தொடங்கிய வெள்ளப் பெருக்கான தேர்தல்களில் 18 வீதத்திற்கும் குறைந்து போனதை மறைப்பது அவசியமற்றது. அடாது மழை பெய்தாலும் விடாது புயலடித்தாலும் தமிழீழக்கனவிற்காய் கதவு திறப்போராய் 18 வீதத்தினரை மட்டுமே நிறுவக்கூடிய நிலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்தேறியது.

அடுத்து, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழத்தாகத்தை சுவாசத்தோடு ஒப்பிட்டு அதை விட்டால் வேறுவழியில்லை என்று நிலவிய கருத்தில் வஞ்சக சூழ்ச்சி ஏதுமின்றி உண்மையில் விவாதங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்தவண்ணம் உள்ளன. மாற்றுக்கருத்து என்று இருந்துவரும் தளங்கள் கூட வினைத்திறன் இழந்து, ஆதரவுத்தளத்து மக்கள் தங்களிற்குள் நடந்தேறிய விடயங்கள் பற்றிக் கதைக்கிறார்கள். மீளாய்வுகள் நடக்கின்றன. இந்த மாற்றம் அவசியமானது தான். குறிப்பாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து, தனிநபர் பங்களிப்பு மற்றும் தியாகம் என்று வரும்போது ஓடி ஒளிப்பவர்களே தமிழ் நடுத்தரவர்க்கம் மற்றும் அதற்கு மேலான மட்டங்களில் காணப்படுகிறார்கள் என்பது. அதாவது காசு கொடுத்து, காசையும் ஏலமெண்டால் கொடுக்காமல் விட்டு கோசம் மட்டும் போட்டு, சண்டை நடத்த சண்டியர் தேடும் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன. எங்கட பெடியள் என்று கண்ணை மின்னின பலர், இன்று வேறுவிதமாய்க் காதுபடக் கதைக்கிறார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேடல்கள் என்பவற்றிற்கு அப்பால் எம்மவரின் சந்தர்ப்பவாதம் சாhந்;த நடித்தல்களும் பிதற்றல்களும் கடந்த ஒன்றரை ஆண்டில் பொத்திவைக்கமுடியாதபடி வெளிப்பட்டுள்ளது. யார் நம்புகிறார்களோ இல்லையோ, தனது மகனை மாவீரர் பட்டியலில் பார்க்கின்ற ஒரு தாயால், இன்றயை நிலையில் எங்கள்; சமூகத்தின் முகடூடிககள் களட்டப்பட்ட உண்மையான அபிலாசைகளைக் காணமுடிகிறது. இல்லை அப்பிடி இல்லை என்பவர்களுடன் விவாதிக்க நான் தயாரில்லை. இது இரண்டாவது.

உணர்வை வியாபாரமாக்கும் ஒரு கூட்டம் பற்றி யாழ்களத்தில் பலர் கதைத்துள்ள நிலையில் இது பற்றி எதையும் மேலதிகமாகக் கூறத் தேவையில்லை. ஆனால், வெளியில் கமராவில் முகம் வராதிருப்பதில் கவனமாக இருக்கும் பலர் இணையத்தளங்களில் முகமூடி போட்டுக் கோசம் போடுவது நடக்காமல் இல்லை. அதுவும், உணர்வுப் பொறுப்பாளர்களிடம் இரகசியமாக இந்த முகடூடியில் இந்தத் தளத்தில் நான் தான் எழுதுகிறேன் கவனியுங்கள் என்று கூறிவிட்டு, கருத்து மழை பொழிவதும் இதனால் உணர்வுப் பொறுப்பாளரின் மோதிரக்கையால் குட்டுவாங்குவதும் எமது சமூகத்தில் இல்லை என்று எவரின் கூறின், அது அவர்கள் தெரிவு. இது மூன்றாவது.

நாடு என்றால் என். நாட்டின் அங்கங்கள் எவை. போராட்டம் என்றால் என்ன. அப்ஸ்ற்றாக்ற் கோசங்களிற்கு அப்பால், அடிப்படைகள் என்ன என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத பலர் அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை ஓய்வின்றி கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு மாவீரனின், எங்களிற்காக மரித்த தியாகியின், தாயாரின் உணர்வுகளைப் புரியமுடியாத கூட்டம், அப்ஸ்ற்றாக்ற் கோசங்களை மட்டும் மூச்சுவிடாது கத்திக்கொண்டிருக்கின்றது. தனது தாயார் தான் எவ்வாறு நினைப்பார் என்று கிஞ்சித்தும் எண்ணாது, மாவீரர் என்பதை ஒரு அப்ஸ்ற்றாக்க் கருத்தியலாக மட்டும் கருதி, மாவீரரின் தாயார் என்றால் இப்டித்த் தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறையினை உலகில் உள்ள அனைத்து மாவீரர் தாய் தொடர்பிலும் தாமாக முன்வைத்து, ஹிப்போகிறசியே சுவாசமாகக் கருத்தாடும் கூட்டத்தோடு விவாதிப்பது இலகுவல்ல. பல சமயங்களில் எதையும் கூறாதிருப்பது பலன் மிக்கது. தன் பிள்ளையின் இலக்கை அடைய அனைவரும் ஆயுதம் தூக்கி எதிரிகளை நோக்கி அணிவகுத்துச் செல்லுங்கள் என்று கூறுபவர் மட்டுமே ஒரு மாவீரர் தாயாராக இருக்கமுடியும் என்று விவாதிப்பவர்களோடு விடயங்கள் பற்றிக் கதைப்பது நேர விரயம் என்பதால் இவ்விடயத்தில் நான் விவாதத்தை இயலுமானவரை குறைத்து வருகிறேன்.

இழப்பு என்பது கொடியது. ஆதை ஆற்றுப்படுத்துவது உண்மைய்pல் இயலாதது. ஆனால் வாழ்வு தொடர்கையில் இழப்பின் நோவைக் கட்டுப்படுத்தப் பலரும் பல வழிகளில் முனைகிறார்கள். போராட்டம் மட்டும் அன்றி அனைத்து வாழ்விலும் இது உண்டு. சிலர் தன் அன்பிற்குரியவர் கடவுளிடம் சென்றதாய் நம்பி ஆறதல் பட முனைகிறார்கள். இறப்பில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ ஆற்றுப்படுத்தல்கள் பொதுவாக அர்த்ம் கற்பிப்பனவாகவே இருந்துவருகின்றன. அவ்வகையில், எங்க்ள் மாவீரர் பெற்றோரை நாங்களாககத் தேடித் தேடி அவர்களின் பிள்ளைகளின் தியாகம் பற்றி நா தழுதழுக்கக் கதைத்து, நாங்கள் எவ்வாறு அந்த வழியில் இறுதி வரை செல்வோம் என்று நம்ப வைத்து, கோசமெழுப்பி விட்டு, இன்று எங்களிற்கும் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நாங்கள் பலர் வாழ்கிறோம். நடந்து முடிந்த எதிலும் எங்களிற்கு எந்தப் பங்கும் இல்லை என்பது போல் இருக்கின்றோம். நாங்கள் எங்களிற்குள் கன்னை பிரித்து ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டு கிடக்கிறோம். இதைப்பார்க்கும் ஒரு மாவீரர் தாய் தன்னை முன்னர் தற்காலிகமாகவேனும் ஆற்றுப்படுத்திய பல விடயங்கள் இன்று வலுவிழந்து நிற்பதனை உணர்வு தவிர்க்க முடியாதது. உண்மையில் கோசங்களை விட்டு நிய உலகில் மாவீரர் பெற்றோரோடு சக மனிதர்களாகப் பழகுபவர்கள் இதை அறிவது மிக இலகு.

இதில் நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை.முதலாவது பச்சையை நான் தான் போட்டேன் அப்போது எழுத முடியவில்லை.இங்கு லண்டனில் ஆர்ப்பாட்டம் நடக்கும் போது இலங்கை,இந்தியா தூதரங்களுக்கு முன்னாலும் ஆர்ப்பாடம் செய்தார்கள் அதற்கு முன்னால் போய் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் கூடின மக்களைப் பார்க்கவும் குறைவு காரணம் இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் போக வேண்டும் என்கிற ஒரே காரணம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.