Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்?

இன்னும் நீ எழவில்லை.

சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை.

கன்னங்கள் சிவக்கவும்,

காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும்,

நீண்ட மயக்கத்திலும்,

உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும்

கட்டுண்டே கிடக்கிறாய்.

நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து

தேவிட்டாத மொழியில் பேசியபோது

காதினிக்கக் கேட்டாய்,

கண் விரித்து இரசித்தாய்.

03-isaipriya200.jpg

இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள்.

இன்றும் பார்த்தாய்

பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை

மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால்

உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது.

யார் அவள்?

உன் தாய்

உன் சேய்

உன் தோழி

உன் மண்ணின் மானம் காத்தவள்.

எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்?

ஏ பெண்ணே…!

சீ….. எப்படி உன்னை இப்படி அழைக்கலாம்?

பேதையே!

இன்னும் நீ எழவில்லையா?

உன் சக்தி எங்கு போனது?

இனவாத மூர்க்கத்தின் ஒரு முகம்தான் இது

இன்னும்….

எத்தனை தாய்கள்,

எத்தனை சேய்கள்

எத்தனை தோழியர்

பெண்மையை இழிசெய்யும்

பேரினக்கூட்டத்திடம் சிக்கி உழல்கின்றர்.

சிந்தித்தாயா?

பரவி வாழ்கிறாய் உலகமெல்லாம்

உன் உறவுக்கான குரல் எங்கே?

பார்த்த பயங்கரம் புழுவாய் ஊர

உன் கருவறைச்சுவர்கள் கதறவில்லையா?

எங்கே உன் பூகம்பக்குணம்?

சக்தி என்பது வனையத் தெரிந்தவர்

வார்த்தையின் இலட்சணம் மட்டுந்தானா?

இன்னும் ஏன் எழவில்லை.

சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை.

உன்னை அம்மணமாய் உயிர் குலைய வைத்தால்

உன் அம்மா சும்மா இருப்பாளா?

உன் அக்கா சும்மா இருப்பாளா?

உன் தோழிதான் சும்மா இருப்பாளா?

சீறி எழுவாள். சினத்தைப் பொழிவாள்.

ஆனால் நீ எங்கே?

உன் பெண்மையின் ஊற்று பிறழ்வுற்றுப் போயிற்றா?

அடி தோழி….!

சின்னத்திரைபார்த்து விம்மிச் சோர்கிறாய்.

விதியல்லடி இது சதி.

கூறுகெட்ட கூட்டத்தின் கோமாளிக் கலைகளால்

ஊறு வந்து சேருதடி தமிழச்சாதிக்கு.

சதி என்றும், பதியென்றும்

தினத்தினக் காட்சியிலே காணாமல் போனவளே

கண் உகுத்து நிற்பதற்கும் காரணம் கிடையாதா?

பூகம்பப் புயலே,

நீ மெய் நோக்கு.

வீணான பொருளாக, விளங்காத உயிராக

தானாகும் உன் நிலை தன்நிலை மாற்றும்.

தாயின் மானம் காத்தவளுக்காக

தாய்க்குலம் எழுந்தாலே

மானங்காத்தவளுக்கு மானுடத்தின் சிறப்பு

பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால்

சாதிக்க முடியாதென்று சரித்திரம் ஏதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயத்திலும் தென்னிந்திய சமுதாயத்திலும் சிலதுகள் பெண்ணிலைவாதம் மண்ணாங்கட்டி வாதம் என்று கூட்டம் போட்டுக் கொண்டு திரியுதுகள். அதுகளுக்கு இந்த சிங்கள ஆமிக்காரங்களின் ஆணாதிக்கம் தெரியிறதில்லைப் போல. ஏமாளி ஆண்கள் யாரேனும் மனிசிமாரை வீட்டுக்க வைச்சு வெருட்டினா மட்டும் கூப்பாடு போடுவினம் போல.

இத்தனை பெண்கள் எத்தனை தடவைகள் சிங்களத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைக் கண்டிக்கிற துணிவு கூடவா இந்த பெண்ணிலைவாதிகளுக்கு இல்லை.

ஆண்களும் தானே கொல்லப்பட்டிருக்கினம் என்று பதிலுக்கு சொல்லுவினம் போல. ஆண்கள் கொல்லப்படுவதிலும் பெண்கள் கொல்லப்படுவது போர் விதிமுறைகளை தீவிரமாக மீறும் செயலாகும். பெண்களும் குழந்தைகளும் போர்க்களத்தில் எந்த தரப்பில் இருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும் சரணடையும் வீரர்களை கொல்லவோ காயப்படுத்தவோ கூடாது என்கிறது ஜெனிவா கென்வன்சன்.

பயங்கரவாதிகளுக்கு என்று ஒன்றும் புதிசா ஒரு சட்டம் இல்லை. மகிந்த சொல்லுறாராம்.. கொல்லப்பட்டது பயங்கரவாதிகள் என்று.. அதை உலகம் கேட்டிட்டு அடங்குமாம். நாங்களும் கூட அடங்குவமாம்.

ஆனால் எந்த சட்டத்திலும் சரணடையும் பயங்கரவாதிகளை சித்திரவதை செய்து கொல்ல இடமில்லை. அதை மகிந்தவுக்கும் சிங்கள இனவெறிக் கும்பலுக்கும் அதற்கு ஆமாப்போடும் சர்வதேசக் கும்பல்களுக்கும் புகட்ட யாருக்கும் துணிவில்ல.

கவிதையில மட்டும் கவலையைச் சொல்லிட்டா இந்த தங்கை உயிர்த்திடுவாளா என்ன..??! அவள் கண்ட வலி எவர் தான் உணரப்போகிறீர்கள்...????! அதை யார் தான் உலகிற்கு உணர வைக்கப் போகிறீர்கள்..????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்க பூர்வமான தேடலும்

தேடல்களின் ஆக்கமும் தான்

எம் மானம் காக்கும் கவிதை

எம்மால் கனவில் வாழவைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் குமுறுகிறோம், காலத்தில் தொலைகிறோம்! :wub:

நன்றி சகாரா!

  • தொடங்கியவர்

நெடுக்குத்தம்பி இன்றைய நிலையில் இதைப்பற்றி நிறையப் பேச வேண்டும். நின்று நிதானித்து இவற்றை உரையாடவேண்டும். தற்சமயம் உடனடியாக என்னால் உரையாட முடியாத நிலை உள்ளது. தவிர்த்துச் செல்வதாக நினைக்கவேண்டாம். நான் வேலைக்குச் செல்லும் நேரமாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் வந்து உரையாடுவேன்.

ஆக்க பூர்வமான தேடலும்

தேடல்களின் ஆக்கமும் தான்

எம் மானம் காக்கும் கவிதை

எம்மால் கனவில் வாழவைக்கும்

உங்கள் கருத்திற்கு நன்றி திருமால்

கவிதையில் குமுறுகிறோம், காலத்தில் தொலைகிறோம்! :wub:

நன்றி சகாரா!

காலத்தால் தொலையக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு கவிதையில் குமுறுகின்றேன் சுவி

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் மானம் காத்தவளுக்காக

தாய்க்குலம் எழுந்தாலே

மானங்காத்தவளுக்கு மானுடத்தின் சிறப்பு...........

நிச்சயம் தாய்க்குலம் வீறு கொண்டு எழ வேண்டும்...............

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் மானம் காத்தவளுக்காக

தாய்க்குலம் எழுந்தாலே

மானங்காத்தவளுக்கு மானுடத்தின் சிறப்பு...........

நிச்சயம் தாய்க்குலம் வீறு கொண்டு எழ வேண்டும்...............

பெண்ணை பழிக்கலாம்.. ஆனால் அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்கள் ஒரு இனத்தின் இருப்புக்கான முக்கிய காரணிகள். அதனால் தான் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் போர்க்களத்தில் அதிக மானுட நீதி பார்க்கப்பட வேண்டும்.. அவர்களை போரில் சாகடிக்கக் கூடாது என்பது விதிப்பு.

வேதனை என்னவென்றால் பெண்ணின் அழிப்பை கண்டு பெண்களே மெளனித்துக் கிடப்பதுதான்.

இன அழிப்பை விரும்பும் சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவங்கள் எப்போதுமே பெண்களை சீரழித்து அழிப்பதை முதன்மை இலக்காக்கிக் கொண்டு செயற்படுகின்றன. இதை பெண்களே கண்டிப்பதில்லை. உலகின் முன் எடுத்துச் செல்வதும் இல்லை. ஆனால் தற்கொலைப் பெண் போராளிகள் பெண் போராளிகள் பற்றி கூவியவர்கள் பலர். பெண்கள் போராளிகளானது இந்தச் சூழலை தவிர்க்கத்தான் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு இனத்திற்கு பாதுகாப்பாக அதன் உரிமையோடு வாழ நிலை இருக்கும் என்றால் ஏன் பெண்கள் போராளிகள் ஆகின்றனர்.. தற்கொலைப் போராளிகள் ஆகப் போகின்றனர். இதை இட்டு சிந்திப்பதில்லை எவரும். மாறாக எதிரிக்கு உதவும் வகையில் மூடத்தனமாக பேசி வருகின்றனர்.. செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய படைநடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் விடுதலைப்புலிகள் சிங்களப் பெண்களை இவ்வாறான மிலேச்சத்தனங்களை பாவித்துக் கொன்றதில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்?

அடி தோழி….!

சின்னத்திரைபார்த்து விம்மிச் சோர்கிறாய்.

விதி யல்லடி இது சதி.

உம்மையே நீர் நொந்தீர்

நன்றியம்மா

எதற்கெடுத்தாலும் கவிதை :icon_idea: இதை விட்டுவிட்டு இசைப்பிரியா மீதான படுகொலைக்கு நியாயம் தேடுகின்றது மாதிரி எதையாவது உருப்படியாய் செய்யலாமே? :lol: அதற்காக நாங்கள் றோட்டில் நிக்கவில்லையா :) கூப்பாடு போடவில்லையா ^_^ என குழம்பாமல் இனியாவது கவிதை எழுதி உசுப்பேத்திவதை விடுத்து :D உருப்படியாய் எதையாவது செய்யுங்கள் : :icon_idea:

ரோட்டில் நின்றோம், கூப்பாடு போட்டோம் என்று உங்களுடன் குழம்பக்கூடும் என்று நீங்கள் கற்பனையில் நினைத்துப் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக படுகிறது. கவிதை எழுதி உசுப்பேத்தாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள் என்று உங்கள் கோபத்தை நீங்கள் எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதேபோல்தான் என்னுடைய கோபமும் கவிதையும். இதை உசுப்பேத்தல் என்று நீங்கள் எண்ணினால் மன்னிக்கவேண்டும் உங்களுக்கு என்னால் பதில் வரைய முடியாது.

நீங்கள் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் பதிவு செய்த ஆணா என்பது எனக்குத் தெரியாது.

நீங்கள் பெண்ணாக இருந்தால் நீங்கள் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளை இங்கு பதிவிட்டால் எல்லா நாடுகளில் வாழும் எமது பெண்களுக்கு அவை சென்றடையும். அதனூடாக ஒவ்வொரு நாட்டிலுள்ள பெண்கள் சார்ந்த அமைப்புகள் அல்லது பெண்களுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் ஒன்றிணைந்த ரீதியில் ஒரு உலகளாவிய ரீதியில் பெரும் செயற்பாட்டை உருவாக்கலாம்.

இன்று இசைப்பிரியா மட்டுமல்ல இன்னும் எத்தனையோ முகந்தெரியாத பெண்கள் இராணுவப்பிடியில் வதைக்கப்படுகிறார்கள். இன்றைய காலம்மட்டுந்தான் போர்குற்றங்கள் என்ற பதிவுக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்தகாலங்களிலும் எவ்வளவோ இருந்தன அவை எவையும் வெளிச்சத்திற்கு வராமலே பல பெண்களுக்குள் உறங்கி கிடக்கின்றன. வாழ்க்கையும், சமூகமும் பல பெண்களை ஊமையாக்கியுள்ளது. அவர்கள் பேச வேண்டும். இனத்திற்கு நீதி கிடைக்க தம்மை வெளிப்படுத்தும் துணிவு அவர்களுக்கும் வரவேண்டும்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கெடுத்தாலும் கவிதை :D இதை விட்டுவிட்டு இசைப்பிரியா மீதான படுகொலைக்கு நியாயம் தேடுகின்றது மாதிரி எதையாவது உருப்படியாய் செய்யலாமே? :) அதற்காக நாங்கள் றோட்டில் நிக்கவில்லையா :) கூப்பாடு போடவில்லையா ^_^ என குழம்பாமல் இனியாவது கவிதை எழுதி உசுப்பேத்திவதை விடுத்து :wub: உருப்படியாய் எதையாவது செய்யுங்கள் : :lol:

:icon_idea::icon_idea:

angali

மீன் சந்தைக்கு வந்துவிட்டு மீன் மணக்குது என்று விற்பவனைக் குற்றம் சொல்வது போலுள்ளது உங்கள் கருத்து..... ^_^

கவிதை எழுதிய சகாரா அக்காவோ / அல்லது கவிதை எழுதுபவர்களோ கணனியில் கவிதை எழுதுவதோடு நின்றுவிடுவதாகவும் உங்கள் கருத்து அமைந்துள்ளது.

தமிழை நேசிக்கும், தமிழீழத்தை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமை போர்க்குற்றவாளிகளைச் சிக்கவைப்பதில்தான் தற்போது குவியப்படுத்தப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக்கொண்டு, சகாரா அக்காவின் முன்னைய / தற்போதைய படைப்புக்களில் இருந்து அவர் எவ்வளவு தமிழீழத்தை நேசிக்கிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லையா ? தமிழீழத்தை நேசிக்கும் ஒவ்வொருததரும் தங்களது கடமைகளைச் சரிவரச்செய்துகொண்டுதான் இருக்கிறாகள்...

கவிதை என்பதும் ஒரு மொழி, மனக்கிடக்கைகளைச் சொல்லும் மொழி, மற்றவர்களின் மனதைத் தட்டும் மொழி... அதையே உசுப்பேத்துவது அப்படி இப்படி என்று சொல்வது தமிழின் ஒரு அங்கத்தையே குறைகூறுவது போலுள்ளது. எல்லோரும தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தாலேயே மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தருணமாவது மிஞ்சும் அல்லவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில மட்டும் கவலையைச் சொல்லிட்டா இந்த தங்கை உயிர்த்திடுவாளா என்ன..??! அவள் கண்ட வலி எவர் தான் உணரப்போகிறீர்கள்...????!

இப்படியே ஆளாளுக்கு கவிதையை எழுதின குற்றத்திற்காக என்னை நன்றாகச் சாடுங்கள். என்ன நெடுக்குத் தம்பி வலி தெரியாதவர் கணக்கில் என்னையும் சேர்த்துவிடாதீர்கள். எண்பதுகளின் பிற்பகுதியில் வதைகள் என்றால் என்ன...... அதன் பின்னால் தொடரும் வலிகள் என்றால் என்ன என்பதை அனுபவரீதியில் உணர்ந்துள்ளேன். வெளிப்படையாகத் தெரியவந்த இராணுவத்தின் வதைகளால் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகத்தினால் என் சிநேகிதி அடைந்த அவமானங்கள் கொஞ்சமல்ல. அவள் துடித்த துடிப்பை கண்ணெதிரே கண்டவள் நான். அந்த நிமிடத்திலிருந்து இந்தக் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகத்தின் பிரதிநிதியாக மனதிற்குள் கூனிக்குறுகியே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஏன் நானுங்கூட இலங்கை, இந்திய இராணுவப் பிடியில் சிக்கியிருக்கின்றேன். போராளி அல்லாத என்னை என்தாய் பாதுகாக்கபட்டபாட்டை எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே புகழுக்காகவோ, பொழுதுபோக்கிற்காக விடுதலை நோக்கிய என்பதிவுகளை இடுகின்றேன் என்று யாரேனும் நினைத்தால் தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். என்னால் முடிந்த என் கோபத்தை, என் இயலாமையை, எமக்கு அவசியமான விடுதலையின் வேட்கையை பதிவிடுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயத்திலும் தென்னிந்திய சமுதாயத்திலும் சிலதுகள் பெண்ணிலைவாதம் மண்ணாங்கட்டி வாதம் என்று கூட்டம் போட்டுக் கொண்டு திரியுதுகள். அதுகளுக்கு இந்த சிங்கள ஆமிக்காரங்களின் ஆணாதிக்கம் தெரியிறதில்லைப் போல. ஏமாளி ஆண்கள் யாரேனும் மனிசிமாரை வீட்டுக்க வைச்சு வெருட்டினா மட்டும் கூப்பாடு போடுவினம் போல.

வேதனை என்னவென்றால் பெண்ணின் அழிப்பை கண்டு பெண்களே மெளனித்துக் கிடப்பதுதான்.

இன அழிப்பை விரும்பும் சிங்கள இராணுவம் மற்றும் இந்திய இராணுவங்கள் எப்போதுமே பெண்களை சீரழித்து அழிப்பதை முதன்மை இலக்காக்கிக் கொண்டு செயற்படுகின்றன. இதை பெண்களே கண்டிப்பதில்லை. உலகின் முன் எடுத்துச் செல்வதும் இல்லை. ஆனால் தற்கொலைப் பெண் போராளிகள் பெண் போராளிகள் பற்றி கூவியவர்கள் பலர். பெண்கள் போராளிகளானது இந்தச் சூழலை தவிர்க்கத்தான் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு இனத்திற்கு பாதுகாப்பாக அதன் உரிமையோடு வாழ நிலை இருக்கும் என்றால் ஏன் பெண்கள் போராளிகள் ஆகின்றனர்.. தற்கொலைப் போராளிகள் ஆகப் போகின்றனர். இதை இட்டு சிந்திப்பதில்லை எவரும். மாறாக எதிரிக்கு உதவும் வகையில் மூடத்தனமாக பேசி வருகின்றனர்.. செயற்பட்டு வருகின்றனர்.

நெடுக்குத்தம்பி, நீஙகள் குறிப்பிடும் பெண்ணிலைவாதிகள் நிஜத்தைத் தெரியாதவர்கள். இவர்களுக்கு நுனிநாக்கில் இங்கிலீஷ் நன்றாக வரும். கடுமையான போராட்டகாலத்தை கேட்டு, பார்த்து, பேசி உணராதவர்கள் ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குரல் கொடுப்பார்கள் அதுவும் வெளிநாடுகளில் முழுமையான சுதந்திரத்துடன் சம்பாதித்து பெண்கள் தம்மை பலமாக வாழவைக்கக்கூடிய சூழலில் அதனைப்பயன்படுத்தத் தெரியாமல் தன்னாலே தான் நசுங்கி வாழ்வதனூடாக பெண்களால் இப்படித்தான் வாழ்வோம் அல்லது வாழவேண்டும் என்று தம்மைத் தாமே முடக்கிய பல கோணங்களை எடுத்து தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஆண்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று வேற்றுஇனங்களிடம் நன்றாக விவாதிப்பார்கள். கூட்டமாக வைத்து சிங்கள இராணுவம் தமிழ்பெண்கள்மேல் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதை பேச இவர்களுக்குத் தெரியாது. அநேகமாக பெண்ணிலைவாதிகளுக்கு புலிக்காய்ச்சல் அதிகம். புலிகளை அசிங்கப்படுத்துதல், புலிகளைத் தவறானவர்களாகக் காட்ட முற்படுதல் என்பன இவர்களுக்கு அல்வா சாப்பிடுதல் போன்றது. அதற்காகவே இராணுவத்தால் பாதிப்புக்குள்ளாகிய பெண்களைப்பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுத்தால் புலிகள் நீதியானவர்கள் என்ற நிலைப்பாட்டை ஒத்துக்கொள்ள வேண்டிவந்துவிடுமே. பிறகு எப்படி அவர்கள் புலிகளை பிழையானவர்களாக வெளிக்காட்ட முடியும்? புலிகளை மட்டுமே சாடுதலைக் கொண்டவர்களை பெண்ணிலைவாதிகளாக நீங்கள் அடையாளம் காணுவது சுத்த லூசுத்தனமாக இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மட்டுமே சாடுதலைக் கொண்டவர்களை பெண்ணிலைவாதிகளாக நீங்கள் அடையாளம் காணுவது சுத்த லூசுத்தனமாக இல்லையா?

அப்படி என்று சொல்லி நாம் தப்பிக்க முடியாது. இன்றைய நிலையில் போராட்ட நியாயங்களை விளங்கிக் கொண்ட பல பெண்களின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற போதும்.. அவர்கள் கூட இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை வெளி உலகிற்கு சொல்வதற்கு அவ்வளவு சிரத்தை கொண்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக சர்வதேச அளவில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளிடம் இந்த விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துச் சென்று இவற்றை சர்வதேச மகளிரின் கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் சிறீலங்காவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் உலகை அறிவுறுத்த அதிக வாய்ப்பு உருவாகும்.

உந்த பழைய பெண்ணியக் கிழடுகளை விடுங்கோ... அதுகள் மகிந்தவோடு டக்கிளஸ் போன்ற கிழடுகளோடு கூத்தடிக்கத்தான் சரி. அதுகளுக்கு யார் செத்தா என்ன பிணமா விழுந்தா என்ன. சிங்களவன் என்றால் வீணி வடிக்குங்கள். அதுகளின் மூளை அப்படி அடிமைப்பட்டுக் கிடக்கு. அதுகளை நாங்கள் பெண்ணீய வாதிகளாகக் கூட இனங்காண்பதில்லை.

ஆனால் கவலை என்ன என்றால் பெண் உரிமைக்காக குரல் கொடுத்த பலரும்.. அதுவும் போராட்ட காலத்தில் ஆமாப்பாடிய பலரும் இன்று மெளனமாகி செயற்பாடிழந்து கிடப்பதுதான் வேதனை அளிக்கிறது. அதுவும் கண் முன்னே இவ்வளவு அநியாயங்களைக் கண்ட பின்னும். :):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வரவர பெண்களைத்தாக்கவேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தேசஅபிமானியை

அதுவும் தன்னால் முடிந்தவரை எமக்காக நேரமெதுக்கி எழுதும் ஒருவரை தாக்குகின்றீர்கள். இதெல்லாம் நல்லாவா இருக்கு...? :rolleyes:

எழுதுவதை திருப்பி ஒருமுறை வாசியுங்கள். தயவுசெய்து. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில் நின்றோம், கூப்பாடு போட்டோம் என்று உங்களுடன் குழம்பக்கூடும் என்று நீங்கள் கற்பனையில் நினைத்துப் பதிவிட்டிருப்பது கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக படுகிறது. கவிதை எழுதி உசுப்பேத்தாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள் என்று உங்கள் கோபத்தை நீங்கள் எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதேபோல்தான் என்னுடைய கோபமும் கவிதையும். இதை உசுப்பேத்தல் என்று நீங்கள் எண்ணினால் மன்னிக்கவேண்டும் உங்களுக்கு என்னால் பதில் வரைய முடியாது.

நீங்கள் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் பதிவு செய்த ஆணா என்பது எனக்குத் தெரியாது.

நீங்கள் பெண்ணாக இருந்தால் நீங்கள் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளை இங்கு பதிவிட்டால் எல்லா நாடுகளில் வாழும் எமது பெண்களுக்கு அவை சென்றடையும். அதனூடாக ஒவ்வொரு நாட்டிலுள்ள பெண்கள் சார்ந்த அமைப்புகள் அல்லது பெண்களுக்காக குரல் கொடுக்கும் பெண்கள் ஒன்றிணைந்த ரீதியில் ஒரு உலகளாவிய ரீதியில் பெரும் செயற்பாட்டை உருவாக்கலாம்.

இன்று இசைப்பிரியா மட்டுமல்ல இன்னும் எத்தனையோ முகந்தெரியாத பெண்கள் இராணுவப்பிடியில் வதைக்கப்படுகிறார்கள். இன்றைய காலம்மட்டுந்தான் போர்குற்றங்கள் என்ற பதிவுக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்தகாலங்களிலும் எவ்வளவோ இருந்தன அவை எவையும் வெளிச்சத்திற்கு வராமலே பல பெண்களுக்குள் உறங்கி கிடக்கின்றன. வாழ்க்கையும், சமூகமும் பல பெண்களை ஊமையாக்கியுள்ளது. அவர்கள் பேச வேண்டும். இனத்திற்கு நீதி கிடைக்க தம்மை வெளிப்படுத்தும் துணிவு அவர்களுக்கும் வரவேண்டும்.

சகாரா உங்கள் கருத்துக்கு ஒரு பச்சை. தனது கருத்தால் உசுப்பேற்றத்தானே இந்தக்கவிதையை கூப்பாடு என்கிறார்(ள்)கள். இவற்றுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கும் அதனை எதிர்த்து இன்னொன்று குரைத்துக் கொண்டிருக்கும் என ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார். நீங்கள் குதிரையாக ஓடிக்கொண்டிருங்கள். அதிகம் எழுத நேரம்போதாதுள்ளது.

உங்கள் எழுத்துக்களை நீங்கள் தொடருங்கள். அது உங்கள் உரிமை. ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல புறப்பட்டீர்களானால் நீங்கள் சொன்ன சேதியை திசைதிருப்பல்தான் நிகழும்.

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வரவர பெண்களைத்தாக்கவேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தேசஅபிமானியை

அதுவும் தன்னால் முடிந்தவரை எமக்காக நேரமெதுக்கி எழுதும் ஒருவரை தாக்குகின்றீர்கள். இதெல்லாம் நல்லாவா இருக்கு...? :rolleyes:

எழுதுவதை திருப்பி ஒருமுறை வாசியுங்கள். தயவுசெய்து. நன்றி

பொட்டுக்கு.. தாலிக்கு... சேலைக்கு.. கணவனிடம் இருந்து.. விடுதலை கேட்டு போராடிய பெண்ணியவாதிகளை தான் எமது சமுதாயம் உருவாக்கி தந்துள்ளது. பெண்களின் உரிமையை எந்தச் சூழலிலும் பாதுகாக்கக் கூடிய.. நிலைநாட்டக் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த ஒரு பெண்ணியத்தலைமையையும் எமது சமூகம் பெறத் தவறி இருக்கின்றமைக்கு.. உங்களின் இந்த தவறான பார்வையும்.. உங்களுக்கு கீழே பதில் அளிக்கப்பட்டுள்ள.. சில தப்பான போக்கிலான சிந்தனைகளுமே காரணம்.

இவைதான் இசைப்பிரியாவை பலியிட்டன. இன்றும் வன்னியில் பிற இடங்களில் போரால் பாதிக்கப்பட்டுள்ள விதவைகள் ஆக்கப்பட்டுள்ள ஏராளமான பெண்களின் வாழ்வியல் குறித்து யாரும் கவலைப்பட்டதில்லை. அவரவர் சிறிய அளவிலான உதவிகளோடு தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனரே தவிர.. ஒரு நீண்ட கால திட்டத்தோடு செயற்பட ஒரு அமைப்பும் இவர்களிடம் இல்லை.. அதற்காக சர்வதேச ஒத்துழைப்பை நல்கும் திட்டமும் இல்லை.

வெறுமனவே ஊரை பார்த்து.. குதிரை.. குரை என்ற பழமொழிகளை அள்ளி வீசி தங்களை சாமர்த்தியசாலிகளாகக் காட்டிக் கொள்கிறார்களே அன்றி.. வேறு உருப்படியாக எதுவும் நிகழ்வதாகத் தெரியவில்லை. இதனால் தான் இன்றும் எம் பெண்கள் எதிரியால் சீரழிக்கப்படுகின்றனர். வாழ்விழந்து தவிக்கின்றனர்.

பெண்ணியம் கதைக்கும் பலருக்கு பெண்விடுதலை என்றால் என்னவென்று ஒழுங்கானவிளக்கமில்லை.அதைவிட தாங்களே பெண்கள் என்றாலே அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மனப்பான்மையிலும் பலர் உள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்று சொல்லி நாம் தப்பிக்க முடியாது. இன்றைய நிலையில் போராட்ட நியாயங்களை விளங்கிக் கொண்ட பல பெண்களின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற போதும்.. அவர்கள் கூட இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை வெளி உலகிற்கு சொல்வதற்கு அவ்வளவு சிரத்தை கொண்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக சர்வதேச அளவில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளிடம் இந்த விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துச் சென்று இவற்றை சர்வதேச மகளிரின் கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் சிறீலங்காவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் உலகை அறிவுறுத்த அதிக வாய்ப்பு உருவாகும்.

ஆனால் கவலை என்ன என்றால் பெண் உரிமைக்காக குரல் கொடுத்த பலரும்.. அதுவும் போராட்ட காலத்தில் ஆமாப்பாடிய பலரும் இன்று மெளனமாகி செயற்பாடிழந்து கிடப்பதுதான் வேதனை அளிக்கிறது. அதுவும் கண் முன்னே இவ்வளவு அநியாயங்களைக் கண்ட பின்னும். :):rolleyes:

நியாயமான கேள்விதான் நெடுக்குத்தம்பி,

நெஞ்சில் குறுகுறுக்கிறது..... குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். சாட்டுரைத்துக் கேடுற்றுப் போகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் என்நிலையே இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது. எனது கடமையை முழுமையாகச் செய்கிறேனா என்று பார்த்தால் இல்லை என்பதே முன்வந்து நிற்கின்றது.

எங்களுடைய நிலையானது..........

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாகவே வேண்டி

கொண்டு வந்தான்டி ஒரு தோண்டி - அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி"

..........ஆகவே இருக்கிறது.

நெடுக்குத்தம்பி நான் எழுதுவது உங்களுக்குப் புரிகிறதோ தெரியாது. ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை அறிவீர்கள்தானே....

மே, 2009 இற்கு முன்னர் குரல் கொடுத்த பலர் அமைதியாய் அநியாயத்தைக் கண்டு கொள்வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அப்பால்.... புகலிட மனிதர்களிடையே இப்போது ஆதிக்கப் போட்டியே அதிகமாக வளர்ச்சியுற்று மற்றவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டபடி இருக்கும்போது எதுவமே உருப்படியாக, துரிதமாக, பலமுள்ளதாக.......???? வாய்ப்புகள் அருகியுள்ளன.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வரவர பெண்களைத்தாக்கவேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தேசஅபிமானியை

அதுவும் தன்னால் முடிந்தவரை எமக்காக நேரமெதுக்கி எழுதும் ஒருவரை தாக்குகின்றீர்கள். இதெல்லாம் நல்லாவா இருக்கு...? :rolleyes:

எழுதுவதை திருப்பி ஒருமுறை வாசியுங்கள். தயவுசெய்து. நன்றி

நன்றி விசுகு அண்ணா,...

நெடுக்குத்தம்பி கேட்பது நியாயமான கேள்விகள்தானே....... இவை தாக்குதலாக எனக்குத் தெரியவில்லை. தாயக நேசிப்பிலான நம்முடைய நட்பின் உணர்வால் நியாயங்களை தவிர்க்கக்கூடாது. கடந்த காலங்களில் நாம் விட்ட சின்னச் சின்ன தவறுகள் நிகழ்காலத்தில் எவ்வளவு தூரம் வளர்ச்சியுற்று இருக்கின்றன. அவற்றைச் செப்பனிடவே முடியாமல் எப்படி முழி பிதுங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆகவே நாமே நம்மைப் புடம் போட்டுக் கொள்ளவேண்டும். நிகழ்காலத்தில் கேள்விகளுக்கு முகம் கொடுக்க அஞ்சினால் எதிர்காலத்தில்.... நாங்களே கேள்விக்குறியாகிவிடுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்கள் கருத்துக்கு ஒரு பச்சை. தனது கருத்தால் உசுப்பேற்றத்தானே இந்தக்கவிதையை கூப்பாடு என்கிறார்(ள்)கள். இவற்றுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கும் அதனை எதிர்த்து இன்னொன்று குரைத்துக் கொண்டிருக்கும் என ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார். நீங்கள் குதிரையாக ஓடிக்கொண்டிருங்கள். அதிகம் எழுத நேரம்போதாதுள்ளது.

உங்கள் எழுத்துக்களை நீங்கள் தொடருங்கள். அது உங்கள் உரிமை. ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்ல புறப்பட்டீர்களானால் நீங்கள் சொன்ன சேதியை திசைதிருப்பல்தான் நிகழும்.

:rolleyes:

உங்கள் கருத்திற்கு நன்றி சாந்தி.

கேள்விகளை அசட்டையாக தட்டிக்கழித்துவிட்டு பயணித்தால் நீண்ட தூரத்திற்கு ஓட முடியாது. ஓட்டம் என்பது அவசியம். அதுவே குண்டுச்சட்டிக்குள் ஓடும் குதிரையின் ஓட்டமாக இல்லாது பார்த்துக்கொள்ளவேண்டுமே, யாராவது கேள்வி கேட்டால்த்தானே நாம் குண்டுச்சட்டியில் வலய வருகிறோமா அல்லது காத தூரத்தைக் கடக்கிறோமா என்று அனுமானிக்க முடிகிறது. சாந்தி.... இலக்கும், இயங்குசக்தியின் கூர்ப்பும் இணையாவிட்டால் எம் வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நம் உடல் சாம்பல் ஆனபின்னாலும் ஆவியும் ஓடிக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா,...

நாமே நம்மைப் புடம் போட்டுக் கொள்ளவேண்டும். நிகழ்காலத்தில் கேள்விகளுக்கு முகம் கொடுக்க அஞ்சினால் எதிர்காலத்தில்.... நாங்களே கேள்விக்குறியாகிவிடுவோம்.

மண்ணைப்புடம் போடுவது நியாயமே

பானையை மீண்டும் மீண்டும் புடம் போட்டு.....................???

நன்றியக்கா

அவருடைய தாக்குதலையும் படிக்கட்டுகளாக பார்க்கும் தங்கள் பார்வைக்கு....

மண்ணைப்புடம் போடுவது நியாயமே

பானையை மீண்டும் மீண்டும் புடம் போட்டு.....................???

நன்றியக்கா

அவருடைய தாக்குதலையும் படிக்கட்டுகளாக பார்க்கும் தங்கள் பார்வைக்கு....

அக்கா சகாரா இங்கு மண்ணுமல்ல பானையுமல்ல அவரொரு அகப்பை அவர் சட்டிகளிலிருந்து அகப்பையில் அள்ளியெடுத்தது ஏராளம். அத்தனை அனுபவசாலி அதனால்தான் இத்தனை சுட்டியாக இருக்கிறார். சுட்டியில் திரிவைத்து எள்ளெண்ணை ஏற்றினால் சனிபகவானிற்கு நல்லதாம். :(

விசுகு அண்ணா, அஞ்சலி என்ற உலக்கையிடம் இப்படி ஒரு இக்கட்டில் என்னை மாட்டிவிட்டீர்களே!..... :)

கலவரப்படவேண்டாம் விசுகு அண்ணா சும்மா பகிடிக்கு எழுதினேன்.

அஞ்சலி என்ற பெயருக்குப்பின்னால் :( மறைந்திருப்பது உலக்கையா? அல்லது புடம்போட்ட சட்டியா? உலக்கை என்றால் உக்கிப்போனதாக இருக்கவேண்டும். புடம்போட்ட சட்டி என்றால் பக்குவப்பட்டதாக இருக்கவேண்டும். தமிழும் கவித்துவமும் கலந்து விளையாடுகிறது. கடைக்கண்ணால் பார்த்தால் காளமேகம் கலாய்க்கிற மாதிரியும் இருக்கிறது. :)

உலக்கையோ சட்டியோ.... அறியவேண்டியது.....

எந்தப்பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதைத்தான் அகப்பை அறியும்.

புடம் போட்ட சுட்டியில்தான் எள்ளெண்ணெய் விட்டு சனிக்கு விளக்கேற்றி இருட்டைத் துரத்தலாம்.

அகப்பையால் முடியாது.

உக்கிய உலக்கையென்றால் உலுத்தலாய் எடுத்துக் கொள்ளும்.

புடம்போட்ட சட்டியென்றால் பக்குவம் புரிந்து கொள்ளும். :(

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.