Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு

அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.

கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது.

ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.

50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.

திமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.

திமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.

தேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.

மொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.

ஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.

இப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.

தற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.

அந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.

கனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா? அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.

http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_13.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FedYm+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%29

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தமிழர்களுக்கு நல்ல சகுனம்.

மன்மோகன் சிங்கிற்கு இது ஒரு சத்திய சோதனை. பார்க்கலாம் ஊழலா நேர்மையா வெல்லும் என.

அண்மையில் சோனியாவின் பிறந்தநாளுக்கு கனிமொழி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார்,

இதன் போது பல விடயங்களை கதைத்திருப்பார்கள், தன்னுடைய வீட்டில் "பாய" வேண்டாம் என்றும் கேட்டிருப்பார்?

கோவை நிகழ்வையும் கருணாநிதி இரத்து செய்து இந்த விடயத்திற்கு முக்கியம் தருவதே இதில் பெரிய சிக்கல் உள்ளது என சொல்லுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் உண்மையிலேயே நடந்ததா? :) நடந்திருந்தால் மகிழ்ச்சிதான்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு டெல்லியை மிரட்டும் துணிவு என்றுமே இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை.

இது யாரோ... ஒரு பத்திரிகையாளரின் கற்பனைக் கதை.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவால் ரூ. 26,685 கோடி நஷ்டம், மத்திய தணிக்கைத்துறை குற்றாச்சாட்டு!

By vedaprakash

கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை மூலம் குற்றச்சாட்டியுள்ளது! அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது. ராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது. ஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம்! முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

திராவிடர்கள் தங்களது ஊழல்களை மறைப்பதேன்?WiMax Scam – another murky deal of Indian telecom industry(Reports appeared on ‘The Pioneer’ daily on the blatant corruptions in the WiMax franchise allotment of the state owned telecom company BSNL) May 6, 2008 – The Pioneerராஜாவின் நண்பருடைய கம்பெனிகள்:1. WiExpert Communications,2. SV Telecom Systems,3. Digitelco Communications,4. Spectrus Communications and5. Technotial Infoways.இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்ரு பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம்!ரஹ்மான் கானின் ரூ 105 கோடி வங்கி மோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன.கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.பெங்களுர் மர்மமும் மர்மமாகவே உள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”!நெப்போலியனும் சொத்துக்களை வாங்கித் தள்ளுகிறாராம்!ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார்! அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.

http://www.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=35211647&page=1

http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scandal-and-telecom-ministers.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி அமோகமா இருக்கு..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19.12.10 கவர் ஸ்டோரி

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்திய வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் கூட நடக்காமல் முடங்கியது இதுவே முதல்முறை.கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி கூடிய நாடாளுமன்றம் ஒருநாள் கூட செயல்படாமல் கடந்த 13-ம் தேதியுடன் முடிந்து விட்டது.

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்ற குற்றச்சாட்டு நாட்டையே அதிர வைத்தது.எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் ராசா தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதுதொடர்பாக உச்சநீதி-மன்றத்தில் வழக்குத் தொடர, நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகக் கண்டித்தது.இதையடுத்து கடந்த வாரம் ராசாவின் வீடுகள், அலுவலகங்கள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. அதன்பிறகும் விடாத எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு முதல்வர் கருணாநிதியின் அழைப்பின் பேரில்,டெல்லியில் இருந்து சென்னை வந்தார் ஆ.ராசா. அடுத்த நாள் அவரைச் சந்திக்க பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்த ராசா, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அங்கிருந்து முதல்வரைச் சந்திப்பதற்காக கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அதற்குள் முதல்வர் கருணாநிதி மதிய உணவுக்காக சி.ஐ.டி. காலனி வீட்டிற்குச் சென்று விட்டார்.வழக்கமாக சாப்பிட்டதும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் கருணாநிதி, அன்று ராசாவைப் பார்த்துவிட்டு, உடனே கிளம்பி விட்டாராம்.

கோபாலபுரம் இல்லத்தில் முதல்வரை மீண்டும் சந்திக்க மாலை நான்கு மணிக்கு ராசாவுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது. சி.பி.ஐ. ரெய்டு தொடர்பாக ராசாவிடம் பேசியிருக்கிறார் கருணாநிதி.ரெய்டில் சிக்கிய டைரி குறித்து கருணாநிதி கேட்க, ராசாவின் பதில் அவருக்குத் திருப்தி தரவில்லையாம்.

இந்த விவகாரத்தில் தன்னிடம் நிறைய தகவல்களை ராசா மறைத்திருப்பதாக கருணாநிதி நேரடியாகவே கோபத்தைக் காட்டியிருக்கிறார்.

அந்த டைரியில் சில முக்கியமான தகவல்கள் இருந்தனவாம். அது முதல்வருக்கு நெருக்கமான சி.பி.ஐ. அதிகாரிகள் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், டி.ஆர்.பாலு உள்ளிட்ட டெல்லி தி.மு.க. பிரதிநிதிகள் மூலம் சேகரித்த தகவல்களும் முதல்வரை ரொம்பவே

அப்செட்டாக்கி விட்டதாம்.

நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவினர் நடத்திய விசாரணையில்,அவர் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சொல்லி விட்டாராம். எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் போது, தன் குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள இருவரிடம் விசாரணை நடைபெறும் என்பது தான் கருணாநிதியை கவலைப்பட வைத்துள்ளதாம்.

இதனிடையே நீரா ராடியாவின் பேச்சு அடங்கிய 800டேப்கள் வெளியாகியுள்ளன.இதில் உள்ள பல உரையாடல்கள் முதல்வரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.‘இப்போது வெளியாகி இருக்கும் டேப்களில் ஒன்றும் இல்லை. இதைவிட மோசமான பேச்சுக்கள் அடங்கிய டேப் விரைவில் வெளிவர உள்ளது’ என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.

கடந்த சனிக்கிழமை மாலை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்குக் கிளம்பிய கருணாநிதியிடம், தானும் உடன் வருவதற்கு ராசா அனுமதி கேட்க,மறுத்திருக்கிறார் கருணாநிதி. கோபாலபுரம் வீட்டில் இருந்து வெளியே வரும்போது ஸ்டாலின் முகம் கொடுத்துப் பேசவில்லையாம். எனவே, கட்சி தன்னைக் கைவிட்டு விடுமோ என கலங்கிய கண்களுடன் தன் பயத்தை நண்பர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ராசா.

நாடாளுமன்றம்தான் முடிந்து விட்டதே, எனவே, எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து கவலைப்பட வேண்டாம் என ராசாவும், தி.மு.க.வும் அமைதியாக இருந்து விட முடியாது. ஏனெனில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் ராசாவை சி.பி.ஐ. விசாரிக்கலாம். அவருடைய டைரியில் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் தமிழ் தெரிந்த அதிகாரிகளை வைத்து விசாரித்த சி.பி.ஐ., அதிர்ந்துபோய் உள்ளதாம்.

இதற்கிடையே ராசாவை சி.ஐ.டி. காலனி வீட்டில் வைத்து சந்திக்காமல், கோபாலபுரம் வீட்டில் வைத்து கருணாநிதி சந்தித்ததற்கும் காரணம் இருக்கிறது என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் அப்செட்டாகியிருக்கும் கருணாநிதி,கடந்த ஞாயிற்றுக்-கிழமை கோயம்புத்தூரில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்து விட்டார்.

‘லிமெரிடியன் கோவை’ ஓட்டலை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்து வைத்த கருணாநிதி,‘‘பயணத்திற்கு உடல்நிலை ஒத்துவராத காரணத்-தாலும், சில அசம்பாவிதங்களாலும் கோவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை’’ என பேசியிருக்கிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் தரும் நெருக்கடிகளைத்தான் முதல்வர் அப்படி குறிப்பிட்டார்என முணுமுணுக்-கிறார்கள் கட்சிக்காரர்கள்.

உடல்நிலையைக் காரணம் காட்டி திங்கட்கிழமை காலை ஏலகிரி கிளம்பிச் சென்று விட்டார் கருணாநிதி.

எப்படியோ ஸ்பெக்ட்ரம் விவகாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆ.ராசாவின் மீதான பிடியும் இறுகிக் கொண்டிருக்கிறது.

ரெய்டில் கிடைத்த ஆவணங்களை சி.பி.ஐ. முழுமையாகப் படித்து முடிக்க வில்லையாம்.அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். முழுமையாகப் படித்தபின்னர் ராசாவை விசாரிப்பதா?அல்லது கைது செய்வதா என்று முடிவெடுப்பார்கள்.

மொத்தத்தில் ‘க்ளைமேக்ஸ்‘ நெருங்குகிறது என்று ஒற்றை வரியில் சொல்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.

ஏலகிரியில் கருணாநிதி!

திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு சென்னையில் இருந்து ஏலகிரி கிளம்பிச் சென்றார் கருணாநிதி. ஏலகிரியில் இருந்து நிலாவூர் செல்லும் சாலையில் ஆம்பூர் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ‘அல்தாஃப் விருந்தினர் மாளிகை’ யில் மூன்று நாட்கள் தங்குகிறார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூலிகைத் தோட்டங்கள் நிரம்பிய அந்த இடத்தில் தங்குவது நல்லது என காரணம் சொல்லப்பட்டது. ஆனால் ஜோதிடர்களை வரவழைத்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டதாம். இதற்காகத்தான் இந்த திடீர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறார்கள்.

ராசா மீது நடவடிக்கை?

ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோபாலபுரம் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களாம். அழகிரியும், ஸ்டாலினும் வேறு இதில் ஒருமித்து நிற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்தும் இதுதானாம்.

‘‘ஆ.ராசாவை திடீரென்று நீக்கினால் தவறை நாமே ஒத்துக்கொண்டது போல் ஆகிவிடும், அது சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை பாதிக்கும்’’ எனக்கூறி அவர்களை அமைதிப்படுத்தி வருகிறாராம் கருணாநிதி. ராசா மீது நடவடிக்கை எடுத்தால் தலித் ஓட்டுக்களை இழக்க வேண்டி வருமோ என்ற எண்ணமும் கருணாநிதியின் அமைதிக்குக் காரணமாம்.

புதிய சர்ச்சையில் அமைச்சர் பூங்கோதை...

நீரா ராடியாவுடன் பேசியது தொடர்பான டேப் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை.

தனது உறவினர் ஒருவர் லஞ்சம் வாங்கிய வழக்கில், அவருக்காக லஞ்ச ஓழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயாவுடன் பேசிய டேப் வெளியாகி ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்தவர் அமைச்சர் பூங்கோதை. தற்போது, நீரா ராடியாவுடன் பேசிய டேப்பில், ‘‘அடாவடி அரசியல்வாதி’’ என்று மு.க. அழகிரியை இவர் குறிப்பிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால்,அழகிரி ஆதரவாளர்கள் ‘மதுரை பக்கம் வந்து விடாதே! தொலைத்து விடுவோம்’ என்று போன் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார் பூங்கோதை. உடனடியாக பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழகிரியும், ஸ்டாலினும் கருணாநிதியிடம் சொல்லி-யிருக்கிறார்களாம்.

- இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

இது எல்லாம் கருணா அம்மானுக்கு சின்ன விடையம் வன்னியில படுகொலை செய்யப்படும் போதே இலகுவாக சமாளித்த இவனுக்கு இது எல்லாம் பழம் திண்டு கொட்டை போடுவான்.

அதை விட விசாரிக்கும் அதிகாரியின் பலவீனம் என்ன என்று அறித்து அதுக்கு மாமாவேலை செய்து விடுவான் பாருங்கள்.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. .

இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

---- ஞாநி ----

நல்ல காலம் கருணாநிதி காப்பாற்றுவார் கணிமொழி காப்பாற்றுவார் என்று 40.000 த்தோட போட்டுது இல்லை என்றால் 4 லட்சமும் மடிச்சு இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவின் அஸ்தமனம் தமிழ் நாட்டில் தொடங்கி விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் அஸ்தமனம் தமிழ் நாட்டில் தொடங்கி விட்டதா?

வரும் தேர்தலில் மட்டும் அஸ்தமனம்..! அதுக்கு அடுத்த தேர்தலில் மறுபடியும் வந்திடுவினம்..! :D கொள்ளை மாறி மாறித்தானே அடிக்க வேணும்..! :lol:

டிஸ்கி: தமிழ்நாட்டின் ஊழல் அரசியல் என்பது...

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..! :D

முதலமைச்சர் மிகவிரைவில் மேலே போகப்போகின்றார் என பட்சி சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் மிகவிரைவில் மேலே போகப்போகின்றார் என பட்சி சொல்லுது.

இதென்ன காலங்கார்த்தால கெட்ட செய்தி..! :D தமிழனுக்கு மட்டும் ஏனிப்படி சோதனைமேல் சோதனை? :D

  • கருத்துக்கள உறவுகள்

அட தமிழ்நாட்டு காரனை விட தமிழக அரசியல்ல ஈழ தோழர்கள் பின்னி பெடல் எடுக்கிறார்களப்பா... :D

பண் முகம் சிங்கிற்கு தமிழினத் தலைவர் ஒரு கடிதம் எழுதினாரேண்டா எல்லாம் சரியாயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பண் முகம் சிங்கிற்கு தமிழினத் தலைவர் ஒரு கடிதம் எழுதினாரேண்டா எல்லாம் சரியாயிடும்.

http://www.youtube.com/watch?v=gm8FlfTPuOs

இது ஓல்டு சீன் காது தப்பிலி காரு... இது நியு சீனு.. அந்திரிக்கு சோனிய மைனா ஆப்பு சொருகி கேசாடு...

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தியாவில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை புதன்கிழமை(15.12.10) பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.

சென்னை உட்பட பல இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் இடங்களும் அடங்கும்.

பெருவர்த்தக நிறுவனங்களுக்கான ஆதரவுகளை முன்னெடுக்கும் நீரா ராடியா, டிராய் என்ற இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல், முன்னாள் அமைச்சர் ஆ ராசாவின் சொந்த கிராமத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றில் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வரும், திமுகவின் தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார் ஆகியோர் இணைந்து நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான தமிழ் மையம் அமைப்பின் அலுவலகமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐயுடன் இணைந்து அமலாக்கப் பிரிவினரும் நாடு தழுவிய அளவில் இடம் பெற்ற சோதனைகளை நடத்தியுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியரான அ. காமராஜின் இல்லத்திலும் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையின் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அ.ராசா கடந்த மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.

பதவி விலகிய பிறகு கடந்த வாரம் ராசாவின் வீட்டில் சோதனைகள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

BBC.Tamil

Edited by thanga

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழதமிழர்களுக்கு ஆதரவாளர்களா?

தற்போது நடந்து வரும் மத்திய புலனாய்வு துறையின் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக புதிதாக எப்படி ஆதரித்து பேசலாம் என்பதற்கு தட்ஸ் தமிழில் வந்த ஒரு செய்தி உதாரணமாக இருக்கிறது.

"சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த சிபிஐ சோதனை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கு எதிரான, பழிவாங்கல் நடவடிக்கையோ என்று சந்தேகப்படுத்தும் வகையில் ஆங்கில மீடியாக்களின் செய்திகள் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நக்கீரன் இதழை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்று வர்ணித்திருப்பதே இந்த சந்தேகத்திற்குக் காரணம்.

இன்று காலை தொடங்கிய இந்த சிபிஐ ரெய்டு குறித்த செய்திகளை அனைத்து தமிழ் மீடியாக்களும் நடுநிலையுடன் கூறி வரும் நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டும் குயுக்தியான பார்வையுடன் வெளியிட்டு வருவது பலத்த சந்தேங்கங்களை ஏற்படுத்தியுள்ளது. (Pro-LTTE Nakkeran என்று நக்கீரனை இந்த ஆங்கிலத் தொலைக்காட்சி வர்ணிக்கிறது)

இதனால், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ், மத போதகரும் தமிழ் மையம் அமைப்பின் தலைவருமான ஜெகத் கஸ்பார் ஆகியோரது வீடுகளை குறி வைத்து நடந்து வரும் சோதனைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது பலத்த விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இவர்கள் குறித்து அந்தத் தொலைக்காட்சி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர் கஸ்பார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிக்கை நக்கீரன் என்றும் கூறுவது விஷமத்தனமாகவே தோன்றுகிறது.

ஈழத் தமிழர்கள் என்றாலே ஒரு தீவிரவாதக் கூட்டம் போலவே சித்தரித்துப் பழகி விட்டவை இந்த ஆங்கில மீடியாக்கள். காரணம், இவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து எந்த ஆழமான அறிவும் கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை வைத்து அன்றைய பொழுதை 'கத்திக் கத்தியே' கழிப்பது தான் இந்த அரைகுறை மீடியாக்களின் வழக்கம்."

எப்படியெல்லாம் யோசித்து கதையா திருப்ப முயற்சி பண்றாங்க பாருங்க.

உண்மையில் ஜெகத் கஸ்பாரும் நக்கீரன் வார இதழும் ஈழத்தமிழர்களின் ஆதரவு என்று யார் இவர்களை நம்ப வைத்தது? அத்தனை வடஇந்திய தொலைகாட்சிகளிலும் மாறன் சகோதரர்களுக்கு பங்கு இருக்கிறது. ஒரு விவகாரத்தில் இருந்து தப்புவதற்கு சொல்லப்படும் உதாரனங்களும் ஏற்புடையவையாகவே இருக்க வேண்டும். அந்த தொலைகாட்சிகளில் ஈழத்தமிழர்கள் ஆதரவு பத்திரிக்கை என்றோ புலிகள் ஆதரவு பத்திரிக்கை என்றோ வரவில்லை. திமுக ஆதரவு பத்திரிக்கை என்றே வந்துள்ளது. இணைப்பு இதில் உள்ளது (Kamaraj is an Associate Editor of pro-DMK magazine Nakkeeran.)http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-cbi-takes-raids-to-dmks-door-72667

ஆங்கிலத்தில் படிக்காதவர்கள் யாரும் நேரடியாக தட்ஸ்தமிழ் மட்டும் படித்து இருந்தால் உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு இவர்கள் எல்லாம் ஆதரவானவர்கள் என்பது போலவும் ஈழதமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்பதற்காக தான் சோதனை செய்கிறார்கள் என்பது போல் அல்லவா நடிக்கிறார்கள்.

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எல்லாரும் குற்றவாளிகள் இல்லையா? இந்த ஊழல்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழத்தமிழர்களின் பெயரை சொல்லி தான் இவ்வளவு நாளும் ஏமாற்றினீர்கள். ஊழல் குற்றசாட்டுக்குமா ஈழத்தமிழர்களை இழுப்பது ?

ஒருவேளை அவர்கள் IBN LIVE பற்றி சொல்லி இந்த விஷயத்தை திசை திருப்ப முயலலாம்

ச்ச... 'கனிமொழி வீட்டில் சோதனை நடத்தா விட்டால் நடப்பதே வேறு' இப்படி ஒரு தலைப்பு வந்தால் எப்படி இருக்கும்... :D

கடிதம் எழுதியே காலத்தைத் தள்ளிய கிழட்டு ஓநாய்க்கு letter pad முடிஞ்சுதாக்கும் ^_^

இதென்ன காலங்கார்த்தால கெட்ட செய்தி..! :( தமிழனுக்கு மட்டும் ஏனிப்படி சோதனைமேல் சோதனை? ^_^

இதுல என்ன கெட்ட செய்தி இருக்கு? கருணா மண்டையை போடனும் அழ்கு கிரியும் இஸ்டாலினும் வேட்டி கிளிய கிளீய ரோட்டு ரோட்டு சண்டை பிடிக்கனும் ஊரே அல்லொலபடனும்

அம்பிகா, மளவிக்கா லிஸ்டல கனிமொழியும் வரனும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் கருநாநிதிக்கு கடற்கையில சமாதி கிடைக்காது போல இருக்கே, அதுக்காக தேர்தல் வாறதுக்கு இடையில் அவரால் சாகவா முடியும்?

மகிந்தவுடன் எடுத்துக் கொண்ட ரகசிய படங்களை சகிக்க முடித்து 'ரெயிடு' செய்தவர்கள் மயங்கி விடுவார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.