Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிதி சேகரிப்புக்கள் தொடர்பில்…

Featured Replies

தவறான செயற்பாடுகளை தடுக்க முடியாவிட்டாலும் அவற்றுக்குக்கு துணைபோகாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்

சமீப நாட்களாக எமது பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், குறிப்பாக வன்னி மக்களின் பேரால் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை எம்மால் அறிய முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் இங்கிலாந்தில், BTF ஸ்கந்தா தலைமையிலும், கனடாவில் WTM சார்பில் கமல் அணியினரும் மற்றும் முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜி தலைமையிலான குழுவினர் இங்கிலாந்திலும் என, ஒரு குறிப்பிட்ட அணியினர் மேற்படி நிதி சேகரிப்பில் ஓரணியாக களமிறங்கியிருக்கின்றனர்.

எமது போராட்டத்தின் ஆத்மாக்களாக இருந்தவர்கள் மூர்ச்சை இழந்ததைத் தொடர்ந்து எமது பேராட்டமும் மூர்ச்சையிழந்துவிட்டது. இது பற்றி நான் பல சந்தர்பங்களில் உங்களுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன். மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஒரோ நோக்கத்திற்காக நான் சந்தித்த அவமானங்கள் ஏராளம். என்னை அவமானப்படுத்த முயல்வோர் குறித்து நான் கவலைப்படவில்லை. எனது கரிசனை முழுவதும் நான் பிரதிநித்துவப்படுத்திய மக்களுக்கு உண்மையாக இருப்பது மட்டுமே! மக்களின் உணர்வு பூர்வமான ஈடுபாடுகள் சிலரின் சுயநல விருப்பங்களுக்காக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் தலையிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்;கும்.

ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றதும் அதுவரை போராட்டத்தின் பேரால் நாம் மேற்கொண்டுவந்த நிதி சேகரிப்புக்களுக்கான காரணமும் இல்லாமல் போனது. மேற்கு நாடுகளில் நிலவும் சாதகமான ஜனநாயக இடைவெளிகளைப் பயன்படுத்தியே நாம் கடந்த காலங்களில் நிதிகளை சேகரித்தோம். மேற்கு நாடுகள் அவற்றை கண்டும் கானாமல் விட்டதை நமது திறமையாகக் கருதிக் கொண்டு நிதி சேகரிப்புக்களை சிறப்பாக நாமும் மேற்கொண்டு வந்தோம். ஆனால் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றதும் நிலைமைகள் தலைகீழாக மாறின. நிதி சேகரிப்புக்கான எந்த நியாயமும் இல்லாமல் போனது. ஆயினும் நமது சில புலம்பெயர் நபர்கள் மேற்கு நாடுகள் வழங்கிவரும் வாயப்;புக்களை தவறாக பயன்படுத்தி நிதிகளை தொடர்ந்து சேகரிக்க எத்தணித்தனர். இன்று சுவிசிலும் ஜேர்மனியிலும் சிலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை, நாம் இந்தப் பின்னியில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமைகளின் சிக்கலான தன்மையை விளங்கிக்கொண்ட சில புலம்பெயர் நபர்கள், சொற்பதத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் களமிறங்கியிருக்கின்றனர். இப்போது அவர்கள் பயன்படுத்த எண்ணுவது, எல்லாவற்றையும் இழந்து ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் நிலையில் கிடக்கும் நமது பாதிக்கப்பட்ட மக்களையே! யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாகிநிற்கும் மக்களின் குறிப்பாக என்சக போராளிகளின் மீழ்வாழ்வுக்காக செயலாற்றிவருபவன் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் எவரது செயற்பாடுகளையும் நான் நிராகரிக்கவில்லை அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்ற விரும்புவோர் அனைவருடனும் ஒரு சாதாரண தொண்டனாக இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் ஆனால் என்னால், உங்களது உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடைகின்றதா என்பதில் கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது எனவேதான் மேற்படி BTF, WTM மற்றும் ரெஜி குழுவினர் ஆகியோரின் நிதி சேகரிப்பின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நான் என்னால் முடிந்தவரை பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறேன். என் மீது நம்பிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களின்பால் கரிசனையும் கொண்ட புலம்பெயர் நண்பர்கள் பலரும் எனது செயற்பாடுகளுக்கு பக்கபலமாக இருக்கின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் என்மீது நம்பிக்கை கொண்ட நன்பர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தற்போது அவர்களது ஆலோசனையுடன் ஒரு திட்டம் - ஒரு பிரதேச செலாளர் பரிவு ( One Project in One AGA Division) என்னும் வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். எனது செயற்பாடுகள் அனைத்தையும் எனது நண்பர்கள் நன்கு அறிவர். எனது செயற்பாட்டு வட்டத்திற்கு வெளியில் எவரேனும் செயற்படுகின்றனரா என்பதையும் அவர்கள் அறிவர். தவிர புலம்பெயர் நபர்கள் எவரும் அரசை ஏமாற்றிக் கொண்டு வடக்கு கிழக்கில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பேரால் சேகரிக்கப்பட்ட நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன என்ற கேள்வியை நான் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

நான் சொல்வதில் உங்களக்கு சந்தேகம் இருப்பின் நீங்கள் இவற்றை பகிரங்கமாக கேட்க முடியும். இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் பேரால் சேகரிக்கப்பட்ட நிதி எவ்வளவு? அது பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்துவிட்டதெனின் பயனடைந்த மக்களின் விபரங்கள் எங்கே? அது எவ்வாறு மக்களைச் சென்றடைந்தது? அதில் பங்குகொண்ட ஈழத்து அமைப்புக்கள் எவை? அவைகள் செலவழித்ததை நீருபிக்கும் ஆவணங்கள் என்ன?

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே! பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மால் தவறுகளை தடுக்க முடியாமல் இருக்கலாம் ஆனால் அவ்வாறான தவறுகளுக்கு நாம் துணைபோகாமல் இருப்பதை நம்மால் தடுக்க முடியும். அந்த அக்கறையின் பேரிலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன். புலம்பெயர் தேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பேரால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளினதும் உண்மைத்தன்மையை அறிந்து உதவுகள். அவற்றின் நடைமுறைச் சாத்தியம் பற்றிக் கேள்வியோடு சிந்தியுங்கள். என்னைப்பற்றிய பல விதமான கருத்துக்கள் உங்களை நோக்கி வரலாம். அவை குறித்து உங்களுக்கு குழப்பங்களும் இருக்கலாம். ஆனால் இங்கு விடயம் பத்மநாதன் என்ற நபரல்ல எல்லாவற்றையும் இழந்து அனாதரவாகக் கிடக்கும் எங்கள் உறவுகள் மட்டுமே. என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்கள் எனக்கு பக்கபலமாக இருக்க முடியும், நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் என்னை நிராகரிப்பதும் நியாயமானதே! எதையும் வலிந்து செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் காலப்போக்கில் புதிய யதார்த்தங்களை புரிந்து கொண்டு நீங்கள் எமது மக்களுக்கான பணியில் கரம்சேர்ப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

எவ்வாறான அவதூறுகள் மேற்கொள்ளப்பட்டாலும் எனது மக்களுக்கான, சக போராளிகளுக்கான பணி தொடரும். கூடவே, எமது புலம்பெயர் மக்களின் உணர்வு பூர்வமான ஈடுபாடுகள் சிலரின் சுயநல விருப்பங்களுக்காக பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் தலையிடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் ஏனெனில் நான் மக்களுக்கு உண்மையாக இருப்பதையே எனது முதற் பணியாகக் கொள்கிறேன்.

த.செ.பத்மநாதன் (KP)

செயலாளர்

நெர்டோ

கிளிநொச்சி

Edited by சுமங்களா

நன்றி உங்கள் இனைப்புக்கு ,

பிச்சைக் காரன் சத்தி எடுத்துபோல் இருக்கு.

நீங்களா கே பீ யின் யாழ்கள பேச்சாளர்?

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்களது சேவைக்கு..

அவரவர் அவரவரது வழியில்முயலுங்கள்

ஒரு பாதையில் நிச்சயம்எல்லோரும் சந்திக்கலாம் :rolleyes:

  • தொடங்கியவர்

நெர்டோவின், அன்பு இல்லம் ஆகியவற்றுக்கான மீள்புனரைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது - தொடர்ந்து. செஞ்சோலை மற்றும் பாரதி இல்லம ஆகியவற்றுக்கான மீள்புனரைப்பு பணிகள் ஆரம்பிக்கபடவுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின், முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் அக்கறையுள்ள புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நெர்டோவின் பணிகளுக்கு ஜப்பானிய அரசுசாரா நிறுவனமான Daishin Foundation ஆதரவு நல்கியுள்ளது. மாணவர்களுக்கான ஒன்றுகூடல் மண்டபம் (Assembly Hall) ஒன்றை அமைப்பதற்காகவே மேற்படி ஜப்பானிய நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதன் ஆரம்பக்கட்டமாக ஜந்து லட்சம் ரூபாவிற்கான காசோலையை நேற்றையை தினம் கையளித்துள்ளது. இலங்கையில் தன்னார்வப் பணிகளை மேற்கொண்டுவரும் மேற்படி நிறுவனம் நெர்டோவின் பணிகளுக்கு உதவியிருப்பதானது, ஒரு அரசுசாரா நிறுவனம் என்ற வகையில் நெர்டோவின் மக்கள் பணிக்கு புதியதொரு பரிமானத்தை வழங்கியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் பலவற்றில் செஞ்சோலை, பாரதி இல்லம் ஆகியவற்றின் பேரால் சில மோசடி பேர்வளிகளால் நிதிசேகரிப்புக்கள் நடந்துவரும் நிலையில், அவற்றின் புனரமைப்புப் பணிகள் களத்தில் நெர்டோவின் முயற்சியால் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த களநிலைமை வெளிப்படுத்தி நிற்கும் உண்மையை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நெர்டோவின் எதிர்பார்ப்பாகும். களத்தில் நெர்டோ பல்வேறு நிதிசார் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது ஆனால் புலத்தில் தங்கள் சுயநலன்களுக்காக அனாதரவான எங்கள் குழந்தைகளின் பேரால் நிதி சேகரிப்புக்கள் நடைபெற்றுவருவதானது மிகவும் அனாகரிகமான செயலாகும். இதனை உணர்ந்து விழிப்பாக இருக்க வேண்டிய கடப்பாடு நமது மக்களுக்குரியதாகும்.

BTF ஸ்கந்தா தலைமையிலும், கனடாவில் WTM சார்பில் கமல் அணியினரும் மற்றும் முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜி குழுவினர்இவர்களைத்தானே பிச்சைக்காரர்கள் என்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் சேவை மக்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும். புலிகள் இயக்க பணத்தை அமுக்கி விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருக்கும் கும்பலை மக்கள் இனம் காணவேண்டும்.

வழமைபோல மூல அறிக்கையை தாமே மொழிபெயர்த்தும் உள்ளனர். அந்த உரிமையை கூட தமிழனுக்கு தரவில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கே பி அண்ணருக்கு உங்கள்மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறன். ஆனால் என்னவிடையம் எண்டா நீங்கள் தற்போது சிங்களத்தின்ட கைதியாக அவர்களது பாதுகாப்பில இருக்கிறியள். கையெளுத்து வை எண்டால் வைப்பியள் குத்துக்கரணம் அடி எண்டால் அடிப்பியள் அப்ப என்னத்தப் பண்ணுறது சொல்லுங்கோபாப்பம்.

  • தொடங்கியவர்

='Elugnajiru' timestamp='1297634578' post='640085']

கே பி அண்ணருக்கு உங்கள்மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறன். ஆனால் என்னவிடையம் எண்டா நீங்கள் தற்போது சிங்களத்தின்ட கைதியாக அவர்களது பாதுகாப்பில இருக்கிறியள். கையெளுத்து வை எண்டால் வைப்பியள் குத்துக்கரணம் அடி எண்டால் அடிப்பியள் அப்ப என்னத்தப் பண்ணுறது சொல்லுங்கோபாப்பம்.

கே பி அண்ணர் மீது மதிப்பு வைத்திருப்பதும் விடுவதும் உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் நேர்டோ அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அன்பு இல்லம் மற்றும் இலங்கை அரசின் பொறுப்பில் தற்சயமயம் இருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் பெயரை கூறி இங்கிலாந்தில் தாசியசும் றஞ்சித்தும் மற்றையநாடுகளிலும் சேக்கப்படும் நிதியினை யாரிடம் கொடுக்கப்போகின்றனர் மகிந்தாவிடமா???? கே பியிடமா??? இல்லை அவர்கள்தானே சுருட்டப்போகின்றனர்.இங்கிலாந்தில் இறுதிபோரிற்கு என சேகரித்த நிதியுடன் புலிகளின் அனைத்துல செயலக தொடர்பாளர் மற்றும் முன்னைய நாள் தேசிய தொலைக்காட்சி (ரி ரி என்)பொறுப்பாளருமான நரேன் தற்சமயம் எங்கே??தன்னுடைய சொத்தினை பாதுகாக்க இலங்கையரசுடன் பேரம்பேசி இன்று இலங்கையில் வசதி வாய்ப்புக்களுடன் குடியேறிவிட்டார். அடுத்ததாக புனர்வாழ்வு கழகம் நடாத்திய றெஜி பேரம் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் விரைவில் அவரும் இலங்கையில் குடியேறிவிடலாம். அதே போலவே இலண்டனில் உள்ள தனமுமம் கமலும் பிரான்சில் சிலரும் யேர்மனியிலும் பின்கதவால் தொடர்புகளை ஏற்படுத்தியுள்னராம். இதற்காக என்னை மீண்டும் இலங்கையரசின் கைக்கூலி என திட்டவேண்டாம். நான் கைக்கூலியாய் இருந்தாலும் பெருந்தொகை பணத்தை கையாடிவிட்டு இலங்கையரசுடன் போய் சேரவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே பி அண்ணர் மீது மதிப்பு வைத்திருப்பதும் விடுவதும் உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் நேர்டோ அமைப்பின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அன்பு இல்லம் மற்றும் இலங்கை அரசின் பொறுப்பில் தற்சயமயம் இருக்கும் செஞ்சோலை பிள்ளைகளின் பெயரை கூறி இங்கிலாந்தில் தாசியசும் றஞ்சித்தும் மற்றையநாடுகளிலும் சேக்கப்படும் நிதியினை யாரிடம் கொடுக்கப்போகின்றனர் மகிந்தாவிடமா???? கே பியிடமா??? இல்லை அவர்கள்தானே சுருட்டப்போகின்றனர்.இங்கிலாந்தில் இறுதிபோரிற்கு என சேகரித்த நிதியுடன் புலிகளின் அனைத்துல செயலக தொடர்பாளர் மற்றும் முன்னைய நாள் தேசிய தொலைக்காட்சி (ரி ரி என்)பொறுப்பாளருமான நரேன் தற்சமயம் எங்கே??தன்னுடைய சொத்தினை பாதுகாக்க இலங்கையரசுடன் பேரம்பேசி இன்று இலங்கையில் வசதி வாய்ப்புக்களுடன் குடியேறிவிட்டார். அடுத்ததாக புனர்வாழ்வு கழகம் நடாத்திய றெஜி பேரம் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் விரைவில் அவரும் இலங்கையில் குடியேறிவிடலாம். அதே போலவே இலண்டனில் உள்ள தனமுமம் கமலும் பிரான்சில் சிலரும் யேர்மனியிலும் பின்கதவால் தொடர்புகளை ஏற்படுத்தியுள்னராம். இதற்காக என்னை மீண்டும் இலங்கையரசின் கைக்கூலி என திட்டவேண்டாம். நான் கைக்கூலியாய் இருந்தாலும் பெருந்தொகை பணத்தை கையாடிவிட்டு இலங்கையரசுடன் போய் சேரவில்லை

இன்னுமா குடுக்கிறாங்கள்.

உந்த சனத்துக்கு செருப்படி குடுத்தால் சரி.

  • தொடங்கியவர்

ஜீவா நான் ஜெர்மனியிலும் சிலர் பேரத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அதில் ஜெர்மன் தென்மானில (சுக்காட்)புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் சிறி ரவி என்பவர் அவரது அழைப்பின் பேரில்தான் அண்மையில் கருணா ஜெர்மன் வந்து போயிருந்தார் . கருணா தங்கியிருந்தது சிறி ரவியின் உறவினர் வீட்டில்.இது சம்பந்தமாக சிறி ரவியுடன் பலர் தொர்பு கொண்டு கேட்டபொழுது எமது மக்களின் பிரச்சனை சம்பந்தமாக கருணாவை சந்தித்தாக சொல்லியிருந்தார். இவரது பொறுப்பில்தான் மாவீரர் வாரம் நடைபெறுவது மட்டுமல்லாது . ஜெர்மனியில் இலங்கையரசிற்கெதிரான நிகழ்வுகளும் நிதி சேகரிப்புக்களும்.ஏற்பாடு செய்யப்படுகின்றது.

கருணா தங்கியிருந்தது சிறி ரவியின் உறவினர் வீட்டில்.இது சம்பந்தமாக சிறி ரவியுடன் பலர் தொர்பு கொண்டு கேட்டபொழுது எமது மக்களின் பிரச்சனை சம்பந்தமாக கருணாவை சந்தித்தாக சொல்லியிருந்தார்

இப்ப என்ன சொல்ல வாறியள் கருணா நல்லவர் , KP யும் நல்லவர் எண்டோ....??? <_<

இதை தானே நாங்களும் சொல்லுறம் கருணாவும், KP யும் மிகவும் நல்லவை எண்டு....! ஆனால் எங்களுக்கு இல்லை சிங்கள அரசுக்கு... காரணம் உங்களுக்கே தெரியும்...

சரி இந்த கடிதம் எல்லாம் இலங்கை அரசின் சம்பந்தம் இல்லாமல் தான் வெளியிடப்பட்டு இருக்கோ....?? இல்லை அவர்களின் விருப்புக்கு ஒப்பதா வெளி வந்ததோ....?? :)

Edited by தயா

இந்த காசு கலக்டர்களுக்கு காசு குடுப்பவர்கள் முட்டாளாயிருந்தால் / பயந்தபீச்சாண்டியாய் இருந்தால் ஒருவரும் ஒண்டும் செய்யமுடியாது.... :huh: பட்டுத்திருந்தட்டும்..... :lol:

உந்த அனைத்து செயலக தொடர்பாளரைப்பற்றித்தான் முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன்.

இவர்,சிறி ஸ்கந்தா இவர்களெல்லாம் என்னென்று புலியில் சேர்ந்தார்கள்?

உந்த அனைத்து செயலக தொடர்பாளரைப்பற்றித்தான் முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன்.

இவர்,சிறி ஸ்கந்தா இவர்களெல்லாம் என்னென்று புலியில் சேர்ந்தார்கள்?

அவை சேர இல்லை நீங்கள் தான் சேத்து விட்டனீங்கள்... நான் சொன்னது கொஞ்சமாவது என்ன எண்டு விளங்கிச்சோ....???

உங்களை சொல்லியும் குற்றம் இல்லை தமிழீழம் எண்டு யார் வெளிக்கிட்டாலும் அவர்களை புலி எண்டு சொல்ல வேண்டியதின் தேவை இப்படி ஆக்கிவிட்டது...

அதோடை மிக முக்கியமாக சோத்து பாசல் வாங்கி செய்த உங்களை எல்லாம் விட சிறீகந்தா எதோ நல்லதாக செய்கிறார்.... ! அரசியல் உட்பட ...

Edited by தயா

எனக்கு ஒண்டுமே விளங்கல்லை.....

கடந்தவாரம் சிறியரவியும் வி.பு களின் தற்போதைய தலைவர் இரும்பு,மாநிலச்சங்கர்,நாடுகடந்த அரசின் பிரதிநிதி முகுந்தன்,வரதன் எனப் பலர் கலந்து கொண்ட கலந்துரையாடலில்(பொண், கொமஸ்பார்க்) தான் கருணாவை சந்திக்கவில்லை என்று கூறியிருந்தார்.அப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்.உங்ளிடம் ஆதாரம் இருக்கின்றதா?சிறிரவி அடித்துக் கூறியிருந்தார்.அப்படி ஆதாரத்தைக் காட்டினால் தான் குப்பி கடிக்கவும் தயார் என்று

இப்ப பலர் பலமாதிரிக் கதைக்கினம் உண்மை என்னவென்று விளங்கேல்லை.தயவு செய்து ஆதாரம் இருந்தால் தருவீர்களா?அல்லது உங்களின் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கருதவா???.எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை.

  • தொடங்கியவர்

ரி ஆர் ரி வானொலியிலை இது சம்பந்தமாய் ஒரு விவாதமே சுவிஸ்நேரத்தின் போது நடந்தது அப்பொழுது தர்சன் சிறிரவியுடன் தொடர்பு கொண்டு கேட்டதை பலரும் நேரடியாக கேட்டுகொண்டிருந்தனர். வேண்டுமானால் ரி ஆர் ரி தர்சனுடன் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்க்கலாம். அதெல்லாம் இருக்கட்டும் சிறிரவி ஜெர்மனியில் குப்பியுடன்தான் திரியிறாரோ?? உடைனை குப்பியடிக்கிறதற்கு. இதனை நம்பிற ஆக்கள் இருக்கும்வரை அவர்தான் தொடர்ந்து பொறுப்பாளர்.

Edited by சுமங்களா

இங்கை இருக்கின்றவர்களை மனிதர்மட்டத்தில் பார்ப்பதில்லை,அதற்கும் மோலாக மந்தைக்கூட்டமாகத்தானே பார்க்கின்றார்கள்.ஆரும் கேள்வி ஏதும் கேட்டால் இருட்டடியெல்லோ கிடைக்கும்.ஆனாலும் பரவாயில்லை எமது மண்ணிற்காக பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எங்கள் மாவீரர்கள் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்க எதையும் தாங்கத் தயாராகிவிட்டேன்.இன்னுமின்னும் விட்டுவைத்தால் எமக்கு நரகத்தில் கூட இடமிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தயா, அண்மையில் நான் ஒருத்தரைச் சந்தித்தபோது கேபியரது அக்கள் அங்கெங்கெணாதபடி அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளார்கள் என இப்பதான் தெரியுது. யாழுக்கையும் வந்திட்டினமெண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கே பி மற்றும் அவரின் அமைப்புக்கள் மற்றும் சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னாள் இன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வு தொடர்பில் அக்கறை கொண்டு செயற்படுவதாகச் சொல்வோரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

உங்கள் செயற்பாடுகளை நீங்கள் காலத்தின்.. உங்களின் தேவை கருதி சிறீலங்கா அரசோடு இணைந்து முன்னெடுத்துச் செல்கிறீர்கள். அதன் மூலம் மக்களும் போராளிகளும் நன்மை அடைவது உறுதி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமன்றி உங்களின் செயற்பாடுகள் மக்கள் மற்றும் போராளிகளின் நலன் நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர எதிரிக்கு போராட்டத்தை அதன் சக்திகளை காட்டிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி நீங்கள் புலம்பெயர் மக்களை நோக்கி ஓடி வர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு அரசு சார்ந்து நின்று செயற்படுகிறீர்கள். அந்த அரசை இந்த உலகம் அங்கீகரித்து நிற்கிறது. அந்த அரசுக்கு யுத்தம் செய்ய இந்த உலகம் பல வழிகளில் உதவி இருக்கிறது. அந்த வகையில் அந்த உலகம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் போரால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைகளை தொலைத்துள்ள போராளிகள் தொடர்பிலும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பிலும் அக்கறை செய்ய வேண்டியது கட்டாயம். கோடிக்கணக்கில் வாராவாரம் ஆயுதங்களை அனுப்பி யுத்தத்தை நடத்தியவர்கள்.. அதே கோடிகளை வாரா வாரம்.. அனுப்பி யுத்த அழிவுகளையும் புனர்நிர்மானம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு அரசோடு சார்ந்து இயங்கும் நீங்கள் எல்லோரும் சர்வதேச உதவிகளை நாடிச் சென்று அவற்றின் மூலம் மக்களின் போராளிகளின் மீட்சிக்கு உதவி செய்வதோடு போரால் சிதைந்து போயுள்ள தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

அதைவிடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் குறிவைத்து சிங்கள அரசின் கபட நோக்கங்களுக்காக காய் நகர்த்தும் ஏஜெண்டுகளாக செயற்படுவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் இந்தப் புலம்பெயர் மக்கள் நோக்கிய கூக்குரல்களே நீங்கள் இதய சுத்தியோடு மக்களை போராளிகளை நோக்கி வேலைத்திட்டங்களை செய்கிறீர்களா என்று சந்தேகிக்க வைக்கிறது. உங்களின் நோக்கம் நிறைவேற வேண்டின் நீங்கள் நாட வேண்டிய இடம் சர்வதேச சமூகம். இணைத்தலைமை நாடுகள் மற்றும் இந்தியா.. பாகிஸ்தான்.. சீனா.. தாய்லாந்து.. மலேசியா.. நோர்வே.. ரஷ்சியா என்று பல. இவர்கள் எல்லோரும் சேர்ந்து யுத்தத்தை முன்னெடுக்க முடியும் என்றால் ஏன் அந்த யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை மனித இடர்களை போக்க அவர்களை நீங்கள் நாட முடியாது..???!

விடுதலைப்புலிகளின் அழிவோடு புலம்பெயர் மக்களின் தாயகப் பங்களிப்பு தீர்ந்து போய்விட்டது. புலிகளை அழித்தவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் தான் எனி போரின் விளைவுகளில் இருந்தான மீட்சிக்கும் உதவ வேண்டும். புலம்பெயர் மக்களால் அந்த அழிவுகளை மீட்சிப்படுத்தக் கூடிய அளவுக்கு நிதி உதவிகள் செய்ய முடியாது. ஏனெனில் உலக நாடுகள் சேர்ந்து செய்த பல கோடி டொலர்களை கொட்டி செய்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள அழிவுகளை அந்த டொலர்களைக் கொண்டு தான் ஈடு செய்ய வேண்டும். அதையும் புலம்பெயர் மக்களிடமே புடுங்க நினைப்பது.. உங்களின் செயற்பாட்டு இதய சுத்தியை கேள்விக் குறியாக்கி நிற்கிறது.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கு ஒரு பச்சை. இன்னும் போடலாம்..

சுபமங்களாவின் முருகனுக்கே நிகரான தலைவர் கேபி முந்திச் செய்த தொழிலைத் தவிர வேறு ஒன்றிலும் வெற்றிபெறமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

அவரவர் அவரவரது வழிகளில் முயலுங்கள் என்று நான் சொன்னதும் இதைத்தான். ஆனால் அவரது தொடர் எழுத்தில் சிண்டுமுடிதலே பிரதானமாக உள்ளது. இதை நான் வெறுக்கின்றேன். நீங்கள் உங்கள் சேவைகள் தேவைகளை மக்கள் முன் வைப்பதற்கும் மற்றவர்களை பொய்யர்கள் ஏமாத்துக்காறர்கள் அதனால் எம்மை ஆதரியுங்கள் என்பதற்கும் வேறுபாடுண்டு.

இது தவறான உட்புகுதலாகும்.

சிங்கள நாட்டின் இன்றைய இலக்கு புலம்பெயர் தமிழர்கள். முடிந்தால் அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையேல் அவர்களை, அவர்களின் ஒற்றுமையை அழித்துவிடல் வேண்டும். ஒருவரை அணுகி தனது கட்டுப்பாட்டுக்குள் வரச்சொல்லும், மறுத்தால் அவர்மீது கரி பூசல், வெருட்டல், கடத்தல், கொலை மிரட்டல், கொலை - இப்படியான அரச பயங்கரவாதத்தை செய்யும்.

இதில் செய்தியை இணைப்பவரோ இல்லை அதை எழுதியவர்கள் அம்புகள் ( இவர்கள் மாறியவண்ணம் உள்ளார்கள்), மாறாக அம்பை எய்தியவர்கள் (அவர்களின் குற்றங்களின்) மீது எமது கவனம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காசு கலக்டர்களுக்கு காசு குடுப்பவர்கள் முட்டாளாயிருந்தால் / பயந்தபீச்சாண்டியாய் இருந்தால் ஒருவரும் ஒண்டும் செய்யமுடியாது.... :huh: பட்டுத்திருந்தட்டும்..... :lol:

பனங்காய்; புலிகளுக்கோ, இல்லை மக்கள் அவலத்திற்காகவோ பணம் கொடுத்ததும், கொடுக்க முன்வருவதும் கொடுப்பவர்களிடம் இருக்கும் மனிதாபிமானம் தான் காரணம்.

புலிகளின் காலத்திலும் மக்கள் மனங்களுக்கு சஞ்சலத்தை விதைக்க ஒரு கூட்டம் அரசாங்கத்தால் இயக்கப்பட்டது எவளவு உண்மையோ, இன்றும் அப்படி ஒரு கூட்டம் இயங்குகின்றது என்பது ஆச்சரியமானது அல்ல... கடவுளே முன்வந்து பொது விடயத்தை தலைமை தாங்கி நடத்தும் போதும் ஒரு சதத்தை ஈய முன்வரமாட்டாதவர்கள் கூட இந்த இவகாரம் கதைக்கும் வரிசையில் முன்னுக்குத்தான் நிற்பார்கள்....

ஒருவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் ஈழத்தில் இன்னல் படும் குடும்பங்களில் ஒவ்வொன்றை நேரடியாகத் தத்தெடுத்து அவர்களின் மீள்ச்சிக்கு உதவலாம் அல்லவா? தவிர ஒன்றுமே ஆகாமல் இருப்பதை விட சிறியளவிலான பிரயோசனமாவது வரவேற்க்கத்தக்கதே அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த அனைத்து செயலக தொடர்பாளரைப்பற்றித்தான் முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன்.

இவர்,சிறி ஸ்கந்தா இவர்களெல்லாம் என்னென்று புலியில் சேர்ந்தார்கள்?

அண்ணை அர்யுன், ஒரு தீமையிலும் நன்மை உண்டு என்று சொல்லபப்டும். உங்கள் கூட்டத்தின் அவதூற்றுச் சொல்லடிகள்தான் மக்கள் மனங்களுக்கு ஆ! இவர்கள் நம்பத் தகுதியானவர்கள்தான் என்று உறுதி எடுக்க வழிவகுக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறான செயற்பாடுகளை தடுக்க முடியாவிட்டாலும் அவற்றுக்குக்கு துணைபோகாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்

மங்களா, நீங்கள் யாருக்கு மங்களம் பாடுகின்றீர்கள்? அதை முதலில் தெளிவு படுத்தி இருந்தால் உங்கள் வசைபாடல் எதுவரை நீளும் என்பதை நாமாகவே புரிந்து கொள்வோம்.

புலி என்ற மாபெரும் விருட்சம் சாயும் போது அதன் பாதிப்பால் உருவாகத்தக்க மேலதிகமான இளப்புக்களும் எதிர்பார்க்கப் படத்தக்கதே. இந்த இளப்புக்களை போராட்டத்தின் தோல்விக்கு காரணமாக்குவது என்பது புலத்தில் வளர்ந்து வரும் தமிழரின் சக்தியை தோற்கடிக்கச் செய்கின்ற முயற்சிக்கு உறுதுணையானது. அபப்படிப் பட்ட ஒன்றுக்கான மங்களமாகவே எனக்கு விளங்குகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.