Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர உதவி...... SOS

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசர உதவி....

மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது.

computer.gifஎனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது.internet.gif

இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. :lol:

வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை.

இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். :)

எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) :lol:

உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன். :rolleyes:

சிறி மைக்ரோசொப்ட் இன் இந்த இணைப்பில் இலவசமாக தரவிறக்கலாம். இதைப்பாவித்த நண்பர்கள் நல்லது எனச் சொன்னார்கள்.

http://www.microsoft.com/security_essentials/support.aspx?mkt=en-us

http://www.avg.com/gb-en/buyav-ppc_1?ctype=ppc_uk_gs_0002_buyav_1&wm_crID=5035958&wm_lpID=28518107&wm_ctID=383&wm_kwID=17360839&wm_mtID=3&wm_content=0&wm_g_crID=6597716679&wm_g_kw=a+v+g&wm_g_pcmt=&wm_g_cnt=0&wm_kw=a+v+g&wm_sd=1

AVG இதுவும் இலவசமானது.

இலவச வைரஸ் மென்பொருட்களில் தப்பில்லி கூறிய மைக்ரோசொப்ட் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொஞ்சம் பறவாய் இல்லை சிறி அண்ண.

இருப்பினும் இலவசமான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொஞ்ச நாளைக்கு உங்கள் கணணியை பாதுகாக்கலாம், ஆனால் கால வரைத் திகதி அண்மிக்கும் போது அவர்களே வைரஸ் அனுப்பிவார்களாம் என்று முன்பு ஒருதரம் கேள்விப் பட்டேன். அப்போது தான் இலவசமாக தரவிறக்கம் பணியத்தை விலை கொடுத்து வாங்குவார்கள் என்ற அடிப்படையில்... முன்பு எனக்கும் எனக்கும் அப்படியான சம்பவங்கள் நடந்தது.

காசைப் பார்க்காமல் McAfee வைரஸ் மென்பொருள் இணையத்தில் வாங்கினீர்கள் என்றால் 3 வெவ்வேறு கணனிகளுக்கு நீங்கள் அந்த மென்பொருளை பாவிக்கலாம். (வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கணனிகள் இருந்தாலோ அல்லது நண்பர்கள் உறவினர்களின் கணனிக்கும் கொடுத்து உதவலாம். அதே போல் அடுத்த தரம் அவர்களை கொண்டு வாங்கி நீங்களும் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளலாம் :wub: )

இணையத்தில் உங்கள் கணனிக்குப் பாது காப்பில்லாத தளத்திற்கு நீங்கள் போகும் போது சிவப்பு நிறத்தில் ஒரு அறிவுறுத்தல் வரும், போன போக்கில குதிக்கால் பிடரியில் அடிபட நீங்க வருவதற்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ^_^

  • கருத்துக்கள உறவுகள்

McAfee anti-virus மென்பொருளை விட மைக்கிராசொவ்ட் இலவச மென்பொருள் பொதுவான றோஜன் வைரசுகளுக்கு எதிராக நன்கு செயற்படுகிறது. நான் இரண்டையும் நிறுவி வைச்சிருக்கிறன். முதலில் McAfee வைச்சிருந்தனான். அது வைச்சிருந்த வேறு சிலரின் கணணிகள் மோசமாக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதை அடுத்து மைக்கிராசாவ்ட் இலவச பாதுகாப்பை கொண்டு வந்தேன். அது McAfee கண்டுபிடிக்கத் தவறிய சுமார் 6 மென்பொருட்களை கண்டுபிடித்து அகற்ற உதவியது.

மைக்கிராசாவ்ட் போட்டு வையுங்கோ. பொதுவான பாதுகாப்புக்குச் சிறந்தது. விசேட பாதுகாப்பிற்கு வங்கிகள் பயன்படுத்தச் சொல்லும் அன்ரி - வைரஸ்களை பயன்படுத்துவது சிறந்தது.

சுறா படம் உங்கள் கணனியில் இருக்குமென்றால் அதை ஒரு முறை போட்டு விடவும். வைரஸ் தானாகவே ஓடி விடும்.

அது வேலை செய்யவில்லை என்றால் இந்த இலவச மென்பொருளை ஒரு முறை முழுதாக ஓடி பாக்கவும். கொஞ்சம் நேரம் எடுத்தாலும், பிரச்சினைக்குரிய வைரஸை கண்டு பிடிக்க, அழிக்க உதவும்.

http://www.malwarebytes.org/ (You only need the free version)

  • கருத்துக்கள உறவுகள்

டாக்ஸ் மேனேஜரில் உள்ள exe பைல்களை இஙக எடுத்து போடுங்கள் தோழர் தமிழ்சிறி.. :)

McAfee anti-virus மென்பொருளை விட மைக்கிராசொவ்ட் இலவச மென்பொருள் பொதுவான றோஜன் வைரசுகளுக்கு எதிராக நன்கு செயற்படுகிறது. நான் இரண்டையும் நிறுவி வைச்சிருக்கிறன். முதலில் McAfee வைச்சிருந்தனான். அது வைச்சிருந்த வேறு சிலரின் கணணிகள் மோசமாக வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானதை அடுத்து மைக்கிராசாவ்ட் இலவச பாதுகாப்பை கொண்டு வந்தேன். அது McAfee கண்டுபிடிக்கத் தவறிய சுமார் 6 மென்பொருட்களை கண்டுபிடித்து அகற்ற உதவியது.

மைக்கிராசாவ்ட் போட்டு வையுங்கோ. பொதுவான பாதுகாப்புக்குச் சிறந்தது. விசேட பாதுகாப்பிற்கு வங்கிகள் பயன்படுத்தச் சொல்லும் அன்ரி - வைரஸ்களை பயன்படுத்துவது சிறந்தது.

உண்மையாகவா நெடுக்ஸ்? :o microsoft free anti virus programme போட்டு இருந்த போது தான் எனது online banking account-க்கு ஆப்பு வைக்கப் பட்டது. அதன் பிறகு தான் macfeeக்கு மாத்தினேன். அதுவும் பாதுகாப்பு இல்லையா? :blink::o

உண்மையாகவே நடந்தது. இணையவழி இன்னொருவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் திருடப்பட்டு.. வங்கியில் இருந்து யாரோ பணத்தையும் பரிமாற்றம் செய்து விட்டனர். ஆனால் வங்கி எப்படியோ கண்டறிந்து குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து திருட்டு வங்கியால் முறியடிக்கப்பட்டது. macfee எதையும் புடுக்க முடியல்ல.

நான் macfee உட்பட 3 வெவ்வேறான பாதுகாப்பு வலை அமைப்பை செய்து வைச்சிருக்கிறன். இருந்தும்.. சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் போறது. :)

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்ஸ்!

தற்போது online banking முற்றிலும் நிறுத்திவிட்டேன். (ஏதும் முக்கியம் என்றால் மட்டும் வங்கி அட்டை online இல் பாவிப்பேன்)

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட anti -virus programme பாவிக்கலாமா? ஒன்றில் virus-ஐ recognise பண்ணாவிட்டால் மற்ற anti -virus programme இல் அந்த virus recognise பண்ணுமா? 2 anti virus programms பாவிப்பதால் கணனியின் வேகம் குறைய வாய்ப்புகள் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்!

தற்போது online banking முற்றிலும் நிறுத்திவிட்டேன். (ஏதும் முக்கியம் என்றால் மட்டும் வங்கி அட்டை online இல் பாவிப்பேன்)

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட anti -virus programmes பாவிக்கலாமா? ஒன்றில் virus-ஐ recognise பண்ணாவிட்டால் மற்ற anti -virus programme இல் அந்த virus recognise பண்ணுமா? 2 anti virus programms பாவிப்பதால் கணனியின் வேகம் குறைய வாய்ப்புகள் உள்ளதா?

உண்மையில் நான் ஒன்றுக்கும் மேற்பட்ட anti -virus programmes பாவிக்கிறேன். அதில் சில நேரம் இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான சந்தர்ப்பத்தில் ஒன்றை தற்காலிகமாக நிறுத்தி மற்றதை பாவிப்பேன்.

வங்கிகள் சொன்ன சில பராமரிப்பு முறைகளையும் கையாள்கிறேன். பிராட் இன்சூரன்ஸ் செய்தும் வைத்திருக்கிறேன். இப்படிப் போகுது.. ஆன் லைன் வாழ்க்கை..! றிஸ்க் தான் என்ன செய்வது..! நான் வழமையாகவே ஆன் லைன் வர்த்தகம் பாவிப்பது குறைவு. நல்ல நம்பிக்கைக்குரிய சில தளங்களை மட்டும் பாவிப்பேன். அத்தியாவசியம் என்றால் மட்டும். :)

றிஸ்க் எடுக்கிறது றஸ்க் சாப்பிடுகிற மாதிரி போல.. ^_^

கருத்திற்கு நன்றி நெடுக்ஸ்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசனையும், அதற்குரிய வழிகளையும் தெரிவித்த தப்பிலி, குட்டி, நெடுக்ஸ், நாடோடி, புரட்சி, நுணா ஆகியோருக்கு நன்றி. :)

சந்தேகம் ஒன்று.... அழையாவிருந்தாளியாக, Smart internet Protection என்னும் வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் வந்து குந்தியிருந்து கொண்டு என்னை வெருட்டுகின்றது. உதாரணத்துக்கு... microsoft anti virus programme அல்லது McAfee anti-virus மென்பொருட்களை தரவிறக்கம் செய்தால்...... Smart internet Protection என்னும் அழையா விருந்தாளி காணாமல் போய்விடுவாரா? அல்லது அவருக்கு ஏதாவது வெடி வைச்சுத்தான்.... கிளப்ப வேண்டுமா?

ஆகா.. நீங்களும் மாட்டுப்பட்டிட்டீங்களோ. கண்ட கண்ட சிமைலிஸ்.. இந்திய நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் போடேக்கையே நினைச்சனான்.. இவர் உதுகளில் மாட்டுப்படுவார் என்று.

Smart internet Protection இது அன்ரி - வைரஸ் மென்பொருள் அல்ல. இது ஒரு வைரஸ் ஆகும்.

கீழுள்ள விபரங்களை முழுமையாக ஒரு தடவை படியுங்கள். பின்னர் இதனை அகற்றும் வழிமுறையை செயற்படுத்துங்கள்.

முதலில் கீழுள்ள இணைப்பில் SUPERAntySpyware தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை ஸ்கான் செய்தால் அது வைரஸை கண்டுபிடித்து தரும்.. பின்னர் அதனை அகற்றுங்கள்.

மிச்ச சொச்சத்துக்கு.. மருந்து தருவார்.. spyware doctor... எனும் மென்பொருளை கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை முழு ஸ்கேன் செய்யுங்கள். அவர் இந்த வைரஸின் மிச்சக் கூறுகளை கண்டுபிடித்து உங்களுக்கு தருவார். நீங்கள் அவற்றை அவர்கள் கூறும் படி அழித்து விடுங்கள்.

http://www.cleanpcguide.com/remove-smart-internet-protection-2011-how-to-remove-smart-internet-protection-2011/

(தேவையான எல்லாப் படிமுறைகளும் இந்த இணைப்பில் உள்ளது. இருந்தாலும் இயன்ற வரை தமிழில் கீழே எழுதி இருக்கிறேன்.)

{இந்த வைரசின் தொற்றால்.. உங்களால் இணைய உலாவிக்கு செல்ல முடியவில்லை என்றால் உங்கள் கணணியை safe mode ல் (கணணியை றீ ஸ்ராட் பண்ணும் போது f8 கீயை அழுத்தி பின்னர் அரோ கீயை பாவித்து safe mode தெரிவு செய்து Enter பண்ணுங்கோ.) வைத்து இயக்கி அதன் வழி இணைய இணைப்பிற்கு சென்றும் இந்த மென்பொருளை இறக்கிப் பாவிக்கலாம்.

safe mode இல் இணைய உலாவி வேலை செய்யவில்லை என்றால்.. மீண்டும் கணணியை றீஸ்ராட் பண்ணி f8 கீயை பாவித்து safe mode networking என்பதை தெரிவு செய்து போங்கள். நிச்சயம் வேலை செய்யும்.}

இந்த வைரஸை அகற்றிய பின் SUPERAntySpyware மற்றும் spyware doctor மென்பொருட்களை தரவிறக்கம் செய்த போது சேமித்த கோப்புக்களை அழித்துவிடுங்கள். அத்தோடு மேலதிகமாக control panel வழி மற்றும் C:// புரோகிராம் போல்டரில் உள்ள இவற்றின் பைல்களையும் அழித்துவிடுங்கள்.

அதன் பின்னர் microsoft anti virus programme தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை மீண்டும் முழுமையான ஸ்கான் செய்தால்.. அது வைரசின் மிச்ச சொச்சங்களையும் ஏனைய ஆபத்தான புரோகிராம் பைல்களையும் கண்டுபிடித்து அழிக்கும்.

அதன் பின்னர் உங்கள் கணணி இந்த வைரஸின் தொற்றில் இருந்து முற்றாக விடுபட்டு விடும்.

மீண்டும் உங்கள் கணணியை வழமை போல் றீஸ்ராட் செய்து பாவிக்க வேண்டியதுதான்.

இதில் McAfee யால் ஒன்றும் புடுக்க முடியாது. அது சும்மா முழிச்சுக் கொண்டிருக்கும். :D:)

எச்சரிக்கை:

மேற்படி இணைப்பில் SUPERAntySpyware மற்றும் spyware doctor என்ற மென்பொருட்களை இறக்கிப் பாவித்துவிட்டு அழித்துவிடுங்கள். ஆன்லைனில் வைத்து ஸ்கான் செய்யவோ.. வைரஸை அகற்றவோ வேண்டாம்.

எனிமேல் சிமைலிஸ் தேடி.. மற்றும் கவர்ச்சி நடிகைகளின் படம் தேடி கண்ட கண்ட இந்திய இணையப் பக்கங்களுக்குப் போகக் கூடாது. தட்ஸ்தமிழ்.. தினமலர் போன்ற இணையத்தளங்களுக்கு விசிட் அடிப்பவர்களுக்கும் இக்கதி நேர்ந்துள்ளது.

முன்னர் ஒரு முறை தட்ஸ் தமிழ்.. சி என் என் (cnn) இணையத்தளங்களுக்கு சென்ற போது எனக்கும் இவ்வாறான ஒன்று வந்து நான் பின்னர் அழித்துக் கொண்டேன். :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. நீங்களும் மாட்டுப்பட்டிட்டீங்களோ. கண்ட கண்ட சிமைலிஸ்.. இந்திய நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் போடேக்கையே நினைச்சனான்.. இவர் உதுகளில் மாட்டுப்படுவார் என்று.

இதற்கு மருந்து தருவார்.. spyware doctor... எனும் மென்பொருளை கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கணணியை முழு ஸ்கேன் செய்யுங்கள். அவர் இந்த வைரஸின் கூறுகளை கண்டுபிடித்து உங்களுக்கு தருவார். நீங்கள் அவற்றை அவர்கள் கூறும் படி அழித்து விடுங்கள்.

--------

விரிவான தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

வாற ஞாயிற்றுக்கிழமை அன்று, கணனியில் ஏற்பட்ட வைரஸ் தொற்றை அழிக்கலாம் என்று இருக்கின்றேன்.

என்ன... செய்யிறது, வயதுக் கோளாறால்... இந்திய நடிகைகளின் படங்களை :wub: பார்க்காமல் இருக்க முடியவில்லையே... :D:lol:

என்ன... செய்யிறது, வயதுக் கோளாறால்... இந்திய நடிகைகளின் படங்களை :wub: பார்க்காமல் இருக்க முடியவில்லையே... :D:lol:

எனது கணனியில் 2 hard disk பொருத்தி இரண்டு operating system வைத்துள்ளேன். ஒன்றுக்கு தீர்க்க முடியாத வைரஸ் பிரச்சனை என்றால் அதில் உள்ள தேவையான தரவுகளை மற்றயதற்கு பிரதி பண்ணி விட்டு பாதிக்கப்பட்ட hard டிஸ்க் ஐ format பண்ணி மீளவும் windows install பண்ணுவேன்.

ஏதோ மடிக்கு வந்தது மடிக்கனணியோடு போய்விட்டது என்று ஆறுதல் பட்டுட்டு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருளை பாவித்து உங்கள் சேவையை தொடருங்கள். :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

கணணி விஷயத்தில் நான் ஒரு அரி வரிக் காரன், ஆனால் சில எளிய வழிகள் மூலம் (கடவுளின் கருணையாலும்!) வைரஸ் தாக்கங்களில் இருந்து தப்பி வருகிறேன்:

1. கஸ்பர்ஸ் ஸ்கை (Kasper's Sky) மென்பொருள் இப்போது பிரபலம் என்று கேள்விப் பட்டேன். ரஸ்ய நாட்டினன் செய்வதால் அவன் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளிலேயே ஏதாவது வைத்து எமக்கு விக்கிறானோ என்று சந்தேகப் பட்டேன். ஆனால் நல்ல பாதுகாப்புப் போல தெரிகிறது. ஒரு வருட சந்தா மலிவு விலையில் நாற்பது டொலர்கள் என்பது மட்டும் தான் கசப்பான செய்தி. மேலும் இது பாவித்தால் வேறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை செயல் படவும் விடாது.

2. வங்கிக் கணக்குகளை பாதுகாக்க, ஒன்லைன் பாங்கிங் பாவித்த உடனேயே இன்டெர்னெட் ஒப்ஷன் (Internet options)பகுதியில் சென்று உங்கள் தற்காலிக இன்ரர்னெட் கோப்புகள் (temporary internet files), சங்கேதச் சொல் (pass words) என்பவற்றை அழித்து விடுங்கள்.இப்படி அடிக்கடி செய்வது உங்கள் கணணியின் வேகத்தையும் கூட்ட உதவும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

3. மேலும் ஒன்லைன் பாங்கிங் போன்றவற்றை இடத்துக்கிடம் காவிச் செல்லும் மடிக்கணணியில் செய்வதை இயலுமானவரை தவிருங்கள் (கணணி தொலைந்தால் உங்கள் தகவல்களும் சேர்ந்து போய் விடும் திருடனிடம்).

4. ஒன்லைன் பாங்கிங் வேலைகளை வயர்லெஸ் நெட்வேர்க்கில் செய்வதும் ஆபத்தானது. Ward driving எனும் முறை மூலம் சைபர் கொள்ளையர்கள் மில்லியன் கணக்கானவர்களின் கடனட்டைத் தரவுகளைத் திருடியிருக்கிறார்கள்.

1. கஸ்பர்ஸ் ஸ்கை (Kasper's Sky) மென்பொருள் இப்போது பிரபலம் என்று கேள்விப் பட்டேன்.

இந்த Kasper's Sky மென்பொருளை Barclays வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். நானும் எனது கணனியின் ஒரு இயங்குதளத்திற்கு பாவிக்கிறேன். நல்லதுபோலத்தான் தெரிகிறது. ஆனால் கணணியை மிக மெதுவாகத்தான் இயங்கவிடுகிறது. புதிய கணனிகளுக்கு பாவித்தால் பிரச்சனையில்லையோ தெரியாது.

நான் Kasper's Sky இன் நீண்ட நாள் வாடிக்கையாளன். அது RAM இல் அதிக நினைவிடத்தை எடுத்து இயங்குவதால் கணணி செயற்பாடுகள் மெதுவாகின்றன என்று நினைக்கிறேன். அதனால் அதை நான் கைவிட்டு விட்டேன். அதுவும் 100% பாதுகாப்பானதல்ல. :)

உண்மை. Kasper's Sky நினைவிடத்திலிருந்தே (RAM ) அதிகளவு சக்தியை பெற்று இயங்குகிறது. Task Manager ஐ ஒரு தரம் கவனித்தால் தெரியும். இந்த மென்பொருளின் செயற்பாடுகள் நினைவிடத்தின் முக்கால்வாசியை பாவிக்கிறது. Norton 360 மென்பொருள் என்னிடமுள்ளது. இன்னும் கணனிக்கு தரவு ஏற்றவில்லை. அதுவும் என்ன பிரச்சனை தருமோ தெரியாது? Anti Virus மென்பொருள் செய்பவர்களே இந்த வைரஸ்களையும் உருவாக்கி வியாபாரம் செய்கிறார்கள்.

நான் வேலையில் உள்ள கணனியில் மாத்திரமே (எல்லாம் ஒரு நம்பிக்கை) online banking செய்வேன். அதுவும் கட்டாய தேவைஎன்றால் மாத்திரமே.

Norton 360 ஐ தான் நான் பாவிகின்றேன். கொஞ்சம் விலை தான் அதிகம் ஆனால் குறிப்பிடதக்க அளவு பாதுகாப்புகள் கூடியது. விரிவாக வாசிக்க மேலுள்ள சுட்டியை அழுத்தவும்.

ஜேர்மனில்

Edited by வாயுபுத்ரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளைத்தொடுவானேன்? அவலப்படுவானேன்? சிற்பம் சின்னமோளங்களை தேடினால் பிரச்சனை குடுப்பாங்கள். :)

கூகிளினால் அங்கீகரரிக்கப்பட்ட Pctools ஐ பாவிச்சு பாருங்கள்... நான் இதைத்தான் பெரிதும் நம்பிறது...

கணனிகளில் இப்போதைய முக்கிய பிரச்சினை வைரசுகளை விட அதிகமாக Spywear கள் தான்... உங்கள் கணனியில் இருந்து தகவல்களை திருடுவதுக்கு வசதியாக உங்களது கணனிக்கு மென்பொருளை தாங்கி வருவதும் அதுதான்... இதை Pctools நண்றாக கையாள்கின்றது...

http://www.pctools.com/performance-toolkit/download/

Edited by தயா

.

Task manager இல் பார்த்தால் என்னென்ன .exe 's ஓடுகின்றன என்று தெரியும்.

அதில் உங்கள் ஆள் smart internet protection இருப்பார். அவரின் சரியான .exe file name ஐ குறித்துக்கொண்டு. start >> search இல் போய் search செய்யுங்கள்.

அது எந்த folder இல் உங்கள் ஆள் இருக்கிறார் என்பதைக் காட்டும். பின் Reboot the system in command prompt. then type del C:\\foldername\smarprotec*.exe

அதன் பின் வழமையான முறையில் start செய்யவும். (Windows).

அவளைத்தொடுவானேன்? அவலப்படுவானேன்? சிற்பம் சின்னமோளங்களை தேடினால் பிரச்சனை குடுப்பாங்கள். :)

சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணா. சின்ன மேளங்களை பார்ப்பவர்களின் கணனிகளே பெரும்பாலும் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.