Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நெடியவன் செயற்படுகிறாராம்! சொல்கிறார் ஷானக ஜயசேகர

வெள்ளி, 11 மார்ச் 2011 04:25

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தற்போது நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமைப் பதவியை வகித்துவருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள பயங்கரவாத ஆய்வு அமைப்பின் ஷானக ஜயசேகர ‘பொஸ்டன் நியூஸ்” இற்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இறப்பிற்கு பின்னர் நிதிகள் அனைத்தும் நெடியவனிடம் கைமாறியுள்ளது. மற்றும் ருத்திரகுமாரனுக்கு வெளிநாட்டில் சொற்ப அளவினரே ஆதரவு தெரிவிக்கின்றனர் என ஷானக ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவன் மற்றும் ருத்திரகுமாரனுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்காக வேறு ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தரமாட்டாது என இலங்கை தமிழர்கள் அமெரிக்காவில் உள்ள ருத்திரகுமாரனிடம் தெரிவித்துள்ளனர் என ஷானக ஜயசேகர கூறியுள்ளார்.

Share 0

tamilcnn

Naked_baby.gif

நெடியவன், இன்னும் Nappy மாற்றும் வயதை தாண்டவில்லை ... முதலில் அதைத்தாண்டி ... பின் பால் போச்சியை விட்டு .... கனகாலம் செல்லும்!!! ... ஆனால் ஆசை யாரைத்தான் விட்டது!

Edited by Nellaiyan

நெடியவன் என்றால் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் என்றால் யார்?

எல்லோரும் இந்த கேள்வியைக்கேட்டால்...

ஒரு நாள் பதில் வரத்தானே வேண்டும். ஆளும் முகம் காட்டத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் என்றால் யார்?

நெடியவனை பற்றி வரும் தலைப்புகளில் நிச்சயம், நெல்லையன் பதில் சொல்வார்.

ஃ நெல்லையனுக்கு, நெடியவனைப் பற்றிய பரிச்சயம் நிச்சயம் உண்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனை பற்றி வரும் தலைப்புகளில் நிச்சயம், நெல்லையன் பதில் சொல்வார்.ஃ நெல்லையனுக்கு, நெடியவனைப் பற்றிய பரிச்சயம் நிச்சயம் உண்டு. :D

நெல்லையனுடைய பதிலை வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ஏனெனில் நெல்லயனுக்கு காஸ்ரோக்களை பிடிக்காது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனுடைய பதிலை வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

ஏனெனில் நெல்லயனுக்கு காஸ்ரோக்களை பிடிக்காது. :rolleyes:

நெல்லையன் நெடுகவும் கஸ்ரோ, சோறு தின்னும் கூட்டம் என்று அடிக்கடி திட்டுவார்.

முந்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் பூர்சுவா கூட்டம், வலது சாரி, இடது சாரி என்று புரியாத பாசையில் பிரிந்து நிற்பார்கள்.

கடைசியில ஒரு மண்னும் இல்லை. அதைப் பார்த்த மாதிரி இருக்கு.

விசுகு, சிறி,

நான் உண்மையாகவே, பொதுவாகவே கேட்ட கேள்வி இது?

இணையங்களில் எங்களுக்கு தலைவர்கள் நிறைய உண்டு. இவர்களின் செயல்பாடுகள் என்ன? மே 19 இன் பின் ஆளையாள் தூற்றி சேறு பூசிக்கொண்டதுதான் மிச்சம்.

எஞ்சியுள்ள போராளிகளின் (சரணடைந்து சித்திரவதை / வல்லுறவு உள்ளாகிய) புனர்வாழ்வுக்கு இவர்களின் பங்களிப்பு என்ன?

போராளிகளின் நிலை மிக கேவலமாகத்தான் உள்ளது. மக்களும் சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகிவிட்டார்கள் (அதாவது அடிமையாக) .

இந்த இரண்டு வருடங்களில் இவர்களின் அடிபாடைப் பார்த்ததுதான் மிச்சம். புலத்தில் / இணையத்தில் யாரும் யாருக்கும் தலைவராகலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, சிறி,

நான் உண்மையாகவே, பொதுவாகவே கேட்ட கேள்வி இது?

இணையங்களில் எங்களுக்கு தலைவர்கள் நிறைய உண்டு. இவர்களின் செயல்பாடுகள் என்ன? மே 19 இன் பின் ஆளையாள் தூற்றி சேறு பூசிக்கொண்டதுதான் மிச்சம்.

எஞ்சியுள்ள போராளிகளின் (சரணடைந்து சித்திரவதை / வல்லுறவு உள்ளாகிய) புனர்வாழ்வுக்கு இவர்களின் பங்களிப்பு என்ன?

போராளிகளின் நிலை மிக கேவலமாகத்தான் உள்ளது. மக்களும் சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகிவிட்டார்கள் (அதாவது அடிமையாக) .

இந்த இரண்டு வருடங்களில் இவர்களின் அடிபாடைப் பார்த்ததுதான் மிச்சம். புலத்தில் / இணையத்தில் யாரும் யாருக்கும் தலைவராகலாம். :)

அதனைத்தான் நானும் கேட்கிறேன் தப்பிலி,

கடசியாக நாடு கடந்த அரசுக்கும் ஆப்படிக்க கன சனம் திரியுது.

இதனால் பாதிக்கப் படப் போவது முழுத் தமிழினம் என்பதை, இவர்களால் ஏன் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

... முதலில் அதைத்தாண்டி ... பின் பால் போச்சியை விட்டு .... கனகாலம் செல்லும்!!! ... !

:rolleyes::rolleyes::rolleyes:

இங்கே பலர் பால் போச்சிகளுடன் தான் இன்னமும்.

வடக்கில பெரும் போர் ஆரம்பமாம்(அதுதான் கிரிகெட்).விஜெய் டீ.வீ யில் இப்ப எங்கட ஆட்கள் அந்த மாதிரி.எலிசபெத்தும் சுப்பர்சிங்கரில நிற்கின்றா.கொழும்பில எழுத்தாளர் மாகாநாடு,கனடாவிலும் எஅதோ அரச ஆதரவாக ஏதோ நடக்கபோகுதாம்.

மே 19 பிறகு புலம்பெயர்ந்தவர்கள் என்ன செய்கின்றார்கள்?

சேர்த்து வைத்த காசுக்கு பங்கு பிரச்சனை நடக்குது.வெட்டு குத்தில தான் முடியும் போல.

முள்ளிவாய்காலில் இறந்தவர்களை விட தப்பி வந்தவர்கள் தான் பாவங்கள் போல கிடக்கு.

.கொழும்பில எழுத்தாளர் மாகாநாடு,கனடாவிலும் எஅதோ அரச ஆதரவாக ஏதோ நடக்கபோகுதாம்.

மே 19 பிறகு புலம்பெயர்ந்தவர்கள் என்ன செய்கின்றார்கள்?

<_<போதுமே உங்களுக்கு!!!! ... நுனிக்காலில் நின்று சேவையாற்றுவீர்கள் சிங்களத்துக்கு!!!!!

முதலில் இந்த நெடியவன் யாரப்பா? அந்த உயரமாய் இருக்கும் ஆள்தானே? :D:D

போர்க்குற்ற பயத்தில் மாடுப்பட்டுள்ள சிங்கள ஓநாய்களின் ஊளையிடல்.

இவர்கள் ஒருபக்கம் ஊளையிட, இன்னொருபக்கம் காமுகர்களின் உளறலும் தொடர்கிறது.

, இன்னொருபக்கம் காமுகர்களின் உளறலும் தொடர்கிறது.

அது என்னுங்கோ??????????????

முதலில் இந்த நெடியவன் யாரப்பா?

தண்டச்சோறு!!!

தண்டச்சோறு!!!

ஒரு காலத்திலை நீங்கள் செய்த வேலையை சொல்லுறீயள்... !

தயா, நான் எக்காலத்திலும், என் பெற்றாரை விட பிறர் உழைப்பில் ஒரு நேர சோற்றையாவது உண்டவனல்ல ... நான் கூற வந்தது உம்மை போன்றவர்களை!!!!36_1_19.gif

தயா, நான் எக்காலத்திலும், என் பெற்றாரை விட பிறர் உழைப்பில் ஒரு நேர சோற்றையாவது உண்டவனல்ல ... நான் கூற வந்தது உம்மை போன்றவர்களை!!!!36_1_19.gif

உங்கட வால் பிடியளை பற்றி எங்களுக்கு நிறைய தெரியும் அண்ணை... நீங்கள் காசு சுத்தின ஜெயதேவனுக்கு இப்பவும் வக்காலத்து வாங்கும் ஆள் தானே....?? அப்ப உங்கட தரம் எங்களுக்கு தெரியாதோ....?? :lol: :lol: :lol:

அப்படியே TBC நாடகத்தையும் வாசு , கீரன் , ENDLF குழுவையும் எங்களுக்கு தெரியும் அண்ணோய்... ! நீங்கள் அண்டைக்கு சரி இண்டைக்கும் சரி மாற இல்லை...!

நெடியவன்இ இன்னும் Nயிpல மாற்றும் வயதை தாண்டவில்லை ... முதலில் அதைத்தாண்டி ... பின் பால் போச்சியை விட்டு .... கனகாலம் செல்லும்!!! ... ஆனால் ஆசை யாரைத்தான் விட்டது!

வுhளை pழளவ hயள டிநநn நனவைநன டில நேடடயலையn: லுநளவநசனயலஇ 07:56 Pஆ

நெடியவனுக்கு 35-40 வயது இருக்கும் அல்லவா?

மலை விழுங்கி மாதாக்களுடன் ஒப்பிடும் போது,

நெடியவன் பால்குடிதான்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்
<_< நெடியவனைத் தலைவராக்கியது யார் என்று தெரியவில்லை. ஆனால், நாடுகடந்த அர்சுக்கெதிராக அவர்கள் வேலைசெய்வது சரியில்லை. மறைவாக வாழும் அவர்களால் காத்திரமான எந்தச் செயலையும் இப்போது செய்ய முடியாது. ஆகவே வெளிப்படையாக இயங்கும் நாடுகடந்த அரசையாவது அவர்கள் செயற்பட விட வேண்டும். அப்படியில்லை என்றால் எங்களுக்கு மிஞ்சப்போவது எதுவுமில்லை.

நெடியவனைத் தலைவராக்கியது யார் என்று தெரியவில்லை. ஆனால்இ நாடுகடந்த அர்சுக்கெதிராக அவர்கள் வேலைசெய்வது சரியில்லை. மறைவாக வாழும் அவர்களால் காத்திரமான எந்தச் செயலையும் இப்போது செய்ய முடியாது. ஆகவே வெளிப்படையாக இயங்கும் நாடுகடந்த அரசையாவது அவர்கள் செயற்பட விட வேண்டும். அப்படியில்லை என்றால் எங்களுக்கு மிஞ்சப்போவது எதுவுமில்லை.

நாடுகடந்த தமிழீழ அரசு எனும் எமக்கு எல்லோருக்கும் ஈர்ப்பான பெயரைக்கொண்ட இந்த அரசுக்குப்பின்னால், மறைந்திருக்கும். மனிதர்கள்,

வெளிப்படையற்ற செயற்பாடும் பல அணிகளின் இருப்பை உறுதி செய்துகொண்டு இருக்கின்றது.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

:( அந்த அணிகள் யாரென்று சொல்லுங்களேன் ஆதிரை?? நெடியவனும் உருத்திரகுமாரனுமா அல்லது இன்னும் வேறா?? அல்லது பழையபடி கே.பீ இன் ஆட்கள்தான் உருத்திரகுமாரனும் அவரது ஆட்களும் என்று சொல்ல வருகிறீர்களா?? இதையே எத்தனை தடவைத்தான் சொல்லுவீர்கள்?? யாராவது கேட்கிறார்களா??

நாடுகடந்த அரசையும் முடக்கியபின்னர் என்ன செய்வதாக உத்தேசம்?? மீண்டும் அணிதிரட்டி இங்கிருந்து படையெடுக்கப்போகின்றோமா?? நெடியவன் அமைதியாக இருப்பதுதான் அவருக்கும் எல்லோருக்கும் நல்லது. அவரால் இப்போது வெளிப்படையாக இயங்க முடியாது. ஆகவே செய்பவர்களையாவது செய்ய விடவேண்டும். நானும் செய்யமாட்டேன், செய்பவர்களையும் விடமாட்டேன் என்றால் என்ன செய்வது ?

அந்த அணிகள் யாரென்று சொல்லுங்களேன் ஆதிரை?? நெடியவனும் உருத்திரகுமாரனுமா அல்லது இன்னும் வேறா?? அல்லது பழையபடி கே.பீ இன் ஆட்கள்தான் உருத்திரகுமாரனும் அவரது ஆட்களும் என்று சொல்ல வருகிறீர்களா?? இதையே எத்தனை தடவைத்தான் சொல்லுவீர்கள்?? யாராவது கேட்கிறார்களா??

நாடுகடந்த அரசையும் முடக்கியபின்னர் என்ன செய்வதாக உத்தேசம்?? மீண்டும் அணிதிரட்டி இங்கிருந்து படையெடுக்கப்போகின்றோமா?? நெடியவன் அமைதியாக இருப்பதுதான் அவருக்கும் எல்லோருக்கும் நல்லது. அவரால் இப்போது வெளிப்படையாக இயங்க முடியாது. ஆகவே செய்பவர்களையாவது செய்ய விடவேண்டும். நானும் செய்யமாட்டேன்இ செய்பவர்களையும் விடமாட்டேன் என்றால் என்ன செய்வது ?

நெடியவன், நான் அறிந்தவரை செயற்படுவதாகத் தெரியவில்லை.

செயற்படவேண்டிய நேரத்தில் செயற்படாது ஒதுங்கியவர் என்பது எனது நிலைப்பாடு.

நாடுகடந்த அரசின் செயற்பாடும், நிலைப்பாடும். நாடுகடந்த தமிழீழ அரசை முடமாகிய நிலையைக்கு கொண்டு சென்றுள்ளது.

செயற்பாடுதான் ஒரு கட்டமைப்பின் இருப்பை நிலை நிறுத்தமுடியும்.

வெறும் அறிக்கைகள் நீண்ட நாட்களுக்கு ஒரு அமைப்பின் இருப்பை உறுதிசெய்யாது.

நாடு கடந்த அரசுக்கு உண்மையான இலக்கு இருக்குமாயின் அதை நோக்கிச்செயற்பட்டிருக்க வேண்டும், உண்மையாக செயற்பட்டு இருக்குமாயின் எதிரணியின் இருப்பு இல்லாது போயிருக்கும்.

எதிரணிகளை உயிர்புடன் இருக்க வைத்திருப்பதுதான் நாடுகடந்த அரசின் உரிமையாளர்களின் இலக்காக இருக்குமோ?

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில பெரும் போர் ஆரம்பமாம்(அதுதான் கிரிகெட்).

நீங்கள் என்ன ஆப் இல சிக்ஸ் அடிச்ச ஆக்கள், .இப்படி 4 பொடியள் 100 வருடமாய் விளையாடினால் எட்டிப்பாக்க-இணையத்தில்- பார்க்க மாட்டீங்கள்...

நாங்கள் படிச்ச காலத்தில் இந்துகல்லூரியன் மைதானம் இப்ப உள்ளதை விடவும் சிறிது..வைரவர் கோயில் பக்கம் ரோட்டில நீண்டால் விக்கட்கீபர் உடன் ரகசியம் கதைக்கலாம்..அங்கேதான் உந்த ஆப் ஒன் விளையாட்டுக்கள் விட்டியலோ தெரியவில்லை...

எங்கட இனப்பிரச்சனை 47 பிறகு தொடங்கினது என்றால் மேட்ச் அதற்க்கு முதலே தொடங்கினது...ஆனையிறவு தோல்விக்கு பிறகு உதயன் பந்தி பந்தியாய் கட்டுரை எழுதினது..அனையிறவுக்கு சப்போட் இல்லை ஆனால் மட்சுக்கு சப்போர்ட் பண்ண ஆக்கள் என்று...அதில தேசியம் பாதி, காழ்புணர்வு பாதி-எங்களுக்கு அதை எழுதுகிற ஆக்களின் பின்புலம் தெரியும் :(.

நான் முதலே சொன்னமாதிரி இது 4 பேர் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டு அதையும் இன்னுமொன்றையும் கலக்க வேண்டாம்..

100 வருட மேட்ச் இப்பவும் நடக்கும் இன்னும் 100 வருடம் தாண்டியும் நடக்கும்...மற்றும்படி இதுவும் இங்கத்தைய கூத்தோ அல்லது அங்கத்தைய கூத்தோ ஒன்றல்ல. அது ஒரு தனிக்கூத்து...துரதிச்வசமாக பலரும் அதில் குளிர் காய்வது அல்லது சொறி தேய்க்கிறது இருக்கத்தான் செய்கிறது

இருந்து பாருங்கள் எதிர் வீரசிங்கம் ஒரு ஸ்கூல் பாய் அக இருந்து ஆசிய விளையாட்டில் பதக்கம் எடுத்ததுவே இன்னும் ஒருவரும் தொடவில்லை...இனியும் வரும், எல்லாவிடத்தில்லிருந்தும், முதன்மையாக சென்ரலில் இருந்து. எனது நண்பன் ஒருவன் உங்களை மாதிரி எல்லாப்பக்கமும் 6 அடிச்ச ஆள், சொல்லுவான் "அட எங்களிட்ட உந்த கிரௌண்ட் இருந்த சென்ரல் மசிர வெண்டான்கள்" உண்மையில் அந்த மைதானம் சென்றலினது அல்ல..நான் அறிந்த வரை மாநகர சபையினது யாழ்ப்பாணத்துக்கு கடவுள் தந்த கொடை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் யாரென்று யாருக்கும் தெரியாது.யாருக்கும் தெரியாத ஒருவர் தலைவராக முடியாது.நான் அறிந்தவரையில் நா.க.அரசைக் குழப்பும் கூட்டத்திற்குத் தலைவராக உள்ளார் போல் தெரிகிறது.அவர் வெளியே வந்து தான் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று சொல்ல வேண்டும்.தலை மறைவு அரசியல் செய்ய இது ஒன்றும் ஈழப்போராட்டத்தின் துவக்கமும் இல்லை.அவர் வாழும் நாடும் சிறிலங்காவின் ஆளுமைக்குள் இல்லை.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.