Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈவிரிகோஸில் ஷெல் வெடித்தா போர் குற்றம்.. இலங்கையில் வெடித்தால்.. ஐ நா கண்டுக்காது..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈவிரிகோஸ்டில் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் போராளிகளின் பகுதியில் சந்தை ஒன்றின் மீது ஆறு ஷெல்களை ஏவி 25 தொடக்கம் 100 பொதுமக்களைக் கொன்றது உட்பட பலரை இடம்பெயரைச் செய்தமை ஆட்சியாளர்களின் போர் குற்றமாக கருதப்படலாம் என்று ஐநா அறிவித்துள்ளது.

ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக இந்தியா.. சிறீலங்கா என்று மாறி மாறி குண்டுகளைக் கொட்டி தமிழ் மக்களைக் கொன்ற போதும் இப்படியான எதனையும் ஐநா கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஐநாவிற்கு.. ஒருவேளை சிறீலங்காவில் தமிழர்கள் செத்தது தெரியாதோ..???!

எது எப்படியோ ஐநாவின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழர்கள் மீது குண்டு வீசிய இந்திய மற்றும் சிறீலங்கா ஆட்சித் தலைமைகள்.. போர் குற்றவாளிகளாக ஐநாவால் இனங்காணப்படவும் அறிவிக்கப்படவும் தமிழ் மக்கள் ஐநாவை ஆணித்தரமாக கோர வேண்டும்.

Ivory Coast shelling in Abidjan 'a war crime' - UN

The shelling of an Abidjan market by Ivory Coast security forces which killed at least 25 people may be a crime against humanity, the UN says

http://www.bbc.co.uk/news/world-africa-12787015

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதுகெலும்பில்லாத ஐ.நா

  • கருத்துக்கள உறவுகள்

கண்டும் காணாது இருந்ததால் தானே எத்துணை இழப்பு எமக்கு.

பான் கி மூனின் நடு நிலைமை.

ஐ. நா. அதிகாரிகளுக்கு பெண்களை வழங்கத் தெரியவில்லை - பாவம் ஐவோரி கோஸ்ட்.

மேலே கூறப்பட்டுள்ள ஆதங்கள் நியாயமானவை. உலகம் நீதி நியாயம் என்ற அச்சாணியில் சுழலவில்லை.

மேற்குலக நாடுகள் அனைத்தும் ஒரு குடும்பம் போன்றது. தமது அங்கத்தவர்களை அவர்கள் நூறு வீதம் பாதுகாப்பார்கள், உதவுவார்கள். அதேவேளை ஆப்பிரிக்க, ஆசிய, அரபு, இலத்தீன் அமெரிக்கா நாடுகளை அவ்வாறு கூறமுடியாது. இதனால் ஒட்டுமொத்தமாக மேற்குலகத்தால் இவர்கள் ஆளப்படுகிறார்கள்.

எனவே, ஆப்பிரிக்க, ஆசிய, அரபு, இலத்தீன் அமெரிக்கா நாடுகளின் தலைமைகள் தமக்குள் ஒற்றுமையாக இல்லாவிடில் இன்னும் பல மில்லியன் மக்கள் இறப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இந்தியா என்னும் தரித்திரம் பிடிச்ச நாடு, பக்கத்திலை இருந்தது பெரிய வில்லங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ . நா வா அது, அது ஐ . நோ . வெறும் குருடு . :mellow:

எமக்கு இந்தியா என்னும் தரித்திரம் பிடிச்ச நாடு, பக்கத்திலை இருந்தது பெரிய வில்லங்கம்.

54458620.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=82980&view=findpost&p=646780

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா என்கிற கையாலாகாத ஒரு அமைப்பிடம் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்?

சத்தியத்தின் தீர்ப்பு இருக்கிறது. இயற்கையாக உருவாகும் அதிலிருந்து எந்த வல்லமையும் தப்ப முடியாது.

அறநெறி குறையக் குறைய....

நம்புங்கள் மனிதர்களால் முடியாததை இயற்கை செய்து முடிக்கும்.

ஐ.நா என்கிற கையாலாகாத ஒரு அமைப்பிடம் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்?

சத்தியத்தின் தீர்ப்பு இருக்கிறது. இயற்கையாக உருவாகும் அதிலிருந்து எந்த வல்லமையும் தப்ப முடியாது.

அறநெறி குறையக் குறைய....

நம்புங்கள் மனிதர்களால் முடியாததை இயற்கை செய்து முடிக்கும்.

இன்னுமா இறைவன் நின்று கொல்லும் என்று நப்புகிரீங்கள்?

எங்கை போய் தலையை முட்ட? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா என்கிற கையாலாகாத ஒரு அமைப்பிடம் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்?

சத்தியத்தின் தீர்ப்பு இருக்கிறது. இயற்கையாக உருவாகும் அதிலிருந்து எந்த வல்லமையும் தப்ப முடியாது.

அறநெறி குறையக் குறைய....

நம்புங்கள் மனிதர்களால் முடியாததை இயற்கை செய்து முடிக்கும்.

அப்படி என்றால் முதல் சுனாமி இந்தியாவுக்கு அல்லவா அடித்திருக்க வேண்டும்.

அப்படி என்றால் முதல் சுனாமி இந்தியாவுக்கு அல்லவா அடித்திருக்க வேண்டும்.

அதை ஆத்தா பார்த்துக்குவா. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இடக்கு முடக்காகக் கதைத்தாலும் மனிதசக்தியால் கட்டுப்படுத்த முடியாதவைகளும் உள்ளன தம்பிகாள்

இடக்கு முடக்காகக் கதைத்தாலும் மனிதசக்தியால் கட்டுப்படுத்த முடியாதவைகளும் உள்ளன தம்பிகாள்

...அதான் 2004 இல் எம் ஊர்களில் சுனாமி வந்து 4௦,௦௦௦௦ இற்கும் மேற்பட்ட எம் மக்களை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கொன்று குவித்தது போல

  • கருத்துக்கள உறவுகள்

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது பழமொழி.

ஏன் நமக்கு அது பொருந்தாது என்று அடம்பிடிக்கிறீர்கள்?

உலகெங்கும் வாழும் மனிதர்களால் எம்மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. மனிதனின் கொடூரத்தனத்தின் உச்சம் 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்று இன்று இரண்டாவது வருடத்தை அண்மித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ஐக்கிய நாடுகள் சபையாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியே அவர்கள் ஏதாவது செய்து தீர்ப்பு வழங்குவார்கள் என்றால் இன்றிருக்கும் சாட்சிகள் இத்துக் கரைந்து சவமான பின்னால்க்கூட நடக்குமா என்பது கேள்விக்குறியே.

சரி அவர்களை விடுவோம் நாம்தன்னும் உத்வேகமாக ஏதாவது சாதிக்கப்போகிறோமா? இங்கு உங்களுடன் உரையாடும் இத்தவிர்க்கமுடியாத கணத்தில் தமிழீழவிடுதலையின் பாதையில் அதன் அணுகு முறையில் அதாவது குறிப்பாக பரப்புரை தொடர்பாக யாராவது தவறு அல்லது குறை இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கொண்டிராமையும், அதே நேரம் அத்தவறை சுட்டிக் காட்டுபவரையும் முடிந்தால் நீ வந்து செய் என்று முடக்கும் போக்கு இன்றைய நாட்களில் மிகப்பெரிய சாபமாகி இருக்கிறது. அதுவே தாயகத்தில் போராடிய போராளிகளையும் எல்லாவற்றையும் இழந்த மக்களையும் காக்கத் தடையாக இருக்கிறது. புலம் பெயரந்த தேசத்தில் இருப்பவர்களால் எதைச் சாதிக்க முடியும்? இன்று மகிந்தரையும் பரிவாரங்களையும் குற்றக் கூண்டில் ஏற்றி விட்டால் தமிழ் இனத்திற்கு விடுதலை கிடைத்ததென்று ஆகிவிடுமா? இன்னும் நாங்கள் முள்ளிவாய்க்காலிருந்து விடுபட்டு இலக்கு நோக்கிப் பயணிக்கவில்லை ஏன்? கிட்டத்தட்ட 40 ஆயிரம் மாவீரர்களின் தியாகங்கள் ஏன் ஒளியேற்றாமல் மங்கிக்கிடக்கிறது? எனக்கு இப்போதெல்லாம் மனிதர்களில் நம்பிக்கை இல்லை. நம்மை மீறிய இயற்கையின் கணக்கு இருக்கிறது அதை நம்புவதைத் தவிர வேறு மார்க்கம் தென்படவில்லை. பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத எழுத்துத்தான் இருப்பினும்பதிவிடுகிறேன்

இதை வாசித்துவிட்டு நான் மகிந்தருக்காக பரிந்துரைக்கிறேன் என்றுயாராவது ஞான சூனியங்கள் சொல்லக் கூடும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.