Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம்.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம். 69 members have voted

  1. 1. எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு?

    • நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி (TGTE Democrat)
    • உலகத்தமிழர் பேரவை (GTF)
    • நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE )
    • மக்களவை
    • கே பி யின் அமைப்பு
    • தமிழர் கூட்டமைப்பு (TNA)
    • EPDP
    • கருணாவின் மக்கள் விடுதலை புலிகள்
    • பிள்ளையானின் மக்கள் விடுதலை புலிகள்
    • பரந்தன் ராஜனின் ENDLF
    • PLOTE
    • நெடியவன் சேரமானின் அமைப்பு
    • இவை எதற்கும் நான் ஆதரவில்லை
    • நான் ஆதரிக்கும் அமைப்பு இங்கே இல்லை
    • தமிழீழ விடுதலைப்புலிகள்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் மத்தியில் பல அமைப்புகள் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலத்துடன் தோன்றிவி;ட்டன. மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் எந்தவிதமான கருத்து இருக்கிறது என்று மக்கள் பொதுவாகவும், இந்த அமைப்புகள் தம்மைத்தாமே அறிந்து கொள்ளவும் இந்த கருத்துக்கணிப்பு உதவலாம். ஆகவே தயவுசெய்து வாக்களியுங்கள்.

நன்றி

Edited by Jude

  • Replies 54
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாடுகடந்த தமிழீழ அரசு இரண்டு இருக்கு, திரு உருத்திர குமாரின் பெயரைப் பிராக்கட்டுக்குள் போட்டால் குழப்பம் இல்லாமல் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுக்கு ..... நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE ருத்திரகுமாரன்)

நான் இதுக்கு ..... நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE ருத்திரகுமாரன்)

எனது முழு ஆதரவும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி. நானும் வாக்களித்து விட்டேன். :)

நான்கு அமைப்புக்களை நான் தற்போது ஆதரிக்கின்றேன். அதில் மூன்று புலம்பெயர் அமைப்புக்கள் (TGTE, GTF, மக்கள் பேரவை), ஒன்று தாயக அமைப்பு (TNA)

தமிழர் கூட்டமைப்புக்கு பலமும் உதவியும் செய்வதே வேறு எந்த அமைப்பினதினதும் நீண்டகால நோக்காக இருக்கவேண்டும். அவர்களே சிங்களத்துடன் பேசி உரிமைகளை பெறல் வேண்டும். அதற்கு தேவையான சர்வதேச ஆதரவையும் சிங்களம் மீதான நெருக்கடிகளையும் தருவதே புலம்பெயர் அமைப்புக்கள் செய்யவேண்டும். அதை செய்பவர்கள், உலக நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப மக்கள் தெரிவுடன் செயல்படுபவர்களுக்கு - ஆதரவு.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற கொள்கைவழி நடக்கின்ற அமைப்புக்கே எனது ஆதரவு. :rolleyes:

சுவி அவர்கள் சொன்னதுபோல அடைப்புக்குறிக்குள் ருத்ரகுமாரன் என்கிற பெயரைப் போட்டிராவிட்டால் நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் போட்டிருப்பேன். அவரின் பெயரை இணைத்தது இந்த அரசு பிளவுபட்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பாகும். அதை மறுக்க வேண்டி இருப்பதால் எவருக்கும் இதில் வாக்களிக்கவில்லை. :rolleyes:

TGTE இற்கும் GTF இற்கும் வாக்க்களித்துள்ளேன். சிறிய குறைபாடுகள் இருந்தாலும் இவ் அமைப்புகளின் செயற்பாடுகள் ஓரளவு திருப்தி அளிப்பதாக உள்ளன. எதிகாலத்தில் மேற்கூறிய மற்றைய அமைப்புகளின் செயற்பாடுகளைப் பொறுத்தே எங்கள் ஆதரவு அமையும்.

ஒரு இயக்கம்தான் மூச்சு, அவர்கள்தான் உயிர் எனும் நிலையில் தமிழர்கள் இல்லை. ஈழ விடுதலைக்காய் 27 மேற்பட்டஇயக்கங்களை கண்டுவந்த தமிழர்கள் இன்னும் ஏமாற தயாராக இல்லை.

TNA ஐப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவே செயற்பட முடியும். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வதிலேயே அவர்களைப் பற்றி கணிப்பிட முடியும்.

மற்றும்படி இன்று ஒரு அமைப்பையே நம்பி செயற்படும் நிலையில் தமிழர்கள் இல்லை.

மக்களுக்காகவே தலைமை, தலைமைக்காக மக்கள் அல்ல.

இதை சகல அமைப்புகளும் உணர்ந்து கொள்ளவேண்டும். மே 2009 நடக்கும் கூத்துக்களைப் பார்த்ததில் இருந்து வெறுப்பில் உள்ள மக்கள் எவரையும் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள்.

தமிழர்களின் தலைமைக்காக போட்டியிடுபவர்கள், இன்று சர்வாதிகார தலைமைகளை எதிர்த்து உலகில் நடக்கும் போராட்டங்களையும் கருத்திலெடுப்பது நல்லது.

புலத்தில் சேர்க்கப்பட்ட பணத்தில் சரணடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்காமல் சுருட்டிக் கொண்டு, இணையங்களில் ARASIYAL செய்பவர்களுக்கு எதிராக வாக்களிக்க வசதிகள் அளிக்கப்படவில்லை என்ற சிறு குறைபாடு உண்டு.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அகோதா எழுதியதுபோல் அமைப்புக்களை தற்போது ஆதரிக்கின்றேன்.

அதேநேரம் எல்லோர்மீதும் சந்தேகப்படும் மாதிரியான சூழலே இன்று நிலவுகிறது.

ஆனால் செயலில் எவர் என்பதே கேள்வி. அந்தவகையில் நாடுகடந்த அரசே தற்போதைய நம்பிக்கை.

இதில் ருத்திரகுமாரின் என்று எழுதவிரும்பவில்லை. இது அதனை சிறுமைப்படுத்தும். இப்படி எம்மை ஒவ்வொரு பிரிவாக்கி அடைப்புக்குறிக்குள் இடுவதுதான் சிங்களத்தினுடையதும் இந்தியினதும் எதிர்பார்ப்பு. அதை நாம்செய்யவே கூடாது.

அத்துடன் நாடுகடந்த அரசு என்பது தமிழ் மக்களது ஒரு திட்டம் மட்டுமே.

இதில் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும் என்றில்லை. அவரவர் வேறு மாதிரியான வடிவங்களில் போராடலாம்.

இதில் எந்த அமைப்பு / அமைப்புகள் பின்வருவனவற்றை செய்கின்றது?

1. சரணடைந்த போராளிகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோரை மீட்பதற்காக ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்கின்றது

2. புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக இலங்கை அரசால் கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் மீள் வாழ்வுக்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்கின்றது

3. போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு வர பாடுபடுவது அல்லது அப்படி பாடுபடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுகிறது

4. அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கு, அவர்களின் மீள் வாழ்வுக்காக இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் பேசி, ஒத்துழைத்து ஒரு இடைக்காலத் தீர்வாகவேனும் ஒன்றை பெற்று கொடுத்து மீண்டும் தம் நிலங்களில், தம் ஊர்களில், தம் இன சனத்துடன் வாழ்ந்து வாழ்வில் இழந்ததில் பெறக் கூடிய முக்கியமான சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க முனைகிறது

5 . போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, போரின் சிதைவுகளை நேரடியாக பார்த்த எம் அருமைச் சிறுவர் சிறுமியர்களின் உள நல மீட்சிக்காக ஆகக் குறைந்தது ஒரு ஆரம்ப முயற்சியை தானும் செய்ய எத்தனிக்கின்றது

இந்த ஐந்தில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட எந்த அமைப்பாவது மேற்கொள்கின்றதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற கொள்கைவழி நடக்கின்ற அமைப்புக்கே எனது ஆதரவு. :rolleyes:

சுவி அவர்கள் சொன்னதுபோல அடைப்புக்குறிக்குள் ருத்ரகுமாரன் என்கிற பெயரைப் போட்டிராவிட்டால் நாடுகடந்த தமிழீழ அரசுக்குப் போட்டிருப்பேன். அவரின் பெயரை இணைத்தது இந்த அரசு பிளவுபட்டுவிட்டது என்று சொல்வதற்கு ஒப்பாகும். அதை மறுக்க வேண்டி இருப்பதால் எவருக்கும் இதில் வாக்களிக்கவில்லை. :rolleyes:

இதில் அகோதா எழுதியதுபோல் அமைப்புக்களை தற்போது ஆதரிக்கின்றேன்.

அதேநேரம் எல்லோர்மீதும் சந்தேகப்படும் மாதிரியான சூழலே இன்று நிலவுகிறது.

ஆனால் செயலில் எவர் என்பதே கேள்வி. அந்தவகையில் நாடுகடந்த அரசே தற்போதைய நம்பிக்கை.

இதில் ருத்திரகுமாரின் என்று எழுதவிரும்பவில்லை. இது அதனை சிறுமைப்படுத்தும். இப்படி எம்மை ஒவ்வொரு பிரிவாக்கி அடைப்புக்குறிக்குள் இடுவதுதான் சிங்களத்தினுடையதும் இந்தியினதும் எதிர்பார்ப்பு. அதை நாம்செய்யவே கூடாது.

அத்துடன் நாடுகடந்த அரசு என்பது தமிழ் மக்களது ஒரு திட்டம் மட்டுமே.

இதில் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும் என்றில்லை. அவரவர் வேறு மாதிரியான வடிவங்களில் போராடலாம்.

முதலாவது கருத்தின்படியே ருத்திரகுமாரனின் பெயர் இணைக்கப்பட்டது. இப்போது அகற்றப்பட்டுள்ளது.

இதில் நாடுகடந்த தமிழீழ அரசு இரண்டு இருக்கு, திரு உருத்திர குமாரின் பெயரைப் பிராக்கட்டுக்குள் போட்டால் குழப்பம் இல்லாமல் இருக்கும்!

Edited by Jude

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் எந்த அமைப்பு / அமைப்புகள் பின்வருவனவற்றை செய்கின்றது?

நான் அறிந்தவற்றை இங்கு தருகிறேன்.

1. சரணடைந்த போராளிகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோரை மீட்பதற்காக ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்கின்றது?

கே. பி. யின் அமைப்பு, ஈ.பி.டி.பி. தமிழ் கூட்டமைப்பு, நெடியவன் குழு, கருணா குழு ஆகிய அனைத்தும் பல வழிகளில் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

குறிப்பாக சிறிலங்காவில் இராணுவ அரச தொடர்பு உள்ளவர்களே இதை செய்ய முடிகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் சர்வதேச மட்டத்தில் இவற்றை செய்கின்றன.

2. புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக இலங்கை அரசால் கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் மீள் வாழ்வுக்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்கின்றது?

இந்த பட்டியலில் இல்லாத, இதற்கென உருவான நேசக்கரங்கள் போன்ற அமைப்புக்களும் உலகத்தமிழர் பேரவையும் இதை செய்கின்றன.

3. போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு வர பாடுபடுவது அல்லது அப்படி பாடுபடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுகிறது?

நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் இவற்றை செய்கின்றன.

4. அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கு, அவர்களின் மீள் வாழ்வுக்காக இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் பேசி, ஒத்துழைத்து ஒரு இடைக்காலத் தீர்வாகவேனும் ஒன்றை பெற்று கொடுத்து மீண்டும் தம் நிலங்களில், தம் ஊர்களில், தம் இன சனத்துடன் வாழ்ந்து வாழ்வில் இழந்ததில் பெறக் கூடிய முக்கியமான சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க முனைகிறது ?

தமிழ் கூட்டமைப்பு இதற்கு முயற்சிக்கிறது. , ஈ.பி.டி.பி., கருணா குழு, பிள்ளையான் குழு, PLOT ஆகியனவும் தமது ஆதரவாளர்கள் மூலம் வருபவர்களுக்கு உதவுகின்றன. நாடுகடந்த தமிழீழ அரசும், உலகத்தமிழர் பேரவையும் சர்வதேச மட்டத்தில் இவற்றை செய்கின்றன.

5 . போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, போரின் சிதைவுகளை நேரடியாக பார்த்த எம் அருமைச் சிறுவர் சிறுமியர்களின் உள நல மீட்சிக்காக ஆகக் குறைந்தது ஒரு ஆரம்ப முயற்சியை தானும் செய்ய எத்தனிக்கின்றது?

உலகத்தமிழர் பேரவையின் அங்கத்துவ அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் வேறு அமைப்புகளின் துணையுடன் இதை செய்கிறார்கள்.

இந்த ஐந்தில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட எந்த அமைப்பாவது மேற்கொள்கின்றதா?

எல்லா அமைப்புகளும் இவற்றை செய்கின்றன. நான் எனக்கு தெரிந்ததை இங்கு எழுதியுள்ளேன். மற்றவர்களும் தாம் தெரிவிக்க கூடியவற்றை எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான், மே பதினேழுக்குப்பின்பு எந்த அமைப்புக்கும் இந்த நிமிடம்வரை ஆதரவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசு உருத்திரகுமார் அணி எனப்பெயரிட்டதன்மூலம் அது இரண்டாக உடைபட்டதாகவே அர்த்தம். தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக ஒரு பொதுவான, நேர்மையுள்ள, சுயநலமற்ற அமைப்பாக இங்கே மேற்கூறிய அமைப்புக்கள் அன்றேல் நிறுவனங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்துடன், புலம்பெயர் மற்றும் புலத்தில் உள்ள அனைத்துத் தரப்புத் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில், தமிழர் விரோததேசமாம் இந்திய வல்லாதிக்கத்தினது சதிவலைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாது, தமிழர்களை உலகப்பொருளாதாரத்தில்பால் இட்டுச்செல்லும் செயல்திறனுடைய கட்டமைப்புக்களை அனைத்து தமிழர்களும் பங்குபற்றுவதற்கான இலகுவான வழிமுறைகளைக் கண்டு அதனை நடைமுறைப்படுத்த யார் வருவார்கயோ அவர்கட்கே எதிர்காலத்தில் எனது ஆதரவு.

இதில் எந்த அமைப்பு / அமைப்புகள் பின்வருவனவற்றை செய்கின்றது?

1. சரணடைந்த போராளிகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோரை மீட்பதற்காக ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்கின்றது

2. புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக இலங்கை அரசால் கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் மீள் வாழ்வுக்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்கின்றது

3. போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு வர பாடுபடுவது அல்லது அப்படி பாடுபடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுகிறது

4. அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கு, அவர்களின் மீள் வாழ்வுக்காக இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் பேசி, ஒத்துழைத்து ஒரு இடைக்காலத் தீர்வாகவேனும் ஒன்றை பெற்று கொடுத்து மீண்டும் தம் நிலங்களில், தம் ஊர்களில், தம் இன சனத்துடன் வாழ்ந்து வாழ்வில் இழந்ததில் பெறக் கூடிய முக்கியமான சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க முனைகிறது

5 . போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, போரின் சிதைவுகளை நேரடியாக பார்த்த எம் அருமைச் சிறுவர் சிறுமியர்களின் உள நல மீட்சிக்காக ஆகக் குறைந்தது ஒரு ஆரம்ப முயற்சியை தானும் செய்ய எத்தனிக்கின்றது

இந்த ஐந்தில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட எந்த அமைப்பாவது மேற்கொள்கின்றதா?

அருமையான கேள்விகள். நான் இலங்கையில் இருந்து கருத்து எழுதுவதால் வெளிநாடுகளில் எந்த அமைப்புகள் என்ன செய்கின்றன என்று தெரியாது. ஆனால் இங்கே இலங்கையில் உள்ள யதார்த்தத்தின் அடிப்படையில் சில கேன்விகளுக்குப் பதில் கூற முடியும்.

1. சரணடைந்த போராளிகள், அவர்களின் குடும்பங்கள் ஆகியோரை மீட்பதற்காக ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்கின்றது

கே.பி.யின் அமைப்பு சில செயற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஈ.பி.டி.பி. சிலரை விடுவித்திருக்கிறது. கிழக்கின் போராளிகளுக்கு யாரும் எதுவும் பெரிதாகச் செய்யவில்லை. நெடியவன் குழு தனது ஆதரவாளர்களைப் பணம் கொடுத்து வெளியே எடுத்திருக்கிறது. த.தே.கூ. இந்த விஷயத்தில் யாருக்கும் உதவி செய்யவில்லை. இங்கு குறிப்பிடப்பட்ட மற்றய அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏதும் செய்ய முடியாது.

2. புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக இலங்கை அரசால் கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் அவர்களின் குடும்பங்கள் ஆகியோரின் மீள் வாழ்வுக்கு ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்கின்றது

வன்னியிலும் யாழிலும் கே.பி.யின் அமைப்பு அதிகப்படியானவர்களுக்கு உதவியுள்ளது. அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு ஈ.பி.டி.பி. உதவியுள்ளது (தினமுரசுப் பத்திரிகையில் வேலை செய்யும் பாதிக்கு மேற்பட்டவர்கள் முன்பு வன்னியிலிருந்து வெளியாகிய ஈழநாதம் ஊழியர்கள்) த.தே.கூ. கட்சி ஏதும் செய்யவில்லை. ஆனால் அதன் சில எம்.பி.க்கள் (அனைவருமல்ல) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில குடும்பங்களுக்கு உதவியுள்ளனர். வவுனியாவில் புளொட் சில குடும்பங்களுக்கு உதவியுள்ளது. மேலேயுள்ள பட்டியலில் இல்லாத சில வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் சங்கங்கள் ஆகியவையும் சில உதவிகள் செய்துள்ளன. வெளிநாட்டுத் தனிப்பட்ட தமிழரின் உதவி பல குடும்பங்களுக்கு நேரடியாகச் சேர்ந்துள்ளது.

3. போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு வர பாடுபடுவது அல்லது அப்படி பாடுபடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுகிறது

இதுபற்றி இங்கே எதுவும் தெரியாது.

4. அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கு, அவர்களின் மீள் வாழ்வுக்காக இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடனும், சர்வதேச அமைப்புகளுடனும் பேசி, ஒத்துழைத்து ஒரு இடைக்காலத் தீர்வாகவேனும் ஒன்றை பெற்று கொடுத்து மீண்டும் தம் நிலங்களில், தம் ஊர்களில், தம் இன சனத்துடன் வாழ்ந்து வாழ்வில் இழந்ததில் பெறக் கூடிய முக்கியமான சிலவற்றையாவது பெற்றுக் கொடுக்க முனைகிறது

த.தே.கூ. செய்ய முயல்வது இதிலுள்ள அரசியல் பகுதியை. இதிலுள்ள நடைமுறைப் பகுதியை (மீள்குடியேற்றத்துக்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்து சில பகுதிகளை மக்களுக்காகத் திறந்து விடுதல்) ஈ.பி.டி.பி. ஓரளவுக்குச் செய்கிறது.

5 . போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, போரின் சிதைவுகளை நேரடியாக பார்த்த எம் அருமைச் சிறுவர் சிறுமியர்களின் உள நல மீட்சிக்காக ஆகக் குறைந்தது ஒரு ஆரம்ப முயற்சியை தானும் செய்ய எத்தனிக்கின்றது

பட்டியலில் உள்ள எந்த அமைப்புமல்ல. ஆனால் இந்த முயற்சிகளை சில மத அமைப்புகளும் வெளிநாட்டு அமைப்புகளும் செய்கின்றன. இலங்கையிலுள்ள சில மருத்துவ சங்கங்களும் (சிங்களச் சங்கங்கள் அதிகம்) இதைச் செய்கின்றன.

நான் எழுதியது உங்களில் சிலருக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? கோபப்படுபவர்களா இங்கே வந்து எங்களுக்கு உதவப்போகிறீர்கள்?

3. போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு வர பாடுபடுவது அல்லது அப்படி பாடுபடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுகிறது

இதுபற்றி இங்கே எதுவும் தெரியாது.

5 . போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, போரின் சிதைவுகளை நேரடியாக பார்த்த எம் அருமைச் சிறுவர் சிறுமியர்களின் உள நல மீட்சிக்காக ஆகக் குறைந்தது ஒரு ஆரம்ப முயற்சியை தானும் செய்ய எத்தனிக்கின்றது

பட்டியலில் உள்ள எந்த அமைப்புமல்ல. ஆனால் இந்த முயற்சிகளை சில மத அமைப்புகளும் வெளிநாட்டு அமைப்புகளும் செய்கின்றன. இலங்கையிலுள்ள சில மருத்துவ சங்கங்களும் (சிங்களச் சங்கங்கள் அதிகம்) இதைச் செய்கின்றன.

நான் எழுதியது உங்களில் சிலருக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? கோபப்படுபவர்களா இங்கே வந்து எங்களுக்கு உதவப்போகிறீர்கள்?

உங்கள் மீது கோபம் வரவில்லை. தமிழ் மக்கள் இன்றும் 18000+ முகாம்களில் உள்ளனர், மேலாக இளையோர் யுவதிகள் (11000+) சட்டத்திற்கு முரணாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேலாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பது தட்டிக்கழிக்கப்படுகின்றது. சிங்கள அரசு மீது உள்ளிருந்து அழுத்தம் கொடுக்க முடியாது. அதனால் தான் புலம் பெயர் அமைப்புக்கள் முக்கியம் பெறுகின்றன.

முடிந்தால் இந்த தளங்களுக்கு செல்லுங்கள், இலங்கையில் இவை தடை செய்யப்படவில்லை என்றால்:

- http://www.tgte-us.org/

- http://globaltamilforum.org/gtf/

- http://www.facebook.com/group.php?gid=111504962221665

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவரது உண்மையான அணி எதுவோ அதற்குத்தான் எனது ஓட்டு . உண்மையான அணியை அடையாளம் காட்டுமாறு ஈழ தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறான் இந்த தோழர்.

தானை தலைவரது உண்மையான அணி எதுவோ அதற்குத்தான் எனது ஓட்டு . உண்மையான அணியை அடையாளம் காட்டுமாறு ஈழ தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறான் இந்த தோழர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் நீக்குவதற்க வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

ஆனால் இந்தக் கும்பலை இயக்கும் சிங்கள நெட் கனவானும் நந்கோபன் கூட்டமும் கோத்தபாயவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளை தடைசெய்விப்பதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் தேசியம் பேசிக் கொண்டே செய்தது.

விடுதலைப்புலிகளின் தடையை இறுக்குவதன் மூலம் அல்லது மீளக் கொண்டுவரும்படி செய்துவிட்டு தாங்கள் தான் விடுதலைப் புலிகளின் உண்மையான செயற்பாட்டாளர்கள் என்று காட்டிக் கொண்டு நாடுகடந்த அரசுக்குள் வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே நாடுகடந்த அரசுக்குள்ளும் இருக்கிறாhர்கள் எனவே நாடுகடந்த அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அதை தடை செய்விப்பது தான் கோத்தபாயவின் சதித்திட்டமாகும்.

40 ஆயிரம் மாவிரர்கள் செய்த தியாகத்தின் அத்மபலம் இந்த நாசகார கும்பலை தோற்கடித்துவிட்டது

இனியாவது இவர்களின் பின்னால் நின்றவர்கள் நிற்பவர் இவர்களின் உண்மையான நோக்கத்தையும் உணாந்து இவர்களை ஓரங்கட்டிவிட்டு நாடுகடந்த அரசை பலப்படுத்த முன்வரவேண்டும்

எனக்கு தலை சுற்றினாலும்.. கொஞ்சம் ஏதோ புரியுது தோழர்..நன்றி.

என்னதான் முக்கினாலும் இனி எமக்கு விடிவு இல்லை.. இல்லை.. இல்லை.. இல்லை.. இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்கான தெரிவுகள் பல உள்ளன.. சிலது..

பொருளாதார ரீதியாக தங்களை வளப்படுத்துதல்

பொது வங்கி ஒன்றினை நிறுவி ஏழை நாடுகளுக்கு கடனுதவி செய்து அவர்களை தம்பால் ஈர்த்தல்

இலவச சேவை மையம் (ரத்த தானம் உட்பட) தொடங்கி அதன் வழி தமது தேசியத்திற்கான நியாயத்தினை பிற மக்களிடம் கொண்டு சேர்த்தல்.

சர்வதேச அளவிலான ஊடகம் தொலை காட்சி தொடங்கி நடுநிலைமையோடு .. தமது சார்பான தெசியத்தின் நிலைப்பாடு குறித்த்து உலகாளாவிய ரீதியில் எடுத்துறைத்தல்

இந்த ஸ்பான்ஸர் சிப்பு என்று எதோ எதோ செய்கிறார்கள் போக தங்கள் தொழில் நிறுவனங்களுக்கும் தமிழ் ஈழம் என்ற பெயர் வரும் படி பெயர் வைத்து அதை இந்த கிரிக்கெட்டு மற்றும் கால் பந்து போன்ற விளையாட்டுக்களில் 5 செகண்டு விளம்பரமாவது வரசெய்தல் ..

280.gif

அவன் கோக்கோ கோலா கண்டு பிடித்தான் .. ஈழ தோழர்கள் பினாயிலில் கொஞ்சம் பிளீச்சிங்க் பவுடரோடு சக்கரை சேர்த்து புதிய பானம் என அறிமுகபடுத்தல் வேண்டும்.. இங்கிட்டு அதற்கு விளம்பரம் முக்கியம் பினாயில் என்றாலும் ஜிகுஜிகுவென கவர்ச்சியான நடிகை தோன்றி விளம்பரம் செய்தால் உலகம் முழுக்க வியாபாராம் ஓகோ ...

டிஸ்கி ..

இன்னும் பல உள்ளது அதை போக போக சொல்வேன் ரைட்டு :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே பி யின் அமைப்பு(1 votes [1.96%] - View)

EPDP(1 votes [1.96%] - View)

கருணாவின் மக்கள் விடுதலை புலிகள்(1 votes [1.96%] - View)

பிள்ளையானின் மக்கள் விடுதலை புலிகள்(1 votes [1.96%] - View)

பரந்தன் ராஜனின் ENDLF(1 votes [1.96%] - View)

PLOTE (0 votes [0.00%])

உவயள் தமிழீழ அமைப்போ, உவை அனைத்தும், நக்கிபிழைக்கும் ஒட்டு குழுக்கள் அல்லவா, உவை தவிர்த்து அனைத்துக்கும் எனது ஆதரவு உண்டு, அவை நடத்தும், சிறிலாங்கவிற்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன். ஒரு இயக்கம் ஒரு தலைமை என்பது எமது தேசிய தலைவருடன் முடிந்து விட்டது, ஜனநாயக போராட்டத்தில் பன்முகத்தன்மை வேண்டும், கீரைக்கடைக்கும் ஒரு எதிர்கடை வேண்டும், அப்பதான் வியாபாரம் என்றாலும் சரி, போராட்டம் என்றாலும் சரி சூடு பிடிக்கும், ஏதாவது ஒன்று சிறிலங்கா அரசுக்கு விலை போனாலும் எமது போராட்டம் தொய்வின்றி நடைபெறும, ஆகவே இவை அனைத்தையும் நாம் பலப்படுத்த வேண்டும்,

Edited by சித்தன்

ஜூட் .. தமிழீழ அமைப்புகள்???? ... தமிழமைப்புகள்?????????? ... நிறைய வித்தியாசங்கள்!!!! ... நானும் குறிப்பிட இருந்தேன், ஒட்டுக்கும்பல்கள் தமிழர்களின் கொள்கைகளை கைவிட்டும் , தமிழர்களுக்கு எதிராக சிங்களத்துடன் இணைந்து தமிழின அழிப்புக்கு இன்றும் கை கோர்த்திருக்கும் இவர்களையும் இவற்றில் இணைக்க வேண்டுமா?????? ...

  • கருத்துக்கள உறவுகள்

நான் TGTE GTF வாக்களித்தேன்.

உவயள் தமிழீழ அமைப்போ, உவை அனைத்தும், நக்கிபிழைக்கும் ஒட்டு குழுக்கள் அல்லவா, உவை

ஜூட் .. தமிழீழ அமைப்புகள்???? ... தமிழமைப்புகள்?????????? ... நிறைய வித்தியாசங்கள்!!!! ... நானும் குறிப்பிட இருந்தேன், ஒட்டுக்கும்பல்கள் தமிழர்களின் கொள்கைகளை கைவிட்டும் , தமிழர்களுக்கு எதிராக சிங்களத்துடன் இணைந்து தமிழின அழிப்புக்கு இன்றும் கை கோர்த்திருக்கும் இவர்களையும் இவற்றில் இணைக்க வேண்டுமா?????? ...

அவர்கள் தாம் தமிழீழத்தை தமது பெயர்களிலும், வரலாற்றிலும் கொண்டிருப்பதாலும் அவர்களை ஆதரிப்பவர்கள் தமிழீழத்தில் வாழ்வதாலும் அவர்களும் இந்த ஆய்வில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது அவர்கள் பற்றிய புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவின் அளவை அறிய உதவுகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தாம் தமிழீழத்தை தமது பெயர்களிலும், வரலாற்றிலும் கொண்டிருப்பதாலும் அவர்களை ஆதரிப்பவர்கள் தமிழீழத்தில் வாழ்வதாலும் அவர்களும் இந்த ஆய்வில் இடம்பெற்றிருக்கிறார்கள். இது அவர்கள் பற்றிய புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவின் அளவை அறிய உதவுகிறது.

அவர்களுக்கு தாயகத்தில் ஆதரவு இருக்கிறது என்கிறீர்கள்.....?

நடந்து முடிந்த தேர்தலில்.....??? :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.