Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்திரையா???? .... எழுப்பி விடுடுங்கள் ... இல்லையேல் அடித்துத் துரத்துங்கள்!!!!

Featured Replies

போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் அறிக்கை கசிந்து இரண்டு நாட்களுக்கு மேலாகின்றது!! ... ஆனால் ஐநாவின் அறிக்கை வர முன்னம் சிங்கள அரசு, அதற்கெதிரான வலிந்த தாக்குதல்களிலும், தற்பாதுகாப்பு தாக்குதல்களிலும் மூர்க்கமாக ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.வீதிப்போராட்டங்களுக்கான அழைப்பு, சர்வதேசத்தை கட்டுப்படுத்த அவர்களின் சிநேக நாடுகளுடன் ஆலோசனை என ஓர் போரையே பிரகடனப்படுத்தியது போல் செயற்படுகிறார்கள்!!!

ஆனால் இற்றைவரை நமக்கான அரசென்று தேர்ந்தெடுத்தவர்கள் மூச்சே விடாமல் நித்திரையில் இருக்கிறார்கள்??? அல்லது பிணங்களாகி விட்டதனால் மூச்சு விடாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை????

இந்த நாடு கடந்த அரசுதான் வாய் திறக்க வெட்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு போட்டிக்கு போட்டியாக இயங்கும் நெடியவன்களோ, உலக தமிழர் அமைப்போ, பிரித்தானிய தமிழர் அமைப்போ, புலத்தில் இயங்கும் எல்லாமே வாயடைத்து நிற்கிறார்கள்!!

... நேற்றும் ஓர் லண்டனிலிருந்து இயங்கும் வானொலி ... காஸ்ரோக்களினால் சந்தையில் தனியாருக்கு விற்கப்பட்டு, பின் அவ்வானொலி நிர்வாகம் காஸ்ரோக்களுடன் ஏற்பட்ட மனக்குரோதத்தினால், நாடு கடந்த அரசுக்கு ஆதரவளிக்க முற்பட்டது வேறு கதை!! ... ஆனால் அவ்வானொலியே, எம் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டோரும், தம்மை எம் பிரதிநிதிகளாக பிரகடனம் செய்தோரும் வாழா வெட்டியாக பார்த்துக் கொண்டிருப்பதை பலத்த கண்டனம் செய்தார்கள்!!!

புலத்தில் எம் பிரதிநிதிகள் என அறியப்பட்டோர் எல்லாம் தமக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கும், கதிரைப் போட்டிகளுக்கும் வீதிகளில் இறங்கி அடிபடுகிறார்கள்/அடிபடவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அங்கு 100000 மக்கள் அழிக்கப்பட்டும், காணாமல் போயிருப்பதுமாக சர்வதேச ஊடகங்களும், ஐநாவும் கூறியும் செய்வது அறியாது செயலிழந்து நிற்கிறார்கள்!!!

எங்கே இவர்களுக்கு பின் திருவோரும், இவர்களுக்காக குரல் கொடுப்போரும் ... தயவு செய்து இவர்களை தட்டி எழுப்பி விடுங்கள்! ... தட்டிக்கேட்காது விட்டால் இவர்கள் தூங்குவது போல் பாசாங்கு தொடர்ந்து செய்வார்கள்!!

இவர்களிடம் கேளுங்கள் ...

* ஐநா அறிக்கை கசிந்து இற்றுவரை என்ன செய்தீர்கள், அதனை வெளிக்கொணர???

* புலத்தில் மக்கள் எழுச்சிக்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறீர்களா???

இவர்கள் சரியான பதிலளிக்க தவறின் .... இவர்களையும் தூக்கி எறிய எம் இனம் தயங்காது ... வரலாற்றை புரட்டுங்கள் ... இல்லை தொடர்ந்து கதிரைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தொடர்ந்து இயங்க விரும்பின் பின் ஓர் ஒட்டுக்குழுவாக செயற்பட மட்டும் சாத்தியமுள்ளது, அவ்வாறு இயங்குங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:( வெட்கம் கெட்டவர்கள்.

ஏந்தான் இப்படி மவுனம் காக்கிறார்களோ??

இனியும் என்ன யோசனை வேண்டிக்கிடக்கிறது ?? சிங்களவனுக்கு இருக்கும் ரோஷத்தில் துளியவேனுமிருந்தாலே நாம் பல சாதனைகளைப் புரிந்திருக்க முடியுமே??

எங்கே போய்விட்டது உங்களின் தேசியமும், உணர்ச்சிகளும் ? எல்லாமே வாய்ச்சவடல்கள்தானோ ??

மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டு.....!!!!

சாபமே தவிர வேறில்லை !!!!!

.

சிங்களவன் ஐ.நா விற்கெதிரா இப்ப போராடுவான். ஏனெண்டால் எதிர்ப்பைக் காட்ட. ஆனா சூழ்நிலை எங்களுக்கு ஆதரவானது. இதுக்கும் போராட வேண்டுமா ?

நிண்டாப் போராட்டம்... நடந்தாப் போராட்டம்.....

சூழ்நிலையில் சில பகுதிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவடைய சற்று நேரமெடுக்கலாம்.

நா.க அரசும் கூட்டணியும் இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.

தாயக, புலம் பெயர் தமிழரை பிரதிநிதிப் படுத்துவோராக, தமிழருக்காக பேசவல்லோராக, தகுந்த முறையில் சூழ்நிலைக்கேற்ப தம்மைப் நிலைப் படுத்த வேண்டும்.

ஐ.நா, சிங்களவரை ஒரு பகுதியாகவும், சர்வதேசத்தை மறுபகுதியாவும் பார்க்கிறது. எம்முடைய அபிலாசைகளை இவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த நா.க + கூட்டணி ஒருங்கிணைந்து செயல்ப்பட வேண்டும்.

ராஜதந்திரமாகச் செயற்பட வேண்டிய நேரம். தேவையேற்படும் போது போராடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவனை இவனை பார்த்துக் கொண்டிருந்திருந்தால் 17 வயசு பிரபாகரன் ஒரு விடுதலை இயக்கத்தை நடத்தி இருக்க முடியாது. இளையோர்கள் போராடனும். முற்போக்கா சிந்திக்கனும். இளையோர்கள் பெட்டையளோட அவர்களைக் கவர செய்யும் முற்போக்கு தனத்தை இதிலும் பாவிக்க வேண்டும்.

அரசியல் என்பது ஒரு தலைமுறைக்குச் சொந்தமானதல்ல. எமது விடுதலை என்பது ஒரு தரப்புக்குரியதல்ல. எல்லாரும் போராடனும். அவன் இவனை பார்த்துத்தான் அவங்கள் விலை போகும் போது நாங்கள் செயற்பாடற்று இருக்கிறோம். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் மாற்றங்களை விடுதலையை விரும்புகிறவர்கள்.. உடனடியாக ஒருங்கிணைந்து போராட வெளிக்கிடும் போது புற்றுக்குள் கிடக்கும் ஈசல்கள் பறந்தடிக்கும்.

ஆளை ஆள் பார்த்துக் கொண்டிருந்தால் செத்துப் போன எங்கள் சொந்தங்களின் கனவுகள் என்றுமே நனவாக மாட்டாது. அவர்களின் இழப்புக்கள் அர்த்தமற்றதாகி விடும். சிந்தியுங்கள்.. அன்று ஒரு பிரபாகரன் என்ற இளைஞன் எமது இனத்துக்காக போராடியது போல.. அத்தனை கைக்கூலிகள் மத்தியில் இருந்தும் அவன் ஒருவன் தோன்றியது போல.. இன்று பல இளைஞர்கள் யுவதிகள் உருவாகக் கூடிய வாய்ப்பிருக்குது. ஜனநாயக வழியில் நாம் எமது போராட்டத்தை முன்னெடுத்து சர்வதேச ஒத்துழைப்போடு நாம் எமக்கான விடிவை தேடும் அரிய சந்தர்ப்பத்தை இறந்து போன ஆன்மாக்கள் அளித்துள்ளன. அவற்றை வீணடித்து எதிரிக்கு அவர்களின் உயிர்களை விலைபேசி அதில் வாழ்வை ஓட்டலாம் என்று எண்ணுபவர்கள்.. அப்படியே இருக்கட்டும். அவர்களைப் பற்றிய கவலை இன்றி நாம் இளையவர்கள் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். எமது எழுச்சியில் தான் எனி எமது இனத்தின் விடுதலையே தங்கி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

சிங்களவன் ஐ.நா விற்கெதிரா இப்ப போராடுவான். ஏனெண்டால் எதிர்ப்பைக் காட்ட. ஆனா சூழ்நிலை எங்களுக்கு ஆதரவானது. இதுக்கும் போராட வேண்டுமா ?

நிண்டாப் போராட்டம்... நடந்தாப் போராட்டம்.....

சூழ்நிலையில் சில பகுதிகள் தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவடைய சற்று நேரமெடுக்கலாம்.

நா.க அரசும் கூட்டணியும் இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.

தாயக, புலம் பெயர் தமிழரை பிரதிநிதிப் படுத்துவோராக, தமிழருக்காக பேசவல்லோராக, தகுந்த முறையில் சூழ்நிலைக்கேற்ப தம்மைப் நிலைப் படுத்த வேண்டும்.

ஐ.நா, சிங்களவரை ஒரு பகுதியாகவும், சர்வதேசத்தை மறுபகுதியாவும் பார்க்கிறது. எம்முடைய அபிலாசைகளை இவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த நா.க + கூட்டணி ஒருங்கிணைந்து செயல்ப்பட வேண்டும்.

ராஜதந்திரமாகச் செயற்பட வேண்டிய நேரம். தேவையேற்படும் போது போராடலாம்.

ஈசனின் கருத்து சரியகவே... படுகின்றது.

சிங்களவனும், தமிழனும் ஒரே நேரத்தில் போராட வெளிக்கிட்டால்....

சிங்களம், தமிழனது போராட்டத்தையும், ஐ.நாவுக்கு எதிரான போரட்டம் என்று கதை கட்டி விடும்.

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக மாறின கதையாக வந்து விடும்.

Edited by தமிழ் சிறி

கொஞ்ச காலத்துக்கு முன்புதானே சிறையிலிருந்து வெளியே வந்தார் சீமான். தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை கருவறுப்பு என்று தொடங்கிய போராட்டம், ஏதாவது செய்தால்த்தான் உண்டு வாழ்வு என்கிற நிலைக்கு காங்கிரசை கொண்டுவந்து நிறுத்தியிருக்கு.

இப்ப இந்த சூழ்நிலையில இங்க நாங்க என்ன செய்யலாம்?

தெளிவான ஒரு குறிக்கோளை முன்வைத்து எங்கட அமைதியான், காத்திரமான பிரச்சார போராட்டத்த தொடங்கணும்.

நடவடிக்கைகள் சின்னச்சின்னதா இருந்தாலும் அதனை உள்வாங்குவோருக்கு, குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்குமாறு இருக்கவேணும்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

செய்த போர்க்குற்றங்களை ஐநா நிபுணர்குழு வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்த பிறகு வேலை இலகுவாகிவிட்டது.

பிரச்சாரம் செய்வோர் மன்னிப்புச்சபையோடு சேர்ந்து எல்லா நகரங்களிலும் "பான்கிமூன் போர்க்குற்றம் தொடர்பாக உனக்கு என்ன தெரியும்?" என்ற படிவத்தில் கையெழுத்து வேட்டை தொடங்குவோம். ஆவாணங்களை சிடிக்களில் தரவிறக்கம் செய்து வருவோருக்கும் போவோருக்கும் போட்டுக் காட்டுவோம்.

சிறிலன்காவில் என்னதான் நடக்குது? கொஞ்சம் விளக்கம் யாராவது தருவீர்களா? என்று கேட்டபிறகுதான் ஆவணங்களை தேடி ஓடுற வேலையவிட நாங்க தேடிப்போய் "லொக்கபி குண்டின் சூத்திரதாரி கடாபியின் நண்பன் ராஜபக்ச செய்த போர்க்குற்றங்களைப் பாருங்க" எண்டு குடுக்கிறதில தாக்கம் கூட.

இளையோருக்கு பள்ளிக்கூடம் தொடங்க இன்னும் ஒரு கிழமை இருக்கு. இப்பவே தொடங்கினால் தெளிவான செயல்திட்டம் வரையறுக்க முடியும்.

http://bcove.me/ujz0sltb

http://c.brightcove.com/services/viewer/federated_f9?isVid=1

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-is-srebrenica-moment

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அறிக்கை: இலங்கை அரசு, ராணுவத்தைக் கூண்டிலேற்றும் முதல்படி! - ருத்ரகுமாரன்

இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளர்கள் மற்றும் படைத் தலைவர்களையும் கூண்டிலேற்றுவதன் முதல்படிதான், இப்போது வெளியாகியுள்ள ஐநா குழுவின் இனப்படுகொலை அறிக்கை, என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐ. நா பொதுச் செயலாளரின் நிபுணர்குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்க் குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதை நியாயப்படுத்திக் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்துமீறல்களில் நான்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன ஒழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

அவை,

1) பரந்துபட்ட குண்டுத் தாக்குதல் மூலம் பொது மக்கள் கொல்லப்பட்டமை,

2) மருத்துவமனைகள், பாடசாலைகள் உட்பட பொதுமக்கள் வசிப்பிடங்களை குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது,

3) மனிதாபிமான உதவி மறுப்பு,

4) போரில் உயிர் தப்பிப் பிழைத்து உள்ளூரில் இடம் பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள்

ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் பாதுகாப்பற்ற வன்னிப்பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை. எனவே இது, திட்டமிடப்பட்டு இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக நிருபனமாகியுள்ளது.

மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேகக் கொடுமையான இனரீதி அரசியல், சமூக, பொருளாதாரரத் தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள் தொடர்ந்தும் இனப் படுகொலைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதைச் சான்றுபடுத்தும். இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டுமொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறிவந்ததை ஊர்ஜிதப் படுத்துகின்றது.

போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியானதுடன் இலங்கை அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது.

இறுதியில் இலங்கையின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது.

அந்த அறிக்கையில் பாலியல் வல்லுறவு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு, ஆட்கடத்தல், பரந்துபட்ட குண்டுத் தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் முயற்சிகள் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியிலிருந்தே நினைத்தது போல இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பலத்த விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவு குறைபாடுகளுடையது என்பதுடன் சர்வதேசத் தரத்திற்கு அமைய நம்பகத் தன்மையற்றதும், செயல்திறன் அற்றதுமாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஜ.நா குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்ப்பிக்கப் பட்டதுடன், நடேசன் அவர்களின் மகனுடைய நேர்முக வாக்குமூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நடேசன் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனது வாக்குமூலம், நடேசனின் இறுதிக் கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது.

இன்னுமொரு நம்பகரமான சாட்சியம் கேணல் ரமேஷ் அவர்களின் மனைவியால் வழங்கப்பட்டது. இலங்கையின் அரச தலைவர்களையும், படைத் தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்க்குற்றங்கள், மனித விரோத மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் நம்புகின்றது.

இவ்வறிக்கை, இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக் காலத்திலும் ஜ.நா.வினதும், மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.

இந்த அறிக்கை ஜ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையுமென நாம் எதிர்பார்க்கிறோம். நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப் பரிமாறலை இவ்வறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்கள் உளமார்ந்த நம்பிக்கை.

தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால், நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச்செய்வது உசிதமல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசங்கம் இங்கே கோடிட்டுக் காட்டுகின்றது," என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ருத்ரகுமாரன்.

இதில ஏதோ செய்யபோவதாக சூழுரைத்து இருக்கு..................

http://thatstamil.oneindia.in/news/2011/04/18/first-step-punishing-sri-lanka-war-crime-aid0136.html

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் இறங்கினால் சரிக்கு சரியாக பார்த்துவிடுவார்கள் என்றால் ..

1) காணாமல் போன தங்களுடைய உறவினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து சொறிலங்கா அரசுதான் பொறுப்பு என ஐ.நா சபைக்கு தெரிவிக்கலாம்

2)அனைத்து நாட்டு மெயின் தூதுவரயாங்களை சந்தித்து (நாடு கடந்த இன்னும் என்ன்ன சபைகள் உண்டோ எனக்கு தெரியல ) சொறிலங்காவின் போர்க்குற்றா ஆதராங்களை விளக்கி தங்கள் சார்பு நியாயத்தினை விளக்க வேண்டும்.

3) இளையோர்கள் பிட் நோட்டுசு வினியோகம் . சிடி வினியோகம் ..ஏன் குறைந்த பட்சம் தினமும் 50 மெயில்களை தமக்கு தெரிந்தவர்களுக்கு ஆதரங்களோடு தட்டி விடுதல் என ஆக்கபூர்வமாக செயல்படலம் (இங்கு உடன் படிப்பவர்கள் க்கூட5 ஆண்டுகளுக்கு பெரிய ஆளாக வரலாம். அப்போது சில ஆக்க பூர்வமான நடவடிக்கைக்கு நட்பு ரீரிதியில் உந்தி தள்ளலாம்)

4) சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பகுதி நேர ஊழியர்களா சேருமிடத்து.. சில ஆக்கபூர்வ நிலைப்பாட்டினை அந்த தொண்டுநிறுவனகள் மூலமாக அரசாங்களுக்கு எடுத்துரைக்கலாம்

மிகுதியை தோழர் அகூதா வந்து முடித்து வைப்பார்.. :rolleyes:

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... ஆசை தோசை அப்பளம் வடை.....

எல்லா கோஷ்டிகளும்.. முந்தி இயக்கங்களுக்கு நடந்தமாதிரித்தான் நடக்கும்.. அதுதான் விதி. அந்த விதியை மாத்த மதி எம்மிடம்மில்லை.

யு.என்.... மகிந்த கூட்டம் மீது ஒருபோதும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.. எடுக்கமுடியாது.. எடுக்கவேண்டியதேவையுமில்லை.. அப்படி யாராவது போன இடத்தில் தடுத்து வைத்தாலும்.. இன்னொரு துடுகெமுனு தோன்றி உங்களை வதம் செய்வதை அந்த கடவுளே வந்தாலும் தடுக்கமுடியாது..

வந்திட்டாங்கள் தாங்களும் ஒரு ஆக்களெண்டு...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான போராட்டத்தை நாம் அன்றே நடத்திவிட்டோம்..! அன்று தெருவில் நின்று போராடியதன் பெறுபேறுகள் இன்று கைவரப்பெறுகின்றன. அன்று போராடியபோது "விளைவுகள் எங்கே?", "சிவப்புக்கொடி ஏன்?" என்று கேள்விகள் கேட்டவர்க்கெல்லாம் இன்று பதில்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்று நாம் செய்யப்போவது இப்போது உள்ள உந்தத்தைத் தக்க வைத்தலே. அதற்கு ராஜதந்திர மட்டத்தில் செயற்பாடுகள் இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன். ஐநாவின் போக்கில் மந்தகதி ஏற்படுமானால் போராட்டம் பற்றிச் சிந்திக்கலாம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்ப வீதிக்கிறங்கி அந்த அந்த நாடுகளின் இயல்பு நிலையைக் குழப்பி அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது பற்றி கொஞ்சம் நிதானமாக செயற்பட வேண்டும்.ஆனால் ராஜதந்திர ரீதியில் சந்திப்பக்களை ஏற்படுத்தவதும் ஒளி வட்டுகள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் மக்களுக்கு பிரச்சாரம் செய்வதும் பயன்தரும்.அவசியம் எற்படின் ஒரு ஊர்வலத்தைச் செய்வது பற்றி யோசிக்கலாம்.எங்கள் ஊர்வலத்திற்குள் சிறிலங்கா புலனாய்வாளர்கள் புகுந்து பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து பழியை தமிழர்கள் மேல் போட்டு எங்கள் மீதுள்ள அனுதாபத்தைத் திசை திருப்ப முயற்சிக்கலாம்.முன்புநாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய உணர்வுரீதியான நிகழ்வுகள் தாயகத்தில் இடம் பெற்றதால் அதற்கு நியாயம் இருந்தது.இப்பொழது எங்களுக்கு மக்களால் தெரிவ செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பதால் அவர்கள் நிச்சயம் இந்த நேரத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை நிகழ்த்தி அந்த தந்த நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.ஐநாவின் செயற்பாட்டில் மந்தப் போக்கு ஏற்படுமாயின் ஐநா முன்றலில் ஒரு ஆர்பாட்டத்தை நிகழ்த்தலாம்.எதற்கும் அடுத்த சில நாட்களுக்கு நிலமைகளை அவதானித்தல் நலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகுக்காக ஏதேனும் செய்யிறமோ இல்லையோ ... உணர்வெல்லாம் செத்துப் போன எம்மினத்தை சற்றேனும் மீள உணர்வேற்ற இதனை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் போகிற போக்கில் எம்மினம் முள்ளிவாய்க்காலை ஏதோ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விசயம் போல் விட்டுவிடும்.

  • தொடங்கியவர்

... நாம் பார்த்துக் கொண்டிருக்க ... கோபுரம் தானே கட்டி விட்டிருக்கிறோம், யாராவது தட்டினால் மட்டும் பார்ப்போம் என்று???? .... கட்டக்கோவணமும் இல்லாமல், நடுத்தெருவில் நாய்களை விட மோசமான வாழ்வு எம்மவர்களுக்கு!

... இந்த அறிக்கை எமக்கு ஆதரவானதாம் ... நாம் அதனை பார்த்துக் கொண்டிருப்போமாயின் .. பார்த்துக் கொண்டிருக்க குப்பைத்தொட்டிக்குள் போடுவார்கள்!! இது பல தடவை பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது!!! இல்லை போடாதே என தடுக்க, எமக்காதராவாக ஒரு மூன்று வல்லரசும், நூறு நாடுகளும் இருக்கின்றன??????????

அட நம்ம பிரதிநிதிகள் ... அதாவது தட்டச்சுப்பலகைக்கு முன் ஒரு நாளுக்கு அரை மணி நேரம் இருந்து ... அறிக்கைகள் விடும் ஜாம்பவான்கள் கூட ஓர் உருப்படியான அறிக்கை விடவில்லை!!

... கேட்டால் நாங்கள் பிரதிநிதிகள் என்றாலும், பகுதிநேரமாகத்தான் வேலை மக்களுக்காக உழைக்கிறோம்(தமக்கும் குடும்பங்கள் இருக்கின்றனவாம்) ... அதற்கு நேற்று ஓர் வானொலியில் ... உங்களுக்கு பகுதி நேரமாகத்தான் உழைக்க முடியும் என்றால், உங்களைப்போல் பலரை, பகுதி நேரமாகத்தான் உழைக்க முடியும் என்பவர்களை, இணைத்து இரவு பகலாக உழையுங்கள்!!! உங்களிடம் பொறுப்பு கையளிக்கப்பட்டிருக்கிறது, அதனை செய்வோம் என்றும் கேட்டுப் பெற்றீர்கள் ... செய்யுங்கள்!!! ... உங்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைத்தது ஒரு நாலைக்கு சில மணி நேரம் கணனி முன் இருந்து அறிக்கைகள் விடவல்ல, அல்லது மாதமொருமுறை நாலு பேர் சேர்ந்து கதைத்துப் போட்டுப் போகவல்ல!!!! .

... சிங்களத்தினால் ... அழிக்கப்பட்டது நூறு, இருநூறல்ல .... இன்று சர்வதேச ஊடகங்களே ஒரு லட்சம் தாண்டும் என்கிறார்கள்!!!! .... உங்களை ஆயுதம் எடுத்து அதற்கு போராடச்சொல்லி ஒருதரும் சொல்லவுமில்லை ... புலத்தில் ... அன்று செய்தோம் போதும் என்று கிடக்காமல் ... வீதிகளை தடை செய்யவும் வேண்டாம், நெருப்புக்கொழுத்தி தற்கொலை செய்யவும் வேண்டாம் ... மாறாக அழுத்தங்களை கொடுப்பதற்கும், சர்வதேச நாடுகளில் விளிப்புனர்வை ஏற்படுத்தவும் ... இன்று மேற்குலகில் இருந்து மீண்டும் இலங்கைக்கான உல்லாசப்பயணம்ங்கள் அதிகரிக்கின்றனவாம் ... யூதர்கள் கொலகோஸ்ருக்கான நீதியை பெற எவ்வளவு வருடங்கள் போராடினார்களோ, நாமும் எம் இன அழிவிற்கான நீதி/நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்ற செய்தியை தொடர்ந்து சர்வதேசத்துக்கு சொல்வதற்காவது ....

... எல்லாவற்றுக்கும் மேலாக ... அங்கு எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்வுக்கு ... சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் கூடிய ஓர் தீர்வு அவசியம் ... அது அவர்களின் இருப்புகளுக்கு ... அதற்காகவாவது ...

நாம் ஒவ்வொருவரும் எமது அமைப்புக்களை, நாம் தெரிவு செய்தவர்களை 'நான் என்ன உங்களுக்கு செய்யலாம்?' என கேட்க வேண்டும். பின்னர் 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று உரிமையுடன் கேட்கலாம்.

இன்று அமைதியான, புத்திசாலித்தனமான இராசதந்திர நடவடிக்ககைகளுக்கு முக்கியத்துவம் தரப்படல் வேண்டும்.

அதேவளை சிங்களம் என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது, எவ்வாறு மகிந்த கூட்டத்திற்கு எதிராக (பொன்சேகா ஆட்கள் உட்பட) சிங்கலத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தலாம் என பார்க்கவேண்டும் ( மேற்குலம் சொல்வதை ஏற்கவேண்டும் என ஒரு பகுதி சிங்களத்தை கருத்து கூற வைக்கவேண்டும்).

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், அணிசேரா நாடுகள், இலத்தீன் நாடுகள், ஆபிரிக்க நாடுகள், சீனா, உருசியா என எமக்கு பலம் சேர்க்கவேண்டும்.

ஊடகங்களுடன் மீண்டும் ஒரு பலமான உறவை வளர்க்க வேண்டும்.

எமது மக்களை ஒன்றிணைக்க வேண்டும். சோர்ந்தவர்களை தட்டி எழுப்பி இணைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாயக வீதிகளில் தான் நீதி கேட்டு இறங்க அனுமதியில்லை. ஆனால் ஐ நா விடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கேட்டு சர்வதேச ஆதரவை தற்போது கோர முடியும்.

எமது அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு செயற்படுவதாகத் தெரியவில்லை.

தாயகத்தில் போராளிகளும் மக்களும் சரணடைந்த பின்னர் 13,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். பலர் இன்னும் வதை முகாம்களில் வாழ்கின்றனர். இவர்களின் எதிர்காலம் குறித்து எவராவது இந்தச் சூழலில் ஐநாவிடம் சர்வதேசத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனரா என்றால் இல்லை.

சம்பந்தன் இன்று விட்டுள்ள அறிக்கை சிறீலங்கா அரசு ஏதாவது தர வேண்டும் என்று கேட்கிறதே அன்றி சர்வதேசம் எமக்கு நீதி கிடைக்க தலையிட வேண்டும் என்று கோரவில்லை. ஏன்..??! சம்பந்தன் சிறீலங்கா படைகளையும் அதன் ஆயுதம் தாங்கிய கூலிக் கும்பல்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தி வைத்துக் கொண்டு தினமும் படுகொலைகளும் காணாமல் போதல்களும் தொடரும் நிலையில் சிறீலங்காவிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார். இதன் பின்னால் இருக்கும் இராஜதந்திரம் தான் என்ன..???!

சிறீலங்கா அரசு அது செய்த போர் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவதோடு சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டின் கீழ் அதன் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்பு கொண்டு வரப்படுவதோடு தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் அது பெற்றுக் கொடுக்க நாம் வலியுறுத்த எமக்கு சரியான வலுவான காரணங்கள் இன்றுள்ளன. ஆனால் நாம் இப்போதும் சிறீலங்கா ஏதாவது செய்யனும் என்று கொலையாளியிடம் இரைஞ்சும் குணத்தையே வெளிப்படுத்தி உள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசு.. சீமான்.. நெடுமாறன் ஐயா தவிர மற்றவர்கள் சிறீலங்கா சிங்கள அரசுக் கட்டமைப்பை இன்னும் நம்பும் நிலையை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடும் தன்மையையே வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச சமூகம் இரட்டை வேடம் போடலாம். ஆனால் ஐநாவின் சிறீலங்கா அரசு மீதான தற்போதைய குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையானவை. விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அந்த இயக்கம் அழிக்கப்பட்டது அல்லது செயற்பாடு இழந்துள்ளது என்ற நிலையில் அதனை விசாரிக்க எதுவும் இல்லை. ஆனால் சிறீலங்கா அரசிடம் இருந்தான தமிழ் மக்கள் மீதான ஆபத்து அச்சுறுத்தல் இனப்படுகொலைக்கான சாத்தியக் கூறுகள் இன்னும் இன்னும் பிரகாசமாக உள்ள நிலையில்.. சரணடைந்த போராளிகள் மக்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு.. தமிழர் நிலப்பரப்பு இராணுவ நிர்வாக மயமாக்கப்பட்டுள்ளது வரை தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்படுவது ஊடாக.. அவசரகாலச் சட்டம் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுக்கும் சட்டங்கள் அமுலில் உள்ளவை அடங்க பல அம்சங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன.

இவை குறித்து தமிழ் மக்கள் தமது ஆதங்கத்தை.. சர்வதேசத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருவதோடு.. சேர்பியாவில் அல்பேனிய மக்கள் மிலேசவிச்சை பதவி நீக்கும் வரை நடத்தியது போன்று தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். ஆனால் நாம்.. இராஜதந்திர நடவடிக்கை என்று எதையோ மக்களுக்கு தெரியாமல் எடுக்கிறோம் என்கிறோம். அப்படி என்னதான் இருக்கு மக்கள் அறியாத இராஜதந்திரம்..??!

மக்கள் தங்கள் பாதிப்புக் குறித்து சர்வதேச கவனத்தை இழுக்க இன்றைய சூழலில் வலுவான ஆதாரத்தை சர்வதேசமே கையளித்திருக்கும் நிலையில்.. மக்கள் அதை பயன்படுத்துவதை இராஜதந்திரத்தின் பெயரால் தடுத்து எதிரிக்கு வழங்கும் கால அவகாசங்கள் அவன் தன்னை பலப்படுத்திக் கொண்டு எம்மீது மீண்டும் மீண்டும் கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடவே வழி செய்யும். அதற்கு சிங்களப் பேரினவாதம் முழு ஆதரவை அளித்தும் நிற்கும்.

அப்போதும் சம்பந்தன் சிறீலங்கா எதையாவது தந்தால் நல்லம் என்று கேட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவரின் கண் முன்னாள் ஆயிரக்கணக்கான மக்கள் சாக அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். எனி தமிழ் மக்கள் இவர்களை நம்பிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப்பை தாமே உறுதி செய்யும் வகையில் சர்வதேசத்திடம் தற்காலிக பாதுகாப்பை பெறுவதும்.. தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் சர்வதேசத்தின் உதவியோடு தமது நிலத்தை தாமே பரிபாலனம் செய்ய கோருவதுமே தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு.. சரணடைந்த போராளிகள் மக்கள் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை சர்வதேச சமூகம் உறுதி செய்து தரவும் அவர்களின் விடுதலையை உறுதி செய்யவும் மக்கள் சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்ப வேண்டும்.

இராஜதந்திரம் செய்யிறவை செய்யட்டும். சோனியாவை சந்திக்கட்டும். ராஜபக்சவோட வட்ட மேசை போட்டு பேசட்டும். இவற்றால் தமிழ் மக்களுக்கு ஒரு உருப்படியான பாதுகாப்பு கிடைக்கக் கூடிய எந்த சாத்தியங்களும் தெரியவில்லை. ஆனால் ஐநாவின் இந்த போர் குற்ற விசாரணையை பரிந்துரைக்கும் ஆவணம்.. தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பை சர்வதேசம் உறுதி செய்து கொடுக்க வேண்டிய கடப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேசம் அதை தட்டிக் கழிக்க முடியாது. அந்த வகையில் தமிழ் மக்கள் சர்வதேசத்தின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு மீட்சியை நோக்கி விடிவை நோக்கி பயணிக்க முற்பட வேண்டுமே தவிர.. மேலும் மேலும் சிங்களவனை இந்தியாவை முழுமையாக நம்பி மக்களை பலியிடுவதை நிறுத்த முயல வேண்டும். இராஜதந்திரம் எமது மக்களை மண்ணை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர அவற்றை பறிக்க வகை செய்யக் கூடாது. அப்படியான இராஜதந்திரங்கள் எமக்கு அவசியம் தானா என்றும் நாம் பரிசீலிக்க கடமைப்பட்டுள்ளோம்.

சர்வதேச அழுத்தத்தின் மூலம் இந்தியா போன்ற நாடுகள் எம்மை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டச் செய்ய வேண்டுமே தவிர நாம் அவர்களிடம் எனியும் சரணடைந்தால் எம்மினத்தை இலங்கைத் தீவில் அழிவில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாத நிலையே தோன்றும்.

Edited by nedukkalapoovan

எங்களுக்குள் யார் தலைவராக இருக்கவேண்டும் / WHO AMONGST US IS THE LEADERS

Read at http://www.worldclasstamil.com/?q=node/133

  • தொடங்கியவர்

நிண்டாப் போராட்டம்... நடந்தாப் போராட்டம்.....

Russia opposed

http://www.dailymirror.lk/news/10957-russia-opposed.html

US Congress back Sri Lanka

http://www.dailymirror.lk/news/10956-us-congress-back-sri-lanka.html

... சிங்களவன் ரஷ்யா, சீனாவையும் அரவணைத்து அமெரிக்காவிலும் என்ன மாதிரி விளையாடுகிறான் .... ... நாங்கள் நிலைமைகளை ஆராய்கிறோமாம் .... எப்ப மட்டும்?????????

  • தொடங்கியவர்

நா.க அரசும் கூட்டணியும் இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது.

... நல்லாக செயலாற்றுகினம்!!!!!!!!!!!!!!!!!! .... ?????????????????

.... ஒரு பிரதிநிதி ... மக்களால் தேர்ந்தெடுகப்பட்டவர் சொன்னாராம் .... எமக்கு போராட்டங்கள் நடத்த, அதை நடத்துவதற்கு போதிய தொண்டர்கள் இல்லாமல் இருக்கின்றது!! அதுவும் ஓர் காரணம் நாம் சிலவற்றை செய்ய பின்னிப்பதற்கு .... ஆமா உங்களுக்கு தொண்டர்கள் வேண்டுமாயின் அடிமட்டத்தில் இறங்கி வேலையை செய்து அரவணையுங்கள், உங்கள் மீது நம்பிக்கைத்தன்மையை ஏற்படுத்துங்கள் ...

... அண்மையில் மகிந்த அமெரிக்க சென்ற போது சிலர், மகிந்த மீது வழக்கு தொடுக்க சிலவேலைகளை செய்ய தொடங்கியதை கேள்விப்பட்ட, நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ...வேறு ஒரு எம்மவர்களின் அமைப்பொன்றை அணுகி அவசரமாக மகிந்த மீது நாம் வழக்கு தாக்கல் செய்ய முயல்கிறோம் என அறிக்கை விடச் சொன்னார்களாம்!!!!!!!!! ஏன்?????? ... எங்கே நீங்கள் ஒன்றையும் செய்யவில்லையே என எம்மவர்கள் யாரும் கேட்டாலும் அப்படி எந்த ஒரு செயற்பாட்டையும், செய்யாமலும் செய்கிறோம் என ஓர் மாயையை ஏற்படுத்த!! (கேட்டவர்கள், கேட்கப்பட்ட அமைப்பு பெயர் விபரம் யாரும் விரும்பின் இங்கு பகிரங்கப்படுத்தலாம், ஆனால் அவர்களோ அப்படி ஒன்றும் செய்யாத இடத்து எவ்வாறு அறிக்கை விடுவது என்று கூறி மறுத்து விட்டார்களாம்!!!)

.... என்னத்தை இவைகள் காட்டுகிறதென்றால் .... பதவிகள், புகழுக்காக எம் கடந்த கால எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் காலத்தை கழித்தது போல் இவர்களும் கழிக்கப் பார்க்கிறார்கள் என நினைக்க வேண்டி உள்ளது!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பார்த்தால் ரஸ்யா இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குது. நாங்க என்ன செய்ய வேணுமெண்டால் புலம் பெயர் நாடுகளிலுள்ள ரஸ்ய தூதரகங்களுக்கு முன்னால் சென்று ஒரு ஆர்பாட்டம் செய்யலாம். இதை செய்யிறத்தால ரஸ்யாவை நாங்க தடுத்து நிறுத்தப் போறதில்லை. ஆனால் போர் குற்றவாளி இலஙகை அரசை ஆதரிக்கவேண்டாம் எனும் எங்கள் கோரிக்கையை உலகுக்கு மீள மீள வலியுறுத்தலாம்.

.

நெல்லையன், உங்கள் ஆதங்கம் நியாயமானது. பலபேரும் இதுபோன்று விசனப் படுகிறார்கள்.

சில கேள்விகள்:

ஐ.நா இந்தளவிற்காவது வந்திருப்பது எம்முடைய மக்கள் போராட்டத்தினாலா? அல்லது TAG மற்றும் Rev.இமானுவெல் போன்றோரின் காத்திரமான நடவடிக்கைகளினாலா ?

ஒரு முளை கூட விடவில்லை, நா.க. அரசைக் குளப்புவதற்கு பாழைய மஃபியா தாதாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் போல் தெரிகிறது. இன்னிலையில் ஒரு முதிர்ச்சியடைந்த அமைப்பின் செயற்பாடுகளை நா.க. அரசிடம் உடனடியாகவே எதிர்பார்க்கலாமா ?

ஐ.நா. மற்றும் சர்வதேசம் அடுத்து என்ன செய்ய உள்ளது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறதா ? (உடனடியாக‌ போராட்டத்தைத் தொடக்குவதற்கு)

இன்னும் கேள்விகள் இருக்கு.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.நா. மற்றும் சர்வதேசம் அடுத்து என்ன செய்ய உள்ளது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறதா ? (உடனடியாக‌ போராட்டத்தைத் தொடக்குவதற்கு)

ஐ.நா அடுத்ததா என்ன செய்யும் எண்டு பார்த்த பின் தான் நாம் எதையும் செயயவேணும் எண்டில்லை. போய் ஜெனிவானில் நின்று "THANK YOU FOR THE PANEL REPORT. BUT WE NEED FAST ACTION" எண்டு சொல்லுறத்தால எமக்கொரு நட்டமும் வரப் போறதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் எங்கட கள்ளக் கூட்டத்தை நம்பி காத்திராமல் இளையோர் அமைப்புக்களை நாம் தான் தூண்ட வேணும்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பத்து நாளில்....... சார்ள்ஸ், டயானா தம்பதியரின் மகன் வில்லியத்துக்கு இங்கிலாந்தில் ராஜகலியாணம் நடக்க இருக்கிறது.

அதனை, உலகமே வேடிக்கை பார்க்க..... ஆவலுடன் இருக்கையில், நாம் வீதிக்குப் போராட இறங்கினால்......

அது, எதிர் மறையான விளைவுகளையே... எமக்குத் தரும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பத்து நாளில்....... சார்ள்ஸ், டயானா தம்பதியரின் மகன் வில்லியத்துக்கு இங்கிலாந்தில் ராஜகலியாணம் நடக்க இருக்கிறது.

அதனை, உலகமே வேடிக்கை பார்க்க..... ஆவலுடன் இருக்கையில், நாம் வீதிக்குப் போராட இறங்கினால்......

அது, எதிர் மறையான விளைவுகளையே... எமக்குத் தரும் என நினைக்கின்றேன்.

அவை தாராளமா கல்யாணம் கட்டட்டும். முந்தின மாதிரி நாம வீதியை மறிக்கவோ இந்த நாடுகளில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கவோ வேண்டாம். நாம் செய்யவேண்டியதெல்லாம்

1. ஐ.நாவுக்கு முன்னால் நின்று விரைந்து நடவடிக்கை எடு. ஸ்ரீ லங்கா அரசால் சீரழிக்கப்பட்ட எம் மக்களுக்கு ஒரு தீர்வு கோடு என்றும் ...

2. சீன இந்திய ரசிய தூதரகங்களுக்கு முன்னால் போர் குற்றவாளி இலங்கையை ஆதரிக்காதே என்றும் ஆர்ப்பாட்டம் செய்தால் போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.