Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய யாழில் இருந்து சண்முகி என்ற சகோதரி இணைத்தது பிடித்திருந்ததால் மீண்டும் வருகிறது.

1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.

2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.

3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.

4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.

5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.

6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.

7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.

8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)

9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.

10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.

11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.

12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.

13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.

14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;

15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.

16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.

17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.

18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)

எடுப்பார்கள்.

19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.

20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.

21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.

22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.

23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.

24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்

25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.

இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

http://paavaioruthi.blogspot.com/2005/10/b...og-post_30.html

http://www.yarl.com/forum/index.php?showtopic=7255

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செலவமுத்து எழுதியது

1. தமிழரைக் கண்டாலும் தமிழிலே கதைக்கமாட்டார்கள்

2. தமிழர் கூட்டங்களிலும் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள்.

3. தமது பிள்ளைகள் எல்லோரும் டாக்டர்களாக வரவேண்டும் என்றே எண்ணுவார்கள். இல்லையென்றால் தம் வாழ்வே முடிந்துவிட்டதாகக் கலங்குவார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் உலகின் எந்தப் பகுதிக்காயினும் அனுப்பி டாக்டருக்குப் படிக்க வைப்பார்கள். இறுதியில் தாம் நோயாளிகளாக அலைவார்கள்.

4. இடியப்பம் சொதி, சம்பலுடன் சாப்பிடுவார்கள்.

5. ஒரு பிள்ளைக்கு (பிள்ளை தயாரில்லாவிட்டாலும் பரவாயில்லை)3 அரங்கேற்றங்களும் செய்வார்கள்.

6. பெயருக்காவும், புகழுக்காகவும் பணத்தை தண்ணிபோல் செலவு செய்வார்கள்.

7. குளிர் காலத்திலும் வெறும் "சேட்" அல்லது "ரி-சேட்" உடன் வெளியே செல்வார்கள்.

8. கலியாண வீடுகளில் காப்புக்கள் அணிந்த கையை நாடியில் ஊன்றியபடியே மற்றவர்களுடன் கதைப்பார்கள்.

9. பொது இடங்களில் பதவியில் ஒருமுறை அமர்ந்துவிட்டால் இறங்கவே மாட்டார்கள். தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று எண்ணுவார்கள்.

10. சீட்டுக் கட்டுவார்கள், எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டும் ஓடுவார்கள்.

நோ பாக்கிங் என்ற இடத்தில் வாகனத்தை விடுவார்கள்

உடனே வாறது தானே என்று சொல்லி மீற்றரக்கு காசு போடாமல் போய் ரிக்கற் எடுத்த பின் கன்னாபின்னா என்று திட்டுவார்கள்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெருவிலே பத்தாயிரம் வெள்ளைக்காரர் போனாலும் நமக்கு எங்களது சனம்தான் கண்ணுக்கு தெரியும்.

போலந்து நாட்டுகாரனினடம் பேசியபொழுது, ஒரு நாளும் போலந்து நாட்டுகாரனை நம்பகூடாது என கூறினான்.

அது அவனது அனுபவம். எல்லா இனத்திலும் எல்லாவிதமான மக்களும் உள்ளார்கள்.

*குளிர் காலத்திலும் கூட சில பெண்கள் socks & trainers போட்டு அதனோடு கால் சலங்கையும் கொழுவிக் கொண்டு திரிவார்கள்.

*தேநீரை சூடாக இருந்தால் ஊதி, ஊதி சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிப்பார்கள்.

*சாப்பிடும் போது தனது சாப்பாட்டுப் பீங்கானில் அதிகமான/ விருப்பம் இல்லாத உணவு இருந்தால் ஒரு கேட்டுக் கேள்வி இல்லாமல் சாப்பிட்ட அரைவாசியில் கையால் எடுத்து பக்கத்தில் உள்ளவரின் பீங்கானில் போடுவார்கள்.

*புதிதாக வாங்கிய தொலைக்காட்சியை துணியால் மூடி வைப்பார்கள்.

*குளியல் அறையில் ஒரு பிளாஸ்டிக் வாளியும், கோப்பையும் 'சோஞ்சோம்' என்று அள்ளிக் குளிக்க வைத்திருப்பார்கள்.

தொடரும்...

தமிழனைக் கண்டால் இங்கிலீசில் பிளந்து கட்டுவார்கள். ஆங்கிலேயர்களுடன் சேரும் பொழுது வாய்மூடி இருப்பார்கள். கதைத்தாலும் அதிகளவில் தமிழ் வார்த்தைகள் வந்து விழும்.

வட இந்தியர்களின் கடவுளுக்கெல்லாம் ஊருக்கு ஊர் கோவில் கட்டி கும்பிடுவார்கள். (ஏதோ இற்றைவரை புலத்தில் புத்தருக்கு கோவில் கட்டி கும்பிடாததே பெரிய விஷயம்.)

மாவீரரை மதிப்பார்கள். வாழும் போராளிகளை மறந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வீட்டு வாசல் கதவுகளில் வீடு குடி புகுந்த காலத்து காய்ந்து போன மாவிலைகள் தொங்கும்!

குறைந்தது பத்துச் சோடி பாதணிகள் அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும்!

கதவில் கட்டாயம் சந்தனப்பொட்டு ஒன்று கட்டாயம் இருக்கும்!

உழுத்துப் போன நீத்துப் பூசணிக்காய் ஒன்று கூரையின் மூலையில் தூங்கும்!

குளியல் அறையில் இருக்கும் சட்டி,கை கழுவுவதற்கு அல்ல!

தண்ணீர் குடிக்கும் போது வாய்க்கும் போத்திலுக்கும் அரைக் கிலோமீட்டர் தூரம் இருக்கும்!

இவர்கள் அநேகமாகப் 'பாட்டா' செருப்புடன் திரிவார்கள்!

ஒரு முக்காலுக்கும், அரைக்கும் இடைப் பட்ட அளவில் ஒரு 'கவுன்' போடுவார்கள்!

தமிழன் என்றொரு இனம் உண்டு தமிழன் என்றொரு இனம் உண்டு

தனியே அவர்க்கொரு குணம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு

அமிழதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்

அன்பே அவனது வழியாகும்

கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்

தமிழன் என்றொரு இனம் உண்டு

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான்

தருவது மேலெனப் பேசிடுவான் தருவது மேலெனப் பேசிடுவான்

தமிழன் என்றொரு இனம் உண்டு

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம்

சமரசம் நாட்டினில் கண்டவனாம்

நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன்

தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு

குணம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மார்க்கெற்றுக்கு, பொருட்கள் வாங்கப் போனால்... வண்டிலை பாவிக்காமல், வாங்கும் பொருட்களை, தாங்கள் கொண்டு போகும் தோள் பைகளில் வைத்து.... அதுகும் காணாமல் வந்தால் கைகளிலும், கமக்கட்டிலும் வைத்துக் கொண்டு வந்து கஷியரின் முன் கவிட்டுக் கொட்டுவார்கள்.

அநேகமானவர்கள் பேர்ஸ் வைத்திருக்க மாட்டார்கள். பொக்கற்றுக்குள் வைத்திருந்த கசங்கிய காசை எடுத்துக் கொடுப்பார்கள்.

தடிமன் வந்தால்.... மூக்குச்சளி துடைக்க, ரிஷூ பாவிக்கமாட்டார்கள். கையாலையே..... நடுரோட்டில் நின்று சீறி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வீட்டு வாசல் கதவுகளில் வீடு குடி புகுந்த காலத்து காய்ந்து போன மாவிலைகள் தொங்கும்!

குறைந்தது பத்துச் சோடி பாதணிகள் அவர்கள் வீட்டு வாசலில் இருக்கும்!

கதவில் கட்டாயம் சந்தனப்பொட்டு ஒன்று கட்டாயம் இருக்கும்!

உழுத்துப் போன நீத்துப் பூசணிக்காய் ஒன்று கூரையின் மூலையில் தூங்கும்!

குளியல் அறையில் இருக்கும் சட்டி,கை கழுவுவதற்கு அல்ல!

தண்ணீர் குடிக்கும் போது வாய்க்கும் போத்திலுக்கும் அரைக் கிலோமீட்டர் தூரம் இருக்கும்!

இவர்கள் அநேகமாகப் 'பாட்டா' செருப்புடன் திரிவார்கள்!

ஒரு முக்காலுக்கும், அரைக்கும் இடைப் பட்ட அளவில் ஒரு 'கவுன்' போடுவார்கள்!

நடுத்தர வயது தாண்டிய சைவர்கள் வாழும் வீட்டை நினைச்சு எழுதியிருக்கிறியள்!

தமிழன் என்றொரு இனம் உண்டு தமிழன் என்றொரு இனம் உண்டு

தனியே அவர்க்கொரு குணம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு

அமிழதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்

அன்பே அவனது வழியாகும்

கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்

நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம்

தமிழன் என்றொரு இனம் உண்டு

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்

மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவர்க்காக துயர்ப் படுவான்

தானம் வாங்கிடக் கூசிடுவான் தானம் வாங்கிடக் கூசிடுவான்

தருவது மேலெனப் பேசிடுவான் தருவது மேலெனப் பேசிடுவான்

தமிழன் என்றொரு இனம் உண்டு

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம்

சமரசம் நாட்டினில் கண்டவனாம்

நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன்

தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு

குணம் உண்டு

:lol::lol::lol:

நக்கலு.

இதில் எதுவும் எனக்கு பொருந்தவில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு பால் கொடுத்தாலும் ஒருக்கா எட்டிப் பார்த்துக் கொண்ட போவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பேசும் போதே நான் கண்டுபிடித்து விடுவேன் .. கடையர்.. கோதவரி.. இதற்கு போய் இவ்வளவு பில்டப்பா? :)

டிஸ்கி:

என்ன கதைக்குறீர்கள்.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவும் எனக்கு பொருந்தவில்லையே.

அப்ப, நீங்கள் திருந்திய தமிழராக இருக்க வேண்டும். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

கோட்டு சூட்டு போட்டு ரைகட்டி அதுக்கு மேலை வெளியிலை தெரியிறமாதிரி அஞ்சுபவுண் சங்கிலியை இழுத்து விட்டு சேக்கஸ்காட்டி....... ^_^
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக சந்திப்பவரிடம் வேலை செய்கிறீர்களா எவளவு சம்பளம் என்று கேட்ப்பார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர் ஒருவரை இனங்காண இத்தனை முறைகள் இருக்கின்றனவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.