Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள்

Featured Replies

அலைவரும்போதே தலைமுழுகு என்று கூறுவார்கள். அருமையான ஓர் வாய்ப்பை காழ்ப்புணர்வுகளின் நிமித்தம் தவறவிட்டுள்ளார்கள். இவ்வருடம் ஒன்ராரியோ மாகாண தேர்தலும் வருகின்றது. அதிலும் யாராவது கனேடிய தமிழர் வேட்பாளராக நின்றால் துரோகி, சுயநலவாதி பட்டங்கள் கொடுத்து நம்மவர்களே உதைத்து தள்ளுவார்களா அல்லது இல்லையா என்று பார்ப்போம்.

நான் கனடா நாட்டு காரன் இல்லை.இருந்தாலும் விசயங்களை பார்த்தபோது ராகவன் தன் தலையில் மண் அள்ளி போட்டார்.

அவர் தேர்தலில் நிற்க போனது தமிழரின் பெரும் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை. அவரே அதை இல்லாமல் செய்து விட்டார்.

கேட்கப்பட்ட கேள்விக்கு புலிகளை தடை செய்தது சரியா என்ற போது தந்திரமாக பதில் அளித்திருக்க வேண்டும். ஊடகங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால்; தமிழர் ஒரு கேணைகள் எல்லாம் கேட்குங்கள் என்ற மமதையில் சொன்ன பதில் உணர்வு ரீதியாக அந்த மக்களை பாதித்து விட்டது. புலி கூடாதோ நல்லதோ அது தமிழர் உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயம். பெரும்பான்மை தமிழர் அதற்கு மதிப்பு கொடுக்கிறார்கள், அவர் அந்த அனுகு முறையை கடைப்பிடித்திருக்க வேண்டும்.

ஆகவே தோற்றது அவரது தவறு..

1500 வோட்டு நிச்சயம் சாமர்த்தியமான பதிலில் கிடைத்திருக்கும்.

இப்பவே எங்கள் உணர்வை மதிக்காமல் எங்களை குறைவாக மதிக்க விரும்புவர் பிற்கு அங்க போய் என்ன செய்வார் என்ற அவநம்பிக்கை மக்களுக்கு வந்திருக்காலம்.

எல்லாவற்றையும் மக்கள் குறை சொல்லாதீர்கள். அவர்கள் நினைத்தது சரி.

நானாக இருந்தாலும் நிச்சயம் வோட்டு போட மாட்டேன்.

ராதிகா கூடவும் சொல்லவில்லை ,குறையும் சொல்லவில்லை தன்து நிலைப்பாடை தெளிவாக்கிய படியால் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

இதில் ராதிகா நல்லவா, கூடாதவா பற்றி இல்லை... மக்களது உணர்வை மதிப்பது முக்கியமானது.

  • Replies 120
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கப்பட்ட கேள்விக்கு புலிகளை தடை செய்தது சரியா என்ற போது தந்திரமாக பதில் அளித்திருக்க வேண்டும். ஊடகங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

நானாக இருந்தால் எனது செயலாளரிடம் கேட்டு இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்கச் சொல்கிறேன் என்று கூறி எஸ்கேப் ஆகியிருப்பேன் (பான் கி மூன் போல) :lol:

எலும்புத் துண்டுக்காய் எம்மைத் தடைசெய்தது சரியெனக்கூறிய துரோகி என்றால் புலம்பெயர் தேசங்களில் முன்வைக்கப்பட்ட முக்கால் பங்கு புகலிடக்கோரிக்கைகளில் அரசாங்கத்தாலும் எமக்குப் பிரச்சனை புலிகளாலும் பிரச்சனை எம்மால் எமது தேசத்தில் வாழமுடியாது என பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் என்னவாச்சு? தடைக்கான அத்திவாரத்தை போட்டவர்கள் யார்? இன்று என்னுமொருவனை துரோகி என்று சுட்டிக்காட்டும் யோக்கியதை எங்கிருந்து வந்தது?

தடைசெய்ததை பிழை என்று வாதாடியவர்கள் யார்? பிழை என்று விமர்சனம் வைத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தடைசெய்ததற்கு பல நூறு காரணங்கள் இருக்கின்றது. அந்தக் காரணங்களுக்கு இணையாக எம்மால் கருத்தாட முடிந்ததில்லை. எமது தேசியவாத உணர்ச்சி எமக்குள்காகவே சுழன்றுகொண்டிருந்தது. இன்றும் அப்படியே. அது ஒரு வட்டத்தை தாண்டி சென்றதில்லை. தேசியவாதத்தை எப்போதும் நாம் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே கையாள்கின்றோம் அறிவுபூர்வமாக இல்லை.

தடைக்குப் பின்னரான செயற்பாடுகளில் படுகொலைகளை நிறுத்து என்ற கோரிக்கைகளின் பின்புலத்தில் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்ற முற்பட்டார்கள். கொடிபிடித்தல் தலைவரின் படம் தாங்கிய பதாகைகளை தூக்குதல் நெளிவு சுளிவுகள் ஊடாக நினைவுதினங்களை கொண்டா முற்படுதல் போன்றன. தடைக்கெதிரான நேரடியான செயற்பாட்டையே நியாயம் கேட்கும் தகுதியையோ இழந்துவிட்டது மறுக்கமுடியாத உண்மை. இந்நிலையில் ராகவன் போன்ற தனிநபர்கள் தடைசெய்தது பிழை என்று பதில் அளிக்கவேண்டும் என்று கருதுவது கோமாளித்தனமானது தவிர தேசியவாதமாகாது.

தடைசெய்ததை பிழை என்று வாதிடும் பொறுப்பை இழந்த நாம் எமக்குள்ளாக வெந்துகொண்டிருக்கின்றோம். உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இன்று சுலபமாக என்னுமொருவனை சுட்டிக்காட்டிவிட்டு நாம் நியயஸ்தர்களாகிவிடுகின்றோம். இது தவறு. ராகவன் தடைசெய்தது சரி என்று கூறுவதையிட்டு நாம் வெட்கப்படவேண்டுமே தவிர ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குள் நாம் ஒருவனை தள்ளிவிட்டிருக்கின்றோம். எமது அறிவற்ற செயற்பாடு தள்ளிவிட்டிருக்கின்றது. எம்மில் எத்தனையோ பேரிடம் இந்தக் கேள்வியை தனித்தனியாக விசாரணை தொனியில் கேட்டால் இதே பதிலைத்தான் சொல்லப்போகின்றோம். இது குறித்து சிந்திக்கவேண்டும். என்னுமொருவனை துரோகி ஒரு விரல் சுட்டிக்காட்டுகின்றது மூன்று விரல் எம்நெஞ்சை சுட்டிக்காட்டுகின்றது. துரோகி என்று சொல்வது மிகச் சுலபம்.

ஒன்று புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்றும் பணியை அறிவுபூர்வமாகத் தொடரவேண்டும் அதில் வெல்ல வேண்டும். இல்லையேல் புலி நாமத்தில் இருந்தும் கொடி பிடிப்பதில் இருந்தும் உணர்ச்சிவசப்படுவதில் இருந்தம் விலத்தி புதிய மார்க்கத்தில் தொடரவேண்டும். இரண்டு தோணியில் கால்லைத்துக்கொண்டிருந்தால் கவடு கிழிவது நிச்சயம்.

பயங்கரவாதம் என்ற முத்திரையை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. தற்கொலைத் தாக்குதல்களின் முன்னோடிகளாக அரசியல் படுகொலைகளை செய்தவர்காளக சிறுவர்களை ராணுவத்தில் சேர்த்தவர்களாக என்னும் பலநூறு காரணங்கள் அடிப்படையாக உள்ளது. மேற்குலகின் பொருளாதரச் சுரண்டல் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முகமூடியுடனே தற்காலத்தில் நடக்கின்றது. இதில் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை விடுதலைப்போராளிகள் என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அதே நேரம் விடுதலைக்காய் வீழ்ந்த 40 ஆயிரம் வரையிலான மாவீரர்களின் தியாகங்கள் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்ப்பலி எண்ணிலடங்க வலிகள் இவைகளில் இருந்து விலத்தி ஒரு புதியமார்க்கத்தை தேர்வு செய்யவும் முடியாது. விடுதலைக்காக செய்யப்பட்ட தியாகங்கள் அர்பணிப்புகளை அடிப்படையாக வைத்து புதிய அமைப்புகளை நிறுவி எமது செயற்பாடுகள் தொடரவேண்டும் ஆனால் இங்கு நடப்பது எதை அடிப்படையாக வைக்கவேண்டுமோ அவற்றை புறந்தள்ளி புலிகளின் தலமைத்துவத்தின் தொடர்ச்சியாக நடந்துகொள்ள முற்படுவதாகும். இது எமது முயற்ச்சிகளை எல்லாம் முட்டுசந்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

இப்போ புலிகள் என்ற தோற்றம் இல்லை எல்லாரும் ஒரு தீர்வு வேண்டும் என்றுதான் நிற்கிறார்கள்.. மக்கள் சரியாக தான் செல்கிறார்கள்.

பதவிக்கும், அரசியல் செய்ய சந்தர்ப்பம் கிடைக்காதவர்களும் ,கிடைத்தவர்களும் தான் புலி என்று படம் காட்டுகிறார்கள்.

புலி வேனாம் ,வேனும் என்ற வாதம் இனி எடுபடமாட்டாது.

அவர்கள் எங்களின் உணர்வோடு ஒன்றி விட்டவர்கள். இறுதியாக சமர்க்களம் ஆடிய வீரர்கள் வீரர்கள் தான்.

இரண்டையும் இனைத்து ஒரு பாதையில் ஓடக்கூடியவர்கள் தான் வரும் கால அரசியலுக்கு லாய்க்கானவர்கள்.

இனி மேல் மக்களிடம் புலிக்கு வேலை செய்தவனும் படம் காட்ட முடியாது.வேலை செய்யாதவனும் படம் காட்ட முடியாது.

எங்களின் இலக்கை அறிந்து செயற்படக்கூடியவர்களே தேவை.

எலும்புத் துண்டுக்காய் எம்மைத் தடைசெய்தது சரியெனக்கூறிய துரோகி என்றால் புலம்பெயர் தேசங்களில் முன்வைக்கப்பட்ட முக்கால் பங்கு புகலிடக்கோரிக்கைகளில் அரசாங்கத்தாலும் எமக்குப் பிரச்சனை புலிகளாலும் பிரச்சனை எம்மால் எமது தேசத்தில் வாழமுடியாது என பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் என்னவாச்சு? தடைக்கான அத்திவாரத்தை போட்டவர்கள் யார்? இன்று என்னுமொருவனை துரோகி என்று சுட்டிக்காட்டும் யோக்கியதை எங்கிருந்து வந்தது?

தடைசெய்ததை பிழை என்று வாதாடியவர்கள் யார்? பிழை என்று விமர்சனம் வைத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தடைசெய்ததற்கு பல நூறு காரணங்கள் இருக்கின்றது. அந்தக் காரணங்களுக்கு இணையாக எம்மால் கருத்தாட முடிந்ததில்லை. எமது தேசியவாத உணர்ச்சி எமக்குள்காகவே சுழன்றுகொண்டிருந்தது. இன்றும் அப்படியே. அது ஒரு வட்டத்தை தாண்டி சென்றதில்லை. தேசியவாதத்தை எப்போதும் நாம் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே கையாள்கின்றோம் அறிவுபூர்வமாக இல்லை.

தடைக்குப் பின்னரான செயற்பாடுகளில் படுகொலைகளை நிறுத்து என்ற கோரிக்கைகளின் பின்புலத்தில் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்ற முற்பட்டார்கள். கொடிபிடித்தல் தலைவரின் படம் தாங்கிய பதாகைகளை தூக்குதல் நெளிவு சுளிவுகள் ஊடாக நினைவுதினங்களை கொண்டா முற்படுதல் போன்றன. தடைக்கெதிரான நேரடியான செயற்பாட்டையே நியாயம் கேட்கும் தகுதியையோ இழந்துவிட்டது மறுக்கமுடியாத உண்மை. இந்நிலையில் ராகவன் போன்ற தனிநபர்கள் தடைசெய்தது பிழை என்று பதில் அளிக்கவேண்டும் என்று கருதுவது கோமாளித்தனமானது தவிர தேசியவாதமாகாது.

தடைசெய்ததை பிழை என்று வாதிடும் பொறுப்பை இழந்த நாம் எமக்குள்ளாக வெந்துகொண்டிருக்கின்றோம். உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இன்று சுலபமாக என்னுமொருவனை சுட்டிக்காட்டிவிட்டு நாம் நியயஸ்தர்களாகிவிடுகின்றோம். இது தவறு. ராகவன் தடைசெய்தது சரி என்று கூறுவதையிட்டு நாம் வெட்கப்படவேண்டுமே தவிர ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை. அவ்வாறான ஒரு நிலைக்குள் நாம் ஒருவனை தள்ளிவிட்டிருக்கின்றோம். எமது அறிவற்ற செயற்பாடு தள்ளிவிட்டிருக்கின்றது. எம்மில் எத்தனையோ பேரிடம் இந்தக் கேள்வியை தனித்தனியாக விசாரணை தொனியில் கேட்டால் இதே பதிலைத்தான் சொல்லப்போகின்றோம். இது குறித்து சிந்திக்கவேண்டும். என்னுமொருவனை துரோகி ஒரு விரல் சுட்டிக்காட்டுகின்றது மூன்று விரல் எம்நெஞ்சை சுட்டிக்காட்டுகின்றது. துரோகி என்று சொல்வது மிகச் சுலபம்.

ஒன்று புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்றும் பணியை அறிவுபூர்வமாகத் தொடரவேண்டும் அதில் வெல்ல வேண்டும். இல்லையேல் புலி நாமத்தில் இருந்தும் கொடி பிடிப்பதில் இருந்தும் உணர்ச்சிவசப்படுவதில் இருந்தம் விலத்தி புதிய மார்க்கத்தில் தொடரவேண்டும். இரண்டு தோணியில் கால்லைத்துக்கொண்டிருந்தால் கவடு கிழிவது நிச்சயம்.

பயங்கரவாதம் என்ற முத்திரையை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. தற்கொலைத் தாக்குதல்களின் முன்னோடிகளாக அரசியல் படுகொலைகளை செய்தவர்காளக சிறுவர்களை ராணுவத்தில் சேர்த்தவர்களாக என்னும் பலநூறு காரணங்கள் அடிப்படையாக உள்ளது. மேற்குலகின் பொருளாதரச் சுரண்டல் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முகமூடியுடனே தற்காலத்தில் நடக்கின்றது. இதில் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை விடுதலைப்போராளிகள் என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அதே நேரம் விடுதலைக்காய் வீழ்ந்த 40 ஆயிரம் வரையிலான மாவீரர்களின் தியாகங்கள் நூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்ப்பலி எண்ணிலடங்க வலிகள் இவைகளில் இருந்து விலத்தி ஒரு புதியமார்க்கத்தை தேர்வு செய்யவும் முடியாது. விடுதலைக்காக செய்யப்பட்ட தியாகங்கள் அர்பணிப்புகளை அடிப்படையாக வைத்து புதிய அமைப்புகளை நிறுவி எமது செயற்பாடுகள் தொடரவேண்டும் ஆனால் இங்கு நடப்பது எதை அடிப்படையாக வைக்கவேண்டுமோ அவற்றை புறந்தள்ளி புலிகளின் தலமைத்துவத்தின் தொடர்ச்சியாக நடந்துகொள்ள முற்படுவதாகும். இது எமது முயற்ச்சிகளை எல்லாம் முட்டுசந்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

நீங்கள் தான் இலகுவாக துரோகி என்கிறார்கள் என்று அனுதாபம் தேட முற்படுகிறீர்கள். அவரை ஒருவரும் துரோகி என்று சொல்லவில்லை லாய்க்கற்றவர் அவ்வளவு தான். தனது மக்கள் சார்பாக கேட்ட கேள்விக்கு தந்திரமாக பதில் சொல்லி இருபக்கமும் சமாளிக்க தெரியாதவர் எவ்வாறு அரசியல் முகம் கொடுப்பார். அவர் ஓர் ஊடகவியலாளன், ஒலிபரப்பாளர் , ஆங்கில அறிவாளர் என்றெல்லாம் சொல்கிறம். ஒரு சிம்பிளான வோட்டை இல்லாமல் செய்யும் கேள்விக்கே சூசகமான பதில் அளிக்க தெரியாதவர் அரசியல் செய்ய முடியாது. அறிவிப்பாலனாக இருக்கலாம்.

அவ்வளவு தான் தோற்றார்.

தொடந்தும் தவறை விட்டு கொண்டு மக்கள் மாடுகள் என்று தமிழக அரசியல் செய்வது புலம் பெயர் நாட்டில் சரிப்பட்டு வராது.

சரி அடுத்த தேர்தலில் அடுத்த வரை பார்ப்போம். இப்ப என்ன அரசியல் போராட்டம் தானே ,பல வருடம் எடுக்கும்

இராகவன் விடயத்தில் ஒரு கனேடிய ஊடகம் திட்டமிட்ட முறையில் பலவேறு சேறுகளை பூசியது, இதில் எம்மவர் பங்கும் உண்டு. இறுதியாக கே.பி. அவர்களுடன் கூட கதைத்து உள்ளது என்பது சிங்கள நாடு புலம்பெயர் தேசங்களிலும் எமது அரசியல் சூனியத்தை விரும்புகிறது, அதற்கு பணம் செலவிடுகின்றது. இந்த விடயத்தில் இந்த ஊடகத்தின் மீது இராகவன் ஒரு வழக்கு போட்டால் இது போன்ற நிகழ்வுகளை குறைக்கலாம். அடுத்த எமது வேட்பாளர் உறவுகளுக்கும் இது உதவும்.

அரசியலை பொறுத்தவரை அது ஒரு குப்பை ஆனால் அதுக்குள் தான் குண்டுமணியும் உள்ளது :D

நீங்கள் தான் இலகுவாக துரோகி என்கிறார்கள் என்று அனுதாபம் தேட முற்படுகிறீர்கள். அவரை ஒருவரும் துரோகி என்று சொல்லவில்லை லாய்க்கற்றவர் அவ்வளவு தான். தனது மக்கள் சார்பாக கேட்ட கேள்விக்கு தந்திரமாக பதில் சொல்லி இருபக்கமும் சமாளிக்க தெரியாதவர் எவ்வாறு அரசியல் முகம் கொடுப்பார். அவர் ஓர் ஊடகவியலாளன், ஒலிபரப்பாளர் , ஆங்கில அறிவாளர் என்றெல்லாம் சொல்கிறம். ஒரு சிம்பிளான வோட்டை இல்லாமல் செய்யும் கேள்விக்கே சூசகமான பதில் அளிக்க தெரியாதவர் அரசியல் செய்ய முடியாது. அறிவிப்பாலனாக இருக்கலாம்.

அவ்வளவு தான் தோற்றார்.

தொடந்தும் தவறை விட்டு கொண்டு மக்கள் மாடுகள் என்று தமிழக அரசியல் செய்வது புலம் பெயர் நாட்டில் சரிப்பட்டு வராது.

சரி அடுத்த தேர்தலில் அடுத்த வரை பார்ப்போம். இப்ப என்ன அரசியல் போராட்டம் தானே ,பல வருடம் எடுக்கும்

ராகவனுக்கு அனுதாபம் தேடவேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை. லயக்கற்றவர் ராகவன் இல்லை மாறாக தமிழர்கள் போராட்டத்தின் சிந்தனை முறையும் செயற்பாடும். இதை புரிந்துகொள்ளாதவரை என்றைக்கும் எதுவும் சாத்தியம் இல்லை. தடைகளுக்குப் பின்னால் நியாயப்படுத்த முடியாத தவறுகள் நிறைய இருக்கின்றது அதே நேரம் தவறுதலான புரிதல்கள் குறித்து நியயங்கள் பேசத்தவறியதும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் தான் வன்னி மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். புலிகளின் பயங்கரவாதம் என்ற கோட்டுக்குப் பக்கத்தில் மகிந்தனின் அரச பயங்கரவாதம் என்ற பெரிய கோட்டை கீற முற்பட்டதும் படுகொலைகளை நிறுத்து என்ற கவனயீர்ப்பினூடாக அதை புலம்பெயர்ந்தவர்கள் செய்ய முற்பட்டதும் வரலாறு. இவற்றை எல்லாம் ஒரு தனிமனிதனது குற்றமாகவோ குறிப்பிட்ட சிலரது குற்றமாகவோ தவறாகவோ நான் குறிப்பிட்டதும் இல்லை குறிப்பிடவும் இல்லை. இது இனத்தின் சமூக முரண்பாடுகளாலும் அதற்குள்ளாகவே இயங்கும் தேசியவாத சிந்தனை முறையாலும் விழைபவை. இந்த சமூக வார்ப்பில் தியாகத்தால் துரோகத்தையும் துரோகத்தால் தியகத்தையும் சுட்டிக்காட்ட முனைவது அறிவு சார்ந்ததாக அமையாது.

1. "That community turned against us completely and some of us paid the price," said Cannis, insisting that after the surprise resignation of Scarborough-Rouge River MP Derek Lee on the eve of the election, Tamils were looking to have a candidate carry the Liberal colours there.

That opportunity was missed, said Cannis, arguing if a Tamil-Canadian candidate had run for the party Liberals would have won Lee's riding and the "signals" it sent may have given him enough votes to win his own three-way race in Scarborough Centre.

2.She didn't deny many voters from the Tamil community had swung behind her but said that in the last days of Sri Lanka's civil war in May 2009, Liberal politicians had not appeared to support protestors on Toronto's University Avenue or on Parliament Hill in Ottawa where, she said, only Layton came to address the crowd. (Liberal MPs at the time said they didn't want to appear because protestors were displaying flags of the banned Liberation Tigers of Tamil Eelam.)

The NDP is there to "give that voice for struggling people throughout the world," Sitsabaiesan, appointed in January as an advisor to Layton on Tamil issues, said she concluded.

3. The Conservatives nominated popular Tamil-Canadian broadcaster Gavan Paranchothy in Scarborough Southwest but he couldn't carry the riding against New Democrat Dan Harris.

A factor may have been a widely-shown Conservative ad, which showed footage of the MV Sun Sea landing last August with 491 Tamil asylum-seekers on board and said the re-elected Tories would crack down on people smugglers who "take advantage of our generosity." The Scarborough-based National Council of Canadian Tamils called on the Conservatives to apologize to the community and remove the ad, which the group said "insinuates that Tamil refugees who are forced to arrive (in Canada) through unconventional means are 'criminals.'"

http://www.insidetoronto.com/news/elections/article/1003219--scarborough-liberals-struggle-to-make-sense-of-losses-in-safe-ridings

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரி நீண்டு செல்லுவதால் எனது கருத்தையும் பதிந்து விடுகிறேன்.

முதலில் ரதிகாவிர்ற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ராகவனுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கரும்புவிர்ற்கு..நன்றி உங்கள் கருத்து பகிர்வுகள்- கருத்து நீக்கப்பட முன்பே வாசித்திருந்ததர்ற்கு.

பொதுவாக, ஏன் பழமைவாத கட்சி பற்றி... அவர்கள் மீண்டும் ஆட்சி பிடித்திருப்பதால் அவர்கள் செய்வது சரியென்றோ அல்லது அவர்களை தெரிவு செய்தவர்கள் தான் கனடாவில் வாழவேண்டும் என்று ஒரு கருத்தும்- கடப்பாடும் இல்லை என்று நான் கருதுகிறேன். எங்கே இருந்து இந்த கருத்தை எடுத்தீர்களோ தெரியவில்லை, நான் கனடியார்களை முட்டாள்கள் -அதுவும் பழமைவாத கட்சிக்கு வாக்களித்தவர்களை முட்டாள்கள் என்பதர்ர்காக கனடாவை விட்டு வெளியேறவேண்டும் என்றால் . - வாக்களித்ததில் மட்டும் 60 வீதம் பேர் கனடாவை விட்டு வெளியே போகவேண்டும்.

எனக்கு தெரிய என்னளவில் பொருளியல் தெரிந்தவர்கள்--- அடிப்படையில் பட்டமில்லாத ஆய்வாளர்கள்- கருதுவது கனடா இந்த பொருளாதார நெருக்கடியிலும் நன்றாக செய்வதாக- இலங்கையை சேர்ந்தவர்களும் அப்படித்தான் கூறுவது அது வேறுகதை- அவர்கள் அன்னக்காவடிகளுள் நல்ல காவடி.--- ஒரு மாயை என.

கனடாவின் பொருளாதரத்தை.அமெரிக்காவுடன் ஒப்பிட்டு...அதுவும் எங்களுக்கு தெரிந்த 2 அல்லது 3 விடையங்களை வைத்து அல்லது வேறு ஒரு நாட்டுடன் வைத்து கொண்டு ஒ கனடா ..நீ நன்றாயிருக்கிறாய் என்பது சரியாக என தெரியவில்லை. எனக்கு தெரிந்த சிறிய வட்டத்திலேயே பலர் இலங்கையில் இருந்து வந்து- தொழில் சார் தகமையில் வந்து, திரும்பி போய் உள்ளார்கள். பலர் வரகூடிய தகுதி இருந்து வராமல் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த - பட்டமில்லாத பொருளியல் ஆய்வாளருடன் கதைத்தபோது சொன்ன விடயம். buying power வாக்குகிற திறன் ..இப்பவும் USA டொலருக்கு கூட. ஒரு கனடியன் டொலருக்கு கனடாவில் என்ன வாங்கலாமோ , அதை விட ஒரு US டொலருக்கு USA அதிகம் வாங்கலாம்-

இந்த நிலையில் கனடா நன்றாக செய்கிறது என்று சொல்லுவது, பிரதானமாக ஒரு நாடு குறைந்த மக்கள் தொகையையும் கூடிய வளங்களையும் கொண்ட நாடு நன்றாக செய்கிறது என்பது எம்மையே நாம் ஏமாற்றுவது ஆகும். கனடாவின் இன்றைய பொருளாதாரம் வித்து தின்பதே ஆகும். இது இலகுவில் பெரியளவில் மாறது.

மற்றது தொழில் வாய்ப்புகள், கனடா உயர் பதவி தொழில்களுக்கு கதைவை முடின நாடு..ஒரு விதமான முயற்சியும் மாற்றமும் வரவில்லை. நான் செய்கிற தொழிலுக்கு கனடாவில் மிகக் கூடிய தேவை இருக்கு ஆனால் அவர்கள் வேறுனாடுகள் இருந்து வந்தவர்களுக்கு எந்த வித உதவியும் செய்வதில்லை. உதவி செய்வதரற்கு என்று 1000 குழு இருக்கு, அவர்களுக்கே தெரியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று. இது பற்றின விததத்தில், போன முறை காப்பர் ஒரு பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னவர். ஜாக் லேடன் திருப்ப திரும்ப கேட்டும், இலங்கையில் சொல்லுவது போல- நல்லிணக்க குழு அமைத்துள்ளோம் தீர்வு வரும் என்கிற பாணியில் பதில் சொன்னவர்.

காப்பருக்கு வோட்டு போட்டவர்கள் நினைகிறார்கள்..கனடா நல்ல இருக்குது என்ன குறை என்ற மாதிரி..அப்படித்தான் காப்பர் ஆட்களை வைத்துள்ளார். பலரும் மறக்கிற விடயம், நாங்கள் ஏன் ஒரு குடிவரவாளர்களுக்கு ஒரு நட்பான நாடாக, கல்வி தொழில் வாய்ப்புகளில் இன்னும் முன்னேறிய நாடக இருக்க வேண்டும் அல்லது மாறவேண்டும் என்று. இதுவே திரவியம் என்று சொன்னால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

மற்றது ராகவன்..

எனக்கு ஒரு விதத்திலும் தனிப்பட்ட வகையில் உறவும் இல்லை, பழக்கமும் இல்லை. மற்றும்படி நானும் அடிப்படையில் மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்று நினைப்பவன்- ஆனால் எந்தளவு என்பது தெரியவில்லை. ராகவன் தனியே தமிழன் என்றால் ஆம் வாக்கு போடுங்கள். ஆனால் தனது நிலையில் இருந்து மாறும் போது அதற்குரிய வகையில் தனது நிலைபாடுகளை சொல்ல வேண்டும். மாறன் கொல்லைக்குள் இருந்து கொண்டு கருத்துக்களை கேட்டும் போதும் தோற்றுப்போன , தோற்றுக்கொண்டிருக்கிற ஒரு இனத்தின் பிரதி நிதி என்கிற வகையில் வருகிற அவருவருப்பும், கால்புனர்வுமே எனது முந்தய பதிவு.

புலி அதரவு எதிர்ப்பு என்கிற வகைக்குள் சிக்காமல் இருக்க வேண்டும், ஆனால் எங்களை அதற்குள் இழுத்து வீழ்த்தவென பெரும் கூட்டம் எம்மை சுத்தி உள்ளபோது- மிகக் கடினமான செயலாக இருந்தாலும், ஒருவர் அதை தொழிலாக செய்ய வரும் போது அந்த பக்கங்களை கவனமாக கையாள வேண்டும். அதைவிடுத்து, TVI போன்ற உடகங்களில் பணியாற்றி விட்டு, அங்கு தொழில் ரீதியாகத்தான் இணைந்திருந்தேன் என்பது எனக்கு சரியாக படவில்லை.

ராகவன் எந்தளவு தூரம் அந்த தொகுதியில் வென்றார் என்று பார்த்தால், என்னைபொருத்தவையில் பூச்சியம் என்றுதான் சொல்லுவேன். அதே தொகுதியில் முந்திய தேர்தல் ஒன்றில் போட்டியிட்ட ஒரு தமிழரும் கிட்டத்தட்ட அதே அளவு வாக்குகள் எடுத்துள்ளார். அந்தவைகையில் நாடுரீதியாக பழமைவாத கட்சிக்கு கிடைத்த "அலைகூட" ராகவனால் அந்த இடத்தில் ? குறைந்துள்ளதே என்று தான் நான் நினைக்கிறேன்.

இந்த இடத்தில் நாடு கடந்த அரசு, மக்கள் குழு, வட்டுக்கோட்டைக்குழு அனைவருக்கும் இனம் சார்ந்த்த நன்றிகள்..உங்கள் முயற்சிகளில் வென்றிர்களோ தெரியவில்லை, இந்த மக்களை ஒரு அரசியல் விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வந்ததில் உங்கள் "தேர்தல்கள்" கணிசமான பங்கு வகித்துள்ளன. இனம் சார்ந்து நாங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு கடமைப்படிருக்கிறோம்.

சாத்திரியின் கதை வாசித்த இடந்தில், மனத்தை நெருடிய இடம் ஒன்று, விடுதலைப்புலிகள் பெரியளவில் நிறுவனமான போது ஏற்பட்ட நன்மை தீமைகளில் ஒன்று, - அவர் சொல்லியிருந்தது ஆயுத வினயோம், கடல் சார்ந்த, வெளிநாட்டு வாணிபம் தொடர்பானவை- எல்லாம் எதுவும் நிறுவனமயகாப்பட்டு / புலி அடையாளத்தோடு செய்ய வேண்டும். அது இங்கேயும், அரசியலிலும் பலத்த அடியை கொண்டு வந்தது, நாலு பேர் இனம் சார்ந்து ஏதேனும் செய்ய வெளிகிட்டா முதல் வேலை கொடி கோவணமும் பிடிக்க வேண்டும் இல்லாவிடில் நீங்கள் எதிரானவர்கள். இங்கே ராதிகா வென்றதுக்கு பல கரணம் சொல்லப்படாது, அவற்றில் ஒன்று சிதைந்து போன "தேசிய வீரகளில் " கட்டமைப்புகளும் ஆகும்.

எனக்கு தெரிய 90 பிற்பகுதிகளில் செயற்பட்ட பலர் "ஒதுங்கி" நின்றதிர்ற்கு காரணம் தனியே புலிகளின் மீதானா தடை மாத்திரம் அல்ல, அவர்கள் சுததிரமாக செயற்பட முடியாமையுமே ஆகும். அவர்கள் ஒதுங்க, காசு கொடுத்த அடிப்படையில் தலைவரை சந்தித்தவையும் , அதைவைத்து பொறுப்புகள் எடுத்தவையும், அவர்களில் கற்றுக்குட்டி விளையாட்டுகளுமே எங்களது இந்த நிலைக்கு ஒரு காரணம்.

முடிவாக, சாண் ஏறி முழம் சறுக்குகிரமாதிரி இல்லாமல் அடுத்த முறை மடியில் கனம் இல்லாதவர் போனால் அல்லது மடிப்பரத்தை முறைப்படி இறக்கி வைத்துவிட்டு போனால் இன்னும் ஒன்று இன்ரண்டு சீட் கிடைக்கும்.

மிகவும் நன்றி வொல்கானோ.

ஒரு சமூகத்தைபற்றிய எந்தவித புரிதலும் இல்லாமல் வார்த்தையால் எழுதமுடியாதவர்களெல்லாம் அதை ஒன்றைமாத்திரம் தகுதியாக வைத்து உலகம் முழுக்க பொறுப்புகளில் இருந்து இனத்தையே சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் எம்மினம் இவைகளில் இருந்து மீண்டும் துளிவிட 10,12 வருடங்களுக்கு மேல் எடுக்கும்.கார்ப்பர் அரசு வேறு ஏதும் நன்மைகள் எமக்கு செய்கின்றதோ தெரியாது,இந்த உதவியை நாம் கேட்காமலே அவர்கள் செய்துமுடிப்பார்களென நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்கனோ என்னால் பல விடயங்களைச் சொல்ல முடியவில்லை உங்களால் முடிகிறது. இத்திரியில் நீங்கள் முன்பு பதிந்த பதிவையும் நிர்வாகத்தினர் அகற்றுமுன் வாசித்தேன். அந்தப்பகிர்வில் உங்கள் கருத்து மிகவும் எள்ளலாக வந்திருந்தது. ஆனால் இப்போது தெளிவாக வருகிறது. தொடரட்டும்.

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட தொகுதியில் முன்பு போட்டியிட்ட தமிழருக்கும் ராகவனின் அளவுக்கே ஆதரவு கிடைத்தது என்பது மிகவும் தவறான கருத்து. முன்பு போட்யிட்ட தமிழர் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். அவரை தோற்கடித்து வெற்றி பெற்றவருக்கு சுமார் 48% வாக்குகளும், இரண்டாம் இடம் பெற்ற தமிழருக்கு 24% வாக்குகளும் கிடைத்தன. ஆனால்.. ராகவன் சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அண்மையில் தோல்வி அடைந்தார். அவருக்கும் அவரை தோற்கடித்த டான் ஹரிசிக்கும் இடையில் சுமார் 2% வாக்குகள் வித்தியாசமே உள்ளன. சகாறா அக்கா கூறியதுபோல் உங்களிற்கு ஒருவரை ஏளனம் செய்து மட்டம் தட்டும் ஆர்வம் ஓர் விடயத்தை தெளிவாக அணுகுவதில் இல்லைப்போல் உள்ளது.

68262370.png

அடுத்ததாக, நீங்கள் கூறிய இதரவிடயங்கள் பற்றி விவாதிப்பதற்கு எனக்கு நேரம் தற்போது இல்லை. நேரத்தை இங்கு வீணடித்து ஏதாவது பயன் ஏற்பட்டாலாவது பரவாயில்லை, தொடர்ந்து விவாத்தில் பங்குபற்றலாம். ஆனால்.. *** கூட்டத்தின் மத்தியில் இதற்கு மேலும் நேரத்தை செலவளித்து என்னை நோகடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

கருத்துக்கூறியவர்கள், பார்வையிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் ...ம்ம்ம் என்ன செய்யுறது ,,:)

கணக்கு விடுறதுக்கு முன் கணக்கை நாலுதரம் திருப்பி பார்க்கவேண்டும்

உந்த இடத்தில் எப்பவும் வெல்லுபவர் லிபரல்..கிட்டதட்ட 20000 வாக்குகளில் வெல்லுவார்கள்.. எப்பவும் தோக்கிறது NDP 7 - 9 ஆயிரம் வாக்கில் தோப்பார்கள். கோன்செவடிவே எப்பவும் 2 வது (தோக்கிறதுதான் ஆனால் 2 வது) அவர்களின் வாக்கு வங்கி ~10 ஆயிரம். இப்ப கணக்கு பாருங்கோ..7 இருந்து 14 நல்லதா..10 ஆயிரத்தில் இருந்து 12500 நல்லதா.. அதுவும் நாடுமுழுக்க அறுதிபெரும்பானமாய் உடன் கொன்செவடிவே வெல்லேக்க ...

சின்னக்கணக்க வீதத்திலா சொன்ன

NDP 23 பிறகு 18 இப்ப 35 வீதம்

கோன்செவடிவ் ..24 பிறகு 29 பிறகு 31

இன்னும் கணக்கு வேணுமெண்டால் ஆளை விட்டால் காணும் சாமி .

நான் நினைக்கிறான் அபிஹம்லிங்கன் சொல்லிருக்க வேண்டும்..வெற்றி என்று அடைந்த தூரத்தில் இருந்து கணிக்கப்படுவதில்லை, மாறாக எங்கிருந்து தொடங்கி எங்கே முடிந்ததில் தான் தீர்மானிக்கபடுகிறது.

  • தொடங்கியவர்

உங்கள் ஆரம்பக்கருத்தே தவறானது, தற்போது உங்கள் தவறான கணக்கை சரிசெவதற்கு வேறு ஏதோ கூறுகின்றீர்கள். உங்கள் காழ்ப்புணர்வுகளை தொடர்ந்து கொட்டுங்கள், எனக்கு வேலை வேறு வேலை உள்ளது, நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராகவனில் எனக்கு கோபம் இல்லை. அனுதாபம் தான் இருக்கிறது. பாவம் அரசியல் செய்யத் தெரியாதவர். எப்பிடி மழுப்பல் பதில் சொல்லுறது எண்டதுக்கு அவர் தலைவர் ஸ்டீபன் காப்பரை பார்த்தே தெரிஞ்சு கொண்டிருக்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறான் நம்ம கரிநாய்நிதி ... எத்தினை குண்டக்க மண்டக்க பதில் சொல்லுவான். ஒரு நாள் சொல்லுவான் பிரபாகரன் எனது நண்பர் என்று மறு நாள் சகோதர யுத்தம் ... இந்த கொலைஞன்ர கேள்வி பதில்ல நால படிச்சிட்டுப் போயிருந்தாலே அப்பிடி இப்பிடி பதில் ஒன்றைச் சொல்லியிருக்கலாம்.

அவரிடத்தில் நானாயிருந்தால் சொல்லியிருப்பன் ... நான் என்றும் வன்முறையில் ஈடுபடவில்லை, வன்முறையை ஆதரிக்கவுமில்லை. நான் ஆதரித்ததெல்லாம் தமிழ் மக்களின் தார்மீகக் கோரிக்கைகளையும், நான் மேற்கொண்ட பணிகள் எல்லாம் எம் மக்களின் புனர்வாழ்வுக்காகவும் மட்டுமே.

சரி வேணாம் சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும். நம்மாக்களிடம் தனிப்பட்ட முறையில் சில சூழ்நிலைகளுக்காக அப்படிச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. மற்றும் படி நான் எதையும் மறக்கவில்லை என்று எங்கட ஆக்களை கொஞ்சம் திரட்டியிருந்தால் இன்று அவரும் எம்.பி, எங்களுக்கும் ஆளும் கட்சியில் ஒரு தமிழ் எம்.பி.

இல்லை தேர்தலுக்கு பின் கூட கொடுத்த தமிழ் பேட்டியில் அவரால் எங்கள் மக்களை ,எங்கள் உனர்வுகளை மதிக்க தெரியவில்லை அல்லது அத்தோடு சேர்ந்து போக தெரியவில்லை.

இப்பவும் கூட பயங்கரவாதத்தை எதிர்க்கிறீர்களா என்று கேட்ட போது ஆம் பயங்கரவாதம் கொடியது ,அழிவை தரும் எதிர்க்கிறீன் என்கிறார். கேட்டவரிடம் எதை பயங்கரவாதம் என்கிறீர்கள் என்று இவரால் திரும்ப கேட்டு பதிலை தனக்கு சாதகமாக்க விருப்பமில்லையோ . அல்லது தமிழர் எல்லாம் பயங்கர வாதிகள் அந்த கறையை இல்லாமல் செய்ய முற்படுகிறாரோ தெரியவில்லை. இவரின் பேச்சு முள்ளி வாய்க்காலோடு திசை மாறி அள்ளி கொண்டு போய் இருக்கலாம். அதில் தப்பு ஒன்றும் இல்லை. அடுத்த தேர்தல் வரை கொஞ்சம் நிம்மதி. நாங்கள் இப்ப பயங்கரவாதிகள் இல்லைதானே.

நான் இவரின் பேட்டியைக் காணவில்லை..! மேலே நேசன் எழுதியதுபோல் அவர் பதிலளித்திருந்தாரென்றால் அதிலேதும் தவறு உள்ளதுமாதிரித் தெரியவில்லையே? :unsure:

தமிழ்ப் பயங்கரவாதம் என்று கேட்டிருந்தால் எதிர்த்துக் கேட்டிருக்கலாம். பொதுப்படையாக பயங்கரவாதம் என்று கேட்டிருந்தால் நானும் தான் எதிர்ப்பேன். பின்லேடனை நான் ஆதரிக்கவில்லைதானே..! :unsure:

வெறும் பயங்கரவாதம் என்று சொல்லப்படுபோதெல்லாம் நாம் குற்ற உணர்வு அடைவோமாக இருந்தால் புலிகளை நாமே மனத்தளவில்பயங்கரவாதிகளென நம்புகிறோம் என அர்த்தம். இதுவே சிங்களவனின் வெற்றி. :rolleyes:

Asked if he supports the Harper government’s ban on the Tigers, Mr. Paranchothy answered, “Yes.”

“Prior to becoming a candidate for the Conservative Party of Canada, he had to make it crystal clear – and he did – that he had no support or sympathy for the Tamil Tigers,” Mr. Soudas said.

நான் இன்று இத்தலைப்பை படிக்கும் போதேல்லாம்.. ஒரு நிறம் மாறும் ஊர்வனத்தின் பெயர் தான் மூளையில் உச்சரிக்கப்படுகிறது என்று எழுதியதற்கு அதனை யாரோ தூக்கி விட்டார்கள். எனது மனதில் தோன்றியதை சொல்லக் கூட ஒரு உரிமை கிடையாது.

ஆனால்.. பிபிசி போன்ற ஊடகங்கள் கூட விடுதலைப்புலிகளை பிரிட்டன் தடை செய்த பின் கூட "Tamil Tiger Rebels" என்று தான் உச்சரிக்கின்றன. ஆனால் எம் மத்தியில் 1970களில் ஆயுதப் போராட்டத்தை தூண்டியவர்கள் இன்று நல்ல பிள்ளைகளுக்கு நடித்துக் கொண்டு.. பயங்கரவாதம் என்று உச்சரிக்கின்ற சில சக்திகளுக்கு பதில் சொல்ல வக்கற்று இருக்கும் நிலை மிகவும் கோழைத்தனமான ஒன்று.

இப்படியான கேள்விகள் வரும் போது.. தெளிவாகச் சொல்ல வேண்டியதுதானே.. என்னைப் பொறுத்தவரை.. நான் பயங்கரவாதமாக பார்க்கவில்லை என்று. நாங்கள் எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாகவே பார்க்கிறோம் என்றால் விசயம் முடியுது. அதைச் சொல்ல திராணியற்றவர்கள்.. தமிழர்களின் வேரும் விழுதுகளாமாவதும்.. அவர்கள் யாழில் இடம் பிடிப்பதும் சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது.

விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்கள் எல்லாரும் அல்லது எதிர்ப்பவர்கள் எல்லாரும் இப்போ வேரும் விழுதுகளுமாகி நிற்கின்றனர். ஆனால் இன்று கூகிள் வரைபடத்தில் யாழ் குடா நாட்டை பார்த்த போது.. திலீபன் அண்ணாவின் நினைவிடம் குறிப்பிடப்பட்டிருந்தது.

எம்மவர்களில் கூட திலீபனை பயங்கரவாதி என்று உச்சரிக்கக் கூடியவர்களும்.. திலீபனின் நினைவிடம் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களும் உள்ளனர். ஏன் இன்று.. சர்வதேசத்தின் அநுக்கிரகம் வேண்டி அதைச் சொல்லலாம் என்றும் சாதிக்கக் கூடியவர்கள் வளர்ந்து வருகின்றனர். நெஞ்சில் உறுதியற்ற இந்த மானிட ஜென்மங்களை கண்ணுறுகின்ற போது கூகிளில் பணி புரியும் அந்த பற்றுள்ளவர்களை பாராட்ட வேண்டும்.

இந்தச் செய்தி இங்கு பிரசுரிக்கப்பட்ட பின் அந்த அடையாளத்தைக் கூட கூகிள் வரைபடத்தில் இருந்து அகற்ற எம்மவர்களே எதிரியை தூண்டி விடவும் கூடும். அதனால் அப்படி ஒரு நிலை வந்தாலும் என்பதற்காக அடையாளத்துக்கு அந்தப் படத்தையும் இங்கு இணைக்கிறேன்.

thileepan.jpg

Thank Google map.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பழமைவாதக் கட்சியின் வேட்பாளர் கவன் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார். இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்டவராவார். கனடாவில் உள்ள ஒரு தமிழ்த்தொலைக்காட்சிச் சேவையில் அறிவிப்பாளராகவும் தமிழ்வாணெலி அறிவிப்பாளருமாக கடந்தகாலங்களில் அவர் செயற்பட்டார். இதுவே கனடா பாராளுமன்றத்தேர்தலில் ராகவனைப்பற்றிய அறிமுகம். கனடாவாழ் தமிழர்களைப்பற்றிய அறிமுகத்தில் இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழ்ந்து இனக்கலவரம் காரணமாக இடம்பெயர்ந்துவந்தவர்கள். இதுவே அவர்களைப்பற்றிய அறிமுகம். மாறாக அவர்களில் நூறு வீதத்தினரும் மெத்தப்படித்த அரசியல்ஞானம் அதிகமுள்ள மேதாவிகள் என யாரும் இதுவரைக்கும் கூறவில்லை. அவர்கள் வாழ்ந்த நாட்டின் நிரந்தர விடுதலைக்கு போராடிய ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பென கனடா அரசினால் தடைசெய்யப்பட்டது, இது யதார்த்தம். (இந்த வடையத்தில் தங்களில் யாராவது கனடாத் தெருவில் நடந்துபோகும்போது, யாரோ ஒருவர் இன்னுமொரு யாரோ ஒரவரைப் பார்த்து நிறவெறியை வெளிப்படுத்தும் கருத்துக்களைச் சொன்னால் தாங்கள் எம்மைத்தான் சொல்கிறார்களோ என ஒரு கணம் திரும்பிப்பார்ப்பது இயற்கை. அதேவேளை நாம் கனடா ஒரு குடியேற்ற நாடு இங்கு வாழ்பவர்களில் அனேகர் வந்தேறுகுடிகளே நிறவேற்றுமையுடைய கரத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என நினை;ப்பதில்லை அதுபோல்) தனது சொந்தநாட்டில் பாதிக்கப்பட்ட தமிழன் தனது விடுதலைக்காகப் போராடிய ஒரு அமைப்பை பயங்கரவாதம் எனும் வலைக்குள் இழந்துவிட்டு நிற்கும்போது நாம் பயங்கரவாதிகளாக இல்லாதுவிடினும் அவர்கள் எமைத்தான் கூறுகிறார்கள் என நிபை;பது இயற்கையே. மற்றைய விடையம் நாம் சரியான பாதையை கண்டுபிடித்து அதன்வழியில் போகவேண்டுமென இங்கு கருத்தெழுதியவர்களில் அனேகர் கூறியிருந்தார்கள். சரியான பாதை எது என்பதை சமூகப்பொறுப்பு தனக்கு இருக்கின்றது எனக்கூறிக்கொள்ளும் கவன்தான் எமக்குக் காட்டிநிற்கவேண்டுமேதவிர வேற்றாளாக நின்று காரியம் சாதிக்கமுடியாது. அரசியல் வெற்றிக்காகத் தனது பெயரையே சுருக்கி மாத்திய ஒருவர் தமிழர்களது நலனில் கரிசனை காட்டும் விடையத்தில் தன்னை நத்தையகச் சுருக்கிக்கொள்ளமாட்டாரென்பதற்கு என்ன உத்தரவாதம்? ஓருஇனத்தின் அவலத்தின் குறியீடாக கப்பலில் வந்த ஏதிலிகளை கள்ளத்தோணிகள் என இடித்துரைக்கும் ஒரு கட்சியின் பிரதிநிதியை களத்தில் வெற்றிபெறவைக்க யாருக்கு மனம்வரும்? இங்கு அனைவரும் அவலை நினைத்து உரலை இடிக்கின்றார்கள். ராகவன் தோல்விக்கு வன்னிக்கட்டளை மையம்தான் காரணமென கற்பிதம் கொள்கிறார்கள். (எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)

The Island: There is a simmering controversy over Ragaven Paranchothy contesting May 2 federal polls in Canada on the Conservative ticket. A section of the Canadian media has accused him of being an LTTE agent on the basis of his alleged association with you (last person to call you on Aug 5, 2009 before you were arrested). Ragaven has strongly denied LTTE links, insisting that he was in touch with you only as a journalist. Was he involved with the LTTE? What was he talking with you when foreign agents pounced on you?

Pathmanathan: Paranchothy is an LTTE supporter. He is still working with for an ‘LTTE radio station.’

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=25221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.