Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு சமர்ப்பணம் !!

Featured Replies

இது சிரிப்பு களம்;

இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips)

நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக

ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும்

------------------------------------------

Edited by நிழலி

  • தொடங்கியவர்

1. இனி கவியரசுகள், கவிக்கோக்கள், கவிப்பேரரசுகள், சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், வித்தைக்கார கவிகள் போன்ற முதல் நிலை லேகிய தரகர்களின் பாடும் தமிழச்சிகள், சல்மாக்கள், வெண்ணிலாக்கள் போன்ற Pseudo Poetess களின் பாடும்தான் திண்டாட்டம்... இனி கவிதை எழுதியே தீரணும் வேற வழி இல்ல மக்கா...

(Ilango: Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி....

பனையாலை விழுந்தவனை, மாடு ஏறி... மிதிச்ச மாரி... மிதிப்போம். :D:lol:

  • தொடங்கியவர்

ஐயோ ஐயோ ........என்னது ??????? சின்ன பிள்ளே தனமா இருக்கு ...........ஓய்வு எடுக்குற வயசா உங்களுக்கு .....இப்போ தானே 2G முடிஞ்சு இருக்கு....இன்னும் 3G இருக்கு......4G வர போகுது.......ஐயோ ஐயோ ........என்னது ??????? சின்ன பிள்ளே தனமா இருக்கு ...........ஓய்வு எடுக்குற வயசா உங்களுக்கு .....இப்போ தானே 2G முடிஞ்சு இருக்கு....இன்னும் 3G இருக்கு......4G வர போகுது.......

:நக்கீரனில் ஒரு வாசகர்

  • கருத்துக்கள உறவுகள்
raj71.jpg
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் பிளான் பண்ணிச் செய்யணும்.பிளான் பண்ணாமச் செய்தா இப்பிடித்தான் நடக்கும்!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வயசு வந்தும், அறிவு வளராத சோமாரிப் பயல்.

இதுக்குள்ளை.... செம்மொழி மாநாடு நடத்தி.... வித்தை காட்டுறாராம்.....

- ரோட்டாலை போறாவன் திட்டியது-

  • கருத்துக்கள உறவுகள்

இதோ எனது பங்குக்கு!!!

பொருத்தமான தலைப்பு, உறவுகளின் தெரிவுக்கு!

மூவேந்தர் வளர்த்த

மூன்று தமிழையும்,

பாதியில் அவர்கள் விட்டு விட்டோட,

வாடிக் கிடந்த தமிழைத்

தூக்கி எடுத்து,

மார்போடு அணைத்துக்

கண்களில் இருந்து

கண்ணீர் வடிய,

உடன்பிறவா உறவுகளுக்குக்

கடிதம் வரைந்தேன்!

கவர்ச்சித் தமிழில்

கதை வசனம் எழுதிக்

கறுத்தக் கண்ணாடியுடன்

திரிந்த எனக்கு

அண்ணாதுரையின்

அறிமுகம் கிடைத்தது.

அன்றிலிருந்து அடித்த அதிஸ்டம்

இன்று வரை தொடர்ந்து

வைகாசித் திங்கள்

பதின்மூன்றாம் திகதி

சிலுவையில் ஏற்றி

ஆணியை அறைந்தது!

பெண்களைக் கண்டால்

கண்கள் விரியக்

கறுத்தக் கண்ணாடி

கையைக் கொடுத்தது.

பணம் என்ற சொல்லே,

குணமாகிப் போக,

ஊழல், லஞ்சம் வரிசையில் வந்தது,

வாழ்க்கை மிகவும் வசதியாய்ப் போனது!

அன்னை சோனியாவின்

கண்களின் வண்ணம்

என்னைக் கவர,

அன்னையின் வார்த்தைகள்

வேதங்களாகின!

செய்த களவுகள், கோப்புகளாகி

கையும் களவுமாய்க் காட்டிக் கொடுக்க

முள்ளி வாய்க்கால்

உதவிக்கு வந்தது!

பாயில் படுத்துக் கண்களை மூட

ஆயிரம் நினைவுகள் என்னைத் துரத்தின!

தாய்களின் ஆவிகள் என்னைத் துரத்த

பேய்களின் நினைவும் அடிக்கடி வந்தது.

பச்சைக் குழந்தைகள் கதறிய கதறல்

புத்தம் புதிதாய் எனக்குக் கேட்டது!

உடை களைந்த நிலையில்,

கிடந்த என் தாய்க்குலம்

பாடை வரைக்கும் என்னைத் துரத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு

அது எனக்கும் இல்லை என்னவளுக்குமில்லை

கடிதம்

அதை அனுப்பமட்டுமே தெரியும்

வஞ்சனை

அது தான் மூலதனம்

குழிபறிப்பு

பிறந்ததிலிருந்து

தமிழ் பற்று

அது தமிழனை முட்டாளாக்க

சினிமா

பணம் மற்றும் பறவை சுட

பத்திரிகை

பந்தி பந்தியாக எழுதி உடன்பிறப்பை முடக்க

தொலைக்காட்சி

இனாம் என்று தொடங்கி இருட்டடி அடிக்க

கட்சி

அது குடும்பச்சொத்து

பிள்ளைகள்

உலகவரிசை பணக்காறராக......

உண்ணாவிரதம்

அது உண்மையைப்புதைக்க

  • கருத்துக்கள உறவுகள்

2050 வரை(no need up to 2015) திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது இப்படித்தான்.

தமிழ்

முதலில் “ கடவுள் வாழ்த்து “

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி

திருக்குவளை தீய சக்தியே போற்றி

மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி

காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி

கனிமொழியின் தந்தையே போற்றி

செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி

அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி

தளபதியின் தந்தையே போற்றி

மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி

குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி

வீல் சேரில் வரும் வில்லனே போற்றி

சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி

ஈழத்தை அழித்த இதயமே போற்றி

தமிழின துரோகியே போற்றி போற்றி

அடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம்,உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

http://manikandanvisvanathan.wordpress.com/2010/12/31/293/

  • கருத்துக்கள உறவுகள்
tamilmakkalkural_blogspot_kanimozhi_rajapaksa.jpg
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்டரம் சிபிஐ வழக்கின் போது...

http://www.youtube.com/watch?v=yZC6JpL_rAY

ஆயிரம் என்குயரிஸ்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் மட்டுமே கருணாநிதிக்கு ஓய்வு: கி.வீரமணி

veeramani_040910.jpg

தமிழகத் தேர்தல் முடிவுகளை 'ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் ஒன்று' என வருணித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, திமுகவின் வேறு பல களங்களில் கருணாநிதி இயங்குவார்," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நேற்று வந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை - வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், "ஆம்" என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல

நண்பர்கள்.

பெரியார் 933-லேயே 'குடியரசில்' எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

"நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்"

- இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967-இல் காமராசர்கூட தோற்ற நிலையில், "சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் - மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்" என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு - குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.வுக்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, "ஓய்வு" என்பது சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம் களம் - போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன - வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் - தமிழர் இனமானப் பிரச்னைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு - அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்? அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள்," என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

டிஸ்கி:

தலீவரோட அடுத்த டார்கெட்டு அவரின்ட அல்லகை வாயிலாக .. ஈழ தோழர்களுக்கு விளங்கி இருக்கும் போகட்டும்.. நாம காமெடி தலைவரின் பஞ்ச் டயல்க்ஸுடன் இந்த அறிக்கை முக்கிய விடயங்களை அலசுவோம்..

goun.jpg

இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

அண்ணே இந்த எளநீல தண்ணி வல்லே............ :lol:

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், "ஆம்" என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை

நீ வெட்கப்பட மாட்டே, அக்குள பொஸ்தகத்தை சொருகிகிட்டு ஸ்கூலுக்கு போவ :lol:

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது

இங்கிஸ்தா மங்கிஸ்தா மங்கிஸ்தா பாயாஸா :lol:

கருணாநிதிக்கு, "ஓய்வு" என்பது சட்டசபை - ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல

போன் வயரு அந்து ரெண்டு நாளாச்சு :lol:

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா நாராயணா :lol:

thanthaiperiyar@googlegroups.com

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்.

இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதாள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்.

அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...

திகார் முன்னேற்றக் கழகம்!

21adade.jpg

ஓட்டுப் போட்டவங்களை குத்தம் சொல்லணும்!

23adade.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.