Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி கைது!

Featured Replies

தி.மு.க. அழிந்து / பலவீனம் அடைந்தால் அது அ.தி.மு.க. கட்சிக்கு பலம் அதிகம் கொடுக்கலாம்.

அதேவேளை அ.தி.மு.க ஆட்சி நன்றாக இருக்காவிட்டால், ஒரு மூன்றாம் கட்சியை கூட மக்கள் விரும்பலாம். அது சீமான் அவர்களின் கட்சியாக கூட அமையலாம்.

  • Replies 70
  • Views 8k
  • Created
  • Last Reply

கருங்காலி அம்மையார் கலியாணமே வேண்டாமெண்டிருக்கும் கன்னித்துறவியாமே...

ஜெயிலில் எத்தனை பெண்கள் இவரின் சீடர்களாவர்களோ... :unsure:

கனிமொழியின் கணவர் பெர்யர் அரவிந்தன், இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உண்டு

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்த விமர்சனங்களை வைக்காது விடுதல் நல்லது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. அழிந்து / பலவீனம் அடைந்தால் அது அ.தி.மு.க. கட்சிக்கு பலம் அதிகம் கொடுக்கலாம்.

அதேவேளை அ.தி.மு.க ஆட்சி நன்றாக இருக்காவிட்டால், ஒரு மூன்றாம் கட்சியை கூட மக்கள் விரும்பலாம்.

அது சீமான் அவர்களின் கட்சியாக கூட அமையலாம் .

அதுதான் என்னுடைய விருப்பமும்.

ஆனால் அதற்கு நாளெடுக்கும். அதற்கு முன் தி.மு.க. அழிந்துவிட்டால்............?

ஜெ. க்கு சீமான் பெரும் எதிரியாக தெரிவார். எனவே ஜெ.யின் சீமானுக்கான எதிர்ப்பு பலமாக இருக்கும்.

தி.மு.கவையும் ஜெ யையும் மோதவிட்டுவிட்டு சீமான் தனது கட்சியை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியின் கணவர் பெர்யர் அரவிந்தன், இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உண்டு

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்த விமர்சனங்களை வைக்காது விடுதல் நல்லது

ஆகா......., மற்றவரில் பிழை பிடிக்க கிளம்பீட்டாங்களே.... மட்டூஸ்.

தாங்கள் எழுதின, எழுத்துப் பிழையை நுணாவிலான் தான் கண்டு பிடிக்க வேணும்.

இவரும் இருகல்யாணம் செய்தவர்.முதல் கல்யாணம் சிவகாசி வியாபாரி ஆதிபன்.பின்னர் அரவிந்தன் எனும் சிங்கப்பூர் கவிஞனை மணந்தார்.அரவிந்தன் சுஜாதாவுடன் சேர்ந்து கணனியில் தமிழ் எழுத்துருவாக்கத்தில் பெரிய உதவி செய்தவர்.ஒரு அமைப்பு கூட உருவாகி பெரிதாக மகாநாடுகள் நடந்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இதில் எழுத எதுவுமில்லை

இனி இது அவர்களது அரசியல் விளையாடடுக்கள். எந்தநேரமும் எதுவும் நடக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை தி.மு.க.வை அதிகம் சோர்வடைய வைப்பது சரியல்ல. அது ஜெயலலிதாவிற்கு உற்சாகத்தையும்தட்டிக்கேட்க ஆளி;லாத தைரியத்தையும் கொடுக்கும். இது எமக்கு பாதகமானது. :(:(:(

விசுகு,

இப்படியான கதைகளை நிறுத்திவிட்டு...

வென்ற ஜெயலலிதாவை வாழ்த்துங்கள். ஒரு வருட அவகாசம் கொடுங்கள்.

"சுடுகுது, மடியைப் பிடி என்றால்..... ஒன்றும் சரி வராது."

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இப்படியான கதைகளை நிறுத்திவிட்டு...

வென்ற ஜெயலலிதாவை வாழ்த்துங்கள். ஒரு வருட அவகாசம் கொடுங்கள்.

"சுடுகுது, மடியைப் பிடி என்றால்..... ஒன்றும் சரி வராது."

எனக்கும் இதற்கு ஆமாம் போடத்தான் ஆசை

ஆனால் ஜெயலலிதாவால் நாம் பட்டவைகளை நான்மறக்கவில்லை :(

சிறி அண்ணா, ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாட்டு இடம் பெற்ற படம் என்ன?

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாய்... தெரியவில்லை குட்டி. நீங்களே.. சொல்லுங்கோ.....

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி

large_243843.jpg

"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "கூட்டுச்சதி செய்தவர்' என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். "ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல' என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவு, 2.35க்கு வெளியிடப்பட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்டிருந்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்தார்.

அவர் தன் தீர்ப்பில், ""ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஆழம், இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றச்சதியில் உள்ள பங்கையும் கவனத்தில் கொண்டு, ஜாமினில் வெளியில் விட்டால், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைக்கவும், அழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, குற்றச்சதியில் தீவிர பங்கு இருப்பதாகவும் தெரிவதால், ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது,'' என்று கூறினார்.

ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படவும், அங்கிருந்த கனிமொழி, சரத்குமார் ரெட்டி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், நிலைமையை உணர்ந்து சமாளித்தபடி இருந்தனர். ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதும், கனிமொழியின் கண்கள் கலங்கின. இந்தத் தீர்ப்பை கேட்டவுடன் கண்ணீர் மல்க, தன் கணவர் மற்றும் ராஜாவின் மனைவியை கனிமொழி கட்டிப்பிடிக்க, உடனிருந்த சில, தி.மு.க.,வினரும் கண்கலங்கினர். கணவர் அரவிந்தன் மற்றும் ராஜாவின் மனைவி ஆகியோர் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். டி.ஆர்.பாலு, விஜயன், கே.பி.ராமலிங்கம், ஜெயதுரை, தாமரை செல்வன், டி.கே.எஸ்.இளங்கோவன், செல்வகணபதி, ஆதிசங்கர், பூங்கோதை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோர்ட்டுக்குள் இருந்தனர். தீர்ப்பை கேட்டதும் இவர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். தீர்ப்பை உடனடியாக சென்னையில் உள்ள கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு, டி.ஆர்.பாலுவும், செல்வகணபதியும் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு: சில நிமிடங்கள் கழித்து, கனிமொழியிடம் தீர்ப்பு குறித்து கேட்டபோது, ""இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; ஆனா லும், இந்த முடிவு எனக்கு ஆச்சரியமானதல்ல. நான் இதை முன்பே எதிர்பார்க்கவே செய்தேன்,'' என்று மட்டும் கூறினார். பின்னர் கோர்ட் பணியாளரிடம் கனிமொழி, தான் வைத்திருந்த வெள்ளை நிற கைப்பையை சிறைக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். கைப்பையை எடுத்துச் செல்லாம் என, அனுமதி வழங்கவே, கனிமொழி தான் வைத்திருந்த கைப்பையுடன், அருகில் இருந்த சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாக்அப் அறைக்கு கொண்டு செல்வதற்கு முன், கனிமொழி, சரத்குமார் ரெட்டியிடம் கையொப்பம் வாங்கப்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில், சைனி கோர்ட் அறைக்கு பக்கத்திலேயே இந்த அறை உள்ளது. அங்கு, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர வைக்கப்பட்டனர். அங்கு ஏற்கனவே ராஜா, பல்வா ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுடன் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர்ந்தனர். 4.30 மணியளவில், பாட்டியாலா கோர்ட்டில் இருந்து நேரடியாக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள 6ம் எண் பெண்கள் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார்.

வாக்குவாதம்: கோர்ட் அறைக்குள் நேற்று நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல், கடும் நெருக்கடி இருந்தது. மீடியாக்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது; இதனால், கோர்ட் அறையில் பரபரப்பு காணப்பட்டது. வழக்கமான விசாரணைகளுக்காக நேற்று வழக்கம்போல ராஜா, பல்வா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அவர்களும் கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டது குறித்து, வருத்தம் அடைந்தனர். மீடியாக்கள் மீது, சில தி.மு.க.,வினர் கோபப்பட் டதையும் காண முடிந்தது.

காங்கிரஸ் கைவிரிப்பு: கனிமொழியின் கைது சம்பவம் நடந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, கனிமொழி கைது குறித்து அவர் கூறுகையில், ""தனிப்பட்ட நபர்களது வழக்கு குறித்து காங்கிரஸ் எதுவும் கூற இயலாது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும், சி.பி.ஐ.,க்கும் இடையிலான சமாச்சாரம் அது. நாங்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. சிறந்த வக்கீல்கள் உள்ளனர். மேல் கோர்ட்டுகளில் முறையீடு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது: 144 பக்கங்களில் சைனி அதிரடி உத்தரவு

"ஸ்பெக்ட்ரம் குற்றச்சதியில் கனிமொழிக்கு பங்கு அதிகம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. தவிர, முக்கிய குற்றவாளியான ராஜாவுக்கும், கனிமொழிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதென்பதும் உறுதியாக தெரிகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் எல்லாருமே, கலைஞர் "டிவி'யில் பணியாற்று பவர்கள். எனவே, அவர்களுக்கு தலைமை தாங்கும் நிலையில் உள்ள இவர்களை ஜாமின் அளித்து வெளியில் விட்டால், சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது' என்று, நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் நிராகரிப்பதாகக் கூறி, நீதிபதி ஓ.பி.சைனி நேற்று, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அறிவித்தபோது, தி.மு.க., வட்டாரமே கடும் அதிர்ச்சிக்குள்ளானது. 144 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தரவில், நீதிபதி சைனி, கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் மறுத்தது குறித்து விளக்கியுள்ளார். ஆரம்பத்தில், கலைஞர் "டிவி'யில் இயக்குனர் பொறுப்பில் கனிமொழி இருந்துள்ளார். கலைஞர் "டிவி' ஆரம்பிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஆகக் கூடாது என்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியே அவர், தற்காலிகமாக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கலைஞர் "டிவி'யை துவங்குவதற்கு வேண்டிய ஆரம்ப கட்ட செய்தி ஒலிபரப்புத்துறை சார்ந்த பணிகள் உட்பட அந்த, "டிவி'யை டாடா ஸ்கை டி.டி.எச்., பேக்கேஜ்க்குள் கொண்டு வருவதற்கும், ராஜா மிகுந்த முயற்சிகளையும், அது சார்ந்த அத்தனை பணிகளையும் செய்து முடித்துள்ளார்.

கலைஞர் "டிவி'யில் 20 சதவீதம் வைத்திருக்கும் முக்கிய பங்குதாரர் கனிமொழி. அந்த, "டிவி' இயக்கத்தின் பின்னணியில் உள்ள மிக முக்கிய மூளையாகவும் கனிமொழி செயல்பட்டுள்ளார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு உண்மைதான் என்பதை, ராஜாவிடம் உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி, அதை நம்புவதாகவும் சைனி கூறியுள்ளார். அதன்படி, அமைச்சராக இருந்த ராஜாவின் வீட்டிற்கும், அவரது அலுவலகத்திற்கும் கனிமொழி அடிக்கடி வந்துபோய் உள்ளார். இடைவிடாத இந்த சந்திப்புகளின் போதெல்லாம், கலைஞர் "டிவி' உருவாக்கம் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, டில்லி சவுத் அவின்யூவில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கும் ராஜா அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும், கட்சியில் முக்கியமாகச் செயல்பட்டு, "டிவி' குறித்த முடிவுகளில் ஓரணியில் செயல்பட்டுள்ளனர் என்றும், சைனி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தவிர, பிப்., 13, 2009ல், நடைபெற்ற கலைஞர் "டிவி' போர்டு மீட்டிங்கில் தான், "சினியுக்' நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பெறுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் பங்கேற்றுள்ளனர் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதை, கலைஞர் "டிவி'யைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அமிர்தம் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நம்புவதாகவும் சைனி குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது பங்கு இந்த ஊழலில் மிகப்பெரிய அளவில் இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. குற்றத்தின் தீவிரமும், ஆழமும் மிக பிரமாண்டமாக உள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் சீரியசானவை. இதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களும் வலுவாக உள்ளன. எனவே, மனுதாரர் தனக்கு ஜாமின் வழங்கும்படி கேட்கும் கோரிக்கையில் நியாயம் இல்லை. இந்த குற்றச் சதியின் பின்னணியை ஆராயும் போது, சாட்சிகளாக இருப்பவர்கள் அனைவருமே ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் கலைஞர் "டிவி'யில் பணி புரிபவர்களாக உள்ளனர். எனவே, இப்போது ஜாமின் கேட்கும் இருவரையும் வெளியில் விட்டால், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவர். சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிகள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

செய்திருக்கும் குற்றத்தின் ஆழம், அதன் முக்கியத்துவம், சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தீவிர குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமே ஏராளமான வலுவான ஆதாரங்களும் உள்ளன. இந்த அடிப்படையில் பார்க்கையில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இவர்களது கோரிக்கை நியாயமற்றது. ஆகவே, இவர்களது ஜாமின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். இவ்வாறு நீதிபதி சைனி குறிப்பிட்டுள்ளார். இனி, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் ஜாமின் பெற, டில்லி ஐகோர்ட்டை நாட வேண்டும்.

கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை: கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினர்.

கருணாநிதியின் சி.ஐ.டி., காலனி வீட்டிற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் அன்பழகன், ஸ்டாலின், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீசெல்வம், பொன்முடி உள்ளிட்டோர் வந்தனர். கனிமொழி ஜாமின் மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதும், இவர்கள் வெளியே சென்றுவிட்டு, பகல் 2 மணிக்கு மீண்டும் வந்தனர். டில்லி கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கனிமொழி கைது செய்யப்பட்ட தகவல் வந்ததும், இவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். தி.க., தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கனிமொழியின் தாய் ராஜாத்தி, நேற்று மாலை டில்லிக்கு சென்றார். கருணாநிதியின் மருத்துவர் கோபால், நேற்று மாலை சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப்., 2: "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலர் சித்தார்த்த பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.

2011 பிப்., 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா, கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.

பிப்., 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.

பிப்., 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.

பிப்., 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.

பிப்., 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.

பிப்., 18: பல்வா, சிறையில் அடைப்பு.

பிப்., 24: பல்வா, "கலைஞர் டிவி'க்கு சலுகை காட்டினார் என, டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.

பிப்., 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.

மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.

மார்ச் 14: டில்லி ஐகோர்ட், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.

மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிகையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ.,யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.

ஏப்., 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

ஏப்., 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.

மே 6: கனிமொழி, கோர்ட்டில் ஆஜர்.

மே 20: கனிமொழி ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=243843

---

உண்மையாய்... தெரியவில்லை குட்டி. நீங்களே.. சொல்லுங்கோ.....

எனக்குத் தெரிய இல்லை என்று தானே உங்களிற கேட்டனான்... சரி விடுங்கோ... :D

அதுதான் என்னுடைய விருப்பமும்.

ஆனால் அதற்கு நாளெடுக்கும். அதற்கு முன் தி.மு.க. அழிந்துவிட்டால்............?

ஜெ. க்கு சீமான் பெரும் எதிரியாக தெரிவார். எனவே ஜெ.யின் சீமானுக்கான எதிர்ப்பு பலமாக இருக்கும்.

தி.மு.கவையும் ஜெ யையும் மோதவிட்டுவிட்டு சீமான் தனது கட்சியை திடப்படுத்திக்கொள்ளவேண்டும்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் பல கட்சியை பூண்டோடு அழித்தவருக்கு ஜெயா பெரிய கொம்பு அல்ல, ஜெயா எமக்கு ஆதரவாக (நீதிக்கு) இருந்தால் கருணா நாகத்தின் நிலை வராது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் பல கட்சியை பூண்டோடு அழித்தவருக்கு ஜெயா பெரிய கொம்பு அல்ல, ஜெயா எமக்கு ஆதரவாக (நீதிக்கு) இருந்தால் கருணா நாகத்தின் நிலை வராது

உண்மை உண்மை

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.

உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:

கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி: :(

முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.

முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:

இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குக் கடிதம் எழுதலாம்? தந்தி அடிக்கலாம்?

பூம்புகார் நாயகன் புதல்வி திகாரிலா?

அவர் பெயர் கனி மொழி அல்ல.களிமொழி என்பதே சரி.

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே சொன்னான் இளங்கோ.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய கலைஞர் அதைச்சரியாக வாசிக்க வில்லைப் போலும்.

ஆகா......., மற்றவரில் பிழை பிடிக்க கிளம்பீட்டாங்களே.... மட்டூஸ்.

தாங்கள் எழுதின, எழுத்துப் பிழையை நுணாவிலான் தான் கண்டு பிடிக்க வேணும்.

நான் எவ்வளவோ முயல்கின்றன்... Google Transliteration இனை பாவிப்பதால் சொற்களை மிக அவதானமாக ஒவ்வொரு முறையும் சரி பார்க்க வேண்டி இருக்குது, தவறினால் ஏதோ எல்லாம் வருகுது (அடிக்கடி விசுகு அண்ணாவை இது 'வயசுக்கு' என்று மாற்றி காட்டும்)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் எவ்வளவோ முயல்கின்றன்... Google Transliteration இனை பாவிப்பதால் சொற்களை மிக அவதானமாக ஒவ்வொரு முறையும் சரி பார்க்க வேண்டி இருக்குது, தவறினால் ஏதோ எல்லாம் வருகுது (அடிக்கடி விசுகு அண்ணாவை இது 'வயசுக்கு' என்று மாற்றி காட்டும்)

செய்ததையும்... செய்து போட்டு...

இதுக்குள்ளை... குசும்பு, வேறை அடிக்கிறீங்களா.........

நான் எவ்வளவோ முயல்கின்றன்... Google Transliteration இனை பாவிப்பதால் சொற்களை மிக அவதானமாக ஒவ்வொரு முறையும் சரி பார்க்க வேண்டி இருக்குது, தவறினால் ஏதோ எல்லாம் வருகுது (அடிக்கடி விசுகு அண்ணாவை இது 'வயசுக்கு' என்று மாற்றி காட்டும்)

இப்ப்டி பிரச்சனைகள் எனக்கு நீண்ட காலமாக இருக்கு ஆனால் ஏதோ எழுத படிக்க தெரியாத வினித் என்ன என்னமோ உளறுகின்றான் என்கிறார்கள்.

கருணாநிதி கூட்டத்திற்கு தலைக்கு மேலே வெள்ளம் போகும் ஒரு நிலை வரலாம். அப்பொழுது அவர்கள் அதை நிதானமாக கையாள்வார்களா? இல்லை தம்முடன் சேர்த்து பலரையும் அழிவுக்குள் உள்வாங்குவார்களா?

- இரண்டாம் தலைமுறை அலைக்காற்று விடயத்தில் தமது சக பாடிகளை ( அதில் காங்கிரசும் உள்ளதா?) காட்டிக்கொடுப்பார்களா?

- முள்ளிவாய்க்கால் அவலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியில் சொல்லுவார்களா?

கருணாநிதி கூட்டத்திற்கு தலைக்கு மேலே வெள்ளம் போகும் ஒரு நிலை வரலாம். அப்பொழுது அவர்கள் அதை நிதானமாக கையாள்வார்களா? இல்லை தம்முடன் சேர்த்து பலரையும் அழிவுக்குள் உள்வாங்குவார்களா?

- இரண்டாம் தலைமுறை அலைக்காற்று விடயத்தில் தமது சக பாடிகளை ( அதில் காங்கிரசும் உள்ளதா?) காட்டிக்கொடுப்பார்களா?

- முள்ளிவாய்க்கால் அவலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியில் சொல்லுவார்களா?

இப்போது கப்டன் விஜய் அவர்கள் தான் உண்மையான ஆதர்வளன் என்பதை நிருபிக்க வேண்டும்.

http://www.telegraphindia.com/1110521/jsp/nation/story_14010725.jsp

- பிணை நிராகரிக்கப்பட்டது

- தென்னிந்திய உணவுகள் தரப்படும்

- தனியான மலசலகூடம்

- மூக்குத்தி கழட்டப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது கஸ்பார்.

இவனை எப்பவோ உள்ளுக்கை தள்ளியிருக்கோணும்.

கதைக்கிறமாதிரி கதைச்சு எல்லாரையும் பேப்பட்டம் கட்டினவன்.

கெட்ட சாமான் ஒண்டு

இவனை எப்பவோ உள்ளுக்கை தள்ளியிருக்கோணும்.

கதைக்கிறமாதிரி கதைச்சு எல்லாரையும் பேப்பட்டம் கட்டினவன்.

கெட்ட சாமான் ஒண்டு

:D

இவனை எப்பவோ உள்ளுக்கை தள்ளியிருக்கோணும்.

கதைக்கிறமாதிரி கதைச்சு எல்லாரையும் பேப்பட்டம் கட்டினவன்.

கெட்ட சாமான் ஒண்டு

இவனை இப்ப கனிமொழி இருக்கிற ஜெஜில போட்டா அரவிந்தன் பாவம் எல்லோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இதில் எழுத எதுவுமில்லை

இனி இது அவர்களது அரசியல் விளையாடடுக்கள். எந்தநேரமும் எதுவும் நடக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை தி.மு.க.வை அதிகம் சோர்வடைய வைப்பது சரியல்ல. அது ஜெயலலிதாவிற்கு உற்சாகத்தையும்தட்டிக்கேட்க ஆளி;லாத தைரியத்தையும் கொடுக்கும். இது எமக்கு பாதகமானது. :(:(:(

என்ன விசுகர்? தட்டி கேக்கிறதுக்கு இனியும் கட்டாயம் திமுக தான் வேணுமோ? ஏன் மற்றவாக்கள் தட்டிக்கேக்க அருகதையில்லையோ?

கருணாநிதியின்ரை செத்தவீட்டிலையே திமுகாவுக்குள்ளை நாப்பது கட்சி உருவெடுக்கப்போகுது :D

  • கருத்துக்கள உறவுகள்

இவனை எப்பவோ உள்ளுக்கை தள்ளியிருக்கோணும்.

கதைக்கிறமாதிரி கதைச்சு எல்லாரையும் பேப்பட்டம் கட்டினவன்.

கெட்ட சாமான் ஒண்டு

பாதிரியார் வேடத்தில் புகுந்த கருநாகம்.

இவனால், பாதிரியாரைப் பார்த்தாலே...... குலைப்பன் அடிக்குது.

நக்கீரனுக்கு, கதை எழுதத் தான்.... இவர் லாயக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.