Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறகடிக்க முயலும் சிறகொடிந்த வன்னிச் சிட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vanni_20090120013.jpg

தங்கச்சி.. புள்ள..

என்னம்மா..

எங்க புள்ள போயிட்டு வாறா..?!

உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன்.

ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன்.

ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு காசு கொடுத்தவர் தானேம்மா. அதோட ஆமிக்கார பெரியவன் 5 இலட்சம் கேட்க அதையும் புரட்டிக் கொடுத்தவர் எல்லோ. அதுகளையும் மறக்கக் கூடாது தானேம்மா. அதுதான் வந்து நிக்கிறார் என்று சுபா போனடிச்சுச் சொன்னாள். போய் பார்த்திட்டு வந்தன் அம்மா.

உன்னை போய் பார்க்க வேண்டாம் என்று சொல்லேல்ல புள்ள. தனியப் போகாத என்று தான் சொல்ல வாறன். உவங்கள் ஆமி சி ஐ டி மார் உதுகளுக்கு நின்று எங்கட தேசப் பிள்ளைகளை (முன்னாள் போராளிகளை) கவனிக்கிறாங்கள். அவைட நடமாட்டங்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்க்கிறாங்கள். அதால தான் சொன்னனான். பிறகு உனக்கும் பிரச்சனை கணேஷ் மாமாவுக்கும் பிரச்சனை வந்திடும் புள்ள. சரி அதுகிடக்கட்டும்.. கணேஷ் மாமா என்ன சொன்னவர்..

அவர் என்னம்மா சொல்லுறது. நேற்றிரவு தானாம் வன்னிக்கு வந்து சேர்ந்தவை. கொழும்பில கிளியரன்ஸ் கொடுக்க இரண்டு கிழமை எடுத்திட்டாங்களாம். மூன்று கிழமை தானாம் லீவு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எங்கட குடும்ப நிலைமையை இட்டு சரியா மனசு கஸ்டப்படுறார் போல. மனிசிக்காரி நான் போனதும் கூட வந்து கணேஷ் மாமா பக்கத்திலேயே நின்று கொண்டா. ஏதேனும் தந்திடுவாரோ என்று நினைச்சிட்டா போல..! ஆனால் அவர் அவா அங்கால கொஞ்ச நேரம் போயிட்டு வாறத்துக்குள்ள... என்னட்டச் சொன்னார் நான் உன்னை வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிக்கிறன். முடியல்ல என்றால் உன்னை கலியாணம் கட்டியாவது கூட்டிக் கொண்டு போறன் என்று. சமூகத்துக்கு பயந்து வாழ வேண்டிய ஒரு உயிரை அழிய விடுறதை விட.. அதை வாழ வைக்கிறது தப்பில்லை தானே என்று வேற சொல்லுறார்.

என்ன.. உன்னை கலியாணம் கட்டப் போராராமோ. அவருக்கு தானே குடும்பம் குட்டி என்று இருக்குது. 15 வயசில மகளும் இருக்குது.

இல்ல அம்மா.. அவர் ஒன்றும் உடம்பு சுகத்துக்காக என்னைக் கட்டல்ல. என்னை வெளிநாட்டுக்கு எடுக்கிறதுக்காக கட்டிறன் என்றார். இங்க இருந்தா எப்பையும் ஆபத்து வரும் என்று சொல்லுறார்.

ஓ... அப்படிச் சொன்னாரா.. அப்ப அதுக்கு நீ என்ன சொன்னா..

நான் என்னத்தை அம்மா சொல்லுறது. அம்மாவும் நீங்களும் பேசி என்ன முடிவு எடுக்குறீங்களோ அதுக்கு நான் கட்டுப்படுறன் என்று சொல்லீட்டன் அம்மா. அப்படி சொல்லிட்டு நிக்க கணேஷ் மாமாட மனிசி வந்திட்டா. அவர் சொன்னார் நான் பிறகு அம்மாவோட கதைக்கிறன் என்று.

ஏதோ புள்ள.. முருகண்டியான் அருளால.. உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைச்சாலே போதும். நான் இவள் கடைக்குட்டியை வளர்த்து எடுத்திடுவன். உன்னால தான் புள்ள எனக்கு சதா கவலை. பாப்பம்.. கணேஷ் வந்து கதைச்சா கெஞ்சிக் கூத்தாடியாவது உன்னை அங்காலப் பக்கம் கூப்பிடச் சொல்லி சொல்லுறன். அவள் கணேஷ்ன்ர மனிசி.. பெரிய பொம்பிளப் புரட்சி எல்லாம் கதைப்பாள்.. மனிசன்காரனை ஒரு உதவி செய்ய விட மாட்டாள்..!

சும்மா கதைக்கலாம்... எழுதலாம் அம்மா. கதையில மற்றவையிட கஸ்டத்தை சொல்லுறவை.. அதை தாங்கள் சந்திக்க தயாரா துணிஞ்சு நிப்பினமோ. அப்படி நின்றிருந்தா ஏனம்மா முள்ளிவாய்க்காலுக்க அழிஞ்சு போறம்..! எனக்கு கணேஷ் மாமாவில நம்பிக்கை இருக்கு. அவர் மனிசிக்கு பயப்பிடுற ஆளில்ல.. மனிசிக்கு மரியாதை குடுக்கிறவர்.. ஆனால் பயமில்லாத ஆள். இவ்வளவுக்கும் அவர் மட்டும் தானேம்மா சொந்தம் என்று சொல்லி உதவி செய்திருக்கிறார்.. பாப்பம்.. எதிர்காலத்திலும் என்ன செய்யுறார் என்று.

சரி புள்ள.. ஏதோ எல்லாம் கடவுள் விட்ட வழி. நான் உதில வெள்ளை அரிசிக் கஞ்சி வடிச்சு வைச்சிருக்கிறன்.. இரண்டு உப்பு கல்லை எடுத்துப் போட்டிட்டு குடிச்சிட்டு அந்த மரக்கறியள வெட்டி வை புள்ள. நான்.. பக்கத்துக் கடைக்குப் போய் இரண்டு சோடா வேண்டிக் கொண்டு வந்து வைக்கிறன். கணேஷன் வந்தாலும் குடுக்க ஒண்டுமில்ல.

ஓமம்மா. கெதியா போயிட்டு ஓடியாங்கோ..!

சரி புள்ள..!

ஆக்கம் நெடுக்ஸ். (முழுதும் கற்பனை அல்ல.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்க சொல்லுற மாதிரி முன்பு பல தடைவைகள் லண்டனிலேயே நடந்து இருக்கு!

இஸ்லாமிய முறைப் படி பல தார மணம், முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது!

இதனை மதித்துப் பிரித்தானிய அரசும், பாகிஸ்தானியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டுவர ஒரு காலத்தில் அனுமதித்தது!

உள்ள பாகிஸ்தானியர் எல்லோரும், பணத்திற்காகப் பல பேரைக் கூட்டிக் கொண்டு வர, அந்தத் திட்டத்தை நிற்பாட்டி விட்டார்கள்!

வாழ்க்கையே தொலைந்து போய் விட்ட ஒரு இளங்குருத்துக்காக, இதைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதே எனது கருத்து!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனி வரும் காலங்களில்.. முன்னாள் போராளிகள் என்ற பதத்தை விடுத்து தேசப் பிள்ளைகள்.. என்ற பதத்தை பாவிப்பதாக முடிவு செய்துள்ளோம்..! முன்னாள் போராளிகள் என்ற பதத்தினூடு எம் சொந்தங்களை எமக்காக போர்க்களத்தில் நின்றோரை.. எம் உடன்பிறப்புக்களை.. தனிமைப்படுத்த அல்லது பிரித்துக்காட்ட முனையும் சில படைப்பாளிகளிடம் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் எதிரியிடம் இருந்தும் அவர்களை பாதுகாக்கும் சமூகத்தோடு இரண்டறக் கலக்க வைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இதனை தமிழ் மொழியாடலில் அறிமுகம் செய்ய முனைகிறோம்.

இதன் கீழ்:

முன்னாள் போராளிகள் = (எங்கள்) தேசப் பிள்ளைகள்.

முன்னாள் ஆண் போராளி = தேச மகன்.

முன்னாள் பெண் போராளி = தேச மகள்.

வேற்று சரியான பதங்களை இனங்காண்பவர்கள்.. நீங்களும் அவற்றை இங்கு பிரேரிக்கலாம்.

நன்றி குட்டி.. தங்களின் ஆதங்கத்துக்கு செயலுருக் கொடுக்க முயன்றுள்ளேன்.

Edited by nedukkalapoovan

கதையின் கருவும் கதை எழுதிய வடிவமும் யதார்த்தமாக உள்ளது, இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்.

எனி வரும் காலங்களில்.. முன்னாள் போராளிகள் என்ற பதத்தை விடுத்து தேசப் பிள்ளைகள்.. என்ற பதத்தை பாவிப்பதாக முடிவு செய்துள்ளோம்..! முன்னாள் போராளிகள் என்ற பதத்தினூடு எம் சொந்தங்களை எமக்காக போர்க்களத்தில் நின்றோரை.. எம் உடன்பிறப்புக்களை.. தனிமைப்படுத்த அல்லது பிரித்துக்காட்ட முனையும் சில படைப்பாளிகளிடம் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் எதிரியிடம் இருந்தும் அவர்கள் பாதுகாக்கும் முதற்கட்டமாக இதனை தமிழ் மொழியாடலில் அறிமுகம் செய்ய முனைகிறோம்.

வேற்று சரியான பதங்களை இனங்காண்பவர்கள்.. நீங்களும் அவற்றை இங்கு பிரேரிக்கலாம்.

நன்றி குட்டி.. தங்களின் ஆதங்கத்துக்கு செயலுருக் கொடுக்க முயன்றுள்ளேன்.

புரிதலுடன் மாற்றத்தை ஏற்படுத்தியமைக்கு நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்சி. நடந்தவற்றை நடக்கப்போவதை இப்படியும் சொல்லலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நல்லதை வெளியில் சொல்வோம். கெட்டவற்றை எமக்குள் சொல்வோம். எதுவித சோடனைகளுமின்றி கண் முன்னே நடப்பவை போலுள்ளது கதையின் கரு.

இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

அடையாளபடுத்தல்கள் வேண்டாமே.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப்போட்டியில் முதல் மூன்று நிலையில் வருபவர்களுக்கே பதக்கம் கொடுத்து வரவேற்கும் போது தேசத்துக்காக உயிரையே கொடுக்க முன்வந்தவர்களுக்கு உரிய பெயரை கொடுப்பதில் நாம் என்றுமே பின் நிற்கக்கூடாது.உலகின் பல நாடுகளில் விடுதலைக்காக போராடியவர்களை பெயர் கொடுத்து கௌரவிக்கும் போது நாம் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்??

குட்டியின் கதைக்கும்(உண்மை)அதற்கு வடிவம் கொடுத்த நெடுக்குசுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனி வரும் காலங்களில்.. முன்னாள் போராளிகள் என்ற பதத்தை விடுத்து தேசப் பிள்ளைகள்.. என்ற பதத்தை பாவிப்பதாக முடிவு செய்துள்ளோம்..! முன்னாள் போராளிகள் என்ற பதத்தினூடு எம் சொந்தங்களை எமக்காக போர்க்களத்தில் நின்றோரை.. எம் உடன்பிறப்புக்களை.. தனிமைப்படுத்த அல்லது பிரித்துக்காட்ட முனையும் சில படைப்பாளிகளிடம் இருந்தும் ஊடகங்களிடம் இருந்தும் எதிரியிடம் இருந்தும் அவர்களை பாதுகாக்கும் சமூகத்தோடு இரண்டறக் கலக்க வைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இதனை தமிழ் மொழியாடலில் அறிமுகம் செய்ய முனைகிறோம்.

இதன் கீழ்:

முன்னாள் போராளிகள் = (எங்கள்) தேசப் பிள்ளைகள்.

முன்னாள் ஆண் போராளி = தேச மகன்.

முன்னாள் பெண் போராளி = தேச மகள்.

வேற்று சரியான பதங்களை இனங்காண்பவர்கள்.. நீங்களும் அவற்றை இங்கு பிரேரிக்கலாம்.

நன்றி குட்டி.. தங்களின் ஆதங்கத்துக்கு செயலுருக் கொடுக்க முயன்றுள்ளேன்.

நன்றி நெடுக்காலபோவான் ஏதோ மனதிற்குள் இடறிக்கொண்டிருந்த துன்பமான ஒன்றிற்கு சின்னதான ஒத்தடம் கொடுத்தமாதிரி இருக்கிறது இந்த வார்த்தைப்பிரயோகம். அத்தோடு மேலே கதையில் இணைத்த அந்தப்படம் இங்கு தேவைதானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்காலபோவான் ஏதோ மனதிற்குள் இடறிக்கொண்டிருந்த துன்பமான ஒன்றிற்கு சின்னதான ஒத்தடம் கொடுத்தமாதிரி இருக்கிறது இந்த வார்த்தைப்பிரயோகம். அத்தோடு மேலே கதையில் இணைத்த அந்தப்படம் இங்கு தேவைதானா?

எங்கள் தங்கைகளின் அக்காக்களின் கடந்த காலத்தை அலசி ஆராய்பவர்கள்.. அவர்களின் நிகழ்காலத்தை இட்டு கவலைப்படுபவர்கள்.. எதிர்காலத்தை இட்டு எதையும் ஆணித்தரமாகச் செய்ய துணிவற்று இருக்கின்றனர். அவர்களுக்காக இந்தப் படங்கள் தேவையாகிறது. ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வசதியாக வாழ.. மாற்றான் பிள்ளைகளின் துன்பத்தில் தங்களை மனிதாபிமானிகள் என்று இனங்காட்ட விளம்பரம் செய்ய கொடுக்கும் கவனத்தில்... தேசப்பிள்ளைகளுக்கு உண்மையில் நீண்ட கால நோக்கில்.. உதவும் நிலையை கடந்து நிற்கிறார்கள். அதற்காக இவை தேவை.. அக்கா.

Edited by nedukkalapoovan

விளையாட்டுப்போட்டியில் முதல் மூன்று நிலையில் வருபவர்களுக்கே பதக்கம் கொடுத்து வரவேற்கும் போது தேசத்துக்காக உயிரையே கொடுக்க முன்வந்தவர்களுக்கு உரிய பெயரை கொடுப்பதில் நாம் என்றுமே பின் நிற்கக்கூடாது.உலகின் பல நாடுகளில் விடுதலைக்காக போராடியவர்களை பெயர் கொடுத்து கௌரவிக்கும் போது நாம் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்??

குட்டியின் கதைக்கும்(உண்மை)அதற்கு வடிவம் கொடுத்த நெடுக்குசுக்கும் நன்றிகள்.

நீங்கள் சொல்வது நியாயமானது, அந்தவகையில் (முன்னாள் போராளிகள் என்பதை தவிர்த்துக் கொள்ளும் படி) நான் வெளிப்படுத்திய ஆதங்கத்தை நெடுக்ஸ் யாழ்களத்தில் செயல்படுத்த முன்வந்தமையும், அதன் ஆரம்பமாக இந்தத் திரியில் தானே பதிவிட்டதும் பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கதும் கூட :)

இதில் 'குட்டியின் கதைக்கும்(உண்மை)' என்று குறிப்பிடு இருக்கிறீர்கள், கதை எனதல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணமாகாத புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தத் தேசமகள்களை தங்களது வாழ்க்கைத் துணைவியாக ஏற்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணமாகாத புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தத் தேசமகள்களை தங்களது வாழ்க்கைத் துணைவியாக ஏற்க வேண்டும்.

புலம்பெயர் இளைய சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு வேண்டுதல்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணா தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்.

இந்த கதை கூட நமக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்த எழுதியதாகவே எனக்கு படுகிறது. யாரை? எந்த சம்பவத்தை வைத்து எழுதி உள்ளீர்கள் என்பது யாழை வாசிக்கும் வாசகர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். யாராவது தவறு செய்தால் அதே வழியில் அதே தவறை செய்வது சரியா என்ற உந்துதலினால் தான் கேட்கிறேன். இன்னும் தவறுகளைத் தானே தவறாமல் செய்கின்றோம்???

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது ஏன் பலருக்கு புரியவில்லையோ தெரியவில்லை. எல்லாருமே ஒரு தரப்புக்கருத்துக்களை மட்டுமே எழுதினால் அது ஆரோக்கியமான வாதமா இல்லை நற்செயலுக்கு தான் வழிவகுத்திடுமா?

விடுதலை வேண்டி நிற்கும் இனத்தின் செயற்பாடுகள் ஒன்றிணைவதற்கானதாய் இருக்க வேண்டுமே தவிர மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்த அல்ல.

இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

அடையாளபடுத்தல்கள் வேண்டாமே.

நன்றி அர்ஜுன் அண்ணா.

இதுவே எனது கருத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா தயவு செய்து குறை நினைக்க வேண்டாம்.

இந்த கதை கூட நமக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்த எழுதியதாகவே எனக்கு படுகிறது. யாரை? எந்த சம்பவத்தை வைத்து எழுதி உள்ளீர்கள் என்பது யாழை வாசிக்கும் வாசகர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். யாராவது தவறு செய்தால் அதே வழியில் அதே தவறை செய்வது சரியா என்ற உந்துதலினால் தான் கேட்கிறேன். இன்னும் தவறுகளைத் தானே தவறாமல் செய்கின்றோம்???

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது ஏன் பலருக்கு புரியவில்லையோ தெரியவில்லை. எல்லாருமே ஒரு தரப்புக்கருத்துக்களை மட்டுமே எழுதினால் அது ஆரோக்கியமான வாதமா இல்லை நற்செயலுக்கு தான் வழிவகுத்திடுமா?

விடுதலை வேண்டி நிற்கும் இனத்தின் செயற்பாடுகள் ஒன்றிணைவதற்கானதாய் இருக்க வேண்டுமே தவிர மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்த அல்ல.

சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கும் வழக்கம் தமிழர்களுக்கு இருக்கலாம். அதில் இறந்தவரின் அருமை பெருமை சிறுமை எல்லாம் சொல்வார்களாம். நாம் அந்த நிலைக்கு அப்பால் வந்துவிட்டோம். எமக்கு ஒப்பாரிகள் தேவையில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒத்தடங்களே தேவை..! இதுதான் என்னுடைய நிலைப்பாடு. மக்களை வைத்து ஒப்பாரி வைப்பதிலும் ஒத்துழைப்போடு உள உடல் காயங்களுக்கு ஒத்தடம் செய்வதே அவசியம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணமாகாத புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தத் தேசமகள்களை தங்களது வாழ்க்கைத் துணைவியாக ஏற்க வேண்டும்.

புலம் பெயர்ந்த கலியாணமாகத இளசுகள் வட இந்தியா பெண்களுக்குதான் வாழ்வு கொடுக்கிறாங்கள்....

வன்னிக்கு வாழ்வு கொடுக்க மாட்டங்கள் ''

எழுதலாம் பேசலாம் ...நடமுறை என்று வரும் பொழுது......

நெடுக்ஸ்க்கு நன்றிகள் தேசமகன் என்ற சொல் பாவித்தமைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த கலியாணமாகத இளசுகள் வட இந்தியா பெண்களுக்குதான் வாழ்வு கொடுக்கிறாங்கள்....

வன்னிக்கு வாழ்வு கொடுக்க மாட்டங்கள் ''

எழுதலாம் பேசலாம் ...நடமுறை என்று வரும் பொழுது......

அதுவும் கோடம்பாக்கத்தில் இயக்குனர் தொடங்கி ரீ போய் வரைக்கும் பதம் பார்த்ததுகளைக் கூட பி எம் டபிள்யு வாங்கிக் கொடுத்து கட்டிக்கிட்டு போறாங்க என்றா.. இவங்கட வட இந்திய மோகம் எங்க போய்க்கிட்டு இருக்கென்று புரியனும்..! அதில பெருமை வேற...! எருமைக் கூட்டம்.. சகதிக்க தான் கிடக்கும்.. புத்தண்ணா. :lol::D

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் ரொம்ப கீழ்தரமான மூன்றாம் தரகருத்து.பொதுமக்களின் பணத்தை சூறையாடியவனையே விட்டுவிட்டு தனிநபர் தாக்குதல் அநாகரீகம்.

கொஞ்சம் பொறாமை போலும் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ரொம்ப கீழ்தரமான மூன்றாம் தரகருத்து.பொதுமக்களின் பணத்தை சூறையாடியவனையே விட்டுவிட்டு தனிநபர் தாக்குதல் அநாகரீகம்.

கொஞ்சம் பொறாமை போலும் உள்ளது.

சொந்த வீட்டில பூவரம் இலையில் குளையல் சாப்பிட வழி இருந்தும்.. எச்சில் இலைக்கு அடிபடுறவனை பார்த்துப் பொறாமை சார்..! வந்திட்டாங்கைய்யா.. வட இந்திய ஆதிக்கத்தை செருகிக் கட்டி எங்கட கலாசாரம் என்று சொல்லிக்காட்ட..! :unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணமாகாத புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்தத் தேசமகள்களை தங்களது வாழ்க்கைத் துணைவியாக ஏற்க வேண்டும்.

இவை கலியானம் கட்டுறதே பெரிய விசயம்.அதுக்குள்ள இது வேறையா :unsure::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.