Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபச்சாரம்

Featured Replies

விபச்சாரம் என்று நம்மால் பரவலாக அறியப்படும் செயலானது எது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் adultery என்பதாகும். அதாவது கலாச்சாரக் காலத்தின் பின்னால் திருமணமான அல்லது இணைந்து வாழும் தம்பதியர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ திருமண பந்தத்துக்கு வெளியே சென்று தமது பாலியல் தேவையை வேறொருவர் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதே விபச்சாரம் ஆகும். அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் காலத்திலேயே இணை மீறிய தொடர்புகள் விபச்சாரம் எனலாம்.

மனித இனம் விலங்கில் இருந்து தோன்றியது, தோற்றுவிக்கப்பட்டது எனலாம். மனித இனம் ஒரு இணையோடு வாழும் மனப் பக்குவம் கொள்ளாத ஒரு விலங்கினம் ஆகும். அது பல இணைகளோடு வாழ நினைக்கும் ஒரு இனமாகும். அதனை உராங்குட்டான், கொரில்லாகள் வாழ்வினை ஆராயும் போது அவற்றிலும் பல இணையோடு வாழும் நிலை இருப்பதை அறிந்தனர். அதே சமயம் மனித இனத்தில் இருக்கும் அனைவரும் பல இணையோடு வாழும் மனநிலையில் இருந்திருக்கவில்லை.. சிலர் ஒன்றிரண்டு துணையோடும், சிலர் துணையே இல்லாமல் வாழும் நிலையும் உண்டு.

மனிதர்கள் ஒரு சிறுக் கூட்டமாக வாழ்ந்தக் காலத்தில் அவனவன் தனதுக் கூட்டத்திலயே ஒரு துணையை ஏற்றுக் கொண்டு குடும்பமாக வாழ்ந்தவன். ஆரம்பக் கால மனித கூட்டங்களில் உடன் பிறந்த சகோதரியைக் கூட காட்டுமிராண்டிக் காலத்தில் துணையாக எடுத்துக் கொண்ட நிலைகள் இருந்தன.

ஆனால் அதேக் கூட்டம் பெருகி கொஞ்சம் பெரியக் கூட்டமாக மாறியப் போது, மனிதனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துணைக் கிட்டியது. அதனால் ஆணோ பெண்ணோ தேவைக்கு ஏற்ப ஒன்று இரண்டு என பல இணைகளோடு வாழ்ந்தான்அதேக் கூட்டம் நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்டது, அப்போது நம்பிக்கைகளும் சிறிய வாழ்வியல் முறைகளும் ஏற்பட்டன. பல நேரங்களில் இணைகளைப் பெற பெரும் சண்டைகளும் நிகழ்ந்தன, அதனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மணமுறையை உருவாக்கினார்கள். ஆனால் இதுவும் இடத்துக்கு ஏற்றார் போல மாற்றம் அடைந்தன எனலாம்.

ஆண்கள் அதிகம் உள்ளக் கூட்டத்தில் பெண்கள் தொகை குறைவாக இருந்தது, ஆகவே அவர்கள் ஒரு பெண்ணை பல ஆண்களுக்கு மணந்தார்கள். இன்றளவும் இமய மலை, நீலகிரி மலை வாழ் மக்கள் சிலரில் இப்பழக்கம் இருக்கின்றன. இப்படி ஒரு பெண் பல ஆணுக்கு மனைவியாகிப் போது அவளைக் கவனிக்கவும், அவளின் பிள்ளைகளை பாதுகாப்பதும் யார் என்ற பிரச்சனை எழுகின்றது. அதனால் ஒரு பெண்ணை ஒரேக் குடும்பத்து ஆண்களுக்கு மணக்கும் முறை உருவாகின்றது. இப்படியான முறை அனேக சமூகங்களில் இருந்தன, இருக்கின்றன. இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டி இந்தியக் காப்பியங்களில் ஒன்றான மகாபாரத்தில் வரும் திரௌபதி - பஞ்ச பாண்டவர் கதையாகும். ஏன் இந்திய சமூகங்கள் பல பழங்காலத்தில் அப்படியான ஒரு நிலையைத் தான் கொண்டிருந்தன.

அதே போல பெண்கள் அதிகமுள்ளக் கூட்டத்தில் ஆண்கள் குறைவாக இருக்கின்றார்கள். அங்கு வேறுவிதமான ஒரு வாழ்வியல் முறை உருவாகின்றது, ஆம் ! ஒரு ஆணுக்குப் பல பெண்களை மணக்கும் நிலைமை ஆகும். இந்த நிலைமை இன்றளவும் பல சமூகங்களில் தொடர்கின்றன. இன்றளவும் இஸ்லாமிய மற்றும் சில பழமைவாத தந்தைவழிச் சமூகத்தில் இந்நிலைக் காணப்படுகின்றது.பல பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஆணுக்கு பல பெண்களை மணந்தார்கள். இதிலும் சிக்கல்கள் வரவே ஒரு ஆணுக்கு சகோதரிகளாகப் பிறந்தப் பெண்களை மணந்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் தான் இன்றளவும் நம் சமூகங்களில் பெரியப்பன், சிற்றப்பன், பெரியம்மை, சிற்றம்மை என விளிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் தான் அவர்களின் பிள்ளைகளை மணக்கக் கூடாது அவர்கள் சகோதரம் என்ற நிலையும் ஏற்பட்டது.

பழங்காலங்களில் மக்களிடையே திருமணத்தை மீறியும் பல நிலை உறவுகள் ஏற்பட்டன. ஆனால் அவற்றை இனவிருத்தி நலம் கருதி சமூகங்கள் அங்கீகரித்தன எனலாம். குறிப்பாக ஒரு திருமணமான ஒருவர் மற்றவரோடு உறவாடிய போதும், சில வேளைகளில் பெரிதுப் படுத்தாமல் இருந்தனர். ஆனால் அதே மாதிரியான நிலை எப்போதும் இருந்ததில்லை. பல வேளைகளில் இணைகளுக்குள்ளான போட்டியில் அடித்துக் கொள்ளவும் செய்தார்கள். இதனால் தான் பிற்காலங்களில் திருமணத்தை மீறிய உறவுகளுக்கு இறுகலான கடைப்பிடிப்புக்களை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

அது நிற்க. சமூகங்களின் மறுமணங்களும் அக்காலங்களில் இயல்பாகவே இருந்துள்ளன. இன்றைய பழங்குடிகள் வாழ்க்கையும் ஆராயும் போது பெரும்பாலான பழங்குடிகள் மறுமணத்தைத் தடுப்பதில்லை. போதிய இளமையும், விருத்திப் பலனும் இருக்குமாயின் மறுமணங்கள் புரிய அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஆனால் விவசாயம் வளரவும், சமூகங்கள் நிலவுடைமைச் சமூகமாக மாறியது. அச்சமூகங்களில் பலவும் ஆண்வழிச் சமூகமாக மாற்றம் கண்டன. அதே வேளை இனங்களும் பெருக ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டன, சண்டையில் தோற்கும் பிரிவுகள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்படி கொள்ளையடிக்கும் போது அவர்களின் பெண்களையும் சூறையாடுவார்கள். அவர்களை ஊருக்குள் கொண்டு வந்து பகிர்ந்துக் கொள்வார்கள், அப்படி பகிரும் போது வேற்றுக் குழுப் பெண்களை அடிமைகளாக நடத்துவார்கள். அடிமைகளாக நடத்த மட்டுமின்றி அவர்களை பாலியல் தேவைக்காகவும் பயன்படுத்தினார்கள். அவர்கள் பாலியல் அடிமைகள் எனப்பட்டனர். இப்படியான சம்பவங்களை சுமார் 2000 ஆண்டு பழமையான சமூகங்கள் பல்வற்றில் வெகு இயல்பாக காணலாம். யூத இலக்கியங்கள், பழைய கிருத்தவ இலக்கியங்கள், இந்திய இலக்கியங்கள் சில்வற்றிலும் இப்படியானக் குறிப்புகள் இருக்கின்றன. இதற்கு வாழும் சாட்சியாக பப்புவா நியு கினி நாட்டில் உள்ள பழங்குடி இனங்கள் வேற்றுக் கிராமங்களை சூறையாடுவதும், அவர்களின் பெண்களை அடிமைப் படுத்தும் நிலைகள் இருந்தன. ஏன் இதே மனோபாவம் பல ஆண்களிடம் நீக்கமற உள்ளூர கலந்துள்ளது. இதனால் தான் தனது இனத்து, குடும்பத்துப் பெண்களைப் பாதுகாக்க நினைக்கும் அதே வேளையில் வேற்று இன, குடும்பத்துப் பெண்ணிடம் பாலியல் சில்மிசம் செய்யும் நபர்களும் இன்றளவும் இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று நமது சமூகம் எதனை விபச்சாரம் என சொல்லுகின்றது. இன்று பலர் விபச்சாரம் என்றதும் பாலியல் தொழிலையேக் குறிக்கின்றார்கள். ஆனால் விபச்சாரம் என்பது திருமணத்துக்கு உட்பட்ட உறவில் இருந்து விலகி வேறு நபரோடு உறவாடும் நிலையே ஆகும். அப்படியான நிலைகளில் தந்தை வழி சமூகம் உலக்மெல்லாம் நிலைக் கொள்கின்றது, தந்தை வழி சமூகத்தில் பெண்ணானவள் வீடுகளுக்குள் முடங்கும் நிலையும், அல்லது ஆணுக்கு கீழே இருக்கின்ற நிலைமை வலுப் பெறுகின்றன. அப்படியான சூழலில் ஆண்கள் சிலர் அப்பட்டமாக மணம் மீறிய உறவுகளில் ஈடுபடுகின்றார்கள். பெண்களும் இப்படியான மணம் மீறிய உறவுகளில் ஈடுபட்டே வந்துள்ளனர். ஆனால் ஆண்களே அதிகமாக மணம் மீறிய உறவுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் தான், இந்த செய்கை வியாபார நிலையை அடைகின்றது. ஆண்களுக்குத் தேவையான பிற மகளிர் இல்லாமல் போகின்றார்கள். அதனால் இனங்கள் தமது இனத்துக்கு வெளியே இருந்து அடிமையாகக் கொண்டுவரப்பட்ட பெண்களை பாலியல் அடிமைகளாக்கி ஆண்களின் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பின்னர் பாலியல் அடிமைகளை வழிவழியாக அதே தொழிலினை செய்ய கட்டாயப் படுத்தப் படுகின்றார்கள். ஒரு பெண் பாலியல் அடிமை ஆனால் - அவளின் மகளும் அதே நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.

பரத்தையர் சேரிகள் உருவாகின்றன. ஆனால் ஆண்களின் தேவைக்கு ஏற்ற டிமாண்ட் இல்லாமல் இருந்தத்தால் - பெண்களை அடையும் போட்டி அதிகாமாகின்றன அதனால் அவளைப் உணவும், தானியமும், பொருளும் கொடுத்து அடைகின்றார்கள். இதுவே பிற்கால தேவதாசி முறைமைக்கு அடிவகுக்கின்றன. இதுவே ஒரு தொழிலாகவும் இது மாற்றமடையத் தொடங்குகின்றன. ஆண்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அத்தொழிலில் பல பெண்கள் பொருளியல், அரசியல் காரணங்களுக்காக இணைக்கப்படுகின்றார்கள். அதுவே பரத்தையர் சேரிகள் பல உருவாகின்றன. அக்காலக் கட்டத்தில் போர்கள் நடக்கும் போது விதவையானவர்கள், அடிமைகளாகப் பிடிக்கப் பட்டவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டோர் என அனைத்துப் பெண்களையும் பரத்தையர் சேரிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.ஆனால் பிற்காலங்களில் ஏற்பட்ட புதிய சிந்தனைவாதிகள் பாலியல் தொழிலில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டும், அதே நிலையில் மணமான பெண்களை ஆண்கள் விலக்கி வைத்துவிட்டு பாலியல் தொழிலாளர்களோடு இணையும் நிலையை மாற்ற - மண உறவில் தூய்மையையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டையும் வகுக்கின்றார்கள். இப்படியான சிந்தனையோட்டம் மனித குலத்துக்கே புதுமையான ஒன்றாகும். இவைகளை பெரும்பாலான கிமு 10 - 1 நூற்றாண்டுக்குள் எழுந்த இலக்கியங்கள் பலவற்றில் காணலாம். பௌத்த, சமண, யூத இலக்கியங்களில் கூட விபச்சாரத்தை கண்டித்து எழுதுகின்றார்கள். ஒரு ஆண் பெண் மணமாகி உறவாடினால் அவர்கள் ஒரே இறைச்சியாக இருப்பதாகவும், அவர்கள் விபச்சாரத் தன்மையோடு வாழக் கூடாது எனவும் விவிலியத்திலும் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எனப்பா ஒருத்தி அடுத்தவனிட்ட வருகிறாள்... லாஜிக் ....குடிக்க கூழு இல்லை.. உடுக்க துணியில்லை...பெரும்பான்மை இதுவே.. அவன் இவன் அவள் இவள் கள்ளகாதல் .. தினதந்தி 4 பக்கம் பூரா.. ரொம்ப சோகம்.. :( :( :( :( :(

டிஸ்கி:

நான் அரிப்பெடுத்த கோஸ்டிகளை சொல்லவரவில்லை....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல பெண்கள் அதிகமுள்ளக் கூட்டத்தில் ஆண்கள் குறைவாக இருக்கின்றார்கள். அங்கு வேறுவிதமான ஒரு வாழ்வியல் முறை உருவாகின்றது, ஆம் ! ஒரு ஆணுக்குப் பல பெண்களை மணக்கும் நிலைமை ஆகும். இந்த நிலைமை இன்றளவும் பல சமூகங்களில் தொடர்கின்றன. இன்றளவும் இஸ்லாமிய மற்றும் சில பழமைவாத தந்தைவழிச் சமூகத்தில் இந்நிலைக் காணப்படுகின்றது.பல பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரு ஆணுக்கு பல பெண்களை மணந்தார்கள். இதிலும் சிக்கல்கள் வரவே ஒரு ஆணுக்கு சகோதரிகளாகப் பிறந்தப் பெண்களை மணந்துக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் தான் இன்றளவும் நம் சமூகங்களில் பெரியப்பன், சிற்றப்பன், பெரியம்மை, சிற்றம்மை என விளிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் தான் அவர்களின் பிள்ளைகளை மணக்கக் கூடாது அவர்கள் சகோதரம் என்ற நிலையும் ஏற்பட்டது.

கோமகன், மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!

சில காலம் ஆபிரிக்க நாடொன்றில் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் ஒரு பாடசாலை பஸ் ஒன்று முழுவதும் ஐந்து வயதுக்கும் எட்டு வயதுக்கும் இடைப் பட்ட குழந்தைகளால் நிரம்பி வழிந்தது!

அவர்கள் அவ்வளவு பேரும் ஒரு chief (ஒரு இனத்தின் பரம்பரை முறைத் தலைவர்) உடைய குழந்தைகள்! நம்புவது கஷ்டம் ! குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய் மாரிடமே ஒப்படைக்கப் படும்!

இதனால் இந்த நாடுகளில் 'குழந்தை வேலைகள்" (child labour ) வளர்வதற்கு இதுவும் ஒரு காரணமாகின்றது! அனேகமாக எந்த ஆபிரிக்க நாடுகளிலும், சிறு குழந்தைகள் தலைகளில் தட்டுக்களைச் சுமந்த படி ஏதாவது விற்றுக் கொண்டு திரிவதைப் பார்க்கலாம்!!!

  • 3 weeks later...

விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் prostitution. ??

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் prostitution. ??

அதுதானே..!? :rolleyes:

Adultery என்பதற்கு களவொழுக்கம் போன்ற அர்த்தம்தானே வரும்?? :unsure:

  • தொடங்கியவர்

அதுதானே..!? :rolleyes:

Adultery என்பதற்கு களவொழுக்கம் போன்ற அர்த்தம்தானே வரும்?? :unsure:

இந்த சொல்லாடல் (ADULTERY) சரி என்றே நினைக்கின்றேன். களவொழுக்கம் = திருமணபந்த்திற்கு வெளியே சென்று தமது பாலியல் தேவைகளை தீர்த்துக்கொள்வது என்பது விபச்சாரமாகும். அறிந்தவர்கள் இதை செம்மைப்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்

விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் prostitution. ??

ஆங்கிலத்தில் இருவகையான சொல்லாடல்கள் இருக்கன்றன.ஒன்று புரிவதற்கு இலகுவான மொழிப்பிரையோகம் மற்றயது உயர்தர மொழிப்பிரையோகம். ஆங்கிலத்தில். மட்டுமன்றி எல்லா மொழிகளிலேயும் இந்தப் பயன்பாடு உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.உதாரணமாக்க் களவொழுக்கம் என்ற சொல்லடல் தமிழர் பண்பாட்டில் முன்பு இருந்தது, இப்பொழுது வழக்கொழிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே..!? :rolleyes:

Adultery என்பதற்கு களவொழுக்கம் போன்ற அர்த்தம்தானே வரும்?? :unsure:

களவொழுக்கம் என்பதற்கும் விபச்சாரத்திற்கும், மிகப் பெரிய இடைவெளி உண்டு!

தமிழ் இதிகாசங்களிலும், திருக்குறளிலும் களவொழுக்கம், கற்பொழுக்கம் என்று இரண்டு விதமான சொல்லாடல்கள் உபயோகிக்கப் படுகின்றன!

களவொழுக்கம் எனப்படுவது தலைவன், தலைவியைச் சந்திந்து அவர்களுக்கிடையே உருவாகும் தொடர்பு ஆகும்!

தோழியர் அனேகமாக இது பற்றி அறிந்திருப்பர்! ஆனால் மற்றையோருக்கு இது தெரிந்திருக்காது!

இருவரும் திருமணம் செய்து கொள்ளும்போது களவொழுக்க நிலையில் இருந்து, கற்பொழுக்க நிலைக்கு மாறுகின்றார்கள்!

விபச்சாரம் என்பதற்கும் களவொளுக்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை!

விபச்சாரம் செய்பவர்கள் தாசிகள் என அழைக்கப் பட்டனர்!

'சேலகற்றிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!'

என்று ஒரு பாடலின் இறுதியில் வருகின்றது!

சேல் என்பது கண்கள்! சேலகற்றிய மாதர்,விழிகளுக்கு மை பூசி அவற்றை நீளமாக்கிய மாதர்!

அனேகமாக விலை மாதரை இது குறிக்கலாம் என்பது எனது கருத்து!!!

செம்மைப்படுத்தியதிற்கு நன்றிகள் புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. களவொழுக்கம் என்றால் தலைவன் தலைவியை டேட்டிங் பண்ணுவதா? :unsure: அப்பிடியெண்டால் நாங்கள் எல்லோரும்தான் களவொழுக்கம் புரிந்திருக்கிறோம்..! :lol:

Adultery என்றால் திருமணத்திற்குப் பிற்பாடு வெளியே சென்று உறவு வைத்துக்கொள்வது.. :rolleyes:

கூகிளாண்டவர் சொல்வது: :huh:

voluntary sexual intercourse between a married person and someone other than his or her lawful spouse.

http://dictionary.reference.com/browse/adultery

அதே தான் இசை!

துஷ்யந்தன் சகுந்தலையுடன் குலாவியது, களவொழுக்கம்!

இந்திரன், அகலிகையுடன் குலாவியது தான் நீங்கள் சொன்ன 'கூகிள்' வரைவிலக்கணம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

adultery என்றால் வன்புணர்ச்சி என்ற அர்த்தமும் வரும் என நினைக்கின்றேன்!

முன்பு இரு அரசியல்வாதிகளுக்கில் சிறு உரசல் ஏற்பட்டபோது ஒருத்தரப் பார்த்து மற்றவர் " you are living tha monuments of western adultery" ( மேல்நாட்டினறது வன்புணர்வின் ஞாபகச் சின்னமாய் நீ வாழ்கிறாய்) என்று சொன்னதாக கதைத்தார்கள்.

அதே தான் இசை!

துஷ்யந்தன் சகுந்தலையுடன் குலாவியது, களவொழுக்கம்!

இந்திரன், அகலிகையுடன் குலாவியது தான் நீங்கள் சொன்ன 'கூகிள்' வரைவிலக்கணம்!!!

துஷ்யந்தன் - சகுந்தலைக்கிடையிலானது கந்தர்வம் - மனம் முடிக்க முன் உறவு கொள்வது. இருவரும் மணமுடிக்கவில்லை.

இந்திரன் - அகலிகை - சரி -களவொழுக்கம்

விபசாரம் - பணத்துக்காக உறவு கொள்வது.

adultery என்றால் வன்புணர்ச்சி என்ற அர்த்தமும் வரும் என நினைக்கின்றேன்!

முன்பு இரு அரசியல்வாதிகளுக்கில் சிறு உரசல் ஏற்பட்டபோது ஒருத்தரப் பார்த்து மற்றவர் " you are living tha monuments of western adultery" ( மேல்நாட்டினறது வன்புணர்வின் ஞாபகச் சின்னமாய் நீ வாழ்கிறாய்) என்று சொன்னதாக கதைத்தார்கள்.

வன்புணர்ச்சி என்பது rape . adultery என்பது தமது திருமணங்களுக்கு வெளியே கள்ளத்தொடர்பு. பண்பாகச்சொன்னால் களவொழுக்கம்.

Edited by Eas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Adultery க்காக பணம் கொடுக்கப்பட்டால் அது prostitution.

அங்கீகரிக்கப்படாத ஒரு உறவுக்கு பணம் கொடுக்கப்பட்டால் அது விபச்சாரம். எதிவீட்டு பையனுக்கும் பக்கத்துக்கு வீட்டு ஆண்டிக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு எப்படி விபச்சாரம் ஆகும்?

இந்தக் களவொழுக்கத்திற்குப் பணம் தான் அடிப்படையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் களவொழுக்கத்திற்குப் பணம் தான் அடிப்படையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

கோமகன் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் உங்களது "விபசாரத்துக்கு சரியான ஆங்கில பதம் Adultery " என்பது தவறு என்பதுதான். முதலில் அதனை மாற்றுங்கள்.

பணம் அவசியமா இல்லையா என்பது வேறு கேள்வி... எங்கு பணம் இல்லாமல் விபச்சாரம் நடக்குது?

களவொழுக்கத்திற்கு ஆங்கிலத்தில் 'illicit romance ' எனும் சொற்பதமும் பாவிப்பார்கள்.

'விபச்சாரம்' என்பது ஒரு பெண்ணோ ஆணோ தனது வாழ்நிலைக்காக தனது உடலை விற்பது.

உதாரணமாக

'வன்னியில் 200 ரூபாவிற்கு பெண்கள் எடுக்கலாம்' என்று சிங்களப் மேசன்கள் கூறுவதாக இங்கு ஒரு பதிவைக் கண்டேன். அந்தப் பெண் தனது விருப்பமில்லாமல் பொருளுக்காய் தன்னை விற்கும் நிலை - இது விபச்சாரம்.

இந்திரன், துஷ்யந்தன், அகலிகை சகுந்தலை போன்ற தினவெடுத்த வட இந்தியர்களின் களவொழுக்கம் வேறானவை. தனது வாழ்க்கைக்காக மற்றவர்களைப் பாவிப்பது.

சமீபத்திய உதாரணம் காந்திய தேசம்.

Edited by thappili

  • தொடங்கியவர்

கோமகன் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் உங்களது "விபசாரத்துக்கு சரியான ஆங்கில பதம் Adultery " என்பது தவறு என்பதுதான். முதலில் அதனை மாற்றுங்கள்.

பணம் அவசியமா இல்லையா என்பது வேறு கேள்வி... எங்கு பணம் இல்லாமல் விபச்சாரம் நடக்குது?

எனக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளேன். ADULTERY க்கு என்ன தமிழ் மொழிபெயர்ப்பு என்பதும் இந்தப் பதிவின் நோக்கம் இல்லை. நீங்கள் குறிப்பிட்டபின்பு இணையத்தில் தேடினேன்.இந்த இணைப்பு இவ்வாறு ADULTERYஐ நெறிப்படுத்துகின்றது. ADULTERY = கூடா ஒழுக்கம், பிறர்மனை நயத்தல், விபச்சாரம், சோரம்.கருத்திற்கு நன்றிகள் சும்மா.

http://www.dictionary.tamilcube.com/index.aspx

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரம் பணத்துக்காக பாலியல் வியாபாரம் செய்தல் என்பது பொதுவான ஒரு நிலைப்பாடு.

இந்தியாவில் சுமார் 30 மில்லியன் பெண்கள் அதாவது 3 கோடிப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கை தரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நாடுகளில் இந்தியா உலகில் 4 ம் இடத்தில் உள்ளது.

இதுக்கு மேலதிகமாக.. இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி ஒரு ஆண் 7 மனைவிகள் அமைக்க முடியும் என்று 7 பெண்களின் வாழ்வை சீரழிப்பதும்..

இந்து மத கொள்கைகளின் படி கண்ணனுக்கு சேவை.. என்று சொல்லி தேவதாசிகள்.. முறைகளை அறிமுகம் செய்து.. சிறுமிகளைக் கூட கட்டாய விபச்சாரத்துக்குள் தள்ளி வருகின்றனர்.

இதனைத் தவிர.. விபச்சாரிகளை வைத்து தொழில் செய்து பிழைக்கும் பெரிய வியாபாரிகளும் இந்தியாவில் உள்ளனர்.

விபச்சாரிகளை.. நடிகைகளை விபச்சாரிகளாக்கி.. அரசியல்வாதிகளை மயக்கிப் போடும்.. மந்திரங்களும் இந்தியாவில் தாராளம்.

அந்த வகையில் விபச்சாரம் என்பது.. பணத்துக்கான உடற் சேவை மட்டுமல்ல.. அரசியலுக்கான உடற் சேவையும் கூட. இதெல்லாம் ஒரு பிழைப்பு உலகத்தில..! :unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக

'வன்னியில் 200 ரூபாவிற்கு பெண்கள் எடுக்கலாம்' என்று சிங்களப் மேசன்கள் கூறுவதாக இங்கு ஒரு பதிவைக் கண்டேன். அந்தப் பெண் தனது விருப்பமில்லாமல் பொருளுக்காய் தன்னை விற்கும் நிலை - இது விபச்சாரம்.

இந்த கருத்தை கண்டிக்கின்றேன்.

வன்னிநிலையை,

எதை வைத்தும் விபச்சாரத்துடன் ஒப்பிடுவதை ஆட்சேபிக்கின்றேன்.

அது இவற்றையெல்லாம் கடந்தது.

அவர்களுக்கான உதவும் வழிகள் இருந்தும், உழைத்துவாழ அவர்கள் விரும்பியும், கட்டாயத்தின் காரணமாகவும், இன அழிப்பின் ஒரு அங்கமாகவும் இடம்பெறும் இவற்றை வெறும் விபச்சாரம் என்பதற்குள் திணிப்பதை ஏற்கமுடியாது. நிர்வாகம் இதை கவனத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

Edited by விசுகு

வறுமையில் வாடும் பெண்கள் வேறு வழியின்றியே தங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் அது என்பதற்காகவே எழுதப்பட்டது.

வேறு உதாரணம் காட்டியிருக்கலாம். குறிப்பாக வன்னியை குறிப்பிட்டதன் காரணம் தற்சமயம் எங்கள் உறவுகளின் இந்த இழிநிலையை கண்டும் உதவிகள் செய்யாமல் பாராமுகமாக இருப்பவர்கள் உணரட்டும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாக சொல்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன, ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.. அதன் பெயர்தான் விபச்சாரம்.

- விக்டர் ஹ்யூகோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.