Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

கோமகன் அண்ணா நெருஞ்சியை தொகுத்து வழங்கும் அழகே தனி. தொடரட்டும் உங்கள் தொடர் :)

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply

கோமகன், உங்கள் நெருஞ்சி நன்றாகவே நெருடுகிறது.

எனக்கும் சில சமயங்களில், நீண்ட காலம் விட்டுப்போன உறவுகளை சந்திக்கும் பொது ஒருவிதமான உளைச்சல் இருந்ததுண்டு. நீங்கள் அதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சி சிலநேரங்களில் குற்ற உணர்வைத்தூண்டும். எம்மில் பலருக்கு உள்ள சாபக்கேடு தான்.

  • தொடங்கியவர்

கோமகன், உங்கள் நெருஞ்சி நன்றாகவே நெருடுகிறது.

எனக்கும் சில சமயங்களில், நீண்ட காலம் விட்டுப்போன உறவுகளை சந்திக்கும் பொது ஒருவிதமான உளைச்சல் இருந்ததுண்டு. நீங்கள் அதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சி சிலநேரங்களில் குற்ற உணர்வைத்தூண்டும். எம்மில் பலருக்கு உள்ள சாபக்கேடு தான்.

மிக்க நன்றிகள் எஸ் , தமிழினி உங்கள் கருத்துகளுக்கு . உண்மைதான் எஸ் , நீண்டகாலப்பிரிவும் , அதில் வரும் வெறுமையும் ஒருவரை மனரீதியாக அதிர்வுகளையும் வலியையும் ஏற்படுத்தவல்லது . வெளிப்படைதான் எனது முதல் விருப்பம் , அதனால் தொடர்பாடலில் மனவலி குறையும் என்று ஒரு சிறிய நப்பாசை :) :) :) .

  • தொடங்கியவர்

நான் அடுத்த தொடரில் சொல்ப்போகின்ற செய்திக்கு அனுசரணையாக நீலப்பறவை உதவி செய்திருக்கிறார் :) :) . படங்கள் போடும் வேலை மிச்சம் . ஆனால் , எனது செய்தி எனது பாணியில் இருக்கும் . மிக்க நன்றிகள் நீலப்பறவை :) :) .

நீலப்பறவை இணைத்த கட்டுரை தனியான தலைப்பாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93407

- இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

Blubird! நல்ல ஒரு பதிவு..நன்றி இணைப்பிற்க்கு.. இதை நீங்கள் தனித்திரியாக இணைத்திருக்கலாம்..இன்னொருவரின் பதிவிற்க்குள் செருகும்போது தொடர்ச்சியாக பார்ப்பதற்க்கு ஒருவித குழப்பமாக(மெஸ் அப்)இருக்கிறது..

  • தொடங்கியவர்

24824510150216774298118.jpg

கடைவாசலில் கடல் காத்துத் தென்றலாக வீசியது , நடந்து வந்த வியர்வைக்கு இதமாக இருந்தது . ஆவிபறக்கும் தேத்தண்ணியையும் ,றோல்ஸ்சையும் உள்ளே தள்ளினோம் .வெளியே சிறிது தூரத்தில் பஸ்ராண்ட் தனது பரபரப்புகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருந்தது . குடிமகன்கள் தங்கள்பாட்டிற்கு தமிழை வளர்த்துக் கொண்டு கடைவீதியால் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலரில் இன்றைய சூழ்நிலையின் மனவெக்கை போதையினூடாக வாயால் வெளிவந்து கொண்டிருந்தன. அவர்களைப் பார்கும்பொழுது பாவமாக இருந்தாலும் , கிடைக்கின்ற சிறிய வருமானத்தை இப்பிடி அனியாயமாக்குகின்றார்களே என்று கோபம் கோபமாக வந்தது . ஆனால் எனது மனமோ என்னிடம் சண்டை பிடித்தது .< நீ என்ன பெரிய திறமா ? நீயும் கடையில வந்து ரீயும் றோல்ஸ்சும் சாப்பிடுறாய்தானே > என்றது. நானும் அதனுடன் சமரசம் செய்துகொண்டிருந்தேன் . எனது சிந்தனையை கடைப் பெடியனின் குரல் கலைத்தது.

" என்ன அண்ணை யோசினை? எப்ப போறியள் "?

நான் சிரித்தேன் .

"உங்களிட்டை ஒண்டு கேக்கவேணும் எண்டு இருந்தனான் ".

"சொல்லும்".

"இல்லையண்ணை வெளீல வந்தால் நல்லாய் உளைக்கலாமே"?

"ஏன் இப்ப உமக்கு என்ன பிரச்சனை? கடை நல்லாத்தானே போகுது"?

"போகுதுதான் அண்ணை காசு மிச்சம் பிடிக்கேலாமல் இருக்கு".

" தம்பி சொன்னால் கோபிக்கக் கூடாது இருக்கிறதை விட்டுட்டு இல்லாததிற்கு பறக்கக் கூடாது . இங்கை உமக்கு வருமானம் கொஞ்சமாய் இருந்தாலும் , நீர் நல்ல சந்தோசமாய் உம்மடை ஆக்களோட இருக்கிறீர். இதுகளைக் கெடுக்காதையும் , இந்தக் கடையை இன்னம் கொஞ்சம் திருத்தும் , மாமாவோடையும் கதையும் , நான் முடிஞ்ச உதவியை செய்யிறன் ".

"அண்ணை என்னம் ஒரு ரீயும், றோல்ஸ் உம் எடுங்கோ".

" நான் காசு தருவன் ஓசி தீன் எனக்கு வேண்டாம்".

" சரி அண்ணை".

017vc.jpg

இடையில் என்னை வெட்டிக் கொண்டு போன மச்சான் கையில் கிங்பிக்ஷர் உடன் வந்தார் . நாங்கள் காசைக் குடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறினோம். நன்றாக இருட்டி விட்டிருந்தது . அன்று அம்மன் கோயில் திருவிழா கடைசி நாள் ஆனபடியால் அம்மன் றோட்டால் வீதிவலம் வந்து கொண்டிருந்தா. 3 கூட்டம் மேளச்சமா நடந்து கொண்டிருந்தது . நாதஸ்வரம் வாசிப்பவர்கள் குறையொன்றும் இல்லைக் கண்ணாவை உருக்கிக் கொண்டிருந்தார்கள் . நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மேளச்சமாவைப் பார்த்ததால் சுவாரசியமாக நின்று பார்த்தேன் . சிறு வயதில் பத்மநாதனின் நாதஸ்வரக்கச்சேரி முன்வரிசையில் சப்பாணிகட்டிக்கொண்டு இருந்து பாத்தது ஞாபகம் வந்தது . இரவு குறூப் பாட்டுக்காறர் வரும் வரைக்கும் இந்தக் கச்சேரிகள் தான் நடக்கும் . ஆனால் எனக்கு இதுகள்தான் விருப்பம் . குறூப் மேடை ஏற முதல் மைக் ரெஸ்ரிங் எண்டு ஒருமணித்தியாலத்துக்குக் கிட்ட அலப்பரை பண்ணுவினம் . இதுக்குள்ளை ஊரில கொஞ்சம் பெரியாக்கள் எண்டு சொல்லுறவை மேடையில போய் வயர் எடுத்துக் குடுப்பினம் . மைக்கை நேராய் பிடிச்சு வைப்பினம் . நோக்கம் என்னவெண்டால் ஆரும் பொம்பிளையள் தங்களைப் பாக்கினமோ எண்டதுதான். இந்த அலப்பலுகளிலை எங்களுக்கு நித்திரை வந்துவிடும் . இருந்தால்போல அமுதன்அண்ணாமலை < முருகனைக் காண > எண்டு தொடங்க நாங்கள் நித்திரை முறிஞ்சு எழும்புவம் . அவைகள் எனக்கு தூரத்தே தொலைந்த கனாக்காலமாகவே போய்விட்டன . நாங்கள் சனத்துக்குள்ளாலை முண்டியடித்துக் கொண்டு அம்மனுக்கு முன்னால் போனோம் . அங்கே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினார்கள் , பார்க்க சுவாரசியமாக இருந்தது . மரணத்தின் எல்லையை ருசித்து வாழ்ந்திருந்தாலும் , கிராமியக்கலைகளை ஊக்கிவிப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடயம் . என்றுமில்லாதவாறு நான் அம்மனைக் கையெடுத்துக் கும்பிட்டேன் . மச்சான் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார் . அம்மன் கல்லூரி வீதியில் திரும்பியதும் , நாங்கள் ஒடக்கரை ஒழுங்கையால் நடையைக் கட்டினோம் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது மாமா வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது . நான் யாராய் இருக்கும் என்று அங்கு நேரடியாகப்போனேன் . அங்கே அன்று வந்த மாமி மாமாவுடன் வெத்திலை போட்டுக்கொண்டு கதைத்துக் கொண்டிருந்தா . என்னைக் கண்டதும் ,

"வாங்கோ தம்பி உங்களைப் பாப்பம் எண்டு ஒரு எட்டு எட்டிப்பாத்தன் ".

"சாப்பிட்டியளோ மாமி ? அதெல்லாம் சாப்பிடலாம் , இந்தாங்கோ தம்பி நீங்கள் கேட்ட மூடுபெட்டி கொட்டப்பெட்டி ".

22796710150170902971496.jpg

நான் ஆச்சரியத்தடன் அவற்ரைப் பாத்தேன். மிகவும் கலைநயத்துடன் பின்னியிருந்தா மாமி.எனக்கு நெகிழ்சியாக இருந்தது .நான் போக்கடி போக்காகச் சொன்னதை , சிரத்தையுடன் பின்னி எனக்குத் தந்த அந்த மாமி உண்மையிலேயே என்மனதில் உயர்ந்து நின்றா . அன்ரி எல்லோருக்கும் கல்லு றொட்டியும் இடிச்ச சம்பலும் செய்திருந்தா . நாங்கள் எல்லோரும் முற்ரத்தில் இருந்து நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டோம். மறுநாள் காலை வல்லிபுரக் கோயிலுக்குப் போக முடிவு செய்ததால் வெள்ளனப் படுத்து விட்டோம் . நான் வழமைபோல நாலுமணிக்கே எழுந்து விட்டேன் . விடிய 6 மணிக்கு வல்லிபுரக்கோயிலுக்கு பஸ் பிடிக்க நாங்கள் பஸ்ராண்டை அடைந்தோம் . பஸ்ராண்டில் அரைமணிக்கொரு தரம் பொற்பதி பஸ் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் என்று சொன்னார்கள். நாங்கள் நேரம் இருந்ததால் அங்கேயே நின்று பஸ்ராண்டை வேடிக்கை பார்த்தோம் . கொழும்பில் இருந்து ஒரு பஸ் இரைச்சலுடன் அங்கே நுளைந்தது . பஸ்ராண்ட் காலை நேரம் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது . கடல் காத்து மெதுவாக ஈரலிப்புடன் வீசிக்கொண்டிருந்து . தூரத்தே பொற்பதி செல்லும் பஸ் வந்து கொண்டிருந்தது . அன்று ஞாயிற்ருக்கிழமை என்பதனால் வல்லிபுரத்தானுக்குக் கூட்டம் நிறையவே இருந்தது . பஸ் நின்றதும் நாங்கள் ஏறி வசதியான இடத்தில் இருந்து கொண்டோம் . ஒடுங்கிய வீதியால் பஸ் வல்லிபுரக்கோயிலை நோக்கி ஓடியது . நான் சிறு வயதில் பள்ளிக்கூடச் சுற்றுலாவில் வந்ததிற்குப் பின்பு இங்கு வரவல்லை . நீண்டகாலம் பாதுகாப்பு வலயத்திற்குள் வல்லிபுரத்தான் இருந்து இப்பொழுதுதான் அந்த மாயவனும் மக்களைச் சந்திக்கின்றான் . பஸ் குடந்தனை , தும்பளை எல்லாவற்ரையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது அனேகமானோர் கோயிலுக்கே பயணமாகிக் கொண்டிருந்தனர். பஸ் பொட்டல் வெளிகளைத் தாண்டி கோயிலை அண்மித்ததிற்கு அடையாளமாக , தூரத்தே ராஜகோபுரம் நிமிர்ந்து நின்றது. எங்களை வல்லிபுரக் கோயில் முன்றலில் இறக்கிவிட்டு பஸ் அதன் பயணத்தைத் தொடர்ந்தது . நான் கோயிலின் சுற்றாடலை நன்றாக அவதானித்தேன் . அந்த அதிகாலைவேளையில் வல்லிபுரத்தான் அமைதியாக இருந்தான் . தூரத்தே அலையோசை தாலாட்டியது மனதுக்கு இதமாக இருந்தது . நாங்கள் எல்லோரும் செருப்புகளை கடையில் வைத்து விட்டு கேணியில் கால் கழுவப் போனோம் . பின்பு பிள்ளையார் கோயிலுக்குள் நுளைந்து விட்டு, வல்லிபுரத்தானைத் தரிசிக்க ராஜகோபுரத்தினூடாக உள்ளே நுளைந்தோம்.

26400621903500480006410.jpg

உள்வீதியில் முருகதாஸ் அலைபாயுதே கண்ணாவை மெதுவா குரலில் உருக்கினார். கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் புதுப்பொலிவுடன் கம்பீரமாக இருந்தது. உள்ளே கோயில் விதிப்படி வெறும் உடம்புடன நின்றது எனக்குச் செரியான வெட்கமாக இருந்தது . நான் முன்பு பார்த்த அதே அமைதியுடன் வல்லிபுரத்தான் அனந்தசயனம் கொண்டு கொண்டிருந்தான் . நாங்கள் உள்வீதி சுத்திவரும் பொழுது பல புராணக்கதைகள் சித்திரங்களாக உயிர்த்துக் கதை பேசின. நான் அவற்ரில் லயித்துக் கொண்டு வந்தேன் . நாங்கள் கும்பிட்டு விட்டு வெளியே வரமுதல் எனது மனைவி எனக்குத் தெரியாமல் கோயில் உண்டியலுக்குள் காசு போடுவதை கண்டும் காணமல் வந்தேன் . கோயிலை விட்டு வெளியில் நடந்தபொழுது கீழே இருந்த குருமண்ணினால் கால்கள் குறுகுறுத்தன . இப்பொழுது நன்றாக நிலம் வெளித்திருந்தது . எங்களுக்கு அருகே ஒரு வயதுபோன முதியவர் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் என்னைப்பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அவர் பிச்சைக்காறர்களுக்கு உரிய தோற்ரத்தில் இல்லாவிட்டாலும் , போரின் ரணத்தின் வலி அவரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது . அவரின் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது . ஒரு நிமிடம் எனது இதயம் நின்று ஓடியது . எனது கை தானாகவே பொக்கற்ரைத் தேடியது . எனது கையில் அகப்பட்ட தாள்களை அவரின் கையில் திணித்தேன் . அவரின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை . வல்லிபுரத்தான் என்னைக் கட்டாயம் மன்னிப்பான் என்று எனக்குத் தெரியும் .நான் கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கியபொழுது , ஒரு ஆச்சி எனது கண்ணில் பட்டா . ஆச்சி ஒரு கையில் அலுமீனியத்தட்டை ஏந்திக்குலுக்கியவாறே , யாருடனோ கைத்தொலைபேசியில் நன்றாக கடலை போட்டுக்கொண்டிருந்தா . நான் அவாவைக் கடந்தபொழுது ,

img0757wv.jpg

" தம்பி என்னையும் கவனியுங்கோவன் ".

நான் காதில் விழுத்தாத மாதிரி மனைவியுடன் கதைத்தவாறே நடந்தேன் . என்மனமோ கொதிகலனாகியது . என்ன மனிதர்கள் இவர்கள் . <அறம் என்பது விரும்பி இடுவது அதை வலியுறுத்திக்கேட்பது அடாவடித்தனம் > என்று எனது மனம் என்னுடன் தத்துவவிசாரணை செய்தது . நாங்கள் பஸ்சுக்காக காத்திருந்தோம் . எனக்கோ நடந்த நிகழ்சிகள் தலை இடியைத் தந்தன .ஒரு இஞ்சி தேத்தண்ணி அடித்தால் நன்றாக இருக்கும் என்று மனம் உணர்தவே , பக்கத்தில் இருந்த தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணியம் வடையையும் வாங்கிக்கொண்டேன் . வடையும் தேத்தண்ணியும் நன்றாக இருந்தது . பொக்கற்ரில் இருந்து சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டேன் . சிகரட் புகையினூடாக எனது கண்ணும் காரணமின்றி முட்டியது .

29178718423858832326717.jpg

அம்மாவின் பிரிவை மறைக்க வேறுவழிகளை நாடுகின்றேனோ ? ஏன் இப்படி இருக்கின்றேன் ? ஒருவேளை அம்மாவிற்குப் பக்கத்தில் நான் இருந்திருந்தால் , அம்மாவின் பிரிவுக்கான புரிதல் கூடதலாக எனக்கு இருந்திருக்குமோ ? அதனால் தானோ தங்கைச்சி என்னைக் கண்டவுடன் குளறி அழுதாளோ ? எனது மனம் பலவாறாக அலைபாய்ந்த பொழுது , பஸ் வந்து நின்றது . நாங்கள் எல்லோரும் ஏறிக்கொண்டோம் . இந்தமுறை பஸ் தனது பாதையை மாற்றிக்கொண்டு போனது எனக்குத் தெரிந்தது . எங்களது பஸ் ஆனைவிழுந்தான் சந்தியால் திரும்பி பருத்தித்துறையை நோக்கி விரைந்தது . இந்த ஆனைவிழுந்தான் சந்தியில் வைத்துத்தான் , அப்பொழுது பரபரப்பாகப் பேசப்பட்ட கமலம் கொலை வழக்கில் கமலம் கொலைசெய்யப்படார் . நாங்கள் இந்தக்கொலை வழக்கை ஒவ்வொரு நாளும் மித்திரன் பேப்பரில் அடிச்சுப்பிடிச்சுப் படிப்போம் . பருத்திதுறைக்கோட்டில் நடந்த வழக்கைப் பாக்கவே சனம் அப்ப அள்ளுப்பட்டுது . ஒரு கொலைக்காக அந்த நாளில் பரபரப்பான மக்கள் , இன்று கொலைகளே நித்திய வாழ்கையானது அவர்களுக்குப் பழகி உறை நிலைக்குப் போய்விட்டர்கள் . பஸ் இப்பொழுது சிவன்கோயிலடியால் திரும்பி வேகமெடுத்து , பருத்தித்துறை பஸ்ராண்டில் தன்னை நிலைப்படுத்தியது .

தொடரும்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

மனசை தொட்டுசெல்கிறது நெருஞ்சி .................போரின் வடுக்களாக கால் இழந்த வர்

கேட்டு பிச்சைவாங்கும் ( தொலைபேசி ) பெண்.

தொடருக்கு நன்றி கோ.அண்ணா. அதென்ன கல்லு ரொட்டி? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்று மிக்க நன்றிகள் கோமி அண்ணா....அதெப்படி அன்றாடா வாழ்வாதரத்துக்கே கஸ்ரப்படும் ஒருவரிடம் கைத் தொலைபேசி...........???இப்படியானவர்களின் செயல்களால் உண்மையாக கஸ்ரப்படும் ஒருவருக்கு கூட உதவுறதுக்கு மனம் வராது இல்லையா...?

  • தொடங்கியவர்

மனசை தொட்டுசெல்கிறது நெருஞ்சி .................போரின் வடுக்களாக கால் இழந்த வர்

கேட்டு பிச்சைவாங்கும் ( தொலைபேசி ) பெண்.

மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா . உங்கள் கருத்துப்பதிவுகளுக்கு அவர்கள் பிச்சைக்கறர்கள் இல்லை . போரும் அதன் எதிர்வினையும் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் வீதிக்கு வந்ததின் முக்கியகாரணம் . அதன் மனவெக்கிராணம்தான் கண்ணில்வழிந்த கண்ணீர் :( :( :( .

  • தொடங்கியவர்

தொடருக்கு நன்றி கோ.அண்ணா. அதென்ன கல்லு ரொட்டி? :rolleyes:

மிக்க நன்றிகள் தமிழினி . கோதுமை மாவுடன் தேங்கய் பூ துருவலும் சேர்த்து குழைத்த ஊறிய மாவை , வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுப்பது கல்லுறொட்டி . இதற்குத் தோடை பொரித்த இடிச்ச சிவப்பு சம்பல் . இது வடமராட்சிப் பக்கம் பிரபல்யமானது :) :) :) :) .

மிக்க நன்றிகள் தமிழினி . கோதுமை மாவுடன் தேங்கய் பூ துருவலும் சேர்த்து குழைத்த ஊறிய மாவை , வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுப்பது கல்லுறொட்டி . இதற்குத் தோடை பொரித்த இடிச்ச சிவப்பு சம்பல் . இது வடமராட்சிப் பக்கம் பிரபல்யமானது :) :) :) :) .

நாமும் இதே முறையில் செய்து ரொட்டி சாப்பிடுவதுண்டு.....ஆனால் கல்லு ரொட்டி என்ற பெயரை இன்று தான் கேள்விப்பட்டேன். தகவலுக்கு நன்றி கோ.அண்ணா :)

Edited by தமிழினி

  • தொடங்கியவர்

ஆக்கத்திற்று மிக்க நன்றிகள் கோமி அண்ணா....அதெப்படி அன்றாடா வாழ்வாதரத்துக்கே கஸ்ரப்படும் ஒருவரிடம் கைத் தொலைபேசி...........???இப்படியானவர்களின் செயல்களால் உண்மையாக கஸ்ரப்படும் ஒருவருக்கு கூட உதவுறதுக்கு மனம் வராது இல்லையா...?

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் கருத்துப்பகிர்வுக்கு . கைத்தொலைபேசி ஆச்சி , சந்தனம் மெத்திய உயர்தொழில்நுட்ப பிச்சைக்காறி . இவர்களுக்கு காசு சேர்பது ஒரு பொழுதுபோக்கு . உறவினர்கள் யாராவது வெளியில் இருப்பார்கள் . நானறிந்தவரையில் ஒரு கைத்தொலைபேசி பத்தாயிரம் ரூபாய்களுக்கு குறைய இல்லை . இதை நான் கற்பனைக்கு எழுதவில்லை, கண்ணால் கண்டதையே எழுதினேன் :) :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோ

வாசிக்க ஆவலாக உள்ளது.

ஒரு சிறு மனத்தாங்கல். தெரிந்து நீங்கள் செய்யவில்லை என்பது பல தடவை நான் சுட்டிக்காட்டியும் மாறாததால் தெரிகிறது. இதையும் மாற்றிக்கொள்ளுங்கள் முடிந்தால். நன்றி.

மாற்ரி = மாற்றி

பற்ரி = பற்றி

வற்ரி = வற்றி

அவற்ரை = அவற்றை

முற்ரத்தில் = முற்றத்தில்

சுற்ருலா = சுற்றுலா

சுற்ராடல் = சுற்றாடல்

அவற்ரில் = அவற்றில்

தோற்ரத்தில் = தோற்றத்தில்

சிகரெட் ஒன்றைப்பற்ர = சிகரெட் ஒன்றைப்பற்ற

இளம் சமூகம் இதனையே தொடர்ந்து விடும் என்ற அவாவில்தான் எழுதுகின்றேன். நன்றி.

  • தொடங்கியவர்

தொடருங்கள் கோ

வாசிக்க ஆவலாக உள்ளது.

ஒரு சிறு மனத்தாங்கல். தெரிந்து நீங்கள் செய்யவில்லை என்பது பல தடவை நான் சுட்டிக்காட்டியும் மாறாததால் தெரிகிறது. இதையும் மாற்றிக்கொள்ளுங்கள் முடிந்தால். நன்றி.

மாற்ரி = மாற்றி

பற்ரி = பற்றி

வற்ரி = வற்றி

அவற்ரை = அவற்றை

முற்ரத்தில் = முற்றத்தில்

சுற்ருலா = சுற்றுலா

சுற்ராடல் = சுற்றாடல்

அவற்ரில் = அவற்றில்

தோற்ரத்தில் = தோற்றத்தில்

சிகரெட் ஒன்றைப்பற்ர = சிகரெட் ஒன்றைப்பற்ற

இளம் சமூகம் இதனையே தொடர்ந்து விடும் என்ற அவாவில்தான் எழுதுகின்றேன். நன்றி.

நன்றிகள் விசுகர் . இதில் எனக்கு எப்பவுமே குளப்பம் தான் . ஏனெனில் ரா வுக்கும் றா வுக்கும் இலக்கணரீதியாகப் பிரையோகங்கள் வேறுபடும் என நினைக்கின்றேன் . உதாரணமாக சுற்ராடல் = சுற்றாடல் . ஆனாலும் இது சம்பந்தமாகத் இலக்கணம் தெரிந்தவர்களுடன் தொடர்பு கொள்கின்றேன் :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயினும் இருவருக்கும் சரியானவை கிடைக்கட்டுமே.

கேள்வி எழுப்புவதானாலேயே தெளிவு வர வாய்ப்புண்டல்லவா?

  • தொடங்கியவர்

அப்படியாயினும் இருவருக்கும் சரியானவை கிடைக்கட்டுமே.

கேள்வி எழுப்புவதானாலேயே தெளிவு வர வாய்ப்புண்டல்லவா?

உண்மைதான் விசுகர் . கேள்விகள் தான் ஒருவரை பண்படுத்தி தவறுகளை செப்பனிடவைக்கும் , இதில் மாற்ருக்கருத்திற்கு இடமில்லை :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் யாயினி உங்கள் கருத்துப்பகிர்வுக்கு . கைத்தொலைபேசி ஆச்சி , சந்தனம் மெத்திய உயர்தொழில்நுட்ப பிச்சைக்காறி . இவர்களுக்கு காசு சேர்பது ஒரு பொழுதுபோக்கு . உறவினர்கள் யாராவது வெளியில் இருப்பார்கள் . நானறிந்தவரையில் ஒரு கைத்தொலைபேசி பத்தாயிரம் ரூபாய்களுக்கு குறைய இல்லை . இதை நான் கற்பனைக்கு எழுதவில்லை, கண்ணால் கண்டதையே எழுதினேன்.

நீங்கள் சொல்வது புரிகிறது கோமி அண்ணா..வெளி நாட்டு பணத்தில் ஒருவர் இரண்டு கைத் தொலைபேசிகள் வைச்சு இருக்கிறததையும் நான் அறிஞ்சு இருக்கிறன்..

தொடருங்கள் கோமகன்!

குடிமகன்கள் தங்கள்பாட்டிற்கு தமிழை வளர்த்துக் கொண்டு கடைவீதியால் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஒருசிலரில் இன்றைய சூழ்நிலையின் மனவெக்கை போதையினூடாக வாயால் வெளிவந்துகொண்டிருந்தன. அவர்களைப் பார்கும்பொழுது பாவமாக இருந்தாலும் , கிடைக்கின்ற சிறிய வருமானத்தை இப்பிடி அனியாயமாக்கின்றார்களே என்று கோபம் கோபமாக வந்தது .

ஆனால் எனது மனமோ என்னிடம் சண்டை பிடித்தது .< நீ என்ன பெரிய திறமா ? நீயும் கடையில வந்து ரீயும் றோல்ஸ்சும் சாப்பிடுறாய்தானே > என்றது.

ஏன் உங்கள் மனம் இதைப் பற்றிச் சண்டை பிடிக்கவில்லை...................பொக்கற்ரில் இருந்து

சிகரட் ஒன்றைப் பற்ர வைத்துக்கொண்டேன் . சிகரட் புகையினூடாக எனது கண்ணும் காரணமின்றி முட்டியது .

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் தொடரில் ரா..றா மட்டுமல்ல பருத்தித்துறை பரித்தித் துறை என்றும் எழுதுகிறீர்கள். அந்த துறை முகத்தில் பண்டைய காலத்தில் பருத்தி பஞ்சு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வெளிநாடுகளிற்கு வணிகம் செய்யப்பட்டதால் பருத்தித் துறையென்று பெயர் வந்ததாக படித்தஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகர் . கேள்விகள் தான் ஒருவரை பண்படுத்தி தவறுகளை செப்பனிடவைக்கும் , இதில் மாற்ருக்கருத்திற்கு இடமில்லை :) :) :) .

இதில என்ன கேட்கிறதுக்கு என்ன கேள்வி இருக்கு? :wub:

மாற்ரி, போற்ரி என்று தமிழில் வராது..! மாற்றி, போற்றிதான் சரி..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான விளக்கம் இது என நினைக்கிறேன். தமிழிலே பதினெட்டு உயிர் எழுத்துக்களையும் வல்லினம் - ஆறு, மெல்லினம் - ஆறு, இடையினம் - ஆறு என மூன்று வகையாக பிரிக்கலாம்.,

  • வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ல்
  • இடையினம் - ஞ் ங் ண் ந் ம் ன்

இதிலே வல்லினத்தின் அருகில் மெல்லின மெய்கள் விகாரமடைந்து வருவது இலக்கணத் தவறு.

உதாரணம்

மாற்றி - ம் + ற் + (ற் + இ) - சரியானது

மாற்ரி - ம் + ற் + (ர் + இ) - பிழையானது காரணம் ர் மெல்லினம்

போற்றி - ப் + ஓ + ற் + (ற் + இ) - சரியானது

போற்ரி - ப் + ஓ + ற் + (ர் + இ) - பிழையானது காரணம் ர் மெல்லினம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் படித்த O/L ஞாபகத்தில் எழுதுகிறேன், தவறாயின் தயவுசெய்து யாரும் திருத்தவும்.

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் பகிர்வுக்கு, கடல் காற்றை சுவசித்தால் வரும் சுகமே தனி, எங்கள் ஊரும் கடற்கரைக்கு பக்கத்தில், அடிக்கடி கடற்கரைக்கு நண்பர்களுடன் போய்விடுவேம், தொடருங்கள்

http://ta.wiktionary.org/w/index.php?title=சிறப்பு:AllPages&from=மாற்றீடு&to=முன்மூளை_உள்ளறை

திண்ணயில் தமிழ் படிப்பிப்பதற்கு ஒரு வாத்தியாரை ஒழுங்கு படுத்துவமோ?

  • தொடங்கியவர்

தொடருங்கள் கோமகன்!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால், அலைமகள் வடிவாகக் கதையைப் படிக்கவில்லை :D :D . நான் சிகரட் புகையின் ஊடாக எனது இறந்த அம்மாவையிட்டுத் தத்துவ விசாரணை செய்து கொண்டிருந்தேன் :( :( .

கோமகன் உங்கள் தொடரில் ரா..றா மட்டுமல்ல பருத்தித்துறை பரித்தித் துறை என்றும் எழுதுகிறீர்கள். அந்த துறை முகத்தில் பண்டைய காலத்தில் பருத்தி பஞ்சு மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வெளிநாடுகளிற்கு வணிகம் செய்யப்பட்டதால் பருத்தித் துறையென்று பெயர் வந்ததாக படித்தஞாபகம்.

மிக்க நன்றிகள் சாத்திரி , மிகவும் உரிமையுடன் பிழையைச் சுட்டிக்காட்டியதிற்கு :) :) :) .

இதில என்ன கேட்கிறதுக்கு என்ன கேள்வி இருக்கு? :wub:

மாற்ரி, போற்ரி என்று தமிழில் வராது..! மாற்றி, போற்றிதான் சரி..! :rolleyes:

மிக்க நன்றிகள் டங்கு :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.