Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. May Day நானும் தவறாமல் பார்க்கிறனான்.. பார்க்க ஆரம்பிச்சதில இருந்து விமான ரிக்கற் விசயத்தில cost-cutting செய்யிறேல்ல.. நல்ல தரமான நிறுவனங்களின் விமானங்களில் மட்டும்தான் பயணம் போறது..! :unsure:

விதி விளையாடும் போது ஒன்றும் செய்ய முடியாது, அடிக்கடி Remote Site க்கு போய் வாறது அப்ப எழும்பி இறங்கும் போது ராமா ராமா என்று கண்ணை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறது, வேறு என்ன செய்ய

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விதி விளையாடும் போது ஒன்றும் செய்ய முடியாது, அடிக்கடி Remote Site க்கு போய் வாறது அப்ப எழும்பி இறங்கும் போது ராமா ராமா என்று கண்ணை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறது, வேறு என்ன செய்ய

ரமா...ரமா..வா?? ராமா ராமா வா??

  • கருத்துக்கள உறவுகள்

விதி விளையாடும் போது ஒன்றும் செய்ய முடியாது, அடிக்கடி Remote Site க்கு போய் வாறது அப்ப எழும்பி இறங்கும் போது ராமா ராமா என்று கண்ணை இறுக்கி மூடிக்கொண்டிருக்கிறது, வேறு என்ன செய்ய

உடையார் கனிமவளத்துறையோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று என்ர கிற்றார் ஆரூடம் சொல்லுது.. :unsure: உண்மையோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரமா...ரமா..வா?? ராமா ராமா வா??

:icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் கனிமவளத்துறையோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று என்ர கிற்றார் ஆரூடம் சொல்லுது.. :unsure: உண்மையோ? :rolleyes:

உண்மை :rolleyes:

கொஞ்ச நாள் போக தங்கம் & diamond, எப்படி எடுக்கிறார்கள் என்று எழுதுவம் என்றிருக்கிறன் யாரும் எழுதாவிட்டால் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ர்ந்து எழுதுங்கள் கோமகன் வாசிக்க ஆவலாய் உள்ளோம்

பயண அனுபவங்கள் என்றும் சலிப்பதில்லை விரைவில் உங்கள் அடுத்த பதிவுகளைக் காண ஆவலுடன்.......

  • தொடங்கியவர்

நன்றிகள் ரதியக்கா மற்றும் அம்பலத்தார் . நெருஞ்சி குத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றது :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல பயண கட்டுரை.. தொடருங்கள் தோழர் கோமகன்... :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இரு மாதங்களின் பின் கொஞ்சம் முன்புதான் இங்கு வந்தேன்! அலுப்பையும் பார்க்காமல் படித்து விட்டேன் கோமகன்! வாழ்த்துக்கள் கோமகன்!!! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை :rolleyes:

கொஞ்ச நாள் போக தங்கம் & diamond, எப்படி எடுக்கிறார்கள் என்று எழுதுவம் என்றிருக்கிறன் யாரும் எழுதாவிட்டால் ^_^

ஹிஹி.. சேம் பிளட்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. சேம் பிளட்..! :D

அப்பிடியா மிக்க சந்தோஷம், நான் Project Cost Constrol Side, சில வேளை சந்திக்கலாம், தனிமடல் போடுறன்

அப்ப நீங்களே எழுதுங்க நல்லாய் இருக்கும்... இஞ்ச சிலபேர் கூழங் கற்களுடன் திரியிறார்கள்

Edited by Udaiyar

  • தொடங்கியவர்

எல்லோரும் ஒழுங்கையில் இறங்கினார்கள். நான் சிறிது

தாமதித்தேன் என்னைப் பாரத்த மனைவி ,

" என்ன " ? என்பது போலப் பார்த்தா .

" நீங்கள் போங்கோ நான் வாறன் "?

" ஏன் " ?

" நீங்கள் போங்கோ எண்டுறன் " .

30077423337398203991156.jpg

கலங்கிய கண்களுடன் கடுமையாக எனது வாயில் இருந்து வார்த்தைகள் துப்பின . எனது மனவலிகளுக்காக மனைவியுடன் கடுமையாக நடக்கின்றேனோ ? எனது நிலையைக் குறிப்பால் உணர்ந்த மனைவி ,

" நிண்டு மினைக்கெடாமல் கெதீல வாங்கோ" . என்றவாறே , வீட்டை நோக்கித் தங்கைச்சி பிள்ளைகளுன் நடக்கத் தொடங்கினா . தனித்து விடப்பட்ட என்னுள் ஊழிப் பிரளயமே நடந்தது. எனது 25 வருடத்து ஏக்கம் என்னை அறியாமல் கண்ணால் பெருக்கெடுத்து ஓடியது . காலை வேளையாகையால் வீதி ஓரளவு பரபரத்துக் காணப்பட்டது . சிறுவயதில் ஓடி ஆடி பல கதைகள் பேசி , புழுதி மண் தோய நடந்த ஒழுங்கையும் அதன் வாசலும் என்னை அன்னியனாகவே வெறித்துப் பார்த்தன. என்னை யரும் அடையாளம் காணுகின்றார்களா ? என்ற ஏக்கத்துடன் இருபக்கமும் திரும்பிப் பார்த்தேன் . யாருமே என்னை அடையாளம் காணவில்லை. நான் உடைந்து நொறுங்கிப் போனேன் ஒரு பாடலில் ஓளவையார் இப்படிப் பாடுவார் " கொடிதிலும் கொடிது அன்பிலாப் பெண்டில் இட்ட உணவு " என்று . என்னைக் கேட்டால் , " கொடிதிலும் கொடிது பிறந்து வழர்ந்து தவள்ந்து விளையாடிய இடத்தில் யாரும் அடையாளம் காணாது அன்னியனாகப் பே முழி முழிப்பது தான் .

அம்மாவின் நினைவு வேறு வந்து தொலைத்தது . எப்படி அம்மா இல்லாத வீட்டைப் பார்க்கப் போகின்றேன் ? என்னுடன் தானே அம்மா இட்டமாக இருந்தா . கண்ணால் வந்த வெள்ளத்தால் மனது இலேசாக இருந்தது . தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தேன் . வீட்டு வாசலில் எனது வரவை எதிர்பார்த்து எனது கடைசித் தங்கைச்சி தனது பிள்ளையுடன் நின்றிருந்தாள் . என்னைக் கண்டதும் தங்கைச்சி பெரிதாக அழத்தொடங்கி விட்டாள். குழந்தையோ மலங்க மலங்க முழித்தது. நான் அவளின் முகத்தை நேரடியாகப் பார்க்கத் தையிரியம் இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கைகால் முகம் கழுவிக் கொள்ளப் போய்விட்டேன் . மனைவி தங்கைச்சியைத் தேற்ரிக்கொண்டிருந்தா . கைகால் கழுவப் போன நான் கிணத்தைக் கண்டதும் , வந்த புழுகத்தால் வாழியால் அள்ளிக் குளிக்கத் தொடங்கினேன் . குளிர்ந்த நீர் கொதித்த மனதிற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது . கிணற்றினுள் இரண்டு சோடி தங்கமீன்கள் ஓடித்திரிந்தன . சிறுவனாக இருந்தபொழுது அண்ணைக்குத் தெரியாமல் நண்பனுக்கு கொடுப்பதற்காக மீன்பிடித்தபொழுது வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தது , எனக்குள் சிரித்துக் கொண்டேன் . குளித்து முடிந்தபின் சாமி அறைக்குள் உள்ளட்டேன் . அம்மாவும் அப்பாவும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அம்மாவை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . அம்மா நல்ல வடிவு. சாவித்திரி மாதிரி இருப்பா . நான் படுத்து எழும்பிய பெரிய கட்டில் என்னுடன் பல கதைகள் கதைத்தது . தங்கைச்சி சீனி போடாமல் தேத்தண்ணி கொண்டுவந்து தந்தாள் . அவளுடன் வந்த குழந்தை அவளுக்குப் பின்னால் நின்று எட்டிப் பாத்தது . அவளிற்கும் கலியாணம் நடந்தது எனக்குச் செய்தியாகத் தான் வந்தது . அவளின் கணவர் ஏகத்துக்கம் வெக்கப்பட்டார் . அண்ணை வெளியில் போயிருந்தபடியால் , எங்கள் பிள்ளையார் கோயலடிக்கு தங்கைச்சியின் பிள்ளையுடன் போனேன் . ஒழுங்கையால் மருமகளுடன் நடப்பது மனதிற்கு இதமாக இருந்தது . மருமகள் மழலையில் ஏதேதோ கதைத்துக்கொண்டு என்னுடன் தளிர்நடையில் வந்ததால் எனது நடைவேகம் குறைந்தது .

20694920006274127971156.jpg

நான் மழைகாலத்தில் நீச்சலடித்து விழையாடிய கோயில் கேணி என்னைப் பாத்துச் சிரித்தது. கேணியடியும் காலத்தின் கோலத்தால் ஓரளவு வயதாகி இருந்தது . கேணியின் அருகே இருந்த சம்புப்புல் தரவை பரந்து விரிந்திருந்தது . தூரத்தே கைதடிப் பாலம் தெரிந்தது. இந்தத் தரவையால் சிறிது தூரம் நடந்து போனால் கோப்பாய்க் கடல் ( உப்பங்களி ) வரும். கோடைகாலத்தில் உப்பு எடுக்கப் போவோம். இதில் மாரிகாலத்தில் இடுப்பளவிற்கு தண்ணி நிக்கும். கைதடிப்பாலம் தான் எங்கட நீச்சல் இடம். இந்தப் பாலத்தடீல கண் சிவக்கச் சிவக்க நீந்திப்போட்டு , அப்படியே கைதடிச் சந்திக்குப் போய் மலையாளத்தான்ரை கடைல போய் மாசால் தோசையும் பிளேன் ரீயும் குடிக்கிறது அப்ப எங்களுக்கு உலகமகா திறில். தூரத்தே மாடுகள் புல்லு மேய்ந்து கொண்டிருந்தன . பக்கத்தே நின்ற இலுப்பை மரத்தில் அணில்களும் , குருவிகளும் , சத்தத்தில் போட்டி போட்டன . கோயிலில் பூசை முடிந்து , கோயில் வளாகம் அமைதியாக இருந்தது . கண்ணை மூடிப் பிள்ளையாரைக் கும்பிட்டேன் . என்னைப் பார்த்து மருமகளும் கும்பிடுவது போல் பாவனை செய்தாள் . எனக்குச் சிரிப்பாக வந்தது . நானும் , தங்கைச்சியும் சிறுவயதில பஞ்சாமிர்தம் வாங்க இதில நிண்டு சண்டைபிடிச்சது ஞாபகம் வந்தது . ஐய்யரும் கூட கும்பிடிற பிள்ளையளுக்குக் கனக்க பஞ்ஞாமிர்தம் குடுப்பர் . தங்கைச்சியும் இதைசாட்டிக் கொஞ்சம் கூடக் கும்பிடுவள் . கோயிலை விட்டு வெளியேறி வந்து கேணிக் கட்டில் வந்து அமர்ந்தேன் . பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்பைக்கற்ரினுள் இருந்து ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ர வைத்தேன் . சோழகம் வரவதற்கு அறிகுறியாக காத்து உரப்பாக வீசியது .

59795161782256291511568.jpg

சிறு வயதில் பட்டம் விடுவதும் எங்கடை பிரதான பொழுது போக்கு . எட்டுமூலை , கொக்கு , வட்டம் , சதுரம் , எண்டு அண்ணை விதம்விமாகக் பட்டம் கட்டுவார். நாங்கள் அவருக்கு உதவியளர்கள் மட்டுமே . மட்டுத்தாள் பேப்பராலைதான் பட்டத்தை ஒட்டுவம் . பின்னேரத்தில விண் பூட்டி , அதின்ர சத்தத்தோட பட்டங்கள் இந்த தரவைவேல அணிவகுக்கும் . இதுக்குள்ள மற்றவ எங்கடை பட்டங்களை அறுக்கவும் வருவினம் . அதில எங்களுக்கை அடிபாடும் வரும் . நாங்கள் அண்ணைக்குப் பின்னால நிண்டு கொண்டு காய்கூய் எண்டு சத்தம் போடுவம் . நேரம் 11 ஐத் தாண்டி இருந்தது . ஒழுங்கையால் ஒரு நடுத்தர வயது பெண்ணும் இரு இழம் பெண்களும் கேணியடியை நோக்கி வந்தார்கள் . கிட்ட வர அவர்களை உற்றுப்பார்த்தேன் . எங்கையோ பாத்தமாதிரி இருக்கே ? அவர்கள் கிட்ட வர எனது பார்வையால் , அவர்களது நடை தயங்கியது . எனக்குப் பொறி தட்டியது அவளேதான் சின்ன வயதில் எனக்கு கடிதம் தந்தவள் . எனது நண்பனின் தங்கைச்சி பாமினி. ஒரு புன்சிரிப்புடன்,

" நீங்கள் குமரன்ர தங்கைச்சி பாமினி தானே ?"

"ஓம் ".

"நீங்கள்.................. "?

எண்டு இழுத்தாள்.

" என்னைத் தெரியேலையோ ? வடிவாய் யோசியுங்கோ .

"ஓ.......... லோசினயக்கான்ர மகன் கண்ணன் தானே". "என்ரகடவுளே எப்ப பிரான்ஸ்சால வந்தனிங்கள் " ?

" இண்டைக்கு தான் இங்கை வந்தனான் ".

" எப்பிடி பாமினி சுகங்கள் "?

" ஏதோ இருக்கிறம் ".

" நீங்கள் வன்னீல இருந்ததாய் தங்கைச்சி சொன்னாள் ".

" ஓ........... இப்பதான் அல்லோலகல்லோப்பட்டு இங்கை வந்தம் ".

" இப்ப அம்மம்மான்ர காணிக்குள்ள இருக்கறம்".

அவளின் முகம் மாறி இருந்தது,

" குமரன் என்ன செய்யிறான்"?

" உங்களுக்குத் தெரியாதே ? அவர் மாவீரனா போட்டார் , புதுக்குடியிரப்புச் சண்ண்டைல நடந்தது ".

"என்ன...........?"

அவளின் கண்கள் குளமாகின.

" அப்ப உங்கடை அவர் "?

" இடப்பெயர்வில எங்கை எண்டேதெரியாது , என்ர பிள்ளையழும் நானும் தப்பனது அருந்தப்பு. இதால அம்மா மனம் பேதலிச்சுப் போனா "

" பாமினி அங்கத்தையான் நிலமையை சொல்லேலுமே"?

" இல்லைக் கண்ணன் நான் மறக்கப் பாக்கிறன்". அவளின் குரல் கரகரத்தது ,

"நீங்கள் போய் சாப்பிடுங்கோ வெய்யிலுக்கை நிக்கவேண்டாம்".

கனத்த மனதுடன் வீட்டுக்கு மருமகளுடன் வீட்டை வந்தேன். அண்ணை வேலையால் வந்திருந்தார் . என்னைக் கண்டதும் கண்கலங்கயபடியே கட்டிப்பிடித்தார் .எல்லோரும் சாப்பட மேசையில் இருந்தோம் . தங்கைச்சி சமைத்த சாப்பாட்டைப் பார்த்து அதிர்ந்து விட்டேன் .

img0615y.jpg

தொடரும்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

"யாருமே என்னை அடையாளம் காணவில்லை. நான் உடைந்து நொறுங்கிப் போனேன் ஒரு பாடலில் ஓளவையார் இப்படிப் பாடுவார் " கொடிதிலும் கொடிது அன்பிலாப் பெண்டில் இட்ட உணவு " என்று . என்னைக் கேட்டால் , " கொடிதிலும் கொடிது பிறந்து வழர்ந்து தவள்ந்து விளையாடிய இடத்தில் யாரும் அடையாளம் காணாது அன்னியனாகப் பே முழி முழிப்பது தான்"

கோமகன் உங்கட மனதில் அனுபவிச்ச உள் உணர்ச்சியை எழுத்துவடிவில் நல்லவிதமா எழுதிக்கொண்டு வாறிங்க. ம்... ம்.. தொடருங்கள். எனக்கு அந்த புறா படம் என் மனதை தொட்டுவிட்டது, நன்றி இணைத்திற்கு

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் புறாப் படம் எனக்குள் நெருஞ்சியாய் குத்தியது. இப்படித்தானே நாங்களும் அம்மாவின் அரவணைப்பில் இதமாய் பதுங்கியிருந்தோம்.அந்த சுகம் நிலைக்காமல் ஆளிற்கொரு தேசமாய் அனாதைகளாய்.நாம் செய்த பாவம்தான் என்ன?? :(

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் உங்கள் தொடர் இன்னமும் இன்னமும் மெருகேறிக்கொண்டு வருகிறது...அருமை...நன்றி.... எங்கள் நினைவுகளையும் மீட்டவைத்து விட்டீர்கள்......

  • தொடங்கியவர்

நன்றிகள் உடையார் , சாத்திரி ,சுபேஸ் .எனது செய்தியை சாத்திரி தான் பிடித்திருக்கன்றார் .நான் அந்தப் புறா மூலம் இரண்டு செய்திகளை சொல்கின்றேன்.

1 அம்மாவின் கதகதப்பான அரவணைப்பில் கஸ்ட்டம் துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது வாழ்ந்து என்னைப்போல் அம்மாவை இழந்த உறவகழுக்கு . ..

2.தேசியத்தலைவர் என்ற அகண்ட விரீட்சத்தின் அரவணைப்பில் வாழ்ந்த தமிழ் இனத்தின் இன்றைய கையறுநிலை.

:( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா நான் உங்கள் தொடரை தவறவிடாமல் படிச்சுக் கொண்டு வருகிறேன் மிகவும் நன்றாக எழுதிக் கொண்டு போகிறீங்கள் மிக்க நன்றிகள்...இணைக்கும் படங்களை நானும் கொள்ளை அடிக்கிறனான்..இன்றைய புறா படம் மனதை கொள்ளை அடிச்சுட்டுது..அப்புறம் அந்த நாய்க் குட்டி படமும் தான்.

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா நான் உங்கள் தொடரை தவறவிடாமல் படிச்சுக் கொண்டு வருகிறேன் மிகவும் நன்றாக எழுதிக் கொண்டு போகிறீங்கள் மிக்க நன்றிகள்...இணைக்கும் படங்களை நானும் கொள்ளை அடிக்கிறனான்..இன்றைய புறா படம் மனதை கொள்ளை அடிச்சுட்டுது..அப்புறம் அந்த நாய்க் குட்டி படமும் தான்.

நன்றிகள் யாயினி :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்கட தங்கச்சி சமைத்த சோறு,கறியைப் பார்க்கத் தான் வாய் ஊறுது...எப்படித் தான் இங்கே சுவையாக சமைத்தாலும் எங்கட மண்ணில் வைத்து சமைக்கும் சமையலுக்கு ஈடாகது.

பி;கு கோமகன் நீங்கள் ஏன் சமாதான காலத்தில் ஊருக்க்குப் போகவில்லை?

  • தொடங்கியவர்

எனக்கு உங்கட தங்கச்சி சமைத்த சோறு,கறியைப் பார்க்கத் தான் வாய் ஊறுது...எப்படித் தான் இங்கே சுவையாக சமைத்தாலும் எங்கட மண்ணில் வைத்து சமைக்கும் சமையலுக்கு ஈடாகது.

பி;கு கோமகன் நீங்கள் ஏன் சமாதான காலத்தில் ஊருக்க்குப் போகவில்லை?

நல்ல கேள்வி ரதி . எனக்குக் பிறென்ஞ் குடியுரிமை கிடைத்தது போனவருடம் . சம்பிரதாயங்ள் முடிய இந்தவருடமாகி விட்டது . அதற்கு முதல் இலங்கையைத் தவிர எங்கும் போகலாம் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

Superb komagan Anna.......

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நானும் உங்கள் தொடரின் ரசிகன்.மேல சாத்திரி சொன்ன மாதிரி எனக்கும் அந்தப் புறாப்படம் நெஞ்சை ஏதோ செய்யுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30077423337398203991156.jpg

யாழ்களத்தில் பெரும்பாலான பகுதிகளில் எனது கருத்தை சொல்வதில்லை.காரணம் அருமைபெருமையான தொடர்களுக்கு கருத்துக்களும் பின்னோட்டங்களும் தேவையில்லை..அது போலதான் இந்த நெருடிய நெஞ்சியும்........இந்த புகைப்படத்தை பார்த்ததும் உண்மையில் அழுதுவிட்டேன்.நன்றி கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்! உங்களின் கட்டுரை அழகென்றால், படங்கள் ஒவ்வொன்றும் கவிதை!! தொடருங்கள் வாழ்த்துகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.