Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது – யாழ்ப்பாணத்தில் இருந்து கனகண்ணை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 ஜூன் 2011

வணக்கம், வணக்கம் கொஞ்ச நாளா உங்களோட கதைக்கேலாமல் போட்டுது. வன்னியில் என்ர பங்குக் காணியும் ஆமி விடுவிச்சிட்டுது. பற்றை வெட்டுறது, வேலிக்கு கதியால் போடுறதெண்டு நாள் போட்டுது. ஊருக்கு திரும்பினால் நடக்கிறதுகளப்பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லை.

பழையபடி ஆமிப்பதிவு, தொடங்கியிட்டுது. வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது. வீட்டுக்குப்பையளை எங்க கொட்டுறனியள், கிணறு கிடக்கே, மலசலகூடம் கிடக்கே எண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள். ஆனாலும் அவங்கள் தெளிவா, பிளான் போட்டுஎல்லாத்தையும் செய்யுறாங்கள். தனிச் சிங்களத்தில அச்சிட்ட படிவங்களோட தான் அவங்கள் வாறாங்கள். ஆனால் அதை எங்கட கையில தாறாங்களில்லை.

வீட்டை வந்த ஆமிக்காரங்களுக்கு தலைமை தாங்கினவன், வடிவாத் தமிழ் கதைக்கிறான். தமிழில கேள்வி கேட்டாலும் சிங்களத்திலேதான் பதியுறான்.தம்பிக்கு தமிழ் வடிவாத் தெரியுது எங்கை படிச்சனியள் எண்டு கேட்டுப் பார்த்தன். ஐயா நான் முஸ்லீம் பள்ளிக்கூடத்தில தமிழ் படிச்சனான் எண்டுறான். பதிஞ்சதுக்குச் சாட்சியா துண்டொன்றை ஒட்டிப்போட்டுப் போனாங்கள். அவங்கள் போனாப்பிறகு என்ன கிடக்கெண்டு எட்டிப் பார்த்தால் ஒரு தடயமும் இல்லாமல் வெறுமன ஏதோ இலக்கங்களை மட்டும் போட்டுக்கிடக்கு. மாற்ற மொண்டுமில்லாமல் அவங்கள் தங்கட தொழிலை செய்து கொண்டுதான் இருக்கிறாங்கள். இதுக்கை பாதுகாப்பு அமைச்சு வேற பிறகும் தனியாப்பதியப்போகுதாம்.என்ன கோதாரி பதியக்கடக்கெண்டுதான் தெரியயில்லை.

நடிகர் வடிவேலின்ற பகிடியொண்டு இருக்கு. தம்பி வெள்ளையா இருக்கிறவங்கள் பொய் சொல்ல மாட்டாங்கள் எண்ட அந்த பகிடி எங்கட கூட்டமைப்பிற்கும் நல்ல பொருத்தம். யாழ்ப்பாண தளபதி சந்திக்கேக்க சொன்னதை அப்பிடித்தான் நம்பியிட்டினம் போல. தம்பி சுமந்திரன் ஹத்துருசிங்க ஐயா உறுதியாக் கூறிப்போட்டார். நாங்கள் கோட்டில போட்ட கேசை வாபஸ் பெறுவமெண்டு சொல்லிப் போட்டாராம். எங்கட தமிழ் தேசிய நாளிதழில பெரிசா செய்தி போட்டுக்கிடக்காம்.

அட நாசமாப் போவாரே, எங்கட தளபதி ஐயா பதிவை இடைநிறுத்திறமெண்டு சொல்லிறது இது நாலாவது தடவை. கூட்டமைப்புகாரர் அதை நம்பி பேப்பருக்கு செய்தி சொல்லுறதும் நாலாவது தடைவ. ஆனால் சனமெல்லாம் உதுகளை பொருட்டா எடுக்கிறதில்லை யெண்டது ஏனோ பேப்பர்காரருக்கு விளங்கேயில்லை. அவை சொல்லி இவை போடுற செய்திப்படி எதுவும் நடக்கிறதில்லை யெண்டது மட்டும் சனத்துக்கு வடிவாத் தெரியும். ஹத்துருசிங்க ஐயா சொல்லி ஒரு கிழமையாயும் பதிவை அவங்கள் நிப்பாட்டவேயில்லை.

அளவெட்டி தேர்தல் கூட்டத்தில யார் உட்புகுந்து அடிச்சதெண்டது இன்னும் வடிவா தெரியேல்லையாம். யாழ்ப்பாண தளபதியொண்டச் சொல்லுறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இன்னொண்டைச் சொல்லுறார். ஆமியிலயும் கெட்ட ஆவியள் இருக்கிறதா இப்பதானாம் கண்டு பிடிச்சிருக்கினமாம். ஆனாலும் நீங்கள் விட்டாலும் நாங்கள் விடமாட்டமெண்டு வெளிநாட்டு அரசாங்கங்கள் இப்ப விடாப்பிடியா நிக்குதுகள்.

ஹத்துருசிங்க ஐயா கொடுத்த தேனீர் விருந்தோட கூட்டமைப்பு சூடு ஆறிடிச்சோ என்னவோ தெரியேலை. அவற்ற பத்திரிகையாளர் மாநாட்டுக்கு பேப்பர்காரர் எல்லாம் யாழ்ப்பாணத்தில படையெடுத்துவந்ததா பேப்பர்காரப் பொடியன் நக்கலோட சொன்னான். இப்பெல்லாம் ஐயாவை குளிர்விக்க ஒரே போட்டி. அளவெட்டி தாக்குதல் பற்றி கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை விட, ஹத்துருசிங்க ஐயாவின்ர மறுப்புக் கூறுகிற கூட்டத்துக்கு ஆள் கூடவாம். உள்ளுர் தமிழ் தேசிய நாளிதழ்களது ஆசிரியர்கள் என ஒரே படையெடுப்பாம்.

தளபதி ஐயா ஒருக்கா ஆமியில இருக்கிற கெட்ட ஆவியள் தான் இதுக்கு காரணமெண்டாராம். பிறகு புனர்வாழ்வு பெற்ற புலியளும் ஆயிரக்கணக்கில யாழ்ப்பாணத்தில இருக்கினமெண்டும் அங்காலையும் மாலையளைப் போட்டாராம். ஆயுதம் தாங்கிய குழுவொன்று இருக்கிறதையும் ஆயுதம் மீட்டதையும் சுட்டிக் காட்டவும் தவறயில்லையாம்.

ஆனால் எங்கட ஈ.பி.டி.பி. காரர், ஆயுதமெடுத்தது, தங்கட ஆட்களின்ர வீட்டில இல்வையெண்டு நிக்கினம். அவை உப்பிடித்தான் நிமலராஜன் காலம் தொடக்கம் பள்ளிக்குப்போன பொடியன் கபில்நாத் வரை தங்களுக்கு எதுவும் தொடர்பில்லை யெண்டுதான் சொல்லுறவை. ஹத்துருசிங்க தங்கள தொடர்புபடுத்தி பத்திரிகையாளர் மாநாட்டில சொல்லையில்லை யெண்டும் நிக்கினம். ஈ.பி.டி.பி. காரர் வீட்டை ஆயுதம் எடுத்த கதையை பலாலிக்காரர்தான் பேப்பருக்கு போன் எடுத்துச் சொல்லியிருக்கின மெண்டு பேப்பர் பொடியன் குசுகுசுத்துப்போட்டுப் போறான். கவுண்டமணி சொல்றதைப்போல அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா, கதைதான் இதுவும் போல.

இப்ப எல்லாம் எங்கட பேப்பர்காரர்களும் இணக்க அரசியல் துறையுக்குள்ள போட்டினம் போல. பிரச்சினையெண்டால், அந்த செய்தியளை கைவிட்டுட்டு போட்டுட்டு அங்கால கை நீட்டப்போயிடுவினம். அளவெட்டியில அடிச்சது ஆமியெண்டு உங்களுக்கு என்னெண்டு தெரியுமெண்டு ஒரே அட்டகாசமாம். அண்மையில விலைபோன தேசிய நாளிதழ் ஆசிரியர் அந்த செய்தியை போடக்கூடாது எண்டு பிராந்திய பதிப்பு அலுவலகத்துக்கு ரெலிபோனில இரவிரவா ஒரே பாய்ச்சலாம். ஆனால் அதுக்குள்ள பகிடியென்னெண்டால், செய்தி சேகரிக்கப் போய் அடிவாங்கின பேப்பர் பெடியளுள்ள ஒருவன் அந்த பேப்பரிலதான் வேலை செய்யிறவன். அம்மாவின்ர செத்த வீட்டக்கு ஆள் அனுப்பினதுக்கு விசுவாசம் வேண்டும் தான். அதுக்கு இப்பிடியே எண்டு அவற்ற சகபாடி பேப்பர்காரர் புறுபுறுக்கினம். அடிப்பிச்ச பாதுகாப்பு செயலாளரே ஆமிதான் அது எண்டு சொன்னாலும், இந்த மனுசன் இல்லையில்லையெண்டு திக்குதாம். அட மற்ற பக்கமென்டால், பேப்பர்களை எல்லாம் வாங்கிறவையின்ர வக்கணையையும் ஒருக்கா தெரிஞ்சு வைக்கவேணும். நாங்கள் உங்கள பற்றி பிழையா செய்தியளை போடவே மாட்டமெண்டு அமைச்சற்ற கட்சியிட்ட சரண்டர் பண்ணியிருக்கிறார் நாளிதழின்ர பிரதம அசிரியர். அது பரவாயிலை. வார இதழ் ஆசிரியர்தான் சொல்லுறதைக் கேக்கிறார் இல்லை, ஒருக்கா நீங்கள் கதையுங்கோவெண்டு அட்வைஸ் வேறாம். வாழ்க தமிழ் தேசியத்தை கட்டிக்காத்த எங்கட வீரர்கள்.

இதுக்கப்பால உள்ளுராட்சி சபைதேர்தலும் சூடு பிடிக்கத் தொடங்கியிட்டுது. இந்த முறை நேரடிப்போட்டி கூட்டமைப்புக்கும் பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் தான். முன்னணியில பிரதான கட்சியான சுதந்திரக்கட்சி, வெளியில நிக்குது. கூட்டமைப்பு நல்ல பலமா நிக்குது. வழமைக்கு மாறா தமிழர் விடுதலக் கூட்டணி, புளொட், சிவாஜிலிங்கத்தாற்ற பக்கமெண்டு கூட்டுக்கள் சேர்ந்திருக்கு. பிரச்சார கூட்டங்களில கூட்டமைப்பு மேடையில சங்கரியார், சித்தார்த்தன், எங்கட கூட்டமைப்பு எம்பிமாரெண்டு எல்லாம் சேர்ந்திருக்கிறதை பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு. முள்ளிவாய்க்காலுக்கு முன்னால இப்பிடி சேர்ந்திருந்தா? பெருமூச்சு விடுதறதைத் தவிர வேறொண்டுமில்லை. ஆனாலும் எங்கட எம்பிமாற்ற கூத்துக்களும் குறைஞ்ச மாதிரியில்லை. உள்ளுராட்சி சபை வேட்பாளர்களில ஆக்கள உன்ர என்ர எண்டு பாகுபாடு காட்டுறதும், வாக்குக் கேட்கிறதும் தொடர்வதாக புறுபுறுக்கள் கேக்குது. ஒரு கண்ணுக்கு எண்ணெய்யும் மற்றதுக்கு சுண்ணாம்பும் பூசுறது நியாயமில்லை. என்னை நான் சொல்லுறது சரிதானே, கூட்டு சேர்ந்தவையையும் அரவணைச்சு போறதுதானே நியாயம்.

கனகண்ணை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63160/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காரங்களுக்கு தலைமை தாங்கினவன், வடிவாத் தமிழ் கதைக்கிறான். தமிழில கேள்வி கேட்டாலும் சிங்களத்திலேதான் பதியுறான்.தம்பிக்கு தமிழ் வடிவாத் தெரியுது எங்கை படிச்சனியள் எண்டு கேட்டுப் பார்த்தன். ஐயா நான் முஸ்லீம் பள்ளிக்கூடத்தில தமிழ் படிச்சனான் எண்டுறான்.

கோடரி காம்பு இவர்கள்தான் எங்கட சனத்தை அழிக்க முக்கியமாக இருந்தவர்கள் இந்த நச்சுப்பாம்புகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை பற்றி பேசினாலே அங்குள்ள மக்கள் தமது வாழ்க்கைக்கு தாங்களே முடிவு எடுப்பார்களாம்.புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களின் அலுவலை பார்க்கட்டாம்.அங்குள்ளவர்களின் நிலை நாலு வார்த்தை மனம் திறந்து பேச முடியாத நிலை.அந்தளவுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் கை காலுக்குள்!! யாரைக் குறை கூற முடியும்??

புலம்பெயர் தமிழர்கள் (அடித்து விரட்டப்பட்ட தமிழர்க்ள்) தயவு செய்து காசு குடுக்கவும்..! ஆனால் வாயைப் பொத்தவும்..! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் (அடித்து விரட்டப்பட்ட தமிழர்க்ள்) தயவு செய்து காசு குடுக்கவும்..! ஆனால் வாயைப் பொத்தவும்..! :lol: :lol: :lol:

இதொன்றும் புதிதில்லையே. இப்ப மொதலாளிகள் மாறிவிட்டார்கள். அவ்வளவுதான். <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்றும் புதிதில்லையே. இப்ப மொதலாளிகள் மாறிவிட்டார்கள். அவ்வளவுதான். <_<

அதுதான் பயங்கரவாதம் எண்டு சொல்லிட்டமே..! :unsure: பயங்கரவாத முதலாளிகளிடம் ஜனநாயகம் இல்லை..! ஆனால் இப்ப போர் முடிந்த கட்டத்திலும் ஜனநாயகத்துக்கு இடமில்லையா? :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்ப போர் முடிந்த கட்டத்திலும் ஜனநாயகத்துக்கு இடமில்லையா?

வென்றவர்கள் ஜனநாயகம் என்று என்னத்தைச் சொல்லுகின்றார்களோ அதுதான் தற்போதைய ஜனநாயகம்.

தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீது இப்போதும் மிகவன்மம் கொண்டு மோசமான இனவாதக் கருத்துக்களை வைப்பதற்குத் தயங்காத நாங்கள் உண்மையிலேயே சகமனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லையே. மற்றவர்கள் எங்களை மனிதர்களாக மதித்து உரிமைகளைத் தரவேண்டும் என்பது முரண்நகையாகப் படவில்லையா? மனிதம் இல்லாதவர்கள் மனிதவுரிமை, ஜனநாயகம் என்று சொல்லுவது வெறும் வெற்றுச் சொற்கள் என்று சர்வதேசம் புரிந்துள்ளமையால்தான் எங்களை கால்தூசு போல் ஆக்கியுள்ளது

வடபகுதிக்கு அடிக்கடி வெளிநாட்டு தூதுவர்கள் சென்றுவருகின்றனர் அவர்களிடம் யாரும் அங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதிக்கு அடிக்கடி வெளிநாட்டு தூதுவர்கள் சென்றுவருகின்றனர் அவர்களிடம் யாரும் அங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறுவதில்லையா?

நீங்கள் வேறு.அவர்களின் agendaவே வேறு.

வென்றவர்கள் ஜனநாயகம் என்று என்னத்தைச் சொல்லுகின்றார்களோ அதுதான் தற்போதைய ஜனநாயகம்.

தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீது இப்போதும் மிகவன்மம் கொண்டு மோசமான இனவாதக் கருத்துக்களை வைப்பதற்குத் தயங்காத நாங்கள் உண்மையிலேயே சகமனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லையே. மற்றவர்கள் எங்களை மனிதர்களாக மதித்து உரிமைகளைத் தரவேண்டும் என்பது முரண்நகையாகப் படவில்லையா? மனிதம் இல்லாதவர்கள் மனிதவுரிமை, ஜனநாயகம் என்று சொல்லுவது வெறும் வெற்றுச் சொற்கள் என்று சர்வதேசம் புரிந்துள்ளமையால்தான் எங்களை கால்தூசு போல் ஆக்கியுள்ளது

இதைத் தானே கிருபன் வினவு இணையம் எங்களைப் பிளந்து தள்ளுது. சரி பிள்ளையள் அறியவேணும் எண்டு போட்டால் எல்லாரும் சொல்லுறியள் வினவுக்காறன் விசரன் எண்டு ஒண்டுமாய் விழங்கேல :o:o:o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீது இப்போதும் மிகவன்மம் கொண்டு மோசமான இனவாதக் கருத்துக்களை வைப்பதற்குத் தயங்காத நாங்கள் உண்மையிலேயே சகமனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லையே. மற்றவர்கள் எங்களை மனிதர்களாக மதித்து உரிமைகளைத் தரவேண்டும் என்பது முரண்நகையாகப் படவில்லையா? மனிதம் இல்லாதவர்கள் மனிதவுரிமை, ஜனநாயகம் என்று சொல்லுவது வெறும் வெற்றுச் சொற்கள் என்று சர்வதேசம் புரிந்துள்ளமையால்தான் எங்களை கால்தூசு போல் ஆக்கியுள்ளது

தலையிடியும் தனக்கு வந்தால்த்தான் தெரியும்.மனிதநேயம் பற்றி எல்லோராலும் எழுதலாம்.

தலையிடியும் தனக்கு வந்தால்த்தான் தெரியும்.மனிதநேயம் பற்றி எல்லோராலும் எழுதலாம்.

நோகாமல் நொங்கு குடிப்பவர்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கும்?

மூதூர், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இந்த வெட்டியாக மனிதாபிமானம் பேசும் மேதாவிகள் பேசிப்பார்த்தால் உருப்படியாக திரும்புவது சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்

வென்றவர்கள் ஜனநாயகம் என்று என்னத்தைச் சொல்லுகின்றார்களோ அதுதான் தற்போதைய ஜனநாயகம்.

தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீது இப்போதும் மிகவன்மம் கொண்டு மோசமான இனவாதக் கருத்துக்களை வைப்பதற்குத் தயங்காத நாங்கள் உண்மையிலேயே சகமனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லையே. மற்றவர்கள் எங்களை மனிதர்களாக மதித்து உரிமைகளைத் தரவேண்டும் என்பது முரண்நகையாகப் படவில்லையா? மனிதம் இல்லாதவர்கள் மனிதவுரிமை, ஜனநாயகம் என்று சொல்லுவது வெறும் வெற்றுச் சொற்கள் என்று சர்வதேசம் புரிந்துள்ளமையால்தான் எங்களை கால்தூசு போல் ஆக்கியுள்ளது

கிருபன் அண்மையில் முஸ்லிம் தலைவர்கள் (ஐ.நா. வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம்) ரவூப் ஹக்கீம், அஸ்வர் போன்றோர் பேசிய பேச்சுக்களை வாசித்திருந்தால்..... இப்படியான கருத்தை எழுதியிருக்க மாட்டீர்கள். நாங்கள் முஸ்லீம்களை அரவணைத்துச் செல்ல முற்பட்டாலும்..... அவர்கள் சிங்களத்துடன் சேர்ந்து எம்மை மட்டம் தட்டியே.... வந்துள்ளார்கள் என்பதை எப்போ தான் நாம் புரிந்து கொள்ளப் போகின்றோமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும் தனக்கு வந்தால்த்தான் தெரியும்.மனிதநேயம் பற்றி எல்லோராலும் எழுதலாம்.

தனிப்பட்ட ரீதியில் உங்களுக்குத் தமிழர்கள்தான் அதிகம் தலையிடியையும், காய்ச்சலையும் தந்திருப்பார்கள்.

சிங்களவர்களாலும் தமிழர்களாலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகம். முஸ்லிம்களைத் தமிழர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படச் செயற்படவேண்டும் என்பதுதான் "அரவணைப்பு" என்பதன் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

நோகாமல் நொங்கு குடிப்பவர்களுக்கு இதெல்லாம் எங்கே விளங்கும்?

மூதூர், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இந்த வெட்டியாக மனிதாபிமானம் பேசும் மேதாவிகள் பேசிப்பார்த்தால் உருப்படியாக திரும்புவது சந்தேகம்.

நோகாமல் நொங்கு யார் குடிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக நானே பதிந்திருந்தேன். அது அவர்களுடன் சேர்ந்து குடித்துத்தான் எனக்குத் தெரிந்திருக்கும் என்ற தங்கள் தத்துவ வித்துவம் நல்லாத்தான் இருக்கு.

துவேஷத்தை இன்னுமொரு இனத்தின்மீது கக்கிக் கொண்டு, தமிழர்களுக்கு நல்லது கிடைக்கக் போராடுவதாக/செயற்படுவதாக நினைப்பது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக்கண்ணன் என்பதில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

தாயகப்பகுதியில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் எவ்வாறு மோதவிட்டார்கள் என்பது வரலாறாக உள்ளது. சிங்களவர்களின் தந்திரத்திற்குப் பலியாகியதை உணராமல் ஒரு பிரயோசனமும் எதிர்காலச் சந்ததிக்கு உருவாக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்மையில் முஸ்லிம் தலைவர்கள் (ஐ.நா. வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம்) ரவூப் ஹக்கீம், அஸ்வர் போன்றோர் பேசிய பேச்சுக்களை வாசித்திருந்தால்..... இப்படியான கருத்தை எழுதியிருக்க மாட்டீர்கள். நாங்கள் முஸ்லீம்களை அரவணைத்துச் செல்ல முற்பட்டாலும்..... அவர்கள் சிங்களத்துடன் சேர்ந்து எம்மை மட்டம் தட்டியே.... வந்துள்ளார்கள் என்பதை எப்போ தான் நாம் புரிந்து கொள்ளப் போகின்றோமோ தெரியவில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன சொல்லுகின்றார்கள் என்பது தெரியாமல் எழுதவில்லை. இதே அரசியல்வாதிகள்தான் கடந்த பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து செயற்பட்டவர்கள்/செயற்பட முனைந்தவர்கள்.

அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்/நடவடிக்கைகள் அரசியல் ஆதாயங்களுக்கானவை. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள்மீது "தொப்பி பிரட்டி" என்று அவதூறு செய்வது நல்லதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

துவேஷத்தை இன்னுமொரு இனத்தின்மீது கக்கிக் கொண்டு,

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஒரு தனி இனமா? :unsure: அப்படியானால் தமிழ்பேசும் கிறித்துவர்களும் தனி இனமாகி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும்..! :unsure:

ஈழப்பிரச்சினை மொழிப்பிரச்சினையே தவிர மதப்பிரச்சினை அன்று என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் தமிழர் தரப்புடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இன்றியமையாதது. சிங்களவருடன் இணைந்து அவர்கள் வேலைசெய்வதுதான் நெருடல்.

இதற்கு வரவிருக்கும் கருத்து, புலிகள் முஸ்லிம்களை அரவணைக்கவில்லை என்பதாக இருக்கும். ஆனால் முஸ்லிம்களும் கிழக்கில் பாரதூரமான இனக்கொலைகளைப் புரிந்துள்ளனர். இருதரப்பும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தமிழர் எனும் ஒரு குடையின் கீழ உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே உகந்தது.

அதைவிடுத்து மதத்தின் பெயரால் ஒரு இனமாகத் தன்னை வரித்துக்கொண்டு மூன்றாவதாக ஒரு பங்கைக் கேட்பது, சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுதல் எனப்படும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஒரு தனி இனமா? :unsure: அப்படியானால் தமிழ்பேசும் கிறித்துவர்களும் தனி இனமாகி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும்..! :unsure:

ஈழப்பிரச்சினை மொழிப்பிரச்சினையே தவிர மதப்பிரச்சினை அன்று என்பது எனது கருத்து.

உண்மைதான் எனது வீட்டிலேயே இதை நான் ஆரம்பிக்கணும்

முடிவா ஏதோ தமிழனுக்கு என்னால்முடிந்தளவு பின்னால் இழுத்துவிட்டால் சரி.....

நோகாமல் நொங்கு யார் குடிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக நானே பதிந்திருந்தேன். அது அவர்களுடன் சேர்ந்து குடித்துத்தான் எனக்குத் தெரிந்திருக்கும் என்ற தங்கள் தத்துவ வித்துவம் நல்லாத்தான் இருக்கு.

துவேஷத்தை இன்னுமொரு இனத்தின்மீது கக்கிக் கொண்டு, தமிழர்களுக்கு நல்லது கிடைக்கக் போராடுவதாக/செயற்படுவதாக நினைப்பது உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக்கண்ணன் என்பதில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

தாயகப்பகுதியில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் எவ்வாறு மோதவிட்டார்கள் என்பது வரலாறாக உள்ளது. சிங்களவர்களின் தந்திரத்திற்குப் பலியாகியதை உணராமல் ஒரு பிரயோசனமும் எதிர்காலச் சந்ததிக்கு உருவாக்கமுடியாது.

நாம் நேரடியாக சொல்லும், நேரடி அனுபவங்களினூடாக சொல்லும் கருத்துக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வக்கில்லாமல், வசதிகேற்ப திரித்து, உப்புச் சப்பில்லாத தத்துவங்களாக வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உதாரணமாக முஸ்லிம்களின் வலிந்து தாக்குதல்களுக்கு தமிழனின் தற்பாதுகாப்பை இன்னொரு இனத்தின் மீதான "துவேசம்" என்று அர்த்தம் கற்பித்து இழிவுபடுத்தும் ஈனத் தத்துவவாதிகளாக, புத்தி பேதளித்தவர்களாக மாறுவது தெரிகிறது. தமிழன் தானாக முஸ்லிமுடன் வலிந்து மோதிய வரலாறு இல்லை.

பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்பவர்கள், "வரலாறு" என்று கதைவிடுபவர்கள், "தொப்பி பிரட்டி" என்பதும் ஒரு வரலாற்றுச் சொல் என்பது புரியாமல் உளறுகின்றனர். இச் சொல் இன்று நேற்று எம்மால் உருவாக்கப்பட்டதல்ல. எமது முன்னோரால் காலம் காலமாக பெற்ற அனுபவத்தால் உருவானது.

யதார்த்தம் தெரியாமல், கற்பனை உலகில் சஞ்சரித்து விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்ந்து பேசிப் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஒரு தனி இனமா? :unsure: அப்படியானால் தமிழ்பேசும் கிறித்துவர்களும் தனி இனமாகி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும்..! :unsure:

ஈழப்பிரச்சினை மொழிப்பிரச்சினையே தவிர மதப்பிரச்சினை அன்று என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் தமிழர் தரப்புடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இன்றியமையாதது. சிங்களவருடன் இணைந்து அவர்கள் வேலைசெய்வதுதான் நெருடல்.

இதற்கு வரவிருக்கும் கருத்து, புலிகள் முஸ்லிம்களை அரவணைக்கவில்லை என்பதாக இருக்கும். ஆனால் முஸ்லிம்களும் கிழக்கில் பாரதூரமான இனக்கொலைகளைப் புரிந்துள்ளனர். இருதரப்பும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தமிழர் எனும் ஒரு குடையின் கீழ உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே உகந்தது.

அதைவிடுத்து மதத்தின் பெயரால் ஒரு இனமாகத் தன்னை வரித்துக்கொண்டு மூன்றாவதாக ஒரு பங்கைக் கேட்பது, சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுதல் எனப்படும்..! :lol:

முஸ்லிம்கள் தங்களை தனியினமாக அடையாளப்படுத்திப் பல கட்சிகளை வைத்துள்ளனர். அது போலத் தமிழ்க் கிறீஸ்த்தவர்கள் இல்லை. மேலும் மலையகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் ஒன்றுதான் என்பதும் விவாதிக்கப்படவேண்டியதே.

நாம் முஸ்லிம்களை தனித்துவ இனமாக அங்கீகரிக்காததற்கு அரசியல் காரணம் இருக்கின்றது. அதுபோல முஸ்லிம்கள் தங்களை தமிழினம் என்று சொல்லாததற்கும் அரசியல் காரணம் இருக்கின்றது.

விளக்கமான கட்டுரை ஒன்று முன்னர் யாழில் இணைத்த நினைவு, கண்டுபிடித்தால் இணைப்பைத் தருகின்றேன்.

நாம் நேரடியாக சொல்லும், நேரடி அனுபவங்களினூடாக சொல்லும் கருத்துக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வக்கில்லாமல், வசதிகேற்ப திரித்து, உப்புச் சப்பில்லாத தத்துவங்களாக வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உதாரணமாக முஸ்லிம்களின் வலிந்து தாக்குதல்களுக்கு தமிழனின் தற்பாதுகாப்பை இன்னொரு இனத்தின் மீதான "துவேசம்" என்று அர்த்தம் கற்பித்து இழிவுபடுத்தும் ஈனத் தத்துவவாதிகளாக, புத்தி பேதளித்தவர்களாக மாறுவது தெரிகிறது. தமிழன் தானாக முஸ்லிமுடன் வலிந்து மோதிய வரலாறு இல்லை.

பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்பவர்கள், "வரலாறு" என்று கதைவிடுபவர்கள், "தொப்பி பிரட்டி" என்பதும் ஒரு வரலாற்றுச் சொல் என்பது புரியாமல் உளறுகின்றனர். இச் சொல் இன்று நேற்று எம்மால் உருவாக்கப்பட்டதல்ல. எமது முன்னோரால் காலம் காலமாக பெற்ற அனுபவத்தால் உருவானது.

யதார்த்தம் தெரியாமல், கற்பனை உலகில் சஞ்சரித்து விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்ந்து பேசிப் பயனில்லை.

நல்லது. உங்களின் அறிவுரையை நானும் மேற்கொள்ளத்தான் விரும்புகின்றேன். எவ்வளவுதான் எண்ணையைப் பூசி மணலில் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் (அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும்) :lol:

கூடுச் சேர்ந்து செய்யும் அராஜகங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஒரு தனி இனமா? :unsure: அப்படியானால் தமிழ்பேசும் கிறித்துவர்களும் தனி இனமாகி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும்..! :unsure:

ஈழப்பிரச்சினை மொழிப்பிரச்சினையே தவிர மதப்பிரச்சினை அன்று என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் தமிழர் தரப்புடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது இன்றியமையாதது. சிங்களவருடன் இணைந்து அவர்கள் வேலைசெய்வதுதான் நெருடல்.

இதற்கு வரவிருக்கும் கருத்து, புலிகள் முஸ்லிம்களை அரவணைக்கவில்லை என்பதாக இருக்கும். ஆனால் முஸ்லிம்களும் கிழக்கில் பாரதூரமான இனக்கொலைகளைப் புரிந்துள்ளனர். இருதரப்பும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தமிழர் எனும் ஒரு குடையின் கீழ உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே உகந்தது.

அதைவிடுத்து மதத்தின் பெயரால் ஒரு இனமாகத் தன்னை வரித்துக்கொண்டு மூன்றாவதாக ஒரு பங்கைக் கேட்பது, சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுதல் எனப்படும்..! :lol:

நேரம் கிடைத்தால் கீழுள்ள இணைப்பில் காணப்படும் கட்டுரைகளை ஆறுதலாக, ஆழமாகப் படித்துப் பாருங்கள். அதிலுள்ளவை எல்லாம் வேத மந்திரங்கள் அல்ல அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு. அவை முஸ்லிம்கள் பற்றிய புதிய பரிமாணங்களைத் தரலாம்.

http://noolaham.net/project/24/2313/2313.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் முஸ்லிம்களை சகோதரர்கள் என்றும் சொன்னாலும் முஸ்லிம்கள் அவர்கள் மதத்தை முன்னிறுத்தி தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமை கொள்கின்றனர் அவர்கள் எப்போதும் தமிழராக நினைத்ததே கிடையாது அவர்களின் நினைப்பு அவர்களின் தயவில்தான் தமிழர்கள் வாழ்வதாகவும் நினைக்கின்றனர் ஏதாவது பிரச்சனை வரும்போது அவர்கள் சிங்களவர் பக்கமே நிக்கின்றனர் இதைப்புரியாத நாம் என்னும் சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றோம்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைத்தால் கீழுள்ள இணைப்பில் காணப்படும் கட்டுரைகளை ஆறுதலாக, ஆழமாகப் படித்துப் பாருங்கள். அதிலுள்ளவை எல்லாம் வேத மந்திரங்கள் அல்ல அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு. அவை முஸ்லிம்கள் பற்றிய புதிய பரிமாணங்களைத் தரலாம்.

http://noolaham.net/project/24/2313/2313.pdf

118 பக்கங்கள் இருக்கின்றன.. படிக்க வெளிக்கிட்டால் விடிஞ்சிடும்..! :(

நிற்க.. அருகிலுள்ள இந்திய உதாரணத்தை எடுத்துக்கொண்டாலும்..

மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையிலேயே அங்கு பிரிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு அங்கே தனிக்கட்சிகள் இருந்தாலும் மொழியின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியலும் அமைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கென்று தனியான இட ஒதுக்கீடுகள் ஏதும் அங்கே இல்லை. கனடாவிலும்கூட மொழி அடிப்படையில்தான் (ஆங்கிலம், பிரெஞ்ச்) அரசியலேதவிர மத அடிப்படையில் அல்ல.

இலங்கை மட்டும் விதிவிலக்காக முயல்வது ஆச்சரியமாக இருக்கிறது. :rolleyes:

உண்மையை, யதார்த்தத்தை உணராமல் மனிதாபிமானம் போன்ற சொற்களை பயன்படுத்தி விதண்டா வாதம் செய்யும் போக்கால் தான் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான். தமிழனின் பின்னடைவுகளுக்கு இவை தான் முக்கிய காரணம். ஒன்றும் செய்யவும் தெரியாது, செய்பவர்களில் குறை கண்டுபிடிப்பதில் விண்ணர்கள்.

யாராவது ஒரு முஸ்லிம் இன்றுவரை அவன் தமிழினத்துக்கு செய்த பச்சைத் துரோகங்களை, பெருமளவு தமிழர் காணிகளை அபகரித்ததை, ....., சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழனை அழிச்ச வரலாறுகளை, தவறு என்று சுட்டிக்காட்டி, அல்லது இவற்றை தாம் செய்தோம் என்று கூரியிருப்பானா?

அதைவிட மேலாக தமிழன் சொத்துக்களை கொள்ளையடித்த, கோவிலினுள் மாட்டை வெட்டியெறிந்த ஒரு முஸ்லிம் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பள்ளிவாசல் முதல் அனைவரும் முஸ்லிம் மீது தாக்குதல் என்று கூக்குரலிடுவார்களே தவிர அவன் செய்த அயோக்கியத்தனத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இத்தகைய கூட்டத்துக்கு கொடிபிடிக்கும் கூட்டமும், கொடிபிடிப்பவர்களுக்கு கொடிபிடிக்கும் கூட்டமும் தான் தமிழினத்தின் முதலாவது பலவீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.