Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பெயர் வால் பிடித்தல், அவர் மட்டு இல்லையா? :lol: :lol: :lol:

வால் பிடித்து வாழ்ந்தவர்களுக்கு அதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது தெரிகின்றது!

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply

இன்றைய நவீன உலகில் சுதந்திரத்திற்காக போராடும் மக்கள் அமைப்புக்கள் எல்லாம் பயங்கரவாதிகள் தான்.

பயங்கரவாதி என்று சொல்லாத ஒரு விடுதலை அமைப்பை காட்டுங்கள்.

இல்லை,

இதில் விடுதலை புலிகள் மட்டும் பயங்க்ரவாதிகளாக பார்த்த படியால் தான் விடுதலை கிடைக்கவில்லை என்று இங்க சிலர் புலம்புகிறார்கள்.

இதே விடுதலிப்புலிகள் தான் பேச்சு வார்த்தையில் ஒஸ்லோ வரை வந்தார்கள்.

எல்லாம் அந்தந்த நாடுகளின் சுய நலம்.

அழிக்க பட்டதற்கு காரணம்

இப்படியே தொடர்ந்து நிலப்பரப்பை வைத்திருந்து ஆட்சி செய்தால் சிறிலங்காவை விட்டு செல்ல கூடிய ஒரு நிலை வந்து விடும்.

பேச்சு வார்த்தைக்கு தொடர்ந்து போனால் புலிகள் தங்கள் இலக்கை சாதுரியமாக நகர்த்துகிறார்கள், தொடர்ந்து நிலப்பரப்பு அவர்கள் கையில் இருக்கும்.

இதை இல்லாமல் செய்தால் மட்டுமே தொடர்ந்து போராடுவதற்கான கட்ட்மைப்பு இல்லாமல் போய் விடும்.

இந்தியனால் திட்டமிட்டு நடாத்த பட்ட இனப்படு கொலை மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அழிவுக்கு முக்கிய காரணம் தமிழகம். ஆக்கபூர்வமான எதையும் விடுதலை வீச்சு பெற்ற காலத்தில் தமிழக அரசுகள் செய்ய தவறி விட்டன. மத்திய அரசின் ஈழத்தமிழர் தொடர்பான செயற்பாடுகளை தங்கள் பலத்தால், தங்கள் ஆளுமைக்குள் கொன்டு வந்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் அரசியல் நடாத்தியது எங்கள் அழிவுக்கு காரணமாயிற்று. தமிழனே தமிழன் அழிவுக்கு காரணமாகி விட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தைக் கொன்றது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இல்லை.

மாவை தம்முடன் இணைக்க நினைக்கும் வரதராஜப்பெருமாளை இயக்கும் பயங்கரவாதிகளுக்கும், சிங்கள பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினருக்கும் தான் அதில் முக்கியபங்கு உண்டு.

விசுவின் பங்கு பற்றி இங்கு குறிப்பிட்டவை பிரபலமான செவிவழிக் கதைகளே ஒழிய, உண்மையல்ல என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மருதங்கேணி விளக்கமாக எழுதிய பின்னரும் மலையைக் குடைகொண்டு மறைப்பதாக நினைக்கும் உங்கள் முயற்சியை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.

புலிகள் இறுதிக்காலத்தில் நம்பகத்தன்மையைக் காக்க பல முயற்சிகள் மேற்கொண்டார்கள். எனினும் புலிகள் மீதான நம்பிக்கையை சர்வதேச நாடுகள் வைத்துக்கொள்ள அவர்களுடைய முன்னைய நடவடிக்கைகள் உதவவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்சு தளபதிக்கு தெரியாமல் தலைவர் கனக்க தாக்குதல்கள் செய்திருக்கின்றார் போல இருக்கு.பிரென்சு தளபதி சொல்லுகின்றார் பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில் நிகழ்ந்த கைகலப்பில் தான் அமிர் சுடப்பட்டாராம்.மாற்று இயக்கங்களை பற்றித்தான் தெரியாது என இருந்தேன் இப்ப பார்த்தல் புலிகளை பற்றியே அப்படி இப்படி போல் தான் ,வரலாறே குத்து மதிப்பில் இருக்கும் போது யோசித்தேன்.

அனுராதபுரம் தாக்குதல் ரோ சொல்லி

ராஜிவ் கொலை சீ.ஜ.ஏ சொல்லி

அமிர் கொலை பிரேமதாசா சொல்லி

அப்ப அதுதான்.

நான் பொதுமக்களுக்கு தெரிந்ததையே எழுதினேன். மருதங்கேணியின் பதிலிலும் பேச்சுவார்த்தை என்றே அவர்கள் சென்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முடிவுகள் ஏன் மாற்றப்பட்டன என இதுவரை தெரியாது என்றே குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் உள் விபரங்கள் தெரிந்த சிலர் இங்கு எழுதுகின்றனர். அதற்கு கூட இங்கு மறுப்பு வந்துள்ளது.

ஆராமுதன் தங்களுக்கு ஏதாவது தெரிந்தால் இங்கு பதியுங்கள். நாம் உண்மையை அறியவேண்டும். அதேபோல் அர்ஜீனுக்கும் ஏதாவது தெரிந்தால் பதியுங்கள். அதைவிட்டு விட்டு எனக்கு கூட தெரியும் உனக்கு தெரியாது என்பதால் எதையும் சாதித்துவிடமுடியாது. உண்மையில் தமிழர்களுக்கு நன்மை செய்ய விரும்பின் உண்மையை இங்கு எழுதுங்கள். வாசித்து பிழையிருந்தால் தெளிவுற தயாராகவே இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைக்கு என்று உள்ளே சென்றபோதே அமிரும், யோகேஸ்வரனும் கொல்லப்பட சிவசிதம்பரம் காயத்துடன் உயிர்தப்பினார்.அமிரின் மெய்காவலர்களுடனான சுடுபாட்டில் கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்பதினூடு புலிகள் தான் அமிரை கொலை செய்தார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சிறி சபாரத்தினம், பத்மநாபா போன்றோரது கொலைகள் கூட உள்வீட்டு வேலைகள்தான். <_<

அநேக அரசியல் கொலைகள், புலிகளை பயங்கரவாதிகளாக காட்டும் பிரச்சாரத்திற்கே உதவியது.

உதாரணமாக

ஜெயசுக்குறு நடவடிக்கையில் இராணுவம் மிக மோசமான தோல்வியடைந்த நிலையிலும், மார்கழி 1999 இல் சந்திரிக்காவுக்கு குண்டு வைக்கப்பட்டது. அதில் அவரது கண்பார்வை பாதிக்கப்பட்டது. சந்திரிகா சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்து, புலிகள் பயங்கரவாதிகள் என்பதற்கு தானே நல்லதொரு சாட்சி என்று பிரச்சாரம் செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

பிரபாகரன் என்னும் மனிதர் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தலைவர்தான். புலிகள் உங்களுக்கெப்படியோ எனக்கும் அப்படியே. ஆனால் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்படவேண்டும் என்பதுதான் எனது வாதம். ஒரு முள்ளிவாய்க்கால் போதும்.

சித்தன், நக்கல் நைய்யாண்டி எல்லாம் இருக்கட்டும், விடயத்துக்கு வாருங்கள். புலிகள் ஏன் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டார்கள் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்??

உலகில் பணக்காரர்கள் செய்தால் போர்.............

அதையே ஏழைகள் செய்தால் பயங்கரவாதம்.

உலகிற்கே ஒரு போராளியாக காட்சியளித்த செகுவாரா எப்படி அமெரிக்கர்களுக்கு பயங்கரவாதியானார்?

தெற்காசியாவிற்கே போராளியாக காட்சியளித்த சுபாஸ் சந்திரபோஸ் எப்படி பிரித்தானியாவிற்கு பயங்கரவாதியானர்??

அடுத்த நாடுகளை நித்தமும் சண்டைக்கு அழைத்து அப்பாவிகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல் எப்படி ஜனநாயக நாடாக சர்வதேசத்தில் விளங்குகிறது??

புலிகளும் அப்படிதான் பயங்கரவாதிகள் ஆக்கபட்டார்கள்.

இந்த நிலமை மாறவேண்டும் என்றால் தமிழர்கள் தமக்கென ஒரு பொருளாதாரத்தை கடடியெழுப்ப வேண்டும். உலகம் பூராக பரந்து வாழுவோருக்கு இது மிகவும் எளிதான ஒன்று. ஆனால் அதை தமிழர்களுக்கு சொல்லி புரிய வைப்பதுதான் முடியாத ஒன்று. (கிட்டதட்ட மக்களே விழியுங்கள் விழியுங்கள் என்று 30 வருடம் புலிகள் கத்தியபோது யாருக்கும் புரியவில்லை. இப்போது போராட்டம் மக்கள் மய படுத்தபடவில்லையாம்)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட மக்களே விழியுங்கள் விழியுங்கள் என்று 30 வருடம் புலிகள் கத்தியபோது யாருக்கும் புரியவில்லை. இப்போது போராட்டம் மக்கள் மய படுத்தபடவில்லையாம்

விழித்தவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வந்துவிட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

விழித்தவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி வந்துவிட்டார்கள்!

[/quote

இவ்வளவு செல்லடி சத்தத்திற்குள்ளும் அங்கே இருந்தவர்கள் நித்திரை செய்தது யார் தவறு?

அதற்கும் இனி ஒடியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வால் பிடித்து வாழ்ந்தவர்களுக்கு அதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்பது தெரிகின்றது!

அட புஸ்ஸுன்னு கோவம் வந்துட்டுதா, நான் சும்ம தமாஸா சொன்னத நீங்க உன்மை என்று நம்பீட்டீங்க போலஇருக்கு :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் செய்ததாக நீங்கள் கருதுகின்ற கொலைகள், குண்டுவெடிப்புக்களில், அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சம்பவங்கள் எவை எனக் கூற முடியுமா? :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nunavilan' timestamp='1310722980' post='673899']

பேச்சுவார்த்தைக்கு என்று உள்ளே சென்றபோதே அமிரும், யோகேஸ்வரனும் கொல்லப்பட சிவசிதம்பரம் காயத்துடன் உயிர்தப்பினார்.அமிரின் மெய்காவலர்களுடனான சுடுபாட்டில் கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்பதினூடு புலிகள் தான் அமிரை கொலை செய்தார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

கொலையில் தொடங்கி கொலைகளில் முடிந்தது எமது போராட்டம்.

இனியாவது உருப்படியாக மனிதத்துடன் சிந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் செய்ததாக நீங்கள் கருதுகின்ற கொலைகள், குண்டுவெடிப்புக்களில், அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சம்பவங்கள் எவை எனக் கூற முடியுமா? :unsure::rolleyes:

வெறும் பயபுள்ளையாக இரிக்கீங்க. :lol:

தமிழர் தாயகப் பகுதிக்கு அப்பால் இராணுவ ரீதியான தாக்குதல்கள் மட்டுமே உரிமை கோரப்பட்டன. மற்றவை ஒன்றில் மறுதலிக்கப்பட்டன அல்லது மெளனம் காத்தன.

  • கருத்துக்கள உறவுகள்

கொலையில் தொடங்கி கொலைகளில் முடிந்தது எமது போராட்டம்.

இனியாவது உருப்படியாக மனிதத்துடன் சிந்திப்போம்.

இனி அடுத்த கட்ட போராட்டத்தில் கொலைகள் செய்வது குண்டுகள் போடுவதை நிறுத்தி விட்டு.............

சிங்களவரை கட்டிபிடித்து கொஞ்சுவோம். முன்னணி; படையதிகாரியாக தயவு செய்து என்னையும் நியமியுங்கள்.

கல்லுரி ஏரியாக்களை கட்டுபாட்டுக்குள் வைததிருப்பது என்னுடைய பொறுப்பு.

... எம் போராட்டாம் அழிந்ததே ... தமிழனுக்கு எதிராக தமிழனின் ஆயுதம் திரும்பியதினால்தான்!!! ...

... ... அமிர்தலிங்கம் துரோகி? இல்லை? என்பதற்கு மேல் ... அமிர்தலிங்கத்தின் கொலையில் புலிகளின் தலைவரின் உத்தரவு இன்றியே நடாத்தப்பட்டது! ... அக்காலத்தில் கொழும்பில் தங்கியிருந்த மாத்தையா வழங்கிய உத்தரவில், விசு தலைமையிலான குழு சென்று(தம்முயிருக்கும் ஆபத்து என்று அறிந்தும் கூட) இக்கொலையை செய்தனர்! ... அக்காலகட்டத்தில் பிரேமதாஸ-புலிகளின் பேச்சுக்கள் இடம்பெற்றதும், அதில் இந்தியா குழம்பியதும் தெரிந்ததே! அப்போது இடம்பெற்ற பேச்சுக்களை குழப்பவே ... அமிர்தலிங்கத்தின் கொலையும்!!!

... பின்னாளில் தமிழ்ச்செல்வனின் குழி பறிப்புக்கு இரையாகி, தற்போது லண்டனின் வசிக்கும் ஓர் மூத்த புலி, விசுவின் நெருங்கிய நண்பர்! ... பின் மாத்தையாவின் விசாரணகள் நடைபெற்றபோது (சுசீலன் போன்றவர்களிடன் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில்) ... இக்கொலையின் பின்னணி, இந்தியாவே என தெரிந்ததாக உறுதியாக சொல்கிறார்.

இக்கொலையின் பின்னணிகள் ... பின்பொரு காலத்தில் வெளிவிடுவோம் என இருந்து விட்டார்களோ??? தெரியவில்லை!!! ... அதன் முன் எல்லாம் முடிந்து விட்டது!

... இவைகளுக்கு மேல் வரதர் வந்தால் என்ன டக்லஸ் வந்தால் என்ன ... உண்மையில் திருந்தி, தமிழினத்தின் விடிவிற்காக உழைப்போம் என்று வந்தால் ... அரவணைப்பதில் எந்தப்பிழையும் இல்லை! ... முன்பு செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை அரவணைக்கவில்லையா??? ... இல்லை அவர்கள் நல்லவர்களாக கடந்த காலங்களில் இருந்தார்கள் என அரவணைக்கப்பட்டனரா?????????

Edited by Nellaiyan

இனி மாத்தையா சொல்லி செய்தார்கள் இல்லை வேற ஒருவர் சொல்லி செய்தார் என்பது எடுபடாது. ( சில நேரம் உடனடியாக மன்னிப்பும் அதுக்குரியவர்களை தண்டித்து இருந்து இருக்கலாம்) அதை விடுத்து பாரிய முக்கிய முடிவில் எல்லாம் மத்தையா செய்தார் தலவருக்கு தெரியாது (உண்மையில் தெரியாமல் இருக்கலாம்) என்று விட்டு 20 25 வருடங்களுக்கு பின் மன்னிப்பும் மற்றவர்கள் மீது பழியை போடுவது நொண்டிச்சாக்கு.

ராஜீவையும் மாத்தையாவ போடச்சொன்னார்? இத்தனைக்கும் மாத்தையாவை 'ரோ' வழிநடத்தும் போது?

இவர்கள் கொல்ல படக் கூடாது என்பதுக்கு அப்பால் பின்விளைவுகளை யோசித்து செய்த்து இருக்கலாம் என்பது என்கருத்து.

ராஜிவ் வந்தால் மீண்டும் இராணுவத்தை அனுப்பி புலிகளை அழிப்பார் என்பது முட்டாள்த்தனமான கருத்து( ஏன் ராஜிவை கொன்றதுக்காக கூட இராணுவத்தை அனுப்பி அழிக்கலாம் தானே?

கொலை செய்து அந்த பழியோடு பிரச்சனைக்கு முன் கொடுப்பதை விட அவனை கொல்லாமலே அவன் மூலம் வரும் பிரச்சனையை முகம் கொடுத்து இருக்கவேண்டும் ( ஆதரவும் கிடைக்கும் இந்திய தமிழர்களின்)...............

மேஜர் விசு அல்வாயை சேந்தவர் என்று நினைக்கிறேன்.

அமீரை கொலை செய்ய போவது தலைவருக்கு தெரியாது என்பது சுத்த பொய்.

விசுகு மற்றும் 2 போராளிகளும் அமீரை ஏற்கனவே 2 தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது எல்லாம் அமிரின் மெக்காப்பளர் விசுவிடமும் மற்ற போராளிகளிடமும் இருக்கும் கைத்துப்பாக்கியை வாங்கி விட்டு சோதனை நடத்திவிட்டு தான் உள்ளே அனுமதிப்பார்கள் இரண்டாம் தடவையும் அப்படி நடந்த்து , பின் 3 ம் தடவை விசு ஆக்கள் ஆளுக்கு 2 2 பிஸ்டல் கொண்டு சென்றார்கள் அதில் ஒவன்றை தாங்களாகவே எடுத்து கொடுத்து விட்டு மேற்க் கொண்டு விசாரனையில்லம உள்ளே செல்ல அனுமதிக்க பட்டார்கள். அங்கு போய் கைவரிசையை காட்டி விட்டு வெளியே வரும் போது மெய்க்காப்பாள்ரினால் விசுவும் மற்றவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், 3வது போராளி ஓடி மதிலை தாண்டும் போது சுடப்படுகிறார்கள்........................

இப்படி தான் நான் கனவு கண்டேன்......................

இனி அடுத்த கட்ட போராட்டத்தில் கொலைகள் செய்வது குண்டுகள் போடுவதை நிறுத்தி விட்டு.............

சிங்களவரை கட்டிபிடித்து கொஞ்சுவோம். முன்னணி; படையதிகாரியாக தயவு செய்து என்னையும் நியமியுங்கள்.

கல்லுரி ஏரியாக்களை கட்டுபாட்டுக்குள் வைததிருப்பது என்னுடைய பொறுப்பு.

இதுவரை புலிகளாம் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புனிதமானவர்கள் இல்லை அல்லது கொல்லப்படகூடாதவர்களும் இல்லை ஆனால் ஒருவனை கொல்லும் போது அவனின் ஆவி எழும்பி அடிக்காமல் இருக்க வேண்டும், அல்லது கொன்றபின் வரும் பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டும் முடியாவிட்டால் அவனை கொல்லாது அவனால் வரும் பிரச்சனையை முகம் கொடுத்து இருக்க வேண்டும்.

வித்தியாதரன் சொன்னது.தான் உதயனில் அமிரின் கொலைக்கு மிக காட்டமாக எடிட்டோரியல் எழுதியதாகவும் பின்னர் பல வருடங்களின் பின் பிரபாகரனை சந்திக்கும் போது அதை அவர் நினைவு படுத்தியதாகவும்.

இவர்கள் கொல்ல படக் கூடாது என்பதுக்கு அப்பால் பின்விளைவுகளை யோசித்து செய்த்து இருக்கலாம் என்பது என்கருத்து.

இதை சொல்லவேண்டியது இந்தக் கொலைகளை அரங்கேற்றிய அயல்நாட்டு பயங்கரவாதிகளிடமும், சிங்களப் பயங்கரவாதிகளிடமும் தான்.

மருதங்கேணி விளக்கமாக எழுதிய பின்னரும் மலையைக் குடைகொண்டு மறைப்பதாக நினைக்கும் உங்கள் முயற்சியை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.

புலிகள் இறுதிக்காலத்தில் நம்பகத்தன்மையைக் காக்க பல முயற்சிகள் மேற்கொண்டார்கள். எனினும் புலிகள் மீதான நம்பிக்கையை சர்வதேச நாடுகள் வைத்துக்கொள்ள அவர்களுடைய முன்னைய நடவடிக்கைகள் உதவவில்லை.

சிலருக்கு வால்பிடிப்பதால் மட்டுமட்டான ஆதரவும் உண்டு என்கிற தைரியத்தில் எப்பவுமே மலையைக் குடைகொண்டு மறைக்க முடியும் என்ற தனது எண்ணத்தை மற்றவர்கள் மேல் சுமத்தி தொடர்ந்து மகிழும் சிலரை அதுபாட்டுக்கு ஓரமாக நின்று ...... விட்டு போகட்டும் என்று விட்டுவிடவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பயபுள்ளையாக இரிக்கீங்க. :lol:

தமிழர் தாயகப் பகுதிக்கு அப்பால் இராணுவ ரீதியான தாக்குதல்கள் மட்டுமே உரிமை கோரப்பட்டன. மற்றவை ஒன்றில் மறுதலிக்கப்பட்டன அல்லது மெளனம் காத்தன.

ஆகா.. இதை.. இதை.. இதைத்தான் எதிர்ப்பார்த்தன்..! :lol:

ஆக, புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.. அவ்வளவே.. :wub: இதை எந்த நீதிமன்றத்தில் நிருபித்தார்கள்..! கண்டிப்பாக இலங்கை, இந்திய நீதிமன்றங்களில் மட்டுமே நிருபிக்கப்பட்டிருக்கிறது. :unsure:

ஆனால் இவை நிருபிக்கப்பட்ட முறை அனைத்துமே சூழ்நிலைச் சான்றுகளைக் (circumstantial evidences) கொண்டே தவிர, பௌதீகப் புலனாய்வின் அடிப்படையில் (Hard Forensic Evidence) அடிப்படையில் நிருபிக்கப்படவில்லை..! :rolleyes:

வளர்ச்சியடைந்த நாடுகளில் சூழ்நிலைச் சான்றுகளை வைத்து குற்றத்தை நிரூபிப்பது இமயத்தைக் கயிறுகொண்டு இழுப்பது போன்றது..! இலங்கை, இந்திய கங்கரு நீதிமன்றங்களிலேயே இவை சாத்தியம்..! மேலை நாடுகளில் வாழும் நாம் அவற்றை ஏற்க வேண்டியதில்லை..! :wub:

ஆகையால், புலிகள்மீதான் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லை..! இதை அடிப்படையாகக் கொண்டு மேலைநாடுகளில் புலிகளுக்கெதிரான தடைகளுக்கு எவ்விதமான பௌதிகச் சான்றுகளை இந்த நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும், தடையை விலக்கவும் வழக்குத் தொடுக்க வேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இசை இத்தனை அலைச்சலும் பணச்செலவும் பெரியவர்களின்பகையும்

இருக்கவே இருக்கிறார்கள் புலிகள்

அவர்கள் மேல் போட்டுவிட்டால் ஒரு கல்லில் பல மாங்காய்கள்.

நாய் எங்கு அடிபட்டாலும் காலைத்தானே தூக்குது. அது விதியாகும்போது..........???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தூக்கி வீசப்பட்ட அரசியல்வாதிகள் இந்த அமிர்தலிங்கம் வரதராஜப்பெருமாள் இவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா ?

ஒரு செய்தியாக பார்க்கமுடியுமே தவிர ஆய்வு செய்யத்தேவையில்லை என்பதே எனது கருத்து.

நிச்சயமாக அவசியமற்றது. யாழ் களத்தில உள்ள சிலர்.. மாற்றுக் கருத்தை வரவேற்பதன் மூலம்.. தமிழர்களுக்கு ஜனநாயகப் பாடம் படிபிக்கலாம் என்று நினைக்கினம் போல. ஆனால் நிச்சயமாக.. அமிர்தலிங்கம்.. வரதராஜப் பெருமாள் போன்றவர்களால்.. ஜனநாயகம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழினமும் சீரழிவை சந்தித்ததே அதிகம்..!

இவர்கள் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து கிழித்தெறியப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

ஆகா.. இதை.. இதை.. இதைத்தான் எதிர்ப்பார்த்தன்..! :lol:

ஆக, புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.. அவ்வளவே.. :wub: இதை எந்த நீதிமன்றத்தில் நிருபித்தார்கள்..! கண்டிப்பாக இலங்கை, இந்திய நீதிமன்றங்களில் மட்டுமே நிருபிக்கப்பட்டிருக்கிறது. :unsure:

ஆனால் இவை நிருபிக்கப்பட்ட முறை அனைத்துமே சூழ்நிலைச் சான்றுகளைக் (circumstantial evidences) கொண்டே தவிர, பௌதீகப் புலனாய்வின் அடிப்படையில் (Hard Forensic Evidence) அடிப்படையில் நிருபிக்கப்படவில்லை..! :rolleyes:

வளர்ச்சியடைந்த நாடுகளில் சூழ்நிலைச் சான்றுகளை வைத்து குற்றத்தை நிரூபிப்பது இமயத்தைக் கயிறுகொண்டு இழுப்பது போன்றது..! இலங்கை, இந்திய கங்கரு நீதிமன்றங்களிலேயே இவை சாத்தியம்..! மேலை நாடுகளில் வாழும் நாம் அவற்றை ஏற்க வேண்டியதில்லை..! :wub:

ஆகையால், புலிகள்மீதான் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லை..! இதை அடிப்படையாகக் கொண்டு மேலைநாடுகளில் புலிகளுக்கெதிரான தடைகளுக்கு எவ்விதமான பௌதிகச் சான்றுகளை இந்த நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதை அறியவும், தடையை விலக்கவும் வழக்குத் தொடுக்க வேண்டும்..! :rolleyes:

சீனாவை நோக்கி நாங்கள் நெருங்கினால்.. புலிகள் மீதான தடை தன்பாட்டில நீங்கும். தேடி தேடி ஆயுதமும் தந்து ஏன் ஈழமும் தருவாங்க. இப்ப லிபியாவில் செய்துக்கிட்டு இருக்கிறது போல. கொசவோப் பிரச்சனைக்குப் பிறகு அமெரிக்காவின் war strategy... தொடர் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.