Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளின் தொகுப்பு

Featured Replies

அகில உலகமும் எதிர்பார்க்கும் தேர்தலா இது?

அது கஸ்டமான கேள்வி மறுமொழி சொல்ல. யார் தான் சொல்லமுடியும் இந்த தேர்தலில் உலகம் எதை எதிர்பார்க்கிறது என்று.

1. இது சிறிய உள்ளுராட்சி தேர்தல்.

2. தமிழ்மக்கள் இந்தமுறை மட்டுமின்றி எப்போதுமே தமது ஊரிமைகளை கேட்டுத்தான் வாக்களிக்கிறார்கள்.

ஆனால் மகிந்தா குத்தியன்களையும், குட்டிகளையும் அங்கேகொண்டே வைத்திருந்து ஆடிய ஆட்டம், உலக நாடுகள் மீது எமக்கு ஒரு கரிசனையையும், எதிபார்ப்பையும் எற்படுத்தியது.

Edited by மல்லையூரான்

நரியரின் கட்சி கண்டி போன்ற இடங்களில் கூட ஒருசபையையும் பிடிக்கவில்லை. அதனால்தான் போல நரியர் மகிந்தவோடை மாதிரி நடிச்சவர்.

மிகப்பஎரும் அச்சுறுத்தலிற்கு மத்தியில் கிளி நொச்சி கரைச்சி மக்கள் மஹிந்தவிற்கு நல்ல அடிகொடுத்துள்ளனர்.

19 இடங்களில் 15 இனை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூஉராட்சி தேர்தலில் கூட்டமைப்பு அதிகூடிய வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றன. வடக்கு கிழக்கில் மொத்தமாக 4 நகர சபைகள் 25 பிரதேச சபைகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து நகர சபைகளினையும் கைப்பற்றியுள்ளது. பிரதேச சபைகளில் வேலணை, ஊர்காவற்றுறை,குச்சவெளி,சேருவெல ஆகிய இடங்களினை தவிர அனைத்து பிரதேச சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

Election%20results.jpg

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Edited by உமை

ஊரிலை சனம் வெடி கொளுத்தாது. யாழிலை ஏதாவது படங்களையாவது போடுங்கோ.

யாழ் தேர்தல் முடிவுகள் ஆய்வுக்கும், அலசலுக்கும்

post-7649-0-98575900-1311476568_thumb.gi

மகிழ்ச்சியான செய்தி.மீண்டும் உலகிற்கு தமிழர்கள் தனித்துவமான இனம் என்பதை எம் தாயக உறவுகள் நிரூபித்துள்ளார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த உள்ளூஉராட்சி தேர்தலில் கூட்டமைப்பு அதிகூடிய வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றன. வடக்கு கிழக்கில் மொத்தமாக 4 நகர சபைகள் 25 பிரதேச சபைகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து நகர சபைகளினையும் கைப்பற்றியுள்ளது.

thumb_smileyvault-cute-big-smiley-animated-028.gif......thumb_smileyvault-cute-big-smiley-animated-031.gif.......thumb_smileyvault-cute-big-smiley-animated-053.gif

காலையில் நல்ல செய்தி.

இன்னல்களுக்கிடையேயும் உணர்வுடன், ஒற்றுமையாக, உலகிற்கு செய்தி சொல்லி தமிழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தமிழருக்கு பெரு வெற்றி 18 சபைகளும் கூட்டமைப்பு வசம்; ஈ.பி.டி.பியினருடன் இணைந்து களமிறங்கிய ஆளும் கட்சி தோல்வி

[sunday, 2011-07-24 07:16:58]

நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது. அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது. யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்களிப்பு இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.

அரச தரப்பினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமக்குப் பெரு வெற்றியை ஈட்டித் தந்த தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை வென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்ந்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி வேலணை பிரதேச சபை மட்டும் அரசு பக்கம் போக எஞ்சியவற்றில் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=47041&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்தது விஜகலாவின் காரைநகர் கோட்டை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடி பறக்கிறது

Sunday, July 24, 2011, 8:47

சிறீலங்கா

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மககேஸ்வரனின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த காரைநகரும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வந்துள்ளது.இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி வாக்குகள் 1,781 ஆசனங்கள் 3, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்குகள் 1,667 ஆசனங்கள் 1 ,ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் 921 ஆசனங்கள் 1 பெற்றுள்ளன.

http://www.tamilthai.com/?p=22524

சிங்கள அரசு மீது மக்கள் நம்பிக்கை இழுந்துள்ளனர் என்ற செய்தியை உலகிற்கு இந்த தேர்தல் மூலம் எமது உறவுகள் கூறியுள்ளனர். தாயக மக்களின் தீர்ப்புக்கு ஆணைக்கு சர்வதேச ஆதரவு சேர்க்கவேண்டிய கடமை புலம்பெயர் மக்களை சேர்ந்துள்ளது.

பல ஆண்டுகள் சந்தித்த போர் அவலம், தொடரும் போர்குற்றவாளிகளின் இனஅழிப்பு அரசியல், இராணுவ அடக்குமுறை, ஒட்டுக்குழுக்கள் - இவை அனைத்துக்கும் மேலாக மகிந்தரே நேரில் வந்து அரசியல் வெருட்டு - இத்தனையும் இருந்தும் தாயக மக்கள் மிக துணிவாக தமது ஆணையை கூறியுள்ளார்கள். இந்த துணிவுக்கு தலைவணங்கியே ஆகவேண்டும்.

போர்குற்ற விசாரணைகளை முன்னெடுத்து, பொருளாதார தடைகளை அமுல்படுத்தி, இறுதியில் ஒரு ஐ.நா. கண்காணிப்புடன் ஒரு தேர்தலை - மக்கள் ஆணையை கேட்டு, நாம் பிரிந்துபோவதே இறுதித்தீர்வாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்களின் கருத்துபடி இது வரை பிள்ளையான் அச்சாபிள்ளை போல இருக்கிறது.

கொஞ்சம் அரசியலும் செய்ய வெளிக்கிட்டவர். சரி வராது என்று இப்ப தெளிவாகத் தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை சோதனைகளின் மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற பாடுபட்ட.. மற்றும் வாக்களித்த அன்பார்ந்த தமிழீழ மக்களுக்கு நன்றிகள். இந்த நன்றி உணர்வை.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்காத தமிழ் தேசியத்தை நேசிக்கும் இதர ஒரு சில கட்சிகளுக்கும் தெரிவித்தாக வேண்டும். அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக் கோரிய தமிழக சொந்தங்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்கள் வழங்கி உள்ள ஆணையை சரியாக பயன்படுத்தி அவர்களின் துன்பங்களில் இருந்து அவர்களை மீட்கும் கைங்கரியங்களை செய்வதோடு.. மிகப் பெரிய பொறுப்பாக.. சிங்கள இனவாத அரசின் அக்கிரமங்கள்.. ஆக்கிரமிப்புக்கள்.. இராணுவ மேலாதிகங்களில் இருந்து அவர்களை ஜனநாயக வழியில் போராடி மீட்டு சர்வதேசத்தின் உதவியோடு உருப்படியான அரசியல் உரிமையைப் பெற்றும் கொடுக்க வேண்டும்.

இதுவே புலம்பெயர் தமிழ் மக்களின் விருப்பும் கூட. தேர்தல் வெற்றியோடு சுருண்டு படுத்துக் கொண்டு மக்கள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுவதை மேலும் மேலும் விடுப்புப் பார்க்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கக் கூடாது. சிங்கள அரச பயங்கரவாதம் குறித்து உலகின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு வந்து.. அதனைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் அது குறித்துப் பேசுவதோடு இராணுவ மயமாக்கல்.. இனத்துவருவமயமாக்கல்.. சிங்கள குடியேற்றங்கள்.. தமிழ் பேசும் மக்களின் உரிமை பறிப்பு பற்றியும் பேச வேண்டும்.

முஸ்லீம் காங்கிரஸ்.. இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டிருந்தாலும்.. தமிழ் மக்களோடு சேர்ந்து வாழும் சமூகத்தினர் என்ற வகையில் முஸ்லீம் மக்களின் குறைகளையும் நிறைகளையும் செவிமடுத்து அவர்களின் அரசியல் விருப்பங்களும் நிறைவேறும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. செயற்பட்டு தன்னை அரசியல் ரீதியிலும் இராஜதந்திர ரீதிலும் இன்னும் இன்னும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக.. காட்டிக் கொடுக்காத கட்சியாக வளர்க்க வேண்டும். அதுவே தமிழர்களுக்கு தாயகத்தில் தற்காலிக ஆறுதலாக முடியும்.

மேலும் கிழக்கில்.. குச்சவெளி.. கந்தளாய் போன்ற தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் உள்ளடங்கிய சில பிரதேச சபைகளையும் வடக்கில் தீவகத்தில் காரைநகர் தவிர்ந்த பிற பிரதேச சபைகளையும் சிங்கள இனவாதக் கட்சிகள் கைப்பற்றி உள்ளன. இது குறித்த சரியான மதிப்பீடும்.. காரணங்களும் கண்டறியப்பட்டு அந்த மக்களின் தேவைகள் உணரப்பட்டு அவர்களின் குறைகளை நீக்கி.. அந்த மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் நெருங்கி அரவணைக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களின் வாக்குகளையும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக பெற்றுக் கொள்ள முனைய வேண்டும்.

Edited by nedukkalapoovan

சரிந்தது விஜகலாவின் காரைநகர் கோட்டை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடி பறக்கிறது

Sunday, July 24, 2011, 8:47

சிறீலங்கா

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மககேஸ்வரனின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த காரைநகரும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வந்துள்ளது.இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி வாக்குகள் 1,781 ஆசனங்கள் 3, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்குகள் 1,667 ஆசனங்கள் 1 ,ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் 921 ஆசனங்கள் 1 பெற்றுள்ளன.

http://www.tamilthai.com/?p=22524

எத்தனை நாள் தான் மகேஸ்வரனை வைத்து பேய்க்காட்டுவது. இரட்டை முகம் மக்களுக்கு தெரிஞ்சு போச்சு.

கிருபன் உங்களின் கருத்துபடி இது வரை பிள்ளையான் அச்சாபிள்ளை போல இருக்கிறது.

அவர் சொல்ல வாரது இனி முழ்நேரவேலையாக அதைசெய்யவேண்டும்.

சரிந்தது விஜகலாவின் காரைநகர் கோட்டை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொடி பறக்கிறது

Sunday, July 24, 2011, 8:47

சிறீலங்கா

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மககேஸ்வரனின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த காரைநகரும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வந்துள்ளது.இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி வாக்குகள் 1,781 ஆசனங்கள் 3, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்குகள் 1,667 ஆசனங்கள் 1 ,ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் 921 ஆசனங்கள் 1 பெற்றுள்ளன.

http://www.tamilthai.com/?p=22524

மகேஸ்வரனின் கொலையை மக்கள் மறக்கவில்லை ஆனால் விஜயகலா மறந்து ஒரு மேடையில் மகிந்தாவுக்கு இடதுபக்கம் அவா அடுத்த பக்கம் டக்கிளஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதப் பேய் மகிந்தனையும் அவனது ஏவல் நாய்க்கூட்டத்தையும் ஓட ஓட விரட்டிய தாயக மக்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் !!!!! பேரிழப்பின் மத்தியிலும் சிறியதோர் வெற்றி !!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு கிடைத்த இந்த வெற்றி மகிந்தவுக்கு கிடைத்திருந்தால் பயங்கரவாதத்தை அழித்ததுக்கு தமிழ்மக்கள் தந்த வெற்றி என்று உலகக்கு அறிவித்து தன் மீதான போர்க்குற்றங்களில் இருந்தும் சர்வதேச அழுத்தத்தில் இருந்தும் தப்பியிருப்பான்.கூட்டமைப்பு கிடைத்த இந்த வெற்றியை சாதாரண உள்ளுராட்சி சபைத் தேர்தல்தானே என்று பேசாமல் இருந்துவிட்டு அடுத்த பொதுத் தேர்தல் வரும்போது மீண்டும் மக்கள் முன் முகம் காட்டாமல் இந்த வெற்றியைச் சர்வதேசத்திற்கு உரியமுறையில் அறிவித்து தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற சார்பில் வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைக்கான ஒரு சர்வசனவாக்கெடுப்புக்கு கோரவேண்டும்.

நெருக்கடிக்கு மத்தியிலும் பொட்டில் அடித்தாற்போல் உலகத்துக்கு செய்தி சொன்ன தமிழ்மக்களின் துணிச்சலுக்கும் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதலுக்கும் தலை வணங்குகிறேன்.

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை.உரிமை குறித்துப் பேசும் நேரம் இதுவல்ல.மககளின் மீள்கட்டுமானத்திற்கு பிச்சை போடுவதே முக்கியமானது என்று தமிழ்மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முற்படும் கேபி கும்பலுக்கு இந்த வெற்றி மூலம் தமிழ் மக்கள் ஆப்படித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பு அரசியலுக்கு வெற்றி! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பரணிகிருஸ்ணரஜனி.

மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள - பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம்.

இது சிங்களத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி. இந்த உளவியலிலேயே நாம் தொடர்ந்து இருக்கும் வண்ணமாக சிங்கள அரசு கவனமாகக் காய்களை நகர்த்தி;க்கொண்டிருக்கிறது. போரில் பாரிய வெற்றியை பெற்றபோதும் அதை இறுதியும் அறுதியுமான வெற்றியாக்கிக் கொள்ள போராடியவர்கள் மீதும் அதற்கு தோள்கொடுத்த மக்கள் மீதும் மிகப்பெரிய மனிதப்பேரவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது சிங்கள அரசு. திட்டமிட்டே சிங்கள் அரசு நடத்தும் இந்த கபட நாடகத்தை புரிந்து கொள்ள முடியாமல் பலர் சிங்களத்தின் காலடியில் 'பொத்துபொத்து' என்று விழத்தொடங்கியிருக்கிறார்கள். தெரியாமல் விழுந்தவர்கள் பாதி 'தெரிந்தே' விழுந்தவர்கள் மீதி என்று வேறொருவகை அவலம் எமது இனத்தின் எதிர்காலத்தின் மீது இருளாய் கவியத் தொடங்கியிருக்கிறது.

எதிர்ப்பு அரசியலை எப்படி செய்யப்போகிறோம் என்று சிந்தித்து செயற்பட வேண்டிய ஏன் நாம் சிங்களத்திற்கெதிராக எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டும் என்று மீண்டும் 60 வருடத்திற்கு முன் நோக்கி சுருங்கியது ஒரு அவலமான வரலாற்று முரண். மே18 உடன் முடிந்து போன ஆயுதப்போராட்டத்தின் பின் இந்தக் கணம்வரை இந்த கால இடைவெளியில் சிங்களத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை செய்வதற்கு சாத்தியமான நம்பிக்கை தரும் ஒரு சிறு சமிக்ஞைகூட தெரியவில்லை. மாறாக பெரும் பேரவலத்தை சிங்களம் கட்டவிழ்த்துக்கொண்டே இ;ருக்கிறது. ஆனால் தமிழத்தேசிய அரசியல் செய்பவர்கள் தொடக்கம் கேபி வரையான ஒரு தொகுதியினர் சிங்களத்துக்கு 'மனம் நோகாமல்' நடப்பது குறித்து வகுப்பெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கூட இந்த இணக்க அரசியலின் வலைக்குள் வீழந்தவர்களாகவே இருந்தார்கள்.

சிங்களத்துடன் இணக்கபாட்டு அரசியல் மூலம் நாம் எதையும் பெற முடியாது. அரசியலை விடுவோம். மக்கள் துயரங்களைக்கூட போக்க முடியாது. ஏனெனில் திட்டமிட்டே அயiவெயin செய்யப்படுகிற விடயம் இது. பேரம் பேசும் ஒரு வல்லமையை உருவாக்குவதுதான் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாக இருக்க முடியும். எல்லாம் முடிந்துவிட்டது என்று அவல அடிபணிவு ஒப்படைவு அரசியலை செய்யமுடியாது. ஏனெனில் சிங்களம் அதையும் தனக்கு சாத்தியமாக மாற்றுமே தவிர ஒரு சிறு உரிமையைக்கூட தராது. முள்ளிவாய்க்கால் அழிவை அடுத்து முதலில் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட இடைப்பட்ட இந்த காலம் மேற்படி யதார்த்தைத்தான் எமக்கு போதித்திருக்கிறது.

போரில் நலிவடைந்த - விரட்டப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை.. அவர்களது வாழ்விடங்களும் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் மீளமைக்கப்பட வில்லை.. ஆனால் மிகத்துரிதமாக சிங்கள குடியேற்றங்களும் புத்தவிகாரைகளும் தினமும் தமிழர் தாயகம் எங்கும் முளைத்தபடியே இருக்கின்றன. எந்த சக்தியாலும் இவற்றை தடுக்கமுடியவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் மீளக் குடியேற்றப்பட்டாலும் திடீரென முளைத்த சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களும் பௌத்த மேலாதிக்க மத அடையாளங்களும் ஏற்கனவே போரில் அழிந்து போன வாழ்வை கட்டமைக்க முயலும் தமிழ் மக்களுக்கு மேலதிக வாழ்வியல் பௌதிக பொருண்மிய பண்பாட்டு சிக்கலை உருவாக்கும்.

இது வேறு ஒரு வகை அவலமாக அந்த மக்களுக்கு இருக்கும். இவை எல்லாவற்றையும் உற்று நோக்கும்போது மிக நுட்பமான முறையில் ஒரு அடக்குமுறையை சிங்களம் கையாள்வதாகவே தெரிகிறது. எம்மில் ஒரு தொகுதியினரே இன்று இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் நிலையிலிருந்து இந்த முரண் அவலத்தை புரிந்து கொள்ளலாம்.

எதிர்ப்பு அரசியல் என்றவுடன் ஏதோ ஆயுதப்போராட்டம் என்பதுபோல் பலர் கற்பனை செய்து வியாக்கியானங்களை அடுக்குகிறார்கள். இன்னொரு அவலத்திற்கு தூபம் போடுகிறார்கள் என்று உளறவும் தலைப்படுகிறார்கள். எதிர்த்தரப்புடன் பேரம் பேசும் வல்லமையை வளாத்துக்கொள்ளும் எல்லா மக்கள் செயற்பாடுகளும் எதிர்ப்பு அரசியல் வகைமைக்குள் வரும்.

அரசியல் தீர்வுகளை விடுவோம். மக்கள் அவலங்களை போக்குவதற்கும் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்வதற்கும்கூட நாம் எம்மை ஒரு வல்லமையுள்ள சக்திகளாக மாறவேண்டும். கெஞ்சுவதால் அடிபணிந்து போவதால் உரிமைகளை பெறுவதென்பது அரசியலுக்கு மட்டுமல்ல சாதாரண மனித வாழ்க்கை நியதிகளுக்கே முரணானதும் ஏற்பில்லாததும். இதை சிங்களத்திடம் நாம் காலம் காலமாக கண்டு வருகிறோம். மே 18 இன் பிற்பாடும் அது தொடர்கிறது.

இப்போது மக்கள் வழங்கிய இந்த் தீர்ப்பு மக்கள் இணக்க அரசியலை புறந்தள்ளி எதிர்ப்பு அரசியலுக்கு தம்மை தயார் படுத்திவிட்டார்கள் என்பதையே சுட்டிநிற்கிறது. மேற்படி கூறுகளை யாரும் விளக்கம் செய்யாமலேயே மக்கள் உணாந்திருப்பதை ஆரோக்கியமான அறிகுறியாக நாம் கொள்ளலாம். இணக்க அரசியலா? எதிர்ப்பு அரசியலா? என்று தடுமாறிய கூட்டமைப்பினருக்கும் மக்கள் தமது தீhப்பினூடாக தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள்.

மே18. அனைத்துத் துயரமும் ஒன்றாய் குவிந்த நாள். அன்றிலிருந்துதான் பேதலித்து மரத்துப்போன வெற்று நிலைக்குள் எமது மக்கள் வந்து சேர்ந்தார்கள். யாரை எதிர்த்துப் போராடி யாரிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்று விரும்பினோமோ அவர்களிடமே மண்டியிட்டு இரந்து உயிர்வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இந்த நிலை எவ்வளவு துயரமானது. இது எமது உளவியலை எப்படி ஊனமாக்கும் என்பதை விரிவாக வேறு விளக்க வேண்டுமா? இந்த ஊனமுற்ற உளவியல் கடந்த கால போராட்டத்தின் மீதான வெறுப்பாக - போராட்டத்தை முன்னெடுத்த போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசைபாடல்களாக, காட்டிக்கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக, எதுவுமே பேச முடியாத மௌனமாக என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. போதாதற்கு எமக்குள்ளிருந்தே சோரம் போன அரசியல்வாதிகளை, போராளிகளை, கலைஞர்களை, எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களினூடாகவும் எமது மக்கள் ஒரு திசையை நோக்கித் துரத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றiயும் தாண்டி இன்று மக்கள் எடுத்திருக்கிற முடிவு சில வாய்ப்பாடுகளை - நியதிகளை உடைத்திருக்கிறது. தனித்தேசம், சுயாட்சி என்ற பதங்கள் அவர்கள் உளவியலில் ஒரு கூட்டு நினைவுத்திரட்டாக படிந்து போயிருப்பதையே இது சுட்டுகிறது. சிங்கள அரசுக்கு மட்டுமல்ல தாம் வாக்களித்த கூட்டமைப்பிற்கும் இதையே மக்கள் நினைவுறுத்த விரும்புகிறார்கள் என்று கொள்ளலாம். அனைத்துலக சமூகம் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கும் தமது ஆதரவை வழங்க பின்நிற்க மாட்டார்கள் என்பதே இதன் பின்னுள்ள செய்தியென்பது முக்கியமானது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64568/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் கறுப்பு நாளான ஆடி 23ஐ டக்கிளசினதும் மகிந்தவினதும் கறுப்பு நாளாக மாற்றிய தமிழ் பேசும் மக்களுக்கு நன்றிகள் பல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.