Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி கோர முடியாது

Featured Replies

தமிழர் சமஷ்டி கோர முடியாது- ஹெல உறுமய

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார்.

நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

‘நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக வடக்கு உட்பட நாடு முழுவதும் 56 வீதமான மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி கூறியுள்ளது.

முகத்தில் ஆவேசம் பொங்க, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்புக்கு எதிராக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு வரவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பெயர்களைக் கூறியபடி எச்சரிக்கை தொனியில் பேசினார் சம்பிக்க ரணவக்க.

‘பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் சாத்தியமாகாது’ என்றும் பேசியுள்ளார் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க.

'தமிழர்களின் அங்கீகாரம்'- தமிழ் கூட்டமைப்பு

இதற்கிடையே, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க மீண்டும் தமிழ் மக்கள் அளித்த அங்கீகாரமே இந்த தேர்தல் வெற்றியென தமிழோசையிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கையின் படி, அரசாங்கம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே இன்றுள்ள தேவை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரத்தை ஊதாசீனம் செய்யக்கூடாது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110726_champikatna.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

Champika challenges TNA

கூட்டமைப்புக்கு சம்பிக்க சவால்

உங்களால் முடிந்தால் நீங்கள் வென்ற 16 பிரதேச சபைகளையும் அபிவிருத்தி செய்யுங்கள்

Jathika Hela Urumaya (JHU) General Secretary and Minister of Power and Energy Patali Champika Ranawaka today called on the Tamil National Alliance (TNA) to develop the areas which comes under the 16 local government bodies they won in the Northern Province.

http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

  • கருத்துக்கள உறவுகள்

‘பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் சாத்தியமாகாது’ என்றும் பேசியுள்ளார் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க.

நன்றி , தலைவர்தான் 30ஆண்டுகளாக சிங்களதை மட்டியிட வைத்தவர், அதை மறந்துவிட்டார்களா?

சரி அம்பிக்க, என்னதான் கொடுப்பிங்கள் என்று உலகத்திற்கு சொல்லுங்கொவன்

Champika challenges TNA

கூட்டமைப்புக்கு சம்பிக்க சவால்

உங்களால் முடிந்தால் நீங்கள் வென்ற 16 பிரதேச சபைகளையும் அபிவிருத்தி செய்யுங்கள்

Jathika Hela Urumaya (JHU) General Secretary and Minister of Power and Energy Patali Champika Ranawaka today called on the Tamil National Alliance (TNA) to develop the areas which comes under the 16 local government bodies they won in the Northern Province.

http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

அதுக்குத்தானே ஈழம் கேட்டோம் தரமாட்டோம் என அடம்பிடிச்சு எங்களை அழிச்சியள்,சரி ஜக்கிய இலங்கையில் தனித்துவத்துடன் வாழ தயார் என்றால் மீண்டும் சண்டித்தனம் காட்டிறீயள்...உங்களை மாதிரி அரசியல்வாதி இருக்கும் வரை உங்கன்ட முதலாளிமாருக்கும் வாசி எங்கன்ட முதலாளிமாருக்கும் வாசி :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Champika challenges TNA

கூட்டமைப்புக்கு சம்பிக்க சவால்

உங்களால் முடிந்தால் நீங்கள் வென்ற 16 பிரதேச சபைகளையும் அபிவிருத்தி செய்யுங்கள்

Jathika Hela Urumaya (JHU) General Secretary and Minister of Power and Energy Patali Champika Ranawaka today called on the Tamil National Alliance (TNA) to develop the areas which comes under the 16 local government bodies they won in the Northern Province.

http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

ஐந்து வருடங்களுக்கு தமிழ்ப்பிரதேசங்களை புலம்பெயர்தமிழர்களிடம் குத்தகைக்கு விடுங்கள்.இதனால் உங்களுக்கும் நன்மை எங்களுக்கும் நன்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களுக்கு தமிழ்ப்பிரதேசங்களை புலம்பெயர்தமிழர்களிடம் குத்தகைக்கு விடுங்கள்.இதனால் உங்களுக்கும் நன்மை எங்களுக்கும் நன்மை.

இது ஒரு நல்ல ஜடியா போலத்தான் இருக்கு...ஒருகொன்டிசனும் போடவேண்டும் ..5 வருடத்தில் அபிவிருத்தி அடைந்தால் தொடர்ந்து எங்களுக்கு மட்டும் குத்தகைக்கு விட விடவேண்டும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு நல்ல ஜடியா போலத்தான் இருக்கு...ஒருகொன்டிசனும் போடவேண்டும் ..5 வருடத்தில் அபிவிருத்தி அடைந்தால் தொடர்ந்து எங்களுக்கு மட்டும் குத்தகைக்கு விட விடவேண்டும்....

தமிழ்மண்ணுக்காக தாலியையே தானம் செய்தவர்கள் புலம்பெயர் தமிழீழப்பெண்கள்.

ஓய் புத்து! ஆல் விகுதி இனிமேல் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Champika challenges TNA

கூட்டமைப்புக்கு சம்பிக்க சவால்

உங்களால் முடிந்தால் நீங்கள் வென்ற 16 பிரதேச சபைகளையும் அபிவிருத்தி செய்யுங்கள்

Jathika Hela Urumaya (JHU) General Secretary and Minister of Power and Energy Patali Champika Ranawaka today called on the Tamil National Alliance (TNA) to develop the areas which comes under the 16 local government bodies they won in the Northern Province.

http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

இவர் பிக்குத் தொழிலை விட்டு, அமைச்சராக ஆகியதையிட்டுச் சந்தோசப் பட்ட ஒரே மனிதன் புத்தராகத் தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

.

ஓய் புத்து! ஆல் விகுதி இனிமேல் வேண்டாம்.

புரியல்ல கு.சா :rolleyes::rolleyes:

இவன் போல ஆக்கள் தான் எமக்கு தேவை. சர்வதேசத்துக்கு இலங்கையின் ஜனாயகத்தை பற்றி இப்ப விளங்கும்.

  • தொடங்கியவர்

இவன் போல ஆக்கள் தான் எமக்கு தேவை. சர்வதேசத்துக்கு இலங்கையின் ஜனாயகத்தை பற்றி இப்ப விளங்கும்.

முடிந்தால் உங்கள் முகநூலில் இணைக்கலாம்.

-- Champika challenges TNA : http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

-- TNA challenged to "develop north if possible" : http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/07/110726_champika.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் உங்கள் முகநூலில் இணைக்கலாம்.

-- Champika challenges TNA : http://dailymirror.lk/news/12628-champika-challenges-tna.html

-- TNA challenged to "develop north if possible" : http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/07/110726_champika.shtml

நல்ல முயற்ச்சி, உலகின் மனக்கதவுகளை தொடர்த்து தட்டிக் கொண்ட்டிருப்போம்,

புரியல்ல கு.சா :rolleyes::rolleyes:

அவர் நாம் பள்ளிப்பிள்ளைகளாய் இருந்தபோது கேட்ட தமிழ் இலக்கணம் பேசுகிறார் போலுள்ளது.

தமிழீழம் தாமிழர்களதே என்கிறார் போலுள்ளது. "அபிவிருத்தி அடைந்தால்" சொல்லத்தேவயில்லதது. அது நிச்சயமானது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
:( இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், நாங்கள் உள்ளூராட்சிச் சபையை வென்றாலென்ன, வெளியூராட்சிச் சபையை வென்றாலென்ன, பணமும் அபிவ்ருத்திக்கான அதிகாரமும் சிங்களத்திடமிருந்துதான் வரவேண்டும். ஆனால் சிங்களம் நாங்கள் வெற்றிபெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கு உதவப்போவதில்லை என்ற முடிவெடுத்தால் நாங்கள் அதை அபிவிருத்தி செய்யமுடியாது. அதைத்தன் இவன் சொல்கிறான், "முடிந்தால் அபிவிருத்தி செய்து பாருங்கள் "என்று. சாதாரண உள்ளூராட்சிச் சபைக்கே இவர்களது அடாவடித்தனம் இப்படியிருக்குமெறால் எந்த துண்வில் நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களவன் எங்களுக்கு ஏதாவது தருவான் என்று எதிர்பார்க்கிறோம்?? குறைந்த பட்சம் இந்தியாவிலுள்ள மாநில அதிகாரத்தையாவது பெற்றுத்தாருங்கள் என்று சம்பந்தர் ஐய்யா இந்தியாவைக் கேட்டுப் பார்க்கலாம். அதுகூட இந்தியாவால் பெற்றுத்தர முடியாவிட்டால், சம்பந்தர் ஐய்யா இந்தியாவைக் கொஞ்சிக்கொண்டிருப்பதற்கான சரியான காரணத்தை முன்வைக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்பிக்க.. ஒரு தீவிரமான சிங்கள பெளத்த பேரினவாதி. தினேஸ் குணவர்த்தனாவை விட மோசம். இவர்களை எல்லாம் உள்ளடக்கி உள்ள மகிந்த ராஜபக்ச அரசு.. எவ்வளவு கொடிய சிங்கள பெளத்த பேரினவாதக் கொள்கையைக் கொண்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இவர்களிடம் போய்.. தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது கல்லில் நாருரிப்பது போன்றது.

சர்வதேச அழுத்தங்கள்.. தலையீடுகளால்.. அன்றி வேறு எந்த வழியிலும் இவர்களை ஒரு நீதியான தீர்வை தமிழர்களுக்கு வழங்கச் செய்ய முடியாது.

:( இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், நாங்கள் உள்ளூராட்சிச் சபையை வென்றாலென்ன, வெளியூராட்சிச் சபையை வென்றாலென்ன, பணமும் அபிவ்ருத்திக்கான அதிகாரமும் சிங்களத்திடமிருந்துதான் வரவேண்டும். ஆனால் சிங்களம் நாங்கள் வெற்றிபெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கு உதவப்போவதில்லை என்ற முடிவெடுத்தால் நாங்கள் அதை அபிவிருத்தி செய்யமுடியாது. அதைத்தன் இவன் சொல்கிறான், "முடிந்தால் அபிவிருத்தி செய்து பாருங்கள் "என்று. சாதாரண உள்ளூராட்சிச் சபைக்கே இவர்களது அடாவடித்தனம் இப்படியிருக்குமெறால் எந்த துண்வில் நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்களவன் எங்களுக்கு ஏதாவது தருவான் என்று எதிர்பார்க்கிறோம்?? குறைந்த பட்சம் இந்தியாவிலுள்ள மாநில அதிகாரத்தையாவது பெற்றுத்தாருங்கள் என்று சம்பந்தர் ஐய்யா இந்தியாவைக் கேட்டுப் பார்க்கலாம். அதுகூட இந்தியாவால் பெற்றுத்தர முடியாவிட்டால், சம்பந்தர் ஐய்யா இந்தியாவைக் கொஞ்சிக்கொண்டிருப்பதற்கான சரியான காரணத்தை முன்வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் நிதி ஒதுக்கீடு என்ற ஒன்று இருக்கிறது! ஒவ்வொரு நாட்டின் வரவு செலவு திட்ட சம்ர்ப்பின்போதும், எதிரியா இருந்தாலும் , கிள்ளி தெளித்தே ஆகணும் எங்கிற சட்டமுறைமையான பிரிவு அது! அது, இந்த வெத்துவேட்டு ...ரணசம்பிக்க தேரர்............கோஸ்டிகளை கணக்கில் எடுக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி,

நீங்கள் சொல்லுகின்ற சட்டம் இருக்கலாம். ஆனால் வடக்கும் கிழக்கும் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே வேண்டுமென்று அபிவிருத்தியிலும், மேம்பாட்டிலும் புறக்கணிக்கப்பட்டுத்தான் வந்துள்ளதென்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். என்று நினைக்கிறேன்,. இலங்கையில் எந்தச் சட்டம் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது என்று சொல்லுங்களேன்? அவர்கள் விரும்பினால் எல்லாம் நடக்கும் தேவையில்லை என்றால் எதுவுமில்லை.

சுனாமி அழிவின்போது வடக்குக் கிழக்கும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டதென்பதையும், வடக்குக் கிழக்கிற்கென அனுப்பிவைக்கப்பட்ட பெருமளவிலான உணவு மற்றும் மருந்துப்பொருட்களடங்கிய கொள்கலன்கள் சுங்கத்துறையால் சிக்கலுக்காப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டு பல மாதங்களாகிய பின்னர் எரிக்கப்பட்டதையும் அறிந்திருப்பீர்கள்.

தமிழரின் கல்வி வேரறுக்கப்பட வேண்டுமென்றே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சிங்களம் தன்மேல் விழுந்திருக்கும் போர்க்குற்ற விசாரணைகளை மழுங்கடிப்பதற்காக அபிவிருத்தி எனும் பம்மாத்தைத் தூக்கிப்பிடிக்கிறது. நல்ல உதாரணம், டக்கிளசினால் தீவுப்பகுதி மற்றும் யாழ்ப்பாண நகரப்பகுதிகளில் தன்னைச் சந்திக்க வந்த மக்களுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் என்று வங்கிக் காசோலைகள் வழங்கப்பட்டனவாம், ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தைத் தொடர்ந்து அக்காசோலைகள் செல்லுபடியற்ரதாக்கப்பட்டிருக்கின்றன. காசோலைகளை கொண்டு வங்கிக்குச் சென்ற மக்களுக்கு நல்ல ஏமாற்றம்.

ஒன்றைக் கவனியுங்கள், தேர்தலில் தோற்றபோது டக்கிளஸ் என்ன சொன்னானோ அதையே சம்பிக்க ரணவக்கவும் சொல்கிறான், அதாவது, "நீங்கள் தேர்தலில் வென்றிருக்கலாம், ஆனால் உங்கள் பிரதேசங்களை உங்களால் அபிவிருத்தி செய்ய முடியாது. ஏனென்றால் நாம் அபிவிருத்தி செய்ய விடப்போவதில்லை".

அறிவிலி,

நீங்கள் சொல்லுகின்ற சட்டம் இருக்கலாம். ஆனால் வடக்கும் கிழக்கும் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே வேண்டுமென்று அபிவிருத்தியிலும், மேம்பாட்டிலும் புறக்கணிக்கப்பட்டுத்தான் வந்துள்ளதென்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். என்று நினைக்கிறேன்,. இலங்கையில் எந்தச் சட்டம் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது என்று சொல்லுங்களேன்? அவர்கள் விரும்பினால் எல்லாம் நடக்கும் தேவையில்லை என்றால் எதுவுமில்லை.

அன்றிருந்த நிலமை இன்று இல்லை என்பது................ மிக நெருக்கடியான சர்வதேச அழுத்ததை எதிர்நோக்கும்... சிங்களதேசம் நன்கு அறியும், அதனை ஏற்படுத்திய தீவிர ஈழ ஆதரவாளர் சமூகத்தில், நீங்களும் ஒருவராக இருப்பதில் தாராளமாய் பெருமைபடலாம்,மிஸ்டர்.ரகுனாதன்!

இது ஒரு நல்ல ஜடியா போலத்தான் இருக்கு...ஒருகொன்டிசனும் போடவேண்டும் ..5 வருடத்தில் அபிவிருத்தி அடைந்தால் தொடர்ந்து எங்களுக்கு மட்டும் குத்தகைக்கு விட விடவேண்டும்....

தொண்டமான் இறக்க முன் இதே கருத்தை 94 ம் ஆண்டுகளில் கூறியதாக கேள்விப்பட்டேன்.

அதாவது புலிகளிடம் 5 வருடம் வடக்கு கிழக்கை ஆட்சி செய்ய கொடுக்கவும் என்று... அதை ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

30 40 லட்சம் மகள் வாழும் வடகிழக்கை புலம் பெயர் மகளின் உதவியோடு வெகு விரவில் முன்னேற்றி விடுவார்கள் என்று தரமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பிக்குத் தொழிலை விட்டு, அமைச்சராக ஆகியதையிட்டுச் சந்தோசப் பட்ட ஒரே மனிதன் புத்தராகத் தான் இருக்கும்!

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சமஷ்டி கோர முடியாது- ஹெல உறுமய .........

அதுதானே தமிழ் ஈழம் கோரினோம். நீங்கள் வீடு வீட போய் 'தான' கேளுங்கள் இல்லாவிடின் ஸ்ரீலங்கா சிங்கள இராணுவத்தில் உள்ளோரின் குடும்பத்தினரின் வீட்டுக்கு அவர்கள் (இராணுவம்) இல்லாத நேரம் சென்று உல்லாசமா அளவலவிக்கொள்ளலாமே....

  • தொடங்கியவர்

பிரதேசசபைகளுக்கான பணத்தை மீளப்பெற்று பழிவாங்க எண்ணும் சிங்களம் - சுமந்திரன்

'Withdrawal of funds' from north

The major Tamil political party in Sri Lanka warns that the government is planning to withdraw funds to a majority of local governing bodies in the north.

Tamil Parliamentarian MA Sumanthiran told BBC Sandeshaya that the challenge by Minister Patali Champika Ranawaka to the Tamil National Alliance (TNA) to develop the north on its own is clear evidence of that plan.

Power and Energies Minister Ranawaka commenting on the TNA landslide victory in the north told journalists on Tuesday that it is the responsibility of the winners themselves to rebuild the area.

"It was not the Sinhalese who destroyed the tanks, electricity and railway lines," he charged.

'Undemocratic means'

TNA MP Sumanthiran in response said, "the government is trying to negate the Tamil people's democratic will by economic force".

The minister says that it was the LTTE that destroyed the north

He alleged that the ruling coalition failing to win the north by force during the local government elections is now resorting to undemocratic means.

Earlier, the the secretary general of the ruling party said that it has received more votes than in the last elections.

"We will start by building upon our 57 members who have been elected," said United Peoples Front Alliance (UPFA) Seceretary General Minister Susil Premjayanth.

Minister Ranawaka has also said that the TNA with the new found support should not demand police and land powers or federal status.

"This threat to democratically elected bodies sends a wrong signal that the Tamil people cannot achieve their democratic aspirations through the ballot," said Mr Sumanthiran.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/07/110727_sumanthiran_champika.shtml

Edited by akootha

"It was not the Sinhalese who destroyed the tanks, electricity and railway lines," he charged.

கீபீர் பிளென்களில் வந்து பள்ளிக்குடப்பிள்ளைகள் செய்து பக்கத்து வகுப்பு வாத்தியாருக்கு எறிஞ்சு விளையாடிய கடதாசி ராகட்டுகளோ?.

  • தொடங்கியவர்

சிங்களம் உதவிகளை மறுத்தால், இந்த பிரதேச சபைகளை அபிவிருத்தி செய்ய கூட்டமைப்பு சர்வதேசத்தை (அவர்களே சிங்களம் ஊடாக தருகின்றார்கள்) நேரடியாக கேட்டு பகிரங்க அறிக்கை விட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.