Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரிப் புலிகள்

வாழ்ந்த காலம்..

விறகு வெட்டி

கட்டி

கண்டி வீதி வழி

நடுச்சாமம் தாண்டியும்

பெண்டிர் கூட

மிதித்து வைக்க

ஓடிய வண்டிகள்..

யாழ் நகர் வந்து சேர

செம்மணிப் பேய்கள் கூட

அமைதி காத்தன...!

வானரப் படைகள்

வாழும் காலம்..

விறகுவெட்டியும்

தூக்கில் தொங்குகிறான்

மாற்றான் மனையாளொடு

கட்டியணைத்தபடி.

பெண்டிர்

மிதிக்கா வண்டிகள்

பெற்றோலில் ஓட

பெற்றோர் ஓடுகிறார் அவர் பின்

பிள்ளை ஓடிப் போயிடுவாளோ

என்றே பதறியடித்தபடி.

செம்மணிப் பேய்களை

விஞ்சி..

கோத்தாவின்

ஏவல் பிசாசுகள்..

கிறீஸ் பூதங்களாய்

மகளிரை மட்டும்

குறிவைத்து

கருவறுக்கும் நிலை..!

தமிழினம்

ஈழத்தில்

வேரறும் நிலை...!

புட்டுக்கு

தேங்காய்ப் பூவாய்

இருந்த சமூகம் கூட

களமிறங்கும் நேரம்.

பெற்ற

தாய் நாட்டை விட்டு

பொருள் ஈட்ட..

அகதி என்ற அந்தஸ்தில்

மாற்றிடம் புகுந்துவிட்ட

சந்ததிக்கோ....

இச் சங்கதிகள்

வெறும் செய்திகளாக..!

ஒரு செவி புக

மறு செவி விடு

கதைகளாய் அவர்க்கு..!

வீதிகள் தோறும்..

சீறும் புலிக்கொடி தூக்கி..

செவிப்பறை வெடிக்க..

போட்ட கூச்சல்கள்..

வெற்று வேட்டுக்களாமோ..???!

வரிப் புலியும்

கூடேகி

சிக்கி விட்ட பின்..

எலிகளுக்கும்

பேய்களுக்கும்

பூதங்களுக்குமே கொண்டாட்டம்,

அவை

என்றும்..

சிங்களப் பேரினத்தின்

தத்துக்களே..!

எனி

கடவுள் தான் காக்க

வேண்டும்

எம் தமிழினத்தை....

மீள்கிறது

தந்தை செல்வாவின் காலம்..!

இருந்தும்..

இன்னும்

ஏமாறும்

மனிதர்களாய்..

மறப்போம் மன்னிப்போம்

மகான்களாய்

நாம்...

"தனிப் பெருமை" காக்கிறோம்.

யாழ் வைத்தியசாலைப் படுகொலைகளும்

செம்மணிப் புதைகுழிகளும்

முள்ளிவாய்க்கால் பேரவலமும்..

ஊர்க்கதை பேசும்

எமக்கு

திண்ணைகள் தோறும்

குந்திவிட்டு எழும்ப

தட்டி விடும்

தூசிகளாமே..!

சனல் 4 லும் இல்லையேல்

மகிந்த கூட

புத்த மகானாக...

மறந்து போயிருக்கும் எல்லாம்.

புலியாய் பாய்ந்த இனம்..

இன்று

பூனையிலும் கேடாய்...!

உயிர்க்குமோ..

மாண்டாரின்

மாண்மியம்..?!

திருந்துமோ

இவ்வினம்..??!

சந்ததிகள் கேட்குமோ

அல்லது

தந்திடுமோ..

கிழக்குச் சூரியனின்

உதயலில்

ஒரு தேசத்தின்

விடியற் செய்தி...??!

அதற்காய்

உழைக்குமோ

ஊர் சேர்ந்து

இல்லை....

என்றும் போல்

உறங்குமோ

இவ்வினம்

கனவினில்

கோட்டை பிடிக்க..!

ஏக்கங்களோடு.. சிந்திக்க ஒரு ஆக்கம் தருவது நெடுக்ஸ்.

Edited by nedukkalapoovan

ஆக்கத்திற்கும் இணைப்பிற்கும் நன்றி நெடுக்ஸ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கும் இணைப்பிற்கும் நன்றி நெடுக்ஸ்!

நன்றி குட்டி.

(உங்கள் கையெழுத்தில் தமிழா என்பதற்குப் பதில் தவறுதலாக தழிழா என்று தட்டச்சு செய்திருக்கிறீர்கள்.) :)

நன்றி குட்டி.

(உங்கள் கையெழுத்தில் தமிழா என்பதற்குப் பதில் தவறுதலாக தழிழா என்று தட்டச்சு செய்திருக்கிறீர்கள்.) :)

இவ்வளவு நாளா இப்படித்தான் இருந்ததா? :blink: சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி நெடுக்ஸ் :), சரி செய்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நிஐத்தை நிகழ் காலத்துடன் ஒப்பிட்டு நன்றாக எழுதியுள்ளீர்கள், அந்த காலம் என்று இனி ஒப்பிட்டு தான் இனி கதைக்க முடியும், என்ன செய்ய, இருக்கும் போது அருமை கன பேருக்கு விளங்கவில்லை, கால சக்கரம் எப்பவும் சிங்களவர்கள் பக்கமே சுழர மாட்டாது, நம்புவோம் என்றோ ஒரு நாள் விடிவு வரும் என்று

இன்னமும் கோமாவிலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நிஐத்தை நிகழ் காலத்துடன் ஒப்பிட்டு நன்றாக எழுதியுள்ளீர்கள், அந்த காலம் என்று இனி ஒப்பிட்டு தான் இனி கதைக்க முடியும், என்ன செய்ய, இருக்கும் போது அருமை கன பேருக்கு விளங்கவில்லை, கால சக்கரம் எப்பவும் சிங்களவர்கள் பக்கமே சுழர மாட்டாது, நம்புவோம் என்றோ ஒரு நாள் விடிவு வரும் என்று

பிரபஞ்சமும்.. வரலாறும் தங்கி விடுவதில்லை. இயங்கிக் கொண்டே மாறிக் கொண்டே இருப்பவை. நிச்சயம் எமக்கான வரலாற்றை நாம் தான் மாற்ற வேண்டும். ஊர் கூடினால் ஆகாதது ஒன்றில்லை. எப்போ அந்த ஊர் கூடும்...????! அது தான் கேள்வி.. ??! :mellow:

இன்னமும் கோமாவிலா?

வரலாறு "கோமா'ளிகளுக்கும் இடமளிக்கத்தான் செய்கிறது. என்ன செய்வோம்.. உங்களைப் போன்ற மனிதப் படைப்புக்களும் வரலாற்றின் பக்கங்களில் கரும்புள்ளிகளாக.. இருப்பது சகஜம் தான்.

தோல்விகளே காணாத ஒரே வெற்றிகளைக் கண்ட வரலாறு மனித சரித்திரத்தில் கிடையாது. அதற்காக தோல்விகளை எண்ணி எவரும் எதிர்கால வெற்றியை தவறவிடுவதில்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்யக் கூடிய "பேரறிஞன்". இயலாமையில்.. இல்லாமையில்.. வாழ விளையும்.. ஜீவனில்லா.. சடப் பொருட்கள்.. கோமாவில் தான் அண்ணா தம்மை வைத்திருக்கும். அது சகஜமே..!

கருத்துக்கு மிக்க நன்றி. :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை...இப்பவும் அவனை புத்தனாகத்தான் இந்தியா நினைக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

கோமாவிலா

கோ = மன்னன்

மா = குதிரை

விலா = எலும்பு

மன்னன் எப்போதுமே குதிரையில் தான் வலம் வருவான்

நீங்கள் மட்டும் இப்பவும் எலும்புத் துண்டுக்காக....

எனக்கு இப்படித்தான் விளங்கியது :lol:

இன்னமும் கோமாளிகள் யாரேன்று போன கிழைமை பீ.பீ.சீ இன் பெட்டகம் கேட்டால் விளங்கும்.

புலம்பெயர்ந்து பின் வன்னிக்கு போனவர்களுக்கும் வன்னியில் தொடர்ந்து இருந்தவர்வர்களுக்கும் தெரியும் வித்தியாசம்.வாயைத்திறந்தால் வாயுக்குள்ள வைத்ததும்,இங்கிருந்து போனவர்களுக்கு ஆமை இறைச்சி சாப்பாடும் போட்டால் உப்படித்தான் கவிதை வரும்.

வரிப் புலிகள்

வாழ்ந்த காலம்..

விறகு வெட்டி

கட்டி

கண்டி வீதி வழி

நடுச்சாமம் தாண்டியும்

பெண்டிர் கூட

மிதித்து வைக்க

ஓடிய வண்டிகள்..

யாழ் நகர் வந்து சேர

செம்மணிப் பேய்கள் கூட

அமைதி காத்தன...!

இந்தக் காலம் திரும்பி வரும் ! நல்ல பதிவு நெடுக்ஸ் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் கோமாளிகள் யாரேன்று போன கிழைமை பீ.பீ.சீ இன் பெட்டகம் கேட்டால் விளங்கும்.

புலம்பெயர்ந்து பின் வன்னிக்கு போனவர்களுக்கும் வன்னியில் தொடர்ந்து இருந்தவர்வர்களுக்கும் தெரியும் வித்தியாசம்.வாயைத்திறந்தால் வாயுக்குள்ள வைத்ததும்,இங்கிருந்து போனவர்களுக்கு ஆமை இறைச்சி சாப்பாடும் போட்டால் உப்படித்தான் கவிதை வரும்.

பிபிசி பெட்டகம் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். பிபிசி தமிழோசை றோவின் ஊதுகுழலாக அண்மைய ஆண்டுகளில் செயற்படுவது உலகம் அறிந்த உண்மை.

மேலும் வன்னி மக்கள் சொன்னதாக ஒவ்வொன்றையும் கற்பனையில் கனவில் நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வன்னி மக்கள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் சிங்கள் இராணுவப் பயங்கரவாதம்.. மற்றும் தமிழ் ஆயுதக் கூலிக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததில் இருந்து.. ஜனநாயக வழியில் தங்கள் விருப்பை தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளமை வலுவான சான்று பகர்கின்றது.

வன்னி மக்கள் நன்கே உணர்கிறார்கள். அவர்களின் வருத்தமெல்லாம்.. இத்தனை இழப்புக்களைக் கண்டும்.. எதுவும் கிடைக்காமல் போய் விட்டதே என்பது தானே தவிர.. அந்த மக்கள் இழப்புக்களை கண்டு இலட்சியத்தை கைவிட்டு விட்டதாகத் தெரியவில்லை.

வறுமை.. கவனிப்பின்மை.. சிங்கள இராணுவப் பயங்கரவாதம்.. தமிழ் கூலிக்குழுக்களின் பயங்கரவாதம்.. பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் சித்திரவதைகள்.. தொழில்வாய்ப்பின்மை.. நிவாரணம் இன்மை.. இருப்பிடமின்மை... காணாமல் போதல்கள்.. கைதுகள்.. என்று ஒரு மனித சமூகம் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை எல்லாம் அனுபவிக்கும் இந்த வேளையில் கூட வன்னி மக்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகவோ அல்லது அதன் ஆதரவு கூலிக் கும்பல்களுக்கு ஆதரவாகவோ... தங்கள் விருப்பை காட்டி சலுகை பெற முயலவில்லை. மாறாக.. தேசிய தலைவர் காட்டிய வழியில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள். இந்த ஒன்றே போதும்.. வன்னி மக்களின் உள்ளுணர்வை புரிந்து கொள்ள. பிபிசியோ.. ஹிந்தியாவோ எமக்கு வன்னி மக்கள் சார்ப்பில் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

வன்னி மக்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த வடக்குக் கிழக்கு தமிழர் தாயக மக்களும் ஒரே எண்ண ஓட்டத்தில் தான் இருக்கின்றனர். அதனை அவர்கள் தேர்தல்களுக்கு தேர்தல் காட்டி வருகின்ற போதும்.. மக்கள் தீர்ப்பினை சரிவர மதிப்பிட தயங்கும் உங்கள் போன்றோர்.. போலி பரப்புரைகளை முன்னிறுத்தி கதையளந்து திரிகிறீர்கள். இதை தான் தொன்று தொட்டு நீங்கள் தமிழீழ விடுதலைக்காகவும் செய்து வருகிறீர்கள். இதனால் தமிழீழம் என்ற சொல்லில்.. த வைக் கூட உங்களால் பொறிக்க முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

அற்புதமான கவி நெடுக்கர். அழகான எழுத்துக்கள். எமக்கு விடிவு வரும் என்று நம்புவோம்.

கோமாவிலா என்ற கேள்விக்கு நெடுக்கரும், வாத்தியாரும் கொடுத்த விளக்கம் அருமை! :icon_idea:

பீ பீ சி தமிழோசை எப்போதோ சோரம் போய்விட்டதே! அதைப்பற்றி இனியென்ன பேச்சு.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்களே,

கவிதையல்ல யாழ்ப்பணத்தின் மெய்நிலையைக் கோர்த்துக் கவிதையாக வடித்துள்ளமைக்குப் பாராட்டுகள்.

நேரத்துக்கும் நன்றிகள். ஒரு பச்சை.

பீ.பீ.சீ ரோ வின் ஊதுகுழல் சீ.என்.என் சிங்களத்தின் ஊதுகுழல் இதைவிட உங்களுக்கு வேறென்ன தெரியும்.உண்மையை சொன்னா சோரம் போய்விட்டதென்பீர்கள்.சம்பந்தனை அரசியலுக்கு கொண்டு வந்ததும் தலைவராக்கியதும் தலைவர் என்றுவீர்கள் போலிருக்கு.

ஏன் அப்ப குதிரை கஜெந்திரனும்,பத்மினியும்,சிவாஜிலிங்கமும் மண்கவ்வினார்கள்.முள்ளிவாய்க்காலுடன் சம்பந்தர் விட்ட அறிக்கை மறந்விட்டது போலிருக்கு.சம்பந்தர் தலைவருக்கே அல்வா கொடுத்தவர்.இப்பவும் ரோ வின் கைக்கூலி எனத் திட்டிக்கொண்டு புதுக்கதை அளக்கவேண்டாம்.எதற்கும் ஒருக்கா ஊருக்கு போய் உங்கள் காதாலேயே உண்மைகளை கேட்டுவாருங்கள்.

புலிகளுக்கு நாங்கள் பயந்தால் மரியாதை கொடுத்தால் பரவாயில்லை ஆதரவாளர்களுக்கும் அல்லக்கைகளுக்கும் வேறு கும்பிடுபோட வேண்டிய கட்டாயம் கொடுமையிலும் கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பீ.பீ.சீ ரோ வின் ஊதுகுழல் சீ.என்.என் சிங்களத்தின் ஊதுகுழல் இதைவிட உங்களுக்கு வேறென்ன தெரியும்.உண்மையை சொன்னா சோரம் போய்விட்டதென்பீர்கள்.சம்பந்தனை அரசியலுக்கு கொண்டு வந்ததும் தலைவராக்கியதும் தலைவர் என்றுவீர்கள் போலிருக்கு.

ஏன் அப்ப குதிரை கஜெந்திரனும்,பத்மினியும்,சிவாஜிலிங்கமும் மண்கவ்வினார்கள்.முள்ளிவாய்க்காலுடன் சம்பந்தர் விட்ட அறிக்கை மறந்விட்டது போலிருக்கு.சம்பந்தர் தலைவருக்கே அல்வா கொடுத்தவர்.இப்பவும் ரோ வின் கைக்கூலி எனத் திட்டிக்கொண்டு புதுக்கதை அளக்கவேண்டாம்.எதற்கும் ஒருக்கா ஊருக்கு போய் உங்கள் காதாலேயே உண்மைகளை கேட்டுவாருங்கள்.

புலிகளுக்கு நாங்கள் பயந்தால் மரியாதை கொடுத்தால் பரவாயில்லை ஆதரவாளர்களுக்கும் அல்லக்கைகளுக்கும் வேறு கும்பிடுபோட வேண்டிய கட்டாயம் கொடுமையிலும் கொடுமை.

பிபிசி தமிழோசை (பிபிசி அல்ல) றோவின் ஊதுகுழலாக செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்று உருவான ஒன்றல்ல. அது நீண்ட காலத்திற்கு முன்னரே பிபிசி தமிழோசையை விட்டு எம் தமிழ் உறவுகள் பலர் விலகிக் கொண்டதில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த ஒன்று. அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் பிரச்சனை. அதேபோல்.. பெட்டகம் நிகழ்ச்சியை நம்புவதும் நம்பாததும் எங்கள் சுதந்திரம். பிபிசி தமிழோசையை நம்பும் அளவிற்கு இன்று தமிழர்களில் பலர் இல்லை. அதுவும் யதார்த்தமான உண்மை.

கஜெந்திரனும்.. பத்மினியும்.. யூனியர் குமார் பொன்னம்பலமும்.. கூட்டமைப்பை விட்டு வெளியேறியமையும்.. புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து.. அவர்கள் குறுகிய காலத்தில் தேர்தல் ஒன்றை சந்தித்ததுவும் அவர்களின் தோல்விக்கு காரணமானது. அவர்கள் கூட்டமைப்பில் ஒரு சிலரின் ஆதிக்கம் பற்றிய கருத்துப் பிறழ்வுகளால் வெளியேறினார்கள். அது ஜனநாயக ரீதியான செயற்பாட்டில் தவறான ஒன்றல்ல. கூட்டமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்பல்ல. அதேபோல் கஜேந்திரனும்.. பத்மினியும்.. போராளிகள் அல்ல. அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். தேசிய தலைவரின் வழிகாட்டலில்.. உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு சிங்களப் பாராளுமன்றம் போனவர்கள். அரசியல் களத்துக்கு புதியவர்கள்.

புலிகளின் இழப்பின் பின்.. நடந்த மாற்றங்கள் அவர்களை அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இருந்தாலும்.. அது அவர்களின் சொந்த அரசியல் கெளரவம் சார்ந்த ஒன்றாகும். அவர்கள் கூட்டமைப்பில் இருந்து விலகி.. உமா மகேஸ்வரன்.. சித்தார்த்தன் போல.. எதிரிகளுக்கு கூலிகள் ஆகவில்லை. மாறாக.. தமக்கான தனித்துவத்தோடு.. தேசிய தலைவர் காட்டிய தமிழ் தேசியக் கொள்கையில் இன்றும் பற்றுறுதியோடே இருக்கின்றனர். அதுமட்டுமன்றி.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு போட்டி போடும் நிலையிலும் மக்களின் நலன் கருதிய அவர்கள் இல்லை. இவை வரவேற்க வேண்டிய ஜனநாயக அம்சங்கள். நீங்கள் உட்பட பலர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

புலிகளுக்கு பயந்து மரியாதை தந்தோர்.. மக்கள் முன் தவறிழைத்தவர்களே. புலிகளை தங்கள் பிள்ளைகள் என்று உரிமை கொண்டு மதிப்பளித்தவர்கள் அவர்களைப் பெற்ற வளர்த்த ஆளாக்கிய போராளிகள் ஆக்கிய மக்கள். புலிகளுக்கு மக்கள் அஞ்சவில்லை. தப்புச் செய்தோர் எதிரிகளுக்கு வால் பிடித்தோர் மட்டுமே புலிகளைக் கண்டு அஞ்சினர். அதில் நீங்கள் அடங்குவது ஆச்சரியமும் இல்லை..! நீங்கள் பயந்ததற்காக உலகமே பயந்தது என்பது கண்ணை மூடிக் கொண்டு பூனை உலகம் இருட்டு என்பது போன்றது.

நாங்கள் யதார்த்தையே பேசுகிறோம். உங்களால் அவற்றை எதிர்கொள்ள முடியவில்லை. அதனையே நீங்கள் உங்களை அச்சுறுத்துவதாக.. பயப்பிடுத்துவதாக இனங்காட்டுகிறீர்கள். இப்படித்தான் நீங்கள் புலிகள் மீதும் அபாண்டப் பழி சுமத்தி இருப்பீர்கள். நாங்கள் உங்களை எங்களுக்கு பயப்பிடுங்கோ என்று எங்கும் கேட்கவும் இல்லை... கேட்கப் போவதும் இல்லை. எங்களை கண்டு நீங்கள் அச்சப்படுவது வீண். உண்மையில் உங்களின் மனச்சாட்சிக்கு நீங்கள் பயப்பிடுவதையே எமது கருத்தைக் கண்டு பயப்பிடுவதாக இனங்காட்டுகிறது.

உங்கள் மனச்சாட்சிக்கே விரோதமாக வாழும் நீங்கள் எப்படி மக்கள் நேசர்களாக வாழ முடியும். அது முடியாததால்.. வெறுப்படைந்த கருத்துக்களையே நீங்களும் உங்கள் போன்றவர்களும் உப்புச் சப்பற்று உதிர்த்து வருகிறீர்கள். அவை உங்களுக்கோ.. இனத்துக்கோ எந்தப் பயனும் அளிக்கமாட்டா. வீணானவை. நேரச் செலவானவை. அவ்வளவே. இதை உணர்த்தவே இதனை இங்கு பதிவிடுகிறேன். இன்றேல் உங்கள் புலிகள் மீதான காழ்ப்புணர்ச்சிகளுக்கு கருத்தெழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை அர்த்தமற்ற முட்டாள் தனமான செயற்பாடு. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

----

சனல் 4 லும் இல்லையேல்

மகிந்த கூட

புத்த மகானாக...

மறந்து போயிருக்கும் எல்லாம்.

புலியாய் பாய்ந்த இனம்..

இன்று

பூனையிலும் கேடாய்...!

உயிர்க்குமோ..

மாண்டாரின்

மாண்மியம்..?!

திருந்துமோ

இவ்வினம்..??!

சந்ததிகள் கேட்குமோ

அல்லது

தந்திடுமோ..

கிழக்குச் சூரியனின்

உதயலில்

ஒரு தேசத்தின்

விடியற் செய்தி...??!

அதற்காய்

உழைக்குமோ

ஊர் சேர்ந்து

இல்லை....

என்றும் போல்

உறங்குமோ

இவ்வினம்

கனவினில்

கோட்டை பிடிக்க..!

ஏக்கங்களோடு.. சிந்திக்க ஒரு ஆக்கம் தருவது நெடுக்ஸ்.

நெடுக்சின் ஏக்கம் கலந்த ஆக்கம் சிந்திக்க வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை.................

அhர்ஜீண் அண்ணா நீங்க புதுசா வாங்கின வீடு வடிவா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை.................

அhர்ஜீண் அண்ணா நீங்க புதுசா வாங்கின வீடு வடிவா இருக்கு

அய்... கண்டுபுடிச்சிட்டிங்க, யாரிடமும் சொல்ல வேண்டாம், இது அவர் வாங்கின சின்னவீடு, இதைவிட ஒரு பெரிய வீடு அவரிட்ட முதலே இருக்கு, இது அவரின்ட ஒரு சின்ன முதலீடு, பின்னடி உதவும் என்று, பார்த்திங்களா வீட்டுக்கு முன்னாலயே தடி வைச்சிருக்கிறார் ball விளையாட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் இருந்து.. வடக்குக் கிழக்கு வரை கோத்தா அனுப்பியுள்ள செய்தி.. கிறீஸ் பூதம்..! இதுதான் சிங்களத் தீவில் சிறுபான்மை இன மக்கள் அனுபவிக்கக் கூடிய அதி உச்ச உரிமை. எனியாவாது சிங்களத்துக்கு வால் பிடிக்கும் நம்மவர்கள் திருந்துவார்களா..??! அவர்கள் திருந்தித் தான் என்ன பயன்..???! :rolleyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.