Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசை இல்லாதோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரசனை பாராடா...இப்போதை பெடியள் எல்லாம் மீசை வைப்பத்திலை... ஓல்டு மனுசங்கள்தான் மீசை வைப்பார்கள்...மீசை உள்ள பெடியளை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்...மீசை தாடி கிளின் சேவ் பண்ணி முடிய இரண்டாவது மூன்றாவது நாள் பார்த்தால் பெடியளுக்கு அரும்பி இருக்கும் முடி அழகு... ஆனால் முடி நன்றாக வளர்ந்த பின்பு பார்த்தால் கேவலமாக இருப்பார்கள்... சைட் அடிக்கவும் மனசு வராது.

ஆகா... அருமையான கருத்துக்கு, சுஜிக்கு ஒரு பச்சை.

இனி, நான் ஒரு நாளைக்கு காலைமையும், பின்னேரமும் ஷேவ் எடுப்பேன்.laugh.gif

  • Replies 60
  • Views 15k
  • Created
  • Last Reply

ஆகா... அருமையான கருத்துக்கு, சுஜிக்கு ஒரு பச்சை.

இனி, நான் ஒரு நாளைக்கு காலைமையும், பின்னேரமும் ஷேவ் எடுப்பேன்.laugh.gif

ஒருவரின் கருத்தை மாத்திரம் வைத்து விவகாரமான முடிவு எடுக்க வேண்டாம். நல்லாத் தீர விசாரிச்சிட்டு ஷேவ் எடுங்க. பொதுவாகவே ஒவ்வொரு இனப் பெண்களுக்கும் வேறுவிதமான ரசனைகள் இருக்கும். நீங்க யாரை கவர் பண்ணப் போறீங்கள் என்று தீர்மானித்து விட்டு முடிவெடுங்க பிரதர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு Gillette Mach 5 ரேசர் தான் பிடிக்கும். ஊரில சிலதரம் சலூனுக்கு போய் சேவ் எடுத்திருக்கிறன். லைவ் போய் சோப்பையும் தண்ணியையும் ஒரு சிறிய கிணத்தில போட்டு, சின்ன தும்பு பிரஸ் ஒண்டால கிண்டி நுரையை அப்பிடியே வழிச்சு அள்ளி முகத்தில "சடக் சடக்" எண்டு சத்தம் வர பூசி, பிளேட்டை எடுத்து அரைவாசியை உடச்சு கத்தியில கொழுவி வழிப்பினம். வழிச்சு முடிய சில சலூன் வழிய உப்புகட்டி மாதிரி வெள்ளையான ஒரு பெரிய கல் இருக்கும். அதையும் முகத்தில தேச்சு விடுவினம். சும்மா அந்த மாதிரி இருக்கும்.

மல்லையூரான்,

நான் ஊரில் இருக்கும் போது.... சலூனில் ஷேவ் எடுத்த அனுபவம் இல்லை. அப்ப.. எனக்கு, கனக்க மயிர் முளைக்காமல் இருந்ததும் , ஒரு காரணம். தலைமயிர் வெட்ட.. சலூனுக்குப் போகும் போது, நீங்கள் சொன்ன கண்ணாடி கல்லை கண்டிருக்கின்றேன். அப்ப நான் அதை, ஐஸ் கட்டி இந்த வெய்யிலுக்கும் உருகாமல் எப்படி இருக்குது என்று நினைத்ததுண்டு.smiley-confused002.gifbiggrin.gif

தும்பளையான் சொன்னதுக்கு மல்லையூரானை இழுத்து முழு ஷேவிங் பண்ணிவிட்டுட்டாங்களப்பா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் கருத்தை மாத்திரம் வைத்து விவகாரமான முடிவு எடுக்க வேண்டாம். நல்லாத் தீர விசாரிச்சிட்டு ஷேவ் எடுங்க. பொதுவாகவே ஒவ்வொரு இனப் பெண்களுக்கும் வேறுவிதமான ரசனைகள் இருக்கும். நீங்க யாரை கவர் பண்ணப் போறீங்கள் என்று தீர்மானித்து விட்டு முடிவெடுங்க பிரதர்.

இங்கு கருத்து தெரிவித்த ஆண்களில், 70% மானோர் மீசையை விரும்பாதவர்களே....

முதல்ல, அதை நோட் பண்ணிக்குங்க பிரதர்.

எனது நாட்டில் உள்ள ஆண்களில் 90% மான ஆட்கள் மீசை வளர்ப்பதில்லை. சும்மா... ஆட்டுக்கிடாய் மாதிரி மீசை வைச்சு, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகதீர்கள் பிரதர்.smiley-with-glasses32.gif

ஒருவரின் கருத்தை மாத்திரம் வைத்து விவகாரமான முடிவு எடுக்க வேண்டாம். நல்லாத் தீர விசாரிச்சிட்டு ஷேவ் எடுங்க. பொதுவாகவே ஒவ்வொரு இனப் பெண்களுக்கும் வேறுவிதமான ரசனைகள் இருக்கும். நீங்க யாரை கவர் பண்ணப் போறீங்கள் என்று தீர்மானித்து விட்டு முடிவெடுங்க பிரதர்.

தப்பிலி அண்ணே சொல்லுவதை வைத்து முடிவு எடுத்துவிடாதீர்கள் தமிழ்சிறி அண்ணா... இப்போதை பெட்டையளுக்கு மீசை பிடிப்பதில்லை.... யாரை கேட்டாலும் சொல்லுவார்கள். வெள்ளை இனத்தவர்களாக இருந்தாலும் சரிதான்.. இப்போ இருக்கும் வெள்ளைக்கார பெடியள் கூட மீசை வைப்பத்தில்லை .. ஆனால் ஒரு வயதை கடந்தவர்களுக்கு மீசை பிடிக்கும் ஒரு வேளை..... நீங்கள் என்ன வயதான பெட்டையா சைட் அடிக்கபோகிறீர்கள் தமிழ்சிறி அண்ணே... :lol: :lol: நீங்கள் சைட் அடிக்கப்போகிறீர்கள் சிலபேருக்கு பொறமை தமிழ்சிறி அண்ணே நம்பாதீர்கள் உந்த பெடியங்கள் சொல்லுகிறதை எல்லாம்...

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி அண்ணே சொல்லுவதை வைத்து முடிவு எடுத்துவிடாதீர்கள் தமிழ்சிறி அண்ணா... இப்போதை பெட்டையளுக்கு மீசை பிடிப்பதில்லை.... யாரை கேட்டாலும் சொல்லுவார்கள். வெள்ளை இனத்தவர்களாக இருந்தாலும் சரிதான்.. இப்போ இருக்கும் வெள்ளைக்கார பெடியள் கூட மீசை வைப்பத்தில்லை .. ஆனால் ஒரு வயதை கடந்தவர்களுக்கு மீசை பிடிக்கும் ஒரு வேளை..... நீங்கள் என்ன வயதான பெட்டையா சைட் அடிக்கபோகிறீர்கள் தமிழ்சிறி அண்ணே... நீங்கள் சைட் அடிக்கப்போகிறீர்கள் சிலபேருக்கு பொறமை தமிழ்சிறி அண்ணே நம்பாதீர்கள் உந்த பெடியங்கள் சொல்லுகிறதை எல்லாம்...

எனக்கு, ஏற்கெனவே.... தப்பிலியில் சந்தேகம் இருந்தது. சுஜி தங்கச்சி.

அவர் 40 - 59 வயது ஆட்களை சைட் அடிக்கிற ஆள் போலை இருக்குது.smiley-cool13.gif

எனக்கு, ஏற்கெனவே.... தப்பிலியில் சந்தேகம் இருந்தது. சுஜி தங்கச்சி.

அவர் 40 - 59 வயது ஆட்களை சைட் அடிக்கிற ஆள் போலை இருக்குது.smiley-cool13.gif

தாப்ஷியையே சீனியர் சிட்டிசனாத்தான் நாங்க மதிக்கிறம். நீங்க வேற பகிடி விட்டிட்டு. :D

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சொன்னதுக்கு மல்லையூரானை இழுத்து முழு ஷேவிங் பண்ணிவிட்டுட்டாங்களப்பா..!

அது, எங்களுக்கு.... முதலே.... தெரியும்.

நீங்கள், இந்தக் கருத்தை உன்னிப்பாக வாசிக்கிறீர்களா.... என்று, சும்மா... ஒரு ரெஸ்ற் வைச்சுப் பாத்தனான். அதிலை, இசைக்கலைஞன் பாஸ் பண்ணீட்டார்.biggrin.gif

எனக்கு மீசை, தாடி ஆண்கள் வைத்திருப்பத்து பற்றி அக்கறை இல்லை. ஆனால் எனது கணவர் மீசை, தாடி உள்ள ஆளாய் இருக்கக் கூடாது என்பது விருப்பம், அதே போல் எனது கணவரும் மீசை, தாடியை வைக்க விரும்பிதே இல்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை, தாடி ஆண்கள் வைத்திருப்பத்து பற்றி அக்கறை இல்லை. ஆனால் எனது கணவர் மீசை, தாடி உள்ள ஆளாய் இருக்கக் கூடாது என்பது விருப்பம், அதே போல் எனது கணவரும் மீசை, தாடியை வைக்க விரும்பிதே இல்லை.

அலைமகளின் கருத்தையும் பார்க்க....

யாழ் களத்தில் உள்ளவர்களின் வாக்கு மீசை, இல்லாதர்களுக்கே.....

சொந்த நாடு இல்லாதவர்கள், மீசை வளர்த்து என்ன பயன்.

எனக்கு, சொந்த நாடு இருந்தால்... நானும் கட்ட பொம்மன் மீசை வளர்ப்பேன்.

அது, வரை... மீசையை, சிரைச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தான்....

பிரதர் இந்தப் பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து உங்களைக் கவிக்கப் பார்கிறாங்க. மீசை வைத்துப் பாருங்கள், உங்கட அறிவிற்கும் அழகிற்கும் நீங்க எங்கேயோ போயிடுவீங்கள். பெண்களிடம் இருந்து உங்களைக் காப்பதற்கே தனிய செக்யுரிட்டி போட வேண்டி இருக்கும்.

அடிச்சானாம்..... புறப் படலையிலை....

நிண்ட வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி, இருக்கு உங்க கதை.

நான், மீசை வளர்த்தால்... என்ரை மனிசியே... பயந்து, டிவோஸ் எடுத்துடுமப்பா.......

அறிவுள்ள ஆட்கள் பொதுவாக மீசை, தாடியை விரும்புவதில்லை :lol:. நான் ஒருவரையும் பாதிக்கும் படி இதைக் கூறவில்லை, இது மிக உண்மை. இது

எனது கனடிய (தழிழர்) அனுபவம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுள்ள ஆட்கள் பொதுவாக மீசை, தாடியை விரும்புவதில்லை

நான் ஒருவரையும் பாதிக்கும் படி இதைக் கூறவில்லை, இது மிக உண்மை. இது எனது கனடிய (தழிழர்) அனுபவம்.

ஐரோப்பிய... அதுகும், குறிப்பாக ஜேர்மனிய (தமிழ்) ஆண்கள்.....

கனடா தமிழரை விட.... அறிவுள்ளவர்கள் என்று ஒப்புக் கொண்டமைக்கு மிக, மிக்க நன்றி அலைமகள்.arms.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தும்புக்கட்டை மீசை வைத்துக் கொள்ள எப்போதுமே பிடிப்பதில்லை. றிம் (Trim) செய்யப்பட்ட மீசை தாடி அப்பப்ப வைச்சுக்குவன். மீசை தாடி இன்றிய முகம் சுத்தம் கூடியது.. அதையே அதிகம் நான் விரும்புகிறேன். :):icon_idea:

நான் மீசைக்காரப் பெண்களை பார்த்திருக்கிறேன். அதுவும் இளம் பெண்களுக்கு மீசை முளைத்திருக்க பார்த்திருக்கிறேன். அப்படியான பெண்களுக்கு ஓமோன் குறைபாடுகள் இருக்க சந்தர்ப்பம் உண்டு. அவர்கள் அதையிட்டு கவனத்தில் கொள்வதும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அவசியம். வெறுமனவே மயிரைப் பிடிங்கிவிடுவது மட்டும் நல்லதல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான்,

நான் ஊரில் இருக்கும் போது.... சலூனில் ஷேவ் எடுத்த அனுபவம் இல்லை. அப்ப.. எனக்கு, கனக்க மயிர் முளைக்காமல் இருந்ததும் , ஒரு காரணம். தலைமயிர் வெட்ட.. சலூனுக்குப் போகும் போது, நீங்கள் சொன்ன கண்ணாடி கல்லை கண்டிருக்கின்றேன். அப்ப நான் அதை, ஐஸ் கட்டி இந்த வெய்யிலுக்கும் உருகாமல் எப்படி இருக்குது என்று நினைத்ததுண்டு.smiley-confused002.gifbiggrin.gif

நானும் அதை ஐஸ் கட்டி எண்டு தான் நினைக்கிறனான், அதுவேற நல்ல குளிரா இருக்கும். இப்ப ஊர் சலூன் வழிய உந்த அயிட்டங்கள் இருக்குமோ தெரியாது அண்ணா.

ஒருவரின் கருத்தை மாத்திரம் வைத்து விவகாரமான முடிவு எடுக்க வேண்டாம். நல்லாத் தீர விசாரிச்சிட்டு ஷேவ் எடுங்க. பொதுவாகவே ஒவ்வொரு இனப் பெண்களுக்கும் வேறுவிதமான ரசனைகள் இருக்கும். நீங்க யாரை கவர் பண்ணப் போறீங்கள் என்று தீர்மானித்து விட்டு முடிவெடுங்க பிரதர்.

தப்பிலி அண்ணை சொல்லுறது யதார்த்தம் தான். பொதுவா வெள்ளைகாறியளுக்கு மீசை, தாடி பிடிப்பதில்லை. புலம் பெயர்ந்த எங்கட கன பொம்பிளையளுக்கும் பிடிப்பதில்லை ஆனால் அந்தக் காலத்தில நான் ஊரில இருந்தப்ப ஊரில இருக்கிற பெட்டயளுக்கு பொதுவா மீசை பிடிக்கும். அதையும் காடு மாதிரி வளர்க்காமல் டிரிம் பண்ணி வடிவா கவனிக்கோணும்.

நான் ஹாட்லியில படிகேக்க மீசை வளர்க்கிறதுக்கு எந்த தடையும் இல்லை ஆனால் தாடிய விட மாட்டாங்கள், குறிப்பா தவராஜா சேர் எண்டு ஒரு வாத்தி இருக்கிறார், ஜீவாவுக்கு தெரிஞ்சிருக்கும். யாரிட்ட தப்பினாலும் அவரிட்ட தப்ப ஏலாது. குறிப்பா காதுக்கு அருகில் வளரும் மயிர் (side burns) அவருக்கு பரம எதிரி. நானும் A/L படிக்கும் போது பாடகர் எல்விஸ் மாதிரி நீட்டா வளர்த்துக் கொண்டு திரிஞ்சன் மனிசன் காதோட கட் பண்ண சொலீட்டுது. A/L சோதினைக்கு படிக்க தொடங்க தாடியையும் வளர்க்க தொடங்கி சோதனை முடிய நல்ல தேவதாஸ் தாடி மாதிரி வந்திட்டுது. பிறகு 2005/2006 இல சமாதானமும் குழம்பி ஆமி பிரச்சினைகளும் தொடங்க அம்மா சொன்னா "தாடி, மீசையை வளர்த்துக் கொண்டு ரவுடி மாதிரி திரியாத தம்பி, உந்த தாடிய எடுத்துப் போட்டு மனிசன் மாதிரி இரு" எண்டு. அது தான் நான் இது வரை அதிகமா வளர்த்த தாடி. ஊரில தாடி வைக்கிறதில இன்னொரு பிரச்சனை என்ன எண்டா வெக்கைக்கு கண்ட படி சொறியும் அதோட அந்தக் காலத்தில கம்பஸ் பெடியள் மட்டும் தான் அதிகமா கிளீன் சேவ் எடுப்பாங்கள் அதிலயும் மெடிசின் பெடியள் சீமெந்து பூசின மாதிரி வலு கிளீனாத்தான் இருப்பாங்கள். வாத்தி மாரும் கூடுதலா மீசை வச்சிருப்பினம்.

இன்னொண்டு யோசிச்சன் இயக்கத்திளையும் பல முக்கிய ஆக்கள் மீசை வச்சிருந்தினம். தலைவரின் கம்பீரத்திலே எனக்கு பிடிச்சது அவரின் மீசை தான். சமாதான காலத்திலேயே மீசையை எடுத்திருந்தார், அதை விட அவரின் மீசையோடு இருந்த கம்பீரமே சிறப்பா இருக்கும். பால்ராஜ் அண்ணா, கிட்டு அண்ணா, திலீபன் அண்ணா, சூசை அண்ணா, பொட்டு அண்ணா, தமிழ் செல்வன் அண்ணா, புலித்தேவன், பாலா அண்ணா போன்ற பலர் மீசை வச்சிருந்தவர்களே. எனக்கு ஞாபகத்துக்கு வருகிறவர்களில் தீபன் அண்ணா, சங்கர் அண்ணா, நடேசன் அண்ணா போல சிலரே மீசை வச்சிருக்கவில்லை.

ஏன் வீரப்பனுக்கே கம்பீரத்தை குடுத்தது மீசை தானே. மீசை இல்லாத வீரப்பனை கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா?

மீசை குத்துவது பெண்களுக்கு பிடிக்காது எண்டு சொல்ல ஏலாது. சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் மீசையினால் வாங்கும் குத்தை ரசிக்கிற பொம்பிளையளும் இருக்கினம். காடு மாதிரி வளர்த்துக் கொண்டு திரிஞ்சா யாருக்கும் பிடிக்காது, அளவா அழகா வளர்த்தா சொல்லி வேலையில்லை. எங்கட ஆத்துக்காறிக்கு மீசை பிடிக்கும், தாடி அளவா டிரிம் பண்ணி இருக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு நான் மீசை தாடி வளர்க்கிறது வேலை காரணமாக நடக்காத காரியம். காலம்பிறை எழும்பி கன்னத்தை வழிச்சுப் போட்டு போக வேண்டியதாக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான்,

இதனைத் தான்... உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.rolleyes.gif

யாழ் களத்தில் உள்ளவர்கள், அனைவரும் திறமைசாலிகளே...

கருத்துக்களை, விரிவாக எழுதுவதில் மட்டும் தான்... கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்.

chaplin.gif

  • கருத்துக்கள உறவுகள்

ரசனை பாராடா...இப்போதை பெடியள் எல்லாம் மீசை வைப்பத்திலை... ஓல்டு மனுசங்கள்தான் மீசை வைப்பார்கள்...மீசை உள்ள பெடியளை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்...மீசை தாடி கிளின் சேவ் பண்ணி முடிய இரண்டாவது மூன்றாவது நாள் பார்த்தால் பெடியளுக்கு அரும்பி இருக்கும் முடி அழகு... ஆனால் முடி நன்றாக வளர்ந்த பின்பு பார்த்தால் கேவலமாக இருப்பார்கள்... சைட் அடிக்கவும் மனசு வராது <_< <_<

சுஜி புலம் பெயர் நாட்டில் பெடியங்கள் அதுவும் நம்மட தமிழ் பெடியன்கள் மீசை வைக்காததற்கு காரணம் முதலாவது அவர்களுக்கு மீசையை எப்படி பராமரிப்பது எனத் தெரியாது.இரண்டாவது வெள்ளையலோ,வேற்று நாட்டவரோ மீசை வளர்ப்பதில்லை அதனால் அவர்களைப் பார்த்து எங்கட பெடியங்களும் அதை பின் தொடர்கிறார்கள்.மூன்றாவது படிப்பு,வேலை காரணமாக மீசை வளர்க்க முடியாமை.நான்காவது மீசை வைத்த பெடியங்களை பெட்டையளுக்கு பிடிக்காது எங்கட பெடியன்கள் தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொண்டு வளர்க்காமல் விடுதல் அதை விட பெடியங்கள் இப்ப தமிழ் பெட்டையளுக்கு பின்னால் மட்டும் சுத்துவதில்லையே!இது போன்ற காரணங்களால் ஆண்கள் மீசை வளர்ப்பதில்லை.

ஒரு ஆணுக்கு அழகே அவனது கம்பீரம் தான்...அவனுக்கு கம்பீரத்தை கொடுப்பதே மீசை தான்...மீசை வழித்து கிளின்[சுத்தம்]சேவ் எடுத்த ஆணுக்கும்,ஒரு பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?...மீசையை வடிவாய் டிரிம் பண்ணி அளவாய் வளத்தால் சூப்பராய் இருக்கும்...ஒரு பெண்ணை கட்டி அனைக்கும் போது உங்கள் மீசை குத்த வேண்டும் அப்படிக் குத்தினால் தான் அவன் ஆண் :)

பொதுவாக மீசை இல்லாத ஆண்களை பார்த்தால் எதற்கு பயந்தவர்களாகவும்,கோழைகளாகவும்,எதற்கும் பின் நிற்பவர்களாகவும் இருப்பார்கள்...ஆணுக்கு தேவை அழகு இல்லை கம்பீரம் அந்த கம்பீரத்தை கொடுக்கும் மீசையை ஆண்கள் கட்டாயம் வளர்க்க வேண்டும்.

தமிழனின் அடையாளமே வீரம்...அந்த வீரத்தை கொடுப்பது மீசை...அதனால் அநேகமான புலி வீரர்கள் மீசை வளர்த்தார்கள்...தும்பளையான் எழுதின மாதிரி தலைவரைக் கூட மீசை இல்லாமல் பார்ப்பதற்கு எப்படி இருந்தது?...***...ஆகவே தமிழராய் பிறந்தோரோ கட்டாயம் ஒரு சின்ன மீசையாவது வளருங்கள்

*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலகாசன் மீசையை இண்டைவரைக்கும் மைஅடிச்சு காப்பாற்றி வாறன்.மீசை வைக்கிறதும் வைக்காமல் விடுறதும் அவரவற்ரை விருப்பம்.ஆனால் மீசை வைச்சவனை நக்கலடிக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணுக்கு அழகே அவனது கம்பீரம் தான்...அவனுக்கு கம்பீரத்தை கொடுப்பதே மீசை தான்...மீசை வழித்து கிளின்[சுத்தம்]சேவ் எடுத்த ஆணுக்கும்,ஒரு பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?...மீசையை வடிவாய் டிரிம் பண்ணி அளவாய் வளத்தால் சூப்பராய் இருக்கும்...ஒரு பெண்ணை கட்டி அனைக்கும் போது உங்கள் மீசை குத்த வேண்டும் அப்படிக் குத்தினால் தான் அவன் ஆண்

ஆணிடம் குத்துவதற்கு மீசையை மட்டும் எதிர்பார்ப்பது... சிறு பிள்ளைத்தனம்.

சின்னப் பாப்பா, போச்சியிலை.... பால் குடிச்ச மாதிரி இருக்கு.

சுஜி புலம் பெயர் நாட்டில் பெடியங்கள் அதுவும் நம்மட தமிழ் பெடியன்கள் மீசை வைக்காததற்கு காரணம் முதலாவது அவர்களுக்கு மீசையை எப்படி பராமரிப்பது எனத் தெரியாது.இரண்டாவது வெள்ளையலோ,வேற்று நாட்டவரோ மீசை வளர்ப்பதில்லை அதனால் அவர்களைப் பார்த்து எங்கட பெடியங்களும் அதை பின் தொடர்கிறார்கள்.மூன்றாவது படிப்பு,வேலை காரணமாக மீசை வளர்க்க முடியாமை.நான்காவது மீசை வைத்த பெடியங்களை பெட்டையளுக்கு பிடிக்காது எங்கட பெடியன்கள் தங்களுக்கு தாங்களே நினைத்துக் கொண்டு வளர்க்காமல் விடுதல் அதை விட பெடியங்கள் இப்ப தமிழ் பெட்டையளுக்கு பின்னால் மட்டும் சுத்துவதில்லையே!இது போன்ற காரணங்களால் ஆண்கள் மீசை வளர்ப்பதில்லை.

ஒரு ஆணுக்கு அழகே அவனது கம்பீரம் தான்...அவனுக்கு கம்பீரத்தை கொடுப்பதே மீசை தான்...மீசை வழித்து கிளின்[சுத்தம்]சேவ் எடுத்த ஆணுக்கும்,ஒரு பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?...மீசையை வடிவாய் டிரிம் பண்ணி அளவாய் வளத்தால் சூப்பராய் இருக்கும்...ஒரு பெண்ணை கட்டி அனைக்கும் போது உங்கள் மீசை குத்த வேண்டும் அப்படிக் குத்தினால் தான் அவன் ஆண் :)

பொதுவாக மீசை இல்லாத ஆண்களை பார்த்தால் எதற்கு பயந்தவர்களாகவும்,கோழைகளாகவும்,எதற்கும் பின் நிற்பவர்களாகவும் இருப்பார்கள்...ஆணுக்கு தேவை அழகு இல்லை கம்பீரம் அந்த கம்பீரத்தை கொடுக்கும் மீசையை ஆண்கள் கட்டாயம் வளர்க்க வேண்டும்.

தமிழனின் அடையாளமே வீரம்...அந்த வீரத்தை கொடுப்பது மீசை...அதனால் அநேகமான புலி வீரர்கள் மீசை வளர்த்தார்கள்...தும்பளையான் எழுதின மாதிரி தலைவரைக் கூட மீசை இல்லாமல் பார்ப்பதற்கு எப்படி இருந்தது?***...ஆகவே தமிழராய் பிறந்தோரோ கட்டாயம் ஒரு சின்ன மீசையாவது வளருங்கள்

ரதி நீங்கள் பழைய காலத்து ஆள்போல... இங்கே இருக்கும் பெட்டைகளை ஒரு பேட்டி எடுத்துப்பாருங்கள்... சொல்லுவார்கள் மீசை இல்லாதா ஆண் மகனைத்தான் பிடிக்குமென்று,,,,.. தும்பாளையான் சொன்னது மாதிரி ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு வேளை மீசை பிடிக்கலாம் அதுவும் இப்போது எல்லாம் மாறிகிட்டு வருகின்றது... ஊரும் வெளி நாடு மாதிரி வந்துவிட்டது.... போயி பார்த்தால் தெரியும் அங்கே இருப்பவர்களுக்கு என்ன பிடிக்குமென்று....

மீசை குத்தினால்தான் ஆண்மகன் என்று சொல்லுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கின்றது... மீசை வைத்துதான் ஒரு ஆண் தன்னை ஆண் என்று நிருபிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. . இது நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்....

மீசை இல்லையென்றதுக்காக அவன் கோழை என்று எப்படி சொல்லலாம் ரதி... பயந்தவர்களாகவும்,கோழைகளாகவும், மீசை உள்ளவனும் இருப்பான் மீசை இல்லாதவனும் இருப்பான்.... ஒருவரின் வீரத்தை மீசையை வைத்து முடிவு பண்ணுவதில்லை....

அப்புறம் இதில் தமிழனின் அடையாளம் பற்றி யாரும் கதைக்கவில்லை ....உதுக்கு வேணுமென்றால் புது திரி ஒன்று தொடங்கி மற்றவர்களை கருத்து எழுதச்சொல்லிக்கேட்போம்.. தமிழன் மீசை வைக்கவேண்டுமா வேண்டாமா என்று.... ஒவ்வொருத்தர் பார்க்கும்பார்வையில்தான் உள்ளது... <_< <_<

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நான் மீசைக்காரப் பெண்களை பார்த்திருக்கிறேன். அதுவும் இளம் பெண்களுக்கு மீசை முளைத்திருக்க பார்த்திருக்கிறேன். அப்படியான பெண்களுக்கு ஓமோன் குறைபாடுகள் இருக்க சந்தர்ப்பம் உண்டு. அவர்கள் அதையிட்டு கவனத்தில் கொள்வதும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அவசியம். வெறுமனவே மயிரைப் பிடிங்கிவிடுவது மட்டும் நல்லதல்ல..! :)

ஏனுங்கோ பிறதர் இதில் யாரும் கேட்டார்களா பெண்களிக்கு மீசை வளர்வதுபற்றி... ஏன் எதற்க்கெடுத்தாலும் பெண்களை இழுக்கிறீர்கள்... பெண்களை இழுக்காமல் கருத்து எழுதமுடியாதோ உங்களால்..... <_<

எனது மனைவி இங்கு பிறந்து வளர்ந்தவர் அவருக்கு மீசை பிடிக்காது ( இருந்தா மட்டும் விஜய் போல ஆழகாவ இருக்கும்?) 2 3 நாளைக்கு மேல விடுவது கஷ்டம் அது போக நான் 1 மாசம் மீசையோடு இருந்தேன் என்று என்னால் நினைவு படுத்தின்பாக்க முடியவில்லை அதே எனக்கு நெஞ்சிலும் முதுகிலும் கருமுடி இருக்குனதை என்னிலும் பார்க்க 8 வயது கூடிய அக்கா ஒருவர் சொன்ன கொம்ண்ட்ஸை இன்றும் மறக்க முடியவில்லை....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ பிறதர் இதில் யாரும் கேட்டார்களா பெண்களிக்கு மீசை வளர்வதுபற்றி... ஏன் எதற்க்கெடுத்தாலும் பெண்களை இழுக்கிறீர்கள்... பெண்களை இழுக்காமல் கருத்து எழுதமுடியாதோ உங்களால்..... <_<

இங்கு மீசை பற்றி கதைப்பதால்.. பெண்களுக்கு உள்ள மீசை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். அதைப் பற்றி கதைக்கவே கூடாது என்பது ஒன்றும் நிபந்தனையல்லவே.

அதுமட்டுமன்றி மீசைக்காரப் பெண்களுக்கு இச்செய்திகள் போய் சேர்கின்ற போது அவர்கள் தங்களின் மன.. உடல் பாதிப்புக்களில் இருந்து நிவாரணம் தேட ஒரு வாய்ப்புப் பிறக்கும்... அல்லது தேடிக் கொள்வார்கள்... இல்லையா. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் பழைய காலத்து ஆள்போல... இங்கே இருக்கும் பெட்டைகளை ஒரு பேட்டி எடுத்துப்பாருங்கள்... சொல்லுவார்கள் மீசை இல்லாதா ஆண் மகனைத்தான் பிடிக்குமென்று,,,,.. தும்பாளையான் சொன்னது மாதிரி ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு வேளை மீசை பிடிக்கலாம் அதுவும் இப்போது எல்லாம் மாறிகிட்டு வருகின்றது... ஊரும் வெளி நாடு மாதிரி வந்துவிட்டது.... போயி பார்த்தால் தெரியும் அங்கே இருப்பவர்களுக்கு என்ன பிடிக்குமென்று....

மீசை குத்தினால்தான் ஆண்மகன் என்று சொல்லுவது சின்ன பிள்ளைத்தனமாக இருக்கின்றது... மீசை வைத்துதான் ஒரு ஆண் தன்னை ஆண் என்று நிருபிக்கவேண்டுமென்று அவசியம் இல்லை. . இது நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்....

மீசை இல்லையென்றதுக்காக அவன் கோழை என்று எப்படி சொல்லலாம் ரதி... பயந்தவர்களாகவும்,கோழைகளாகவும், மீசை உள்ளவனும் இருப்பான் மீசை இல்லாதவனும் இருப்பான்.... ஒருவரின் வீரத்தை மீசையை வைத்து முடிவு பண்ணுவதில்லை....

அப்புறம் இதில் தமிழனின் அடையாளம் பற்றி யாரும் கதைக்கவில்லை ....உதுக்கு வேணுமென்றால் புது திரி ஒன்று தொடங்கி மற்றவர்களை கருத்து எழுதச்சொல்லிக்கேட்போம்.. தமிழன் மீசை வைக்கவேண்டுமா வேண்டாமா என்று....ஒவ்வொருத்தர் பார்க்கும்பார்வையில்தான் உள்ளது... <_< <_<

பெண்களைக் கேட்டால் மீசை வேண்டாம் என்று தான் சொல்வார்கள் அப்பத் தானே ஆண்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் :icon_idea:

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து மாற்றப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.