Jump to content

பரீட்சை நேரம்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை.

என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.

ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்ல தடுமாறிய... தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது. வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால... நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா.... இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல... எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல... அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில... என்னை பார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ... எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்... அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது.

இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்... வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்.. இதையும் மறந்திட்டன்.

ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்... முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல...

ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி...

எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்பு இருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது... கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே.... சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது... அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..

" எப்படி இருக்கிறிங்க?" என்று கேட்டன்.

"ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?"என்று பதில் வந்திச்சு.

ஆகா..... முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது.... இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..

"மறக்க முடியுமா...." எண்டு சும்மா மேலால விட்டன்..

அப்படியே கதை தொடர இடையில மறிச்சு....

"ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது" என்றாள். எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு

"ம்ம்ம்... தெரியும்... அப்ப கோப்பி ஸொப் போகலாமா? " என்று கதை விட்டேன்.

பதில் ஒன்னுமே தரல .... பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..

"நாளைக்காவது போகலாமா?" என்று கேட்டேன்.

ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை... அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்று இருந்தது.... சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.

ம்ம்... சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே....

"நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? " சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.

இப்போதும் பதில் இல்லை... புத்தகத்தை நோக்கி குனிந்தாள்... போகலாமா என்று நினைத்தவேளை..

" NOW " என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.

ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்.... இருப்பினும் " நாளைக்கு எக்ஸாம் ஆச்சே" என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை...

"இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.... நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்" என்றாள்.

ம்ம்ம்..... "சரி போகலாமே....." என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.

வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும். கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்...

*************************************

மறுநாள் காலை... நான் எழும்ப லேட்டாகிட்டுது... எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல... அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே... அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல...

கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.. மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்... பறந்திட்டே இருந்திச்சு... எல்லாம் நேற்றையான் நினைவால தான்.

அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி.. மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு... ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.

எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்.... எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்... வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா.. நான் வர ஒரு சிரிப்போட

"எப்படி எக்ஸாம்... நல்லா செய்திங்களா??" என்று கேட்டாள்...

"ஆமாங்க... நைட் படிச்சது எல்லாமே எழுதினன்" எண்டு கிண்டலா சொன்னன்.

அப்படியே கதை தொடர்ந்தது..... இடைல மறிச்சு..

"வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்று கேட்டன்.

" இனிக்குமா??" என்று சிரிச்சிட்டே கேட்டாள்.

"இல்லீங்க இது கோப்பி ஸொப் " அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.

தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து... குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல.. ரொம்ப ரொம்ப அலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல... அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க...

பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது. எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு... எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா??

" சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு" டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..

" உங்க வீடு எங்கே?? ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??" என்று கேட்டாள்.

'இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்... அங்கே போய் என்ன செய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..' அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.

தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்....

' இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்' எண்டு சொன்னாள்... அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு...எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது....

' நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்' என்று கேட்கலாம் போல இருந்தது.

ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல.... முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்ன என்று கேட்கல.... அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல.... எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால

" ஹாவ் நைஸ் ஹொலிடே" எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..

ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்..... ஹூம்ம்ம்... அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.

எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை.. ' இந்த இயர் தான் எனக்கு கடைசி' என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்.... இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும் பறக்கல... வீட்டை பெல் பண்ணினன்... 'எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல... இனிக்கு நைட் வீட்டை வாறேன்' என்று சொன்னன்.. பஸ் ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்... அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன்

அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்... லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது....அவள்ட லெட்டர் தான்..

' 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க" எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது.

ஆகா... இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது... பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்... ஒன்னு சொல்லி அடிக்கடி அறுக்கிறேன் என்று நினைக்காதேங்க...

இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க......

(யாவும் கற்பனை)

முடிந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றிசல்ட் நல்லா வந்திச்சா இல்லையா..?? வாழ்த்துக்கள் விஸ்ணு.. பரீட்சை நேரம் அளவா அழகா இருக்கு. :wink:

Posted

ஆஹா விஷ்ணு கதை சூப்பர் வாழ்த்துக்கள்.. :wink: ஆமா இது நிஜமா இல்லை நிழலா? :wink: :P :P :P

அது சரி இப்ப எக்ஸாம் நடக்குது என்றீர்கள் எப்படி எக்ஸாம்.? இதேகதை தானா? இல்லை எக்ஸாம் வடிவா செய்தீர்களா? :oops:

Posted

விஷ்ணு கதை நல்லாயிருக்கு. எக்ஸாம் நேரம் நல்லாய் தான் பட்டாம்புச்சி பறந்திருக்கு. பரீட்சை முடிவுகளில் தெரியும் பட்டாம்புச்சியின் விளையாட்டு?

:lol: விஷ்ணு கதை நல்லாய் இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்

Posted

கதை நன்று தொடர்ந்து எழுத வாழத்;துக்கள்

அத்துடன் உங்கள் காதல் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றிசல்ட் நல்லா வந்திச்சா இல்லையா..?? வாழ்த்துக்கள் விஸ்ணு.. பரீட்சை நேரம் அளவா அழகா இருக்கு. :wink:

ஊக்கத்துக்கு நன்றிகள். நல்ல றிசல்ட் வந்தது.. பரீட்சை றிசல்டை சொன்னன். :lol:

ஆஹா விஷ்ணு கதை சூப்பர் வாழ்த்துக்கள்.. ஆமா இது நிஜமா இல்லை நிழலா?

அது சரி இப்ப எக்ஸாம் நடக்குது என்றீர்கள் எப்படி எக்ஸாம்.? இதேகதை தானா? இல்லை எக்ஸாம் வடிவா செய்தீர்களா?

நன்றிகள் ரசிகை. கதை எல்லாம் நிழல் தான்... கீழே யாவும் கற்பனை என்று போட்டு இருந்தது பார்க்கலையோ... ஏற்கனவே ஒரு சிலர் முறாய்க்கினம். நீங்க வேற :roll:

பரீட்சை எல்லாம் முடிந்தது.. றிசல்ட் க்கு வெயிட்டிங் :roll:

கதை நன்று.

:roll: சரி

விஷ்ணு கதை நல்லாயிருக்கு. எக்ஸாம் நேரம் நல்லாய் தான் பட்டாம்புச்சி பறந்திருக்கு. பரீட்சை முடிவுகளில் தெரியும் பட்டாம்புச்சியின் விளையாட்டு?

ஊக்கத்துக்கு நன்றி. நல்லா இருக்கு என்று சொல்லிட்டு அங்கால திட்டுற மாதிரி கிடக்கு. :roll:

கதை நன்று தொடர்ந்து எழுத வாழத்;துக்கள்

அத்துடன் உங்கள் காதல் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

நன்றி... :roll: :roll: எங்கேயோ உதைக்கிற மாதிரியே இல்லை. கதை எல்லாம் கற்பனை தான். :?

Posted

விஷ்ணு கதை நல்லா இருக்குது. அனுபவத்த சொல்லுற மாதிரித்தான் படுது. ஏன்னா அந்த பட்டாம்பூச்சி பற்றி அடிக்கடி சொல்லுறீங்க பாருங்க இந்தக் கதை எழுதேக்கயும் அடிக்கடி பறந்திருக்கு போல. :wink: :P

சரி இப்ப எழுதின பரீட்சை ரிசல்ட் வந்ததும் தெரியும் தானே :wink:

Posted

எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை..

:lol::lol::lol: இது உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் தான். நானும் தான் முயன்று பார்த்தன் முடியல :lol::lol::(

Posted

விஷ்ணு கதை கற்பனை எண்டு போட்டிருக்கு. பழைய நினைவுகளையும் இப்ப இருக்கிற இடத்து சூழலையும் போட்டு எழுதி முடிச்சீங்களோ ;)

கதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.......... இன்னும் நிறைய.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றிகள் அருவி அனுபவம் ஏதும் இல்லை.. ஏனோ நான் சொல்வது போல எழுதிப்பழகி விட்டேன். அவளவும் தான். அனுபவம் என்று சொல்லி குடும்பத்தை குழப்பிவிடாதேங்க..

விஷ்ணு கதை கற்பனை எண்டு போட்டிருக்கு. பழைய நினைவுகளையும் இப்ப இருக்கிற இடத்து சூழலையும் போட்டு எழுதி முடிச்சீங்களோ ;)

கதை நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.......... இன்னும் நிறைய.

குளம் அண்ணா.. அப்படி ஏதும் இல்லை.. கதை கற்பனை தான். :roll: :roll: டென்ஸன் பண்ணாதேங்கப்பா...

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி

Posted

நன்றிகள் அருவி அனுபவம் ஏதும் இல்லை.. ஏனோ நான் சொல்வது போல எழுதிப்பழகி விட்டேன். அவளவும் தான். அனுபவம் என்று சொல்லி குடும்பத்தை குழப்பிவிடாதேங்க..

:shock: :roll: :roll: :roll: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அருவி...ஏதாவது ஒரு அக்ஸன் குடுங்கப்பா.. இப்படி பண்ணினா நான் என்ன நினைக்கிறது.

Posted

கதை நல்லாயிருக்கு விஷ்ணு. எனக்கென்னவோ குளம் சொன்னது போல உங்க நினைவுகளையும் கற்பனைகளையும் கலந்து எழுதியது போல் இருக்கு. வாழ்த்துக்கள். பட்டாம்பூச்சி மேன்மேலும் பறக்க புதிய புதிய கதைகளும் உங்களிடம் இருந்து வர வேண்டும்.

Posted

அது எப்படிப்ப உங்களுக்கு மட்டும் இப்பிடி எல்லாம் ;) வாழ்த்துக்கள்...:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட விஷ்ணு அண்ணா கதை எல்லாம் எழுதிறீங்க....ரொம்ப நல்ல இருக்கு..வாழ்த்துக்கள்.

Posted

அது எப்படிப்ப உங்களுக்கு

அது தான அருவி மாதிரி வந்து கொட்டுதாம் :P :P

Posted
ஆகா விஸ்ணு கதை நன்றாக இருக்கு ... உண்மைக் கதை போலவும் இருக்கு.... இப்பத்தான் வாசித்தி முடித்தன் .. நல்லா எழுதுறீங்க தொடர்ந்து கதை எழுதுங்க ... வாழ்த்துக்களும்....! :P
  • 2 weeks later...
Posted

விஸ்ணு நல்ல முயற்சி,

புலம் பெயர் சூழலை மையமா வச்சு இளயவர்கள் கதை எழுதுவதை நான் இன்னும் காணவில்லை.மேலும் எழுதுங்கள்

இன்னும் கொஞ்சம் கூடுதலாகா பாத்திரப்படைப்பு,புலச் சூழல் பற்றிய வர்ணணைகள் இருந்தால் பாதிரங்களுடன் ஒட்டுதல் ஏற்படும்.அடுத்துவரும் கதைகளில் புலம்பெயர் சூழலில் ஏற்படும் தலைமுறை இடைவெளி,கலாச்சார முரண்கள்,உங்களுக்கும் உள்ளூர் மாணவருக்கும் இடயேயான நட்பு பிரச்சினைகள் என்று மேலும் கதைக் கருக்களை வித்தியாசமான வகையில அமைக்கலாம்.

Posted

விஷ்ணு கதை நல்லாருக்கு (இது கதைதானா இல்லை அனுபவமா :oops: ) :wink: :P

நாரதர் அங்கிள் புண்ணியத்தில :P (அவர் தூசு தட்டியதால அதாம்பா பின்னுக்கு இருந்ததை முன்னுக்கு போட்டதால)இப்பதான் வாசிச்சன் :P

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது சரி விஸ்ணு உங்களுக்கு கல்யாணம் முடிந்தது என்று கேள்விப்பட்டேன். அந்த பட்டாம் பூச்சியைத்தான் கட்டினீர்களா?

Posted

கதை நன்றாகவும் ரசிக்கக் கூடியாதகவும் இருக்கு, :) :P எனேய் அப்பு நல்லாதான் தூசு தட்டுறீங்க :blink:

Posted

நித்திலா எங்க போட்டா??

Posted

விஷ்ணு நல்லா எழுதியிருக்கீங்க. நல்ல யதார்த்தமான கற்பனை ( உண்மையில் கற்பனைதான் என்றால்) :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.