Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவத்துடன் சேர்ந்து பூங்காவில் குத்தாட்டம்! (Video in )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் முதலில் பதிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சமரசம் எனும் சொல்லின் பதம் தவறாக புரியபட்டுள்ளது.

ஒருவன் தனது கொடிய முகத்தை மறைப்பதற்ற்கு துணை போவதற்ற்கும்.........

சமரசமாக உங்களது இலக்கு நோக்கி நகர்துகொண்டே இருப்பதர்த்கும் வித்தியாசம் உள்ளது.

சமரசம் எனும் சொல்லின் பதம் தவறாக புரியபட்டுள்ளது.

ஒருவன் தனது கொடிய முகத்தை மறைப்பதற்ற்கு துணை போவதற்ற்கும்.........

சமரசமாக உங்களது இலக்கு நோக்கி நகர்துகொண்டே இருப்பதர்த்கும் வித்தியாசம் உள்ளது.

தமிழன் செய்த பெரிய சமரசம் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஜின்னாவை போன்று பொன்னம்பலம் இராமநாதன் தனிநாட்டை கேட்காதது தான். அதற்கு அவன் கொடுத்த, கொடுக்கும் விலை கொடியது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சமரசம் எனும் சொல்லின் பதம் தவறாக புரியபட்டுள்ளது.

ஒருவன் தனது கொடிய முகத்தை மறைப்பதற்ற்கு துணை போவதற்ற்கும்.........

சமரசமாக உங்களது இலக்கு நோக்கி நகர்துகொண்டே இருப்பதர்த்கும் வித்தியாசம் உள்ளது.

ஐயா

இங்கு பிரச்சினையே இலக்குத்தானே?

உங்கள் இலக்கும் அவரது இலக்கும் வேறு வேறு......

இலக்கு என்றுதான் இருவரும் சொல்வார்கள். ஆனால்.......?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் செய்த பெரிய சமரசம் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஜின்னாவை போன்று பொன்னம்பலம் இராமநாதன் தனிநாட்டை கேட்காதது தான். அதற்கு அவன் கொடுத்த, கொடுக்கும் விலை கொடியது.

அநகாரிக தர்மபாலாவின் வேண்டுகோளுக்கிணங்க 1915 சிங்கள - இஸ்லாமியக் கலவரத்தின்போது சிறையிலடைக்கப்பட்ட சிங்களத் தலைவர்களை சிறைமீட்க இங்கிலாந்து சென்று இங்கிலிஷில் பேசியதால் கொழும்பில் தேரில் வைத்து சிங்களவர்கள் இராமநாதனை ஊர்வலமாகக் கொண்டுசென்றார்கள். எனவே இராமநாதன் வழிவந்த தமிழ்த் தலைவர்கள் (இராமநாதன் 19030 இல் இறந்துவிட்டார்) கொழும்பில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் சரிசமமாக இருந்து நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி எல்லோரையும் ஆளலாம் என்று கனவு கண்டதால்தான், மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க ஆதரவளித்தார்கள். எனவே சமசரம் என்பதுதான் சுகபோகமாக வாழ உகந்தது என்பது தூரதரிசனமற்ற சட்டம்பி அரசியல்வாதிகளின் போக்காக இருந்தது.

பின்னர் சமரசம் இல்லாத வன்முறைப் போராட்டம் மூலமாக தமிழீழத்தை அடையலாம் என்ற கனவுடன் ஆரம்பித்த போராட்டம், உலகம் தங்களுக்குள் சமரசம் செய்து தமிழீழ ஆயுதப் போரை முடிவுக்கு கொண்டுவந்து சேர்த்ததில் முடிந்தது.

தற்போது தமிழர்கள் தங்களது இருப்பைப் பேண காற்றுக்கு வளையாமல் நின்று முறிந்த ஆலமரத்தைப் போல இருக்காமல் நாணலைப் போல வளைந்துதான் போகின்றார்கள்.

இது சரியா தவறா என்பதை அடுத்த 5 - 10 வருடங்களில் தெரிந்துகொள்ளலாம்.

Edited by கிருபன்

பகிர்வுக்கு நன்றி.

பின்னர் சமரசம் இல்லாத வன்முறைப் போராட்டம் மூலமாக தமிழீழத்தை அடையலாம் என்ற கனவுடன் ஆரம்பித்த போராட்டம், உலகம் தங்களுக்குள் சமரசம் செய்து தமிழீழ ஆயுதப் போரை முடிவுக்கு கொண்டுவந்து சேர்த்ததில் முடிந்தது.

கனவு என்பதை விட நம்பிக்கை என்பதே பொருத்தம்.

தற்போது தமிழர்கள் தங்களது இருப்பைப் பேண காற்றுக்கு வளையாமல் நின்று முறிந்த ஆலமரத்தைப் போல இருக்காமல் நாணலைப் போல வளைந்துதான் போகின்றார்கள்.இது சரியா தவறா என்பதை அடுத்த 5 - 10 வருடங்களில் தெரிந்துகொள்ளலாம்.

அப்பொழுது ஆயுதப்போரட்டத்திற்கும் வரலாற்றில் இடம் கிடைக்கும்.

நீங்கள் நினைக்கின்றீர்களா ஊரில் உள்ளவர்கள் இதனை அறியாது இப்படியான விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள் என? அல்லது அவர்களுக்கு விளங்கவில்லை ஆகவே பாடம் நடத்தி விளங்கவைப்போம் என்கின்றீர்களா? சனம் தன் நிம்மதிக்காக, தன் அடுத்த கட்ட வாழ்வின் படிக்காக நிச்சயம் சமரசம் செய்தே ஆகும். நாம் செய்த சமரசத்துக்கும் அவர்கள் செய்யும் சமரசத்துக்கும் ஆயிரம் அடி அகல நீள வித்தியாசங்கள் இருக்கலாம். அதை புரியாது அந்த ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து அப்படி செய்பவர்களை கேவலமாக விமர்சிக்க முடியுமா?

நாம் விமர்சிப்பது எந் நேரமும் துப்பாக்கிகளின் முனையில் இருத்தி வைக்கப் பட்டு இருக்கும் ஒரு இனம் பற்றி என்ற புரிதல் மனசின் ஆழத்தில் இருந்தால் ஒற்றை வீடியோவினை பார்த்தோ அல்லது ஒரு பிழைப்புவாதியின் இலக்கியம் பார்த்தோ முடிவு எடுக்க மாட்டோம்

அங்கே இருக்கும் எல்லோரும் ஒரே நிலையில் தான் இருகிறார்கள்.அதில் இவர்கள் மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? இவ்வாறு நடக்காதவர்கள் பின் துப்பாக்கி இல்லையா? கோகர்ணன் எழுதும் போது அவர் பின்னால் துப்பாகியைப் பிடித்தா இருகிறார்கள்? ஏன் மற்றவர்கள் அவ்வாறு எழுதவில்லை? அவர் அவர் தமது சுய நல பிழைப்புக்காக , பொது நலனை விற்று வாழ்வு நாடாத்துவது எவ்வகையில் சரியானது? இவ்வறான வியாபாரத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

தூர நோக்கில் இவை எம் மக்களை எங்கு இட்டுச் செல்லும் என்பதை நாங்கள் பல் வேறு வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.அதனைச் சுட்டிக் காட்டக் கூட எமக்கு உரிமை இல்லையா? எமது இனம் நிலமிழந்து, அடையாளம் இழந்து நிரந்தர அடிமையக வாழ்வதைப் பார்த்து நாங்கள் வாய் மூடி இருக்க வேண்டுமா? அவன் இந்த ஒளிப்படத்தை தனது சர்வதேச பிரச்சாரத்துக்குப் பயன் படுத்துகிறான்.எமது நிலம் எமது அடையாளம் எமது மக்களின் சொத்துக்கள் பறிபோகிறது என்று நாம் கத்தி என்ன பிரியோசனம்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நாளை எமது வளங்கள் சூறையாடப்பட்டு எமது மக்கள் வறுமையில் வாழ , நாம் இப்படி நடனம் ஆடிக் கொண்டிருப்போம், கதை எழுதிக் கொண்டிருப்போம், அப்போதும் நாம் , வாய் பேசாது எமது மனத்தின் ஆளத்தில் வைத்து பூசை செய்து கொண்டிருப்போம், உலகம் தனது பாட்டில் சென்று கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இளம் குமரிகளா?...சின்னப் பிள்ளைகள் போல கிட‌க்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலத்தில் வைராக்கியபலம் வேண்டும்.புலத்தில் ஒற்றுமைப்பலம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நடக்கிறத கதையிங்கப்பா...........இந்த 2 உம் நடக்க போறதே.....இல்லை...........லெட்ஸ் கோ.........அன்ட் பார்ட்டி...........

  • கருத்துக்கள உறவுகள்

அட நடக்கிறத கதையிங்கப்பா...........இந்த 2 உம் நடக்க போறதே.....இல்லை...........லெட்ஸ் கோ.........அன்ட் பார்ட்டி...........

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நடக்கிறத கதையிங்கப்பா...........இந்த 2 உம் நடக்க போறதே.....இல்லை...........லெட்ஸ் கோ.........அன்ட் பார்ட்டி...........

உனக்கும் எனக்கும்...ஆஹா....உனக்கும் எனக்கும் ஆனந்தம்...பத்துவயதில் ஆரம்பம்...விடிய விடிய இன்பம்.....

இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.

http://www.tamilthai.com/?p=28225

அவன் படம் பிடித்தான். தான் பார்க்கப்போறான். அல்லது இன்னும் கொஞ்சப் பேருக்கு காட்டப்போறான்.

நீங்கள் இணையத் தளத்திலை போட்டு எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த வீடியோவைக் காட்டிப்போட்டீங்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.