Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயரும் நாங்களும்

Featured Replies

அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!!

நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோமகனாகிய நான் , எந்த இனத்தவரிடமும் எனது முழுப்பெயரை அளைக்க வேற்ரு இனத்தவர்களுடன் சமரசம் செய்துகொள்வதில்லை . அவர்களுக்கு நான் சொல்லும் காரணம் <பெயர்கள் தான் ஒருவரது இனடையாளத்தையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காவிவருவது , எப்படி உங்கள் பெயரை நாங்கள் அறுத்து உறுத்திக் கூப்பிடுகின்றோமோ , அப்படியே எனது பெயரைக் கூப்பிடுங்கள் > என்று . ஆனால் , இவ்விடையத்தில் நாங்கள் பெரும்பாலும் சமரசப்போக்கையே கடைப்பிடிக்கின்றோம் . எனது கேள்வி என்னவென்றால் , இந்தப்போக்கு நீண்டகால நோக்கில் எமக்கு ஆரோக்கியமான விடையமா ?? இது ஒருவகை அடிமைத்தனத்தின் வெளிப்பாடு இல்லையா ?? இதை தெரிந்தே எம்மவர்கள் செய்கின்றார்களா ?? எங்கே கள உறவுகளே உங்கள் கருத்துக்களை வைய்யுங்கள் :) :) :) .

Edited by komagan

நீண்டகாலப்போக்கில், இரண்டு - மூன்று தலைமுறைகளில், எமது தலைமுறையினர் தமது முதற்பெயரை மாற்றிவிடுவார்கள். ஆகவே, எமது அடையாளமாக இருக்கப்போவது குடும்பப்பெயர் மட்டுமே. அதைவைத்தே இவர் தமிழர் என தெரியவரும்.

இவ்வாறு நடப்பதற்கு முக்கிய காரணம் பலவேளைகளில் எமது பெயர்கள் எமக்கே உச்சரிப்பதற்கு கடினமாக உள்ளமையே. அதாவது நாம் பெயர்கள் வைப்பதில் அதிகம் புதுமை செய்வது. உதாரணத்திற்கு ஒரு சில பெயர்களையே (ஒரு இருபது) எமக்குள் வைப்போமானால் அந்தந்த நாட்டு இனத்தவர்களுக்கும் எமது பெயர்களை பழக இலகுவாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு 'குமார்' எனற வட இந்திய பெயர் இலகுவாக பலராலும் உச்சரிக்கமுடிகின்றது.

ஒரு சிறு வீதமே அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து தமிழ் பெயர்களை முதற்பெயராக பேணும். அவர்கள் பராக் ஒபாமா போன்று திறமை உள்ளவர்களாக இருக்கவேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொருவிடயம். வெளிநாடுகளில் முதற் பெயர் நடுப் பெயர் இறுதி பெயர்( குடும்பபெயர் ) என மூன்றும் கேட்க படுகிறது . இதனால் ப ல பிரச்சினைகளும் வந்தன. . வெளிநாட்டில் குடும்பமாக் குடும்பமாக் கணிக்க .அது நம்ம வர்களுக்கு சரிவ ராது ..

...பொன்னர் ......கந்தையாவின் மகன் சசி தரன் ...

கந்தையாவின் மனைவி ... கமலம் .........

சசிதரனின் மனிவி சுஜித்தா ...........இங்கு வெளிநாட்டில் .....சசிதரனின் தாயும் திருமதி கந்தையா.?..

.சசிதரனின் மனைவியும் திருமதி கந்தையாவா ? .........பல ஸ் போன்செர் விடய்ங்களி லும் பிரச்சினை வந்தது.

எழுத்துக்க களாலும் பிரச்சினை வந்தது ...shiva ... siva...........civa ..அதிக எண்ணிக்கையான எழுத்துக்களாலும் பிரச்சினை வந்தது .....

.......ஒருவருக்கு பதின் மூன்று எழுத்தில் பெயர் அமைந்தது ...மகன் கேட்டார் அப்பா ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் .அவர் சொன் னார் என் அப்பப்பாவைக் கேட்கவேண்டுமென்று .......

.இடம் ......... காலம் ........தேவைக்குற்ப பெயர் அமையவேண்டும்

கனேடிய பல்கலைக்கழகமான 'யுனிவெர்சிட்டி ஒப் டொராண்ரோ' செய்த ஆய்வின்படி ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பதாரர்களின் பெயர்கள் எவ்வாறு அவர்களை பாதிக்கின்றது என ஆய்வு நிகழ்த்தினர். அதன்படி கீழ் வரும் நகரங்களில் எத்தனை

வீதங்கள் ஆங்கில பெயர்கள் காரணமாக தொடர்புகளை ஏற்படுத்துகிறனர் என வெளியிட்டனர்:

டொராண்டோ: 47%

மொன்றியல் : 39%

வான்கூவர் : 20%

உலகிலேயே அதிகூடிய பல்லின மக்கள் தொகையை கொண்ட டொராண்டோவிலேயே உங்கள் பெயரில் ஆங்கில பெயர் இருந்தால் 47 வீதம் உங்களை தொடர்புகொள்ள சாத்தியம் உள்ளது என்பது வருத்தத்திற்குரிய ஆச்சரியமே.

ஆதாரம்:http://www.theglobeandmail.com/report-on-business/economy/economy-lab/daily-mix/whats-in-a-name-a-job-maybe/article2201151/

பணத்தின் தேவை இருக்கும் வரை.

புலம் பெயர்ந்து பிற நாடுகளுக்கு செல்லாமல் உள்ளவரை .

தாயகத்தில் எமது உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை.

எங்களுக்கு என்று ஒரு தனி நாடு அமையும் வரை.

இந்த பெயர் மாற்றங்கள் தொடர்ந்தே செல்லும் இது எமது தலை விதி ஏனெனில் நாம் வாழும் நாடு நமதல்ல.

  • தொடங்கியவர்

உண்மையின் குரல் கிளியவன் . மிக்க நன்றிகள் கிளியவன் . ஆனால் , இடப்பெயர்வு நாம் விரும்பி ஏற்ருக்கொண்டதில்லை . ஒரு சில சலுகைகளுக்காக எமது அடையாளத்தைத் துலைப்பது சரியா :) :) .

Edited by komagan

  • தொடங்கியவர்

நல்லதொருவிடயம். வெளிநாடுகளில் முதற் பெயர் நடுப் பெயர் இறுதி பெயர்( குடும்பபெயர் ) என மூன்றும் கேட்க படுகிறது . இதனால் ப ல பிரச்சினைகளும் வந்தன. . வெளிநாட்டில் குடும்பமாக் குடும்பமாக் கணிக்க .அது நம்ம வர்களுக்கு சரிவ ராது ..

...பொன்னர் ......கந்தையாவின் மகன் சசி தரன் ...

கந்தையாவின் மனைவி ... கமலம் .........

சசிதரனின் மனிவி சுஜித்தா ...........இங்கு வெளிநாட்டில் .....சசிதரனின் தாயும் திருமதி கந்தையா.?..

.சசிதரனின் மனைவியும் திருமதி கந்தையாவா ? .........பல ஸ் போன்செர் விடய்ங்களி லும் பிரச்சினை வந்தது.

எழுத்துக்க களாலும் பிரச்சினை வந்தது ...shiva ... siva...........civa ..அதிக எண்ணிக்கையான எழுத்துக்களாலும் பிரச்சினை வந்தது .....

.......ஒருவருக்கு பதின் மூன்று எழுத்தில் பெயர் அமைந்தது ...மகன் கேட்டார் அப்பா ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் .அவர் சொன் னார் என் அப்பப்பாவைக் கேட்கவேண்டுமென்று .......

.இடம் ......... காலம் ........தேவைக்குற்ப பெயர் அமையவேண்டும்

மிக்க நன்றிகள் நிலாமதியக்கா நிர்வாகச் சிக்கல் எங்கும் தானே உள்ளன . ஆங்கிலம் பேசும் நாடுகளில் எப்படியோ எனக்குத் தெரியாது . என்னைப்பொறுத்தவரையில் பிரான்ஸ்சில் மிகத்தெளிவான நடைமுறையே உள்ளது . ஒரு பெண் திருமணம் ஆனாலும் அவளது முதற்பெயர் அவளது தந்தையின் பெயராலேயே அளைக்கப்படும் . அதே போல் ஆணும் அவனது தந்தை பெயராலேயே அளைக்கப்படுகின்றான் . ஆனால் அவர்களது அடையாள அட்டையில் பெண் ஆனால் கணவரின் பெயரும் ஆணானால் மனைவியின் பெயரும் குறிக்கப்படும் உதாரணம் :

1. ஆண் : கந்தையா செவ்வேள் ( அளைக்கும் பெயர் கந்தையா )

2. பெண் : பொன்னம்பலம் சிவகாமி (அளைக்கப்படும் பெயர் பொன்னம்பலம் )

இவர்கள் திருமணமானால் , திருமதி சிவகாமி பொன்னம்பலத்தின் பெயராலும் , திரு செவ்வேள் கந்தையாவின் பெயராலுமே அளைக்கப்படுவார்கள் . அடையாளட்டையில் பின்வருமாறு இருக்கும்

ஆண் : முதற்பெயர் : கந்தையா

பெயர் : செவ்வேள்

மனைவி சிவகாமி

2. பெண் :

முதற்பெயர் : பொன்னம்பலம்

பெயர் : சிவகாமி ( அளைக்கப்படும் பெயர்

பொன்னம்பலம் )

கணவர் : செவ்வேள்

இது இப்படி இருக்க , சந்திரசேகரனை ( சாட் ) என்றும் கிருஸ்ணகுமாரை ( கிரிக்ஷ் ) என்றும் அன்னலக்ஸ்மி யை ( அனா )என்றும் பிரியதர்சினியை ( பிர்னி ) என்றும் மாற்ருவது சரியா நிலாமதியக்கா?????

  • தொடங்கியவர்

நீண்டகாலப்போக்கில், இரண்டு - மூன்று தலைமுறைகளில், எமது தலைமுறையினர் தமது முதற்பெயரை மாற்றிவிடுவார்கள். ஆகவே, எமது அடையாளமாக இருக்கப்போவது குடும்பப்பெயர் மட்டுமே. அதைவைத்தே இவர் தமிழர் என தெரியவரும்.

இவ்வாறு நடப்பதற்கு முக்கிய காரணம் பலவேளைகளில் எமது பெயர்கள் எமக்கே உச்சரிப்பதற்கு கடினமாக உள்ளமையே. அதாவது நாம் பெயர்கள் வைப்பதில் அதிகம் புதுமை செய்வது. உதாரணத்திற்கு ஒரு சில பெயர்களையே (ஒரு இருபது) எமக்குள் வைப்போமானால் அந்தந்த நாட்டு இனத்தவர்களுக்கும் எமது பெயர்களை பழக இலகுவாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு 'குமார்' எனற வட இந்திய பெயர் இலகுவாக பலராலும் உச்சரிக்கமுடிகின்றது.

ஒரு சிறு வீதமே அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து தமிழ் பெயர்களை முதற்பெயராக பேணும். அவர்கள் பராக் ஒபாமா போன்று திறமை உள்ளவர்களாக இருக்கவேண்டும் :D

மிக்க நன்றிகள் அகோதா எங்களிடம் சகல வளமும் உள்ளது . அத்துடன் , அடிமை மரபணு இன்னமும் எங்களுடன் தொடர்ந்து வருகின்றது :( :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதான்.. :D ......... வெளி நாட்ட்வர்களுக்காக மாற்றப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எமது பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதிலேயே பிரச்சினை தொடங்குகிறது..!

நாதன் என்பதை Nathan என்று எழுதினால் அது ஆங்கிலத்தில் நே(த்)தன் என்று வாசிப்பார்கள்..! ஆகவே பெயர்களை மாற்றுவதை விட அப்பெயர்களை ஆங்கிலத்தில் அவர்கள் வாசிப்பதுபோல மாற்ற வேண்டும்..!

உதாரணமாக,

பாலன் என்று வரவேண்டுமானால் Balan என்று எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்..! Balan என்பதை பலான் என்று இங்கு படிப்பார்கள்.. தேவையா? :D

அதனால் பாலன் என்பதை Barlan or Barlen என்று எழுதலாம். :rolleyes:

அழகான எம் தேசிய மல காந்தள்.. அதை Candell என்று எழுதலாம். :rolleyes:

இத்தாலியர்களின் பெயர் வாயில் நுழைவது கடினம்.. அதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றுகிறார்களா என்ன? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய விருப்பமும் இன்றித் தாய் தந்தையர்களால் திணிக்கப்பட்டது தான் பெயர்.அதை வைத்திருப்பதும் மாற்றுவதும் அவரவர் விருப்பம்.

வெளி நாட்டுப் பிரஜாவுரிமையை ஏற்றுக்கொள்வதற்கும் பெயரைச் சுருக்கிக் கொள்வதற்கும் என்ன வித்தியாசம்.

நம்ம நாட்டிலேயே முதற்பெயரைத் தவிர அழைக்கும் பெயரையும் வைத்திருக்கின்றனர் பலர்.

ஒருவனின் அடையாளம் அவனின் பெயரிலா? அல்லது அவன் வாழும் முறையிலா? அல்லது அவன் கடைப்பிடிக்கும் கலாச்சாராத்திலா?

நீங்கள் யார் என்பதை நீங்கள் வாழும் சமுதாயமே நிர்ணயிக்கின்றது

டிஸ்கி: என் பெயர் ஒன்றுதான் ஆனால் என்னை அழைப்பது நாலு பெயரில் :)

எனக்கு கிறிஸ்தவப் பெயர் இருந்தும், அதனைப் பாவிப்பதில்லை. கேட்க ஏதோ ஆங்கில யூதனின் பெயரைக் கேட்ட மாதிரி இருக்கும். தமிழ்ப் பெயரையே உபயோகிக்கிறேன். வேற்று மொழி நண்பர்களும் பெயர் சுய சமூக அடையாளத்தோடு இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஒரு பேச்சுக்கு உங்கட பெயர் செல்வராசா என்றால் Silver Raza என்று ஸ்ரைலா எழுதலாம்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் பகிர்வுக்கு, நான் கேள்விப்பட்ட & பார்த்த அளவில் எந்த பெயரும் பாவிக்கலாம் இங்கு, ஆனா சரியாக உச்சரிகனும், வெள்ளை 4 or 5 தரம் திருப்பி கேட்பான் தான் உச்சரிப்பது சரியா என்று அல்லது விருப்ப பெயர் இருக்கா என்றும் கேட்பான் கதைக்க முதல், அதே மாதிரி அவனின் பெயரும் வடிவாக உச்சரிக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எமது பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதிலேயே பிரச்சினை தொடங்குகிறது..!

நாதன் என்பதை Nathan என்று எழுதினால் அது ஆங்கிலத்தில் நே(த்)தன் என்று வாசிப்பார்கள்..! ஆகவே பெயர்களை மாற்றுவதை விட அப்பெயர்களை ஆங்கிலத்தில் அவர்கள் வாசிப்பதுபோல மாற்ற வேண்டும்..!

உதாரணமாக,

பாலன் என்று வரவேண்டுமானால் Balan என்று எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்..! Balan என்பதை பலான் என்று இங்கு படிப்பார்கள்.. தேவையா? :D

அதனால் பாலன் என்பதை Barlan or Barlen என்று எழுதலாம். :rolleyes:

அழகான எம் தேசிய மல காந்தள்.. அதை Candell என்று எழுதலாம். :rolleyes:

இத்தாலியர்களின் பெயர் வாயில் நுழைவது கடினம்.. அதற்காக அவர்கள் தங்கள் பெயர்களை மாற்றுகிறார்களா என்ன? :huh:

உங்கள் கருத்துக்கு ஒத்துபோகிறேன். எங்கள் பெயர்கள் அவர்கள் வாயில் அல்லல்படும்போது கேட்க முடியாமல் இருக்கு

Edited by கறுப்பி

ஒரு பேச்சுக்கு உங்கட பெயர் செல்வராசா என்றால் Silver Raza என்று ஸ்ரைலா எழுதலாம்.. :D:lol:

:lol:

உண்மையாகவே நல்லா இருக்கு.

சில வேலை எங்கள் பெயர்கள் வெள்ளைகளின் நாக்கில் பட்டு வரும் பொழுது சிரிப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

படிக்கும் பொழுது வகுப்பில் ஒரு வெள்ளை ஆசிரியை திரும்பத் திரும்ப ஒரு இத்தாலியனின் பெயரைக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தார். பிறகு அவர் என்னைக் கையைக் காட்டிக் கூப்பிட்ட பின்தான் தெரியும் அது எனது பெயர்தானேன்று.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் பெயர் வைக்கும் போது ஒரு மனச்சாட்சி வேண்டும்.கனகசபாபதி,கதிர்வேலாயுதபிள்ளை,திருவெங்கடாசலம்,முத்துக்குமாரசாமி போன்ற பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் போது மேலும் அதிக எழுத்துக்கள் ஆகி வேற்று நாட்டவரை கொலை வெறிக்கு உள்ளாக்குகிறது :D .உ+ம்:muthukumarasami.

ஆகவே ஒரு கனகு,கதிர்,திரு,சாமி என சுருக்கமாக கூப்பிடுதல் எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்.

முதற்பெயரை சிலர் மாற்றி உள்ளார்கள் கடைசிப்பெயரை மாற்றாமல்.இதன் மூலம் இன அடையாளம் தெரியும் தானே.வேற்று நாட்டவர்கள் குறிப்பாக சீனர்கள் தமது முதற்பெயரை ஆங்கிலப்பெயராக வைத்துள்ளார்கள்.

ஒருவரின் பெயர் திருஞானசவுந்தரலிங்கம் (THIRUGNAANASAVUNTHARALINKAM )

ஈழத் தமிழர்களுக்கு, எள்ளுத்தாத்தாவின் பெயர் + கொள்ளுத்தாத்தாவின் பெயர் + தாத்தாவின் பெயர் + அப்பாவின் பெயர் எல்லாவற்றையும் சேர்த்தே பெயர் வைக்கிறார்கள் என்று சில வெள்ளைகள் நினைத்துள்ளார்கள். :lol:

நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்..! :rolleyes:

ஆங்கில முதற்பெயரை வைக்காமலே தமிழில் சிறிய அளவில் உள்ள முதற்பெயர்களை ஆங்கில வாடையுடன் எழுதலாம் என்பது என் கருத்து..! :unsure: உதாரணமாக,

ஆரணி என்று பெயர் வைத்தால் அதை Arnie என்று ஆங்கிலத்தில் எழுதிவிடலாம். :rolleyes:

வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆங்கில முதற்பெயர்களை சூட்டிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. விரும்பாதவர்கள் தங்கள் முதற்பெயரையே சுருக்கி வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலேயனே தன் அநேகமான முதற்பெயர்களை சுருக்கித்தான் கூப்பிடுகிறான். :rolleyes: உதாரணமாக,

கிறிஸ்ரோஃபர் = கிறிஸ்

ரொபேர்ட் = Bob அல்லது Rob

அலெக்ஸாண்டர் = அலெக்ஸ்

வில்லியம் = பில் (Bill)

தோமஸ் = Tom

திமொதி = ரிம் (Tim)

இப்படிப் பல.. :rolleyes:

ஒருவரின் பெயர் திருஞானசவுந்தரலிங்கம் (THIRUGNAANASAVUNTHARALINKAM )

ஈழத் தமிழர்களுக்கு, எள்ளுத்தாத்தாவின் பெயர் + கொள்ளுத்தாத்தாவின் பெயர் + தாத்தாவின் பெயர் + அப்பாவின் பெயர் எல்லாவற்றையும் சேர்த்தே பெயர் வைக்கிறார்கள் என்று சில வெள்ளைகள் நினைத்துள்ளார்கள். :lol:

திருஞானசௌந்தரலிங்கம் = True Gagnon Sound Error Link Home :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெயர் KUGATHASAN

இதை பிரெஞ்சுக்காறர்கள் கொலை செய்துவிடுவார்கள். ஆனால் எனது தகப்பனாரின் பெயரை சுப்பிரமணியம் என்று என்னைவிட அழகாக உச்சரிப்பார்கள்.( சுப்பிரமணியத்தை அதாவது தமிழ்க்கடவுளை ஏற்கனவே அறிந்திருப்பதலோ என்னமோ)

ஆனால் வேலையிடத்தில் வீட்டில் கூப்பிடுவதுபோல் தாசன் என்றே அழைக்கும்படி விட்டுவிடுவேன்.

எதற்காகவும் பெயரை மாற்றியது கிடையாது. யாழ் உட்பட. விசுவலிங்கம் சுப்பிரமணியம் குகதாசன்(விசுகு)

  • கருத்துக்கள உறவுகள்

திருஞானசௌந்தரலிங்கம் = True Gagnon Sound Error Link Home :lol: :lol: :lol:

ஆகா எப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள் இசை:lol: :lol:

திருஞானசௌந்தரலிங்கம் = True Gagnon Sound Error Link Home :lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

இதைக் கேட்டால், அந்தாளுக்கு பெயர் வைத்தவர்கள் தற்கொலை பண்ணப் போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D :D :D

திருஞானசௌந்தரலிங்கம் -கடன் வேண்ட வங்கிக்கு செல்லும்பொழுது பெயரை அழகாக உச்சரிக்கின்றனர்.ஏன்??

வலிமையே வாழ்வு!

திருஞானசௌந்தரலிங்கம் - இவர் ஒரு கோடீஸ்வரராக இல்லை புகழ்பூத்த அரசியல்வாதியாக இல்லை ஏதாவது புகழ்பூத்தவராக இருந்தால் - தாராளாமாக உச்சரிப்பார்கள். உதாரணத்திற்கு கணித மேதை இராமனுஜம், வேலுப்பிள்ளை பிரபாகரன் - இவ்வாறான பெயர்களை முழுமையாக சரியாக உச்சரிப்பார்கள்.

இருப்பதை தக்க வைக்கவேண்டும். பெயரை மாற்றுவதால் உள்ள சிறப்பையும் இழக்கலாம்.

இங்கு கனடாவில் நிறையவே தென் அமெரிக்க மக்கள் உள்ளனர். இவர்களில் பலரும் அந்த நாடுகளின் பூர்வீக குடிகள், ஆனால் ஸ்பானிய காலனித்துவம் காரணமாக அவர்களின் மொழியையும் பெயர்களையும் தழுவியவர்கள்.

இங்கே இருவருடன் வேலை செய்தேன். ஒருவர் ஸ்பானியர் George Romero, மற்றையவர் பெரு நாட்டினர் Leo Romero. முதலாமவர் வெள்ளைக்காரன், இரண்டாதவர் செவ்விந்தியர் போல காட்சி தருவார்.

ஆனால் பல இடங்களில் ஸ்பானிய Romero பெரு Romeroவை மதிப்பதில்லை. அவர்களுக்கு மொழியையும் இல்லை பெயரும் இல்லை, எல்லாமே நாங்கள் தந்தவை என்ற பொருள்பட கூறியதுண்டு.

இதே நிலை அமேரிக்கா வாழ் ஆபிரிக்க மக்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.