Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன.

இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பல மடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட பிரித்தனியர்கள் கூட நிரந்தர வேலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுல்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறையில் கோரப்பிடியிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு வெளி நாட்டுக் கனவோடு பிரித்தானியக் கல்லுரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் வரும் மாணவர்களின் அவலம் பேசப்படுவதில்லை.

பலர் நாளந்தத உணவிற்கே வழியற்ற நிலையில் காணப்படுகின்றனர். தங்குமிட வசதியின்றி தவிக்கின்றனர்.

லண்டனில் கற்பதற்கு அனுமதி பெற்றால் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வது இலகுவானதென்றும் பகுதி நேர வேலைசெய்து கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் சீர் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையில் இங்குள்ள கல்விக் கூடங்களின் முகவர்கள் தமது வியாபாரத்தை நடத்துவதற்காக மிகப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குகின்றனர்.

இப்போது பிரித்தானியாவிற்கு வருகின்ற மாணவர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலைசெய்வதற்கான சட்டரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது. 10 மணி நேர வேலையில் பெற்றுக்கொள்ளும் அடிப்படை ஊதியம் பிரையாணச் செலவுகளுக்கே போதுமானதல்ல.

இந்த நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறனர்.

இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் வியாபாரிகள் இங்கு வரும் தமிழ் மாணவர்களை அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகையிலும் மூன்று மடங்கு குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.

பொதுவாக தமிழர்கள் சொந்தமாக வைத்திருக்கும் உணவகங்களிலும், பலசரக்குக் கடைகளிலும் வேலைக்குச் சேர்ந்து கொள்ளும் மாணவர்கள் அங்கு அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையில் கலாச்சாரம் சீர்ழிவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் “தேசிய வியாபாரிகளும்” இதில் அடங்குவர் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று.

1) திருகோணமலையிலிருந்து கல்வி கற்கவந்த மாணவர் ஒருவரின் அனுபவம்:

நான் 2011 ஆரம்பத்தில் லண்டனில் ஆங்கிலம் கற்கும் கல்வி நிலையம் ஒன்றில் கற்பகற்கான அனுமதிக்கு இலங்கையிலுள்ள முகவர் ஊடாக விண்ணப்பித்திருந்தேன். லண்டனில் நீண்டகாலமாக வாழும் எனது உறவினர்களோடு தொடர்பு கொண்ட போது அவர்கள் தற்காலிகமாகத் தங்குமிட வசதியும் பயணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். கல்வி நிலையக் கட்டணம் மற்றும் முகவர்ருக்கான செலவுத் தொகை என 7000 பிரித்தானிய பவுண்ஸ் வரை செலவு ஏற்பட்டது. அம்மாவிடம் இருந்த நகைகளை விற்றும் ஒரு பகுதிப் பணத்தை கடனாக வாங்கிக்கொண்டும் கனவுகளோடு லண்டனில் வந்திறங்கினேன்.

வசதிகளோடு மன்னர்கள் போல வாழ்வதாகச் சொன்ன எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற போது அவர்கள் நாளாந்த வாழ்க்கைக்கே அல்லல் படுவதை உணரக்க்கூடியதாக இருந்தது. சில நாட்களுக்கு உள்ளாகவே இலங்கையில் வாழ்பவர்களுக்கு இங்குள்ள நிலைமைகளை மறைத்து வசதியாக வாழ்வது போல நாடகமாடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் தமது 13 வது மகனோடு சிறிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். நான் சென்றதும் அச்சிறுவனோடு அறையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. லண்டனுக்கு வந்த முதலாவது நாளிலிருந்து வேலை தேடுவதற்கு ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்து போய்விட்ட்டன. நான் அவர்கள் வீட்ட்லில் வாழ்வதற்கும் வசதி இல்லாத நிலையில் எனது நண்பர்கள் சிலரின் உதவியோடு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் எனக்கும் தங்க இடம் தந்தனர்.

ஒரு சிறிய அறையில் ஏழு பேர் தங்கியிருந்தார்கள். நான் எட்டாவது. தமிழர் ஒருவர் தான் அந்த வீட்டின் சொந்தக்காரர். அவர்களின் உதவியோடு நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து 2 மணி நேரப் பிரயாணம் செய்யும் தொலைவில் தமிழர் ஒருவரின் பலசரக்கு அங்காடி ஒன்றில் வேலை கிடைத்தது.

முதல் நாள் வேலைக்குச் சென்ற போது கடை உரிமையாளர் மூன்று வாரங்கள் பயிற்சி தருவதாகவும் அந்தக் காலப்பகுதியில் ஊதியம் எதுவும் தர முடியாது என்றும் சொன்னார்.

உணவிற்கே பணம் இல்லாத நிலையில் பிரயாணச் செலவிற்கு எங்கே போவது? எனது நண்பர்களின் உதவியால் சிறு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன்.

வேலை செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்து நான் அனுபவிக்கும் வதைகளை இலங்கையில் கூட தொழிலாளர்கள் அனுபவிப்பார்களோ தெரியாது.

காலை எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். இரவு எட்டுமணி வரைக்கும் 12 மணி நேர வேலை. கடைகளில் சாமன்களை அடுக்குவதும், மூட்டை சுமப்பதும், சமான்களை விற்பதும் என்று ஓய்வற்ற வேலை. கடைக்குச் சென்ற உடனேயே கைத் தொலை பேசியை வாங்கி பூட்டி வைத்துவிடுவார்கள். யாரோடும் பேச முடியாது. கழிவறை வசதிகள் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உணவு அருந்துவதற்குக் கூட ஓய்வு தரப்படுவதில்லை. வேலையற்ற நேரங்களில் சக தொழிலாளர்களிடம் கூடப் பேசத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடையில் விற்பனை செய்யப்படுகின்ற சிறிய உணவுப் பண்டங்களை அங்கேயே வாங்கி உண்பதற்குத் தான் அனுமதி உண்டு.

இதெல்லாம் ஒரு புறமிருக்க பிரித்தானியாவில் அடிப்படை ஊதியம் மணிக்கு 6 பவுண்ஸ்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதோ மணிக்கு 2 பவுண்ஸ்கள் மட்டுமே. சராசரி மனிதனைப் போல் உணவருந்தினால் 6 பவுண்ஸ்கள் வரை தேவைப்படும். நாங்கள் பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாக உட்கொள்வோம்.

முன்று நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தாலும் 8 மணி நேரக் கணக்குப்படி 16 பவுண்ஸ்கள் மட்டுமே வழங்கப்படும். 3 நாள் வேலைக்கு 48 பவுண்ஸ்கள் கிடைக்கும். தங்குமிடம், உணவு போன்ற அடிப்படைச் செலவுகளுக்கு வாரத்திற்கு 50 பவுண்ஸ்களுக்கு மேல் தேவைப்படுகிறது. பிரயாணச் செலவு குறைந்தது 25 பவுண்ஸ்கள் செலவாகும்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இலங்கைக்குச் சென்று எனது பெற்றோருக்கு முன்னால் எப்படி நிற்பது. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள்?

நான்கு மாதங்கள் தீவிரமாகத் தேடிக் கிடைத்த வேலையை விட்டு விலக முடியாது. இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

2) நான்கு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு முகாமைத்துவ கற்கைக்காக வந்த பெண் ஒருவரின் அனுபவம்:

நான் வந்த நாளிலிருந்து எனது அடிப்படைச் செலவுகளுக்காக வேலை தேடிய அலையாத இடமே கிடையாது. தற்செயலாகச் சந்திக்கின்ற நிறுவனங்களில் வேலை கேட்டி திருப்பி அவமானப்பட்ட சம்பவங்களும் உண்டு. இறுதியில் நண்பர் ஒருவர் ஊடாக தமிழர் ஒருவரை உரிமையாளராகக் கொண்ட ஒன்றில் வேலை கிடைத்திருந்தது. 2 வாரங்கள் பயிற்சி என்ற அடிப்படையில் ஊதியமின்றி வேலை செய்யச் சொன்னார்கள் இரண்டரை பவுண்ஸ்களே 2 வாரங்களின் பின்னர் தருவதாகச் சொன்னார்கள்.

அதற்கும் மேலான அதிர்ச்சியாக, 50 வயது மதிக்கத் தக்க உரிமையாளர் என்னுடன் தவறாக நடக்க முற்பட்ட போது நான் வேலையை விட்டு அன்றே வந்து விட்டேன். எனது பகுதி நேர வேலைதேடும் படலம் தொடர்கிறது.

இவை இரண்டு உதாரணங்கள் மட்டுமே. நூற்றுக் கணக்கில் தமிழ் வியாபாரிகளால் பாதிக்க்ப்பட்ட தமிழ் மாணவர்களின் அவலங்கள் அவமானகரமான பதிவுகளாக எம் முன்னே நீண்டு கிடக்கின்றன. இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்க தேசியம் குறித்தும் கலாச்சாரம் குறித்தும் பீற்றிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களும் ஊடகங்களும் தயாரில்லை. இவ்வமைப்புக்களும் தமிழ் வியாபாரிகளின் கைகளிலேயே முடங்கியுள்ளன என்பது தான் இதன் பின்புலத்தில் பொதிந்திருக்கும் உண்மை.

http://inioru.com/?p=23776

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ளவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டலாலும் அங்குள்ளவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

" உண்மை நிலை "தெரியாததால் ......... வந்து கொண்டுதான் இருப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பவும்.... எனக்கு தெரிஞ்ச ஆக்களுக்கு இஞ்சை நடக்கிற விசயத்தை ரெலிபோனிலை சொன்னனான்....எங்கை கேட்டாத்தானே?ஏதோ நான் எரிச்சல்லை சொல்லுறன் எண்டுபோட்டு......தினாவெட்டாய் பொடியளை இலண்டனுக்கு அனுப்பிப்போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்..பொடி இஞ்சை ஒருபுடி சோத்துக்கு அவலப்பட்டு மணித்தியாலம் ஒண்டரைபவுண்சுக்கு அரிசிமூட்டை அடுக்குது...... :(

இப்பாவிகளின் வாழ்விலும் விளையாடும், பணத்துக்காக பிணத்தையும் தின்னும் எம் வர்த்தக பெருந்தகைகள் ...

.... அண்மையில், .. சவுத்ஹரோவில் இருக்கும் "சம்பல் எக்ஸ்பிரஸ்" இல் பல இப்படி வந்த இளைஞர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள், படித்துக் கொண்டு! அதில் ஓர் இளைஞன் உண்மையிலேயே பகுதிநேரமாகவே வேலையும் (இங்கு வெளிநாட்டு மாணவர்கள் 16ஓ 20 மணித்தியாலம்தான் வேலையும் செய்யலாம் என்ற கட்டுப்பாடும் உள்ளது) செய்து கொண்டிருந்திருக்கிறான். ஆனால் சாப்பாட்டுக்கடை நிர்வாகமோ, வேறு ஒருவர் வேலை செய்யும் சம்பளத்தையும், இவ்விளைஞனின் பெயரிலேயே தானாம் புக் பண்ணி கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். ... அவனின் கெட்டகாலம் வீட்டுக்கந்தோர் பாய்ந்து விட்டது, பாவம் ... அவனின் படிப்பு/கனவுகள்/எதிர்காலம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு ... வீட்டுக்கந்தோர் பிடித்து அனுப்பி விட்டார்கள்!!!

... இப்படி பல சம்பவங்கள் ... வேலையை வாங்கி விட்டு சம்பளம் கொடுக்காத/கனக்க கதைத்தால் காட்டிக்கொடுப்போம் என்று மிரட்டும்/.... எம் வர்த்தக பெருந்தகைகளும்,!!

...

Edited by Nellaiyan

படிக்க வந்த மாணவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தோட்டத்துக் கொட்டிலில் (garden shed) இலும் உறங்குகிறார்கள். அரசும் செலவைக் குறைக்கிறேன் என்ற ரீதியில் மிகவும் இறுக்கிப் பிடித்ததனால் பலருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறது. இதே பொருளாதார நெருக்கடி நீடித்தால் எல்லோரும் கொட்டிலிற்கே போக வேண்டி வரும்.

படிக்க வாறது கடினம்

படிக்கும்பொழுது உழைப்பது கடினம்

படித்து முடித்து கடனுடன் வேலை எடுப்பது கடினம்

இவைகள் ஒரு ஆரம்பமே!

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில இன்னொரு பிரச்சனை இப்ப தலை தூக்கி இருக்குது.

இது.. குடிவரவுத்துறையும்.. கல்வி நிறுவனங்களும்.. முகவர்களும் சேர்ந்து செய்யுற திருவிளையாடல்.

குடிவரவைக் கட்டுப்படுத்திறம் என்ற போர்வையில்.. சில காலமாக.. தர நிர்ணயம் வழக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களை வரவழைக்க முடியும். அந்த நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை.. பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் நாளுக்கு நாள் அப்டேட் செய்து வெளியிடும். அப்படி செய்யும் போது.. சில கல்வி நிறுவனங்கள் திடீர் என்று அதிலிருந்து காணாமல் போக.. கல்லூரிகளை இழுத்து மூடிவிட்டு.. எல்லோரும் ஓடிவிடுகிறார்கள். மாணவர்கள் நடுவீதியில் கட்டிய காசையும் இழந்து நிற்கிறார்கள்.

இன்னும் சில நிறுவனங்களோ.. கல்லூரிக்கு ஆட்களை எடுக்க முகவர்களை நியமித்துவிட்டு.. அவர்களுக்கு வழங்கும் காசையும்.. மாணவர்களிடம் கல்விக்கட்டணமாக அறவிடுகிறார்கள். அப்புறம் என்ன.. கல்லூரியை எல்லை முகவர் நிலையம் மூடச் சொல்லி விட்டதாகக் கூறி.. ஓடிவிடுகிறார்கள்... அல்லது எல்லை முகவர் நிலையம் புதுக்கட்டுப்பாட்டைப் போட்டுள்ளதால்.. உங்களுக்கு விசா நீட்டிப்புக்கான CAS இலக்கத்தை தர முடியாது என்று சொல்லி மாணவர்களை விரட்டி அடிக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இப்படிப் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள்.. கட்டிய காசை திருப்பிக் கேட்டால்.. கல்லூரியைக் காட்டி விசா எடுத்து விடுவதால்.. அல்லது விசாவுக்கு விண்ணப்பித்து விட்டதால்.. காசு தரப்படமாட்டாது என்றும்.. அல்லது நாட்டுக்கு திரும்பிப் போய் அதை உறுதி செய் தருகிறோம் என்று எல்லை முகவர் நிலைய முகவர்கள் போல.. கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு மாணவர்களிடம் காசை பறித்துக் கொண்டு விரட்டி அடிக்கிறார்கள். என்ன இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால்.. குட்டிக் குட்டியான எழுத்தில் பந்தி பந்தியாக அச்சிடப்பட்டுள்ள.. ரேம்ஸ்.. அண்ட் கெண்டிசனில (Terms and conditions) போட்டிருக்கு என்று சொல்லி விடுகிறார்கள்.

இப்படி பாதிக்கப்பட்ட பல வெளிநாட்டு மாணவர்களை குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வராத நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் காண முடிகிறது.

பிரிட்டன்.. வெளிநாட்டு மாணவர்களையும்.. அவரவர் நாடுகளுக்கு ஏற்ப தரம் பிரித்து வேறுபடுத்தி கையாள்கின்ற.. அடிப்படை உரிமை மீறல் செயலையும் செய்து வருகிறது. அண்மைக் காலமாக.. Highly Risk மாணவர்கள் வரும் நாடுகள் பட்டியலில் சிறீலங்காவும் இடப்பட்டு கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இத்தனைக்கும் சிறீலங்காவில் இருந்து வெறும் 10,000 மாணவர்களுக்கே பிரிட்டன் ஆண்டுக்கு பிரித்தானியாவுக்கு வர விசா வழங்குகிறது. இதுவே சீன.. இந்திய மாணவர்களுக்கு மிகப் பல ஆயிரமாக உள்ளது.

அண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்.. பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் தமிழ் மாணவர்கள்.. அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துவிட்டும்.. இருக்கிறார்கள். இன்னும் சிலர் செய்வதறியாது அலைந்து திரிகிறார்கள்.

பிரித்தானியா.. இப்போது.. மோசடிகள் அதிகம் நடக்கும் நாடாக மாறி வருகிறது. கல்லூரிகள்.. கல்வி நிறுவனங்கள்.. அவற்றின் பிராந்திய.. நாடுகளுக்கான முகவர்கள்.. மற்றும் எல்லை முகவர் நிலையம்.. எல்லாமே கூட்டு மோசடி செய்கின்றன.

எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு கல்வி கற்க வர விரும்புபவர்கள்.. Highly trusted கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்று மட்டும் இருங்கு வர வேண்டும். அவர்களிலும் பட்ட மேற்படிப்புக்கு வருபவர்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர முடியும். மற்றவர்களுக்கு முடியாது.

மேலும்.. அரச உதவி பெறும் Highly trusted பல்கலைக்கழகங்கள் தவிர வேறு எங்கு கல்வி கற்றாலும்.. எனி வேலை செய்ய அனுமதி தரமாட்டார்கள். இது கடந்த யூலை 4 இல் இருந்து அமுலிற்கு வந்துள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வோருக்கான வேலை நேரமும் வாரத்திற்கு 10 மணித்தியாலமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலை செய்து கொண்டு படிக்கப் போறன் என்ற கனவில எனி பிரித்தானியாவிற்கு வர வேண்டாம்.

அதுமட்டுமன்றி படித்த பின் பட்டம் பெற்ற பின் வேலை தேட என்று வழங்கப்பட்டு வந்த 2 ஆண்டு கால Poststudy work visa (PSW) எனி மேல் இல்லை. இது சமீபத்தில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது.

சட்ட ரீதியான குடிவரவை கட்டுப்படுத்தும் நோக்கோடு இது கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்.. களவா அகதியா வந்து.. பொய் சொல்லி உட்கார்ந்து கொண்டால்.. கூப்பிட்டு வைச்சு நிரந்தர வதிவிட விசா கொடுக்கிறாங்கள். ஒரு சிலருக்கு மட்டுமே அது கடினமாக உள்ளது (சிறீலங்காவில் நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அதற்கு காரணம் சொல்கிறார்கள்.). அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாதவர்கள் பலருக்கு அரசியல் தஞ்ச ரீதியில் விசா மற்றும்.. பிரித்தானிய கடவுச்சீட்டுக் கூட வழங்குகிறார்கள்.

ஆனால் மாணவர்களுக்கும்.. வேலை தேடுவோருக்கும்.. பிற சட்ட ரீதியான குடியேற்றக்காரர்களுக்கும்.. சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும்.. பிரிட்டனின் வருமானத்தில் 3ம் இடத்தை வெளிநாட்டு மாணவர்களின் வரவின் மூலம் பெறும் பணமே பிடித்து நிற்கிறது. பிரிட்டனின் வருமானத்தில் 3 பில்லியன் பவுன்கள் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கிறது.. ஆண்டுக்கு. ஆனால்.. அந்த மாணவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வெளிநாட்டு உயர்கல்வி பெற விரும்புவோர்.. பிரிட்டனை தவிர்த்து.. இந்தியா.. அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. சிங்கப்பூர்.. கனடா.. அமெரிக்கா.. ஜேர்மனி.. சுவீடன்.. நோர்வே.. பின்லாந்து.. மற்றும் ஹங்கேரி.. செக்.. போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நாடுவது நல்லது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவுத் துறையினர் பக்கமும் குடிவரவாளர்கள் பக்கமும் சம அளவான தவறு இருக்கிறது. மாணவ விசாவில் ஆங்கிலம் படிக்க என்று நாட்டுக்குள் வந்து பிறகு அகதிக் கோரிக்கை அல்லது வதிவிட உரிமை அவர்களில் பல பேர் கேட்கும் போது இப்படி ஒரு கட்டுப் பாட்டை பிரித்தானியா கொண்டு வந்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல. சட்ட விரோதமாக வேலை செய்து கொண்டு சட்ட ரீதியான ஊதியம் தரவில்லை என்று எங்கே போய் முறையிட முடியும்? இந்த நச்சுச் சக்கரத்தை உடைக்க ஒரேவழி தமிழ் தொழிலாளர்கள் முதலாளிகள் இடையேயான புரிந்துணர்வு மட்டும் தான். மேலே பலர் சொன்னது போல, இங்கே பாலும் தேனும் ஓடவில்லை என காணியை நகையை அடகு வைத்து இங்கு வரத்துடிக்கும் உறவுகளிடம் சொல்ல வேண்டும். இங்க வந்த பிறகும் எங்கள் மக்கள் சிலர் செய்யும் அவசியமற்ற சட்ட விரோத செயல்களால் நியாயமான தேவைகளுக்காக சட்டத்தை சாதுவாக மீறும் தமிழர்களுக்கும் தொந்தரவு. சில ஆண்டுகள் முன்பு பிரான்ஸ் வந்த போது சில உறவுகளைச் சந்தித்தேன். அவர்களில் பலரும் மற்றவர்களுடைய "நம்பரில்" களவாக வேலை செய்கிறார்கள். தவறாமல் மூன்றாம் பிள்ளை பெத்து அரச உதவி பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அரசுக்கான வரியைக் கட்டாமல் பேய்க்காட்டுகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து தான் இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

எதிர்காலத்தில் வெளிநாட்டு உயர்கல்வி பெற விரும்புவோர்.. பிரிட்டனை தவிர்த்து.. இந்தியா.. அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. சிங்கப்பூர்.. கனடா.. அமெரிக்கா.. ஜேர்மனி.. சுவீடன்.. நோர்வே.. பின்லாந்து.. மற்றும் ஹங்கேரி.. செக்.. போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நாடுவது நல்லது.

பல்கலைக்கழக நுழைவுக் கட்டணம் அதிகரித்துச் செலவதால், எதிர்காலத்தில் இங்குள்ள மாணவர்களும் உயர் கல்விக்காக வேறைய நாடுகளுக்குச் செல்லும் நிலையேற்படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவுத் துறையினர் பக்கமும் குடிவரவாளர்கள் பக்கமும் சம அளவான தவறு இருக்கிறது. மாணவ விசாவில் ஆங்கிலம் படிக்க என்று நாட்டுக்குள் வந்து பிறகு அகதிக் கோரிக்கை அல்லது வதிவிட உரிமை அவர்களில் பல பேர் கேட்கும் போது இப்படி ஒரு கட்டுப் பாட்டை பிரித்தானியா கொண்டு வந்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

மாணவர்கள் உட்பட அனைத்து சட்ட குடியேற்றக்காரர்களும்.. அகதிகளும்.. பிற சட்ட விரோதக் குடியேற்றக் காரர்களும்.. நிரந்தர வதிவுரிமை இன்றி இங்கிலாந்தில் குறிப்பிட்ட காலம் இருக்கலாம் என்று கொண்டு வந்தால்.. அவர்கள் தாங்களே வந்து தங்கட வேலையைப் பார்த்திட்டு திரும்புவார்கள் தானே.

மாணவர்களாய் வந்து அகதியாக மாறக் காரணம்.. அகதிகளுக்கு வழங்கப்படும்.. நிரந்தர விசா மற்றும் அதி உச்ச சலுகைகள் தான்..! அதேபோல்.. உள்நாட்டில் அன்றி வெளிநாட்டில் திருமணம் செய்தால்.. அவருக்கு திருமண விசா வழங்கப்பட மாட்டாது என்று சட்டத்தைக் கொண்டு வந்தால்.. குடியேற்றக்காரர்கள்.. உள்ளூரிலேயே திருமணமும் செய்து கொள்வார்கள் தானே.

மாணவர்களின் வருவாயில் பிழைப்பை ஓட்டும் பிரிட்டன் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் செளகரியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்காமல்.. இன்னும் அதிக காலம் வெளிநாட்டு மாணவர்களில் தங்கி இருப்பதை செய்ய முடியாத நிலை வரலாம்..!

மொழி உட்பட ஒன்றுமே அறியாத அகதிகளை கூப்பிட்டு வைச்சு.. வதிவுரிமை கொடுப்பதிலும்.. அவர்களுக்கு 5 ஆண்டு கால விசாக்களை வழங்கி அவர்கள் சொந்த இடத்துக்கு திரும்ப பாதுகாப்பான சூழல் எழும் நிலையில் திருப்பி அனுப்பலாம். இதன் மூலம் மூளைசாலிகள் அல்லாத மற்றும் பொருளாதார நன்மை பயக்காத அகதிகளின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.

மாணவர்கள் மீதான கட்டுப்பாடு பிரிட்டனை நெருக்கடிக்குள் தள்ளும் என்று ஏற்கனவே எச்சரிக்கைகளை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு வழங்கி இருந்த போதும்.. அரசு அதனை செவி மடுக்கவில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிரிட்டனுக்கு நன்மை பயக்கும் வகையில் குடியேற்றக் காரர்களைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுகிறீர்கள். நான் இரண்டு தரப்பும் பயன் பெறும் (win win) நிலை உருவாக வேண்டுமென்று விரும்புகிறேன். தனிப்பட்ட ரீதியில், மொழி தெரியாத ஆனால் உயிர் பாதுகாப்பு தேவையான ஒருவருக்கு புகலிடம் கொடுக்க பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இந்த உலகில் தேவை. இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பூமியில் இருக்கும் வரை அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் தங்கள் வாசல்களைத் திறந்தே வைத்திருக்க வேண்டும். ஆனால் மாணவர்கள் என்ற போர்வையில் உள்ளே வருவோர் அகதிக் கோரிக்கை கேட்பது இந்த நாடுகளில் நல்ல விதமாக நோக்கப் படாது. நீங்கள் சொல்வது போல, மாணவ விசாவில் வரும் எல்லாரும் அறிவைப் பெருக்குவதற்காக வரும் மூளைசாலிகள் என்ற கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. அதுவும் இலங்கையிலிருந்து வரும் மாணவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடும் எண்ணத்தோடு தான் வருகிறார்கள் என நினைக்கிறேன்.உண்மை இப்படி இருக்க, அவர்களுக்கு அதிக காலம் தங்கியிருக்க அனுமதித்தால் தங்கள் வேலையை முடித்து விட்டு சொந்த ஊருக்குப் போய் விடுவார்கள் என்பது நம்ப முடியாத விடயம். என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி?

அகதிகள் பற்றிய விடயத்தில் உண்மை அரசியல் அகதிகளை அவர்கள் பாதிக்கப்படும் நாட்டில் வைத்தே.. தூதரக மட்டத்தில் உண்மைத் தன்மைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின் அரசியல் தஞ்சம் வழங்கலாம். மற்றும்படி வழங்கக் கூடாது. தமிழர்களிலேயே அரசியல் தஞ்சம் பெறத் தகுதியற்ற பல ஆயிரக்கணக்கானோருக்கு அரசியல் தஞ்சம் மோசடியாக வழங்கப்பட்ட வாக்குமொழிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்தளவுக்கு மாணவர்கள் குடிவரவுத் துறையை ஏய்ப்பவர்களா என்பது கேள்விக்குறியே..??!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து விட்டு அகதிகள் என்று அழைப்பவர்களை அகதிகள் என்று ஏற்றுக் கொள்வது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

ஏலவே மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுள்ள விசாக்கள் தான் வழங்குகிறார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு விசா வழங்குவதில்லை. பிற வேலை விசா பெறுபவர்கள் மோசடியான வகைகளிலும் பெறுகின்றனர். வேலை தேட வழங்கப்படும் விசாக்காலம் முடிந்ததும்.. அவர்கள் சொந்த இடத்துக்குச் செல்ல வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் அகதிகளுக்கு அப்படியில்லை..! மாணவர்கள் நாட்டுக்குள் பொருளாதாரத்தைக் கொண்டு வருபவர்களாக இருக்க அகதிகள் அதைச் சுரண்டுபவர்களாக இருக்கின்றனர்.

மாணவர்களாக நுழைபவர்களும் அவர்களின் நாடுகளில் ஏற்படும் சூழ்நிலை மாற்றம் காரணமாக அகதிகள் ஆகக் கூடிய சூழல் உண்டு. ஆகவே மாணவர்கள் அகதிகளாக முடியாது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

மாணவர் விசாவில் வந்தவர்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களில்... பிரிட்டனுக்கு தேவையானவர்களை அது உள்வாங்கிக் கொள்வது நல்லது. இக்கருத்தை தொழில் வழங்குனர்கள் பலர் கொண்டிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கர். சட்ட விரோதமாக எந்த நாட்டுக்குள்ளும் அகதிகள் வரக்காரணம், நேர்வழி கடினமானதாக இருப்பது தான். கொழும்புத் தூதரகங்களில் வைத்து தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். அங்கே வரிசையில் நிற்கும் போதே பல பேர் வெள்ளை வானில் காணாமல் போவார்கள்! சிறி லங்காப் பொலிஸின் சான்றிதழ் கிடைக்காமல் கனேடிய, அவுஸ்திரேலிய வதிவிட உரிமை எட்டாக் கனியாகிப் போகும் நிலை பலருக்கு இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நேர்வழியில் வரும் கால அவகாசம் பல அகதிகளுக்கு இல்லை. அதை விடுங்கள். ஆங்கிலம் படிக்க பிரிட்டனுக்கு மாணவவிசாவில் வரும் ஒரு மாணவன் என்ன நோக்கத்தோடு வருகிறார் என நினைக்கிறீர்கள்? இதே ஆங்கிலத்தை பிரிட்டிஷ் கவுன்ஸிலில் படிக்க இயலாமலா காணி வீடு அடகு வைத்து வருகிறார்கள்? இது குடிவரவு ஏய்த்தல் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

1982 ஆம் ஆண்டு. எனது மைத்துணரின் நண்பர் ஒருவர் பிரித்தானியாவில் 7 வருடங்கள் இருந்து படித்துவிட்டு நாடு திரும்பினார்.

படிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதநிலையிலும் அனைத்துகெட்ட பழக்கங்களையும் பழகியநிலையிலும் ஆங்கில அறிவுகூட பேச்சளவில் மட்டுமே தெரிந்தநிலையில் மீண்டுவந்திருந்தார். கேட்டதற்கு பகல் பாடசாலை இரவு தியேட்டரில் வேலை பின்னர் பெண்களுடன் தொடர்பு என எதையுமே ஒழுங்காக செய்யமுடியாது போய்விட்டது என்றார். அதேநிலை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்பும்தொடர்வதை என்ன வென்பது? அத்துடன் இவ்வளவு எமது மக்கள் வாழும் நிலையிலும்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிப்பறிவில்லாத செம்மறிகள் அகதி எனும் போர்வையில் வெளிநாடு வந்து பெரியபெரிய சீமான்களுக்கு இடைஞ்சல்களை கொடுக்கின்றார்கள்.இவர்களை நடுத்தெருவில் வைத்து ஓடஓட----------- வேண்டும்....... இவர்களால் சிறிலங்காவிற்கு அவமானம்.ஒட்டுமொத்த பட்டிக்காடுகள் எல்லாம் நாலு காசை கண்டவுடன் தாங்களும் ஏதோ பலதும் பத்தும்கற்றறிந்தவர்கள் போல் பேசுகின்றார்கள்.

சப்பாத்தையும் லோஞ்சையும் கப்பல் ஏறுறதுக்கு ஒருமணித்தியாலத்துக்கு முதல் கண்டவனெல்லாம் கதைக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.என்சினியருக்கு படிக்கிற நான் என்னகூத்தடிச்சாலும் ஒகே....ஆனால் பள்ளிக்குடமே போகாத அகதி நாய் நீ.....அங்கேயேயிருந்து ............ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கர். சட்ட விரோதமாக எந்த நாட்டுக்குள்ளும் அகதிகள் வரக்காரணம், நேர்வழி கடினமானதாக இருப்பது தான். கொழும்புத் தூதரகங்களில் வைத்து தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை விசாரிப்பதை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். அங்கே வரிசையில் நிற்கும் போதே பல பேர் வெள்ளை வானில் காணாமல் போவார்கள்! சிறி லங்காப் பொலிஸின் சான்றிதழ் கிடைக்காமல் கனேடிய, அவுஸ்திரேலிய வதிவிட உரிமை எட்டாக் கனியாகிப் போகும் நிலை பலருக்கு இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நேர்வழியில் வரும் கால அவகாசம் பல அகதிகளுக்கு இல்லை. அதை விடுங்கள். ஆங்கிலம் படிக்க பிரிட்டனுக்கு மாணவவிசாவில் வரும் ஒரு மாணவன் என்ன நோக்கத்தோடு வருகிறார் என நினைக்கிறீர்கள்? இதே ஆங்கிலத்தை பிரிட்டிஷ் கவுன்ஸிலில் படிக்க இயலாமலா காணி வீடு அடகு வைத்து வருகிறார்கள்? இது குடிவரவு ஏய்த்தல் இல்லையா?

அகதிகளுக்கு வர வழி கடினம் என்பதற்காக அவர்கள் கள்ள வழிகளில் வரலாம்.. குடிவரவுத்துறையை ஏய்க்கலாம் என்று பரிந்துரைக்கும் வகையில் கருத்துரைக்கும் நீங்கள்... மாணவர்கள் விடயத்தில்.. அவர்கள் பாதிக்கப்படுவது குறித்து அக்கறை செய்யவில்லையே ஏன்.

ஆங்கில அறிவை அடிப்படை தகுதிக்கு ஏற்ப கொண்டிராத மாணவர்கள் தான் ஆங்கிலத்தைப் படிக்க வருகிறார்கள். தற்போது மொழி படிக்க வருபவர்களின் மீதான விசாக் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

நாங்கள் எல்லாம் யுனியில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று.. IELTS கொழும்பில் செய்து ஆங்கில அறிவுக்கான அடிப்படை தகுதியை பெற்றோம். இந்த நிலை எல்லோருக்கும் அமையா. அதுமட்டுமன்றி ஆங்கிலத்தை சிறீலங்காவில் கற்பதற்கும்.. பிரிட்டனில் அல்லது ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட இடத்தில் கற்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு.

சிறீலங்காவில் எல்லோருக்கும் அச்சுறுத்தல் என்றில்லை தானே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள அநேக குடும்பங்களில் ஒருவரேனும் நேரடியாக போராட்டத்தில் பங்கெடுக்காத குடும்பங்களே..! இவர்களுக்கு சிறீலங்காவில் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் பொருளாதாரம் ஈட்ட அகதி என்ற மேற்குநாடுகள் வழங்கும் சிறப்புரிமையை பாவித்துக் கொண்டு மேற்கு நாடுகளில் குடியேறி விட்டுள்ளனர். இவர்கள் அங்கு குடியேற முடியும் என்றால்.. அந்தந்த நாடுகளுக்கு வருவாயும்.. மூளையும் கொண்டு வரும் மாணவர்கள் ஏன் குடியேறக் கூடாது....???! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1982 ஆம் ஆண்டு. எனது மைத்துணரின் நண்பர் ஒருவர் பிரித்தானியாவில் 7 வருடங்கள் இருந்து படித்துவிட்டு நாடு திரும்பினார்.

படிப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதநிலையிலும் அனைத்துகெட்ட பழக்கங்களையும் பழகியநிலையிலும் ஆங்கில அறிவுகூட பேச்சளவில் மட்டுமே தெரிந்தநிலையில் மீண்டுவந்திருந்தார். கேட்டதற்கு பகல் பாடசாலை இரவு தியேட்டரில் வேலை பின்னர் பெண்களுடன் தொடர்பு என எதையுமே ஒழுங்காக செய்யமுடியாது போய்விட்டது என்றார். அதேநிலை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின்பும்தொடர்வதை என்ன வென்பது? அத்துடன் இவ்வளவு எமது மக்கள் வாழும் நிலையிலும்???

எத்தனையோ சிங்களவர்களே வந்து உயர் பட்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள். அவர்களுக்கு அங்கே நல்ல வேலை வாய்ப்புக்களும்.. பதவிகளும்.. அந்தஸ்தும் கிடைக்கின்றன. அந்த நிலை படித்தவர்களுக்கு இங்கே கிடைக்கா.

உங்கள் மைத்துனரின் நண்பர் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார். அது அவரின் சொந்தத் தவறே அன்றி வேறல்ல.

ஆனால் இன்று நிலை அப்படியல்ல. இன்று மாணவர்கள் விரும்பினாலும்.. அரச கட்டுப்பாடுகளும்.. ஏய்ப்பவர்களும்.. அவர்களை நிம்மதியாக.. படிக்க விடுகிறார்கள் இல்லை.

எம்மவர்கள் இருப்பதுதான் பிரச்சனையே. முன்னர் வெள்ளைகள் கடைகள் வைத்திருந்த காலத்தில் எம்மவர்களை நியாய விலையில் வேலைக்கு அமர்த்தி முன்னேற்றி விட்டார்கள். ஆனால் அந்த வெள்ளைகளை விரட்டி அடித்துவிட்ட நம்மவர்கள்.. எமது முன்னேற்றத்திற்கே.. எதிரிகளாக எல்லோ இருக்கின்றனர். இப்படியான எண்ணம் கொண்ட ஒரு சமூகம்.. எப்படி முன்னேறும்..! :icon_idea:

மாணவர் விசாவில் வந்தவர்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களில்... பிரிட்டனுக்கு தேவையானவர்களை அது உள்வாங்கிக் கொள்வது நல்லது. இக்கருத்தை தொழில் வழங்குனர்கள் பலர் கொண்டிருக்கின்றனர்.

சிறந்த முறையில் படித்துப் பட்டம் பெறுபவர்களை அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகமோ அல்லது அதன் வழியாகவோ வேலை அல்லது மேல் படிப்புக்கு வழி செய்கிறார்கள்.

சும்மா, நாமும் படித்தோம் என்று சாதாரண பட்டங்களைப்பெற்றுவிட்டு, பயிற்சி விசாவை எடுத்துக்கொண்டு, படிப்புக்குத் தொடர்பற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலேயே பிரித்தானியா இப்படி நடவடிக்கை எடுக்கிறது.

இது தமிழர் மட்டுமல்ல. எல்லோரும் தான் செய்கிறார்கள்.

எம்மவருக்கு, வெளி நாடுகளில் உள்ளவர்கள் ஆலோசனை கூறுவது பிடிப்பதில்லை. கு. சா. சொன்னது போல் எரிச்சல் என்றும் நினைகிறார்கள்.

உண்மையில் பணம் உள்ளவர்கள் அன்றி மற்றவர்கள் வேலை செய்து கட்டணம் செலுத்தலாம் என்று வருபவர்கள் இனி கஷ்டப்படுவார்கள். இது அங்குள்ளவர்களுக்கு விளங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முறையில் படித்துப் பட்டம் பெறுபவர்களை அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகமோ அல்லது அதன் வழியாகவோ வேலை அல்லது மேல் படிப்புக்கு வழி செய்கிறார்கள்.

இவை முன்னர் எல்லாம் சாத்தியம். இப்போ பல்கலைக்கழகங்கள் கூட நெருக்கடியில் இருக்கின்றன. இந்த நிலையில்.. ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்கும் மானியம்.. கொலசிப் எல்லாம் முயற்கொம்பாகி விட்டன.

இப்போ பணம் கறக்கும் நிறுவனங்களாகவே பல்கலைக்கழகங்களை மாற்றி அமைத்து வருகிறது.. பிரித்தானிய அரசு. அந்த வகையில் சிறந்த பட்டங்களைப் பெற்ற பலர்.. சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று.. அமெரிக்கா.. கனடா.. அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. இந்தியா.. கொங்கொங்.. சிங்கப்பூர் என்று போய் வேலை செய்கிறார்கள். பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்கின்றனர்.நைஜீரியா,கென்யா போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் போகின்றனர்.

நான் அறிய இலங்கையில் இருந்து எல்லாப் பாடங்களிலும் விசேட சித்தி பெற்று படிக்க வந்த ஒரு மாணவனே.. இங்கு வந்து அவனுக்குரிய கொலசிப் கிடைக்காத காரணத்தால்.. ஜப்பான் அரசின் முழு கொலசிப்பில்.. படித்து இப்போ.. ஜப்பானில் வேலை செய்கிறார். இந்தளவிற்குத் தான் உள்ளது பிரித்தானிய மூளைசாலிகளை வரவேற்கும் பாங்கு. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்

இலங்கையில் இருக்கிற தமிழர்கள்-அவர்கள் ஒரு ஒட்டுக் குழுவுடன் அல்லது மகிந்தவுடன் இணைந்திருந்தால் ஒழிய- எப்போதுமே பாதிப்புக்குள்ளாகும் நிலையில் தான் இருக்கிறார்கள். அப்படியொரு நிலை இல்லை என்று இன்று தான் உங்களிடமிருந்து கேள்விப்படுகிறேன். அப்படியெண்டா சிங்களவன் திடீரென்று நல்லவனாகி விட்டானா? 2009 இற்கு முன்னரே மூவாயிரம் வரையிலான பெயர் தெரிந்த தமிழ்க் கைதிகள் தென்பகுதிச் சிறைகளில் இருந்தார்கள். அவர்கள் எல்லாருமே புலிகளுடன் தொடர்பானவர்களோ அல்லது புலிகளை குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டவர்களோ அல்ல. அங்கே லண்டனில் இன்னும் நீதி தேடி அலையும் டொக்டர் மனோகரனின் மகனும் இன்னும் நால்வரும் கிழக்கில் கொல்லப் பட்ட போது அவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருக்கவில்லை. இப்படி ஆயிரக்கணக்கான சம்பவங்களுக்குப் பிறகும் வெறும் வாதத்திற்காக இலங்கையில் எல்லாத் தமிழருக்கும் பிரச்சினையில்லைத் தானே என்று சொல்ல உங்களுக்கு எப்படி முடிகிறது என்று எனக்கு விளங்கவில்லை. ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல ஆயுதம் தூக்காத ஆப்கானியருக்கும் ஈராக்கியருக்கும் பலஸ்தீனருக்கும் கூட அவர்களது சொந்த நாட்டில் உயிர்வாழ்வுக்கு ஆபத்து இருக்கிறது. உயிர் காக்க ஒடுபவனை ஏற்றுக் கொள்வதா அல்லது "எனக்குப் படிப்பு இருக்கு நான் வந்து என் படிப்புக்குப் பின்னால் ஒழிஞ்சிருந்து விட்டு பிறகு மெல்ல இங்கயே இருந்து விடுகிறேன்" என்பவனை ஏற்றுக் கொள்வதா என்று வரும் போது பிரிட்டன் போன்ற நாடுகள் உயிர் பாதுகாப்பு தேடும் அகதிகளைத் தான் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் அவர்கள் தேர்வு செய்யும் தலைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உங்களைப் போன்ற குறுகிய மனப்பாங்கு உடையவர்கள் அல்ல. எதிர்காலத்தில் உங்களைப் போன்றவர்கள் இந்த நாடுகளில் கொள்கைகளைத் தீர்மானிக்கும் தலைவர்களாக வரும் போது தான் அகதிகளுக்கு பிரச்சினையே ஆரம்பிக்கும்.

சிறீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு எல்லாம் உயிர் அச்சுறுத்தல் என்றால் எப்படி வெளிநாட்டுக் காசில.. கொழும்பில.. கண்டில.. நீர்கொழும்பில.. மலையகத்தில.. வீடு வாங்கிவிட முடியுது.

கொலிடேக்கு ஆயிரக்கணக்கில போக முடியுது..???!

எவனாவது உயிர் அச்சுறுத்தல் உள்ள இடத்திற்கு சுற்றுலா போவானா..???!

இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது.. அநேக தமிழர்களுக்கு உண்மையில் அங்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக உணர முடியவில்லை. தமிழர்களின் செயல் தான் இதனை இப்படி உணர்ச் செய்கிறது.

போராட்டத்தின் பால் இணைந்து நின்ற மக்கள் மற்றும் போராளிகளைத் தவிர மற்றவர்கள்.. பொருளாதார அகதிகளே அன்றி.. உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனுக்குள்ளோ.. அல்லது பிற நாடுகளுக்குள்ளோ... நுழையவில்லை. இவர்களில் அநேகர் சட்டவிரோத ஆட்கடத்தல் வழிமுறைகளினூடு.. பிற நாடுகளுக்குள் நுழைகின்றனர்.

கனடா போன்ற நாடுகள் கூட.. படித்த வேலை அனுபவமுள்ள மூளைசாலிகளை உள்ளிளுக்கின்ற போது கடுப்படையாத போதும்.. அகதிகளை உள்வாங்குவதில் அவர்கள் அதிக கடுப்படையக் காரணம்.. எம்மவர்களின் ஏமாற்று ஏய்ப்பு வேலைகள் தான்..!

பிரிட்டன் அகதிகள் விடயத்தில் உண்மையான அகதிகளை மட்டும் கண்டறிந்து அகதி அந்தஸ்து வழங்க முன்வருவதோடு.. ஏய்ப்பர்களை அவர்களின் நிரந்தர வதிவுரிமை உட்பட அனைத்தையும் பறித்துவிட்டு.. சொந்த நாட்டுக்கு அனுப்பினால்.. மூளைசாலிகளுக்கு பிரிட்டனில் தகுந்த இடமளிக்க வாய்ப்பு உருவாகலாம். இல்லையா..???!

மாணவர்களின்.. மூளைசாலிகளின் வெளியேற்றம் பிரிட்டனை நிச்சயம் பாதிக்கும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட பகிடி என்னெண்டால்......

அந்தக்காலத்திலையெல்லாம் (1950 தொடக்கம் எண்டு நினைக்கிறன்)வீரகேசரி,தினகரன் எண்டு எல்லாப்பேப்பரிலையும் ஒரு நாலுசதுரத்துக்குள்ளை ஆளின்ரை படமும் போட்டு ஒரு பந்தாவிளம்பரமொண்டு அடிக்கடி வரும்.அதுதான்.....சிவசுப்பிரமணியம் திரவியலோகநாதன் என்பவர் மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறார்...இல்லாட்டி கணபதிப்பிள்ளை நாகஞானச்செல்வன் என்பவர் புலமைப்பரிசு பெற்று பொறியியலாளர் மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறார்.

போவனவன் போனவன்தான்.....ஆயிரத்திலை ஒண்டு நாட்டுக்கு திரும்பி போயிருக்கும் மற்றதுகளெல்லாம் அரசாங்கசெலவிலை படிச்சு பட்டங்களும் எடுத்துட்டு இஞ்சையே வேரூண்டினதுகளை என்னெண்டு சொல்ல.......

இவையள் எல்லாம் சொந்த நாட்டுக்கு சேவை செய்வினமாம் :) படிக்காத மூளையறிவில்லாத நாங்களெண்டாலும் அகதியெண்டு சொல்லி பஞ்சம் பிழைக்கிறம் அது வெள்ளைக்காரனுக்கும் தெரியும்.. ஆனால் படிக்கிறதுக்கு எண்டு வந்திட்டு சிற்ரிசன் எடுக்க ஓடித்திரியிறது நாட்டுக்கு செய்யிற துரோகம்...... :(

படிச்சவை என்னடாவெண்டால் இங்கிலிசுவாழ்க்கை...சுகபோக வாழ்க்கையிலை மயங்கிட்டினம் .ஏதோ தங்கடை மூளையாலதான் வெள்ளைக்காரநாடுகளேல்லாம் குபேரவாழ்க்கை வாழுதெண்ட நினைப்பு வேறை ஐயோ..ஐயோ :D .....முதல்லை இஞ்சை படிச்சு முடிச்சு சொந்த நாட்டுக்குபோகாமல் ஒட்டுப்பட்டவையெல்லாம் அங்கைபோங்கோ...அங்கைபோய் உங்கடை திறமையை காட்டுங்கோ..... :icon_mrgreen:

அதுக்குப்பிறகு உங்கடை வீரவசனங்களை எடுத்து விடுங்கோ.....

அறப்படிச்சு சொந்த இனசனத்தை சொந்த மொழியை சொந்த உறவுகளை சொந்த ஊரை சொந்த உணர்வுகளை மறந்து மரத்து மறைப்பதை விட அகதியாய் இருந்து அனைத்தையும் அரவணைத்து வாழ்கிறான் ஈழத்தமிழன். :wub:

படிச்சவன் படிச்சவன்தான்.....பன்னாடை பன்னாடைதான்..... :lol: :lol:

நிகழ்காலப் புரிதல் இன்றிய பந்திகள்.. பன்னாடைகளை விடக் கேவலம்..! பன்னாடை ஆகக்குறைந்தது கள்ளில் வீழ்ந்து செத்து மிதக்கும் வண்டுகள்.. தேனீக்களை.. வடிக்கவாவது உதவும்.. இது எதுக்கும் உதவாது..! :lol::icon_idea:

எந்த வெளிநாடு என்றில்லை எப்படியும் நாட்டைவிட்டு விட்டு வெளியேறும் மனோநிலையிலேயே எம்மவர்கள் உள்ளார்கள் .அவர்களில் எவ்வித தப்புமில்லை நாட்டு நிலைமை அப்பிடி .

எந்த நாட்டிற்கும் வந்தபுதிதில் கஸ்டப்படவேண்டித்தான் இருக்கும் (அதற்காக பாலியல் பிரச்சனை எல்லாம் தாங்கமுடியாது ) பின்னர் இரண்டு ,மூன்று வருடங்களின் பின் அவர்கள் நிலைமை முற்றுமாக மாறிவிடும் .

நீஸ்டனில் இருந்து விக்டோரியாவிற்கு சயிக்கிளில் போனது நினைவு வருகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.