Jump to content

சிரிப்பு நடிகர் லூஸ்மோகன் போலீசில் கண்ணீர் புகார்: சாப்பாடு போடாமல் மகன் கொடுமைப்படுத்துகிறான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, அக். 20-

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் வீடு மயிலாப்பூர் சாலித்தெருவில் உள்ளது. எம்.ஜி.ஆர்., பி.யூ. சின்னப்பா நடித்த அரிச்சந்திரா படத்தில் அறிமுகமான இவர் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடக்க முடியாத நிலையில் இருக்கும் லூஸ்மோகன் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார்.

கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கமிஷனரிடம் புகார் கொடுக்கவேண்டும் என்று கூறியதும் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நான்கு வரியில் எழுதப்பட்ட அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்து சாப்பாடு போடாமல் இருக்கிறான். அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த மனு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. புகார் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நடிகர் லூஸ்மோகன் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.

எனது மனைவி 2004-ம் அண்டு இறந்து போனார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவனை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன். கடந்த 3 நாட்களாக அவன் மனைவி பேச்சை கேட்டு வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. எனக்கு வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதை கூட தர மறுக்கிறார். (இப்படி கூறும்போது, அவர் கண்ணீர் விட்டு அழுதார்)

பார்த்திபன் நடித்த அழகி படத்தில் நான் கடைசியாக நடித்தேன். கால் முறிந்ததால் அதன்பின் நடிக்கவில்லை. சிகிச்சைகாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சங்கம் உதவி செய்தது. எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்சினை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லூஸ்மோகனின் நிலைமை கேட்டு அங்கு நின்றவர்களும் கண்கலங்கினர்.

http://www.maalaimalar.com/2011/10/20145431/comedy-actor-loose-mohan-petit.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்லை இறர்தாலும், சென்னையில இருந்தாலும்.. சோத்துக்கு பிரச்சினை.

இளையவர்களே... வாழும் போதே... பணத்தை சேமியுங்கள்.

Link to comment
Share on other sites

லண்டன்லை இறர்தாலும், சென்னையில இருந்தாலும்.. சோத்துக்கு பிரச்சினை.

இளையவர்களே... வாழும் போதே... பணத்தை சேமியுங்கள்.

த்தோடா .. சொல்லிட்டாரு ...சாக்கிரட்டீசு! <_<

அது சரி .. சொந்த வீடு இருக்குற,, லூசுமோகன்... பாசத்துக்காக கையேந்தி இருந்தா வேற விஷயம்!

எதுக்கு மூணுவேளை சோத்துக்கு, யாரிடமும் கையேந்தணும்?

ஆல்மொஸ்ட்... அவரோட வாழ்க்கை முடியுற வயசில இருக்குறவரு,,,

அந்த சொத்தை விற்று ...தன்னோட இறுதிகாலத்தை..கலர்புல்லா என்ஜாய்...

பண்ணிருக்கலாமே? எதுக்கு புகாரெல்லாம்?

எங்கயோ இடிக்குதே! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்தோடா .. சொல்லிட்டாரு ...சாக்கிரட்டீசு! <_<

அது சரி .. சொந்த வீடு இருக்குற,, லூசுமோகன்... பாசத்துக்காக கையேந்தி இருந்தா வேற விஷயம்!

எதுக்கு மூணுவேளை சோத்துக்கு, யாரிடமும் கையேந்தணும்?

ஆல்மொஸ்ட்... அவரோட வாழ்க்கை முடியுற வயசில இருக்குறவரு,,,

அந்த சொத்தை விற்று ...தன்னோட இறுதிகாலத்தை..கலர்புல்லா என்ஜாய்...

பண்ணிருக்கலாமே? எதுக்கு புகாரெல்லாம்?

எங்கயோ இடிக்குதே! :)

அறிவிலி என்ன சின்னப்பிள்ளைத்தனமா கேழ்வி கேட்டுக்கொன்டு :unsure: நாங்கள் சொத்துக்காக சன்டை பிடிப்போம் மற்றவனை கோட்டுக்கு இழுப்போம் ஆனால் அதை அனுபவிக்கவே மாட்டோம் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி

உண்மைதான்

விற்றுவிட்டு எங்காவது ஆசிரமங்களில் சேர்ந்திருக்கலாம்.

அந்த மகனையும் இவர் தற்போது பகைத்துவிட்டார். அவமானப்படுத்திவிட்டார். இனி......???

Link to comment
Share on other sites

அறிவிலி என்ன சின்னப்பிள்ளைத்தனமா கேழ்வி கேட்டுக்கொன்டு :unsure:நாங்கள் சொத்துக்காக சன்டை பிடிப்போம் மற்றவனை கோட்டுக்கு இழுப்போம் ஆனால் அதை அனுபவிக்கவே மாட்டோம் :lol: :lol:

நானு ,,,டமுக்கட்டி நீளமா வசனம் பேசினேன்,,, ஒர்க் அவுட் ஆகல!

ஆனா , நீங்க,,

அந்த நீளமா தாடிவச்சிகிட்டு , ஒரே இடத்துல குந்திகின்னு, ,,, கையில புக் & பென் வச்சிருப்பாரே ,,

ஒரு தாத்தா.....ஹ்ம்ம்ம் அவரு பேரு என்ன??? ...

ஆங்க் திருவள்ளுவர்!

அவரபோல சுருக்கமா சொல்லிட்டிங்களே,,, சஜீவு! <_<

அவங்க இப்போ ,,சேர்ந்துட்டாங்களாம் விசுகு அண்ணா! அதுதான் ஆல்ரெடி சொன்னேன் எங்கயோ இடிக்குதேன்னு,,,,,,,,,,, !! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்மொஸ்ட்... அவரோட வாழ்க்கை முடியுற வயசில இருக்குறவரு,,,

அந்த சொத்தை விற்று ...தன்னோட இறுதிகாலத்தை..கலர்புல்லா என்ஜாய்...

பண்ணிருக்கலாமே? எதுக்கு புகாரெல்லாம்?

எங்கயோ இடிக்குதே! :)

உங்க கருத்து.. மகா மட்டா இருக்குது.

மனித வாழ்க்கையில்.. ஒவ்வொரு பருவத்தில் உள்ளவைக்கும் வாழ்க்கை இருக்குது. குழந்தைகளை நீ படியாத மொக்கு.. மாடு என்று திட்டித் திட்டி.. முடக்குவது போல.. முதுமை முடிஞ்சு போற வயசு.. வாழ்க்கை முடிஞ்சு போற நேரம்.. என்ற எண்ணப்பாட்டை ஊட்டி வளர்த்தே எமது மூத்தோரின் ஆற்றலை.. பயன்படு திறனை.. இல்லாது அழித்துவிடுகிறார்கள். அதற்கு உங்கள் கருத்து நல்ல உதாரணம்.

மேற்குநாடுகளில் குழந்தைகளுக்கு ஈடாக முதியோருக்கு முதன்மை அளிக்கிறார்கள். அவர்களின் வாழும் காலத்தை அவர்களே தங்களுக்குரிய வகையில் தீர்மானிக்க அனுமதிப்பதோடு.. விரும்பிய வடிவில் வாழவும் அனுமதிக்கிறார்கள். மேலும்... பெற்றோராக உள்ளவர்கள்.. குழந்தைகளோடு கூடி மகிழ.. தந்தையர் தினம்.. அன்னையர் தினம்.. என்று பல விடயங்களை அறிமுகப்படுத்தி.. முதுமை.. தனிமை இவற்றைத் தவிர்த்து.. அவர்களும் சமூகத்தின் அம்சமாக வாழ வழி செய்கிறார்கள்.

பல நோபல் பரிசு பெற்றவர்கள் வயதானவர்களாகவே இருந்துள்ளனர். பல வயதான பேராசிரியர்கள் திறமை மிக்க பயிற்றுவிப்பாளர்களாக இன்றும் விளங்குகின்றனர். பலர் அரச அலோசகர்களாக.. நீதிபதிகளாக.. சமூக ஆர்வலர்களாக உள்ளனர். வழிகாட்டிகளாக இருக்கின்றனர். அந்த வகையில்.. அனுபவத்தின் முதலீடுகளாக உள்ள மூத்தோர் ஒரு சமூகத்தின் மதிப்பிட முடியாத சொத்து. அதனை சரியான திட்டமிடலின் கீழ் பாவிக்கத் தெரியாத சமூகமாக தமிழர்களும் இந்திய கலாசார பின்னணியில் வந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். அதன் வெளிப்பாட்டின் ஒரு வடிவமே இப்படியான கருத்துக்கள்.

வயதான பெற்றோர்களுக்கு வளமான அவர்கள் விரும்பும் படியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு.. பிள்ளைகளுக்கும் உண்டு. அதை அவர்களா உணர்ந்து செய்து கொள்வதே மனிதப் பண்பு. அதனை இன்று தமிழர்கள் பலரும் இழந்து வருவது.. குறிப்பாக சுயநல சமூகங்கள் இழந்து வருவது.. அவற்றின் எதிர்கால ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதன் ஒரு நிகழ்வே இது. இது ஆபத்தான எதிர்காலத்தின் அறிகுறி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை வித்து சாப்பிடுவது எனக்கு பிடிச்சிருக்கு ?

எனக்கு ஆமிக்கு வீடை வாடகைக்கு கொடுத்துட்டு .................

வாடகை பணத்தில் சாப்பிடுவதுதான் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

உங்க கருத்து.. மகா மட்டா இருக்குது.

என்னாது ... மகா மட்டமா? அவ்ளோ அசிங்கமாவா , நானு எழுதுறேன்! :rolleyes:

இத நானு கவனிக்கவே இல்லியே!

என்னோட அறிவு eye ய..... நீங்க தொறந்திட்டீங்க ஐயா! :)

நன்னா ஒருவாட்டி திரும்ப வாசிங்க ,, என்ன சொல்ல வந்தேன்னு.............

ஒரு மனிதனின் , கெளரவம் எங்கிறது... அவன் வாழும் நாளில் பெறும் நிலை மட்டுமில்ல...!

அவன் சாகும் போதும் கெளரவமா சாகணும்!

தன்னோட குடும்பத்தை ,, முன்னேற்ற முதுமை காலம்வரை வரை உழைத்த , ஒரு தந்தையானவன்,, தன் இறுதி நாட்களில் அதே உறவுகளால் ஒதுக்கப்படுவது,,, மகா சோகம்!

அன்பு எங்கிறது, சட்டத்தின் துணைகொண்டு மிரட்டியோ, இல்ல..தனிப்பட்ட ரீதியா கெஞ்சியோ பெறப்படக்கூடாது! அப்பிடி பெறப்பட்டாலும் உண்மையானா அன்பாவா இருக்கும்?

அது உள்ளிருந்து வரணும்!

வசதியோடு இருக்கும் இந்த முதியவர்....

தன்னை ஒதுக்கியவர்களை “தில்” லோட எதிர்கொள்ளணும்!

நீங்க உலக அளவில போறீங்க,, நோபல் , ஆஸ்கார்,, கோல்ட்ன் க்ளோப்னு ................

ஒரு உள்ளூர் கிழவனின் சோகத்தை புரிந்துகொள்ள ,,, படிப்பறிவு தேவைல்ல நைனா...

வெறும் பகுத்தறிவு போதும்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு எங்கிறது, சட்டத்தின் துணைகொண்டு மிரட்டியோ, இல்ல..தனிப்பட்ட ரீதியா கெஞ்சியோ பெறப்படக்கூடாது! அப்பிடி பெறப்பட்டாலும் உண்மையானா அன்பாவா இருக்கும்?

அது உள்ளிருந்து வரணும்!

வசதியோடு இருக்கும் இந்த முதியவர்....

தன்னை ஒதுக்கியவர்களை “தில்” லோட எதிர்கொள்ளணும்!

நீங்க உலக அளவில போறீங்க,, நோபல் , ஆஸ்கார்,, கோல்ட்ன் க்ளோப்னு ................

ஒரு உள்ளூர் கிழவனின் சோகத்தை புரிந்துகொள்ள ,,, படிப்பறிவு தேவைல்ல நைனா...

வெறும் பகுத்தறிவு போதும்!! :)

அன்பு.. எல்லாம் சும்மா உள்ளிருந்து கிளம்பி வர அது என்ன பூதமா. இன்றைய உலகில்.. அடிப்படையில் அன்பாகட்டும் என்னவாகட்டும்.. சும்மா உள்ளிருந்து கிளம்பிறது என்பதெல்லாம் வெறும் கதை.

எல்லாம் தேவைகளோடு தான் கிளம்புகின்றன.

எப்போதும் வயதானவர்கள் தங்கள் நிரந்தர சொத்துக்களை விற்கக் கூடாது. அவற்றின் இருப்பு அவர்களின் இருப்பை நிச்சயம் பாதுகாக்க உதவும்.

அந்த வகையில்.. இந்த முன்னாள் நடிகரும்.. நிலையான சொத்துக்களைப் பாதுகாத்து.. தனது நிலையை பாதுகாப்பதே சிறந்தது. சொத்தை விற்க.. காசைப் பிடிக்கும் மட்டும் அன்பு காட்ட ஆயிரம் பேர் வரிசையில நிற்க.. அப்புறம் எல்லாத்தையும் பிடிங்கிப் போட்டு வீதியில் விடுவார்கள். அப்போ.. இப்படி எழுந்த குரலுக்கு இன்று கிடைத்த மரியாதை கூட அப்போது இருக்காது.

எந்த மனிதனிடமும்.. தன்னை முன்னிலைப்படுத்தக் கூடிய பேரம் பேசும் வசதி இல்லையேல்.. இன்றைய நவீன பொருள் தேடும் உலகில்.. நிச்சயம் மற்றைய மனிதர்களின் முன் கெளரவமாக வாழ முடியாது. அது வெட்டிக் கெளரவம் தான் என்றாலும்.. ஊருடன் கூடி வாழ அது தேவை. ஊரை வெறுத்து வாழ்பவனுக்கு அது அவசியம் இல்லை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு.. எல்லாம் சும்மா உள்ளிருந்து கிளம்பி வர அது என்ன பூதமா. இன்றைய உலகில்.. அடிப்படையில் அன்பாகட்டும் என்னவாகட்டும்.. சும்மா உள்ளிருந்து கிளம்பிறது என்பதெல்லாம் வெறும் கதை.

எல்லாம் தேவைகளோடு தான் கிளம்புகின்றன.

எப்போதும் வயதானவர்கள் தங்கள் நிரந்தர சொத்துக்களை விற்கக் கூடாது. அவற்றின் இருப்பு அவர்களின் இருப்பை நிச்சயம் பாதுகாக்க உதவும்.

அந்த வகையில்.. இந்த முன்னாள் நடிகரும்.. நிலையான சொத்துக்களைப் பாதுகாத்து.. தனது நிலையை பாதுகாப்பதே சிறந்தது. சொத்தை விற்க.. காசைப் பிடிக்கும் மட்டும் அன்பு காட்ட ஆயிரம் பேர் வரிசையில நிற்க.. அப்புறம் எல்லாத்தையும் பிடிங்கிப் போட்டு வீதியில் விடுவார்கள். அப்போ.. இப்படி எழுந்த குரலுக்கு இன்று கிடைத்த மரியாதை கூட அப்போது இருக்காது.

எந்த மனிதனிடமும்.. தன்னை முன்னிலைப்படுத்தக் கூடிய பேரம் பேசும் வசதி இல்லையேல்.. இன்றைய நவீன பொருள் தேடும் உலகில்.. நிச்சயம் மற்றைய மனிதர்களின் முன் கெளரவமாக வாழ முடியாது. அது வெட்டிக் கெளரவம் தான் என்றாலும்.. ஊருடன் கூடி வாழ அது தேவை. ஊரை வெறுத்து வாழ்பவனுக்கு அது அவசியம் இல்லை..! :)

sorry நெடுக்ஸ் அண்ணா, பச்சை முடிஞ்சு போச்சுது குத்த முடியலை..

"இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்"

பணம் , புகழ் இருந்தால் தான் அன்பும்,பாசமும் என்ற நிலையில் எதுவும் இல்லாதவர் மேல் யாரும் அன்பு பாராட்டுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.

சொத்து,பத்து இருந்தால் தான் ஒரு நேர கஞ்சியாவது கிடைக்கும். சொத்தை வித்தால் அது தீரும் வரைக்கும் தான். முடிநதுவிட்டால்...??????

Link to comment
Share on other sites

அன்பு.. எல்லாம் சும்மா உள்ளிருந்து கிளம்பி வர அது என்ன பூதமா. இன்றைய உலகில்.. அடிப்படையில் அன்பாகட்டும் என்னவாகட்டும்.. சும்மா உள்ளிருந்து கிளம்பிறது என்பதெல்லாம் வெறும் கதை.

எல்லாம் தேவைகளோடு தான் கிளம்புகின்றன.

எப்போதும் வயதானவர்கள் தங்கள் நிரந்தர சொத்துக்களை விற்கக் கூடாது. அவற்றின் இருப்பு அவர்களின் இருப்பை நிச்சயம் பாதுகாக்க உதவும்.

ஓவரா உணர்ச்சிவசபடுறீங்களோ?

ஒரு விடயத்தை இப்டியா நீங்க புரிஞ்சு கொள்ளுவீங்க?

அத தானே நானும் சொன்னேன்,, அன்பு உள்ள இருந்து கெளம்பி வராது... கட்டாயபடுத்தி பெறகூடாது..........

சோ....... சொத்தை வித்து அவர கெளரவமா வாழ சொன்னேன்!

என்னாது .........வயசானவங்க , இருப்பை அவங்க சொத்தை பாதுகாக்குமா?

நல்லா பாருங்க , இவரு முகத்தை>>> loose-mohan-tamil-comedy-actor-loose-mohan-23-10-11.jpg

இந்த மனிதனின் இருப்பு இன்னும் எவ்ளோ காலம் நீடிக்கும்?

அவரு சொத்த்தை விற்காம அவரோட வைச்சிருந்தாலும்..............!

வாதங்கள் எனப்படுபவை.......... தீர்ப்பை நோக்கிய விவாதங்கள்!

ஆனா... தீர்ப்பையே கைல வைச்சிகிட்டு வாதம் புரிஞ்சா..........

அதுக்கு பேரு வாதங்கள் என்னு ஆவுமா? மிஸ்டர் நெடுக்கு?? :)

Link to comment
Share on other sites

இந்தியாவைப் பொறுத்தமட்டில் வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கடமை பிள்ளைகளுக்கு உண்டு. லூஸ்மோகன் அன்பை எதிர்பார்க்கிறாரோ இல்லையோ, தான் ஆளாக்கி விட்ட தனது மகனே தனக்குச் சோறு போட வேண்டுமென்ற உரிமையைத்தான் கேட்கிறார். அவர் புகார் செய்தது நல்லதாகவே படுகிறது. இந்தியாவில் எத்தனையோ குடும்பங்களில் பிள்ளைகள் மருமக்கள் தமது வயதான பெற்றோரை கொடுமைப் படுத்துகிறார்கள். அன்பு, குடும்பம், கலாச்சாரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் மூடி மறைக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

தன்னோட மகன் தனக்கு சோறுபோட சொல்லி ,,, கோர்ட்டை அணுகுவதா .. உரிமை & கலாச்சாரம் இணையவன்??

ஏன் இவ்ளோ தூரம் போகணும்....... சிம்பிள் உதாரணம்..!

என்னோட/ உங்களோட அப்பா.... எங்களை தனக்கு சோறுபோட சொல்லி..............

நீதிமன்றத்தை அணுகினா........

அதுக்கு பேரு உரிமையா?

அவர்களை நாங்க அம்மணமா ,,, நடு ரோட்டீல விட்டுட்டோம்னு தானே அர்த்தம்!

இப்டி எங்களை உருவாக்கியவங்களே , எங்களை இரந்து ,,,

பிச்சைகாரர்களாய் வாழ்வு பெறுவதைவிட,,

தங்களுக்கு இருக்குறத வச்சி ,,, பணக்காரர்களாய் சாவதே மேல்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னோட மகன் தனக்கு சோறுபோட சொல்லி ,,, கோர்ட்டை அணுகுவதா .. உரிமை & கலாச்சாரம் இணையவன்??

ஏன் இவ்ளோ தூரம் போகணும்....... சிம்பிள் உதாரணம்..!

என்னோட/ உங்களோட அப்பா.... எங்களை தனக்கு சோறுபோட சொல்லி..............

நீதிமன்றத்தை அணுகினா........

அதுக்கு பேரு உரிமையா?

அவர்களை நாங்க அம்மணமா ,,, நடு ரோட்டீல விட்டுட்டோம்னு தானே அர்த்தம்!

இப்டி எங்களை உருவாக்கியவங்களே , எங்களை இரந்து ,,,

பிச்சைகாரர்களாய் வாழ்வு பெறுவதைவிட,,

தங்களுக்கு இருக்குறத வச்சி ,,, பணக்காரர்களாய் சாவதே மேல்!! :)

எனக்கு சோறு போடாத சொத்தை வைத்து படம் காட்டவா?

நல்லவர்களுக்குத்தான் நல்லவர்களா இருக்கணும்.

கெட்டவரா இருந்தா அது பிள்ளையா இருந்தாலும் என் உழைப்பில் 5 சதமும் போகாது.

அதுக்காக தனது பிள்ளையைப்பற்றி புராணம் பாடுகிறார் என்று சண்டைக்கெல்லாம் வராதீர்களப்பா?

இது ஒரு உதாரணம் மட்டுமே.

அறிவிலி ஒரு பச்சை என்னுடையது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவரா உணர்ச்சிவசபடுறீங்களோ?

ஒரு விடயத்தை இப்டியா நீங்க புரிஞ்சு கொள்ளுவீங்க?

அத தானே நானும் சொன்னேன்,, அன்பு உள்ள இருந்து கெளம்பி வராது... கட்டாயபடுத்தி பெறகூடாது..........

சோ....... சொத்தை வித்து அவர கெளரவமா வாழ சொன்னேன்!

என்னாது .........வயசானவங்க , இருப்பை அவங்க சொத்தை பாதுகாக்குமா?

நல்லா பாருங்க , இவரு முகத்தை>>> loose-mohan-tamil-comedy-actor-loose-mohan-23-10-11.jpg

இந்த மனிதனின் இருப்பு இன்னும் எவ்ளோ காலம் நீடிக்கும்?

அவரு சொத்த்தை விற்காம அவரோட வைச்சிருந்தாலும்..............!

வாதங்கள் எனப்படுபவை.......... தீர்ப்பை நோக்கிய விவாதங்கள்!

ஆனா... தீர்ப்பையே கைல வைச்சிகிட்டு வாதம் புரிஞ்சா..........

அதுக்கு பேரு வாதங்கள் என்னு ஆவுமா? மிஸ்டர் நெடுக்கு?? :)

நீங்கள் இந்த விடயத்தை இரண்டு காரணிகளை மையமாக வைத்து கதைக்கிறீங்க.

ஒன்று அவர் வயதானவர். மற்றது சொத்துள்ளவர்.. அதை வித்து சாப்பிடுறது தானே என்று.

நாங்கள் அந்த இரண்டையும் தாண்டி... மனித உள உணர்வுகளின் நிகழ்கால ஓட்டத்தோடு கதைக்கிறோம்.

இவ்வளவு சொத்து சேர்த்தவருக்கு வித்துச் சாப்பிட தெரியாது என்றில்லை. ஆனால் அவர் எதிர்பார்ப்பது தன் பிள்ளை தனக்கு ஒரு வாய் உணவு தர வேண்டும் என்பதையே. அதுவும் அவரின் சொந்தப் பிள்ளை. அது நியாயமான மனித உணர்வே. அதை சொத்தை வித்து சாப்பிடச் சொல்வதன் மூலம் ஈடு செய்ய முடியாது.

நாங்கள் எல்லாம்.. பெற்றோரைப் பிரிந்து தாயகத்திலும்.. அதற்கு வெளியிலும் தசாப்தமாக வாழுறம். அவங்க கூட இருந்த கணங்களை நினைக்கின்ற போது.. மனதில் எழும் அந்த மகிழ்ச்சி.. இன்றைய வாழ்வில் இல்லை. இதேதான் பிள்ளைகளைப் பிரிந்துள்ள பெற்றோர் பிள்ளைகளிடத்தும் வைத்திருப்பார்கள்.

ஆனால் துரதிஸ்டவசமாக ஒரு பெண் வந்ததனால்.. லூஸ்மோகனின் மகன் அந்த உணர்வை இழந்திருப்பது.. கொடுமை. மனைவி பேச்சைக் கேட்டு தான்.. அவர் சொந்த தந்தையை கவனிக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. இது பொதுவான ஒன்றும் கூட. அந்தளவுக்கு மனைவியராகும்.. பெண்கள் இரக்கமற்ற சுயநலப் பிசாசுகளா என்றும் கேட்கவும் தோன்றுது.

மேலும் சொத்து என்பது ஒரு கவசம். அது இருக்கும் வரையாவது பிற மனிதரின் கடைக்கண் பார்வை இருக்கும். அதுவும் இன்றேல்.. அந்த மனிதன் நடைப் பிணம். அந்த வகையில்.. இந்தச் சொத்தும் இல்லையேல்.. லூஸ்மோகனை.. இந்த முகத்தோடு கூட பார்க்க முடியாது. அப்படி காணாமல் போன நடிகைகள்.. நடிகர்கள் பலர்..! அந்த வரிசையில் லூஸ்மோகனை நிறுத்த வேண்டாமே.

வாதங்கள்.. நிகழ்கால நிஜத்தை கடக்க உதவ வேண்டுமே அன்றி.. நிஜத்தை சிலாகித்துவிட்டு ஓய்வதில் எந்தப் பயனும் எவருக்கும் கிடையா..??! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

ஒரு விடயம் உதைக்குது

அவர் கேட்டது சாப்பாடு என்பதால் தான் நான் எழுதினேன் சொத்திருக்க ஏன் எவனிடமாவது பல்லிளிக்கணும் என்று.

சொத்தை வாடகைக்கு விட்டாலோ அல்லது அதை வைத்து கடன் பெற்றாலோ அல்லது விற்று அதை ஏதாவது அன்பு இல்லங்களில் கொடுத்தாலோ வாழ்நாள் முழுவதுக்குமான சாப்பாடு அவருக்கு உடனேயே கிடைக்கும்.

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் வழக்குப்போட்டு அது இழுத்து இழுத்து அல்லது அவரது மருமகள் இழுக்கப்பண்ணி எத்தனை வருடங்களின் பின் அவருக்கு சோறுகிடைக்கும்? அதைவிட அதுவரை அவர் உயிரோடு இருப்பாரா?

அதைவிட முக்கியம் ஏதாவது சட்டப்புத்தகத்தில் எழுதியிருக்கா? பெற்றவர்களுக்கு பிள்ளை சோறுபோடவேண்டுமென்று?

நீதிபதி எதனைவைத்துஇவருக்கு சாதகமாக தீர்ப்பு தருவார்???

Link to comment
Share on other sites

தன்னோட மகன் தனக்கு சோறுபோட சொல்லி ,,, கோர்ட்டை அணுகுவதா .. உரிமை & கலாச்சாரம் இணையவன்??

ஏன் இவ்ளோ தூரம் போகணும்....... சிம்பிள் உதாரணம்..!

என்னோட/ உங்களோட அப்பா.... எங்களை தனக்கு சோறுபோட சொல்லி..............

நீதிமன்றத்தை அணுகினா........

அதுக்கு பேரு உரிமையா?

அவர்களை நாங்க அம்மணமா ,,, நடு ரோட்டீல விட்டுட்டோம்னு தானே அர்த்தம்!

இப்டி எங்களை உருவாக்கியவங்களே , எங்களை இரந்து ,,,

பிச்சைகாரர்களாய் வாழ்வு பெறுவதைவிட,,

தங்களுக்கு இருக்குறத வச்சி ,,, பணக்காரர்களாய் சாவதே மேல்!! :)

லூஸ்மோகன் சட்டப்படிதான் தனது உரிமையைக் கோரியுள்ளார்.

http://tamilnews.jupiterwebsoft.com/2010/02/10/all_tamil_news_nation_international_sports_cinema_news/355/

விலை உயர்ந்த ஆடை உடுத்தியுள்ள ஒருவர் பசி என்பதால் அதை விற்று நிர்வாணமாக நின்று சாப்பிட வேண்டுமா ? சட்டத்தில் இடம் இருக்கும்போது முதலில் அதை நாடுவதே புத்திசாலித்தனம். தந்தையைக் கொடுமைப்படுத்திய மகனைக் கோட்டுக்கு இழுப்பதும் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு விஷயத்தில் இருந்து பார்க்க தெரிய இல்லையா...பிள்ளைகள் பெற்றோர் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என்பது..நான் ஒட்டு மொத்த பிள்ளைகளையும் சொல்ல இல்லை..ஒரு வயதானசீவனுக்கு இப்படி செய்ய எப்படி பெற்ற பிள்ளைக்கே மனசு வருகிறது........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மகன் செய்தது செய்வது தப்பு.அதில எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இவர் கோட்டுக்கு போனது சோத்துக்கு இல்லை.ஏன் என்றால் அவர் பச்சைப்பரதேசி இல்லை.அவரின் சொத்தை ஏதாவது ஆசிரமத்துக்கோ அல்லது அனாதை இல்லத்துக்கோ எழுதி வைத்துவிட்டு(தனக்குப்பின் என்று)வயிறு முட்ட சாப்பிடலாம்.தனது பிள்ளை தன்னை கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் மற்றும் கோவமே அவர் கோட்டுக்கு போக காரனம்.மற்றும் படி கோட்டுக்குப்போய் அன்பு கிடைக்கும் என்பதெல்லாம் அம்புலிமாமா கதைதான் :rolleyes:

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் விளங்குகிறது. முதுமை எவ்வளவு கொடுமையென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் விளங்குகிறது. முதுமை எவ்வளவு கொடுமையென்று.

இல்லை தப்பிலி, நீங்கள் உங்கள் இறுதி காலத்தை இப்பவே திட்டமிட்டால் நல்லது, இருக்கும் போதே பிள்ளைகள் & மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருந்தலும் அவசியம்,

நான் படித்ததில் மனதை நெருடியது இதுவும் எங்கட சனம்தான் ........

இறந்தவர் ஒரு பெண். அவர் திருமணம் செய்து கொண்டது. எமதூரில் மிகப் பிரபலமான அரசியல் செல்வாக்குடைய ஒருவரின் தம்பியை. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. (எடுத்து வளர்த்திருக்கலாம்,!! அவரவர் விருப்பம்) ஓராண்டுக்கு முன்னர் அந்த அங்கிள் இறந்து போய்விட்டார். அடடா சொல்லவேயில்ல இதெல்லாம் நடந்தது இங்குதான் (வன்கூவரில்) அதன் பிறகு அவர்களுக்கு சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாருமே இல்லை. அங்கிள் இறந்த போது அலைஅலையாய் மக்கள் பெருவெள்ளம். லண்டனிலிருந்து நிறைய சொந்தங்கள் வந்திருந்தார்கள்.

அக்கா, தம்பி, அண்ணா என்றெல்லாம். அது மட்டுமல்ல அவரவர்கள் பிள்ளைகளும்கூடத்தான். ஊரே அதிசயப்பட்டது. அந்த நேரத்தில் நாமெல்லாம் நினைச்சோம்.அட வாழ்ந்தா மனுசன் இப்படிதான் வாழவேணும் என்று. தனக்கொரு பிள்ளை இல்லை என்றாலும் எடுத்து வளர்க்கல்ல.....காரணம் இத்தன சொந்தங்கள் பெரியப்பா பெரியப்பா என்று ஒருபக்கம், மாமா மாமா என்று இன்னுமொரு அழுகை ஒரு பக்கம் சித்தப்பா சித்தப்பா என்றும், அத்தான் என்றும் உறவுமுறைகளை சொல்லிச்சொல்லி அழுததை நானும் அருகில்இருந்து பார்த்தேன்.

பிறகு அங்கிளின் ஆசைப்படி அவருடைய இறந்த உடலை லண்டனுக்கு எடுத்துச்சென்று அங்கே இறுதிக்கிரிகைகள் செய்தார்கள். இங்கு உறவினர்கள் என்று யாருமே இல்லை. எல்லாருமே பழக்கப்பட்ட நண்பர்கள்தான். அங்கிள் இருக்கும் போது யார் அவர் வீட்டுக்குப் போனாலும் அட்லீஸ்ட் உட்கார வச்சு ஒரு தேத்தண்ணீயாவது கொடுக்காமல் அனுப்பமாட்டார். தானே எழும்பிச்சென்று சின்னப்பிள்ளைகளுக்கு கொடுப்பது போல் சொக்லட், பிஸ்கட் என்றெல்லாம் கொடுத்து சாப்பிடுங்க சாப்பிடுங்க எடுங்க என்பார். கோவில் திருவிழாவில கண்டால் கூட ஒரு கூட்டத்தையே தனதாக்கிக்கொண்டு நகைச்சுவையாகப் பேசி எப்பவுமே ஜாலியாக சந்தோசமாகயிருப்பார்.

அங்கிள் மட்டுமில்லை அவர் மனைவி அந்த ஆன்ரியும் அப்படிதான். கலகலவென பேச்சு....என்னடி செய்கிறாய் என்ற உரிமையோடு நலம் விசாரிப்பு. காரணம் சின்ன வயசிலயிருந்தே ஊரில என்னை நன்றாகத் தெரியும். இன்னாருடைய மகள் என்றதும் பெருமையாகச் சொல்வார்கள். அதனால அப்படி ஒரு செல்லமாக கதைப்பா..அவ்வளவு இனிமையான ஆன்ரி.

அங்கிளின் இறப்பிற்குப்பின்னால் அந்த ஆன்ரியைக்காணக்கிடைக்கிறதில்லை. "என்ன அன்ரி இன்றைக்கு தேர்திருவிழா வருவீங்கதானே" என்று ஒரு முறை கேட்டிருந்தேன். "எங்கம்மா வாறது..? எல்லாமே உங்க அங்கிள் போனதோடு சரியாப்போச்சு" என்று அலுத்த குரலோடு சொல்ல..ஒரு கணம் நானும் சிலிர்த்துப்போனேன். 12 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவருக்காக கண்ணீர்விட்டு அழும் அந்த ஆன்ரியைநினைத்து வேதனைப்பட்டேன். அவங்களோட ஒப்பிடும்போது அவாவிற்கு அட்வைஸ் சொல்லுற அளவிற்கு பெரியஆளில்லை நான். இருந்தாலும் எனக்கு மனசில பட்ட ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னேன்.

அடிக்கடி போன் எடுத்தாலும் ஒரே மெசேஜ்தான் போகும். அதனால அதைக்கூட நிறுத்தியிருந்தேன். அவர்களுடனான தொடர்பு குறைந்தது. லண்டனில போய் இருங்களேன் என்றுகூட கேட்டன்..அப்போது சொன்னாங்க.."காசில்லையே, எல்லாமே உங்க அங்கிள் எழுதிக்குடுத்திட்டுப்போய்ட்டாரே" என்றாங்க..அட அதுவேறையா...? யாருக்கு எழுதினார் அங்கிள்..? நிறைய சொந்தங்கள் வந்திருந்தாங்களே என்றேன்..

எல்லாருக்கும்தான்.பிறகு என்னத்திற்கு இங்க வந்தாங்களாம் என்றாங்க....அட அங்கயிருந்து பதறிதுடிச்சு அழுது மயங்கி வந்தவங்க எல்லாம் இதற்குத்தானா...? நம்ப மறுத்தது நெஞ்சம். நமக்கென்ன இதில ஆகப்போகுது..? மேலும் தொடரல்ல.

இதெல்லாம் இப்படிப்போக ஒக்டோபர் முதலாம் திகதி எனக்கு நியூஸ் வந்தது..விசயம் தெரியுமா உங்களுக்கு என்று ஒருவர் கேட்டார். இல்லையே சொல்லுங்க..என்றேன். அன்ரி வீட்டுக்குள்ள இறந்துஇருந்தாங்களாம் என்று. "அடப்பாவமே ஏன் என்னாச்சு தற்கொலையா" என்றேன். "என்ன என்றே சொல்லமாட்டன் என்று பொலிஸ் சொல்லிட்டாம். லண்டனீல இருக்கிற உறவுக்காறங்களக்கு மட்டும்தான் சொல்லுவாங்களாம்".

அவங்க அங்க கதைச்சு, இங்க அறிஞ்சு இப்படியாக பல செய்திகள்..வேலைக்கு ஆன்ரி போகாததால வேலையிடத்தால பொலிசுக்குப் போன் செய்து, வீட்டு மனேஜரிடம் திறப்பு வாங்கி திறந்து பார்த்ததில் ஆன்ரியின் இறப்பு தெரியவந்தது. அதுவும் இறந்து 3 நாளாம். கார்ட்அட்டாக் என்று ரிப்போர்ட் என்று லண்டனில இருந்தவங்க சொன்னாங்க..

இதெல்லாம் சகஜம். ஆனா இந்த ஊர் சனங்களில சிலபேர் இருக்கிறாங்களே..கண்மூக்கு வாய் வச்சு ஒரு உருவமே செய்துவிடுவாங்க.அப்படியானாலும் பரவாயில்ல...நான் சாகிறதிற்கு முன்னாடி கதைச்சனே, போய் வந்தேனே..என்றாங்க..அட நண்பர்களாச்சே என்றேன். பிறகு சொன்னார் மனுசி இப்படிச் சாகும் என்றா 25 ஆயிரம் கொடுத்திருக்கமாட்டேனே என்றார். ஒருவர் சொன்னாரா, இல்லையே இப்ப இதுதான் கதை. ஆளாளுக்கு 5 கொடுத்தேன், 3 கொடுத்தேன் என்று என்னவெல்லாம் கதைக்கிறார்கள் தெரியுமா. மிக வேதனைக்குரிய விடயம்.ஆன்ரியைப் பொறுத்தவரைக்கும் யாரிடமும் கடன் வாங்கிக்கொள்ளுற அளவிற்கு பிரச்சனையேில்லை. அங்கிள் நல்ல ஜொப்பில் இருந்தவர்.

ஒருவர் இறந்தாலே அவர் தெய்வத்துக்கு சமம். அவங்கதான் இறந்துவிட்டார்களே இனி கொடுத்த பணம் என்ன வரவா போகுது?. இப்படி எள்ளும் கொள்ளுமா அர்த்தமில்லாமல் கதைச்சுக்கொண்டு திரிகிற எமது தமிழர்களைக் கண்டு எனதுள்ளம் வேதனையடைகிறது.

லண்டனிலயிருக்கிற சொந்தங்களும் அக்கறை எடுக்காமல் இருக்க, இங்கயிருக்கிற நம்ம ஊர் காறர்கள் சேர்ந்து அடக்கம் செய்யலாமா என விசாரித்த போது லண்டனிலயிருந்த சொந்தங்கள் அங்க உடலை எடுப்பித்தார்கள். அதுவும் 3 கிழமைக்குப்பின்னர்தான். அதுவரை அந்தப்பிணத்திற்கு பணத்தைச் சாட்டி எத்தனை பேர்கள் கிளம்பினாங்க.

எல்லாமே நினைச்சுப்பார்க்கும்போது இதுதான் மனித வாழ்வா. இப்படியான வாழ்ககை வாழ்வதற்கா இன்னும் மனுசன் போராடிக்கொண்டு இருக்கிறான். நினைக்கவே கேவலமாகயிருக்கின்றது. ஒருவர் உயிரோடு இருக்கும்போது எப்படியெல்லாம் தலையில தூக்கி வச்சு ஆடிட்டு பிறகு அவர் இற்நது போய்விட்டால் காலில போட்டு மிதிப்பதுதானா.?

எதுக்கு இதெல்லாம்? இதனால யாருக்கு என்ன லாபம்..? மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலையும் பல மாற்றங்கள். அந்தப்பல மாற்றங்களில எத்தனையோ மேடு பள்ளங்கள். வலிகள் சுமைகள் என்று ஏராளம். எல்லாமே வாழ்கின்ற இடைப்பட்ட காலம் மட்டும்தான். இந்த காலங்களில நாம் மனிதனாக மட்டுமல்லாமல் மனிதநேயமுடன் வாழவேண்டும். எவ்வளவுதான் காசு, புகழ், பொருள் சம்பாதித்தாலும் இவர் இறப்பிற்குப் பின்னால் வெறும் கூடு. எதுவுமே நிலையில்லை என்றதை நன்றாக உணர்ந்துகொண்டேன்.

எனக்குள்ளே நினைத்த சொல்லின் அர்த்தம்..மனித உடலில் உயிர் இருக்கும் போது "சீவன்" என்கிறோம். இதில் "ச" ற்கு மேலான சுழி சுற்றிநிற்கின்றது.

இதுவே பாருங்க மனிதனின் இறப்பில் "சவம்" என்கிறோம். அந்தச் சுழி இல்லாமற்போகின்றது. ஆக உயிர் இருக்கும் வரைதான் எல்லாமே. அந்த வாழ்நாளின் இடைப்பட்ட கட்டத்திற்குள்....வெறும் ஆசை, மோகம், வெறி, அலைச்சல், கோபம் இவைகள்தான் மிதமிஞ்சிநிற்கின்றது. நாம் இன்று, இன்றைய நாள் வாழ்கின்ற வாழ்க்கையை சந்தோசமாக அமைக்கவேண்டும் என்றதே எனது எண்ணம்.

நன்றி - தனிமதி

www.thamilworld.com

Link to comment
Share on other sites

லூஸ்மோகன் சட்டப்படிதான் தனது உரிமையைக் கோரியுள்ளார்.

http://tamilnews.jup...inema_news/355/

விலை உயர்ந்த ஆடை உடுத்தியுள்ள ஒருவர் பசி என்பதால் அதை விற்று நிர்வாணமாக நின்று சாப்பிட வேண்டுமா ? சட்டத்தில் இடம் இருக்கும்போது முதலில் அதை நாடுவதே புத்திசாலித்தனம். தந்தையைக் கொடுமைப்படுத்திய மகனைக் கோட்டுக்கு இழுப்பதும் தவறில்லை.

சட்டத்தின் உதவியை நாட அது என்ன,,,,,,,,,,,,, ,, ரெட் லைட்ல ,, காரை நிறுத்தாமலே ஓட்டினதால,,,, ஃபைன் கட்டுற மேட்டரா?

நீங்களுமா??

ஆங்க்............... இப்டி கருத்து நீங்க எழுதுவீஙகனு தெரிஞ்சு இருந்தா,, அப்டியே ஓடி போயிருப்பனே,,, இணையவன் அண்ணா! :)

இவரின் மகன் செய்தது செய்வது தப்பு.அதில எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் இவர் கோட்டுக்கு போனது சோத்துக்கு இல்லை.ஏன் என்றால் அவர் பச்சைப்பரதேசி இல்லை.அவரின் சொத்தை ஏதாவது ஆசிரமத்துக்கோ அல்லது அனாதை இல்லத்துக்கோ எழுதி வைத்துவிட்டு(தனக்குப்பின் என்று)வயிறு முட்ட சாப்பிடலாம்.தனது பிள்ளை தன்னை கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் மற்றும் கோவமே அவர் கோட்டுக்கு போக காரனம்.மற்றும் படி கோட்டுக்குப்போய் அன்பு கிடைக்கும் என்பதெல்லாம் அம்புலிமாமா கதைதான் :rolleyes:

இத நானு , டமுக்கட்டி சொன்னா,,, ,, சே சே,, இவன் கருத்து “அதுக்கு சரிப்பட்டுவராது” னு சொல்றாங்களே சஜீவன்! நீங்களாவது இந்த அநியாயத்த தட்டி கேட்க கூடாதா? <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.