Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் - உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kaasiyaananthan.jpg

video123.gifஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். கருத்து வெளியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டு விழுந்த நேரத்தில் உலகத்தில் யார் ஈழத்தமிழ் மக்களுக்காக எழுதினார்கள். எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. யார் இதற்காக கைதந்தார்கள் கோணேஸ்வரி என்ற தமிழ்பெண் மட்டக்களப்பில் பெண் உறுப்பில் வெடிகுண்டினை வைத்து வெடிக்க செய்தார்கள். புங்குடுதீவு கண்ணகி கோவிலில் வைத்து சாரதாம்பாள் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார்கள்.

இவ்வாறு போரின் இறுதியில் இசைப்பிரியா. போரின் முடிவில் அவளை சிறைப்படுத்திய சிங்கள இனவெறியர்கள் போர்கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. அதற்கமைவாக நடத்தினார்களா இல்லையே? ஓவியர் சந்தாணம் முள்ளிவாய்க்கால் படுகொலையினை வைத்து வரைந்த படத்தினை வைத்து முருகன் என்கின்ற சிற்பி உள்ளிட்டவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் நினைவுச்சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை சித்திரமாக வடித்துக் கொண்டிருக்கின்றான்.

அப்படிப்பட்ட கலைஞன் இந்த மண்ணுக்கு தேவை தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் பல படைப்பாளிகள் படைப்புக்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எழுதிய எழுத்தாளர்களின் அளவு ,ரஷயவிடுதலைப்போரின் போது எழுதிய எழுத்தாளர்களின் அளவு, தமிழனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்டத்திற்காக எழுதியவர்களை எண்ணித்தான் பாக்கவேண்டும்.

பல திரைப்படங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் இன்னும் கூடுதலான திரைப்பட கலைஞர்கள் தமிழினத்திற்கு கைகொடுக்கவேண்டும். விடுதலைக்காக கலைஞர்கள் இயங்கவேண்டும் எழுதவேண்டும், என்ற கருத்தினை படைப்பாளிகள் மத்தியில் முன்வைக்கின்றேன்.

உலகில் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அத்தனை அரசுகளின் கீழ் இயங்குகின்ற நாடுகளிலும் அறவளியில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் உலகத்தில் இன்று ஒரே ஒரு நாடு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து வாய் திறந்து பேசமுடியாத நாடாக சிறீலங்கா காணப்படுகின்றது. தமிழ் மக்கள் அப்படிப்பட்ட கொடுமையான சூழலில் வாழ்கின்றார்கள்.

தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் தமிழர் கூட்டமைப்பு. அவர்களால் எந்த அறப்போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது, அவர்கள் பேசமுடியாது. பேசினால் நாளை உயிருடன் இல்லை. ம்.. என்றால் சிறைவாசம் ஏன்... என்றால் வனவாசம் என்ற நிலை இன்று தமிழீழத்தில் இருக்கிறது. இதை கேட்பதற்கு யாருமே இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும். என்றும் உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

http://youtu.be/aYMDOnE0rz4

http://youtu.be/sKvQaRLp7N0

http://youtu.be/BdANW5LV47g

http://www.eeladhesam.com/index.php?option

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மாவீரர் சுரொட்டியை கிளித்தவர்களும்,

லண்டனில் 50,000 € வுக்கு, மாவீரர் தினத்துக்கு வாடகை எடுப்பவர்களும் இருக்கும் போது.....

தமிழீழம் சாகும் நிலையில்... உள்ளது.

kaasiyaananthan.jpg

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும். என்றும் உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

http://youtu.be/aYMDOnE0rz4

http://youtu.be/sKvQaRLp7N0

http://youtu.be/BdANW5LV47g

http://www.eeladhesa...ndex.php?option

ஐயா நீங்க எங்களுக்கெல்லாம்........ மரியாதைக்குரிய் கவிஞர்....!

அதுக்காக நீங்க சொல்வதுதான் யாதார்த்தம் என்னு ஆகிடாது!

தனது நாட்டு மீனவனையே கொன்னு குவிக்கும் , சிங்களவனை எதுவுமே கேட்காத ,, இந்திய பெடரல் அரசு,,,, உங்களை ,,, கட்டி தூக்கி ஸ்ரீலங்காவுக்கு அனுப்ப்பி , கருணா கைல ஒப்படைக்க எவ்ளோ நேரமாகும்?

எங்களுக்காய் உழைத்தவர்கள் அனாதைபிணமாய் தெருவோரம் கிடப்பதை ,,

இனியும் தாங்கும் சக்தி ...எம்மில் யாருக்குமே இல்ல!

கெஞ்சிதான் கேட்குறோம்........

உணர்வுகள் மனசோட மட்டும் இருந்தா... தேவல!

அது வாய்சொல்லைவிட ஆயிரம் மடங்கு பலமானது!! :rolleyes:

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவிலி அண்ணா க்கு ஒரு பச்சை...

போதும்பா எங்கடை சனம் பட்டது எல்லாம். உணர்ச்சிக்கவிதைகளையும்,வெறும் வாய்வார்த்தைகளையும் விட்டு செயலில் காட்டுங்கள். :(

(உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளம் ஆயிட்டுது) :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா உங்களுக்கு ஒரு பச்சை. எங்கடையும் காசியண்ணைன்ரை பிள்ளையளும் சொந்தங்களும் நோகாமல் இருக்க தமிழீழத்தில போர் வெடிக்கத்தானே வேணும். அப்பதான அண்ணையின்னை பைக்கட் அமுதசுரபியாகும்.

உண்மைதான் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக மருத்துவ படிப்பு படித்து நோர்வேயிலும், லண்டனிலும் இருக்க....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக மருத்துவ படிப்பு படித்து நோர்வேயிலும், லண்டனிலும் இருக்க....

அப்ப அவரது பிள்ளைகள் செத்திருந்தால் அவர் கவிதை சொல்லலாம்?

இப்ப கவிதை பிழை இல்லை .................. அவருடைய பிள்ளைகள் சாகவில்லை இதுதான் பிரச்சனை.

நாட்டுக்கு உழைக்க ஒருவன் வெளிக்கிட்டால் அவனது குடும்பமே சாகவேண்டும் ............. ஆனால் உங்கள் வீடுகளில்? ஆடம்பர பொருட்களுக்கு வரி கேட்டாலே அது கொடுமை?

எதோ இது கூட நியாயம் என்று படும்போது. விடிவு எவளவு துரம் என்பதை அளந்துபார்க்க முடிகிறது.

அவரது பிள்ளைகளை போராளிகளாக்குவதற்கு கூட கவிஞரின் கவிதைகளுக்கு உரமில்லை; இந்த கவிதைகளை படித்தா போராட்டம் வெடிக்கப்போகிறது? என்று கேட்கிறார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பிள்ளைகளை போராளிகளாக்குவதற்கு கூட கவிஞரின் கவிதைகளுக்கு உரமில்லை; இந்த கவிதைகளை படித்தா போராட்டம் வெடிக்கப்போகிறது? என்று கேட்கிறார்கள் போலும்.

அவர் கவிதையை பிள்ளைகளுக்கு எழுதியிருந்தால்.............

ஈ மெயிலில் அனுப்பியிருப்பார். இணையத்தில் வந்திருக்காது. பிள்ளைகளுக்கு எழுதவேண்டியதை அவர் எழுதியதால் அவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் பின்னாளில் எத்தனையோ மனித உயிர்களை காப்பாதுவார்கள். நானும் நீங்களும் இங்கே அரட்டைதான் அடிக்கிறோம் ................ எங்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்பதை நாம் எழுதி யாரும் தெரிய தேவை இல்லை. அவர்களும் அதை செவனவே செய்வார்கள்.

அந்த குடும்பத்தில் இருந்து ஒருவன் நாட்டு நடப்பை கவிதையில் எழுதி வைக்க ஆவது வந்திருக்கிறான். எனது ............ உங்களது குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தால். அவருடைய குடும்ப விபரம் திரட்ட நேரம் இருக்காது.

அடுத்தவன் தன்னால் முடிந்ததை செய்கிறான்................. இனியாவது அடுத்தவனுடைய முதுகிலே இருந்து இறங்கலமே?

அறிவிலி அண்ணா க்கு ஒரு பச்சை...

போதும்பா எங்கடை சனம் பட்டது எல்லாம். உணர்ச்சிக்கவிதைகளையும்,வெறும் வாய்வார்த்தைகளையும் விட்டு செயலில் காட்டுங்கள். :(

(உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளம் ஆயிட்டுது) :wub:

மாண்புமிகு உணர்ச்சிகவி காசி அண்ணன் தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிதாக முளைத்த ஒருவரல்ல. போராட்டம் ஆரம்பிக்கமுன்னரும், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையிலும்,கூடஅருமையான கருத்துகளையும், பாடல்களையும் எழுதி நம் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது.

ஆகவே மேற்கூறிய உங்கள் விமர்சனம் இப்போ புதிதாக எம்மைக்குழப்பும் கருத்துகளையும்,நீண்ட கட்டுரைகளையும் எழுதும் [,யாழ் கள உறவு திரு நவம்]அவர்கள் ஒரு திரியிலே எழுதியதைப்போன்று மட்டைமான்,மன்னாங்கட்டிமான்,அந்தமான்,இந்தமான்,குட்டிமான்,போன்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்,உணர்ச்சிகவிக்கு அது பொருந்தாது என்பதுதான் என் தாழ்மையான கருத்தாகும்.

... தம்பி ஜீவா, உமக்கு காசியின் குடும்பத்தை பற்றி என்ன தெரியும்??? அவர் இழந்ததில் ஓரு பங்காவது நீர் இழந்திருக்க மாட்டீர்!!!???? ... உமக்கு ஏன் உடம்பு ரணகளமாகின்றது தெரியவில்லை??? ...

..... ஈழத்தமிழர்களின் போராட்டம் ஓயவில்லை .. என்பதை கூற, அதுவும் தமிழக மக்களுக்கு அடித்துக்கூற இப்படி தெரிவித்திருக்கிறார்!! ... அந்த மனிதன், தன் பாக்கட் நிரப்ப வேண்டுமாயின் எப்பவோ நிரப்பி இருக்கலாம்!!! .. இன்று ஓநாய் அழுகைகள் அழுகிறவர்களைப் போல் நடிக்கத்தேவையில்லை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசி ஆனந்தன் போன்றோர்கள் சிங்களசிறையில் உண்ணாவிரதம் இருந்த போது சிங்கள இனவாதிகள்....அவர்களின் தொண்டைகுழிக்குள் சயிக்கிள்ரியூப்பை திணித்து அதன் மூலம் பால் ஊற்றினார்கள்.

கவிஞர் செய்ததை மறுக்க வில்லை. இப்பொழுது கெட்டு நொந்திருப்பார்க்கு வேண்டியது ஆறுதல். உணர்ச்சி ஊட்டுவதல்ல

மேலை நாட்டு சட்டங்களின் படி அவர் உயர்தரம் வரும் வரை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியே தீர வேண்டும். கல்லூரியில் மருத்துவமோ வேறு எதுவோ படிப்பது பிள்ளைகளின் சமர்த்தியம். பிள்ளைகள்தமது வாழ்க்கையை மேற்கொள்வதற்கு நமது போராடம் தடையாக இருக்க கூடாது. பிள்ளைகள் போராட்த்தில் இல்லாத பெற்றோரின் அறிவுவாக்கியங்களை நாம் கணக்கில் எடுக்க கூடாது என்று வழக்க படுத்தி கொள்ள கூடாது. நமது போராடத்தை தமது பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்போரை யாழில் அடையாளம் காட்டி வைக்கலாம்.

Edited by மல்லையூரான்

ஆ...ஊன்னா... எதுக்கு ஜீவாமேல பாயுறீங்க... இந்த கருத்தில மட்டும்?

காசியானந்தனை கேவலப்படுத்த யாரும் முயல்வாங்களா?

கருத்துக்கள் பேச்சுக்கள் என்பவை ,,, காலத்தோடு ஒன்றிபோனாதானே,, அதனை பிறர் ஏற்றுகொண்டு ,

அடுத்த நகர்வை செய்ய வழிவகுக்கும்!

போரிட்டவர்களும் இன்னும் தடுப்பு முகாமில,,, போராட்ட தலமையும் அடியோட இல்ல...

போராட்டத்துக்காய் தம் வாழ்வை தொலைத்தவர்களும் , அனாதையாய் நடுரோட்டில...புலம்பெயர்ந்து வாழுறவங்களும்,,, ஆளுக்கொரு தலைமை... உள் நாட்டில & வெளிநாட்டில் இருக்குறவங்களும் ,, பலர் சிங்களவன் பக்கம்!

இதுக்குள்ள உணர்ச்சிக்கு என்ன வேலை?

ஒரு மணித்யாலம் அவங்க புள்ளைங்க வீட்டுக்கு வர லேட் ஆனாலும், நூறு போன் கால் பண்ணி ,,என்னாச்சுதோன்னு துடிக்குற கூட்டம் எம்மில பலரு...

எப்போ பாரு இழவுவீடா இருக்குற நிலமைல ,ஒரு பகுதி மக்களை வைச்சிருக்க நெனைக்குறது... உணர்ச்சி பேச்சு இல்ல.... இரக்கமற்ற தன்மை!

அதுக்காக,,, போராட்டம் புடிக்காதுன்னு இல்ல,,,

பிரபாகரனாலயே முடியாமபோன... இந்த உரிமைகளுக்கான /உணர்ச்சி போராட்டம்...

இனி எந்த கொம்பனாலயும் முடியவே முடியாது!!,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாண்புமிகு உணர்ச்சிகவி காசி அண்ணன் தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிதாக முளைத்த ஒருவரல்ல. போராட்டம் ஆரம்பிக்கமுன்னரும், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையிலும்,கூடஅருமையான கருத்துகளையும், பாடல்களையும் எழுதி நம் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது.

ஆகவே மேற்கூறிய உங்கள் விமர்சனம் இப்போ புதிதாக எம்மைக்குழப்பும் கருத்துகளையும்,நீண்ட கட்டுரைகளையும் எழுதும் [,யாழ் கள உறவு திரு நவம்]அவர்கள் ஒரு திரியிலே எழுதியதைப்போன்று மட்டைமான்,மன்னாங்கட்டிமான்,அந்தமான்,இந்தமான்,குட்டிமான்,போன்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்,உணர்ச்சிகவிக்கு அது பொருந்தாது என்பதுதான் என் தாழ்மையான கருத்தாகும்.

தமிழ்சூரியன் அண்ணா,

இங்கு கவிஞர் காசி ஆனந்தன் அண்ணாவை வசைபாடுவது அல்ல நோக்கம் இல்லை அவர் ஈழத்தமிழர்களுக்கும்,போராட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லவில்லை அவருடைய பங்களிப்பு அளப்பரியது தான் ஆனால் இன்றைய நிலையில் இந்தக் கருத்து ஏற்புடையதல்ல என்பதே எனது வாதம்.

நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை அலசுவதை விடுத்து மீண்டும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் ஆதரிக்கும் அவசியம் இல்லையே?

ஒருவர் தன்னாலான உதவிகளைச் செய்தார் என்பதற்காக அவர் நல்லவராக, சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்ற குருட்டுநம்பிக்கையை இனியாவது கைவிடுவோம். அளவுக்கு அதிகமாக எல்லாரையும் நம்பியதும் தான் எமது இன்றைய நிலைக்கு காரணம்.

மாறிவரும் உலக சூழ்நிலையில் இன்னொரு போராட்டம் என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதற்கு கண்முன்னால் நடக்கும் காட்சிகளே சாட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... தம்பி ஜீவா, உமக்கு காசியின் குடும்பத்தை பற்றி என்ன தெரியும்??? அவர் இழந்ததில் ஓரு பங்காவது நீர் இழந்திருக்க மாட்டீர்!!!???? ... உமக்கு ஏன் உடம்பு ரணகளமாகின்றது தெரியவில்லை??? ...

..... ஈழத்தமிழர்களின் போராட்டம் ஓயவில்லை .. என்பதை கூற, அதுவும் தமிழக மக்களுக்கு அடித்துக்கூற இப்படி தெரிவித்திருக்கிறார்!! ... அந்த மனிதன், தன் பாக்கட் நிரப்ப வேண்டுமாயின் எப்பவோ நிரப்பி இருக்கலாம்!!! .. இன்று ஓநாய் அழுகைகள் அழுகிறவர்களைப் போல் நடிக்கத்தேவையில்லை!!!

:D :D :D

அண்ணன் காசியானந்தன் அல்ல இன்னும் எவர் சொன்னாலும் ஊர் நினலமைபடி இப்போது எந்தபோரையும் தமிழன் தானாகத் தொடங்கும் எத்தனம் எவனுக்கும் இல்லை. இதேன் எவருக்கும் தானாக புரிவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, அறிவிலி போன்ற உறவுகளின் கருத்துக்கள் அவர்களின் கவலைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் காணொளியைப் பார்த்தபோது கவிஞர் அப்படி ஏதும் தவறாகச் சொன்னதாகத் தெரியவில்லையே??!! :unsure:

கவிஞர் சொல்லியிருப்பவை இவைதான்..

1) தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடிக்கும். (எப்போது, எத்தகைய விடுதலைப்போர் என்று சொல்லவில்லை)

2) விடுதலைக்கான தேவை இருக்கும்வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்..! (இதுவும் சரிதானே?)

தனது பட்டறிவின்பால் தனக்குத் தோன்றுவதைச் சொல்லியிருக்கிறார். அதுவும் தமிழக உறவுகளுக்கு.. இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இசை

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இனிமேல் கவிதை கட்டுரையில் கூட கையைத்தூக்குவது போல் வரக்கூடாது..

சிங்களவனுடன் இனி சமரசம் மட்டுமே................................????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ இதுக்கு மன்னம் புலத்திலை இருந்து நெருப்புகவிதைகளும் காட்டின கவிஞர்கள்

கவிஞிகள் இப்போh தங்கடை பிழைகளை ஏற்றுக்கொள்ளுகினமா?

அல்லது..........

அவையளின்ரை பிள்ளைகளை அந்த நேரத்திலை போராட்டத்துக்கு அனுப்பிவிட்டுதான்

இங்கை இருந்து கவிதை எழுதி இணையத்திலையும் குசினிரோடியோ (இணையவானொலி)ம் வெளியிட்டதை என்ன என்று

சொல்லுறது.

பிழைக்கத்தெரிந்ததுகள்

இதிலை எதையாவது நீங்கள் செய்தீர்களா?

அது எதற்கு கவிதை எழுதுபவன்தான் கரும்புலியாக போகவேண்டும் என்று அடம் பிடிக்கிறீங்கள்?

அவனுக்கு எழுத தெரிகிறது எழுதுகிறான். விரும்பினால் படியுங்கள் விரும்பாவிடின் விலகுங்கள்.

நல்ல வேளை இன்னும் திருவள்ளுவர் இறந்துவிட்டு ஆவியாக வந்துதான் திருக்குறள் எழுதியிருக்கவேண்டும் என்று இன்னமும் எழுதவில்லை.

"தன்னிலை தாழாமையும். அந்நிலை தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"

யார் இந்த சாசி ஆனந்தன்??? பிள்ளைகளை மருத்துவத்துக்கு அல்லவா விட்டு படிப்பிக்கிறான்????

.... ம்ம்ம்ம் ... இரண்டு சகோதரர்களை மண்ணுக்குள் கொடுத்தவன்! அதற்கு மேல் தமிழுக்காக கொடுச்சிறை எல்லாம் சென்று வந்தவன்!! அதற்கு மேல் .. எழுத முடியாத பல பல!!! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியிலை ஈழத்தமிழனுக்காக சர்வதேசரீதியிலை கதைக்கிறதுக்குக்கூட ஒருத்தனையும் விட்டுவைக்கமாட்டாங்கள்....ஈழவிடுதலையை எண்ணை ஊற்றி...எரியவிட்டு....அப்பப்ப ஞாபகப்படுத்துறவங்களையும் விடமாட்டாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.